அந்த... அவர்கள் பீட அழைப்பு கொடுக்கும் போது?
332. இல்லை, அப்படியென்று நான் நினைக்கவில்லை. நீங்கள் கவனித்திருப்பீர்களானால் கொரிந்தியரை எடுத்து வாசித்துப் பாருங்கள், உங்களில் சிலர் இங்கேயிருக்கிறீர்கள், அந்நிய பாஷையில் பேசும் வரத்தை உடையவர்களாக நீங்கள் இருப்பீர்களானால், அப்படியானால் நீங்கள் கவனியுங்கள். வேதாகமத்தில், அவர்கள்... ஆராதனை முடிவுற்ற பிறகு, சபையார் மீது தேவனுடைய ஆசீர்வாதம் வரும், அப்பொழுது அவர்கள் பேச ஆரம்பிப்பார்கள், அப்பொழுது அவர்கள் தேவனை மகிமைப்படுத்த ஆரம்பிப்பார்கள். ஆகவே ஒவ்வொரு சமயமும், யாராவது ஒருவருக்கு ஒரு நேரடியான செய்தி இருக்கும். அல்லது... இப்பொழுது நீங்கள் அதை கவனிக்கவேண்டும். பாருங்கள்? அது மாம்சமான ஏதோ ஒன்றல்ல. அது யாராவது ஒருவர் எதோ ஒன்றை செய்யும்படியாக, அல்லது சபைக்கு பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கதாக ஏதோ ஒன்றுக்காக யாராவது ஒருவருக்கு ஒரு செய்தியாக இருக்கும். அது சபையை மகிமைப்படுத்தத்தக்கதாக எதோ ஒன்றாக இருக்கும்.
333. அங்கே தான் பெந்தெகொஸ்தே ஜனங்கள் தங்கள் பெயரின் பேரில் நிந்தையை வரவழைத்துக் கொண்டனர். பெந்தெகொஸ்தெ என்ற பெயரை நீங்கள் உச்சரித்தாலே ஜனங்கள் தள்ளி நடந்து “அபத்தம்” என்று கூறுவார்கன், ஏனென்றால் அதிக கூக்குரல்களை அவர்கள் கொண்டிருக்கின்றனர், அந்த ஜனங்கள் உத்தமமாக உள்ளனர், ஆனால் போதிக்கப்படாமல் உள்ளனர்.
334. பவுல், “அங்கே இருக்கின்ற பெந்தெகொஸ்தே சபைக்கு நான் வரும் போது, அதை ஒழுங்கில் அமைப்பேன்,” என்றான். ஆவியானவர் கட்டளையிட்டபடியே அது ஒழுங்கில் தான் இருக்க வேண்டும், ஒவ்வொரு காரியமும் ஒழுங்கின் படி தான் செய்யப்படவேண்டும், ஆகவே அவன், “இப்பொழுது, உள்ளே வந்து நீங்கள் எல்லாருமே அந்நிய பாஷையில் பேச ஆரம்பிக்கும் போது, கல்லாதவன் உள்ளே வருவானானால், அவன் “உங்கள் எல்லாருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்று கூறி வெளியே சென்று விடுவான்,” என்றான்.
335. அவ்விதமாகத்தான் பெந்தெகொஸ்தே சபையும் செய்கின்றது. அவன், “இப்பொழுது, உங்களில் ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து ஏதோ ஒன்றின் இரகசியங்களை வெளிப்படுத்துவானானால், உங்களில் ஒருவன் தீர்க்கதரிசியாக இருப்பான்,” என்று கூறினான். வேறு விதமாகக் கூறினால், அவன் “அப்படியானால் ஜனங்கள் கீழே விழுந்து “தேவன் உங்களோடு இருக்கின்றார்” என்று கூறுவார்கள் அல்லவா?” என்று கூறினான்.
