191. இல்லை, ஐயா! ஜூனியர் ஜாக்சன் தேவனுடைய மனிதன் என்று நான் நம்புகிறேன். அதை நான் ஏற்கனவே விவரித்து விட்டேன். நான் நம்புகிறேன்...
192. இப்பொழுது, சபை ஒழுங்கைப் பொறுத்த விஷயத்தில் நாங்கள் இணங்குவதில்லை. இப்பொழுது, நான் நம்புகிறேன். ஜூனியர் ஜாக்சனுக்கு... ஏன் அவர்... எத்தனை பேருக்கு ஜூனியர் ஜாக்சனைத் தெரியும். அவர் தேவனுடைய மனிதன் என்று நாம் அறிந்திருக்கிறோம். என்னைப் போலவே அவர் இந்த செய்தியை விசுவாசிக்கிறார், அவர் இந்த காரியங்களை விசுவாசிக்கிறார். வெளிப்படையாகக் கூறினால், நானும் ஜூனியரும் நண்பர்கள், இங்குள்ள மற்றவர்களைப் போலவே, ஜே.டி. சகோ. ரட்டல், சகோ. ஜாக்சன், சகோ. பீலர், இங்குள்ள சகோதரர் அனைவரும்; நாங்கள் அனைவரும் ஒன்றாயிருக்கிறோம். ஒருக்கால் நாங்கள் ஒரே விதமாக காணாமலிருக்கக் கூடும் (பாருங்கள்?), ஆனால் இதே செய்தியை நாங்கள் விசுவாசிக்கிறோம் (பாருங்கள்?), நாங்கள் ஒன்றாக இணைந்திருக்கிறோம். அங்கு சகோ. ஹ்யூம் கூட இருக்கிறார், ஒரு மிஷனரி, ஓ, வெவ்வேறு நபர்கள். சில நேரங்களில் அவாகளுடைய பெயர்கள் எனக்கு ஞாபகமிருப்பதில்லை. ஆனால், சகோதரனே, உங்களை நான் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும்.
நர்ஸ் வேலை செய்வதிலிருந்து விலக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?
193. அதை நான் கேட்டேன். உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அது நர்ஸ் வேலை செய்வதைக் குறித்து அறிய விரும்பிய ஒரு அருமையான இனிய சகோதரி: நான் சிறுவனாயிருந்த போது, நான் பிரசங்கியாவதற்கு பிரியப்படுகிறேன் என்று எல்லோரிடமும் கூறி வந்தேன். (இதற்கு நான் பதில் கூறினேன். இதற்கும் நான் பதில் கூறி விட்டேன்) இன்றைக்கு அவர் என்ன செய்ய வேண்டும்?
194. நல்லது. இது கிறிஸ்துவுக்கு ஊழியக்காரனாயுள்ள ஒருவரிடமிருந்து வந்த கடிதம்... இது எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட கடிதம், சகோ. பாட்டைலர், இந்த சபையிலுள்ள சகோதரரில் ஒருவர்.
கேள்விகள் அவ்வளவுதான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஜனங்களாகிய உங்களுக்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எனக்கு... (ஒலிநாடாவில் ஒரு பாகம் காணப்படவில்லை - ஆசி).
...ஒன்றாயிருக்கிறோம். நமது செளகரியங்களும் நமது விசாரங்களும்
195, சகோதரி வில்ஸன் இன்னும் கட்டிடத்தில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவர்களை இங்கு நான் கண்டேன். சகோதரி வில்ஸன், சிறிது நேரத்துக்கு முன்பு நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? நாம் மூலைக்கல்லை நாட்டின போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு விவாகமாவதற்கு முன்பு நானும் ஹோப்பும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்தேன் எனக்கு அது தெரியவே தெரியாது... நான் குத்து சண்டை போட்டு விட்டு அந்த போட்டியில் வீரனாக வெற்றி பெற்று வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கண்டது என் நினைவுக்கு வருகிறது. நான் இந்தியானாவில் வேட்டை அதிகாரியாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அன்றொரு இரவு பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு சபையை எண்ணிப் பார்க்கிறேன். அன்றைக்கு இருந்த குழுவில், ஒருவராவது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை என்று எண்ணுகிறேன் நாம் தொடக்கத்தில் மூலைக்கல்லை நாட்டின நாள் முதற்கொண்டு இங்கு இருந்து வந்திருக்கிறவர் எத்தனை பேர்? உங்கள் கைகளை உயர்த்துங்கள்.
