161. நான் ஒருமைப்பாட்டில்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். நான் நம்புவது என்னவெனில் ஒரு மனிதன்.. அவனுடைய நிறம் என்னவானாலும், அவன் யாராயிருந்தாலும் அவன் என்னைப் போல் ஒரு மனிதன். அது முற்றிலும் உண்மை. நான் நினைப்பது என்னவெனில், அவர்கள் மட்டும் கறுப்பு நிறத்தவரை தனியே விட்டு விட்டு, அந்த கம்யூனிஸ்டுகள் அங்கு சென்று அவர்களை ஊக்கப்படுத்தாமலிருந்தால்...
162. இப்பொழுது, அவர்கள் கேட்டனர். இப்பொழுது, உண்மையான கறுப்பு நிற மக்கள்; அவர்கள் மத்தியில் உண்மையான, மறுபடியும் பிறந்த, தேவபக்தியுள்ள பரிசுத்தவான்கள் உள்ளனர். ஆம், நிச்சயமாக, என் தோல் வெள்ளை நிறமாயும், அவர்களுடைய தோல் கறுப்பு நிறமாயும் இருப்பதால், அதனால் எனக்கு எந்த வேற்றுமையும் கிடையாது. அவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் என் சகோதரன்.
163. ஆகையால் தான் நான் ஆப்ரிகான்ஸ் செய்தியுடன் கருத்து வேற்றுமை கொண்டுள்ளேன்; அவர்களுக்கு ஆத்துமா இருப்பதாக அவர்கள் நம்புவது கிடையாது. அதுதான் எனக்கு அங்கு பிடிக்காமல் போயிற்று. நான், “என்னைப் போலவே அவனும் ஒரு மனிதன். எனக்குள்ளதைப் போலவே அவனுக்கும் உரிமையுண்டு. அவனுடைய தோல் எனக்கோ அல்லது தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்துள்ள எந்த ஒரு மனிதனுக்கோ யாதொரு வித்தியாசத்தையும் உண்டாக்காது” என்றேன்.
164. ஆனால் நான் சொன்னேன், “அவர்கள் அந்த கறுப்பு நிறத்தினரை தனியே விட்டிருந்தால், அவர்கள் போராட ஒருக்காலும் இந்த அளவுக்கு ஊக்கம் பெற்றிருந்திருக்க மாட்டார்கள்” என்றேன். இதை நான் இந்த பிரசங்க பீடத்திலிருந்து கூறுகிறேன்... கறுப்பு நிறத்தினர் பலர் இங்கு வருகின்றனர் (இன்றிரவு அவர்களில் ஒருவரும் இங்கில்லை என்று நினைக்கிறேன்). இந்த சபைக்கு பல கறுப்பு நிறத்தவர் வருகின்றனர். சகோதரனே, அவர்கள் மற்ற எவரையும் போலவே இங்கு வரவேற்கப்படுகின்றனர். அவர்கள் என் சகோதரனும் சகோதரியுமாவர்.
165. என் வாழ்க்கையில் நான் இதுவரை சந்தித்துள்ள மிகச் சிறப்பான ஜனங்கள், இந்த கறுப்பு நிறத்தவரில் சிலர். அவர்களில் சிலர் துரோகிகள் என்பது உண்மையே. ஆனால் அப்படிப்பட்டவர் வெள்ளை நிறத்தினர், மஞ்சள் நிறத்தினர், பழுப்பு நிறத்தினர் ஆகியோரின் மத்தியிலும் உள்ளனர். ஆம், நிச்சயமாக,
166. இப்பொழுது, கலப்பு விவாகத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. வெள்ளையன் ஒருவன் கறுப்பு நிறப் பெண் ஒருத்தியை விவாகம் செய்து கொள்ளக் கூடாது என்பது என் கருத்து. அவ்விதமாகவே, கறுப்பு நிறத்து ஆண் வெள்ளைப் - பெண் ஒருத்தியையோ, அல்லது மஞ்சள் நிறத்தினர் கறுப்பு நிறத்தினரையோ விவாகம் செய்து கொள்ளக் கூடாது... நான் நம்புவது என்னவெனில், பழுப்பு, கறுப்பு, வெள்ளை நிறத்தினர் தேவனுடைய பூந்தோட்டமாக உள்ளனர், அவர்கள் ஒருவருக்கொருவர் இனச்சேர்க்கை செய்து கொள்ளக் கூடாது என்பதே. தேவன் அவர்களை அந்த விதமாகவே படைத்திருக்கிறார்; அவர்கள் அந்த விதமாகவே இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
167. அழகான கறுப்பு நிறப் பெண், மிகவும் அறிவுள்ளவள், காண்பதற்கு நன்றாயிருக்கும் இளம் பெண், மற்றெந்த பெண்ணைப் போலவே அழகுள்ளவள். வெள்ளை நிறப் பையனை விவாகம் “செய்து கொண்டிருப்பதைக் காண்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது... அவள் வெள்ளையனை மணந்து “ம்யூலாடோ பிள்ளைகளை ஏன் பெற வேண்டும்? (கறுப்பு நிறத்தினருக்கும் வெள்ளை நிறத்தினருக்கும் இடையே பிறக்கும் பிள்ளைகள் “ம்யூலாடோ” என்று அழைக்கப்படுகின்றனர் - தமிழாக்கியோன்). ஒரு புத்திசாலியான கறுப்பு நிறப்பெண் அவ்விதமான காரியத்தில் ஈடுபட ஏன் விரும்ப வேண்டும்? ஏனெனில் ஏதோ ஒன்று. அந்த கம்யூனிஸ்டுகள்... ஒரு அருமையான கறுப்பு நிறத்தினன் ஒரு வெள்ளைப் பெண்ணை மணந்து “ம்யூலாடோ” பிள்ளைகளைப் பெற ஏன் விரும்ப வேண்டும்?
