34. இல்லை, அது அவ்விதமாயிருக்காது. இப்பொழுது நீங்கள் இங்கே கலியாண விருந்தினை குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது இங்கே கேட்கப்பட்டிருந்தோ, “ராஜ்யத்தின் புத்திரர்” என்பதாகும். ராஜ்யத்தின் புத்திரர் யூதர்களாயிருக்கிறார்கள், அவர்கள் புறம்பான இருளில் தள்ளப்படுகின்றனர். அவர்கள் - அவர்கள் புறம்பான இருளுக்குள்ளாக தள்ளப்பட்டு, அவர்கள் அழுகையும், புலம்பலும் பற்கடிப்புமான நேரத்தினூடாக சென்று விட்டனர். அவர்கள் புறம்பான இருளுக்குள் தள்ளப்பட்டனர், ஏனென்றால் அது உங்களுக்கும், எனக்கு மனந்திரும்ப ஒரு தவனை கொடுப்பதற்காகவேயாகும், ஆனாலும் அவர்கள் தேவனுடைய சிந்தையிலிருந்து ஒரு போதும் தள்ளப்படவில்லை. அவர் இஸ்ரவேலரை ஒருபோதும் மறப்பதில்லை. எந்த வேதவாசகருமே இஸ்ரவேலர், “ராஜ்யத்தின் புத்திரர்” என்று குறிப்பிட்டுள்ளதை அறிவர். பாருங்கள், அது ராஜ்யமாய், வாக்குத்தத்தமாய் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறினால், தேவன் அந்த தேசத்தோடு ஈடுபடுதல், அவர் இஸ்ரவேலரோடு ஈடுபட்டபோது, அது ராஜ்யத்தின் புத்திரராம்.
35. இப்பொழுது, உங்களுக்கு நினைவிருக்கும், அவர் அங்கே, “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு முடிவிலே வந்து ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்” என்று ஒரு இடத்தில் கூறினார். பாருங்கள், அந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபும் ராஜ்யத்தில் இருப்பார்கள். அவர்கள், அவர்கள் ராஜ்யத்தினுடைய ஆசீர்வாதமான ஜனங்களாயிருந்தனர். ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளில் தள்ளப்படுவார்கள்.
36. இப்பொழுது, இங்கே உள்ள மணவாளனுக்கு எங்கிருந்து குறிப்பு வருகிறது. மணவாளன் வரும் போது, அவர்கள். ஐந்து கன்னிகைகள் ஆண்டவரை சந்திக்கப் புறப்பட்டுச் சென்றனர், ஆனால் அவர்கள் தங்கள் தீவட்டிகளோடு எண்ணெய்யை எடுத்துக் கொண்டு போகவில்லை. மற்ற ஐந்து பேர் தங்களுடைய தீவட்டிகளோடு எண்ணெயையும் கொண்டு சென்றனர். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், யூதர்களோடு புறஜாதிகளும், இருவருமே புறக்கணிக்கப்படுகிறபடியால், அது ஒரு அழகான காட்சியாயுள்ளது. அதை சிந்தையில் வைத்துக் கொள்ளுங்கள், எல்லா நேரத்திலுமே மூன்று வகுப்பினைக் கொண்ட ஜனங்கள் இருந்து வருகின்றனர்: யூதர், புறஜாதிகள் (சம்பிரதாயமான),...; யூதர், புறஜாதிகள் மற்றும் சபை. நீங்கள் அவைகளை குழப்பிக் கொண்டால், நீங்கள் வெளிப்பாட்டைப் பெறும்போது, நீங்கள் நிச்சயமாகவே தொல்லைக்குள்ளாவீர்கள். நீங்கள்...
37. ஒரு முறை திரு.போஹனான் என்னிடத்தில் கூறியது போலாகும், அவர், “பில்லி, வெளிப்படுத்தின விசேஷத்தை வாசிக்க முயற்சிக்கும் எவருக்கும் தீக்கனவுகள் உண்டாகும். ஏன் தெரியுமா” என்று கூறி, தொடர்ந்து அவர், “இங்கே மணவாட்டி பூமியில் இருக்கிறாள், வலுசர்ப்பமானது தன்னுடைய வாயிலிருந்து நதி போன்ற வெள்ளத்தை ஊற்றி அவளோடு யுத்தம்பண்ணப் போயிற்று” என்றார். மேலும், “அப்பொழுது அதே சமயத்தில் அந்த மணவாட்டி இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேராக நின்று கொண்டிருக்கிறாள்” (யோகோவா சாட்சிக்காரரின் உபதேசம்) “சீனாய் மலையின் மேல். அதே சமயத்தில் மணவாட்டி பரலோகத்தில் இருக்கிறாள்” என்றார். இல்லை, இல்லை, நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
38. மூன்று வகுப்பினைக் கொண்ட ஜனங்களே உள்ளனர். பாருங்கள், அது, புறக்கணிக்கப்பட்ட யூதர், உறங்கிக்கொண்டிருக்கும் கன்னிகை அந்த வெள்ளத்தை.. அது ஸ்திரீயினுடைய வித்தல்ல, அது வலுசர்ப்பம் தன்னுடைய வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை ஊற்றின ஸ்திரீயினுடைய சந்ததியான மற்றவர்கள்... வெளிப்படுத்தின விசேஷம் 11. ஆகையால் உண்மையாகவே, இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் யூதர்கள் முற்றிலும் மணவாட்டியல்ல, அவர்கள் மீதமுள்ள யூத சபை. யோகோவா சாட்சிக்காரரின் உபதேசமே அவர்களை மணவாட்டியாக பொருத்துகிறது, நீங்கள் அதை எப்படி நிரூபிக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை, ஏனென்றால் அது மணவாட்டியல்ல.
