321. இப்பொழுது, இதை நான் சீக்கிரமாக கூறட்டும், இப்பொழுது இது சபைக்கான ஒன்றாக இருக்கிறது. நான்... இப்பொழுது, எங்கள் வாசல்களில் இருக்கும் வெளிமக்களே, நான் சபைக்கு இப்பொழுது சிறிது அடி கொடுக்கப்போகிறேன், ஆகவே நீங்கள். உங்களால் கூடுமனால் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு சற்று பொறுத்துக்கொள்ளுங்கள்.
322. என் பிள்ளைகளே! கவனியுங்கள், அந்த வரங்கள் மகத்தானவைகள் அல்லவா. நான் உங்களை எவ்வாறு மெச்சுகிறேன் என்றும், நான் உங்களை தேவ அன்புடன் நேசிப்பதை யாருமே அறிந்திருக்க முடியாது. ஆனால் அந்த வரங்களை சரியான இடத்தில் நீங்கள் உபயோகிக்காவிட்டால் அவை உங்களுக்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகவும் இருக்கும்.
323. இன்றைக்கு மக்களைப் பாருங்கள், களத்தில் இருக்கும் அருமையான மனிதர், வியாதியஸ்தருக்காக ஜெபித்து அதற்கு பணத்தை வசூல் செய்கின்றனர். அது தவறாகும். ஒரு மனிதன் சுகமாக்குதலுக்கும் வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதற்கான விசுவாசம் கொண்டிருப்பானானால், அவன் பணம் வாங்காமல் மக்களுக்கு ஜெபம் செய்யும் ஒரு நற்பண்பு கொண்டுள்ள ஒருவனாக இருக்கவேண்டும். தேவனுக்கு நன்றி! சகோதரனே, நான் அதைக் கூற விரும்புகிறேன், எனக்குத்தானே அல்ல, ஆனால் தேவனுடைய மகிமைக்காக, எனக்காக மக்களிடமிருந்து பணம் ஒரே காணிக்கையில் பத்து லட்சம், ஐந்து லட்சம் டாலர்கள் வந்தபோதும் மற்றும் அதைப் போன்ற ஒன்றையும் ஒரு முறை கூட நான் வாங்கினது கிடையாது. அது உங்களுக்கு தெரியும்; அது சரியாக இங்கே இருந்தது, அந்த காகிதம். பாருங்கள்? அது சரி. அது... நீ அதைச் செய்யம் போது, தேவனிடம் உனக்கு இருக்கின்ற உன்னுடைய விசுவாசத்தை நீ இழக்கப்போகின்றாய்.
324. இப்பொழுது அந்நிய பாஷையில் பேசுகின்ற, அந்நிய பாஷையின் வரங்களையுடைய மக்களாகிய நீங்கள், உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. இந்த சபையில் நீங்கள் தேவைப்படுகிறீர்கள். நீங்கள் இங்கிருக்க நான் விரும்புகிறேன். ஆனால், இப்பொழுது, இந்த - அந்த காரியம் ஒழுங்கில் இருக்கின்றது, பிரசங்கி பிரசங்கம் செய்யும் போது அதை ஒரு போதும் செய்யவேண்டாம். அவ்விதம் செய்வாயானால், நீ ஒழுங்கிற்கு வெளியே இருக்கின்றாய். பாருங்கள்? நீ அதைச் செய்யகூடாது. ஏனெனில் வேதாகமம், “தீர்க்கதரிசியின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறதே,” என்று கூறுகிறது. ஆகவே ஒரு மனிதன் பிரசங்கிக்கும் போது, அவன் மேடையைக் கொண்டிருக்கிறான், அவன் கூட்டத்தைக் கொண்டிருக்கிறான், பரிசுத்த ஆவியானவர் அவன் மூலமாக பேசப் போகின்றார். அவன் முடித்தவுடன் அப்பொழுது அது செய்திக்கான நேரமாக இருக்கிறது, நீங்கள் பாருங்கள். ஆகவே ஒழுங்கிலிருந்து வெளியே செல்லாதீர்கள்; அப்படி செய்வீர்களானால், அப்பொழுது நீங்கள் தடங்கலைக் கொண்டு வருகிறீர்கள். பிறகு நீங்கள் - சென்று கொண்டிருக்கிற செய்தியோடு பரிசுத்த ஆவியை நீங்கள் துக்கப்படுத்துவீர்கள்…
325. இங்கே சில காலத்திற்கு முன்னர், நான் இங்கே வாஷிங்டனில் எங்கோயொரு இடத்தில் ஒரு கூட்டத்தில் நான் இருந்தேன், அநேகமாயிரம் மக்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஆகவே என்னுடைய நிர்வாகி, ஒரு உண்மையான வேதாகம வியாக்கியானி, அவர் அங்கே நின்று கொண்டு, அபிஷேகிக்கப்பட்டவராக, தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார், பரிசுத்த ஆவியானவர் பேசிக் கொண்டிருந்தார். ஒரு பெண் எழுந்து அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தாள், அவர் சற்று நேரம் பொறுத்திருந்து பிறகு பேச்சைத் தொடர்ந்தார். பரிசுத்த ஆவியானவர் ஆர... துக்கமடைந்தார், அதை ஜனங்கள் மத்தியில் உங்களால் காணமுடியும்;. அவர் மறுபடியுமாக பேச ஆரம்பித்தார், அவள் எழுந்து கொண்டாள், “அவர் கர்த்தருடைய நாமத்தில், சகோதரியே உட்காருங்கள், நீங்கள் ஒழுங்கிற்கு வெளியே இருக்கிறீர்கள்” என்றார். ஊழியக்காரர்கள் அவளை அங்கே கொண்டு சென்று அவளுக்கு தெரியப்படுத்தினர்.
