177. பல ஆண்டுகளுக்கு முன்பு, ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, கடைசி நாட்களில் மிருகங்கள், மாடுகள் இவைகளின் மத்தியில் வியாதிகள் உண்டாகுமென்றும், முட்டைகளுக்கும் அது நேரிடுமென்றும் நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். சாப்பிடுவதற்கு தகுதியில்லாத முட்டைகள் இருக்குமென்றும், பள்ளத்தாக்கில் வாழும் ஜனங்களுக்கு... இதை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைத்தேன், அதாவது பள்ளத்தாக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களை நான் அங்கிருந்து வெளியேறச் சொல்வேன் என்றும் அவர்கள்... புசிக்கக் கூடாதென்றும், வெவ்வேறு இறைச்சிகள் இன்னும் மற்றவை விஷமாயிருக்ககுமென்றும், ஜனங்கள் பள்ளத்தாக்குகளில் வாழ்வது ஆபத்தாயிருக்குமென்றும் (அப்படித்தான் அதை நான் கண்டேன் என்று நான் நினைக்கிறேன்).
178. அணு ஆயுத வெடிப்பையடுத்து கதிரியகத்துகள்கள் விழுவதற்கு முன்பு அல்லது அவர்கள் அதைக் குறித்து எதையும் அறிவதற்கு முன்பே இந்த தீர்க்கதரிசனம் உண்டானது. அது பரிசுத்த ஆவியானவர் எனக்களித்த எச்சரிக்கையாகும். இப்பொழுதும் கூட நமது மாடுகளை நீங்கள் சந்தையில் காண்பீர்களானால், DDT, மருந்தை தெளிப்பதனால், அது பசு மாடுகளில் ஏதோ ஒன்றைத் தொடங்கியுள்ளது.
179. மறுபடியும் கவனியுங்கள், அவர்கள் கலப்பு இனங்களை உண்டாக்குவதும், அப்படிப்பட்ட செயல்களும் மானிடவர்க்கத்தின் நாசத்தை விளைவிக்கிறதாயுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளில் இருபது அல்லது முப்பது சதவிகிதம் பேர் அங்கு சேர்க்கப்படுவதற்கு மருத்துவரே காரணம் என்று “ரீடர்ஸ் டைஜஸ்ட்” பத்திரிகை தெரிவிக்கிறது. எப்படியெனில் இதை உங்களிலிருந்து போக்க அவர்கள் கொடுக்கும் மருந்து வேறொன்றை உங்களில் தொடங்கி விடுகிறது.
180. நீங்கள் முட்டைகளை கவனித்தீர்களா? சென்ற ஆண்டில் லூயிவில்லிலும் ஜெபர்ஸன்வில்லிலும் நூற்றுக்கணக்கான பேர்கள் பள்ளத்தாக்கில் உள்ள கோழிகள் இட்ட முட்டைகளை சாப்பிட்டதன் விளைவாக வாந்தியெடுக்கத் தொடங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்... பள்ளத்தாக்கில் இடப்பட்ட முட்டைகள் கதிரியக்கத்துகள்களை உறிஞ்சிக் கொண்டு விட்டன. பயிர்கள், இன்னும் மற்றெல்லாமே இவைகளால் அசுசிப்பட்டு விஷமாகி விட்டன.
181. என் சகோதரனே, இதை நீங்கள் இங்கு தான் பெற்றுக் கொள்கிறீர்கள். இதை நான் என் இருதயப் பூர்வமாக விசுவாசிக்கிறேன். அதாவது, எந்த ஒரு ஆகாரமும் ஸ்தோத்திரமில்லாமல் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாதென்றும், ஏனெனில் அது தேவனுடைய வசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்த மாக்கப்படுகிறதென்றும் வேதம் உரைக்கிறது. பாருங்கள்? நீங்கள், “கர்த்தராகிய இயேசுவே, இந்த ஆகாரத்தை நீர் எனக்காக ஆயத்தம் செய்திருக்கிறீர். நான் விசுவாசத்துடன், எங்கள் சரீரங்களுக்கு பெலனாக அமைய, இதை பரிசுத்தம் செய்கிறேன்” என்று ஜெபித்து விட்டு அதை சாப்பிடுங்கள். ஏனெனில் நாம் எல்லாவற்றையும் விசுவாசத்தினாலேயே செய்கிறோம்.
அன்புள்ள சகோ. பிரன்ஹாமே, குடிகார கணவனை விவாகரத்து செய்ய ஆதாரங்கள்?
182. எனக்கு விவாகரத்தைக் குறித்து பேசுவதற்கு பிரியமில்லை. அதை குறித்து நான் சிறிது கழிந்து பேசுகிறேன்.