172. ஓ என்னே, இது முதல்தரமான ஒன்றல்லவா! ஹ-ஹம். நாம் அதற்குள் அதிகமாக செல்ல போதுமான நேரம் நமக்கு இல்லை, ஆனாலும் இதை நான் உங்களுக்குக் கூறட்டும். என்னுடைய வார்த்தையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நான் அதை உங்களுக்குக் காண்பிக்கட்டும். இதனால்... நீங்கள் என்னுடைய வார்த்தையை எடுப்பீர்களானால், நான் தேவனிடத்தில் விவரித்தது போல், நீங்கள் பிறகு இதைப்பார்ப்பீர்களானால், நீங்கள் இதை கண்டு கொள்வீர்கள், பாருங்கள். ஏனெனில் நான் கற்பனை... என்னால் அந்த கடிகாரத்தைக் காணமுடியவில்லை, ஆனால் அதை என்னால் கற்பனை செய்யமுடிகிறது... என்ன நேரம் ஆகிறது? என்ன? ஒன்பதரை. நான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், பிறகு நியூ ஆல்பனிக்கு செல்லவேண்டும், நான் காலை மூன்று மணி இருபத்தைந்து நிமிடங்களுக்கு ஜெபர்சன்வில்லுக்கு வெளியில் செல்லவேண்டும். ஆகையால்... நான் இந்த வாரம் இரவு முழுவதும் இரண்டு அல்லது மூன்று மணி வரை படுக்கைக்குச் செல்ல முடியவில்லை.
173. இப்பொழுது இதைப் பெற்றுக்கொள்ள, இதை இங்கே சீக்கிரம் கவனியுங்கள். ஆம். என் கிறிஸ்தவ நண்பனே, புறஜாதிகளின் நாட்கள் முடிவுற்றது, இப்பொழுது சரியாக முடிவடைகிறது. ஆகையால் தேவன் யூதர்களிடத்திற்கு திரும்புவார். நான் தொடர்ந்து ஜெபித்து வருகின்ற இந்த சிறிய சபைக்கு நான் இதைக் கூறட்டும். இதைக் குறித்த அநேக தீர்க்கதரிசனங்கள் தேசத்தின் மற்ற பாகங்களிலிருந்து வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றது. நான் விசுவாசிக்கிறேன், யூதர்... இப்பொழுது சிறிது நேரம் பொறுங்கள்.
174. கிறிஸ்தவ சபையைக் குறித்த இந்த ஒன்றை யூதனால் பெறமுடியவில்லை. யூதன் அநேக முறை “சகோதரனே, நீங்கள் தேவனை மூன்று கூறுகளாக வெட்டி அவரை எனக்கு அளிக்க முடியாது” என்று என்னிடம் கூறியுள்ளான். யூதன் ஒரே தேவனைத்தான் கொண்டிருக்கிறான், அது யெகோவா.
175. ஆகவே புறஜாதியார் அதைத் தவறாகப் பொருள்கொள்கின்றனர்: அவர்கள் அதை இவ்வளவாக ஞானத்தினால் குழப்பி இவ்வாறு அவரை ஆக்கியுள்ளனர். அது மூன்று தேவர்கள் அல்ல என்று அதைக்குறித்த ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறான் என்று - நான் விசுவாசிக்கிறேன் ஒரே தேவன், மூன்று அவதாரங்கள் (Manifestations) ஒரே நபருக்குள் மூன்று இயல்புகள். நீங்கள் அந்த செய்தியை பெற்றுக் கொள்ளும்போது, நான் ஹைமான் ஆப்பிள்மேனிடம் (Hyman Appleman) கூறினேன்... உங்களில் அநேகர் அவரை அறிவீர்கள். அவர், “சகோதரன் பிரன்ஹாம், நீர் அந்த செய்தியை அற்புதங்களுடனும் அடையாளங்களுடனும் பாலஸ்தீனர் களுக்கு எடுத்துச் செல்வீரானால், பத்து லட்சம் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வார்கள்” என்றார். பாருங்கள், அது சரி. இப்பொழுது நான் கூறினேன்...