336. நல்லது, நான் தீர்க்கதரிசி வரத்தை மறுதலிக்கவேண்டுமென்றிருந்தால் அந்நிய பாஷையில் பேசும் வரத்தை எவ்வாறு நான் மறுதலிக்க முடியும், இந்த மற்ற வரங்களையும் நான் மறுதலிக்க வேண்டுமே? இப்பொழுது அநேக சபைகள், பெரிய சபைகள், நசரீன், பில்கிரிம் ஹோலினஸ், இன்னும் மற்றவைகள், ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேசினால் அவன் ஒரு பிசாசு என்று அவர்கள் நினைக்கின்றனர். அது பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணமாகும், அதற்கு மன்னிப்பே கிடையாது. அதைத்தான் யூதர்களும் செய்தனர், பரிசுத்த ஆவியையுடைய மக்களை பரியாசம் செய்தனர், அதற்காக அவர்கள் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டு இழக்கப்பட்டுப் போயினர். சரியாக! “நீங்கள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை” என்று இயேசு கூறவில்லையா. ஆகவே ஜாக்கிரதையாக இருங்கள்; உங்களுக்கு புரியவில்லையெனில், அப்படியே தரித்திருங்கள்.
337. பொறுப்புகளுக்குள் அழைக்கப்பட்டிருப்பவர்கள், போதகர்கள்... பரிசுத்த ஆவியைக் கொண்டுள்ள மக்களாகிய நீங்கள், இப்பொழுது கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா... இங்கே நான் நின்று கொண்டு போதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், இங்கே என் பக்கத்தில் ஒரு மனிதன் குதிக்க ஆரம்பித்து சரியாக இதே நேரத்தில் போதிக்க ஆரம்பித்தால், மற்றொரு மனிதன் இங்கே வெளியே நின்று கொண்டு ஒரு யூபிலி பாடலை பாடத்துவங்கினால்? எப்படிப்பட்ட ஒரு குழப்பமாக இருக்கும்!
338. நல்லது, அந்த விதமாகத்தான் அந்நிய பாஷையில் பேசுதலும் கூட. அது ஆவியானவர் அளிக்கின்ற விதமாகவே, ஒழுங்கில் அது வரட்டும், நீங்கள் அந்நிய பாஷையில் பேசலாம்.
339. இப்பொழுது நீங்கள், “நல்லது சகோதரன் பிரன்ஹாம், என்னால் இயலாது,” என்று கூறலாம்.
340. ஓ, ஆமாம், உன்னால் முடியும். உன்னால் முடியும் என்று பவுல் கூறியுள்ளான். அவன், “உங்களில் ஒருவன், உங்களில் அந்நியபாஷையில் பேசுகிறவன் இருந்து, அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், அவன் அமைதியாக இருக்கக்கடவன்” என்று கூறினான். அது எவ்வளவாக பேச வேண்டுமென்று விரும்பினாலும் பரவாயில்லை, அமைதியாக இருங்கள். சகோதரனே, அது ஒரு வரம். அந்த காரியங்களுக்குள் நாம் செல்ல இந்த நாட்கள் சிலவற்றில் ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்த தேவன் அனுமதிக்க நான்- நான் ஜெபிக்கிறேன், நீங்கள் பாருங்கள். அது ஒரு வரம் என்றும் அந்த வரம் எல்லா நேரத்திலும் கிரியை செய்ய விரும்புகிறது என்றும் உங்களால் காணமுடியும். பாருங்கள்? ஆனால் அந்த வரத்தை எங்கே, எப்படி உபயோகிக்க வேண்டுமென்று அறிந்து கொள்ள இங்கே பரிசுத்த ஆவியின் ஞானத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே அந்த...
341. நீங்கள், “நல்லது, தேவனுக்கு மகிமை, பரிசுத்த ஆவி வரும்போது உங்கள் போதகன் தேவையில்லை என்று வேதாகமம் கூறுகிறது. அவர் தாமே போதகர் ஆவார்” என்று கூறலாம். சகோதரனே, நீங்கள் எப்படி சாதாரணமாக வேத... அப்படியானால் ஏன் பரிசுத்த ஆவியானவர் சபையில் போதகர்களை வைத்தார்?
342. “எனக்கு போதிக்க யாரையும் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, பரிசுத்த ஆவியானவர் எனக்கு போதிக்கிறார்,” எனலாம். அது ஒரு போதகனின் மூலமாக செய்கிறது. அவர் சபையில் போதகர்களை வைத்தார்.
343. அவன், “எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களையுடையவர்களா?”, என்றான். பரிசுத்த ஆவியானவர் இவை எல்லாவற்றையும் சபையில் வைத்துள்ளார், அவர் அவை எல்லாவற்றையும் நடப்பிக்கிறார், அவைகள் ஒவ்வொன்றும் ஒழுங்கின்படியே நடப்பிக்கப்படுகின்றது.
