312. அப்படியல்ல என்று எண்ணுகிறேன். நாம் அடுத்ததாக எதிர்நோக்கியிருப்பது சபையின் எடுத்துக் கொள்ளப்படுதல் என்று எண்ணுகிறேன். ஆகவே அதற்கு பிறகு, “கோகும் மாகோகும் கீழே வந்த போது” அது ரஷ்ய சேனைகள் வருகின்ற அந்த...
313. கவனியுங்கள், இங்கே பொதுப் பணி கம்பெனியில் மேலதிகாரியாக திரு. போஹன்னான் இருந்தார், ஒரு அருமையான கிறிஸ்துவ மனிதன். அவர் ஒரு நாள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார், அவர், “பில்லி, நான் வாசிக்க முயற்சி செய்தேன், வெளிப்படுத்தின விசேஷத்தை விவரிக்க என்னுடைய மேய்ப்பரை கேட்க முயற்சித்தேன், நாங்கள் முயற்சித்து முழுவதுமாக குழப்பமடைந்து விட்டோம், யோவான் அந்த இரவு எதையாவது தின்றுவிட்டு ஒரு சொப்பனத்தைக் கண்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.
நான் “திரு.போஹன்னான், உமக்கு வெட்கமில்லையா” என்றேன். நான் கூறினேன்...
அவர், “நல்லது, அதை யாருமே புரிந்து கொள்ள முடியாது” என்றார்.
314. நான், “இல்லை, எந்த இயற்கையான மனிதனாலும் முடியாது, ஆனால் பரிசுத்த ஆவியானவரால் அதை வெளிப்படுத்த முடியும்” என்றேன்.
315. அவர், “நல்லது, இங்கே பாருங்கள் பில்லி,” என்றார். அவர், “மணவாட்டி சீனாய் மலையின் மேல் நின்று கொண்டிருந்தாள். இங்கே வாயிலிருந்து ஊற்றப்பட்ட தண்ணீர் இருந்தது, வலுசர்ப்பம் ஊற்றிக்கொண்டிருந்தது, மணவாட்டியின் மீது யுத்தத்தைக் கொண்டு வந்தது. அதே நேரத்தில் மணவாட்டி பரலோகத்தில் இருந்தாள். அதை ஒன்று சேர்த்து விவரியுங்கள் பார்க்கலாம்!” என்றார்.
316. நான், “திரு. போஹன்னான் உங்களுக்கு தெரிந்தது என்னவென்றால், மூன்று வித்தியாசமான காரியங்களை நீங்கள் குழப்பிக் கொண்டவர்களாய், அதை, மணவாட்டி என்று அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். சீனாய் மலையின் மேல் ஆட்டுக்குட்டியானவருடன் நின்று கொண்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை “மணவாட்டி” என்று அழைக்கின்றீர்கள். அது அவர்கள் அல்ல. வாயிலிருந்து தண்ணீரை ஊற்றி, ஸ்திரீயின் வித்தின் மீதியானவர்களுடன் யுத்தம்பண்ணச் சென்றது, என்று நீங்கள் அவர்களைக் குறிப்பிடுகிறீர்கள், அது மணவாட்டி அல்ல; அது விடப்பட்டவர்கள் ஆவார். மணவாட்டி பரலோகத்தில் இருந்தாள்; அங்கே இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இருந்தனர்; இங்கே உபத்திரவத்தினூடாக பெயர் கிறிஸ்தவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். ஆகவே அது சரி”.
317. சகோதரனே இப்பொழுது நீங்கள் அதை எடுத்திருந்தால் அதை வாசியுங்கள். (சகோதரன் நெவில் ஒன்று கொரிந்தியர் 15:29 வாசிக்கின்றார் - ஆசி)
மேலும் மரித்ததோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?
318. இப்பொழுது, இப்பொழுது, சகோதரரே, மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் கொடுப்பது என்று விசுவாசிக்கின்ற ஒரு - ஒரு மக்கள் இருக்கின்றனர், அது மார்மோன் மக்கள் ஆகும். நான் அவர்கள் ஆலயத்திற்கு அநேக முறை சென்றிருக்கிறேன். அவர்கள் மிகவும் அருமையான ஜனங்கள் ஆவர். நீ ஒருவேளை ஒரு மார்மோனாக இருக்கலாம். நான் உன் உணர்வுகளைப் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் என் அன்பான நண்பனே, நீ உன் தகப்பனாருக்காக ஞானஸ்நானம் பண்ணப்பட முடியாது. அச்செயலை அவர்கள் செய்தாக வேண்டும். “மரமானது எப்பக்கம் சாய்கின்றதோ, அது அப்பக்கமாகவே விழுந்துவிடும்.”