326. இப்பொழுது, அது என்ன, அந்த வரங்கள் உலகத்திலிருக்கின்ற அவைகள், இப்பொழுது சபையில் இருக்கின்றன. வரங்கள் சபையில் இருக்கின்றன, ஆனால் அந்த ஏழை சிறிய பிள்ளைகள் அந்த வரங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். பிறகு அதை எப்படி கட்டுக்கள் வைப்பது என்கின்ற போதகம் இல்லாமலிருக்கின்றனர். நீங்கள் அதை கட்டுக்குள் வைக்காமற்போனால் நீங்கள் நன்மையைக் காட்டிலும் அதிக சேதத்தைத் தான் விளைவிப்பீர்கள், பாருங்கள்?
327. வெளியே சென்று வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்து யாரோ ஒருவரை சுகமடையச் செய்து “இப்பொழுது, அதற்காக நீ எனக்கு ஆயிரம் டாலர்கள் கொடுத்தாக வேண்டும்” என்று கூறும் ஒரு மனிதனைப் போன்று. இப்பொழுது அவன் நன்மையைக் காட்டிலும் இன்னும் அதிகமான கேட்டைத்தான் செய்திருக்கிறான். அந்த மனிதன் கிறிஸ்துவின் காரியத்தின் பேரில் நிந்தையைக் கொண்டு வந்ததைக் பார்க்கிலும் சென்று மரித்துப்போயிருந்தால் நலமாயிருந்திருக்கும்.
328. இப்பொழுது, நீங்கள்... மேய்ப்பரோ அல்லது சுவிசேஷகரோ, அல்லது யாராயிருந்தாலும் அவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்தால் அமைதியாயிருங்கள். அவ்விதமாகச் செய்யும் படி பவுல் கூறியிருக்கிறான், நீங்கள் பாருங்கள். இப்பொழுது, ஆகவே அப்பொழுது அவன் “நீங்கள் ஒவ்வொருவராய்ப் பேசுங்கள்,” என்றான். அது முற்றிலும் உண்மையானது. ஆகவே அவன், “நீங்கள் எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன், அது நல்லது,” என்றான்.
329. ஆனால் நீங்கள் அந்நிய பாஷையின் வரத்தைக் கொண்டிருந்தாலொழிய உங்களால் அந்நிய பாஷையில் பேசமுடியாது. ஆகவே அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் இப்பொழுது இந்த சபையில் அநேக வரங்கள் இருக்கினறன. அதில் அநேக வரங்கள் இங்கே மெத்தோடிஸ்ட் சபையில் இருக்கின்றது, இங்கே பாப்டிஸ்ட் சபையில் அதின் அநேகம் இருக்கின்றது, அது பிரசங்கிக்கப்பட்டால்தான் அந்த வரமானது கிரியை செய்ய ஆரம்பிக்கும்.
330. அது எவ்விதம்? நீ நிலத்தில் விதையைப் போட்டு அதைப் பண்படுத்தாவிட்டால், அதற்கு என்ன ஆகும்? பாருங்கள், அது அங்கே உலர்ந்து புழுதியில் கிடந்து அழுகிப்போகும்; அது எந்த நன்மையும் கொடுக்காது. இந்த சபையில் இது வரைக்கும் இந்த வரங்கள் இருந்துவருகிறது, ஆனால் பெந்தெகொஸ்தே மழை, இப்பொழுது தான் அதற்கு நீர் பாய்த்து கனியை கொண்டு வரத்தக்கதாக தண்ணீர் விழ ஆரம்பித்திருக்கிறது, இப்பொழுது, அதை சரியான இடத்தில் பயன்படுத்துங்கள்.
331. இப்பொழுது, அது கூறுகிறது, நல்லது, அந்த நபர் கேட்ட கேள்வி அடுத்த கேள்வி அங்கேயிருந்தது என்று நான் நம்புகிறேன்.