178. சகோதரனே, சகோதரியே, இது யாராயிருந்தாலும் பரவாயில்லை, நாம் ஆதியாகமத்திற்கு திரும்பிச் சென்று இங்கு ஒரு காரியத்தைக் கண்டறிவோம். நீங்கள் விரும்பினால், நாம் ஆதியாகமம் 3:8க்குச் செல்வோம். சரி, இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள்.
179. இப்பொழுது நான் அந்த சம்பவத்தை தெளிவுபடுத்தவுள்ளேன். முழுவதும் சுத்தமானதாயும், பரிசுத்தமானதாயுமிருந்தது, பாவமே இல்லாதிருந்தது இல்லை எந்தக் கறையுமில்லாதிருந்தது. இப்பொழுது நான். உங்களுடைய இந்த முதல் கேள்வியை எடுத்துக் கொள்கிறேன். விருட்சத்தில் உள்ள ஜீவன். தோட்டத்தின் மத்தியில், விருட்சத்தின் மையத்தில். விருட்சம் என்பது “ஸ்திரீயாயிருந்தது.” இப்பொழுது நீங்கள் இன்னும் ஒரு சில நிமிடங்கள் அப்படியே பொறுமையாயிருந்தால், நான் அதை உங்களுக்கு வேதவாக்கியங்களைக் கொண்டு நிரூபிக்கவுள்ளேன்.
180. நாம் முதலில் அவள். அவள் ஆதாமை அறியும் முன்னே அவள் கர்பந்தரித்தாளா அல்லது இல்லையா அல்லது அதற்கு முன்னரா என்று முதலில் பார்ப்போம். கவனியுங்கள்:
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டார்கள்.
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து.. (இப்பொழுது, அதற்கு முந்தின நாள் அவன் அதை அறிந்திருக்கவில்லை; ஏதோக் காரியம் சம்பவித்திருந்தது, அவன் நிர்வாணமாக்கப் பட்டான் என்று ஏதோ ஒன்று அவனுக்கு வெளிப்படுத்தினது)... ஒளித்துக் கொண்டேன் என்றான்.
அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? விலக்கின விருட்சத்தின் கனியைப்புசித்தாயோ என்றார்.
181 அவன் புசித்த விருட்சத்தின் கனி அவன் நிர்வாணி என்பதை உணரச் செய்ததா? நான் அவ்வப்போது கூறியுள்ளதுபோல, (இது கேலியல்ல, நான் ஒரு கேலிக்காக இதை பொருட்படுத்திக் கூறவில்லை) “ஆனால் ஆப்பிள்களைப் புசிப்பது ஸ்திரீகள் நிர்வாணமாயிருப்பதை அவர்களுக்கு உணர்த்துமானால், அப்பொழுது நாம் மீண்டும் அவர்களுக்கு ஆப்பிள் பழங்களைத் தருவதே மேலானதாகும்.” புரிகிறதா? அதனால் நிர்வாணமாக்கப்படவில்லை. அது ஒரு மரமாகவோ, அவர்கள் புசித்தது ஒரு ஆப்பிள் பழமாகவோ இருக்கவில்லை, அது பாலியலாயிருந்தது. கவனியுங்கள்.
புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.
அப்பொழுது... கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்ச்சித்தது…?... சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன். (பாருங்கள், ஆதாமினால் அவள் கர்ப்பந்தரிப்பதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே)
182. ஆதாம் ஏவாளை அறிந்தான், அவள் கர்ப்பவதியாகி ஆபேலைப் பெற்றாள்-பெற்றாள்.
183. ஆனால் நான் ஒரு சரியான திசையிலிருந்து உங்களிடத்தில் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது அவள் விருட்சமாயிருந்தாள் என்றும், ஒவ்வொரு ஸ்திரீயும் ஒரு கனிவிருட்சமாயிருந்தாள் என்றும் நிரூபிப்பதற்காகவே இதைக் கேட்கிறேன். எத்தனைபேர் அதை அறிவீர்கள்? நீங்கள் உங்களுடைய தாயாரினுடைய கனியாயிருக்கவில்லையா? நிச்சயமாக. நீங்கள் அவ்வாறுதான் இருக்கிறீர்கள். “கனியின் மத்தியில் இல்லை விருட்சத்தின் மத்தியில் உள்ளது, அவள் தொடக் கூடாத கனி.”
184. நீங்கள் கவனிப்பீர்களேயானால், இயேசு ஜீவ விருட்சமாயிருந்தாரல்லவா? 6வது அதிகாரத்தில், “நானே வானத்திலிருந்து, தேவனிடத்திலிருந்து வந்த ஜீவ அப்பம்” என்று வாக்களிக்கவில்லையா?