பவுல் இங்கே “மரித்தோரைக்” குறித்து பேசுகிறான். “மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தோர் உயிர்த்தெழாவிடில் நீங்கள் ஏன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும்?” நான் என்ன கருதுகிறேன் என்று உங்களால் காணமுடிகின்றதா? அப்போழுது நீங்கள்... “மரித்தோர் உயிர்த்தெழாவிடில் புசிப்போம், குடிப்போம், நாளைக்கு சாவோம் என்று சொல்லலாமே?” ஆனால் அவனோ தொடர்ந்து மரித்தோர் உயிர்த்தெழுதலுக்காக தேவனை மகிமைப் படுத்துகிறான். நாம் இயேசு கிறிஸ்துவுக்கு அவருடைய மரணம், அடக்கம் உயிர்த்தெழுதலுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நாம் “மரித்தவருக்காக” ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். சரி.
இதன் பின் மேலும் இன்னொன்றுள்ளது என்று நான் நம்புகிறேன்.
சகோதரன் பில், பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு கூறுங்கள். அது ஜெபத்தினாலும், அற்பணிக்கப்பட்ட ஜீவியத்தாலும், சுகமளித்தலைப் போல அதைப் பெற்றுக்கொள்ளும் போதா? இங்கே நீர் எனக்கு ஜெபித்த போது சுகமளித்தலுக்காக விசுவாசம் கொண்டிருப்பது எப்படி என்று எனக்குத் தெரியும்? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக நீங்கள் கைகளை வைத்து ஜெபிப்பதுண்டா? நான், பிதாகுமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றள்ளேன். நீர் சமீபமாக பேசினது போல நான் மறுபடியுமாக இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டுமா என்று தயவு செய்து எனக்கு கூறுங்கள்.
இப்பொழுது, என் அருமை கிறிஸ்தவ நண்பனே, என்ன செய்யவேண்டும் என்று நான் உங்களுக்கு கூறிக்கொண்டிருக்கவில்லை. நான் வேத வசனத்தைத் தான் எடுத்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன். நாம் பேசிக் கொண்டிருக்கையில் எவ்விதமாக, எப்படி பரிசுத்த ஆவியானவரால் சரியாக இப்பொழுது வரமுடியும் என்பது உங்களுக்குத் தெரியும். பரிசுத்த ஆவி தேவனுடைய ஒரு வரமாகும். பாருங்கள்? அது தேவனுடைய வரமாகும். நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே அது வரும். நான் உங்களிடம் கூறுவேன், அந்த... ஜனங்கள் சரியாக போதிக்கப்பட்டிருப்பார்களானால்…
இங்கே வயோதிபர்களாகிய உங்களில் கூடாரத்தில் இருந்து கொண்டிருக்கின்ற முற்காலத்தை சேர்ந்த உங்களிடம் ஒன்றை நான் கேட்கட்டும். நான் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது கவனியுங்கள். ஊழியர்களே, இதை நீங்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீரண்டை அந்த மக்கள் வரும் போது அதற்கு முன்னர் ஜீவியம் சுத்தமாகத்தக்கதாக அந்த மக்களுக்கு நான் போதித்திருந்தேன், தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்ள கடமைபட்டுள்ளார் என்றும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் ஞானஸ்நானம் பெற்றவுடன் அதை ஏற்றுக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் சரியாக அங்கு இருக்கின்றார் என்றும் அவர்கள் விசுவாசிக்கும்படிச் செய்தேன். அவர்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்த போது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அது சரி. நீங்கள் மாத்திரம்...
319. மேய்ப்பர்களே, உங்கள் ஆடுகளுக்கு போதியுங்கள், இங்கே வேதாகமத்திற்குள் அவர்களை கொண்டு செல்லுங்கள். (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை தட்டிக்கொடுக்கின்றார். ஆசி) ஏதோ ஒரு சபையின் பழைய பாடப்புஸ்தகத்திலிருந்து அப்பாலே செல்லுங்கள், இங்கே தேவன் போதித்திருக்கின்ற வேதாகமத்திற்கு வாருங்கள், பிறகு இந்த விதமான சிக்கல்கள் உங்களுக்கு வராது.
320. அபிஷேகிக்கப்பட்ட நபரால் கைகள் வைக்கப்படுதல், ஆம், கைகளை வைப்பதின் பேரில் தான் நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.