“ஆனால்...” அதுவே கேள்வியாயுள்ளது.
18. பரவாயில்லை, இப்பொழுது பரிசுத்த மத்தேயு இருபத்... 25வது அதிகாரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள உங்களுடைய முதல் கேள்வியை எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுது நாம். இப்பொழுது, நான் இவைகளை ஒருபோதும் ஆய்ந்து படித்திருக்கவில்லை, அங்கே பின்னால் இருந்தபோது அவைகளை சற்று கவனித்துப் பார்த்தேன், நான் நான் அவைகளை எப்படி அறிந்துள்ளேனோ அதன்படி என்னால் முடிந்தளவு மிகச் சிறந்த முறையில் அவைகளுக்கு பதிலுரைக்க முயன்றுள்ளேன். என்னுடைய... நாம் ஆய்ந்து படிக்கையில், நீங்கள் என்னோடு சேர்ந்து உங்களுடைய வேதாகமங்களை திருப்புங்கள். இப்பொழுது, நான் இதை மூல கிரேக்க வேத அகாரதியிலிருந்து எடுத்துப் படித்துக் காண்பிக்க விரும்பினேன், எனவே நீங்கள் அதனுடைய மூல மொழியில் எவ்வாறு உள்ளது என்பதை புரிந்து கொள்வீர்கள். நான் நான் அதை விரும்புகிறேன். எனவே நாம் அதை மூல பாஷையான கிரேக்க மொழியிலும் மற்றதிலும் பார்ப்போம். இப்பொழுது இது ஒருவிதமாக மெதுவாக ஆய்ந்து பார்ப்பதுபோன்று இருக்கும், ஏனென்றால் நான் அதற்கான வேதவாக்கியங்களை எங்கெல்லாம் என்னால் கண்டறிய முடியுமோ அங்கெல்லாம் அவைகளை கண்டறிந்து அவைகளினுடைய இடத்தில் அவைகளைப் பொருத்த வேண்டும். சரி.
19. இப்பொழுது, எவரேனும் ஒரு வேதாகம ஆய்வினைக் கொண்டு கண்டறிய விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்பினால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நாம்... நாம் மூன்று அல்லது நான்கு பேரை இங்கே பின்னால் உடையவர்களாயிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் வேதத்தின் மூலம் ஆராய்ந்துப் பார்க்க விரும்பினால், சரி. சகோதரன் காக்ஸ் அவர்களே, நீங்கள் இங்கு வந்து, இந்த வேதாகமங்களை என்னிடத்திலிருந்து கொண்டு செல்வீர்களா? அது அது உங்களுக்கு நன்மையானதாயிருக்கும், உங்களால் முடிந்தால், (அங்கு ஒன்று உள்ளது, நீங்கள் அப்படியே உங்களுக்கு வேண்டுமானால், அங்குள்ள அநேக வேதாகமங்களையும் நீங்கள் கொண்டு செல்லுங்கள்.) எவருக்கேனும் ஒரு வேதாகமம் வேண்டுமானால், உங்களுடைய கரத்தை அப்படியே உயர்த்துங்கள், அந்தப் பையன் அவைகளை உங்களண்டைக்குச் சரியாக கொண்டு வருவான், பாருங்கள். நாம் இவைகளை ஒருமித்து ஆய்ந்துப் பார்க்க வேண்டும். அப்படியே...
20. இப்பொழுது, இந்த வாசிப்பின் பேரில், முந்தின அதிகாரங்களில்... எபிரெயப் புத்தகத்தின் முதல் ஏழு அதிகாரங்கள். இதைப் போதித்தப் பிறகு, உண்மையாகவே, இந்த பாடங்களை பதிவு செய்கிற இந்தப் பையன் எடுத்துக் கொண்டு, அதாவது சகோதரன் மெர்சியர் மற்றும் சகோதரன் கோட் அவைகளை வைத்திருக்கிறார்கள், இப்பொழுது அவைகளை புத்தக வடிவில் வெளியிட ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை வைத்துள்ளனர். இப்பொழுது... நாம் பாதியளவு கூட அலசி ஆராய்ந்துப் பார்த்திருக்கவில்லை, நாம் வெறுமென மேலோட்டமாகவே அலசிப் பார்த்துள்ளோம். அவர்களோ அவைகளை எழுத்துவடிவில் அமைத்து… அவைகளிலிருந்து தங்கக் கட்டிகளை எடுத்து. அந்தத் தங்கக் கட்டிகளை, அப்படியே அதாவது எபிரெய போதனையின் தங்கங்கட்டிகள் சிலவற்றை மெருகேற்றியிருக்கிறார்கள். சகோதரன் மெர்சியர் அவர்கள் சீக்கிரத்தில் அவைகளை எழுத்து வடிவில் அச்சிட்டு, எவர்களுக்கு அவைகளை தேவைப்படுகிறதோ அவர்களுக்கு அவைகளைத் தருவார்.