196. என் சகோதரன் மற்றும் சகோதரி வில்ஸனே, உங்கள் இருவரையும் ஒன்று கேட்க விரும்புகிறேன். நாம் எவ்விதம் தொடங்கினோம் என்பது ஞாபகமுள்ளதா? மண்ணினால் கட்டப்பட்ட பழைய தரை ஞாபகமுள்ளதா? ஆடுகின்ற பழைய ஜன்னல்களும். நாம் தொடங்கும் போது எண்பது சென்டுகள் மட்டுமே இருந்தன, குவியலாக களைகள். இந்த கூடாரத்தை நாம் கட்டின போது, நமக்கு பின்னால் இருந்த இடம் ஒரே காடாக இருந்தது.
197. பொருத்தனை பண்ணிக் கொண்டு, அணி வகுத்து பீடத்தைச் சுற்றி வந்த நம் அனைவரையும் பாருங்கள். அவர்கள் வந்து, ஒருவரிலிருந்து மற்றவர் பிரிந்து செல்வதை நாம் கண்டோம். இந்த செய்தியில் நிலைத்திருந்தவர்கள் எப்படி பிரிந்து சென்றனர் என்பதைக் கண்டீர்களா? செய்தியை விட்டு விலகினவர்கள், அவர்கள் எவ்விதம் பிரிந்து சென்றனர் என்பதை எண்ணிப் பாருங்கள். அதை எண்ணிப் பாருங்கள்.
198. இன்றிரவு இங்கு “நாம் உள்ளோம். நாம் முன்பு நடத்தின கூட்டங்களில் இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் மூன்று மடங்கு ஜனங்கள் குழுமியிருந்தனர். அதை எண்ணிப் பாருங்கள். அப்பொழுது பள்ளிக்கூடப் பேருந்துகள் அது நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் இடமில்லாமல் இந்த பகுதியில் எல்லாவிடங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும். கூடாரங்கள் ஜனங்களால் நிரம்பி வழிந்து, அங்கு ஒன்று கூடின ஜனங்களை உட்காரவைப்பதற்கு எங்கும் இடமில்லாமல் போனது. அப்பொழுது நான் ஒரு இளம் பிரசங்கி. பாருங்கள்? நமக்கிருந்த ஆயிரக்கணக்கானவர்களில், இன்றிரவு நாம் மூன்று பேர் மட்டுமே இங்கு இருக்கிறோம்.
199. சகோதரி. வில்ஸன், காசநோயினால் பாதிக்கப்பட்டு, இரத்தம் கக்கி, தலையணை உறைகளும் படுக்கை விரிப்புகளும் இரத்தம் தோய்ந்து மூலையில் வைக்கப்பட்டு, மரணத் தருவாயில் இருந்த நிலையில் நான் படுக்கை அருகில் அழைத்துச் செல்லப்பட்டது என் நினைவுக்கு வருகிறது. பரிசுத்த ஆவியானவர் அந்த இரத்தப் போக்கை நிறுத்தினது எனக்கு ஞாபகமுள்ளது. சில நாட்கள் கழித்து நான் அவர்களுக்கு பனிக்கட்டி போல் குளிர்ந்திருந்த ஒஹையோ நதியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, மேல் பாகம் திறந்திருந்த என் சிறு காரின் பின் இருக்கையில் உட்கார வைத்து, ஊட்டிகாவிலிருந்து அவர்களை ஓட்டிச் சென்றேன். அது சரி தானே? அங்கிருந்து... (சகோதரி வில்ஸன் சகோ. பிரன்ஹாமுடன் உரையாடுகின்றார்கள் - ஆசி). ஆம்! என் மனைவி சகோதரி ஹோப்; அங்குள்ள சகோதரி, அந்த சிறு காரின் முன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். என் மனைவியும் சகோதரி ஸ்நெல்லிங்கும் பின்னால் அமர்ந்திருந்தனர். அந்த புகைப்படம் என்னிடம் உள்ளது, சகோதரி ஸ்நெல்லிங், என் தாய், மற்றவர்கள், திருமதி. வீபர் - என் மாமியார், நாங்கள் எல்லோரும் அங்கிருந்தோம். மேடா ஒரு சிறு பெண்ணாக அங்கு நின்று கொண்டிருக்கிறாள், இப்பொழுது அவள் தலை நரைத்த ஸ்திரீ (ஒரு சகோதரிசகோ. பிரன்ஹாமுடன் உரையாடுகிறாள் - ஆசி).
