183. ஆம். நிச்சயமாக, அதை செய்யுங்கள். தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டிருங்கள்.கவனியுங்கள், நான் சகோ.வுட்டின் வீட்டில் நேற்று இருந்த போது, சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. குடிகாரனாயிருந்த அவருடைய சகோதரரோ, அல்லது வேறு யாரோ, அதிலிருந்து விடுபடுவதற்கென்று ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஊசிகள் போட்டுக் கொண்டதாகவும், சகோ. நெவில் அந்நிய பாஷை பேசி - அல்லது வேறெந்த விதத்திலோ - இந்த நபரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்து, இன்னும் சில நாட்களுக்குள் அந்த மனிதனுக்கு நல்லது ஏற்படுமென்று கூறினாராம். சக்கர நாற்காலியிலுள்ள அந்த மனிதன் தொலைபேசியில் கூப்பிட்டு, இந்த மனிதன் மருத்துவமனையில்லிருந்து வெளிவந்து அறுபத்தெட்டு நாட்கள் ஆகிவிட்டன என்றும், குடிப்பதை தடுக்க அவருக்கு ஊசி எதுவும் போடாமலேயே அல்லது அவர் மருந்து ஒன்றும் சாப்பிடாமலேயே அவர் ஒரு முறையாவது குடிக்கவில்லை என்றும் கூறினார். சகோ. நெவில் தீர்க்கதரிசனமாக உரைத்தது நிறைவேறினது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நமது சகோதரன் தேவனுடைய மனிதன் என்று நாம் விசுவாசிக்கிறோம்.
அன்புள்ள சகோ. பிரன்ஹாமே, இவர்கள்...
184. இப்பொழுது பொறுங்கள், இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்கிறேன். இதை தான் நான் ஜனங்களுக்கு கூற முயல்கிறேன். நான் விசுவாசிக்கும் அதே செய்தியையே சகோ. நெவில் விசுவாசிக்கிறார். சகோ. காப்ஸ், சகோ. பீலர், சகோ. ரட்டல், இங்குள்ள இந்த சகோதரர் அனைவருமே நான் விசுவாசிக்கும் அதே செய்தியையே விசுவாசிக்கின்றனர்; அவர்கள் என்னைப் போலவே அதை பிரசங்கிக்கின்றனர்.
185. நீங்கள் உண்மையில் வெளியேற விரும்பினால், நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று அல்லது வேறெதாவது காரணத்துக்காக வெளியே செல்ல விரும்பி, வார்த்தையைக் கேட்பதற்கு வர விரும்பினால், இங்கு வாருங்கள். இந்த கூடாரத்துக்கு வாருங்கள், இங்கு தான் அதை கேட்கிறீர்கள்.
186. இவர்கள் தேவபக்தியுள்ள மனிதர். இவர்கள் நீங்களும் நானும் பெற்றுள்ள அதே பரிசுத்த ஆவியையே பெற்று, அதே வேதத்திலிருந்து அதே செய்தியை அளிக்கின்றனர்.அன்புள்ள சகோ. பிரன்ஹாமே, அந்நிய பாஷை பேசுகிறவர்கள் மீதியானவர்களா...
ஆம், அதற்கு நான் பதில் கூறி விட்டேன். உ, ஊ. நான் பதில் கூறி விட்டேன். ஒரு ஸ்திரீ அந்நிய பாஷை பேசுதல்.