நீர் விசுவாசிக்கிறீரா - யூதர்களுடைய -பாலஸ்தினாவிற்கு யூதர்களுடைய திரும்ப வருதலானது, வேதாகம தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலா? நீர் பாலஸ்தீனாவிற்குப் போகவிருப்பதாக நாங்கள் கேள்விப் பட்டோம், அது உண்மையா?
220. ஆம், ஆம், ஐயா. நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லட்டும். மிக மகத்தானவைகளில் ஒன்று... வருடத்தின் எந்த நேரம் என்று நீங்கள் காணவிரும்பினால், நீங்கள் நாட்காட்டியைப் பார்க்கின்றீர்கள். இரவின் எந்த நேரம் என்று நீங்கள் காணவிரும்பினால், நீங்கள் கடிகாரத்தைக் காண்கிறீர்கள். நீங்கள் எந்த நாளில் வாழுகிறீர்கள் என்பதைக் காணவிரும்பினால் யூதர் எங்கே இருக்கின்றார்களோ அங்கே பாருங்கள். அதுதான் தேவனுடைய மணிக்காட்டி ஆகும்.
221. பாருங்கள்! அதே இரவில், அதே நாளில் கர்த்தருடைய தூதன் 1946 ஆம் வருடம், மே மாதம் 7ஆம் தேதி அன்று கிரீன் மில், இன்டியானாவில் என்னை சந்தித்தார், அந்த அதே நாளில் யூதர்களுக்கு சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் கழித்து முதன் முதலாக ஒரு ஸ்தாபிக்கப்பட்ட தேசமானது. அல்லேலூயா!
222. இன்றிரவு, உலகத்திலேயே மிகவும் பழமையான கொடியாகிய, ஆறு முனை கொண்ட தாவீதின் நட்சத்திரக் கொடி, பாபிலோன் கொண்டு போகப்பட்டதிலிருந்து இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் கழித்து, முதல் முறையாக இப்பொழுது எருசலேம் நகரத்தின் மீது பறக்கின்றது. இயேசு, “அத்திமரம் துளிர்விடுவதை நீங்கள் காணும்போது...” என்றார். இதோ இது இங்குள்ளது. அவர்! அங்கே அவர் “ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள், 'கோடைகாலம்' சமீபமாயிற்று என்று கூறுகிறீர்கள். இதை நீங்கள் காணும்போது அந்த நேரமானது வாசல் அருகே இருக்கிறது என்பதை அறிவீர்கள்” என்று கூறினார்.
223. இயேசு, தானியேலின் அருவருப்பைக் குறித்து கூறின பொழுதும், இன்னும் மற்றவையையும் நீங்கள் அறிவீர்கள். “வரப்போகிற அந்த மகா பிரபு - அவர் ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்”, என்பது அந்த மூன்றரை வருடங்களாகும். இயேசு சரியாக அதைத்தான் பிரசங்கித்தார். அவர் யூதரிடம் தனியராகவே வந்தார் - அதன் பின்பு அவர் ஜனங்களுக்காக சங்கரிக்கப்படுவார்- ஜனங்களுக்காக பலியாவார். “பாழாக்கும் அருவருப்பை” - முகமதியர் ஓமர் மசூதியை அங்கு கட்டினார்கள். “அவர்கள் எருசலேமின் மதில்களை மிதிப்பார்கள்” (வ்யூ! எதுவரையிலும்?) 'புறஜாதிகளின் யுகம் நிறைவேறும் வரையிலும்”. அப்பொழுது அவர் யூதரிடம் திரும்ப வருவார். அங்கேதான் ஆர்மகெதோன் யுத்தமானது... தேவன் புறஜாதிகளின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை அவருடைய மணவாட்டியை அழைத்தார். கவனியுங்கள். ஆம், ஐயா. அங்கு இன்னும் நிறைவேற வேண்டிய ஒரு லட்சத்து நாற்பத்தி நான்காயிரம் பேர் (1,44,000) மீட்கப்பட்ட யூதராவார்கள். இவைகள் யாவும்...
224. அதன்பின் சபையானது மேலே எடுக்கப்பட்டபிறகு, வெளிப்படுத்தல் 11ல் மோசேயும், எலியாவும் தோன்றி இயேசு கிறிஸ்துவை அவர்களுக்கு பிரசங்கிக்கின்றனர். சபை மேலே எடுக்கப்படுவதற்கென எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது, பரிசுத்த ஆவி புறஜாதியாரிடமிருந்து எடுக்கப்படுகிறது. ஆகவே மீதம் உள்ள யூதர்களுக்கு மூன்றரை வருடம் பிரசங்கம் செய்யப்படுகிறது, ஏனெனில் அவர் “உன் ஜனத்தின் மேல், எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. அவைகளின் நடுவில் மேசியா சங்கரிக்கப்படுவார்,” என்றான். அவர் எடுக்கும்போது, புறஜாதிகளுக்கு ஒரு இடம் அளிக்கப்படுகிறது, பிறகு அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிக்கப்பட இன்னும் மூன்றரை வருடங்கள் உள்ளன.