21. இப்பொழுது இங்குள்ள இதில், அது உள்ளே கொண்டு வருகிற. உங்களால் சுவிசேஷ சபைக்குள். அதினூடாக செல்ல முடியாது, இது ஒரு சுவிசேஷ சபையாயுள்ளது. அநேக ஜனங்களில் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் எழும்பாமல் நீங்கள் ஒரு-ஒரு உபதேசத்தினூடாகச் செல்ல முடியாது. நீங்கள் அவ்வாறுதான் செல்ல வேண்டும். இப்பொழுது நான் ஒரு போதகர் என்ற ஸ்தானத்திற்கு தூரமானவாய் உள்ளேன், மேலும் வேதாகமத்தை தெளிவாக பொருள் கொண்டு விளக்கும் ஒருவனே அல்ல. ஆனால் நான் எந்தக் காரியத்தையும் கூறுவதற்கோ அல்லது எந்தக் காரியத்தையும் செய்வதற்கோ கூட நான் முதலில் முதலில் கேட்டறிந்து அல்லது அதற்கான என்னுடைய மிகச் சிறந்த காரியத்தை கண்டறிய முயற்சிக்காமலோ செய்ய ஒருபோதும் முயற்சித்ததேயில்லை.
22. கடந்த இரவு ஒரு அருமையான சகோதரனால் இது என்னிடத்தில் கேட்கப்பட்டது. அவர், “சகோதரன் பிரன்ஹாம், நீர் நீர் உம்மை எங்குமே சிக்க வைத்துக்கொள்ளமாட்டீர் என்று சகோதரன் ஸ்டூவர்ட் ஒரு முறைக்கூறினார். பாருங்கள், அதாவது அதிலிருந்து வெளியேற அல்லது அதிலிருந்து விலகிச்செல்ல நீர் எப்பொழுதுமே ஏதோ ஒரு வழியை உடையவராயிருப்பீராமே” என்றார்.
23. அப்பொழுது நான், “நல்லது, அதற்குக் காரணம், நான் எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன்பு நான் எப்பொழுதுமே சிந்திக்க முற்படுகிறேன். புரிகிறதா? ஆகையால் ஜனங்கள் என்னிடத்தில் கேட்டால், அப்பொழுது என்னுடைய சிந்தனைகள் என்னவாயிருந்தன என்பதை என்னால் அவர்களுக்குக் கூற முடியும். புரிகிறதா?” என்றேன். ஆனால் அது நீங்கள் சரியாக சிந்தித்தால் அவ்வாறு இருக்கும். நீங்கள் எந்தக் காரியத்தையாவது செய்வதற்கு முன்பு, தேவன் உங்களை எடுத்துக் கொள்ள வேண்டிய பக்கமாக செல்ல முயற்சிக்க வேண்டும், அப்பொழுது அது உண்மையாகவே சிக்கப்படமாட்டாது.
24. ஆகாப் எலியாவை சிக்க வைக்க முயன்ற அந்த நேரத்தை உங்களால் யூகித்துப் பார்க்க முடியவில்லையா? பரிசேயர்கள் இயேசுவை சிக்கவைக்க முயன்ற அந்த நேரத்தை உங்களால் யூகித்துப்பார்க்க முடிகிறதா? பாருங்கள், அவர் அவர் உடனே பதிலை உடையவராயிருந்தார், ஏனென்றால் அவர் செய்த ஒவ்வொரு காரியமும், அதாவது அவர் அதை தேவசித்தத்தின் மூலமே செய்தார், அவர். அந்தவிதமாகவே அவரால் அவரால் அதைச் செய்ய முடிந்தது. இப்பொழுது, அந்த விதமாகவே நாம் இதனையும் தேவ சித்தத்தை கொண்டே செய்ய விரும்புகிறோம்.