185. ஒரு மனிதன்... ஸ்திரீயினுடைய... பாருங்கள், பிறப்பினூடாக, ஸ்திரீயின் மூலமாக நாம் யாவரும் மரிக்கிறோம்; ஏனென்றால் நாம் ஒரு ஸ்திரீயினுடைய பிறப்பின் மூலமாக நாம் மரணத்திற்குட்பட்டிருக்கிறோம் (அது சரியா?) மனிதனுடைய பிறப்பினூடாக நாம் யாவரும் என்றென்றுமாய் ஜீவிக்கிறோம். ஸ்திரீயானவள் ஒரு மரண விருட்சமாயிருக்கிறாள், மனிதன் ஒரு ஜீவ விருட்சமாயிருக்கிறான்; ஏனென்றால் ஸ்திரீயானவள் தனக்குள்ளாக ஜீவனைக் கூட உடையவளாயிருப்பதில்லை. அது முற்றிலும் உண்மையே. அந்த கரு உயிர்மத்தின் ஜீவன் மனிதனிலிருந்தே சரியாக உண்டாகிறது. அது ஸ்திரீக்குள்ளாகச் செல்கிறது, ஸ்திரீயானவள் ஒரு அடைகாகும் கருவியேயல்லாமல் வேறொன்றுமல்ல. குழந்தையானது தொப்புள் கொடியைத் தவிர வேறெதனோடும் தாயினிடம் தொடர்புடையதாயிருக் கவில்லை. அந்தத் தாயினுடைய ஒரு துளி ரத்தம் கூட குழந்தைக்குள்ளாக இல்லை; ஆனால் அவளுடைய இரத்ததில் பிறந்தாலும், குழந்தைக்குள் தாயினுடைய இரத்தம் ஒரு துளி கூட கிடையாது. போய் கண்டறியுங்கள். அல்லது மருத்துவரின் புத்தகத்தில் வாசித்துப் பாருங்கள் அல்லது உங்களுடைய மருத்துவரைக் கேட்டுப் பாருங்கள், அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது அங்கில்லை, இல்லை ஐயா, தாயினுடைய இரத்தம் ஒரு துளிகூட கிடையவே கிடையாது. அவள் கருமுட்டையாயிருக்கிறாள், அவ்வளவுதான். ஜீவன் மனிதனிடத்திலிருந்தே உண்டாகிறது.
186. ஸ்திரீயினூடாக, இயற்கையான பிறப்பினூடாக அதை காண்பிப்பதற்கு அது ஒரு அழகான மாதிரியாயுள்ளது, நாம் யாவரும் மரிக்க வேண்டும், ஏனென்றால் நாம் துவக்கத்திலேயே மரித்தவர்களாய் இருக்கிறோம். மனிதனாகிய கிறிஸ்து இயேசு மூலமாக மாத்திரமே நாம் ஜீவிக்க முடியும். ஏதேன் தோட்டத்தில் இரண்டு விருட்சங்கள் இருந்தன. உங்களால் இதை புரிந்து கொள்ள முடியவில்லையா?
187. கவனியுங்கள்! அந்நாளிலே இந்த விருட்சத்தை காவல் புரிந்தது ஒரு கேரூபினாயிருந்தது. அதாவது அவர்கள் அந்த ஜீவ விருட்சத்தை எப்போதாவது ருசித்துவிட்டால், அப்பொழுது அவர்கள் என்றென்றும் உயிரோடிருப்பர். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? அவர்கள் என்றென்றும் உயிரோடிருப்பர். முதல் முறை அவர்கள் அதை ருசிபார்க்க முடிந்தபோது... தூதன், “நாங்கள் அதைக் காவல்புரிவோம்” என்றான். அதற்கான வழியைக் காவல் செய்ய தோட்டத்திற்கு கிழக்கே கேரூபீங்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார். கேரூபிங்களை கிழக்கே காவல் செய்ய வைத்து, (இந்த விருட்சத்தண்டை) வர முடியாதபடிக்கு காவல் செய்ய வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.
188. இயேசு வந்தபோது, அவர், “நானே ஜீவ அப்பம், இந்த அப்பத்தை புசிக்கிறவன் ஒரு போதும் மரியான்” என்றார். அங்கேதான் உங்களுடைய விருட்சம் உள்ளது.
189. அதுதான் உங்களுடைய ஸ்திரீயின் நிலைமையாகும், உங்களுடைய பாலியல் சேர்க்கை மரணத்தையேக் கொண்டு வருகிறது. பாலியல் வாஞ்சை என்ற ஒன்று நிச்சயம் உண்டாயிருக்கிறபடியால், அதனால் விடப்பட்டுள்ளது மரணமே. ஆவிக்குரிய பிறப்பு என்ற ஒன்று நிச்சயம் உண்டாயிருப்பதால், அதனால் விடப்பட்டிருப்பதோ நித்திய ஜீவனாயிருக்கிறது. மரணம் ஒரு ஸ்திரீயின் பிறப்பினூடாக உண்டாகிறது, ஒரு மனிதனுடைய பிறப்பினூடாக ஜீவன் உண்டாகிறது. ஆமென்! அங்குதான் காரியமே உள்ளது.