344. இப்பொழுது அது என்னுடைய பாதத்தை போன்று; அவைகளில் ஒன்று “நான் இந்த வழியாக போகிறேன்,” என்று கூறுகிறது, மற்றொன்று, “நான் இந்த வழியாக திரும்பிச் செல்கிறேன்” என்று கூறுகிறது. இப்பொழுது, நீ என்ன செய்யப் போகின்றாய்? கை கூறிற்று, “நான் மேலே செல்லப் போகிறேன்,” என்று. மற்றொன்று சுற்றி இந்த வழியாக செல்கிறது. இந்த சரீரம் எந்த விதமான உருவை அடையப்போகின்றது? பாருங்கள்?
345. ஆனால், இப்பொழுது, சிந்தையானது இங்கே “பாதமே, நீங்கள் இருவரும் முன்னே செல்லுங்கள். கையே, நீ அவர்களுடன் செல். தலையே, நீ நேராக நில். புயங்களே, நீங்கள் அதே விதமாகச் செய்யுங்கள்” என்று கூறுகின்றது. ஒவ்வொன்றும் இசைவாக நடக்கின்றது. இப்பொழுது, நான் அங்கே சென்றடையும்போது, நான் என்னுடைய புயங்களை உபயோகப்படுத்திவில்லை. இப்பொழுது, பாதம் அதனுடைய கடமையைச் செய்தது, மேய்ப்பர் பிரசங்கத்தை செய்கின்றார்; இப்பொழுது, புயங்களே, நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். பாருங்கள்? நான் என்ன கூற விழைகிறேன் என் பாருங்கள்?
346. நல்லது, புயங்கள் இந்த விதமாக நீட்டிக்கொண்டிருந்தால், “ஓ, அது எங்கே? அது எங்கே?” பாதம் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறது? செல்லவில்லை, நீ இன்னுமாக அங்கே இல்லை. பார், புயமே அமைதியாயிரு; சற்று நேரம் கழித்து நீ உபயோகப் படுத்தப்பட வேண்டிய வேளையானது இருக்கும்; நீ அங்கே செல்லும் வரை பொறுத்திரு. நான் என்ன கூற விழைகிறேன் என்று காணமுடிகின்றதா? அது வரமாகும், அது செயலில் இருக்கின்ற ஆவியானவருடைய வரம் ஆகும்.
347. நான் கர்த்தரை நேசிக்கிறேன். நீங்களும் தானே? ஆமென். கவனியுங்கள், உங்களுக்கு என்னால் கூற முடிகின்ற ஒரு காரியத்தை நான் அறிவேன். பத்து மணிக்குப் பிறகு இருபது நிமிடங்கள் ஆகின்றன. நிச்சயமாக உங்களுக்கு பொறுமை இருக்கிறது. இப்பொழுது, நண்பர்களே, இப்பொழுது இந்த விதமாக இங்கே பாருங்கள். நான்... இது எனக்குத் தெரிந்தவரையில் இருக்கிறதானதாகும். அதைப் போன்ற ஒரு பெரிய குவியலான கேள்விகளை நான் முடிக்க வேண்டியதாகயிருக்கின்றது. என்னால்... நீங்கள் அதனுடன் ஒத்துப்போகவில்லை யெனில், என்னுடன் சர்ச்சைக்கு வராதீர்கள். நீங்கள் என் சகோதரனாக இருங்கள், பாருங்கள். நான் உங்களை நேசிக்கிறேன், அது என்னுடைய இருதயத்தில் உள்ளதால் இந்த காரியங்களை மாத்திரமே நான் கூறுகிறேன். அதைத் தான் நான் விசுவாசிக்கிறேன், மேலும் அந்த விதமாகத்தான் நான் அதை விவரிக்கிறேன், வேதத்தில் உள்ளபடியே அந்த விதமாகத் தான் நான் அதைக் கொண்டு வருகிறேன்.
348. இப்பொழுது, நீங்கள், “சகோதரன் பிரன்ஹாம், நான் அந்த விதமாக விசுவாசிப்பதில்லை” என்று கூறுவீர்களானால், அது முற்றிலும் சரியானதாக இருக்கும், பாருங்கள். நாங்கள் எந்த வித வித்தியாசத்தையும் நினைக்கமாட்டோம், நாம் சரியாக சகோதர சகோதரிகளாக முன்னே செல்வோம்.
