நீர், “துன்மார்கர் நித்தியமாய் எரியமாட்டார்கள்”... என்று
கூறும்போது... (நல்லது, நான் இப்பொழுது யேகோவா சாட்சிக்காரர் அதன் பேரில் கூறினதை கூறினேன், நான் கூறினேனல்லவா?)... துன்மார்க்கர் நித்தியமாக எரியமாட்டார்கள் என்று நீங்கள் கூறும்போது, நீர் அது பாதாளத்தில் அல்லது அக்கினிக் கடலில் என்று பொருட்படுத்திக் கூறுகிறீரா? வெளிப்படுத்தின விசேஷம் அதைக் கூறுகிறது என்பதை நான் அறிவேன் (அது 20-வது அதிகாரம்) அதாவது நரகம் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. அவர்கள் நித்தியமாக எரிந்து போகவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் என்னவாகிறார்கள்?
227. நான், அதைக் குறித்துக் கூறியிருக்கிறது போல், சகோதரனே அல்லது சகோதரியே; அது யாராயிருந்தாலும் சரி; அவர்கள் அழிந்து போவார்கள், அவர்களுக்கு இனிமேல் ஒன்றுமே இருக்காது. அவர்களுக்கு ஒரு துவக்கம் இருந்தது, அங்கே அவர்களுக்கு முடிவு இருக்கும். அவர்கள் இனிமேல் ஒன்றுமேயில்லாமற் போய்விடுவார்கள். எப்படி அவர்கள் எவ்வளவுகாலம் எரிவார்கள், அதைக் கூற முடியாது. ஆனால், பாருங்கள், அங்கே...
228. நீங்கள் உங்களுடைய சிந்தையில் இதை புரிய வைத்துக் கொள்ளக் கூடுமானால் நலமாயிருக்கும், பாருங்கள், அது மிகவும் எளிமையானது. ஒரே மாதிரியான நித்திய ஜீவன்தான் உண்டு, அது தேவனிடத்திலிருந்து தாமே வருகிறது. தேவன் மாத்திரமே நித்திய ஜீவனாயிருக்கிறார். நீங்கள் இங்கே கிரேக்க வேதாகம் அகராதியில் எடுத்துப் பார்த்தால், ஸோயீ என்ற கிரேக்க வார்த்தை உள்ளதைப் பார்க்கலாம். ஸோயீ என்பது “நித்திய ஜீவனாய்” உள்ளது. நித்திய ஜீவன் என்பது “தேவனாய்” இருக்கிறது. இயேசு, “நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறேன்” என்றார், நீங்கள் இங்கே கிரேக்க வேதாகம அகராதியில் நோக்கிப் பார்த்தால், அதில், “ஸோயீ” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரே நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு. வேதாகமத்தில் எந்த இடத்திலும் நித்திய நரகம் இருக்கும் என்று கூறுகிற ஒரு இடமே இல்லை, அவர்கள், “சதாகாலம்” எரிவார்கள் என்றே வேதம் கூறியுள்ளது.
229. இப்பொழுது, “சதாக்காலம்” என்ற வார்த்தைக்கு சென்று பார்த்தால், அதற்கு எயர்ன் எயர்ன் என்று உள்ளதைப் பாருங்கள். நீங்கள் இங்கே வேதாகமத்தில் கவனித்தீர்களா? எத்தனை பேர், “எயர்ன், எயர்ன்...” என்று அதில் கூறப்பட்டிருப்பதை எப்போதாவது கேட்டிருக்கிறீர்கள்? எத்தனைபேர் எயர்ன் என்பது “ஒரு குறிப்பிட்ட கால அளவு” என்பதை அறிவீர்கள்? ஏன், நிச்சயமாக, எயர்ன் என்பது “ஒரு குறிப்பிட்ட கால அளவு” என்பதை எவருமே அறிவர்.