190. இப்பொழுது நாம் காயீனிடத்திற்கு திரும்பிச் செல்வோம். அந்த ஆவி, அந்த அற்பத்தனம் எங்கிருந்து உண்டானது என்று உங்களால் எனக்குக் கூற முடியுமா? காயீன். பாருங்கள், தேவ குமாரனாயிருந்த ஆதாமின் குமாரனாய் காயீன் இருந்திருந்தால், அந்தப் பொல்லாங்கு எங்கிருந்து வந்தது? முதலாவது காரியமென்னவெனில் அவன் பிறந்தபோது, அவன் வெறுத்தான், அவன் ஒரு கொலைகாரனாயிருந்தான், அவன் பொறாமையுள்ளவனாயிருந்தான். இப்பொழுது அவனுடைய தகப்பனின் சுபாவத்தை எடுத்துப் பாருங்கள், துவக்கத்திலேயே, அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி, அவன் துவக்கத்தில் இருந்து.. அவன் மிகாவேலைக் குறித்து பொறாமையுள்ளவனாய் இருந்தான், அங்குதான் முழு தொல்லையும் ஆரம்பமானது. எத்தனைபேர் அதை அறிவீர்கள்? காயீன் தன் தகப்பனுடைய சுபாவத்தை உடையவனாயிருந்தான், எனவே அவன் தன் சகோதரனைக் குறித்து பொறாமையாயிருந்து, அவனைக் கொன்றான். அந்த சுத்தமான... அந்த சுத்தமான ஓடையிலிருந்து இந்த சுபாவம் உண்டாயிருந்திருக்க முடியாது. அது... இந்த தாறுமாறாக்கப்பட்ட ஓடையிலிருந்தே உண்டாக வேண்டியதாயிருந்தது. காயீன் பிறந்தவுடனே, இப்பொழுது அவனைக் கவனியுங்கள்.
191. அப்பொழுது காயீனுக்குப் பிறகு ஆபேல் பிறந்தான், அதன் பின்னரே அவள் ஆதாமினால் கர்ப்பந்தரித்தாள். அவன் அவளை அறிந்தபோது-அறிந்தபோது, அவள் ஆபேல் என்னும் குமாரனைப் பிறப்பித்தான். ஆபேல் கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியாயிருந்தான்; ஆபேல் கொல்லப்பட்டபோது, சேத் அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டான்; மரணம், அடக்கம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்ற மாதிரியில் உள்ளது.
192. ஆனால் இப்பொழுது, காயீன் ஆராதித்தான்; அவனுடைய எல்லா மாம்சபிரகாரமான கிரியைகளும் இன்றைக்கு உள்ள மாம்சபிரகாரமான சபையைப் போன்றே உள்ளன; அவர்கள் சபைக்குச் செல்கிறார்கள், அவர்கள் ஆராதிக்கிறார்கள். காயீன் ஆராதித்தான்; அவன் ஒரு நாத்திகனாயிருக்கவில்லை, அவன் ஒரு கம்யூனிஸ்டாயிருக்கவில்லை. காயீன் ஒரு விசுவாசியாயிருந்தான்; அவன் தேவண்டை சென்று, அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவன் ஆபேல் செய்த எல்லா மார்க்க சம்மந்தமான காரியத்தையும் செய்தான், ஆனால் அவன் ஆவிக்குரிய வெளிப்பாடாகிய தேவனுடைய சித்தத்தைப் பெற்றிருக்கவில்லை. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! அங்குதான் காரியமே உள்ளது. உங்களுக்கு இது புரிகிறதா? அவன் ஆவிக்குரிய வெளிப்பாட்டைப் பெற்றிருக்கவில்லை, இன்றைக்கு சபையோடும் உள்ள காரியமும் அதுதான். இயேசு தம்முடைய சபையை அந்த ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் கட்டுவதாகக் கூறினார். நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? ஓ, என்னே, இப்பொழுது உங்களுடைய கண்கள் திறக்கப்பட முடியும். பாருங்கள், ஆவிக்குரிய வெளிப்பாடு.
193. காயீன் வந்தான்; அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டினான், அவன் ஆராதித்தான், அவன் பலியைக் கொண்டுவந்தான், அவன் முழங்காற்படியிட்டான், அவன் தேவனைத் துதித்தான், அவன் தேவனை ஆராதித்தான், ஆபேல் செய்த பக்தியான ஒவ்வொரு காரியத்தையும் காயீன் செய்தான். ஆனால் அவன் ஆவிக்குரிய வெளிப்பாட்டை பெற்றிராதபடியால், தேவன் அவனை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டாரே!
194. அதேவிதமாகவே காயின் வம்சத்தை பின் தொடர்ந்துப் பாருங்கள்: காயீனிலிருந்து பேழையண்டைக்கு, பேழையிலிருந்து இஸ்ரவேலருக்குள், இஸ்ரவேலரிலிருந்து இயேசுவானவர் வரை, இயேசுவிலிருந்து இந்நாள் வரையிலுமே தொடர்ந்து பாருங்கள்; அது மாம்சபிரகாரமான, அடிப்படையான சபையாய், வணங்காத, வெற்றாசாரமான, கல்வியியலைக் கொண்டதாயிருக்கிறதா என்று பாருங்கள். ஆவிக்குரிய வெளிப்பாடில்லாமல், வேதவாக்கியங்களை அறிந்துள்ள மனிதனால், எல்லா உபதேசங்களையும், வேத சாஸ்திரங்களையும் அறிந்துள்ளவனால், அவர்களால் அதை அந்தவிதமாக விளக்கிக் கூற முடியும் என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய விரலை சொடுக்குகிறார் - ஆசி.) அது உண்மை. அதுவே காயீனின் உபதேசமாய் உள்ளது.
