89. அது முற்றிலும் உண்மை. ஆக்கினைக்குட்படும் படிக்கு தேவனால் முன் குறிக்கப்பட்ட ஜனங்கள் உண்டு என்று வேதம் நமக்குக் கூறுகிறது.
90. அது எப்பொழுதுமே உங்களுடைய சிந்தையில் இல்லாமற்போகாதபடிக்கு நீங்கள் அதை வாசித்துப் பார்க்க விரும்புகிறீர்களா? சரி, நாம் இப்பொழுது யூதாவின் புத்தகத்திற்குத் திரும்புவோம், யூதா இங்கே பேசுகிறார்.
இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
91. அவன் அதை யாருக்கென்று குறிப்பிட்டு எழுதுகிறான் என்று பார்த்தீர்களா? பாவிகளுக்கல்ல, சுவிசேஷ ஊழியத்திற்கு மாத்திரமல்ல, ஆனால் பரிசுத்தமாக்கப்பட்டு அழைக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்டு எழுதுகிறார். பாருங்கள், அவர்கள் ஏற்கெனவே ராஜ்யத்தில் இருக்கிறவர்கள்.
உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.
பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி... (எப்படி?). சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
92. பூர்வத்திலே எழுதப்பட்டிருக்கிறது! தேவன் சிங்காசனத்தில் வீற்றிருந்து, “நான் இந்த மனிதனை இரட்சிப்பேன், நான் அந்த மனிதனை இழந்து விடுவேன்” என்று கூறினதல்ல. இது அதுவாயிருக் கவில்லையே! தேவன் மரித்தார், இயேசு மரித்தபோது, பாவ நிவர்த்தியானது ஒவ்வொரு நபருக்காகவும் முழு பூமியையுமே மூடினது. ஆனால் தேவன், முன்னறிவினால்... அவர்... சித்தங்கொண்டிருக்கவில்லை. எவரும் கெட்டுப்போக வேண்டுமென்று அவர் சித்தங்கொண்டிருக்கவில்லை. எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றே அவர் விரும்பினார். அதுவே அவருடைய அதுவே அவருடைய நித்திய நோக்கமாயிருந்தது. ஆனால் அவர் தேவனாயிருப்பாரானால், யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருக்கவில்லை என்றால், அப்பொழுது அவர் முடிவுற்ற தேவனாயிருக்கவில்லை. எனவே வேதம் அதையே போதிக்கிறது. அதாவது நாம் முடிந்தால்...
93. நாம் ரோமர் 8-ம் அதிகாரத்தை இங்கே திருப்பிப் பார்க்கும்படி நேரமிருந்து, நீங்கள் அதை வாசித்துப் பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும். ரோமர் 9-வது அதிகாரம், வேதாகமத்தில் இன்னும் மற்ற இடங்களிலும் உள்ளன. எபேசியர் 1-வது அதிகாரம். தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் உறுதியாய் நிற்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும், தேவன் நிபந்தனையற்ற உடன்படிக்கையை அளித்தார். அவர் முன்னறிந்து கொண்டவர்களுக்காக மரிக்கும்படி இயேசுவை அனுப்பினார். புரிகிறதா?
94. எனவே, “அவள் இரட்சிக்கப்படுவாளா அல்லது இல்லையா என்பதை தேவன் அறிந்திருக்கவில்லை என்று நீங்கள் கூறுவது போன்று” கூறுவது அல்ல. நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது உலகத் தோற்றத்துக்கு முன்னே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார், இல்லையென்றால் அவர் தேவனாயிருக்கவில்லையே.
95. முடிவுற்ற என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள். முடிவுற்ற என்ற வார்த்தையின் பொருள் என்ன என்பதை அகராதியில் பார்த்து கண்டறிந்து கொள்ளுங்கள். ஏன், அவர் பூமியின் மீது இருக்கப்போகும் ஒவ்வொரு உண்ணியையும், ஒவ்வொரு ஈயையும், ஒவ்வொரு கொசுவையும், ஒவ்வொரு கிருமியையும் அறிந்திருந்தார். அவைகள் பிறந்து உலகில் வாழ்வதற்கு முன்னமே அவர் அறிந்திருந்தார், இல்லையென்றால் அவர் தேவனாயிருக்கவில்லை. நிச்சயமாகவே, அவர் அதை அறிந்திருந்தார். சரி.
96. அப்பொழுது, அங்கே, தேவனால், “நான் உன்னை எடுத்து நரகத்துக்கு அனுப்புவேன்; நான் உன்னை எடுத்து, பரலோகத்திற்கு அனுப்புவேன்” என்று கூற முடியாது. தேவன் நீங்கள் இருவருமே பரலோகத்திற்கு போக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் முன்னறிவினால் ஒருவர் நேர்மையற்ற நபராயிருப்பார் என்றும், மற்றொருவர் ஒரு பண்புள்ள மனிதனாய், ஒரு கிறிஸ்தவராயிருப்பார் என்றும் அறிந்திருந்தார். புரிகிறதா? ஆகையால் இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர் முன்னறிந்திருந்த மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு அவர் இயேசுவை அனுப்ப வேண்டியதாயிருந்தது. உங்களுக்கு இது புரிகிறதா?
இப்பொழுது இங்கே பாருங்கள்:
இவர்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று வேதவாக்கியங்கள் நமக்கு சந்தேகத்திற்கிடமின்றி கூறுகின்றன.