102. நல்லது, இப்பொழுது, இதற்கு எனக்கு ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகாமலிருக்கலாம். நீங்கள் விரும்பினால், நாம் அதைப் பார்க்கும்படி யாராவது என்னோடு மத்தேயு 28-ம் அதிகாரம், 19 - ம் வசனத்திற்கு திருப்புங்கள். நாம் பார்ப்போம், அந்த நபர் என்ன... இருபத்தைந்து... இப்பொழுது, நீங்கள் தரித்திருப்பீர்களானால், இது உங்களை பலமுள்ளதாக்கும். இது இது நன்மையானது, நீங்கள் பாருங்கள். இது சுவிசேஷமல்ல, ஆனால் இது...
103. இப்பொழுது நாம்... இப்பொழுது, “வேதாகமத்தில் ஒரு முரண்பாடு உண்டு” என்று இங்கே இதைக் கூற ஜனங்கள் முயற்சிக்கின்றனர். இப்பொழுது, நான் மத்தேயு 28:19. ஐ யாராவது திருப்பி எடுக்க விரும்புகிறேன், இல்லையென்றால், இல்லை, நான் யாராவது. மத்தேயு 28:19-ஐ எடுக்க விரும்புகிறேன். யாராவது அப்போஸ்தலர் 2:38-க்கு திருப்ப விரும்புகிறேன். சகோதரன் நெவில், நீங்கள் உங்கள் வேதாகமத்தை அங்கே வைத்துள்ளீர்களா?
104. நான் இப்பொழுது உங்களுக்காக நீங்களே வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “நான் வேதத்தில் ஒரு கண்டிப்பான முரண்பாட்டை உங்களுக்குக் காண்பிப்பேன், என்னவென்றால் வேதம். ஜனங்கள், 'வேதம் தாமே முரண்படுகிறதில்லை ' என்று கூறுகிறபடியால், நீங்கள் இதை ஆராய்ந்து பார்க்கும்படிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” ”
105. இது வேதாகம ஆசிரியர்களை மகிழ்ச்சியற்றதாக் குகிறது. ஆனால் இதுவோ இதுவோ எளிமையானதாயுள்ளது. இப்பொழுது நான் மத்தேயு 28:19-ஐ வாசிக்கவுள்ளேன், நான் படிப்பதை நீங்கள் கவனியுங்கள். உங்களில் சிலர் அப்போஸ்தலர் 2:38 ஐ எடுத்து ஆயத்தமாக வைத்திருங்கள். நான் 18-வது வசனத்திலிருந்து துவங்கிப் படிப்பேன், இது மத்தேயுவின் முடிவான அதிகாரமாயுள்ளது.
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (பிதாவின் அதிகாரம் எங்கே ?)
106. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டிருந்ததானால், அப்பொழுது தேவன் அதிகாரமற்றவராய் இருந்தாரல்லவா? அல்லது அவர் வெறுமென ஒரு கதையைக் கூறினாரா? அவர் கேலி செய்து கொண்டிருந்தாரா? அவர் அதைக் கருத்தாய் கூறினார். அவர் அதைக் கருத்தாய் கூறினார். அவர் அதை பொருள்படக்கூறினார் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா? சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்குமேயானால், அப்பொழுது தேவனுடைய அதிகாரம் எங்கே? அவர் தேவனாயிருந்தாரே! அது சரியானதாயுள்ளது. அங்கே அதற்கு ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு. அதுவே அங்கிருந்த எல்லாமாயிருந்தது. பாருங்கள், அவர் தேவனாய் இருந்தார்; இல்லையென்றால் அங்கு வேறு ஏதோ அதிகாரத்தைக் கொண்ட வேறு யாராவது இருக்க வேண்டும், அல்லது வேறு அதிகாரமே இல்லாதிருக்க வேண்டும். புரிகிறதா? ஆகையால் உங்களால் உங்களால் அதைக் குழப்ப முடியாது. நாம் இங்கே இந்த காரியத்தின் பேரில் உள்ளதை சரியாக புரிந்து கொள்வோம். சரி.
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் வானத்திலும் பூமியிலும்... கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார்.
107. இப்பொழுது யாராவது ஒருவர் அப்போஸ்தலர் 2:38ஐ வாசியுங்கள். அப்படியே ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். அப்போஸ்தலர், 2ம் அதிகாரம், 38ம் வசனம். இப்பொழுது, இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள், அப்படியே பொறுமையாய் இருங்கள், நாம் இப்பொழுது பார்ப்போம். இப்பொழுது, இயேசு அவர்களிடம் இப்பொழுது, “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,” என்று மத்தேயு 28:19-ல் கூறின பத்து நாட்களுக்குப் பின்னர் இது கூறப்பட்டது. ”
108. இப்பொழுது, பேதுரு, பத்து நாட்கள் கழித்து... அவர்கள் மற்றொரு பிரசங்கத்தை ஒரு போதும் பிரசங்கிக்கவேயில்லை. அவர்கள் எருசலேமின் மேலறைக்குச் சென்று அங்கே (பத்து நாட்களாக) பரிசுத்த ஆவியானவர் வருவதற்காகக் காத்திருந்தனர். எத்தனை பேர் அதை அறிந்திருக்கிறீர்கள்? இந்த இடத்தில். இங்கே பேதுரு இருக்கிறான், பேதுரு ராஜ்யத்தின் திறவு கோல்களை உடையவனாய் இருக்கிறான். சரி, அவன் என்ன செய்கிறான் என்று நாம் பார்ப்போம். மத்தேயு. இல்லை நான் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தையே பொருட்படுத்திக் கூறுகிறேன், நாம் 36-வது வசனத்தை எடுத்துக் கொள்வோம்:
ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
““ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்.” வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்ததில் வியப்பொன்றுமில்லையே.
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்.
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
109. ““இப்பொழுது, ஒரு முரண்பாடு உண்டு. மத்தேயு, 'பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,' என்று கூறினான், பேதுருவோ அப்போஸ்தலர் 2:38ம் வசனத்தில், பத்து நாட்கள் கழித்து, 'நீங்கள் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினான்.