168. அதில் எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் இருக்கும் விதமாகவே இருக்க வேண்டும் என்பது என் கருத்து. நாங்கள் கிறிஸ்துவினுடைய ஊழியக்காரர்கள். தேவன் என்னை இந்த விதமாக படைத்திருக்கிறார். என் நிறத்தை அவர் கறுப்பாக படைத்திருந்தால், நான் தேவனுக்கென்று கறுப்பு நிறத்தவனாக இருக்க மகிழ்ச்சி கொள்வேன். அவர் என்னை மஞ்சள் நிறத்தவனாக படைத்திருந்தால், நான் கிறிஸ்துவுக்கென்று மஞ்சள் நிறத்தவனாக இருக்க மகிழ்ச்சி கொள்வேன். அவர் என்னை வெள்ளையனாக படைத்திருந்தால், நான் கிறிஸ்துவுக்கென்று வெள்ளையனாக இருக்க மகிழ்ச்சி கொள்வேன். அவர் என்னை பழுப்பு அல்லது சிகப்பு நிறத்தவனாக, சிகப்பு இந்தியனாக, அல்லது வேறெந்த நிறத்தவனாக படைத்திருந்தால், நான் அந்த நிறத்திலேயே நிலைத்திருப்பேன். அது நான். என் சிருஷ்டிகர் என்னை உண்டாக்கின விதமாகவே நான் இருக்க பிரியப்படுவேன்.
169. அந்த நாளில் ஷ்ரீவ்போர்ட்டில் அந்த எழுச்சி உண்டான போது, அந்த கறுப்பு நிறத்து இளைஞர் அனைவரும் கம்யூனிஸ்டுகளால் ஊக்குவிக்கப்பட்டு அதில் பங்கு கொண்டனர்.
170. இந்த பிரசங்க பீடத்தில் இதை நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருக்கிறேன். மார்டின் லூத்தர் கிங் அந்த கறுப்பு நிறத்தினருக்கு மிகப் பெரிய கடனாளியாக இருக்கப் போகிறார். அது உண்மை. அவர் பல்லாயிரக்கணக்கான கறுப்பு நிறத்தினவரை, கம்யூனிஸ்ட் கொள்கையைக் கொண்டு ஊக்குவித்து, கொலைக்கு நடத்திச் செல்லப் போகிறார் (அது உண்மை).
171. நான் கூறினதை நிரூபிக்கட்டும். இதை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறினேன். தற்பொழுது என்ன நடக்கிறதென்று பாருங்கள். அவர்கள் ஒருமைப்பாட்டுக்காக சண்டையிடுவதாக கூறிக்கொண்டனர், ஆனால் சட்டம் அவர்களுக்கு ஒருமைப்பாட்டை அளித்து விட்ட பிறகும்... ஒருமைப்பாட்டை விரும்பாதவர்களாகிய நீங்கள், உங்களைக் குறித்து வெட்கப்பட. வேண்டும். நமது நாடு ஒருமைப்பாட்டை அனுமதித்து விட்டது. பெரிய தலைவர் என்ன சொல்லுகிறாரோ, அதையே நாம் செய்ய வேண்டும். அது முற்றிலும் உண்மை.