176. நாம் கொண்டிருக்கும் செய்தி இதோ இங்குள்ளது. இயேசுதான் மாம்சத்தில் மறைந்திருந்த யெகோவா, மறைந்து கீழிறங்கி வந்தவர். இப்பொழுது தேவன் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) சில மக்கள் நினைப்பது போல, உங்கள் விரல்களைப்போல் அல்ல. முழு காரியமும்... இல்லை, தேவன் என்பதை நான் சற்று முன்பு உங்களுக்கு வெளியாக்கிக் காண்பித்தேன், பாருங்கள், அங்கே அந்த ஒன்றில் திரித்துவம் அமைந்துள்ளது.
177. நான் ஒன்றில் உள்ள திரித்துவமாயிருக்கிறேன். நான், ஆத்துமா, சரீரம், ஆவியுள்ள ஓர் நபராக இருக்கிறேன். அது சரிதானே? நிச்சயமாக. நான் அணுக்களாலும், இரத்தத்தாலும், நரம்புகளாலும் உருவாக்கப்பட்டுள்ளேன், ஆனாலும் ஒரே நபராயிருக்கிறேன். பாருங்கள்? நீங்கள் காணும் எல்லாவற்றிலும் திரித்துவம் உள்ளது, ஒன்றில் உள்ள திரித்துவம்.
178. பேழையிலும் ஒரு திரித்துவம் இருந்தது. கீழ் அறை, ஊறும் அறை, ஊறும் பிராணிகளுக்கு; இரண்டாவது அறை, கோழிகள், பறக்கும் பட்சிகள்; மூன்றாவது அறை நோவாவும் அவனுடைய குடும்பத்தினருக்கும். எல்லாம்.
179. ஆசரிப்பு கூடாரத்தில், அங்கு ஒரு சபை, பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். பாருங்கள்?
180. மூன்று யுகங்கள் இருக்கின்றன. பிதாத்துவம், குமாரத்துவம், பரிசுத்த ஆவியின் யுகம். நான் என்ன கூற விழைகிறேன் என்று பாருங்கள்? ஆனால் அந்த மூன்றும்... “நம் தேவர்கள்” என்று நாம் கூறுவதில்லை. அது அஞ்ஞான வழக்கம், யூதர்களும் அதை அறிவார்கள். ஆனால் அவனுக்கு இந்த இயேசு தான் தேவன், யெகோவா தேவன், இரண்டாவது அல்லது மூன்றாவது நபர் அல்ல, அது எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் தம்மை வெளிப்படுத்தும் ஒரே நபர்தான் என்று நீ கூறலாம். பாருங்கள்? அதன் பிறகு மரித்தோரிலிருந்து இயேசு உயிரோடெழுந்தார் என்று அற்புதங்களாலும் அடையாளங்களாலும் நிரூபிக் கமுடியும்.
181. ஆகவே இந்த டாக்டர் ரீட்ஹெட்...
182. பின்னால் இருக்கும் சகோதரன், சபையில் இருக்கும் ஒரு போதகர்... பள்ளி ஆசிரியர், நான் அவரை இங்கே சபையில் கேட்டேன்... அங்கேயுள்ள அவருடைய மனைவியுடனும், குழந்தையுடனும் நான் கைகுலுக்கினேன். அவர் அந்த இரவு நான் பிரசங்கிப்பதைக் கேட்க வந்திருந்தார். அவர்கள் இங்கிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் செல்லவில்லை என்றால், அவர் லூயிவில்லில் உள்ள ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் என்று நான் நம்புகிறேன். எப்படியாயினும், அவர் பேசுவதைக் கேட்க சென்றிருந்தனர்.