110. அதன்பின்னர் அதற்கு அடுத்த முறை மனந்திரும்புதலைப் பற்றிக் கூறப்பட்டபோது கூறப்பட்டபோது... இல்லை வேதத்தில் ஞானஸ்நானத்தைப் பற்றிக் கூறப்பட்டபோது, அது அப்போஸ்தலர் 8வது அதிகாரத்தில், பிலிப்பு சமாரியர்களுக்குச் சென்று பிரசங்கித்தான். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர், அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர்.
111. அதற்கு அடுத்த முறை அப்போஸ்தலர் 10:49 -ல் புறஜாதிகள் அதைப் பெற்றுக் கொண்டதைப் பற்றிக் கூறப்பட்டது.
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக் கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், கேட்கும்போது... அப்பொழுது பேதுரு: ஆரம்பத்திலே நாம் பெற்றுக் கொண்டதுப் போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
112. இப்பொழுது நான் இங்கு வைத்துள்ளதை ஒரு சிறு காரியத்தை எடுத்துக் கூறி, நீங்கள் அதை மறந்து போகாதபடிக்கு ஒரு சிறு விளக்கப் பாடத்தை உங்களுக்குக் கூறப் போகிறேன். நான் கூறப் போவதென்னவென்றால். உலகில் எத்தனை வகையான பிரிவு ஜனங்கள் இருக்கின்றனர்? மூன்று வகையினர் உள்ளனர். காம், சேம், யாபேத்தினுடைய ஜனங்கள். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? அந்த நோவாவின் மூன்று குமாரர்களிலிருந்தே நாம் வந்துள்ளோம். காமினுடைய ஜனங்கள், சேமினுடைய ஜனங்கள்... யாப்பேத்தினுடைய ஜனங்கள் ஆங்கில இன மரபினராயிருக்கின்றனர், சேமினுடைய ஜனங்கள். மூன்று வம்சத்தினர், அதாவது: யூதர், புறஜாதியார், பாதியூதர் பாதி புறஜாதியார். இப்பொழுது, கவனியுங்கள், அங்கே அந்த... இது காம், சேம், மற்றும் யாப்பேத்.
113. இப்பொழுது, முதல் முறையாக ஞானஸ்நானமானது யோவான்ஸ்நானகனால் உரைக்கப்பட்டது... உரைக்கப்பட்டது. அது உண்மையென்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? சரி. நான் அதை இங்கே யோவான் ஸ்நானகன் மீது சுட்டிக்காட்டப் போகிறேன். யோவான் யோர்தானின் நதியிலே ஜனங்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, அவர்கள் மனந்திரும்ப வேண்டுமென்றும், தேவனோடு சரிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தங்களுடைய பொருட்களை விற்று, ஏழைகளைப் போஷிக்க வேண்டும் என்றும், போர் சேவகர் தங்களுடைய சம்பளமே போதுமென்றும், தேவனோடு சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டான். எத்தனைபேர் அதை அறிவீர்கள்? அவன் யோர்தானின் நதியிலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான், அவர்களுக்குத் தெளிக்கவில்லை, அவர்கள் மேல் ஊற்றவில்லை, ஆனால் அவர்களை தண்ணீரில் மூழ்க்கினான். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், இங்கே மூல கிரேக்க வேதாகம் அகராதியில், அது பாப்டிஸ்ஸோ என்ற வார்த்தையாயுள்ளதா என்று கண்டறியுங்கள், அது, “ஞானஸ்நானம்பண்ணப்படுதல், தண்ணீரில் மூழ்க்குதல், கீழே வைத்தல், அடக்கம்பண்ணப்படுதல்” என்பதாகும். இப்பொழுது, முதன்முறையாக அங்கு உரைக்கப்பட்ட ஞானஸ்நானம் அங்கே இருந்தது.
114. இரண்டாம் முறை ஞானஸ்நானம் உரைக்கப்பட்டிருந்ததோ, இயேசுவானவர் மத்தேயு 28:19ல் அதை கட்டளையிட்டிருந்தார்.
115. அதற்கு அடுத்த முறை ஞானஸ்நானம் உரைக்கப்பட்டிருந்ததோ அப்போஸ்தலர் 2:38ல் இருந்தது.
116. அதற்கு அடுத்த முறை உரைக்கப்பட்ட ஞானஸ்நானம் அப்போஸ்தலர் 8ம் அதிகாரத்தில் இருந்தது.
117. அதற்கு அடுத்த முறை உரைக்கப்பட்டிருந்த ஞானஸ்நானம் அப்போஸ்தலர் 10ம் அதிகாரத்தில் இருந்தது.
118. இங்கே இயேசுவானவர், “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” என்று கூறின அந்த நேரத்திலிருந்து நாம் வருகிறோம்.
119. இப்பொழுது நாம் முதலாவதாக இந்த வேதவாக்கியத்தை சரியாக புரிந்து கொள்வோம். அதாவது, “வேதத்தில் எந்த ஒரு வேதவாக்கியமும் மற்றொன்றிற்கு முரண்பாடாயிருக்காது” என்று நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன். அப்படியிருந்தால் நீங்கள் அதை என்னிடத்தில் கொண்டுவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதை இருபத்தியாறு ஆண்டுகளாக கேட்டு வருகிறேன், நான் இதுவரையிலும் அதைக் கண்டதேயில்லை. முரண்பாடான... வேதவாக்கியமே கிடையாது. அது அவ்வாறு முரண்படுமேயானால், அப்பொழுது அது ஒரு மனிதனால் எழுதப்பட்ட காரியமாயிருக்கிறது. இல்லை ஐயா, வேதாகமத்தில் எந்த முரண்பாடுமே கிடையாதே!
120. இப்பொழுது இதை நீங்கள், “அதைக் குறித்து என்ன?” என்று கேட்டீர்கள். ”
121. இங்கே இயேசுவானவர் நின்று, “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,” என்று கூறுகிறார். ”
122. பேதுருவோ திரும்பி நின்று அவர்களை நோக்கி, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.”
123. ““அங்குதான் உங்களுடைய முரண்பாடு உள்ளது. அதைப் போல் காணப்படுகிறது. இப்பொழுது, நீங்கள் ஒரு மாம்ச சிந்தையோடு அதை வாசித்துக் கொண்டிருப்பீர்களேயானால், ஒரு திறந்த இருதயத்தோடு வாசிக்காமலிருந்தால், அது ஒரு முரண்பாடாயிருக்கும்.