39. அங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் நீங்கள் கவனிப்பீர்களேயானால், அதில், “அவர்கள் கற்புள்ளவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் அண்ணகர்களாயிருக்கிறார்கள். ஒரு அண்ணகன் என்னவாயிருந்தான்? அவர்கள். ராணியைக் காவல்காத்த ஆலயக்காவலர்களாக அந்த அண்ணகர்கள் இருந்தனர், ஏனென்றால் அவர்கள். அவர்கள் மனிதனால் அண்ணகர்களாக்கப்பட்டனர். அவர்கள். அதாவது, “அவர்கள் ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதிருந்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் ஆலய அண்ணகராயிருந்தனர். அது தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களிலிருந்து தேவன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்டவரை தேர்ந்தெடுத்திருந்தார். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், நாம் ஒரு விநாடியில் அதை புரிந்து கொள்ள முடியுமானால், அது உங்களுடைய மனதில் அதை ஒரு விதமாக தீர்த்து வைக்கும், நீங்கள் உண்மையாகவே...
40. நாம் வெளிப்படுத்தின விசேஷவும் 7-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம், அதில் என்னக் கூறப்பட்டுள்ளது என்பதை... இப்பொழுது நாம் இங்கே கண்டறிவோம். அது ஒரு அழகான காரியமாயுள்ளது: இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்களின் நின்று, (இப்பொழுது, இது எசேக்கியல் 9-ம் அதிகாரத்திற்கு இணையான சம்பவமாயிருக்கிறது, அங்கே அவன் யூதரின் அழிவுகளைக் கண்டான். இங்கேயோ இவன் புறஜாதிகளின் அழிவுகளை வெளிப்படுத்தின விசேஷம், 7-ம் அதிகாரத்தில் காண்கிறான்). பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, (காற்று என்பது “யுத்தம் மற்றும் சண்டை “ என்பதையேப் பொருட்படுத்துகிறது) பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். (அது யுத்தத்தை “நிறுத்திவைத்தல்”)
41. ஓ, நாம் இந்தக் கேள்வியின் பேரில் விவரமாகப் பார்க்கும்படி நமக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். அது நிகழ்ந்த போது... அங்குதான் ரசல் குழப்பமடைந்துள்ளார். இது வருவதைக் கண்டதாக ரசல் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். அவர், “அது கர்த்தராகிய இயேசுவின் வருகையாயிருக்கும்” என்றும், அது சபையின் முத்திரையிடுதலாயிருந்தது என்பதை அறியாமல் அவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். பார்த்தீர்களா?
42. எப்படி உலகப் போர். முதல் உலகப் போர்... என்று அவர்கள் வியப்புறுகின்றனர். பாருங்கள், அது நவம்பர் பதினோராம் மாதம், பகல் பதினோரு மணிக்கு, பதினோராம் மாதம், பதினோராம் நாள், பதினோராம் மணி வேளையில் நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு உடனடியாக சபைக்கு இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானமும், பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் வெளிப்படுத்தப்பட்டது. சரியாக அதற்கு பின்னரே உடனே வெளிப்படுத்தப்பட்டது.
43. நீங்கள் அதை வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் எடுத்துப் பார்த்தால், எப்படி நாம் பிலெதெல்பியா சபைக் காலத்திற்கும், லவோதிக்கேயா சபைக் காலத்திற்கும் இடையே உள்ள காலத்தை ஒன்று சேர்ந்து இணைத்தோம். மெத்தோடிஸ்டுகள் பிலதெல்பியா சபைக் காலத்தை உடையவர்களாயிருந்தனர், சகோதரசிநேகம். கடைசி சபைக்காலமோ லவோதிக்கேயா சபைக்காலமாய் இருந்தது. அது வெதுவெதுப்பான காலமாயிருந்தது. அவர் அங்கே, “(திறந்த வாசலை) உனக்கு முன்பாக ஒரு வாசலை வைத்திருக்கிறேன்” என்றார். திறந்த வாசல்! நீங்கள் அந்த வேதவாக்கியங்களை ஆராய்ந்துப் பார்த்தால், உங்களுக்கு சரியாக காண்பிக்குபடிக்கு, அங்கே ஒரு இடத்திற்குள்ளா சரியாக அது முழு செய்தியையும் இணைக்கும்.