200. முதலில், நாங்கள் சபைக்கு பணம் சேகரிப்பதற்காக வசனச் சீட்டு நாள் (tag day) ஒன்றை நடத்தினது என் நினைவுக்கு வருகிறது. ஹோப் அந்த மூலையில் நின்று கொண்டிருந்தது எனக்கு ஞாபகமுள்ளது. அப்பொழுது அவள் ஒரு இளம் பெண், ஏறக்குறைய பதினாறு வயது. அவள் வசனம் எழுதப்பட்ட சீட்டை இப்படி கையில் பிடித்துக் கொண்டு விற்றுக் கொண்டிருந்தாள்... அவர்களுக்கு வசனச் சீட்டைக் கொடுப்பாள்... அவர் உண்டியில் காசு போடுவார்.தெருவின் வழியாக ஒரு குடிகாரன் வந்தான். அவன், “மிஸ், என்னை மன்னியுங்கள். நீங்கள் என்ன விற்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அவள், “ஒன்றுமில்லை, இந்த வசனச் சீட்டை உங்களுக்குத் தருகிறேன். இது சபைக்காக சேகரிக்கப்படும் நன்கொடை. உங்களுக்கு விருப்பமானால், நீங்கள் நன்கொடையாக ஏதாவது காசை இந்த உண்டியில் போடலாம். நகரத்தில் ஒரு கூடாரத்தைக் கட்டுவதற்காக நாங்கள் போதிய பணம் சேகரிக்க முயன்று கொண்டிருக்கிறோம். உங்களுக்கு விருப்பமானால் காசு போடலாம்” என்றாள்.
அவன், “என்னிடம் காசு இல்லை” என்றான்.
அவள், “பரவாயில்லை, இந்த வசனச் சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்” என்றாள். அவன் அதை வாங்கிக் கொண்டு அதை பார்த்தான். ஒரு பக்கத்தில் “உன் நித்தியத்தை எங்கே கழிப்பாய்?” என்று எழுதப்பட்டிருந்தது. மறு பக்கத்தில் ஒரு கேள்விக்குறி. “நித்தியத்தை எங்கே கழிப்பாய்?” என்பதற்கான ஒரு கேள்விக்குறி.
அவன் தள்ளாடிக் கொண்டு திரும்பி வந்து, “மிஸ், நீங்கள் முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டிருக்கிறீர்கள்” என்றான்.
அவள், “இதை முடிவு செய்தாக வேண்டும்” என்றாள். அது உண்மை. அவள் இன்றிரவு திரைக்குப் பின்னால் இருக்கிறாள். அவள் கூறின கடைசி சொற்கள் எனக்கு ஞாபகமுள்ளது. நான் அவளிடம் கூறினதும் எனக்கு ஞாபகமுள்ளது. அதை நான் ஞாபகம் வைத்திருக்கிறேன். ஆம், ஐயா!
201. எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. எங்களுக்கு சபை, கட்டிடம் ஒன்று இருப்பதற்கு முன்பே நாங்கள் அங்கு நின்று கொண்டு, கைகளைக் கோர்த்து, இந்தப் பாடலை பாடுவது வழக்கம். அதை என்னால் கேட்க முடிகிறது. மிர்டி அப்பொழுது சிறு பெண். வீராய் ஒரு சிறுவனாக அங்கு நின்று கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்னிடம் உள்ளது.
நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் பிணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும்.