124. ஆனால் நீங்கள் அதை திறந்த மனதோடு வாசிப்பீர்களேயானால், நலமாயிருக்கும், அதாவது, “பரிசுத்த ஆவியானவர் இதை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து, கற்றுக்கொள்ளக் கூடிய பாலகருக்கு அதை வெளிப்படுத்தினபடியால் தேவனே அதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்” என்று இயேசுவானவர் அவ்வண்ணமாகக் கூறினார். நீங்கள் இதை சிந்தையிலே வைத்துக் கொண்டு, ஒரு சுயநல சிந்தையின்றி, ஆனால் கற்றுக் கொள்ளும்படியான ஒரு மனப்பூர்வமான இருதயத்தோடு வாசிப்பீர்களேயானால், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இந்தக் காரியங்களை உங்களுக்குப் போதிப்பார்.
125. இப்பொழுது இதை ஒப்பிடவில்லையென்றால்... நீங்கள், “நீங்கள் கூறுவது சரியென்பதை எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?” என்று கேட்டீர்கள். நல்லது, அது மற்ற வேதவாக்கியங்களோடு ஒப்பிடப்படுகிறது. நீங்கள் ஒப்பிடவில்லையென்றால், நீங்கள் இங்கே ஒரு மிகப்பெரிய முரண்பாட்டைப் பெற்றுக் கொள்வீர்கள்.
126. இப்பொழுது நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இது மத்தேயுவின் கடைசி அதிகாரமாய் உள்ளது. நான் இதை ஒரு எளிய முறையில் எடுத்து, நீங்கள் ஒவ்வொருவரும்... சிறு பிள்ளைகளும் இதைப் புரிந்துகொள்ளும்படி கூறவுள்ளேன்.
127. உதாரணமாக, நீங்கள் ஒரு காதல் கதையை வாசித்தால், அதன் பின்பகுதியில், “மேரியும், ஜானும் அதற்குப்பின் எப்போதும் சந்தோஷமாக வாழ்ந்தனர்” என்று கூறப்பட்டிருந்தால், அப்பொழுது நீங்கள் அதற்குப்பின் எப்போதும் சந்தோஷமாக வாழ்ந்த அந்த ஜான் யார், மேரி யார் என்று நீங்கள் வியப்புறுவீர்கள். இப்பொழுது, ஜான் யார், மேரி யார் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதற்கு நீங்கள் புத்தகத்தின் முதலாம் பாகத்திற்குத் திரும்பிச் சென்று, ஜான் யார் என்றும், மேரி யார் என்றும் கண்டறிந்து கொள்வது மேலானதாயிருக்கும். அதன்பின்னர் இங்கு திரும்பி வந்து, மேரி யாராயிருந்தாள் என்றும், அவள் எந்த குடும்பத்திலிருந்து வந்தாள் என்றும், ஜான் யாராயிருந்தார் என்றும், அவர் எந்த குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும், அவருடைய பெயர் என்னவாயிருந்ததென்றும், அவர்கள் எப்படி திருமணம் செய்து கொண்டனர் என்றும், அதைக் குறித்த எல்லாவற்றையும் கண்டறிந்துகொள்கிறீர்கள். அது சரிதானே?
128. நல்லது, அது வேதாகமத்தை இங்கு வாசிக்கும்போதும் அதேக் காரியமாகவே உள்ளது. பாருங்கள், இயேசு, “நீங்கள் போய் ஜனங்களுக்கு பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானங்கொடுங்கள்” என்று ஒருபோதும் கூறவேயில்லை, அதாவது திரித்துவ ஜனங்கள் ஞானஸ்நானங்கொடுக்கிற விதமாக கொடுக்கும்படிக் கூறவேயில்லை. வேதத்தில் அதற்கான வேதவாக்கியமேக் கிடையாது. அவர் ஒருபோதும், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமங்களில் (நா-ம-ங்-க-ளி-ல்), நாமங்களில்” என்று கூறவேயில்லை.
129. அவர், “(நா-ம-த்-தி-லே)” என்றார், ஒருமை அங்கே உங்களுடைய வேதாகமத்தைப் பார்த்து, அது சரியா என்று கண்டறியுங்கள், மத்தேயு 28, “நாமத்திலே.” .”
130. “பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில்...” என்றல்ல. அது திரித்துவப் பிரசங்கியார் ஞானஸ்நானங்கொடுக்கிற விதமாயுள்ளது. “பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில்.” அது வேதாகமத்தில் கூட இல்லை.
131. ““ஆகையால் நாமத்தில்...'' நீங்கள், “அப்படியானால், 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” என்று கூறினீர்கள். அப்பொழுது அங்கே ஒரு குறிப்பிட்ட பெயர் உண்டு.
132. நல்லது, பிதா என்பது ஒரு பெயரா? பிதா என்பது ஒரு நாமமல்ல என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? பிதா என்பது ஒரு பட்டப் பெயர். குமாரன் என்பதும் ஒரு நாமமல்ல. குமாரன் என்பது ஒரு நாமமல்ல என்பதை எத்தனைபேர் அறிவீர்கள்? எத்தனை பிதாக்கள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். எத்தனை குமாரர்கள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். உங்களில் யாராவது ஒருவர் “குமாரன்” என்று பெயரிடப்பட்டிருக்கிறீர்களா? உங்களில் யாராவது ஒருவர் “பிதா” என்று பெயரிடப் பட்டிருக்கிறீர்களா? சரி, பரிசுத்த ஆவி என்பது ஒரு பெயரல்ல. பரிசுத்த ஆவி என்பது அது என்னவாயுள்ளது என்பதாகும். எத்தனை மானிடர்கள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். புரிகிறதா? அங்குதான் காரியம், பரிசுத்த ஆவி அது என்னவாயுள்ளது என்பதாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, அவைகளில் ஒன்றும் நாமங்களே அல்ல; அது நாமமே அல்ல.