44. கவனியுங்கள்! இங்கே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பேரில் இருந்து வருகிற ஞானஸ்நானம் மற்றும் உள்ள ஒவ்வொரு காரியமும், (நாம் அதற்குள் நேரடியாக ஆய்ந்து பார்க்க வேண்டும்) அது முற்றிலும் ஒரு கத்தோலிக்கக் கோட்பாடாயிருந்ததேயன்றி, அது ஒருபோதும் ஒரு கிறிஸ்தவ உபதேசமாயிருக்கவில்லை. இல்லை ஐயா. நான் வெறுமென. நாம் இன்றிரவு கிரேக்க வேதாகமம் அகராதியோடு கூட இங்கே அதற்குள்ளாகச் சென்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். புரிகிறதா? ஆம் ஐயா, சரித்திரத்தினூடாகவுங்கூடச் சென்றுப் பார்க்க வேண்டும். வேதாகமத்தில் அந்த விதமாக எவருமே, எப்போதுமே ஒருபோதும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கவில்லை, அதாவது வேதாகமத்தில் முதல் ஆறு நூறு ஆண்டுகளாக அவ்வாறு இல்லை. அது கத்தோலிக்கருடைய சொந்தக் கோட்பாடு என்பதை என்னால் இங்கே சரியாக நிரூபிக்க முடியும், அவர்கள் தான் அதை, அந்த தெளித்தலையும், ஊற்றுதலையும் துவங்கினவர்களாய் இருக்கிறார்கள்.
45. அவர்கள் அங்கிருந்து வெளியே வந்து வெஸ்லியர்களின் சபைக்குள்ளாக, மெத்தோடிஸ்டு சபைக்கும், மெத்தோடிஸ்டுகள் அதை பாப்டிஸ்டுக்கும், பாப்டிஸ்டு அதை அப்படியே கொண்டு வந்தனர், அது இன்னமும் ஒரு கள்ள உபதேசமாய் உள்ளதே! வேதத்திற்கு திரும்பி வந்து, “நீ உயிருள்ளவென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” என்று வேதம் உரைத்துள்ளதை உங்களுக்கு நிரூபிக்க முடியும். அது முற்றிலும் உண்மை. அவர்கள்...
46. அவர்கள் அவருடைய நாமத்தை ஞானஸ்நானத்தில் இருளின் காலம் வரையில், நான்காம் காலம். சபைக்காலம், பெர்கமு சபைக் காலம் வரை பயன்படுத்துவார்கள் என்று வேதம் போதித்துள்ளது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அவர் இருளின் காலங்களை ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளில், ஒவ்வொன்றையுமே கூறியுள்ளார், அவர், “உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுமதலியாமல்” என்றார்.
47. அது அங்கு அந்த மற்றொரு காலத்திற்கு, கத்தோலிக்க காலத்திற்கு வந்தபோது, அவர், “நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்! நீ என் நாமத்தை மறுதலித்துவிட்டாய்” என்றார். அங்குத்தான் காரியம். புரிகிறதா? அது அப்படியே எல்லாவற்றையும் ஒரு பெரிய அழகான காட்சியாய் ஒன்று சேர்ந்து முழு வேதாகமத்திலும் இணைக்கிறது.
48. இப்பொழுது இதைக் கவனியுங்கள்: நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் வானத்திலிருந்து ஏறிவரக் கண்டேன்;... (முத்திரை)
49. இப்பொழுது, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்றால் என்ன? இப்பொழுது, ஏழாம் நாள் ஆசரிப்புக்கார சகோதரராகிய நீங்களோ, “ஓய்வு நாளைக் கடை பிடித்தல்” என்று கூறப் போகிறீர்கள். நீங்கள் அதை எனக்கு வேதத்தில் காண்பிக்க வேண்டும். அது அங்கே இல்லை. எந்த ஒரு இடத்திலும் அவ்வாறு அது கூறப்படவில்லை. அது முத்திரையாயுள்ளது...