183. அது முக்கியம் வாய்ந்தது. அநேக மாதங்களுக்கு முன்பாக அந்த மனிதன் ஒரு யூதனுடன் என் வீட்டிற்கு வந்தார். அவர் “சகோதரன் பிரன்ஹாமே, பாப் ஜோன்ஸில் அநேக பட்டங்களை நான் பெற்றிருக்கிறேன். நான் வீட்டனிலிருந்து (Wheaton) வந்தவன்.” என்றார். எல்லா கல்வியும் அவருக்குள் குவிக்கப்பட்டிருந்தது. அவர், “நான் சிறிய பையனாய் இருக்கும் போதிலிருந்தே தேவனை விசுவாசித்து வருகிறேன், ஆனால் இன்னுமாய் என் வாழ்க்கை வெறுமையாயிருக்கிறது!” என்றார் அவர் “போதகர்கள் தவறாய் இருக்கிறார்களா?” என்று கேட்டார்
184. ஆகவே அந்த கருத்து இங்கே இருக்கிறது. எப்படியாவது... அந்த இரவு திறந்த வெளியில் பிரசங்கம் செய்யப்பட்ட போது அங்கிருந்திருப்பீர்களானால், அவர், “நான் என்னுடைய அதை- இதை பெற்ற போது... என்றார்” இப்பொழுது கவனியுங்கள், சிறிய சபையே, உங்களுடைய ஜெபங்களும் மற்றவைகளும் உதவி புரிந்தன, இதற்கு செவிகொடுங்கள். அவர் இதை இங்கே இந்த வீட்டிலே என்னிடம் முன்பு கூறினார்.
185. அவர் என் வீட்டிற்கு வந்து “சகோதரன் பிரன்ஹாம், நான் மூர்ச்சையடைந்தேன், கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக, விசுவாசித்து ஏற்றுக்கொண்டுள்ளேன், இதைவிட மேலானது ஒன்று உண்டோ? நான் ஆவியினாலே மறுபடியும் பிறந்திருக்கிறேன் என்று விசுவாசிக்கிறேன், அதற்காக சாட்சிகள் எனக்கு இல்லை.” என்று கூறினார்.
186. நான், 'சகோதரனே, நான் இதைக் கூறுவது சற்று மோசமாக இருக்கும், உங்களுடைய போதகர்களும், பள்ளிகளும் உங்களை ஏமாற்றியுள்ளன.” என்றேன்.
187. கவனியுங்கள், நான் - நான் அதைக் கூறமுடியும், உன் கட்டை விரலை அசைத்துக்கொண்டு நீ பரலோகம் செல்ல முடியாது என்று நான் விசுவாசிக்கிறேன், “உங்களுடைய சபைகளிலே நீங்கள் இதை விசுவாசிக்கின்றீர்களா?” இங்கே உள்ள எதையும் நான் அறியேன் ஆனால்... “வேதம் இதை கூறுகிறது, அதை நீ விசுவாசிக்கிறாயா?” பிசாசும் விசுவாசித்து நடுங்குகிறான்! நீ என்ன விசுவாசிக்கிறாய் என்பதல்ல. நீங்கள் மறுபடியும் பிறந்த, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்று தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள் என்பதற்கு உங்களுடைய ஆவி அவருடைய ஆவியுடன் சாட்சியிட்டாக வேண்டும்.
188. அவர், “சகோ பிரன்ஹாம், பெந்தெகோஸ் தேயினரைப் பற்றி என்ன நினைக்கிறீர்களா?” என்றார்.
189. நான், “அதன் காரணத்தால்தான் நான் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறேன், உங்களிடம் இல்லாத ஏதோ ஒன்றை அவர்கள் கொண்டிருக்கின்றனர், தங்களுடைய விடாப்பிடியான சமய நெரிக் கொள்கை மற்றும் எல்லாவற்றாலும், நீங்கள் அறியாத ஒரு உண்மையை அவர்கள் கொண்டிருக்கின்றனர்' என்றேன். நான் அமெரிக்காவின் மகத்தான மனிதர்களில் ஒருவரான ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஆம் ஐயா, அடிப்படையில் மிகவும் உறுதியான, உலகத்திலேயே மிகவும் சிறந்ததான சுடான் மிஷன்ஸ் (Sudan Mission) தலைவர் அவர். அவர் வேதவசனங்களை அறிந்திருந்தார், மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் போன்றவற்றை ஒரு வீடு தீப்பற்றி எரிவதைப் போல பிரசங்கம் செய்வார். ஆனால் அது அல்ல. பிசாசும் கூட அதைச் செய்வான். பிசாசும் அடிப்படையில் எப்படி இருக்க முடியுமோ அப்படியே இருப்பான்.
190. ஆனால், சகோதரனே, இயேசு கிறிஸ்து, “ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினாலே மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான்” என்றான்.