230. “அவர்கள் எயர்ன் என்ற அர்த்தங்கொண்ட குறிப்பிட்ட காலம் எரிவார்கள்.” “அக்கினிக் கடலுக்குள் தள்ளப்பட்டு, எயர்ன் என்ற அர்த்தங்கொண்ட குறிப்பிட்டக் காலம் எரிந்து போவார்கள்.” எயர்ன் என்பதன் பொருள் “கால அளவுகள்” என்பதாகும். அவர்கள் கோடான கோடி ஆண்டுகளாக தண்டனையில் எரியலாம், ஆனால் முடிவாக, அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும், ஒன்று சேர்ந்து அழிந்து போகும்படியாக, பாருங்கள், ஏனென்றால் பரிபூரணமில்லாதிருக்கிற ஒவ்வொரு காரியமும் பரிபூரணத்திலிருந்து தாறுமாறாக்கப்பட்டதாயுள்ளது; அதற்கு ஒரு துவக்கம் இருந்தது, எனவே அதற்கு முடிவு இருக்க வேண்டும்.
231. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ள நாம், ஸோயீயை, “தேவனுடைய சொந்த ஜீவனை” நமக்குள்ளாகப் பெற்றுள்ளோம், நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறோம். சதாகாலங்களிலுமுள்ள ஜீவனை உடையவர்களாய் அல்ல, பாவியோ சதாக்காலங்களிலுமுள்ள ஜீவனை உடையவனாயிருக்கிறான், ஆனால் நாம் “நித்திய 'ஜீவனை “ உடையவர்களாயிருக்கிறோம்.
232. அண்மையில் சகோதரன் காக்ஸ் அவர்கள், நாங்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது, நாங்கள் புறப்படும் முன். அங்கே கற்கள் இருந்தன, அப்பொழுது அவர் ஆயிரக்கணக்கான ஆண்டிற்கு முன் வாழ்ந்த பண்டைய மிருகத்தின் புதைபடிவக் கல்லை எடுத்து “சகோதரன் பிரன்ஹாம், அது எவ்வளவு காலத்திற்கு முந்தினதாயிருக்குமா?” என்று அவர் கேட்டார்.
233. அப்பொழுது நான், “ஓ, காலவரிசைப்படி, அது பத்தாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கலாம் என்று நீங்கள் கூறலாம். அது ஏதோ ஒரு விதமான ஒரு காலத்தில் வாழ்ந்த பண்டைய சமுத்திர பெரிய கோர உருவங்கொண்ட பிராணியாய், ஒரு சமுத்திர விலங்காய், அநேக ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாயிருக்கலாம்” என்றேன்.
234. அப்பொழுது அவர், “அந்த பிராணியின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மானிட வாழ்க்கை எவ்வளவு குறைவுள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள்” என்றார்.
235. அதற்கு நான், “ஓ, ஆனால், சகோதரனே, அந்த காரியத்திற்கு முடிவு உண்டு, ஆனால் கிறிஸ்துவுக்குள் நமக்கு உண்டாயிருக்கிற ஜீவனுக்கோ முடிவு இல்லை. அது இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகள் வாழலாம், ஆனால் அது ஒருபோதும் நித்திய ஜீவனை உடையதாயிருக்காது, ஏனென்றால் நித்திய ஜீவன் தேவனிடத்திலிருந்து மாத்திரமே உண்டாகிறது” என்றேன்.
236. நித்தியம், “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, நீங்கள் ஒரு விசுவாசியாயிருக்கிறபடியால் நீங்கள் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கிறீர்கள். ஒரு அவிசுவாசி ஒரு குறிப்பிட்ட கால ஜீவனையே உடையவனாய் இருக்கிறான். நித்தியமான... ஒரு விசுவாசி நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான், அது நித்தியமாயிருக்கிறபடியால் அழிந்து போக முடியாது.