133. சரி, அப்படியானால், அவர், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானங்கொடுத்து” என்று கூறியிருந்தால், அப்பொழுது நாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது யார் என்று நாம் திரும்பிச் சென்று கண்டறிவது மேலானதாகும். அப்படியானால் நாம் மத்தேயு முதலாம் அதிகாரத்திற்கு திரும்பிச் சென்று, இந்த நபர் யாராயிருந்தார் என்றும், எந்த நாமத்தில் நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்றும் பார்ப்போம். நாம் இப்பொழுது மத்தேயு 1ம் அதிகாரம், 18வது வசனத்தோடு துவங்குவோம். நீங்கள் எல்லோருமே கூர்ந்து வாசியுங்கள்.
134. இப்பொழுது, இந்த கேள்வியைக் கேட்ட உங்களுக்கு நான் ஒரு சிறு விளக்கத்தை இங்கே அளிக்க விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் இங்கே தெளிவாக புரிந்து கொள்ளும்படி நான் இங்கே மூன்று காரியங்களை வைக்கப் போகிறேன், (விளக்கமளிக்க) விளக்கமளிக்கும்படியாக இந்த வேதாகமங்களையும் புத்தகங்களையும் வைத்துக் கூறப் போகிறேன்.
135. சரி, நீங்கள் என்னை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இப்பொழுது ஒவ்வொருவரும் என்னைக் கவனியுங்கள். இப்பொழுது இங்கே உள்ள இது பிதாவாகிய தேவன். இங்கே உள்ள இது குமாரனாகிய தேவன். இங்கே உள்ள இதுவோ பரிசுத்த ஆவியாகிய தேவன். இப்பொழுது எத்தனைபேர் புரிந்து கொள்ளுகிறீர்கள்? நீங்கள் இதை எனக்குப் பின்னேக் கூறுங்கள். இங்கே கீழே உள்ள இது யார்? (சபையோர், “பரிசுத்த ஆவி” என்கின்றனர்-ஆசி.) பரிசுத்த ஆவி. இங்குள்ள இது யார்? (சபையோர், “பிதா” என்கின்றனர் - ஆசி.) இங்குள்ள இது யார்? (சபையோர், “குமாரன்” என்கின்றனர்-ஆசி.) இப்பொழுது, அந்த விதமாகத்தான் திரித்துவக்காரர்கள் அதை விசுவாசிக்கிறார்கள், பாருங்கள், அது நம்மை அப்படியே அப்பட்டமான அஞ்ஞானிகளாக்குகிறது.
136. யூதர்; அந்தக் காரணத்தினால்தான் உங்களால் ஒரு யூதனோடு எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அவர், “நீங்கள் தேவனை மூன்று துண்டுகளாக வெட்டி, அவரை ஒரு யூதனிடத்தில் கொடுக்க முடியாது” என்றார். ஆனால், நிச்சயமாக முடியாது, நீங்கள் என்னிடத்திலும் கொடுக்க முடியாது. புரிகிறதா? இல்லை, ஐயா. அவர் ஒரே தேவன். அதுதான். சரியானது. மூன்று தேவர்கள் அல்ல. அது எவ்வளவு எவ்வளவு எவ்வளவு எளிமையாயுள்ளது என்பதை இப்பொழுது கவனியுங்கள்.
137. இப்பொழுது நாம் கண்டறியப் போகிறோம். இப்பொழுது, யார். இது யார்? இப்பொழுது யாராவது கூறுங்கள். தேவகுமாரன். அது சரியா? இது குமாரன் நல்லது, அப்படியானால் அவருடைய பிதா தேவன். சரிதானே? அவருடைய பிதா தேவன் என்று எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். இயேசு கிறிஸ்துவினுடைய பிதா தேவன் என்று எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்? சரி.
இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது...
138. இப்பொழுது நாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார் என்பதை திரும்பிச் சென்று கண்டறியப் போகிறோம், அந்த மத்தேயு, “நாமத்தில் ஞானஸ்நானங்கொடுத்து” என்றார். பாருங்கள், நாமம்; இப்பொழுது நாமங்களில் அல்ல, ஏனென்றால் அவைகள் நாமங்களாயிருக்க முடியாது, ஏனென்றால் அங்கே நாமமே இல்லை.
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பிதாவாகிய தேவனால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (வேதம் அவ்வாறு கூறுகிறதா? வேதம் என்னக் கூறுகிறது?)... அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
139. அப்படியானால் இவைகளில் எந்த ஒன்று அவருடைய பிதா? இப்பொழுது, இது அவருடைய பிதா என்று வேதம் கூறியுள்ளது, இயேசு இது அவருடைய பிதாவாயிருந்தது என்று கூறினார். இப்பொழுது எந்த ஒன்று அவருடைய பிதாவாய் உள்ளது? இப்பொழுது, அவருக்கு இரண்டு பிதாக்களிருந்திருந்தால், இப்பொழுது, அதைக் குறித்து என்ன? அவர் இரண்டு பிதாக்களை உடையவராயிருந்தால், அப்பொழுது அவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளையாயிருக்கிறார்.
’
140. இப்பொழுது நாம் இன்னும் சற்று மேற்கொண்டு வாசிப்போம்:
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது... உண்டானது. (சபையோர், “பரிசுத்த ஆவியினால்” என்கிறார்கள் - ஆசி.)
141. என்ன? பரிசுத்த ஆவியானாலா? எப்படி பிதாவானவர் அவருடைய பிதாவாயும், பரிசுத்த ஆவியானவரும் அவருடைய பிதாவாக ஒரே நேரத்தில் இருக்க முடியும்? இப்பொழுது, அது சரியானால், அப்பொழுது அவர் இரண்டு பிதாக்களை உடையவராயிருந்திருப்பார். இல்லை ஐயா! பரிசுத்த ஆவியே தேவனாயிருக்கிறார். பரிசுத்த ஆவி தேவனாயிருக்கிறார். ஆகையால் தேவனும், பரிசுத்த ஆவியும் ஒரே நபராயிருக்கின்றனர், இல்லையென்றால் அவர் இரண்டு பிதாக்களை உடையவராயிருந்தார் என்பதாகும்.