50. நீங்கள் எபேசியர் 4:30-ஐ வாசிப்பீர்களேயானால், நீங்கள் உடனே ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்ன என்பதை கண்டறிவீர்கள். எபேசியர் 4:30, “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறுகிறது. அடுத்த எழுப்புதல் வரை என்று அல்ல, ஆனால் அது பெற்றுள்ள நித்திய பாதுகாப்பு (ஊஊ). “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.” எபேசியர் 4:30 அதைக் கூறவில்லையா என்று பாருங்கள், அதன்பின்னர் உங்களுடைய வேதாகம ஓரக்குறிப்பு வாசிப்புகளினூடக உள்ள வேதவாக்கியங்களினூடாக சென்று அதைக் கண்டறியுங்கள். இப்பொழுது, “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையை உடையவர்களாயிருத்தல்.”
51. இப்பொழுது, முதலாம் உலகப் போர் வரையிலும் பரிசுத்த ஆவி என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாக கற்பிக்கப்படவில்லை. நாம் நம்முடைய நம்முடைய நாற்பது வருட பொன்விழாவினை இல்லை நாற்பதாவது வருட பெரு விழாவினை கொண்டாடிவிட்டோம்.
...அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:
நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். (இப்பொழுது நீங்கள் உங்களுடைய “புத்திரர்” என்ற கேள்வியண்டைக்கே வந்து கொண்டிருக்கிறீர்கள், பாருங்கள்) (சேதப்படுத்தாதே, பூமியை அழித்துப் போடாதே, எந்த அணு குண்டும் வெடிக்க அனுமதிக்காதே, நமது தேவனுடைய ஊழியக்காரர் முத்திரையிடப்படுகின்ற வரையில் ஒரு காரியத்தையும் முழுமையாக செய்ய வேண்டாம்)
52. இப்பொழுது, நாம் பின்னோக்கி ஆராய்ந்து பார்க்கக் கூடுமானால், உலகப் போரின் வீழ்ச்சி என்ற புத்தகத்தின் தொகுதி இரண்டில், அந்த அந்த நிகழ்வு எப்படி நடந்தது என்று பார்ப்போமேயானால், தளபதி ஆலன்பி எருசலேமின் எல்லையைப் பிடிக்கும் வரை சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அவன் இங்கிலாந்தின் இராஜாவிற்கு தந்தி அனுப்பி, “நான் அந்த நகரத்தின் புனிதத்துவத்தின் நிமித்தமாக நான் அதைச் சுட்டெரித்துப் போட விரும்பவில்லை” என்றான். மேலும், அவன், “நான் என்ன செய்யலாம்?” என்று கேட்டான்.
53. அதற்கு அவனோ, “ஜெபி” என்றான்.
54. அவன் அதன் மீது மீண்டும் விமானத்தில் பறந்து வந்தான், அவர்கள் வந்தபோது, இவர்களோ, “ஆலன்பி வந்து கொண்டிருக்கிறான்” என்றனர். அங்கே முகமதியர்கள் இருந்தனர், அவனோ, “அல்ஹா வந்து கொண்டிருக்கிறார்” என்றே எண்ணிக் கொண்டான். எனவே அவர்கள் வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டு சரணடைந்துவிட்டனர். அப்பொழுது ஆலன்பி எருசலேமிற்கு பவனிவந்து, எந்த ஒரு துப்பாக்கிச் சூடுமன்றி தீர்க்கதரிசனங்களின்படி அதைக் கைப்பற்றினான். அது உண்மை, பின்னர் அதை யூதர்களுக்கு திரும்பக் கொடுத்துவிட்டான்.
55. அதன்பின்னர் அவர்கள் யூதர்களை துன்புறுத்த ஒரு ஹிட்லரை எழுப்ப, அவர்களையோ அவர்கள் உலகம் முழுவதிலும் ஓடச் செய்தனர்.
56. வேதமோ, “அவர்களை கழுகின் செட்டைகளின் மேல் சுமந்து வருவேன்” என்று அவர் கூறினார் என்று உரைத்துள்ளது. அவர்கள் திரும்பி வரத் துவங்கினபோது, லைப் என்ற நாளிதழ் ஒரு சில வாரங்களுக்கு முன் அவர்களைக் குறித்து வெளியிட்டது, அதாவது அவர்கள் இலட்சக்கணக்கானவர்களை எருசலேமிற்குள் கொண்டுவந்தனர் என்றும், அவர்கள் சென்று தங்களுடைய முதியவர்களை தங்களுடைய முதுகின் மேல் சுமந்து வந்தனர் என்றும் வெளியிட்டிருந்தது. அவர்கள் பேட்டி காணப்பட்டனர். நான் அதைக் குறித்த எல்லாவற்றையும் திரைப்படமாக வைத்துள்ளேன். அவன் கூறினான். அங்கே தாவீதின் நான்கு நட்சத்திரக் கொடி தொங்கிக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகப் பழமையான கொடி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக பறந்துக் கொண்டிருக்கிறது.
