97. இல்லை என் சகோதரனே, சகோதரியே. நிச்சயமாக இல்லை. எதுவுமே அதைப் பார்க்கிலும் வல்லமையானது கிடையாது... மனிதனுடைய சித்தத்தை நித்திய தேவனின் நியாயத்தீர்ப்பின் நோக்கத்தோடு ஒருபோதும் ஒப்பிடவே முடியாது. பாருங்கள். அது அவ்வாறிருக்க முடியாது.
98. இப்பொழுது உங்களுடைய முதல் கேள்வி சரியானதாயிருந்தது. நண்பனே, உங்களுடைய இரண்டாம் கேள்வி சரியானதாயிருக்க முடியாது. காரணம் பாருங்கள், இங்கே எழுதப்பட்டுள்ள விதத்திலேயே பாருங்கள், பாருங்கள்: மனிதனுடைய சுயாதீன சித்தமானது நித்திய திட்டங்களையும், சர்வ வல்லமையுள்ள தேவனின் நோக்கத்தைக்காட்டிலும் வலிமையான ஒரு ஆற்றலாய் இருக்காதா? (ஏன், நிச்சயமாக இல்லை. சர்வ வல்லமையுள்ள தேவனின் நோக்கத்தைக் காட்டிலும் மனிதனின் சித்தமானது எப்படி ஒரு வலிமையான ஆற்றலாயிருக்க முடியும்? மனிதன் தன்னுடைய மாம்ச சம்மந்தமான நிலையில் அவன் விரும்புகிறதைச் செய்யும் சித்தமானது எப்படி ஒரு வலிமையான ஆற்றலாயிருக்க முடியும்? மனிதன் தன்னுடைய மாம்ச சம்மந்தமான நிலையில் அவன் விரும்புகிறதைச் செய்யும் சித்தமானது நித்தியமான, பரிபூரண தேவனைக் காட்டிலும் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாயிருக்குமா? நிச்சயமாக இருக்காதே! அது அவ்வாறு இருக்க முடியாது, பாருங்கள். நித்திய தேவன், அவருடைய நோக்கம் பரிபூரணமாயிருக்கும்போது, இங்குள்ள ஒரு-ஒரு மாம்சபிரகாரமான மனிதனை, எப்படி உங்களால் கூற முடியும், (அவன் எவ்வளவு வல்லமையாயிருந்தாலும்) கவலைப்பட வேண்டியதில்லை, அவனுடைய நோக்கங்களை இதனோடு, நித்திய சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நோக்கங்களோடு ஒருபோதும் ஒப்பிடலாகாது.
99. [ஒரு சகோதரி சபையிலிருந்து பேசுகிறார் - ஆசி.] ஆம். (“நான் வருந்துகிறேன். நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், நான் அங்கே கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.”) ஆம், சரி, சகோதரியே. (“நான் தேவனுடைய நித்திய நோக்கம் மனிதனுடைய சுயாதீன சித்தத்தை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருட்படுத்திக் கூறினேன், அதை அவ்வாறு கூறவில்லை என்று நான் நினைக்கிறேன்.”)
100. அது உண்மை. ஓ, பரவாயில்லை, அப்படியானால் நான்நான் அதைத் தவறாக வாசித்திருக்கிறேன், பாருங்கள். சரி. ஆம், சகோதரியே, அப்படியானால் நீங்கள் கூறினது முற்றிலும் சரியே. அதுவே உங்களுடைய-உங்களுடைய கேள்வியாயிருந்தது என்று எனக்குத் தெரியாமற்போய்விட்டது. சரி. ஆனால், பாருங்கள், நான் இதை எங்கே பெற்றுக் கொண்டேன், பாருங்கள், இப்பொழுது நான் பார்க்கட்டும், அதாவது, “ஆதாமினுடைய இனம் முழுவதும் பாதுகாப்பாய் மூடப்பட்டிருக்க, சிலர் தங்களுடைய தங்களுடைய ஒதுக்கீட்டைப் பெறாததால் இழக்கப்பட்டிருப்பது, நித்திய திட்டங்கள் மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவனின் நோக்கத்தைக் காட்டிலும் மனிதனுடைய சுயாதீன சித்தம் ஒரு வலிமையான ஆற்றல் வாய்ந்ததாயிருக்குமா?” பாருங்கள், அங்கே நான் நான் உங்களுடைய கருத்தினை தவறாக புரிந்து கொண்டுவிட்டேன். ஆம், சர்வ வல்லமையுள்ள தேவனின் நித்திய நோக்கம். நல்லது, அதுவே இதற்கு தீர்வாகிறது.
101. எல்லோருமே அதைப் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் புரிந்து கொண்டால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனின் நித்திய நோக்கமோ நிச்சயமாகவே மனிதன் செய்ய முடிந்த எல்லாவற்றிற்கும் மேலானதாயிருக்கும்.