191. “ஆம், நான் அதை விசுவாசிக்கிறேன். ஆமாம், நான்- நான் அந்த விதமாக விசுவாசிக்கிறேன். அதை விசுவாசிக்கிறேன். ஆம்” என்று நீங்கள் கூறுவதால் மாத்திரம் அல்ல. அது அதைச் செய்யாது. புதிய பிறப்பின் சரியான அனுபவமாக அது இருத்தல் வேண்டும். அது, உங்களுக்கும் தேவனுக்கும் இடையே ஏதோ ஒன்றாக இருந்து மரணத்தை விட்டு ஜீவனுக்குள் வந்து விட்டீர்கள் என்று நீங்கள் அறியும்படியாக இருத்தல் வேண்டும்.
192. அவர் “சகோதரன் பிரன்ஹாம், பரிசுத்த ஆவியை நான் பெற முடியுமா?” என்று கேட்டார்.
193. நான் “ஹைமேன் ஆப்பிள்மேன் மீது அங்கே கைகள் வைக்கப்பட்ட போது அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானதைப் பெற்றுக் கொண்டார்” என்றேன்.
194. இந்த யூதன் அழ ஆரம்பித்து அங்கே இருந்த சிறிய மேஜை மேல் இருந்த கண்ணாடியை உடைத்து, மிகவுமாக அழுதார். அவர்கள் இருவரும் “சகோதரன் பிரன்ஹாமே, நாங்கள் எப்படி அந்த பரிசுத்த ஆவியைப் பெறுவது? “என்று கேட்டனர். படிப்பாளிகள்! சிறந்தவர்கள், சாமர்த்தியசாலிகள்! அந்த ஊரிலேயே சிறந்தவர்கள்.
195. ஆகையால் நான், 'பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கான அப்போஸ்தல வழி கைகள் மேலே வைக்கப்படுதலே.” என்றேன். அது சரி.
196. “கைகள் மேலே வைக்கப்படுதல்.” பவுல் தன் பார்வையைத் திரும்பப் பெறுவதற்காகவும், பரிசுத்த ஆவியினால் நிறையப்படுவதற்காகவும் அனனியா அவன் மீது கைகளை வைக்க வந்தான்.
197. பிலிப்பு அங்கே சென்று பிரசங்கித்து ஒரு முழு கூட்டத்திற்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்தான். பரிசுத்த ஆவி யார் மீதும் வரவில்லை, ஏனெனில் பேதுருவிடம்தான் திறவு கோல்கள் இருந்தன. அவன் வந்து அவர்கள் மீது கைகளை வைத்தான், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அது சரிதானே?
198. பவுல் அப்போஸ்தலர் 19ல், அவன் அங்கே கடந்து சென்ற போது பில்லி கிரகாமிற்கு நிழலாயிருக்கிற அப்போல்லோ என்பவன் அங்கே பெரிய மகத்தான எழுப்புதலையும் மகத்தான ஒரு சமயத்தையும் கொண்டிருந்தான். அந்த பாப்டிஸ்டு குழுவினரிடம் “விசுவாசிகளான போது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.
199. அவர்கள் “நாங்கள் யோவானைப் பின்பற்றுகிறவர்கள். எங்களுக்குத் தெரியும்! அப்போல்லோ எங்களுடைய பிரசங்கி ஆவார், அவர் மனந்திரும்பிய ஒரு சட்ட நிபுணர் (lawyer). இந்த தேசத்திலேயே சாமார்த்தியசாலி,” என்று கூறினர்.
200. அவன் “ஆனால் நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியை பெற்றீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்று கூறினான்.
அதற்கு அவன் (பவுல்) “நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான்.
அவன் “யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்” என்றான்.
201. அவன், “யோவான் தனக்குப் பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாய் இருக்கவேண்டும் என்று ஜனங்களுக்கு சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானம் கொடுத்தானே” என்றான். ஆகவே, அவர்கள் இதைக் கேட்டபோது அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். பவுல் தன் கைகளை அவர்கள் மீது வைத்தபோது அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்று அந்நிய பாஷைகள் பேசி தேவனை பிரதிபலித்தார்கள். நான் வேத வசனங்களை அறிந் தவரையில் இது தெளிவான ஒரு காரியமாகும்.