349. ஆகவே - ஆகவே நீங்கள் “நல்லது, நான் - நான் மெத்தோடிஸ்ட் சபை அல்லது பாப்டிஸ்ட் சபையை சேர்ந்திருந்தாலும், எப்படியாயினும் நான் இரட்சிக்கப்படுவேன்” என்று கூறுவீர்களானால், சரி, சகோதரனே, அது முற்றிலுமாக சரி. நான் இன்னுமாக உங்களை “என் சகோதரனே” என்கிறேன். ஏனென்றால் நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்கள். பாருங்கள்? அது சரியே. ஆதலால் நாம் அதே விதமாக சகோதரராக நண்பர்களாக இருக்கப்போகிறோம்.
350. ஆனால் இந்த சபை நிற்க வேண்டிய அந்த போதகத்திற்காக, நான் இங்கே சில நாட்களாக, அவைகளை இந்த சபை முன் வைத்துக்கொண்டிருக்கிறேன். பாருங்கள்? அதற்குத்தான் சபையானது நின்று கொண்டிருக்கிறது! ஆகவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானத்தையும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அல்லது ஆவியின் வரங்கள் வெளிப்படுதலையும் விசுவாசிக்காத ஒரு மூப்பர் இங்கே இருப்பாரென்றால், அந்த மூப்பர், சரியாக நான் இங்கே நிற்கின்ற வேளையில், அவர் அதை சரிப்படுத்தாதிருக்கும் பட்சத்தில் சபையில் இருக்க அருகதையற்றவராக இருப்பார். அது முற்றிலும் சரியே. ஆகவே குழுவினர் அதை கவனித்துக் கொள்ள கடமைப்பட்டவர்களாகவுள்ளனர். சரியாக! இந்த சபை மூப்பர்களால் கட்டுப்படுத்தப் படவில்லை; இந்த சபை வேதாகமம் மற்றும் பரிசுத்த ஆவியானவரால் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆம், ஐயா. இப்பொழுது, அந்த காரியங்கள், அது தான் இந்த சபையின் போதகம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.
351. எங்களிடம் எந்த ஒரு அங்கத்தினர் பாகம் என்பது கிடையவே கிடையாது. இங்கே அங்கத்தினர் என்று யாருமே கிடையாதே, ஆனால் வருகின்ற ஒவ்வொருவரும் ஒரு அங்கத்தினர் ஆவர், ஏனெனில் நாங்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் ஒரே சரீரத்தின் அங்கத்தினர்கள் என்று விசுவாசிக்கிறோம்.
352. ஆகவே என் அருமை கிறிஸ்தவ சகோதரனே அல்லது சகோதரியே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற நாங்கள் உங்களை கட்டாயப்படுத்துகிறோம். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஏற்கெனவே ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பீர்களானால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நீங்கள், “சகோதரன் பிரன்ஹாம், அதைக் குறித்து நான் என்ன செய்ய வேண்டும்?” எனலாம். அந்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பவுல் கூறின விதமாகத்தான் நானும் கூற வேண்டியவனாயிருக்கிறேன்!
353. இப்பொழுது, இங்கே பாருங்கள், அப்போஸ்தலர். இதை நாம் வாசிப்போம், கலாத்தியர் 1:9. குறித்துக்கொள்பவர்களே, இதை குறித்துக் கொள்ளுங்கள். பவுல், இதைக் கூறின இந்த அதே மனிதன், இந்த காரியத்தை அவன் போதித்தான். இப்பொழுது அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்ளா? அது சரியா? அவர்கள் மறுபடியமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பவுல் கூறினான். ஆகவே பவுல், “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது...” என்று கூறினான். கலாத்தியர் 1:8, “இதற்கு மேலும், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் கூட பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருகக்கடவன்.” அவன் ஒரு ஆர்ச் பிஷப்பாயிருந்தாலும் சரி, அவன் ஒரு போப்பாகயிருந்தாலும் சரி, அவன் ஒரு ஊழியக்காரனாக இருந்தாலும் சரி, அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாலும் சரி, அவன் ஒரு கிறிஸ்தவ குருவாக இருந்தாலும் சரி, அவன் வானத்திலிருந்து வருகிற தூதனாயிருந்தாலும் சரி, அல்லது யாராயிருந்தாலும் சரி, அவன், “இதற்கு மேலும் வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் கூட பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்!” என்றான். அது சரியல்லவா? ஆகவே அவன் மறுபடியுமாக அதை திரும்பவும் கூறினான். “முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன், இதைக் காட்டிலும் வேறு எந்த ஒரு காரியத்தையும் அவர்கள் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்!” அது சரியல்லவா!
