308.இல்லை, ஐயா. அவன் ஒரு விசுவாசியாக இருந்தால், அவன் உயிர்த்தெழுதலில் வருவான், இரண்டாம் உயிர்த்தெழுதலில். அவன் அபிஷேகம் பெற்றிருந்தால், முதலாம் உயிர்த்தெழுதலில் அவன் செல்வான். இப்பொழுது ஏறக்குறைய என் வார்த்தையை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அது திருப்திகரமாக இல்லையெனில், அப்படியானால் நீங்கள்- நீங்கள் என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு வேதவசனத்தை தருகிறேன். ஏனெனில், இன்னும் இந்த இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்க நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், பிறகு நாம் முடிப்போம்.