202. இப்பொழுது, கவனி நண்பனே! உன்னுடைய கருத்துக்களில் சிறிது வேறுபாடு இருக்கலாம், ஏனெனில் நீ எல்லாவற்றிலும் கலக்கப்பட்டுள்ளாய். ஆனால் அதை விட்டுவிடு, உன்னுடைய வியாக்கியனத்தை அதில் சேர்க்க முயற்சிக்காதே. வேதம் என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் கூறு, அதை இந்த வழியிலேயே விட்டுவிடு.
203. ஆகவே நான், “இருக்கட்டும் சகோதரனே, பரிசுத்த ஆவியைப் பெற விரும்புபவர்கள் மீது கைகள் வைக்கப்படுதலே எனக்குத் தெரிந்த ஒரே வழி” ஆகும் என்று கூறினேன்.
204. அவர் “நீர் எங்கள் மீது கைகளை வைத்து தேவன் எங்களை ஆசீர்வதித்து பரிசுத்த ஆவியை அருளுமாறு கேட்பீரா?” என்று கேட்டார்.
205. நான் “நான் செய்வேன்” என்றேன். நாங்கள் தரையில் முழங்காற்படியிட்டோம், நான் ஜெபித்து அவர்கள் மீது கைகளை வைத்தேன். அதற்குப் பிறகு சிறிது வாரங்கள் கழித்து, இருவரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆகவே இந்த டாக்டர் ரீட்ஹெட் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு, அந்நிய பாஷைகள் பேசுவதன் வழியாகக் கடந்து வந்தார். ஆம் ஐயா.
206. ஆகையால் உங்கள் சுடான் மிஷன் அந்நிய பாஷைகள் பேசும் ஒரு மனிதனுக்கு எங்களிடத்தில் இடமில்லை” என்று கூறுகின்றது.
207. அவர் என்னிடம் வந்து, “எவராவது அந்நிய பாஷைகளில் பேசுகின்றனரா?” என்று கேட்டார்.
208. “ஏன், ஏன்,” நான் “அவர்களிடத்தில் இயேசு கிறிஸ்துவிற்கு இடமில்லை, ஏனெனில் இயேசு கிறிஸ்து யாரும் அறியாத பாஷைகளில் பேசினார்; அந்நிய பாஷைகள் பேசியவாறு மரித்தார்” என்றேன்.
209. பவுலின் போதகத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவர்களைவிட பவுல் அதிகமாக அந்நிய பாஷைகள் பேசினான்.
210. நேற்று ஒருவர் என்னிடம் வந்து, “அதைக்காட்டிலும் புரிந்து கொள்ளப்படுகிற வகையில் நான் ஐந்து வார்த்தைகளைப் பேசுவேன்” என்றார்.
211. ஆனால் பவுலின் உபதேசம்,” தீர்க்கதரிசனச் சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுவதற்கும் தடைபண்ணாதிருங்கள்” என்று கூறுகின்றது. ஆனால் அந்நிய பாஷைகளைப் பேச அவர்கள் தடை செய்யப்பட்டனர்.
212. பாஷைகளில் பேசுவது சபைக்கு அளிக்கப்பட்ட ஒரு தெய்வீக வரமாகும். ஆதியில் எப்படி இருந்ததோ அவ்வாறு இன்றைக்கும் அது சபைக்கு சொந்தமாயிருக்கிறது. அது முற்றிலும் உண்மையானது. ஆம், அப்படித்தான்! அது வேத போதகமாகும். அது ஒரு தெய்வீக வரம் ஆகும். நீ அதை மறுதலிப்பாயானால் நீ அதை வெட்ட முயற்சிக்கும் பொழுது நீ புதிய பிறப்பையும், இயேசு போதித்த எல்லாவற்றையும் நீ மறுதலிக்கிறவனாகக் காணப்படுவாய்.
213. இப்பொழுது, அதை நீ தாறுமாறாக்கக் கூடாது, அநேகர் அவ்வாறு செய்துள்ளனர். ஆனால் அது தன் இடத்தை உடையதாய் இருக்கிறது” என்று நான் கூறுகிறேன். அது ஒரு ஜோடி காலணிகளைப் போன்றது. நீ ஒரு ஜதை காலணிகளை வாங்கும்போது, அதற்குள் நாக்குகள் இருக்கும். அது சரி. நீ கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கும்போது, தேவன் எல்லா காரியத்தையுயும் சரியாக அமைத்துள்ளார். சகோதரனே, சகோதரனே, அவரிடம் அன்பு உள்ளது, சந்தோஷம் உள்ளது.