237. ஆனால் ஒரு விசுவாசி, அவன் செல்லுகையில் ஒரு அவிசுவாசி உலகத்தினூடாகச் செல்வான், அவனுக்கு கவலைகளும், துயரங்களும் உண்டு; ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அவன் அனுபவிப்பதாகக் கூறிக் கொள்கிறான், “ஹப்பீ, ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்கிறான்.” ஸ்திரீகள், மதுபானம், மகிழ்ச்சியான பெரிய நேரம், அவன் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டேயிருப்பதாக அவன் எண்ணுகிறான். அவன் மரித்து, அவன் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலுக்குள் செல்வான், அங்கே சதாகாலமும் எரிந்து கொண்டேயிருக்கப் போகிறான், ஒருக்கால் அவனுடைய ஆத்துமா நூறு கோடி ஆண்டுகள் அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலில் வாதிக்கப்படலாம்.
238. நான்... நீங்களோ, “அது வழக்கமான காணப்படுகிற கந்தக் கல்லைப் போல இருக்குமா?” என்று கேட்கலாம். அது இதைப் பார்க்கிலும் கோடிக் கணக்கான மடங்கு மோசமானதாயிருக்கும் என்று நான் நினைக்கிறேன். உங்களால் அதை நெருப்பின் மூலம், இப்பொழுதுள்ள அக்கினியைக் கொண்டு விவரித்துக்கூற முடியாது என்று நான் நினைக்கிறேன். “அக்கினியினால்” என்று அது குறிப்பிடப்பட்டுள்ளதற்கான ஒரே காரணத்தினால், அது நமக்கிருக்கின்ற எல்லாவற்றையும் முற்றிலும் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறது என்பதாகும். அது முற்றிலும் பட்சித்து, ஒவ்வொன்றையும் அழித்து விடுகிறதையே அந்த அக்கினி செய்கிறது. ஆகையால் அது அவ்வண்ணமாய் அங்கு இருக்கும், ஆனால் ஒரு விதமாக தண்டிக்கப்பட்ட வேண்டிய ஒரு ஆத்துமா உங்களுக்கு உண்டு.
239. இப்பொழுது, நீங்கள் அக்கினி என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும், ஏனென்றால் பரிசுத்த ஆவி என்பதும், “பரிசுத்த ஆவியும் அக்கினியும்” என்றே உபயோகப்படுத்தப்படுகிறது; ஏனென்றால் பரிசுத்த ஆவி பாவத்தை எரித்துப் போடுகிறது, பாருங்கள், சுத்தமாக்குகிறது.
240 ஆனால் அக்கினி, அது நரகத்திலிருந்து வருகிறது, அது ஒரு, “அக்கினிக் கடல்” என்று கூறப்பட்டுள்ளது. அது என்னவென்றால், அது ஒரு தண்டனையோடு வாதிக்கப்படுதலாயுள்ளது. ஐஸ்வரியவான் பாதாளத்திலிருந்து தன்னுடைய கண்களை ஏறெடுத்தபோது, “லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும், ஏனென்றால் இந்த அக்கினி ஜீவாலை என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது” என்றான். ஒரு எரிகின்ற நரகம் இல்லையென்று எண்ணிக் கொள்ளாதீர்கள், ஒரு உண்மையான நரகம் உண்டு. உண்மையாகவே ஒரு பிசாசு உண்டு என்றால், ஒரு உண்மையான நரகம் உண்டு.
241. ஆனால், நீங்கள் பாருங்கள், தாறுமாறாக்கப்பட்ட ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு முடிவு உண்டு, ஏனென்றால் அது முடிவிலே அந்த தூய்மைக்கும், தேவனுடைய பரிசுத்தத்திற்கும் திரும்பி வர வேண்டும். தேவன் நித்தியமாயிருக்கிறார்; நாம் நித்திய ஜீவனை உடையவர்களாயிருந்தால், தேவன் நமக்குள்ளாக இருக்கிறார், தேவன் மரிக்க முடியாதது போல் நாமும் ஒருபோதும் மரிக்க முடியாது. அங்குதான் காரியமே உள்ளது.
242. இப்பொழுது அந்தப் மூல வாக்கியமே அதை உண்மையாகவே விளக்குகிறது, பாருங்கள், அதை சரியாகக் கூறுகிறது. இப்பொழுது, நாம் பார்ப்போம். நான் ஒரு... எனக்குத் தெரியாது.. ஆம்:
“அவர்கள் என்னவாக – என்னவாக ஆவார்கள்?”