57. இயேசு, “அத்திமரத்திலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது என்றும், இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்றும்” கூறினார்.
58. இங்கே அவர்கள் அந்த முதியவர்களை கொண்டு வந்துக் கொண்டிருந்தபோது, “எதற்காக இங்கு வருகிறீர்கள்? நீங்கள் உங்களுடைய தாய் நாட்டில் மரிப்பதற்காகவா திரும்பி வந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்க்கப்பட்டனர்.
59. அப்பொழுது அவர்களோ, “இல்லை, நாங்கள் மேசியாவைக் காண வந்திருக்கிறோம்” என்றனர்.
60. சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நாம் வாசலருகே இருக்கிறோம்! அப்பாலே அங்கு அந்த ஊழியக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இங்குள்ள இந்த யூதக் கூட்டமோ, அவர்களால் கூடுமானால் உங்களுடைய போலிப் பல்லைக் கூட உங்களிடமிருந்து எடுத்து ஏமாற்றி விடுவார்கள். எனவே இந்த யூதர்களைக் குறித்து அவர் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நியாயப் பிரமாணங்களையும் மற்றவைகளை கடைபிடித்துக் கொண்டு அங்குள்ளவர்கள், ஒரு மேசியா இருந்தார் என்பதைக் கூட ஒருபோதும் அறியாதிருக்கிறார்கள்.
61. சகோதரன். ஸ்டாக்லோம் என்ற இடத்திலே சகோதரன் பெட்ரூஸ் பத்து இலட்சம் புதிய ஏற்பாடுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அவர்களோ அவைகளைப் பெற்றுக் கொண்டு, அவைகளை வாசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், “நல்லது, இது மேசியாவாயிருந்தால், அவர் ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தைச் செய்ய நாங்கள் காணட்டும், அப்பொழுது நாங்கள் அவரை விசுவாசிப்போம்” என்று கூறினர்.
62. என்னுடைய ஊழியத்திற்கான என்ன ஒரு அமைப்பு! எருசலேமில் உள்ள வாசல்களில் உள்ளே நுழைய எனக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தபோது, அதற்குள்ளாக செல்ல, அப்பொழுது நான் எகிப்தில் உள்ள கெய்ரோவில் இருந்தேன். அப்பொழுது நான் அங்கு நெடுக நடந்து சென்று கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர், “இப்பொழுது போகாதே” என்றார்.
63. அப்பொழுது நான், “அது என்னுடைய வெறுமென கற்பனையாயிருந்திருக்கலாம். என்னுடைய பயணச்சீட்டு கட்டணம் செலுத்தி வாங்கப்பட்டுவிட்டது, நானோ என்னுடைய பாதையில் இருக்கிறேன். அங்கிருந்தும் ஒரு மனிதன் என்னை சந்திக்க வருகிறார், முழு கூட்டமும், பள்ளிகள் முதலியன ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டனவே” என்று எண்ணினேன்.
64. நான் சற்று தூரம் நடந்து சென்றேன், அப்பொழுது ஆவியானவர், “போகாதே! நீ போக வேண்டாம்” என்றார்.
65. அப்பொழுது நான் பயணச் சீட்டு முகவரிடம் திரும்பிச் சென்று, “நான் இந்த பயணச்சீட்டை ரத்து செய்கிறேன். நான் கீரிஸில் உள்ள ஏதென்ஸுக்கும், மார்ஸ் மேடைக்கும் செல்ல வேண்டும்” என்று கூறினேன்.
66. அதற்கு அவரோ, “பரவாயில்லை, ஐயா, உங்களுடைய பயணச் சீட்டு எருசலேமிற்கான அழைப்பாயுள்ளதே” என்றார்.
67. அப்பொழுது நானோ, “நான் எருசலேமிற்கு போவதற்குப் பதிலாக ஏதென்ஸிற்குப் போக விரும்புகிறேன்” என்றேன். பரிசுத்த ஆவியானவர் காத்துக் கொண்டிருக்கிறார், அந்த வேளையானது இன்னும் வரவில்லை. இது சரியான வேளை அல்ல.
68. கவனியுங்கள்:
...நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும்.
நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும்... சேதப்படுத்தாதிருங்கள் என்று மகாசத்தமிட்டுக் கூப்பிட்டான். (அது பரிசுத்த ஆவியின் முத்திரை என்பதை எவருமே அறிவர்; கவனியுங்கள்)
முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; (இப்பொழுது, அவர்கள் யூதர்களாயில்லையா; இதைக் கவனியுங்கள்) இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் (அவர்களில் ஒரு புறஜாதியானும் இல்லை. அது கடைசி காலம்)
69. கவனியுங்கள்! யூதா கோத்திரம், பன்னீராயிரம், ரூபன் கோத்திரம், பன்னீராயிரம்; தொடர்ந்து கீழே, காத், பன்னீராயிரம்; நப்தலி, அதனைத் தொடர்ந்து கீழே ஆசேர், செபுலோன் மற்றும் இந்த இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுமே. பன்னிரண்டை பன்னிரெண்டால் பெருக்கினால் எவ்வளவு? லட்சத்து நாற்பத்து நாலாயிரம். அங்கே இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்கள் இருந்தனரே! புறஜாதிகள் அல்ல, யூதர்கள்! அதற்கு மணவாட்டியோடு எந்த ஒரு காரியமும் சம்மந்தக் கிடையாது. ஆகையால் யோகோவா சாட்சிக்காரர் தங்களுடைய உபதேசத்தில் தவறாயிருக்கின்றனர். அவர்கள் “யூதர்கள்,” புறஜாதிகள் அல்ல என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாயிருக்கிறார்கள், புறஜாதியார் ஒருபோதும் ஒரு ஊழியக்காரராக கருதப்பட்டிருக்கவேயில்லை. நாம் குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம், ஊழியக்காரர்களல்ல.
70. இப்பொழுது அதனுடைய மற்ற பாகத்தை வாசித்துப் பாருங்கள். தர்பூசணிப் பழத்தை சாப்பிடும் மனிதன் போல, அவன், “அது நன்றாயுள்ளது, ஆனால் நாம் அதை இன்னும் அதிகமாகப் புசிப்போம்” என்பது போன்றேயாகும். சரி, தேவன் அதைக் குறித்து இங்கே ஏராளமானவற்றை வைத்திருக்கிறார். இப்பொழுது, அப்படியே கவனியுங்கள். இப்பொழுது, இப்பொழுது நாம் 8-வது வசனத்தில் இருக்கிறோம்:
செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம், யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
71. பாருங்கள், யோவான் ஒரு யூதனாயிருக்கிறபடியால், அவர்கள் ஒவ்வொரு வரையும் அடையாளங்கண்டு கொண்டான், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் கண்டான்; ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் பன்னீராயிரம் பேர், பன்னிரண்டை பன்னிரண்டால் பெருக்கினால் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இருக்கின்றனர். அவர்கள் சபை அல்ல, யூதர்கள். வேதமோ, அவர்கள் ஒவ்வொரு கோத்திரமாய் பெயரிடப்பட்ட “இஸ்ரவேல் புத்திராயிருந்தனர்” என்றே இங்கு உரைத்துள்ளது.
72. இப்பொழுது 9-வது வசனத்தைக் கவனியுங்கள்.
இவைகளுக்குப் பின்பு (இப்பொழுது இங்கே மணவாட்டி வருகிறாள்)...
இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்,
73. அங்குதான் உங்களுடைய ஆலய அண்ணகர்கள் உள்ளனர், அவர்கள் லட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர்களாயிருக்கின்றனர், ஒரு சிறு இடம், அவர்கள் மணவாட்டியோடிருந்து ஒரு ஆலயத்தை காவல்புரியப் போகிறார்கள்; அவள் மணவாட்டியினுடைய மெய்க்காவலர். அந்த லட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் மணவாட்டிக்கு மெய்க்காவாலராயுள்ளனர்; ஆலய அண்ணகர்கள்.
74. கவனியுங்கள்! உண்மையாகவே, நீங்கள் இங்கே 14-வது அதிகாரத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நான் அறிவேன், அது, “ஏன், அவர்கள் மணவாட்டியோடு உள்ளனர், அவர்கள் எங்கெல்லாம்...” என்று உரைக்கிறது. முற்றிலுமாக! ராணி எங்கெல்லாம் சென்றாளோ அங்கெல்லாம் அவளோடு அண்ணகர்கள் பயணித்தனர். உண்மையாகவே! ஆனால் அவர்கள் எங்கே இருந்தனர்? அவர்கள் மெய்க்காவலர்களேயல்லாமல் வேறொன்றுமாயிருக்கவில்லை, அந்தவிதமாகத்தான் அது சரியாக இங்கிருக்க வேண்டும் என்று வேதம் பறைசாற்றுகிறது.
75. கவனியுங்கள்:
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், (அங்குதான் உங்களுடைய புறஜாதி மணவாட்டி வருகிறாள், சரி) ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், (அங்கே அவர்களுடைய இரட்சகர் இருக்கிறார், ஆட்டுக்குட்டி, நியாயப்பிரமாணம் அல்ல; ஆட்டுக்குட்டி, கிருபை) வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். (கவனியுங்கள், இன்னும் ஒரு சில நிமிடங்களில், அந்த வெள்ளை அங்கிகள் பரிசுத்தவான்களுடைய நீதிகளல்லவா என்று பார்ப்போம்)
அவர்கள் மகாசத்தமிட்டு: (அது ஒரு பெந்தேகோஸ்தே எழுப்பதலாயிருக்கவில்லை என்றால், நான் அந்த ஒன்றை ஒருபோதும் கேட்டதேயில்லை) இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனை தொழுதுகொண்டு:
ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.