195. வேதமோ, “அவர்களுக்கு ஐயோ! ஏனென்றால் இவர்கள் காயீனுடைய உபதேசத்தில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி கெட்டுப் போனார்கள்” என்று உரைத்துள்ளது. அதே யூதாவின் புத்தகத்தில், அவன், “அவர்கள் இந்த ஆக்கினைக் கென்று முன் குறிக்கப்பட்டிருந்தனர்” என்றான். நிச்சயமாகவே, அவர்கள் அதற்காகவே முன் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். புரிகிறதா? பிலேயாம் என்னாவாயிருந்தான்? அவன் ஒரு பேராயராய் இருந்தான். அவன் எல்லா சபைக்கு மேலாக இருந்தான். அவன் தன்னால் முடிந்தளவு அடிப்படையான காரியத்தோடு அங்கே மேலேறி வந்தான். அவன் செலுத்தினான். அங்கே அவன் பிரபலமான முக்கியஸ்தரோடு மேலே நின்று கொண்டிருப்பதைப், தங்களுடைய மகத்தான பிரபலங்களோடு அங்கே மேலே நிற்பதைப் பாருங்கள். அவர்கள் நாத்திகர்களாயிருக்கவில்லை, அவர்கள் விசுவாசிகளாய் இருந்தனர்.
196. அந்த அந்த மோவாபின் வம்சம் லோத்தினுடைய குமாரத்தியிலிருந்து தோன்றினது. லோத்து...ஜீவித்து... லோத்தினுடைய குமாரத்தி தன் தகப்பனோடு சயனித்து, கருவுற்று ஒரு பிள்ளை பெற்றெடுத்தாள், அந்தப் பிள்ளை... மோவாபின் கோத்திரமாக வளர்ந்தது. அவர்கள் ஒரு பெரிய ஸ்தாபனமாயிருந்தனர். மகத்தானவர்களாயும், புகழ்ச்சி நயமிக்கவர்களாயும், அவர்கள் இளவரசர்களாயும், ராஜாக்களாயும், முக்கியஸ்தர்களாயுமிருந்தனர். அவர்கள் பேராயர்களையும், முக்கிய சபை சங்கம் மேலான தலைவர்களையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் உடையவர்களாயிருந்தனர்.
197. இங்கே ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள், மற்றொரு குழுவினர், இஸ்ரவேலர் வருகின்றனர். ஒரு ஸ்தாபனமற்ற பண்டைய சிறு குழுவினராய், ஸ்தாபன பாகுபாடற்றவர்களாயிருந்தனர். அவர்கள் செய்யப்பட வேண்டும் என்று நியாயப்பிரமாண வரைப்படத்தில் இருந்த ஒவ்வொரு காரியத்தையும் மிகச் சரியாகச் செய்திருந்தனர். ஆனால் அது என்னவாயிருந்த தென்றால், அவர்கள் ஆவிக்குரிய வெளிப்பாட்டைப் பெற்றிருந்தனர், தேவன் ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் அவர்களோடிருந்தார்.
198. ஓ, அவர்கள் மாம்சபிரகாரமான காரியங்களை உடையவர்களாயிருந்தார்கள் என்பதை நான்-- நான் அறிவேன், ஜனங்களோ, “அவர்கள் ஒன்றுக்கும் உதவாக் கூட்டம், அவர்களை உதைத்துத் தள்ளுவதைத் தவிர அவர்களோடு செய்வதற்கு ஒன்றுமேயில்லை” என்றனர். ஆனால் அவர்கள் ஆவிக்குரிய வெளிப்பாட்டைப் பெற்றிருந்தனர், அவர்கள் அடிக்கப்பட்ட கன்மலையை உடையவர்களாய் இருந்தனர், அவர்கள் ஒரு வெண்கல சர்ப்பத்தை உடையவர்களாயிருந்தனர், அவர்களோடு செல்லுகிற ஒரு அக்கினி ஸ்தம்பத்தை அவர்கள் உடையவர்களாயிருந்தனர். அல்லேலூயா! நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று நீங்கள் நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் நான் உணர்ச்சிவசப்படவில்லை. நான் நலமாக உணருகிறேன்.
199. கவனியுங்கள்! நான், “அந்த மாறாத அதே தேவன் இன்றைக்கு நம்மோடு ஜீவிக்கிறார்” என்று நினைக்கிறேன். அது இன்னமும் வார்த்தையின் ஆவிக்குரிய வெளிப்பாடாய் உள்ளது. நிச்சயமாகவே அது ஆவிக்குரிய வெளிப்பாடாய் உள்ளது. அது சரியாக நித்தியமானதாயுள்ளது. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! ஆம் ஐயா.
200. இதோ அவன் அடிப்படையான காரியங்களோடு அங்கே நின்றான்: அவர்கள் பாப்டிஸ்டுகளின் கூட்டமாய், பிரஸ்பிடேரியங்களாய் அந்த மலையின்மேல் நின்றனர், அங்கே அவர்களுடைய பேராயரை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் ஒரே விதமான மார்க்கரீதியான பக்தியாயிருந்தனர், அவர்களும் அதே தேவனையே தொழுது கொண்டனர். அவர்கள், “அங்கே உள்ள உதவாக் குப்பைக் கூட்டத்தை கீழே நோக்கிப் பாருங்கள். ஏன்? அவர்களுக்கு ஒரு ஸ்தாபனம் கூட இருக்கவில்லை. அவர்கள் கத்துகிற, கூச்சலிடுகிற, பரிசுத்த உருளையர் கூட்டமேயல்லாமல் வேறொன்றுமில்லை.” என்றனர்.