243. அவர்கள் அழிந்து போவார்கள், இனிமேல் அவர்கள் ஒன்றுமேயில்லாதவர்களாவார்கள். ஆத்துமா போய்விடுகிறது, ஆவி போய்விடுகிறது, ஜீவன் போய்விடுகிறது, சரீரம் போய்விடுகிறது, சிந்தனைகள் போய்விடுகிறது, ஞாபக சக்தி போய்விடுகிறது.
244. இனி ஒருபோதும் பொல்லாத சிந்தனைகள் கூட இருக்காது அல்லது ஒருபோதும் பொல்லாங்கு மகிமையில் சம்பவிக்காது. அது உண்மை. அது.. இங்கே இந்த பாகத்தில் இருக்கும் அந்த ஜனங்களை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
245. வேதம், “துன்மார்க்கருடைய யோசனைகளும்கூட அழிந்துபோம்” என்று கூறவில்லையா? அவனுடைய சிந்தனைகள் அழிந்துபோம்.
246. இதோ ஒரு மனிதன் இங்கே இருப்பான் என்றும், இதோ தேவனாகிய மகத்தான பரிசுத்தர் இங்கே இருக்கிறார் என்றும், அங்கே அப்பால் உள்ள ஒரு குழியில், அதற்குள் ஆத்துமாக்கள் எரிந்து கொண்டிருக்கும் என்று அறியீர்களா? ஏன், அது பரலோகமாயிருக்க முடியாது. அந்த எண்ணங்கள், அந்த ஞாபகசக்தி, தாறுமாறாக்கப்பட்ட ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு பொல்லாத சிந்தனையும், ஒவ்வொரு காரியமும் அழிந்து விடும், அதில் உள்ள பொல்லாத ஒவ்வொரு காரியமும் அழிந்துபோம். நாம் வேறேதுமில்லாமல் ஸோயீயோடு, தேவனுடைய ஜீவனோடு சுத்தமாய் இருப்போம்; காலங்கள் உருண்டோடிக் கொண்டேயிருக்க நித்தியத்தில் இருப்போம்; அதற்கு ஒருபோதும் முடிவேயில்லாமல் நித்தியமாயிருக்கும்!
247. “துன்மார்க்கர் குறிப்பிட்ட கால தண்டனைக்குள்ளாகச் சென்றனர், ஆனால் நீதிமான்களோ நித்திய ஜீவனுக்குள்ளாகச் சென்றனர்.” உங்களுக்கு இது புரிகிறதா? குறிப்பிட்ட கால தண்டனை, நித்திய ஜீவன், என்னே ஒரு வித்தியாசம்.
248. இப்பொழுது, பாருங்கள், அதுவல்ல. இப்பொழுது, எனக்குத் தெரியும், உங்களுக்கு, என்னுடைய அருமையான சிறு பிள்ளைகளாகிய உங்களுக்கு, எனக்கு எனக்கு எல்லாமே தெரிந்தது போன்று என்னைக் காண்பிக்க முயற்சிக்கவில்லை. நான் அதைச் செய்தால்...
249. இப்பொழுது, நான் இன்னும் மூன்று அல்லது நான்கிற்கு மேற்பட்ட நல்ல கேள்விகளை வைத்துள்ளேன். கர்த்தருக்குச் சித்தமானால், நான் அவைகளை ஞாயிறு காலையில் எடுக்க உள்ளேன்.