214. நான் அங்கே இருக்கின்ற உங்கள் மேஜையின் அருகே அமரும் போது, நீங்கள் “பிரசங்கியாரே என்னுடன் வந்து உணவு உண்ணுங்கள்” என்று கூறுவீர்களானால், நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்று நான் நம்புவேன். மேஜையின் மீது பீன்ஸ், உருளைக் கிழங்கு, காரட்டு, வறுத்த கோழிகறி, பூசனிக்காய் பொறியல், ஐஸ்கிரீம், மற்றும் எல்லாம் இருக்கையில் உருளைக்கிழங்கினிடத்தில் நான் வரவேற்கப்படுவேன் என்று நான் நம்புகிறேன். அதே போன்று கோழிகறியினிடத்திற்கும்; பூசனிக்காய் பொறியலிடத்திற்கும் நான் வரவேற்கப்படுவேன் என்று நான் நம்புகிறேன். நான் செய்யவேண்டிய ஒரே ஒரு காரியம் என்ன வென்றால், “அந்த பொறியலை சிறிது என்னிடத்திற்கு அனுப்ப முடியுமா?' என்று கூறுவது மாத்திரமே. சுத்தமுள்ள இருதயத்துடனும், நீங்கள் என்னை நேசித்து “நிச்சயமாக என் சகோதரனே நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறீர்கள் என்று நான் நம்புவேன். அது சரிதானே? “உருளைக்கிழங்குகளை என்னிடம் கொடுங்கள்?” என்று நான் கூறும்போது “ஏன், நிச்சயமாக என் சகோதரனே இங்கே இருக்கிறது” என்று நீங்கள் கூறுவீர்கள்.
215. இயேசு கிறிஸ்து தமது பிராயசித்த பலியில் கல்வாரியில் மரித்து சம்பாதித்த ஒவ்வொரு மீட்பின் ஆசிர்வாதமும், மேஜையின்மேல் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசுவாசியும் அதன் முன் அமர்ந்துக் கொண்டிருக்கிறான். அல்லேலுயா! எனக்கு சுகமாகுதல் தேவையெனில் “பிதாவே, சுகமாகுதலை என்னிடம் அனுப்பும்,” என்று நான் கூறி என்னுடைய தட்டில் அதை ஊற்றி, சிறப்பான ஆகாரத்தைப் புசித்து... இப்பொழுது, நீங்கள் சாப்பிடாமல் மரிக்க வேண்டுமென்று விரும்பினால், அப்படியே செய்யுங்கள். ஆம், ஐயா. தீர்க்கதரிசனம், பாஷைகளில் பேசுதல்...
216. இந்த மனிதன் இவ்வாறு எழுதியுள்ளான். நான் பேசினேன் என்று அவன் அறியாதிருந்தான்... நான் அந்நிய பாஷைகளைப் பேசினேன் என்று அவன் அறியாதிருந்தான். அவர் இந்த புஸ்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். அது தேசங்களை சிதறடிக்கும் என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். அது மட்டுமல்லாமல், மூடி வேதாகம சங்கத்தில் அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தை நாடிக்கொண்டிருக்கின்ற இருபத்தைந்து ஊழியர் இந்த மனிதனிடத்தில் இருக்கின்றனர். அடிப்படைவாதிகள் தலைகீழாக மாற்றி விட்டனர். இந்த மாதத்தில் வெளிவந்துள்ள கிறிஸ்துவ ஜீவியம் (Christian life) என்னும் பத்திரிகை கிறிஸ்துவ ஜீவியம் பத்திரிகையின் 19-வது பக்கத்தில் வேதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அந்தப் பெரிய மனிதர் கூறுவதைக் கவனியுங்கள். அவர், “இதை நாம் ஏற்றுக்கொள்ளலாமா? நாம் ஏதாவது ஒன்றை இழந்துவிட்டோமா?” என்று கூறுகிறார்.