142. பாருங்கள், நாம் சற்று கழிந்து ஜானும், மேரியும் யார் என்று கண்டறிவோம். சரி, பேதுருவும், மத்தேயும் ஒருவருக்கொருவர் முரண்பட முயற்ச்சித்துக் கொண்டிருந்தார்களா அல்லது இல்லையா என்று நாம் கண்டறிந்து, வேதம் தனக்குத்தானே முரண்படுகிறதா என்று பார்ப்போம். அவ்வாறானால் அது ஆவிக்குரிய பிரகாரமான ஒரு குறைவான புரிந்து கொள்ளதலாயுள்ளது. அது உண்மை.
அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில்...
143. நான் அந்த ஒன்றை, 20-வது வசனத்தைப் படிக்க வேண்டும். இப்பொழுது 21-ம் வசனம்:
“அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்,... (இந்த நபர், இது யாராயிருந்தது? ஒரே நபர், தேவன்). அவருக்கு பேரிடுவாயாக. (என்னவென்று?) [சபையோர், “இயேசு” என்று பதிலளிக்கின்றனர்-ஆசி.] ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னன். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
144. எனவே அதற்கு பின் எப்போதும் சந்தோஷமாய் வாழ்ந்த ஜானும், மேரியும் யாராயிருந்தார்? அதாவது, “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்க் கொடுத்து” என்று கூறினவர் யார்? பிதாவாயிருந்தவர் யார்? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமமா? (யாரோ ஒருவர், “இயேசு” என்று கூறுகிறார் ஆசி.) நிச்சயமாகவே, அது இயேசுவாயிருந்தது. நிச்சயமாகவே, அதற்கு எந்த முரண்பாடுமே கிடையாது. ஒரு சிறு முரண்பாடுமில்லை. அது அப்படியே வேதவாக்கியத்தை சரியாக புரிந்துகொள்ளச் செய்கிறது. அவர் பிதா குமாரன் பரிசுத்த ஆவியாயிருந்தார். தேவன் நம்மோடு (இம்மானுவேல்) வாசம் செய்து கொண்டிருந்தார், “இயேசு” என்று அழைக்கப்பட்ட ஒரு சரீரத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். .”
145. இப்பொழுது, ஒருத்துவ சபையின் ஒருத்துவப் போதனையை, நான் நிச்சயமாகவே அதனோடு கருத்து வேறுபாடு கொள்கிறேன். உங்களுடைய விரல் ஒன்று என்பதுபோல், இயேசுவும் ஒருவராயிருக்கிறார் என்று கருதுகிறார்கள். அவர் ஒரு பிதாவை உடையவராயிருந்திருக்க வேண்டியதாயிருந்தது. அவர் பிதாவை உடையவராயில்லாதிருந்திருந்தால், அவர் எப்படி தம்முடைய சொந்த பிதாவை உடையவராயிருக்க முடியும்? அவருடைய பிதா திரித்துவக்காரர் கூறுகிறதுபோல் ஒரு மனிதனாயிருந்தால், அப்பொழுது அவர் இரண்டு தகப்பன்மார்களினால் முறைதவறிப்பிறந்த ஒரு குழந்தையாயிருப்பார். ஆகையால் நீங்கள் பாருங்கள், நீங்கள் இருவருமே வாதத்தினால் தவறாயிருக்கிறீர்கள். புரிகிறதா?
146. ஆனால் அதைக் குறித்த சத்தியம், அதாவது பிதா, குமாரன் பரிசுத்த ஆவி ஒருவரின் தனித்தன்மையாயிருக்கிறது. (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.)... உலகத்தின் பாவத்தை எடுத்துப் போட, ஒரு மாம்ச கூடாரத்தில் வாசம் செய்த.. அது முற்றிலும் உண்மை, “தேவன் நம்மோடு இருந்தார்.” இப்பொழுது, ஆகையால், மத்தேயு 28:19.
147. இப்பொழுது, நீங்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்துப்பார்த்து, வேதாகமத்தில் எங்காவது ஒரு நபரை நீங்கள் கண்டறிய முடிந்து. (இப்பொழுது அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், இப்பொழுது இது உங்களை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம்)... வேதாகமத்தில் எங்காவது ஒரு நபர் எப்போதவது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் என்று திரும்பி வந்து என்னிடத்தில் கூறி, நான் ஒரு மாய்மலக்காரன் என்று என்னிடம் கூறினால், அப்பொழுது நான் அதை ஒரு அடையாளப் பலகையாக எழுதி என்னுடைய முதுகில் தொங்கவிட்டுக் கொண்டு பட்டிணம் முழுவதும் நடந்து செல்வேன். அது ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலுள்ள ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர்.
148. நீங்களோ, “பிரசங்கியாரே, ஒரு நிமிடம் பொறும். யோவானைக் குறித்தென்ன? அவன் எந்த நாமத்திலும் ஞானஸ்நானங்கொடுக்கவில்லை!” எனலாம். ”
149. சரி, என்ன சம்பவித்தது என்பதை நாம் கண்டறிவோம்; அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்திற்கு நாம் திருப்புவோமாக. அங்குதான் நாம் யோவானின் சீஷர்களைக் கண்டறிகிறோம். நாம் இங்கே இந்தக் குழுவை கண்டறியும் வரை ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். அப்போஸ்தலர் 19-ம் அதிகாரம். இப்பொழுது நாம் வாசிக்கத் துவங்குவோம். நாம் யோவானின் சீஷர்களைக் கண்டறிவோம்:
அப்பொல்லோ என்பவன் (மனமாற்றமடைந்த ஒரு நியாயசாஸ்திரியாயிருந்தான்) கொரிந்து பட்டிணத்தில் இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: (அவர்கள் இயேசுவை பின்பற்றினவர்களாய் இருந்தனர்.)