201. அது சரியா? சரியாக அவர்கள் அவ்வாறேயிருந்தனர். அவர்கள் பரிசுத்த உருளையராயிருந்தனர் என்பதை நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் ஆதியாகமத்திற்குத் திரும்பி சென்று, அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தபோது நடந்ததைக் கண்டறியுங்கள். ஒரு அற்புதம் நிகழ்த்தப்பட்டது, மீரியாம் ஒரு தம்புருவை எடுத்துக் கொண்டு, கரையிலே நின்று அதை அடித்து ஆவியில் நடனமாடினாள், மோசே ஆவியில் பாடினான். அது நாம் பரிசுத்த உருளை என்று அழைக்கப்படும் ஒரு கூட்டமாயிருக்கவில்லையென்றால், பாடிக்கொண்டும், குதித்துக்கொண்டும், துதித்துக்கொண்டுமிருந்து அந்தக் கூட்டம் வேறென்ன என்று எனக்குத் தெரியாது. எல்லா நேரத்திலுமே மற்ற தேசங்கள் அவர்களை வெறுத்தன, ஆனால் தேவன் அவர்களோடிருந்தார். அவர்கள் ஆவிக்குரிய வெளிப்பாட்டை உடையவர்களாய் அந்த அக்கினி ஸ்தம்பத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர்.
202. மோவாப், “இப்பொழுது, இங்கே நோக்கிப் பாருங்கள். நாம் எல்லா முக்கிய உயர்பதவி சபைத் தலைவர்களையும், எல்லா பேராயர்களையும், எல்லா திருச்சபை மூப்பர்களையும் இங்கு அழைத்து வருவோம். நாம் இதைக் குறித்த ஏதோ ஒன்றை செய்வோம், ஏனென்றால் நாம் ஒரு பக்தியான தேசமாயிருக்கிறோம். எனவே நாம் அந்த பிரச்சாரம் நம்முடைய அருமையான ஸ்தாபனத்தில் கலந்துவிட அனுமதித்துவிடக் கூடாது” என்றனர்.
203. ஆகையால் அவர்கள் இவர்களை அங்கே அழைத்துச் சென்றனர். அவர்கள் பன்னிரண்டு பலிப்பீடங்களைக் கட்டினர்: அந்தவிதமாக இஸ்ரவேலரும் பன்னிரண்டு பலிபீடங்களைக் கட்டியிருந்தனர். மோவாபியர் அந்த பலிபீடங்களின் மேல் பன்னிரண்டு காளைகளை பலியாகச் செலுத்தினர்; தேவன் கேட்டிருந்ததை இஸ்ரவேலர் சரியாக செய்திருந்தனர்; அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு பிரதிநிதித்துவமாக அதன்மேல் பன்னிரண்டு ஆட்டுக்காடாக்களைப் பலியிட்டனர்; இரண்டு இடங்களிலுமே பன்னிரண்டு ஆட்டுக்கடாக்களை பலியிட்டனர்.
204. எல்லா முக்கியஸ்தர்களும், பேராயர்களும் மற்றும் உள்ள யாவரும் சுற்றி நின்றனர். அவர்கள் பலியைத் தகனித்தனர். அப்பொழுது அவர்கள் ஜெபித்தனர், அவர்கள் தங்களுடைய கரங்களை யோகோவாவினிடத்தில் உயர்த்தி, “யோகோவாவே, எங்களுக்குச் செவிகொடும்!” என்றனர். அவர்கள் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர்? அவர்களுடைய பிலேயாம் அந்தவிதமாக புறப்பட்டுச் சென்றபோது, ஆவியானவர் அவன் மீது வந்திறங்கினார். நிச்சயமாக (அவன் மாம்சபிரகாரமானவனாயிருந்தான்)
205. ஆவியானது ஒரு மாய்மாலக்காரன் மீது விழக் கூடும் என்று வேதம் உரைத்துள்ளது. நான் அதைக் குறித்துப் போதித்ததை இப்பொழுது நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். “மழையானது நீதியுள்ளவர்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது.” ஆனால் அதை வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், அங்குதான் நீங்கள் அதைப் புரிந்துக் கொள்ள முடியும்.
206. அப்பொழுது அவன் அதைச் செய்தபோது. ஆவியானவர் அவன்மீது வந்தபோதிலும் சத்தியத்தையேக் கூறினார், அவன் இஸ்ரவேலரை சபிக்க முயன்றான், ஆனால் அவன் இஸ்ரவேலரை ஆசீர்வதித்துவிட்டான்.
207. இப்பொழுது, தேவன் ஒரு அருமையான சபைக்கு, ஒரு அருமையான பேராயருக்கு, ஒரு அற்புதமான போதகருக்கு, ஒரு கூட்ட படித்த மேதைகளுக்கு மரியாதை அளிப்பதாயிருந்தால், அவர் அந்தப் பலியை ஏற்றுக்கொள்ள கடமைபட்டவராயிருந்திருப்பார், ஏனென்றால் அவன் இஸ்ரவேலரைப் போன்று அடிப்படையில் சரியாக இருந்தான்; ஆனால் அவன் வார்த்தையின் ஆவிக்குரிய வெளிப்பாட்டையும், தேவனுடைய சித்தத்தையும் பெற்றிருக்கவில்லை. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, அதுவே இன்றைக்கு வித்தியாசமாயுள்ளது.
208. இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர்கள், “அந்த நபரைவிட்டு விலகிப் போங்கள். அவன் ஒரு சமாரியன் என்றும், அவன் பையத்தியக்காரன் என்றும் நாங்கள் அறிவோம். நீ எங்களுக்குப் போதிக்கிறாயா? நீ விபச்சாரத்தில் பிறந்தாய். நீ ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளையாய் வந்தாயேயன்றி வேறொன்றுமல்ல. உன்னுடைய தந்தை யார்? தேவன் உன்னுடைய பிதா என்று கூறுகிறாயே, நீ தூஷணக்காரன்? ஏன்? நீ அப்படித்தானே எங்களிடத்தில் பொருட்படுத்திக்கூறுகிறாய்? நாங்கள் பிரசங்கிகளாயிருந்து வருகிறோம், நாங்கள் பேராயர்களாயிருந்து வருகிறோம். எங்களுடைய பூட்டனாரினுடைய பூட்டனாரின் பூட்டனாரின் காலத்திலிருந்தே வழி, வழியாக தொடர்ந்து பிரசங்கிமார்களாயும், பேராயர்களாயு மிருந்து வருகிறோம். நாங்கள் சபையில் பிறந்து, வளர்க்கப்பட்டோம். நாங்கள் மிகப்பெரிய உயரிய வேதாகம கருத்தரங்குகளில் இருந்திருக்கிறோம். நாங்கள் நியாயப்பிரமாணத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் அறிந்துள்ளோம். நீ எங்களுக்கு போதிக்க முயற்சிக்கிறாயா? நீ எங்கேயாவது பள்ளிக்கு எப்போதாவது போயிருக்கிறாயா? நீ இதை எங்கே கற்றுக் கொண்டாய்?” என்றெல்லாம் கேட்டனர்.
209. அப்பொழுது அவரோ, “நீங்கள். உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்” என்றார், இயேசுவே கூறினார்.
210. அவர்களுக்கு மத்தியில் அற்புதங்களோ, அடையாளங்களோ இல்லாதிருந்தன. அவர்களுக்கு மத்தியில் தெய்வீக சுகமளித்தல்கள் மற்றுமுள்ள காரியங்கள் இல்லாதிருந்தன. அவர் மத்தியில் ஆசீர்வாதங்களே இல்லாதிருந்தன. ஆனால் இயேசு ஒரு முற்றிலுமான ஆவிக்குரியப் பிரகாரமான வேதவாக்கியங்களின் வெளிப்பாடாயிருந்தார்.
211. அவர்கள், “ஏன், அது இன்ன-இன்ன விதமாய் எழுதப்பட்டிருக்கிறதே” என்றனர்.
212. இயேசு, “ஆம், அது இப்படியும் கூட எழுதப்பட்டிருக்கிறதே” என்றார். ஆனால் தேவன் தம்முடைய மனிதனை தம்முடைய அடையாளங்களினால் ரூபகாரப்படுத்தினார்.
213. பேதுரு அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் அதேவிதமாகக் கூறினார், அவன், “இஸ்ரவேலரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்” என்றான். (அங்குதான் உங்கள் காரியமே உள்ளது) “அங்கே பெரிய சனகரீம் ஆலோசனை சங்கத்தினால் முன்னறிவின்படியே ஒப்புக்கொடுக்கப்பட்ட. ஆனால் தேவனுடைய முன்னறிவினால், தேவன் இந்த மரணத்திற்கேதுவாய் மரிக்கும்படி அவரை முன்னியமித்திருந்தார். நீங்கள் அவரை கொடூரமான அக்கிரமக்காரருடைய கரங்களில் ஒப்புக்கொடுத்தீர்கள். நீங்கள் ஜீவாதிபதியைச் சிலுவையிலறைந்தீர்கள், தேவன் அவரை எழுப்பினார், நாங்கள் அதற்கு சாட்சிகளாயிருக்கிறோம்.”
214. வ்வூயு, என்னே ஒரு பிரசங்கியார்!.. அவனால் தன்னுடைய சொந்த பெயரையும் கூட கையெழுத்திட முடியாது, ஆனால் அவன் தேவனை அறிந்திருந்தான். அவர்கள், “அவன் இயேசுவுடனே கூட இருந்தவரென்றும், அவனுக்கு சம்பவித்திருந்ததையும் அவர்கள் அறிந்து கொண்டார்கள். நிச்சயமாகவே, அது ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடாய் உள்ளது. ஓ, என்னே. இப்பொழுது அங்குதான் காரியமே உள்ளது.