இப்பொழுது கேட்கப்பட்டுள்ள கேள்வியோ, நாம் இந்தக் கேள்வியை எடுத்து வைத்துக் கொள்வோம்:
மத்தேயு 25:46 - ல் உள்ள “நித்திய ஆக்கினை” என்பது என்ன பொருள்படுகிறது என்று விளக்கவும்.
25. இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது எல்லோரும் மத்தேயு 25:46-ஐப் பாருங்கள் அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினியயை அடையவும்...
26. இப்பொழுது, “என்ன... என்று விளக்கிக் கூறவும்” என்பதே கேள்வியாயுள்ளது. இப்பொழுது சதாக்காலம் என்ற வார்த்தை “என்றென்றும்” மற்றும் என்றென்றும், “ஒரு குறிப்பிட்ட கால அளவு” என்பதிலிருந்து வருகிற வார்த்தையாயுள்ளது. என்றென்றும் என்பதோ, “அதிகப்படியான காலம்” என்று மட்டுமே பொருள்படுகிறது. இப்பொழுது நீங்கள் வாசிப்பீர்களேயானால் இந்தக் கேள்விகளை யார் எழுதினது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இந்தக் கேள்விகளின் மேல் யார் என்று அவர்களுக்குடைய பெயரை எழுதவில்லை; அது இருக்க வேண்டியதில்லை, எனக்கு அவைகள் வேண்டியதில்லை, பாருங்கள்.
அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும். (இப்பொழுது கவனியுங்கள், அதுதான் துன்மார்க்கர்)
27. இப்பொழுது, அருமையான அருமையான நபர் இந்த கேள்வியைக் கேட்டுள்ளார், அப்படியே அதனுடைய மீதி பாகத்தைப் படியுங்கள்: - நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.
28. துன்மார்க்கரோ நித்திய ஆக்கினையை அடைவார்கள் (ஒரு குறிப்பிட்ட கால நேரம்), ஆனால் நீதிமானோ நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான். நீங்கள் நித்திய ஆக்கினையை ஒரு போதும் கண்டறியமாட்டீர்கள், அவ்வாறு இருக்கவும் முடியாது. பாருங்கள், அவர்கள் நித்திய ஆக்கினையைப் பெற்றுக் கொள்வார்களானால், அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டால், அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். பாருங்கள், அது அவ்வாறிருக்க முடியாது. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், கேட்கப்பட்டுள்ள கேள்வியிலேயே பதில்களும் தானே உள்ளன. புரிகிறதா? அந்தப்படி, இப்பொழுது கவனியுங்கள், நான் இங்கே இதற்கு முன்பு உள்ள வசனத்தை படிக்கவுள்ளேன். அப்பொழுது அவர்களும். 29, 20-ல். 44-வது வசனம்: அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும் காவலிலடைக்கப் பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
அந்தப்படி, இவர்கள் நித்திய (என்றென்றுமான) ஆக்கினையை அடையவும், (அது துன்மார்க்கர்) நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
30. வித்தியாசம் புரிகிறதா? துன்மார்கர் என்றென்றுமான ஆக்கினையை அடைவார்கள், ஆனால் என்றென்றும் என்பது “ஒரு குறிப்பிட்ட கால அளவு.” இப்பொழுது இதுவும் அதே மாதிரியான கால அளவைப் பொறுத்ததாயிருந்தால், இது இவ்வாறு எழுதப்பட்டிருந்திருக்கும். “இவர்கள் குறிப்பிட்ட கால அளவு ஆக்கினையை அடைவார்கள் என்றும், மற்றவர் குறிப்பிட்ட கால அளவு நித்திய ஜீவனை உடடையவர்களாயிருப்பார்கள் என்றிருக்கும்.” புரிகிறதா? இல்லையென்றால் “இவர்கள் நித்திய ஆக்கினையை அடைவார்கள் என்றும், மற்றவர்கள் நித்திய ஜீவனை அடைவார்கள் என்றும் இருக்கும்.” பாருங்கள், நித்திய ஆக்கினை உண்டு என்றால், என்றென்றும், தண்டிக்கப்படுவதென்பது, நித்தியமான. அப்பொழுது அவன் நித்திய ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும், ஒரே ஒரு நித்திய ஜீவன் தான் உண்டு, அது தேவனிடத்திலிருந்து வருகிறது. துவக்கம் என்ற ஒன்று இல்லாததற்கு முடிவேக் கிடையாது. துவக்கம் என்ற ஒன்று உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு முடிவு உண்டு. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா?