250. இப்பொழுது, கவனியுங்கள். எழும்புகிற இந்த கேள்விகளைப் பாருங்கள். நான் ஒரு வயதான பிரசங்கியார். நான் நான் - நான் இருபத்தியாறு ஆண்டுகளாக ஊழியத்தில் இருக்கிறேன். நான் நான் இதற்காக, என்னால் இதை கூற முடியும் என்பதற்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன், என்னுடைய... என்னுடைய ஜீவியத்தில் எந்த காரியமும் எனக்கு முதலில் வெளிப்படுத்தப்படாமல், அதை அறிமுகப்படுத்த ஒருபோதும், நான் ஒருபோதும் முயன்றதேயில்லை. அந்த கர்த்தருடைய தூதனுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்... எனக்கு கல்வியறிவு இல்லாதிருந்தது, எந்த திறமையும் இல்லாதிருந்தது. இந்த தூதன் இறங்கி வந்தார், அவர் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டு எனக்கு ஒத்தாசையாக இருந்து வருகிறார். ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் முற்றிலும் பொருந்தாத எந்த ஒரு காரியத்தையும் அவர் என்னிடத்தில் ஒரு போதும் கூறினதேயில்லை. அதினாலே.. அவர், “நீ நீ ஒரு தெய்வீக சுகமளித்தலின் வரத்தைக் கொண்டு செல்வாய்” என்று கூறினபோது, நான் உடனே அதை எழுதினேன். அவர் அதைக் கூறின விதமாகவே நான் அதை எழுதி வைத்தேன்.
251. மூன்று வருடத்திற்குள் மேலாளர் அதை என்னுடைய - என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்து, “சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் அதைக் கவனித்தீர்களா? அவர் உங்களிடத்தில் 'ஒரு வரம்' என்று கூறினபடியே அது மிகப் பரிபூரணமாய் உள்ளது” என்றார்.
252. பாருங்கள், “வரம்” என்று ஒருபோதும் கூறவில்லை. வேதாகமத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும்... ஒவ்வொரு வரமும், “வரமாயுள்ளது. ஆனால் தெய்வீக சுகமளித்தல், அது, “ஒரு வரமாய்” உள்ளது. அது “சுகமளிக்கும் வரங்களாய்” உள்ளன. நீங்கள் எல்லாவிதமான சுகமளிக்கும் வரங்களையும் வித்தியாசமான விதங்களில் பெற்றிருக்கக் கூடும். ஆனால் மற்ற ஒவ்வொன்றும், “வரமாய்” உள்ளது. “அந்த” தீர்க்கதரிசன வரம், “அந்த” இதைக் குறித்த வரம். ஆனால் தெய்வீக சுகமளித்தல், “வரங்கள்” என்று பன்மைகளில் உள்ளன. நான் அதை ஒருபோதும் கவனித்தேயில்லை, அதாவது பரிசுத்த ஆவியானவர் மிகவும் பரிபூரணமாயிருக்கிறார். ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக!
253. அதே பரிசுத்த ஆவியானவர் நூற்றுக்கணக்கான மனிதரைக் கொண்டு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தனித்தனியாக வேதாகமத்தை எழுதினார் என்று நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா. அவர்களில் ஒருவரும் மற்றவர்க்கு வேறுபட்டிருக்கவில்லை, அவர்கள் ஒவ்வொருவரும் வேறுபாடின்றி முழுமையாய் இருந்தனர்; மேலும் அவர்களில் ஒருவரும் மற்றவரைக் குறித்து ஒருபோதும் கேள்விப்பட்டதும் கூட இல்லை.
254. பவுல் புறப்பட்டுச் சென்று, அரேபியாவில் இருந்தான், பதினான்கு ஆண்டுகளாக எருசலேமிற்கு வருகைத் தரவில்லை, ஆனால் எருசலேமில் இருந்தான். ஒருபோதும் எருசலேமிற்கு புறப்பட்டுச் செல்லவில்லை. ஆனால் அரேபியாவில் இருந்து விட்டு, பின்னர் பிரசங்கிக்கக் துவங்கினபோதும், பேதுருவையும், மற்றவர்களையும் பதினான்கு ஆண்டுகளாகப் பார்க்கவேயில்லை. அவர்கள் ஒன்றாக சேர்ந்தபோது, அதாவது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானம், தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமை போன்ற ஒரு காரியத்தையே அவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்ததைக் கண்டனர்.