157. ஆம், ஒரே நபர் தான். சரி, ஓ, ஒரு நிமிடம் பொறுங்கள். இல்லை! என்னை மன்னியுங்கள். நான் வருந்துகிறேன்... பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கு நிறுத்தினார் என்பதை பார்த்தீர்களா? இல்லை! நான் நினைத்தேன் அது. பாருங்கள்?
158. மல்கியா 3ல் என்ன எழுதப்பட்டுள்ளதென்றால், “நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்”. அது. எலியா. மல்கியா 4ல், அது மறுபடியும் “இதோ, நான் எலியாவை அனுப்புகிறேன்” என்று உரைக்கிறது. மல்கியா 3, கர்த்தராகிய இயேசுவுக்கு முன்பாக ஒரு தூதன் அனுப்பப்படுகிறான். அது யோவான். எத்தனை பேர் அதை புரிந்து கொண்டீர்கள்? மல்கியா 4ன் எலியா வரும் போது, அதன் பிறகு உடனடியாக - அவனுடைய செய்தி, மற்றவைகளுக்குப் பிறகு - கர்த்தருடைய வருகையும் பூமி புதுப்பிக்கப்படுதலும் உண்டாகும்.
159. நீங்கள் கவனிப்பீர்களானால், இதை தெளிவாக்க... பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசியின் மூலமாய், “அவன் முதலாவதாக பிதாக்களின் இருதயத்தை பிள்ளைகளிடத்திற்கு திருப்புவான்” என்று உரைத்து, அதை எழுதி வைத்துள்ளார். பாருங்கள்? அது யோவான் முதலாவதாக வருதல். அவன் பிதாக்களின் இருதயங்களை, பழைய கோத்திரப்பிதாக்களின் இருதயங்களை, பிள்ளைகளின் செய்திக்கு திருப்பினான். அது அப்பொழுது ஒரு புது சந்ததி. இயேசு அந்த சந்ததியில் வந்தார். அதன் பிறகு “மற்றும்” (and) என்னும் இணைச் சொல் இவ்விரண்டையும் இணைக்கிறது (தமிழ் வேதாகமத்தில் இச்சொல் இல்லை -தமிழாக்கியோன்). இப்பொழுது பிள்ளைகளின் இருதயங்கள் பிதாக்களிடம் திருப்பப்படுகிறது, அதாவது இன்றைய செய்தி, சபை காலத்திலுள்ள பிள்ளைகளின் இருதயங்களை தொடக்கத்தில் இருந்த மூல பெந்தெகொஸ்தே விசுவாசத்துக்குத் திருப்பும்.
160. எனவே இது இரு வெவ்வேறு செய்தியாளர்கள். அது ஒரு செய்தியாளனைப் போல் காணப்பட்டாலும், அது வேறு பிரிக்கிறது - யோவான் முதலில் வருவதையும், இரண்டாவதாக வேறொரு நபர் வருவதையும். என் கணவரும் என் இளைய மகனும் விசுவாசிப்பதில்லை.
ஆம், அதற்கு நான் பதில் கூறி விட்டேன் என்று எனக்குத் தெரியும், ஏனெனில் இந்த நபர் இதில் கையொப்பமிட்டிருக்கிறாள். பிறகு இதைக் குறித்து அவளிடம் பேசினது எனக்கு ஞாபகம் உள்ளது.