76. அது ஒரு பெரிய சிறப்புக் கூட்ட நேரம் போன்று தென்படுகிறது, அது அவ்வாறில்லையா? அவ்வாறே இருக்கப் போகிறதே! அது யார்? லட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர்களா? கிடையாதே! ஒருவனும் எண்ணக்கூடாததுமான இந்த திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சகல ஜாதிகளிலும், சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்தவர்கள். என்னுடைய அருமையான நண்பனே உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா?
77. இப்பொழுது கவனியுங்கள், அதை அப்படியேப் படியுங்கள். இப்பொழுது:
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
78. மூப்பன் யோவானிடத்தில், அது இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேரை அடையாளங்கண்டுகொண்ட ஒரு யூதனிடத்தில் கூறினான், அவன், “இப்பொழுது, நீர் அவர்களை அறிந்திருக்கிறீர், அவர்கள் எல்லோரும் யூதர்கள். ஆனால் இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான். மூப்பன் என்ன கூறினான் என்று பார்த்தீர்களா? “மூப்பர்களில் ஒருவன் பதிலளித்தான்,” (அது சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த மூப்பர்கள்) “எனக்கு, 'வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? இப்பொழுது, யூதர்களையும், அவர்களுடைய உடன்படிக்கை முதலியனவற்றை நாம் யாவரும் அறிவோம், ஆனால் இவர்கள் எப்பொழுது வந்தார்கள்?” என்று பதில் கூறுவாயாக என்றான். இப்பொழுது கவனியுங்கள்:
அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். (“எனக்கு எனக்கு - எனக்கு தெரியாது,” யோவான், “அது எனக்கு புரிந்துகொள்ள முடியாததாயிருந்தது. எனக்குத் தெரியவில்லை” என்றான்) அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்: (“சோதனைகளின் ஊடாகவும், இந்த அநேக அபாயங்களினூடாகவும், வலைகளினூடாகவும், கன்னிகளினூடாகவும் நான் ஏற்கெனவே வந்துள்ளேன்.” பார்த்தீர்களா?). இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை... (சபையிலா? அது சரியாகத் தென்படுகிறதா?)... ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
...இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும். (என்னுடைய வீட்டில் என்னை சேவிக்கிறது யார்? என்னுடைய வீட்டில் என்னை சேவிக்கிறது யார்? என்னுடைய மனைவி, அது சரியா?). அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; (அதாவது என்னுடைய வீட்டில், என்னுடைய பொருளாதாரத்தில் என்னோடு தரித்திருக்கிறது என்னுடைய மனைவியே. அவளே என்னோடு தங்கியிருந்து, என்னுடைய மனைவியே. அவளே என்னோடு தங்கியிருந்து, என்னுடைய துணிகளைத் துவைத்து, எனக்காக காரியங்களை தொடர்ந்து ஆயத்தப்படுத்துகிறாள்)... சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர், இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். (ஓ, என்னே, கவனியுங்கள்!)
இவர்கள் இனி பசியடைவதுமில்லை... (அவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சில ஆகாரங்களை தவிர்த்து விட்டது போல காணப்படுகின்றனர்)... இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை.
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக் குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். (அங்குதான் அவள் இருக்கிறாள், அங்குதான் உங்களுடைய மணவாட்டி இருக்கிறாள்)
79. அங்கே உங்களுடைய லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் உள்ளனர், அங்குதான் உங்களுடைய ஊழியக்காரர்கள் இருக்கின்றனர். ஆகையால் “ராஜ்யத்தின் புத்திரர்” இங்கே, அருமையான நபர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார், அது ஒரு இந்த குறிப்பிடத்தக்க கேள்வியைக் கேட்டுள்ளார். நான் இதை இங்கேயே.. எங்கோ பின்னால் விட்டு விட்டிருந் திருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன், ஆனால் “அவர்கள் புறம்பே தள்ளப்படுவார்கள்,” என்பது அவர்கள் தேவனுடைய சிந்தையிலிருந்து தள்ளப்படுவார்கள் என்று பொருள்படுகிறதில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்டக் காலம் ஆவிக்குரிய பலன்களிலிருந்து புறம்பே தள்ளப்படுகின்றனர். பாருங்கள், வெறுமென கொஞ்சங்காலத்திற்காகவேயாகும்.