31. இப்பொழுது, வேதவாக்கியம் தானே அந்த அருமையான நபருக்கு பதிலளித்துவிட்டது. இப்பொழுது நீங்கள் அதை மூல வேதாகம கிரேக்க அகராதியில் எடுத்துப் பார்த்தால், “இவர்கள் குறிப்பிட்டக் கால ஆக்கினையை அடைவார்கள், அதாவது பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட காலம் அக்கினிக் கடலில் ஆக்கினை அடைவார்கள்” என்றே உள்ளது. இப்பொழுது a-i-n-i-o-n என்ற கிரேக்க வார்த்தையின் பொருள், “ஒரு குறிப்பிட்ட கால ஆக்கினை” என்பதாகும். கிரேக்க வேத அகராதியில் இங்கே, “குறிப்பிட்ட கால ஆக்கினை” அல்லது “ஆக்கினைக் காலம்” என்றே உள்ளது. பாருங்கள், “அவர்கள் ஒரு குறிப்பிட்ட கால ஆக்கினை அடைவார்கள்.” அந்த வார்த்தை a-i-n-i-o-n எயர்ன் என்று உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. எயர்ன் என்ற வார்த்தையின் பொருள் “காலங்கள், ஒரு காலம், ஒரு குறிப்பிடப்பட்டக் காலம்” என்பதாகும். அதன்பின்னர் இங்கே அதை ஆங்கில மொழிபெயர்ப்பில் மீண்டும் எடுத்துப் பார்த்தால், என்றென்றும் என்று உள்ளதோ “ஒரு குறிப்பிட்ட காலம்” என்பதாகும். பாருங்கள், அது கிரேக்க மொழியிலிருந்து, “ஒரு குறிப்பிட்ட காலம்” என்ற பொருள்கொண்ட வார்த்தையிலிருந்து வருகிறது. அந்த வார்த்தை எயர்ன், இல்லை எ-ய-ர்-ன், எயர்ன் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள், “ஒரு குறிப்பிட்ட கால ஆக்கினை” என்பதாயுள்ளது.
32. ஆனால் அதன்பின்னர் மற்றவர்களைப் பற்றி வாசிக்கும் போது, “ஆனால் இவர்கள் நித்தியத்தை அடைவார்கள்” என்று உள்ளது. அந்த ஒரு வித்தியாசம் தான் உள்ளது. பாருங்கள், நித்திய ஜீவன். “நித்தியம்” என்ற வார்த்தையிலிருந்தே நித்தியம் எனபது உண்டாகிறது. நித்தியத்திற்கு துவக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது. அது என்றென்றுமான முடிவில்லாதது. இப்பொழுது அதற்கு பதில் கூற வேண்டும், பாருங்கள், ஏனென்றால் நீங்கள் அந்த வேதவாக்கியத்தை உண்மையாகவே கூர்ந்து கவனிப்பீர்களேயானால், நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
33. “அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ...” துன்மார்க்கர் நித்திய ஆக்கினையை அடைவார்கள், ஒரு குறிப்பிட்டக் காலம் தண்டிக்கப்படுவர்: ஒருகால் கோடா கோடி ஆண்டுகளாய் இருக்கலாம், எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் உங்களுடைய பாவங்களுக்காக நிச்சயமாக தண்டிக்கப்படுவீர்கள். ஆனால் நிச்சயமாகவே பாவம் என்பதற்கு ஒரு துவக்கம் இருந்ததுபோல், பாவத்திற்கு ஒரு முடிவும் உண்டு. ஆக்கினைக்கு ஒரு துவக்கமிருந்தது, ஆக்கினைக்கு ஒரு முடிவும் உண்டு. நரகம் பிசாசிற்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது. புரிகிறதா? சரி. இப்பொழுது நான் இங்கே மற்றொன்றை எடுத்து, இன்னும் ஒரு சில நிமிடங்களுக்கு அதற்கு பதில் கூற வேண்டும், அது அழகான ஒன்று, அதுவும் இதற்குள்ளாக இணைகிறது.