187. நீ என்ன செய்ய வேண்டும்? இப்பொழுது, கவனி, நீ கணவனுக்கு கீழ்படிய வேண்டும்; அப்படித்தான் வார்த்தை உரைக்கிறது. அவர் உன்னிடம் வேதத்தைப் படிக்கக் கூடாதென்றும், சபைக்குச் செல்லக் கூடாதென்றும், அப்படி ஏதாவதொன்றைக் கூறி உனக்கு அனுமதியளிக்க மறுத்தால், அதற்கு நீ கீழ்படிய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில், “ஒருவன் தன் தகப்பனையாவது, தாயையாவது, புருஷனையாவது, மனைவியையாவது வெறுத்து விட்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல”. அது சரியா?
188. இல்லை, வேண்டாம்... மனிதரே, நீங்கள் செய்யக் கூடாது. ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை ஆளுகை செய்கிறவன் என்கிற காரணத்தால், அவள் மேல் தன் அதிகாரத்தைப் பிரயோகிக்கக் கூடாது. சகோதரனே, தேவன் உங்கள் மேல் ஆளுகை செய்கிறவராயிருக்கிறார். பாருங்கள்? உங்கள் மனைவி ஏதாவதொரு தவறைச் செய்தால், அவளிடம் கூறி அதை திருத்துவதற்கு உங்களுக்கு உரிமையுண்டு. அவள் உங்களுக்கு செவி கொடுக்க வேண்டியவளாயிருக்கிறாள். ஆனால் அவளை அடிக்கவோ, அல்லது இழுத்துப் போட்டு உதைக்கவோ, அப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய உங்களுக்கு உரிமை கிடையாது.
189. பாருங்கள், தேவன் மனிதனுக்கு ஒரு துணைவியை உண்டாக்கினாரேயன்றி, வாசலில் வைத்திருக்கும் ஒரு மிதியடியை அல்ல. ஞாபகம் கொள்ளுங்கள், அவள் உங்கள் இருதயத்துக்கு இனியவளாயிருந்தாள்; அவள் எப்பொழுதுமே அப்படியிருக்க வேண்டும்.