இப்பொழுது, நீங்கள் கூறலாம். சில இடங்களுக்கு அவர்கள் வரக்கூடாது, பொருட்களை வாங்கக் கூடாது, பேருந்தில் பின்னால் உட்கார வேண்டும் போன்றவை. இல்லை ஐயா! அவர்கள் நமக்கு சமமானவர்கள் என்று நாட்டின் சட்டம் கூறுகிறது. எனவே நாம் அவர்களுக்கு சமமானவர்கள், அந்த விதமாகவே நாம் நடந்து கொள்வோம். அந்த விதமாகவே நாம் இருப்போம். உண்மையில் மறுபடியும் பிறந்தவர்கள் அனைவரும் அந்த கருத்தையே கொண்டுள்ளனர். இப்பொழுது, அவர்களுடைய இருதயத்தில் அதுதான் உள்ளது என்று நம்புகிறேன்.
172. ஆப்பிரிக்காவிலுள்ள அந்த எளிய ஜனங்கள் நடத்தப்படும் விதத்தைக் குறித்து எனக்கு அவர்கள் மேல் உள்ள அனுதாபத்தைப் போல் வேறெந்த ஜனங்கள் மீதும் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் தென்பாகத்தை சேர்ந்தவன். நான் அந்த நதிக்கு அப்பால் பிறந்தவன், ஆனால் நான் ஆபிரகாம்லிங்கனைப் போன்றவன். மனிதன் சமமாகப் பிறந்திருக்கிறான் என்னும் கருத்தை நான் கொண்டிருப்பதால், இங்கு வருகிறேன். அது உண்மை. ஜனங்களைப் பிரிப்பது போன்றவைகளில் எனக்கு நம்பிக்கையில்லை, முக்கியமாக அந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்றவைகளைப் பெற்றிருக்கையில்.
173. ஆனால் பாருங்கள், உண்மையாக மறுபடியும் பிறந்த கிறிஸ்தவ கறுப்பு இனத்தினர் இந்த கலகம் அனைத்தும் விளைவிப்பதில்லை. கறுப்பு நிறத்தவரை அதற்காக நீங்கள் குற்றப்படுத்த நினைத்தால், நம்முடைய சில வெள்ளை நிற இளைஞரின் துரோகத்தைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்? பாருங்கள்? இருவரும் ஒரேமாதிரி உள்ளனர். நமது வெள்ளை நிற இளைஞர்கள். அவர்களை விட இரு மடங்கு தொல்லை விளைவிக்கின்றனர். அது முற்றிலும் உண்மை. அது எங்கு நடக்கிறது? நமது கல்லூரிகளிலும் மற்ற இடங்களிலும். நம்முடைய அதிகம் கல்வி கற்ற ஜனங்களில் சிலர் இவைகளுக்கு காரணமாயுள்ளனர். பாருங்கள்?
174. நல்லது, அது என்ன? இப்பொழுது, அது கம்யூனிஸம் தான், அந்த கறுப்பு நிறத்தவர் அல்ல என்று உங்களுக்கு காண்பிக்க, கம்யூனிஸம் அந்த விதத்தில் தான் எப்பொழுதுமே கைப்பற்றியுள்ளது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இதையே செய்து வருகின்றனர். அவ்விதம் தான் அவர்கள் செய்கின்றனர், நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்படி செய்து, புரட்சியை உண்டாக்கி, துப்பாக்கி குண்டு ஒன்றையும் வெடிக்காமலேயே கைப்பற்றி விடுகின்றனர். அவர்கள் இந்த நாட்டை தகர்த்து விட விரும்பவில்லை; அவர்களுக்கு அது வேண்டும். அவர்கள் மெல்ல ஊர்ந்து உள்ளே நுழைந்து விடுகின்றனர். பழைய புரட்சி என்ன விளைவித்தது என்பதை அவர்கள் அறிந்தவர்களாய், அதை ஆதாரமாகக் கொண்டு, வேறொரு புரட்சியை உண்டாக்கி விடலாமென்று அவர்கள் எண்ணுகின்றனர்.
175. நான் கூறும் விஷயம் தெளிவானது என்பதை நிரூபிக்க, அவர்கள் ஒருமைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட பிறகும் (அவர்கள் அதை இப்பொழுது சட்டப்பூர்வமாக பெற்றுள்ளனர்), அவர்கள் முன்பை விட அதிகம் தொல்லை விளைவிக்கின்றனர். பாருங்கள்? அது கம்யூனிஸம் என்றும், தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்த அந்த விலையேறப் பெற்ற ஆத்துமாக்கள் அல்ல என்பதையும் அது காண்பிக்கிறது.”