354. ஆகவே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதை வார்த்தையிலிருந்து நான் வாசித்தேன், பிறகு உங்கள் தீர்மானத்தை நீங்கள் செய்யுங்கள்.
355. இப்பொழுது எத்தனை பேர் அந்த அருமையான பழைய பாடலை நேசிக்கிறீர்கள்.
என் விசுவாசம் மேல் நோக்கி உம்மை காண்கிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே, இப்பொழுது நான் ஜெபிக்கையில் கேட்டருளும், என் பாவங்கள் யாவும் அகற்றும், இந்நாளிலிருந்து நான் உமக்கே முழு சொந்தம்!
356. இந்த சபையிலுள்ள உங்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். மரித்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு பிரசங்கித்துக்கொண்டிருக்கும் மரித்துக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதனாக நான் பிரசங்கிக்கும் செய்திகளில் கடைசியானதாக இது ஒருக்கால் இருக்கலாம் என்று உணர்கின்றவனாக; மரித்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு மரித்து கொண்டிருக்கிற ஒரு மனிதனாக, என்னுடைய கடைசியானதாக இருக்கும் விதத்தில் நான் செய்யும் ஒவ்வொரு பிரசங்கமும் இருக்க முயற்சிக்கிறேன். இந்த சமூகத்தின், தேசத்தின் என் சக குடிமக்களும், என் சகோதரருமாகிய உங்களை நான் இப்பொழுது கேட்கிறேன், இந்த ஆராதனைகளுக்குப் பிறகு தேவனுடன் ஒரு நெருங்கின நடை உங்களுக்கு தேவையாயிருக்கிறது என்று உண்மையாக நீங்கள் உணர்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நான் ஒரு... உங்களுடைய சகோதரனாக, உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், என்னுடைய உத்தமமான ஜெபம் என்னவென்றால், நீங்கள், இந்த தேவனோடான நெருங்கின நடையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.
357. ஆகவே, நியாயத்தீர்ப்பின் நாளிலே, நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் இந்த இரவுகள் தாமே, அங்கே ஒரு மகத்தான பதிவான ஒலிநாடா அந்த நாளிலே போடப்படும், என்னுடைய சத்தம் வெளிவரும், நான் அங்கே நின்று கணக்கொப்புவிக்க வேண்டியவனாக இருக்கிறேன், ஏனெனில் அந்த நாளில் என் வார்த்தைகள் ஒன்று என்னை ஆசீர்வதிக்கும் அல்லது என்னை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கும். அது கடந்த இருபது மற்றும் கூடுதல் வருடங்களாக என்னுடைய வார்த்தைகளாக அது இருந்து வருகிறது, சுமார் இருபது வயது நிரம்பிய ஒரு சிறு பையனாக, சுவிசேஷத்தை பிரசங்கித்தேன், இப்பொழுது எனக்கு நாற்பத்தைந்து வயதாகின்றது. அதை நான் சிறிது கூட மாற்றவில்லை, ஏனெனில் வேதாகமம் அவ்விதமாகவே இருக்கும் வரையில் அதை என்னால் மாற்றவும் முடியாது.
358. நான் அதை பிஷப்புகளுக்குள்ளும், மற்ற எல்லாவற்றுக்குள்ளும் வேர் பாய்ச்சியுள்ளேன், வார்த்தையின்படியே அதற்கு முரணாக பேசக் கூடிய யாரையும் இதுவரை நான் கண்டதில்லை. அவர்கள் கூறுவர். நல்லது, இப்பொழுது, நான்... இந்த மதகுரு, இங்கே சில நாட்களுக்கு முன்னர், அவர், “சங்கை பிரன்ஹாம் நாங்கள் வேதாகமத்தை எடுப்பதில்லை; எங்களுக்கு சபை தான்” என்றார். அந்த மனிதனிடம் உங்களால் பேசமுடியாது. ஆனால் நீங்கள் அதை வேதாகமத்தின் மேல் அடித்தளமாக வைத்தால், அது வித்தியாசமாக இருக்கும். பாருங்கள்?