217. நான் அபரிதமான மழை வருதலின் சத்தத்தைக் கேட்கிறேன். நிறைய மக்கள் அதை கோணலாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் முழுமையாக ஊற்றப்பட்டு, வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும் நிறையப்பட்டு இந்த புறஜாதி உலகத்தை குலுக்கும். இதன் காரணத்தால் நான்... பெந்தெகொஸ்தேயினரும் மூலைக்குத் தள்ளப்பட்டு, அதைப் போன்ற வெவ்வேறு காரியங்கள் மேல் வெறிபிடித்தவர்கள் போலாகிவிட்டனர், ஏற்ற காலம் இன்னுமாய் வரவில்லை. அதன் காரணமாகத்தான் அவர்கள் இவ்விதமான எல்லா அதிதீவிர மூடபக்தி வைராக்கியத்தைக் கொண்டிருந்தனர் ஆனால் அதுதான். தேவனுடைய தெய்வீக வாக்குத்தத்தமும், தேவனுடைய தெய்வீக வார்த்தையுமாயுள்ளது, அது நடந்தேறியாக வேண்டும். ஏனென்றால் தேவன் அவ்வாறு கூறியுள்ளார். புறஜாதியாரின் யுகம் முடிவு பெறும் சற்று நேரத்திற்கு முன்பு அந்நிய பாஷைகளில் பேசுதலையும் தேவன் இங்கே மேஜையின் மீது வைத்துள்ளார். அடிப்படைவாதிகளின் மேல் தேவன் ஊற்றுவார் என நான் நம்புகிறேன்.
218. இந்த ஆகஸ்ட் மாதம் வெளி வந்த ரீடர்ஸ் டைஜெஸ்ட் (Reader's Digest) இதழில் நீங்கள் படிக்கலாம். எவ்விதம் அந்த மெதொடிஸ்ட் பிரசங்கியார் பிரசங்க பீடத்திலிருந்து, மருத்துவமனையில் மரித்துக்கொண்டிருந்த ஒரு மனிதனுக்காக ஜெபித்தபோது, பரிசுத்த ஆவியின் பிரசன்னம் இறங்கி வந்து அந்த மனிதனை அந்தப் பொழுதில் சுகமாக்கிற்று என்பதை நீங்கள் அதில் படியுங்கள். அல்லேலூயா! நிச்சயமாக. இங்கிருக்கும் மேஜையின் மேல் தேவன் தெய்வீக சுகமளித்தலை வைத்திருக்கிறார்! தீர்க்கதரிசனத்தையும் அவர் இங்கே மேஜையின் மீது வைத்துள்ளார்! அந்நிய பாஷைகளில் பேசுதலையும் தேவன் இங்கே மேஜையின் மீது வைத்துள்ளார். சரீரத்தில் ஆவிக்குரிய ஒன்பது வரங்களையும் வைத்துள்ளார், நீங்கள் இந்த ஒவ்வொன்றிற்கும் வரவேற்கப்படுகின்றீர்கள்! அல்லேலூயா! ஆம், ஐயா, அவைகள் இங்கே உள்ளன.
புறஜாதியாரின் முடிவில், யூதர் திரும்பிவிட்டுருப்பார்களா?
219. ஆம், ஐயா, சகோதரனே, சகோதரியே, அது யாராயிரப்பினும் அநேக வேதவாக்கியங்கள் உள்ளன. ஒன்றைச் சொல்வோமானால், அந்த மரத்தைக் குறித்து யோவேல், “பச்சைப்புழு விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது”, என்றான். இன்னும் மற்ற வசனங்களும் உள்ளன. அவர்கள் எவ்விதம் திரும்ப அனுப்பப்படுவார்கள் என்றும் இன்னும் மற்ற எல்லாவற்றையும் குறித்து இயேசு தாமே கூறியுள்ளார். ஓ, தானியேல் உட்பட, முழு வேதவசனங்களும், எல்லா இடங்களிலும் அதைக்குறித்துப் பேசுகின்றன. ஆம், அதன் அத்திமரம் துளிர்கள், தன்னுடைய துளிர்விடும்போது, காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்,” என்று இயேசு கூறினார். இங்கேயுள்ள மற்றொன்றும் அதைத் குறித்ததாகவே உள்ளது என்று நான் நம்புகிறேன்.