150. அங்கே இதற்கு முந்தின அதிகாரத்தை நீங்கள் சற்று கவனித்திருப்பீர்களேயானால், அவர்கள் சத்தமிட்டுக் கொண்டும், களிகூர்ந்து கொண்டுமிருக்குமளவிற்கு அப்படிப்பட்ட ஒரு மகத்தான நேரத்தை உடையவர்களாயிருந்து கொண்டிருந்தனர். அது உண்மை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். பவுலும் சீலாவும் அடிக்கப்பட்டு சிறைச் சாலையில் போடப்பட்டிருந்தனர். அது சரியா? அவர்கள் இங்கு வந்து, ஆக்கிலாவையும், பிரிஸ்கில்லாவையும் கண்டனர். “இயேசுவே கிறிஸ்து” என்று வேதவாக்கியங்களின் மூலம் நிரூபித்துக் கொண்டிருந்த அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியாரால் அங்கே அவர்கள் ஒரு எழுப்புதலில் இருந்து கொண்டிருந்தனர். இப்பொழுது பவுல் அவனை கண்டறிகிறான்:
... பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான்...
151. இப்பொழுது, அருமையான பாப்டிஸ்டு நண்பனே உன்னைத் தான், “நீங்கள் விசுவாசிகளானபோது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று உங்களை நீங்களே கேட்டபோது, உங்களுடைய வேத சாஸ்திரத்தின் கீழிருந்து வரும் முட்டுகளை அது தட்டவில்லையென்றால்,
152. ஆனால் பவுல் இந்த பாப்டிஸ்டுகளை, “நீங்கள் விசுவாசிக்களானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்க விரும்பினான். இப்பொழுது அவர்கள் என்னக் கூறினர் என்பதைக் கவனியுங்கள்:
அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
அப்பொழுது அவன்: அப்படியானால்... எந்த... (இப்பொழுது நீங்கள் கிரேக்க வேதாகம் அகராதியில் இங்கே படித்துப் பார்க்க விரும்பினால், அதில், “அப்படியானால் நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?” என்று உள்ளதை உங்களுக்குக் காண்பிக்கும்). அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள் முன்னர் இங்கே யோவான் கொடுத்ததைப் பெற்றுள்ளோம். யோவான் எங்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான்.
153/ இப்பொழுது நான் கேட்க விரும்புகிறேன்: நீங்கள் அந்த ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தால், நீங்கள் அதனால் திருப்தியடைவீர்களா? நதியிலே இயேசுவோடு நடந்த அதே மனிதன், இயேசு கிறிஸ்துவிற்கு ஞானஸ்நானங்கொடுத்த அதே மனிதன் இந்த ஜனங்களுக்கும் ஞானஸ்நானங்கொடுத்திருந்தார். அது ஒரு நல்ல அழகான ஞானஸ்நானமாயிருந்தது; தெளித்தல் அல்ல, ஊற்றுதல் அல்ல, ஆனால் இயேசுவானவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட அதே இடத்திலே பண்டைய யோர்தானின் சேற்று தண்ணீரில் முழுக்கி ஞானஸ்நானம் கொடுத்திருந்தான். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்.
154. பவுல், “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அவர்கள். அவன்...
அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவி உண்டென்பதை... நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றனர்.”
அப்பொழுது அவன், “நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?” என்று கேட்டான்.”
அதற்கு அவர்கள், “நாங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்” என்றார்கள்.”
“அவனோ, “நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்?” என்று கேட்டான்.”
“அதற்கு அவர்கள், “யோவான் கொடுத்த ஞானஸ்நானம்” என்றார்கள். ”
155. இப்பொழுது பவுல் என்ன கூறினான் என்பதைக் கவனியுங்கள். இங்கே கவனியுங்கள்:
அப்பொழுது அவன்... நீங்கள் எந்த ஞானஸ்நானம்... யோவான் கொடுத்த... அவர்கள்...அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
156. பாருங்கள், யோவான் மனந்திரும்புதலுக்கு மாத்திரமே ஞானஸ்நானங்கொடுத்தான், ஆனால் இது பாவமன்னிப்பிற்காக இயேசுவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானமாயுள்ளது. அப்பொழுது பாவநிவிர்த்தி செய்யப்படவில்லை, பாவங்கள் மன்னிக்கப்பட முடியவில்லை. இப்பொழுது. அது நியாயப்பிரமாணத்தின் கீழ் இருந்ததைப் போல, வெறுமென ஒரு நல் மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்தது, லூக்கா 16:16ல், “நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான் வரைக்கும் வழங்கி வந்தது; அது முதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது கவனியுங்கள். கவனியுங்கள்...
அப்பொழுது பவுல். (இப்பொழுது கவனியுங்கள்) நீங்கள்... பெற்றீர்களா...
157. 5-வது-5-வது வசனம்: அதைக் கேட்டபோது அவர்கள்: இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே.. (மீண்டும்).. ஞானஸ்நானம் பெற்றார்கள்.
158. அது சரியா? ஆகையால் இந்த ஜனங்கள், அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் ஜனங்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். யூதர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். புறஜாதிகள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். வேதம் முழுவதிலுமே ஒவ்வொரு நபருமே இயேசுவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர்.
159. இப்பொழுது எவராவது வேறெந்த விதத்திலாவது எப்போதாவது ஞானஸ்நானம் பண்ணப்பட்ட ஒரு இடத்தை கண்டறியுங்கள் பார்க்கலாம். எனவே நான் இங்கு திரும்பிச் சென்று கத்தோலிக்க சபையானது எங்கே அதை ஒப்புக் கொள்கிறது என்றும், அதற்கு நீங்கள் தலைவணங்கும்படி எங்கே கூறினது என்றும் உங்களுக்குக் காண்பிப்பேன். அதாவது, கத்தோலிக்கர்கள், “சில பிராட்டெஸ்டெண்டுகளும் இரட்சிக்கப்பட்டிருக்கலாம், ஏனென்றால் அவர்கள் 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் போன்ற ஒரு சில கத்தோலிக்க உபதேசங்களை உடையவர்களாயிருக்கிறார்கள். அதாவது பரிசுத்த கத்தோலிக்க சபைக்கு இயேசுவின் நாமத்திலிருந்து 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திற்கு' அந்த முறைமையை மாற்ற உரிமை உள்ளது என்று பிராஸ்டெஸ்டெண்ட் சபையும் அதை ஒப்புக் கொள்கிறது” என்றும் கூறுகிறார்கள். இந்த சபையோ அதை ஒப்புக்கொள்கிறதில்லை, நான் வேதத்தோடு தரித்திருக்கிறேன். நான் வேதத்தை விசுவாசிக்கிறேன்.