215. காயீன் அந்த மாம்சபிரகாரமான நிலைமையில் இருந்தான், அந்த மாம்சபிரகாரமான சபையும் இன்றைக்கு அதே நிலையில்தான் உள்ளது. ஆவிக்குரிய சபையோ இன்னமும் அக்கினிஸ்தம்பத்தையும், இன்னும் அடையாளங்களையும், அற்புதங்களையும், இன்னமும் மாறாத கிறிஸ்துவையும் உடையதாயிருக்கிறது: அது ஏதேன் தோட்டத்திலிருந்து ஆட்டுக்குட்டியின் இரண்டாம் வருகை வரையில் எல்லாவிதத்திலுமே மரிக்கும் ஆட்டுக் குட்டியையே ரூபகாரப்படுத்துகிறது. அவர் முற்றிலும் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
216. அந்த காயீனின் வம்ச வரிசையில், பக்தியான, மெருகேற்றப்பட்ட, மேதைகள் இருந்தனர், சரியாக அந்தவிதமாகவே இருந்து வந்தனர். அதேவிதமாகவே, ஒவ்வொரு நாளும் அதேவிதமாகவே இருந்தனர். காயீன் ஆபேலுக்கு செய்தது போல குற்றங்காண்போர்களும், துன்பப்படுத்துவோர்களுமாய் இருந்தனர். எனவே அவர்கள் இன்றைக்கு அவ்வண்ணமாக இருக்கின்றனர், அவ்வாறே இருந்து வருகின்றனர், எப்போதும் அவ்விதமாகவே இருப்பார்கள்; மாம்சபிரகாரமானவர்கள், அவிசுவாசிகள். அது உண்மை.
217. இப்பொழுது ஆதியாகமம் 3:8, நான் 20-ம் வசனத்தையுங்கூட இங்கே வாசிக்கிறேன், நான் சற்று முன்பு அதை பார்த்துக்கொண்டிருந்தேன்:
ஆதாம். ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக் கெல்லாம் தாயானாவள். (பாருங்கள், அது இந்த வஞ்சித்தல் நடந்துவிட்டப் பிறகு)
218. காயீன். “இப்பொழுது பொறுங்கள்!” நீங்களோ, “எப்படி ஒரு பாம்பினால், ஒரு சர்ப்பத்தினால் அவ்வாறு செய்ய முடிந்திருக்கும்?” என்று கேட்கலாம்.
219. ஆனால், சகோதரனே, இங்கே கவனியுங்கள், அது ஒரு சர்ப்பமாயிருந்தது என்று வேதம் கூறவில்லை; வேதம், “அது சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் மிகவும் தந்திரமுள்ளதாயிருந்தது” என்று உரைத்துள்ளது. அது ஒரு ஊர்வனவாயிருக்கவில்லை, அது ஒரு மிருகமாயிருந்தது. அது... அங்கே... அவ்வாறுதான் இருந்தது.
220. நீங்கள் விரும்பினால், நமக்கிடையே ஒரு சிறு அடையாளத்தைப் போல நான் இதை உங்களுக்குக் கூறட்டும். அங்குதான் விஞ்ஞானம் குழப்பமடைந்துள்ளது. ஒரு மனிதனுக்கு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது ஒரு மனிதக் குரங்கு என்றே அவர்களால் கண்டறிய முடிந்துள்ளது. எத்தனை பேர் அதை அறிந்துள்ளீர்கள்? ஆனால் அங்கே ஒரு காரியம் இடையில் உண்டு. ஆயினும் அவர்களால் மனித எலும்புகளை மனித குரங்கின் எலும்புகளோடு சரிவர இணைத்துப் பார்த்து கூற முடியவில்லை, அதே சமயத்தில் அது மிகவும் நெருக்கமான ஒன்றாக உள்ளது. அவர்கள் அதை ஒரு தவளைக்குஞ்சிலிருந்து ஒப்பிட கொண்டு வரலாம், அவர்கள் அதை ஒரு தலைப்பரட்டையிலிருந்து ஒப்பிட கொண்டு வரலாம். அவர்கள் அதை ஒப்பிட ஒரு கரடியண்டைக் கொண்டு வரலாம். நீங்கள் ஒரு கரடியை எடுத்து, அதனுடைய தோலை உரித்துவிட்டால், அது ஒரு சிறிய ஸ்திரீயை போன்றேயிருக்கும். அதேவிதமாகவே இருக்கும். அதை தோலுரித்து, அங்கே நிற்கவைத்தால் ஸ்திரீயைப் போன்றே... ஸ்திரீ நிற்பது போன்றேயிருக்கும். அவளும் ஒரு கரடியைப் போலவே இருக்கிறாள். கரடியினுடைய பாதமும், கரமும் மனித இனத்தைப் போன்றே உள்ளது. ஆனால் ஒரு மனித குரங்கோ அதைப் பார்க்கிலும் நெருக்கமானதாய் இருக்கிறது. அது கிட்டத்தட்ட மனிதனைப் போன்றிருந்தாலும், அவர்களால் அதைக்கண்டறிய முடியவில்லை.