359. நான் ஜெபிக்கிறேன் தேவன்... இங்கே இருக்கின்ற என்னுடைய ஒவ்வொரு கத்தோலிக்க நண்பர்களும், மற்றும் என்னுடைய ஒவ்வொரு பிராடெஸ்டென்ட் நண்பர்களும், மேலும்... அவர்கள் இன்னுமா... எந்த... உங்கள் ஒவ்வொருவரையும் நான் - நான் நேசிக்கிறேன். அது உண்மையா அல்லது இல்லையா என்று தேவன் அறிவார். ஜெப வரிசையில் கவனியுங்கள், குருடர்- குருடர் மற்றும் சப்பாணி, அது, “கத்தோலிக்கம்” என்று கூறுவதில்லை.
360. இங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், மேடை... சரியாக இங்கே, ஒரு கத்தோலிக்கன், புற்றுநோயால் மரித்து கொண்டிருந்தார், அது அவரை தின்றுவிட்டிருந்தது; அவர் என்னுடைய வீட்டிற்கு வந்தார், பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார், புற்றுநோயிலிருந்து அவரை சுகப்படுத்தினார். அவர் ஒரு கத்தோலிக்கரா, இல்லையா என்று அவரிடம் அவர் கூறவில்லை; நான் அவரிடம் ஒரு வார்த்தையும் கூறவில்லை. அவர் வந்தார், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார். சரியாக அங்கே அந்த மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவர் லூயிவில்லில் ஒரு வர்த்தகர். ஆமாம். பாருங்கள்?
361. நீ ஒரு கத்தோலிக்கனா அல்லது இல்லையா என்று அது கேட்கவில்லை. அது உங்கள் இருதயம் தேவன் பேரில் பசி கொண்டிருக்கின்றதா என்பதேயாகும். “நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் நிரப்பப்படுவார்கள்.” அது சரியா? ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
362. “நம்மை ஒன்ருகக் கட்டுகின்ற அந்த கட்டு ஸ்தோத்தரிக்கப் படுவதாக” என்ற இந்த பழைமையான பாடலை எத்தனைபேர் அறிந்துள்ளீர்கள். “நம்மைக் கட்டுகின்ற அந்த கட்டு” என்ற பாடலை நாற்பது வயதிற்கு மேலானவர்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்.
நம் இருதயங்களை கிறிஸ்துவ அன்பினால்
கட்டகின்ற அந்த கட்டு ஸ்தோத்தரிக்கப்படுவதாக
ஒன்றான சிந்தைகளின் ஐக்கியம்
மேலுள்ளதைப் போன்றே உள்ளது.
363. உங்களுக்கு பழைய பாடல்கள் விருப்பமா? கவனியுங்கள், நான் இதைக் கூற விரும்புகிறேன், நாம் கொண்டிருக்கின்ற இந்த அதிகமான கூச்சல்களைக் காட்டிலும், இந்த பழைய பாடல்களை அதிகமாக நாம் கொண்டிருப்போமானால், சபை !மிக சரியாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். பழைய காலத்தவரால், பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்ட அந்த பழைய பாடல்களை நான் விரும்புகிறேன்.
364. அங்கே கெண்டக்கி மலைகளில், வீட்டிற்கு பின்பாக உட்காரும் வழக்கத்தை கொண்டிருந்த ஒரு கறுப்பர் இன மனிதனை நான் நினைப்பதுண்டு. அவர் களைப்படையும் போது, அவர் அந்த பழைய - பழைய மரத்துண்டின் மீது உட்கார்ந்து கொண்டு, கட்டையின் மீது தன் கைகளால் தட்டுவார். அவரை சரியாக நான் நினைவில் கொண்டுள்ளேன், அவர் தலையைச் சுற்றிலும் ஒரு சிறிய வட்டமான வெள்ளை மயிர் இருந்தது. அவர் அந்த பழைய பாடலைப் பாடுவார், ஒரு பழைய பாடல்:
நான் எழுந்து இயேசுவிடம் செல்லுவேன்,
அவர் தம்முடைய கரங்களில் என்னை அணைத்துக் கொள்வார்;
என் அருமை இரட்சகரின் கரங்களில்,
ஓ, பத்தாயிரம் அழகுகள் அங்கே இருக்கின்றன.
365. அவ்வளவாக மெட்டு அதற்கு இல்லை. அந்த பழைய பாடலை எத்தனைப் பேர் கேட்டிருக்கிறீர்கள்? என்னே, அது அருமையானது. கவனியுங்கள் (ஒலிப்பதிவின் முடிவு - ஆசி)