160. நீங்களோ, “சகோதரன் பிரன்ஹாமே, ஜனங்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெறும்படி நீர் கட்டளையிடுகிறீரா?” என்று கேட்கலாம். முற்றிலுமாக! பவுல் இங்கே கட்டளையிட்டான்.
161. இப்பொழுது கவனியுங்கள், காலத்தியர் 1:8ஐ நாம் எடுத்து பவுல் என்னக் கூறினான் என்று கண்டறிவோமாக.
...நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
162. அங்குதான் காரியமே உள்ளது, “நாங்களாவது அல்லது தூதனாவது.” பவுல், அதே மனிதன், என் சகோதரனே, நீ பெற்றுள்ளதைக் காட்டிலும் மேலான ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்த ஜனங்களை மீண்டும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்படி கட்டளையிட்டான், ஏனென்றால் யோவான்ஸ்நானகன் இயேசுவினுடைய சொந்த உறவுமுறையானாய் இருந்தான், இரண்டாம் உறவுமுறையான்; தன்னுடைய சொந்த உறவு முறையானவருக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானங்கொடுத்துவிட்டு, அப்படியே யோவானானின் சீஷர்களுக்கும் ஞானஸ்நானங்கொடுத் திருந்தான். இயேசு, “அது கிரியை செய்யாதே!” என்றான். இல்லை பவுல்... அதைக் கூறி, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு முன்பு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மீண்டும் ஞானஸ்நானம் பெறும்படிக் கட்டளையிட்டான். அதற்கு முன்னர் அவர்கள் சத்தமிட்டுக் கொண்டும், தேவனை துதித்துக் கொண்டும், ஒரு பெரிய நேரத்தை உடையவர்களாயிருந்து கொண்டு, ஒரு மகத்தான மகத்தான எழுப்புதலை உடையவர்களாய், வேதாகமத்தைக் கொண்டு (தங்களுடைய வேத சாஸ்திரத்தைக் கொண்டு) இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டிருந்தனர். எத்தனை பேருக்கு அந்த வேதவாக்கியம் தெரியும்? 18-ம் அதிகாரம். நிச்சயமாக அவ்வாறு உள்ளது. அங்குதான் காரியமே உள்ளது. எனவே அதற்கு எந்தக் கேள்வியுமேக் கிடையாது.
163. இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு சிறு முக்கிய செய்தியைக் கூறட்டும். இப்பொழுது, அவன் ஒருபோதும் கட்டளையை விட்டுச் செல்லவேயில்லை, ஆனால் லூக்காவில்... மத்தேயு 16வது அதிகாரம். இயேசு, அவர்கள் மலையிலிருந்து இறங்கி வரும்போது, அவர், “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்கிறார். ”
164. “அதற்கு அவர்கள், “சிலர் உம்மை எலியா என்றும், சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும், சிலர் உம்மை இது, அது என்றும் சொல்லுகிறார்கள்” என்றனர். .’”
165. அப்பொழுது அவர், “நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். ”
166. பேதுரு பிரதியுத்தரமாக, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். ”
167. கவனியுங்கள்! “யோனாவின் குமாரனாகிய சீமோனே, (யோனாவின் குமாரன்) நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை.” ஆமென்!
168. பாருங்கள், அது ஆவிக்குரிய வெளிப்பாடாய் வரவேண்டும். அவன் தவறாயிருந்தான் (காயீன், அதாவது அவன் தவறாயிருந்தான்) என்று மாம்சமும் இரத்தமும் ஒருபோதும் ஆபேலுக்குக் கூறவில்லை, அதாவது “காயீன் தவறாயிருந்தான்” என்று ஆபேலுக்கு ஒருபோதும் கூறவில்லை. ஆனால், “அது இரத்தமாயிருந்தது!” என்பது ஆபேலுக்கு உண்டாயிருந்த ஒரு வெளிப்பாடாயிருந்தது. நாம் அந்த கேள்விக்கு இன்னும் ஒரு சில நிமிடங்களில் வரப் போகிறோம். அது இரத்தமாயிருந்தது, பழங்கள் அல்லது அதுவே நம்மை ஏதேன் தோட்டத்திலிருந்து எடுத்துவிட்டது. “அது இரத்தமாயிருந்தது,” அது இரத்தமாயிருந்தது என்று ஆபேலுக்கு, ஆவிக்குரிய வெளிப்பாட்டினால் தேவனால் வெளிப்படுத்தப்பட்டது. அவன், “விசுவாசத்தினாலே,” எபிரேயர் 11:1, “அவன் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான், அதை, தேவன் அவனுடைய பலியை ஏற்றுக் கொண்டார்,” என்று கூறுகிறது. அங்குதான் காரியம். பாருங்கள், அவன் விசுவாசத்தினாலே, வெளிப்பாட்டினாலே அதை செலுத்தினான்.
169. இப்பொழுது கவனியுங்கள், “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை,” (சரியாக கர்த்தராகிய இயேசுவே) “பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின்மேல் (இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு)... இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” அதைத்தான் அவர் கூறினார். ஆவிக்குரிய வெளி... “நீ பேதுருவாயிருக்கிறாய், நான் உனக்கு ராஜ்யத்தின் திறவுகோல்களைத் தருவேன் என்று நான் கூறுகிறேன். என்னவெல்லாம். ஏனென்றால் நீ இங்கேயும் பரலோகத்துக்கும் இடையே ஒரு ஆவிக்குரிய திறந்த வாய்க்காலை உடையவனாயிருக்கிறாய். மாம்சமும் இரத்தமும்; நீ ஒருபோதும் அதை ஒரு வேதாகம கருத்தரங்கிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை, நீ அதை ஒரு பள்ளியிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை, நீ அதை ஒருபோதும் ஒரு-ஒரு-ஒரு வேத சாஸ்திர பாடத்திலிருந்து கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நீ தேவன் பேரில் சார்ந்திருந்தாய், தேவன் அதை உனக்கு வெளிப்படுத்தினார், அது முற்றிலும் தெளிவாக வேதவாக்கியங்களை அதனோடு ஒன்றாக இணைக்கிறது. நீ பேதுருவாயிருக்கிறாய், அது உண்மை, நான் உனக்கு திறவு கோல்களைக் கொடுப்பேன்; நீ பூமியிலே கட்டவிழ்பது எதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன் என்று நான் கூறுகிறேன்.” ”
170. பெந்தேகோஸ்தே நாளிலே பேதுரு பிரதிநிதியாயிருந்து, அவர்கள் யாவரும் பேசப் பயப்பட்டபோது, அவன் எழுந்து நின்று, “யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவி கொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிக் கொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே அக்கினி, புகைக்காடாகிய அடையாளங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும் முன்னே இது சம்பவிக்கும், அப்பொழுது கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.” அங்குதான் காரியமே உள்ளது. ஓ, என்னே.