221. நீங்கள் அதை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், இங்கே ஒரு சிறு இரகசியம் உள்ளது. அது எங்கே உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? அது அவர்களிடத்திலிருந்து மறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேண்டுமானால் எல்லா எலும்புகளையுமே தோண்டிப் பார்க்கலாம். அவர்கள் தோண்டிப் பார்க்கலாம். சிற்பிகள் தோண்டிப் பார்க்கலாம், விஞ்ஞானம் மற்றும் காலக்கணிப் பாய்வாளர் அணு அளவைகளினால் கால அளவை கணக்கிட்டாலும், அவர்கள் அதை ஒரு போதும் புரிந்து கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், சர்ப்பமானது பூமியின் மேலிருந்த சகலத்தைப் பார்க்கிலும் மேலானதாய், ஒரு மனிதனைப் போன்றிருந்தது, தேவன் அதை சபித்து, அது தன்னுடைய வயிற்றிலே ஊர்ந்து போகும்படிச் செய்துவிட்டார், எனவே அது ஒரு மனிதனைப் போன்ற சாயலேயில்லாமல் ஒரு பாம்பாக மாறியிருக்கிறது. இப்பொழுது அப்படியே உங்களுடைய தலையை சொரிந்து கொள்ளுங்கள், விஞ்ஞானிகளான அவர்கள் அதனை சற்று ஆய்ந்து பார்க்கட்டும்.
222. ஆனால் வேதமோ, “சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் அது தந்திரமுள்ளதாயிருந்தது” என்று கூறுகிறது. அது உண்மை. அது மனிதனுக்கும் குரங்கிற்குமிடையே இருந்த இணைப்பாயிருந்தது, தேவனோ அதை சபித்து, அது செய்திருந்த காரியத்தின் நிமித்தமாக தன்னுடைய வயிற்றிலே ஊர்ந்து செல்லும்படி செய்துவிட்டார். அது இந்த ஸ்திரீயை வஞ்சித்தது, அவள் தன்னுடைய முதல் குமாரனைப் பெற்றெடுத்தாள், அதுவே காயீனாயிருந்தது, சுபாவப்படி சர்ப்பத்தினுடைய சொந்த தூண்டுதலாயிருந்தான், பிசாசு சர்பத்திற்குள் நுழைய, அது அதனைச் செய்தது.
223. அப்பொழுது அவள் கர்ப்பந்தரித்து, பிரசவித்தாள், அவள் வஞ்சிக்கப்பட்டப் பிறகு அவள் மீண்டும் கர்பந்தரித்தாள். இப்பொழுது கவனியுங்கள், அவள் வஞ்சிக்கப்பட்டாள், அவள் ஏறக்குறைய.. அவள் தவறு செய்துவிட்டாள். ஆனால் அவள் தன்னுடைய கணவனால் கர்ப்பவதியானபோது, அவள் சரியாக முறைப்படியானவளாக இருந்தாள், ஏனென்றால் அதற்குப்பின் அநேக, அநேக முறைகள், அநேக மாதங்கள், அநேக முறைகள், அநேக மாதங்கள், அநேக நாட்கள் அவள் ஆதாமோடு இருந்திருப்பாள். உங்களால் அதைக் கூற முடியாது, நமக்குத் தெரியாது, ஆனால் அவள் ஆதாமினுடையதையும் பெற்றெடுத்தாள்.
224. யாரோ ஒருவர் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார், அதாவது, “நல்லது, குமாரனை.. அவன் கூறி அவள்... காயீன் பிறந்தபோது, அவள், 'கர்த்தரிடத்திலிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன்” என்றாள். முற்றிலுமாக, நிச்சயமாகவே, அது அவ்வாறே இருக்க வேண்டியதாயிருந்தது. அது இயற்கையின் விதியாயிருந்தது. இன்றைக்கும் நீங்கள் சரியாக அந்த விதமாகவே இருக்கிறீர்கள். நீங்கள் பிறக்கும்போது, தேவன் அப்படியே இறங்கி வந்து உங்களை உருவாக்குகிறதில்லை. நீங்கள் உங்களுடைய தாய் தந்தையரின் கர்ப்பப்பிறப்பாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு... அங்கே ஒரு.. உங்களுடைய பிள்ளைகள் உங்களுடைய கர்ப்பப் பிறப்பாயிருப்பார்கள். அது எல்லா நேரத்திலுமே பிரதி உற்பத்தியாய் உள்ளது, மரங்களின் விதைகள் மற்றுமுள்ள அந்தவிதமான காரியங்களைப் போலவேயாகும்; ஆனால் மூல காரியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும். எனவே அது இதனை விளக்குகிறது என்று நான் நம்புகிறேன்.
225. நமக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது? இனிமேல் நேரமேயில்லை. இந்த நல்ல அடுத்த ஒரு கேள்விக்கு செவி கொடுங்கள். அதாவது நாம் ஞாயிறு அதைப் பார்க்கப் போகிறோம்: “எல்லோரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்...'' (நாம் அதை அறிந்து கொள்ள விரும்புகிறோம்) “... கிறிஸ்து.” அந்த நேரத்திலே... இப்பொழுது, நான் அதன் பேரிலான சில வேதவாக்கியங்களை, நல்ல வேதவாக்கியங்களை எடுத்து வைத்திருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன் (சகோதரன் பிரன்ஹாம் இதற்கு பாகம் இரண்டில், பாரா 361, 60வது கேள்வியில் பதிலளிக்கிறார் - ஆசி.)
226. அதைப் போன்றே இதோ ஒரு நல்ல கேள்வி உள்ளது. இதற்கு பதிலளிக்கும்படியாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் நீங்கள் என்னை பொறுத்துக் கொள்வீர்களா? அதற்கு அதுவே பதிலளிக்கக் கூடும்.