80. ஆகையால், தீர்க்கதரிசி இஸ்ரவேலர் இந்த நாளில் திரும்பி வருவதைக் கண்டபோது, அவன், “ஓய்வு நாள் ஆசாரிப்பு எடுக்கப்பட்டுவிட்டால் இஸ்ரவேலர் இருப்பார்களா? அவர்கள் ஓய்வு நாளிலும் மற்றெந்த நாளைப் போல் வியாபாரம் செய்து, இந்த எல்லாக் காரியங்களையும் செய்கிறார்கள்” என்று கேட்டான். மேலும் அவன், “நீர் - நீர் எப்போதாவது... இஸ்ரவேல் முழுவதுமாக மறக்கப்பட்டுப் போகுமா?” என்று கேட்டான்.
81. அதற்கு அவர், “வானம் எவ்வளவு உயரமாயுள்ளது? பூமி எவ்வளவு ஆழமாயுள்ளது? அதை உனக்கு முன்பாக இருக்கிற அந்த கோலினால் அளந்து பார்” என்றார். அப்பொழுது அவன், “என்னால் அளக்க முடியாது” என்றான்.
82. அப்பொழுது அவரும், “என்னாலும் இஸ்ரவேலை ஒருபோதும் மறக்க முடியாது” என்றார். நிச்சயமாக முடியாது. இஸ்ரவேல் ஒரு போதும் மறக்கப்பட்டுப் போவதில்லை.
83. ஆகையால் நீங்கள் பாருங்கள், என்றென்றும் என்பதும், நித்தியம் என்பதும் இரண்டு வித்தியாசமான காரியமாயுள்ளன. இஸ்ரவேலர் புறம்பே தள்ளப்பட்டனர், ஆனால் தேவனுடைய சிந்தையிலிருந்து அல்ல. பவுல் அதை இங்கு பேசுகிறான், எனக்கு... ஆய்ந்து பார்க்க நேரமிருந்தால், ஆகையால் நான் துரிதமாக வேதவாக்கியத்தண்டைக்கு சென்று, அதை... என்னால் அவைகளை உங்களுக்கு குறிப்பிட்டுக் கூற முடியும், பாருங்கள், அது என் சிந்தையில் வருகிறது.
84. பவுல் அங்கே அதைக் குறித்துப் பேசுகிறான், புறஜாதிகளாகிய நாம், நாம் நடந்து கொண்ட விதம் மற்றும் நாம் என்ன செய்துள்ளோம் என்பதைக் குறித்தும் கவனமாயிருக்கும்படிக்குக் கூறினான். புரிகிறதா? காரணம் தேவன் முதல் கிளையை தப்பவிடாதிருக்க, பாருங்கள், நாமோ உள்ளே ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறோம், பாருங்கள், இஸ்ரவேலர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக குருடாக்கப்பட்டிருந்தனர் என்றே அவன் கூறினான். வெறுமென ஒரு குறிப்பிட்டகாலத்திற்காகவே இஸ்ரவேலர் குருடாக்கப்பட்டிருந்தனர். அது உண்மை, ஆனால் அந்தத்திரை அவர்களுடைய கண்களிலிருந்து எடுக்கப்படும். தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் கடைசி புறஜாதி நபர் பிறக்கும்போது, அது எடுக்கப்படுகிறது, அதன்பின்னர் அவர்களுடைய திரை இஸ்ரவேலருடைய கண்களிலிருந்து எடுக்கப்படுகிறது. அப்பொழுது அவர்களோ, “இவரே நாம் காணும்படி எதிர்பார்த்திருந்த மேசியா” என்று கூறுவார்கள். அது உண்மை, ஆனால் புறஜாதியாரின் வாசலோ அடைக்கப்படும் (பேழை அடைக்கப்பட்டது போல), அந்த நேரத்தில் புறஜாதிகளுக்கு எந்தக் கிருபையுமே விடப்பட்டிருக்காது.
85. இப்பொழுது, நான் ஒரு கேள்வியின் பேரில் அதிகப்படியான முழு நேரத்தையுமே எடுத்துக் கொள்கிறேன். யாரோ ஒருவர், “இப்பொழுது நீர் என்னுடைய கேள்விக்கு பதில் கூறவில்லை” என்று கூறுகிறார். நல்லது, நாம் அதற்குரிய பதிலைப் பெறமுடியுமா என்று துரிதமாகப் பார்ப்போம்.
86. சரி, இங்கே உள்ளது நீளமான ஒரு ஒரு கேள்வி. ஸ்திரீகள் கேட்டுள்ளதோ அல்லது புருஷர் கேட்டதோ அல்லது அது யாராயிருந்தாலும் இதைக் குறித்துக் கேட்டுள்ள ஒவ்வொரு காரியமும் சரியே.