171. “ மேலும் அவன், “கோத்திரத் தலைவனாகிய தாவீதைக் குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. அவர் தீர்க்கதரிசியாயிருந்து, அவன் கண்டு, அவரை நோக்கிக் கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலது பாரிசத்திலே இருக்கிறார். 'அதினால் என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்:'''’”
172. “அவன், “தாவீது மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. ஆனால் அவர் தீர்க்கதரிசியாயிருந்து, நீதிபரருடைய வருகையை அவன் முன்னதாகவேக் கண்டான். அவரை தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்.” ஓ, என்னே. அங்கேதான் உங்களுடைய வேதவாக்கியங்கள் இருக்கின்றன. அங்குதான் காரியமே உள்ளது. அதுதான் இது.
173. இப்பொழுது அதுவே சரியான வழியென்றும், உண்மையான வழியென்றும், அதுவே எப்போதும் நியமிக்கப்பட்டிருந்த ஒரே வழியாயிருந்தாதென்றும்... நாம் இங்கே கண்டறிகிறோம். பேதுரு திறவுகோல்களை உடையவனாயிருந்தான், அந்த நாளிலே அவன் பிரசங்கித்தபோது, அவர்கள் கூறினர். இப்பொழுது கவனியுங்கள், இதோ உள்ளது முதல் சபை. கத்தோலிக்கர்களாகிய நீங்கள் இதற்கு செவிகொடுங்கள். காம்பலைட் ஸ்தாபனத்தாராகிய நீங்கள் இதற்கு செவிகொடுங்கள். பாப்டிஸ்டுகளாகிய நீங்களும், மெத்தோடிஸ்டுகளும் இதற்கு செவிகொடுங்கள். பெந்தேகோஸ்தேக்களாகிய நீங்கள் இதற்கு செவிகொடுங்கள். சர்ச் ஆஃப் காட், நசரீன், யாத்திரீக பரிசுத்தரே இதற்கு செவி கொடுங்கள்.
174. பேதுரு திறவுகோல்களை உடையவராயிருந்தார், அவர் அதிகாரத்தை உடையவராயிருந்தார், இல்லையென்றால் இயேசு பொய்யுரைத்தார். எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன், “இரண்டு மாறாத விசேஷங்களினால்; எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன்.” அவன் திறவுகோல்களை உடையவனாயிருந்தான். இயேசு அவனுக்கு திறவு கோல்களைக் கொடுத்திருந்தார். அதேப் போன்று அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, அவர் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருந்தேரேயன்றி, ராஜ்யத்தின் திறவுகோல்களை உடையவராயிருக்கவில்லை. பேதுரு அவைகளை உடையவனாயிருந்தானே! அது முற்றிலும் உண்மை.
175. இப்பொழுது கவனியுங்கள், பேதுரு, நீங்கள் வைத்திருந்த திறவுகோல்கள் உங்களுடைய பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருக்க, நீங்கள் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறீர்கள். புதிய சபையின் முதல் மனமாற்றமடைந்தவர்களுக்கு கேள்வி உண்டாகிறது. ஆரம்பகால கிறிஸ்தவ சபை. இப்பொழுது கத்தோலிக்கரே, இப்பொழுது பாப்டிஸ்டுகளே, மெத்தோடிஸ்டு, பிரஸ்பிடேரியன்களே, நீங்கள் புதிய சபையின் உபதேசத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் அதில் இருக்கிறீர்களா என்பதைக் கண்டறியுங்கள்.
சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்.
பேதுரு எழும்பி நின்று, நீங்கள் மனந்திரும்பி... ஒவ்வொருவரும். (பையனே, கவனி; நீ இங்கே அந்த திறவுகோல்களை வைக்கும் விதமாகவே கிறிஸ்து அதை பரலோகத்தில் வைப்பார்)... நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். (அந்த விதமாகத்தான் நீங்கள் இதற்குள் வருகிறீர்கள்). அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
176. அந்த திறவுகோல்கள் “கிளிக்” என்ற ஒலியோடு இங்கே தாழ்பாளைத் திறந்தன, அது “கிளிக்” என்ற ஒலியோடு திறந்தன. அந்தக் காரணத்தினால்தான் யோவானுடைய சீஷர்கள் (அவர்கள் பரலோகத்திற்கு செல்வதற்கு முன்), பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வரவேண்டியதாயிருந்தது. அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொண்டார். ஆகையால் அது இப்பொழுது உங்களை குழப்புகிறதில்லை, இது குழப்புகிறதா? புரிகிறதா? நிச்சயமாகவே மத்தேயு 28:19 பட்டப்பெயர்களாயிருந்ததேயன்றி நாமமல்ல.
177. சரி, நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது? நாம் உண்மையாக இன்னும் சில கேள்விகளுக்கு துரிதமாக பதிலளிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் நமக்கு இருக்குமா? நமக்கு இருக்குமா? சரி, நாம் உடனே துரிதமாகப் பார்ப்போம். நான் இங்கே கீழே இரண்டு கேள்விகள் வைத்துள்ளேன், என்னால் முடிந்தளவு இதனோடு இணைந்து துரிதமாக பதிலுரைக்க விரும்புகிறேன். அதன் பின்னர் மற்றவைகளுக்கு என்னால் ஞாயிறு காலை பதிலளிக்க முடியும்.