225. நிச்சயமாக, யூதர்களும் வருகிறார்கள். சகோதரனே, நான் நம்புகிறேன், இந்நேரத்தில் நாம் பாலஸ்தீனாவிற்கு செல்லும்போது, ஓ, ஜெபியுங்கள்! அவர்கள் அந்த வேதாகமத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
226. இன்னும் ஒரே காரியம் தான், பிறகு ஒரு சிறிய கேள்வி இங்கு என்னிடம் உள்ளது, பிறகு எல்லாம் முடிவுறுகிறது. இங்கிருப்பது ஒரு ஜெபம் என்று நான் நினைக்கிறேன்.
227. இதைப் பாருங்கள்! டாக்டர் ரீட்ஹெட் கூறினார், அங்கு நின்று கொண்டு திறமை வாய்ந்த ஒரு முகமதியனுடன் பேசும்போது...
228. இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். ஒரு முகமதியன், அங்கே ஆப்பிரிக்காவிலே அற்புதங்களையும் அடையாளங்களையும் அவர்கள் கண்டனர், அவர்களில் சுமார் இருபதாயிரம் பேரை கர்த்தராகிய இயேசுவிடம் வரச் செய்தேன். சுமார் இருபதாயிரம் பேர்கள் இருந்தனர், மொத் தமாக முப்பதாயிரம் பேர், பத்தாயிரம் பேர் வந்தனர் என்று நான் யூகிக்கிறேன், ஏனெனில் அதிகபட்சமாக முகமதியர்கள்தான் இருந்தனர். அவர்கள் அங்கே நின்றபோது, நான் “இப்பிரதேச மக்களே, உங்கள் கோவிலில் உள்ள தீர்க்கதரிசிகள் யாராவது அம்மனிதனை முழுமையானவனாக ஆக்க முடியுமா? உங்களுடைய விக்கிரகங்களில் ஏதாவதொன்று இம்மனிதனை முழுமையானவனாக ஆக்கமுடியுமா? ஒருவராலும் முடியாது! கோவிலில் உள்ள ஒரு தீர்க்கதரிசியாலும்... எந்த ஆசாரியனாலும் சரி, முடியாது” என்று கூறினேன். மேலும் “எந்த விக்கிரகமும் அதைச் செய்ய முடியாது. என்னாலும் கூட அதைச் செய்ய இயலாது. ஆனால் பரலோகத்தின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உயிரோடெழுப்பினார், இன்றைக்கு அவர் மனிதனி டையே உயிருள்ளவராக இருக்கிறார், இப்பொழுது முழுமையானவனாக ஆக்கப்பட்டு, நீங்கள் காணத்தக்கதாக நின்று கொண்டிருக்கும் இம்மனிதனுக்கு முழு சுகத்தையும் அளித்தவர் அவரே”, என்று கூறினேன். கழுத்தில் சங்கிலியிடப்பட்டு, ஒரு நாயைப் போல கூட்டிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த அவன், ஒரு நிமிட நேரத்தில் நலமுடன் இயல்பாக தன் காலில் நின்று கொண்டிருந்தான்.
229. முந்தின இரவு நாங்கள் அங்கே காரில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, சகோ. ரீட்ஹெட் என்னிடம் “ஓ, என்னே!” என்றார். நான் அதைக் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். சிறந்த கல்வி அறிவு படைத்த இந்த முகமதியனிடம் அவர் 'நல்லது, ஐயா, உங்களுடைய பழைய இறந்துபோன தீர்க்கதரிசி முகமதை ஏன் நீங்கள் விட்டுவிடக்கூடாது?” என்று கேட்டார்.
230. இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். முகமதியர்கள் தேவனில் விசுவாசம் வைத்துள்ளனர். அங்கே ஆப்பிரிக்காவில் அந்த மகத்தான மணி போன்ற ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ரப்பரால் செய்யப்பட்ட ஒரு பெரிய சுத்தியால் அதை அடிப்பார்கள், அது தேசம் முழுவதும் ஒலிக்கும். ஒவ்வொரு முகமதியனும் நிற்பான், பிறகு பூசாரி வெளியே நடந்து சென்று மக்களிடையே ஒரே ஒரு ஜீவிக்கின்ற தேவன் தான் இருக்கிறார். முகமது அவருடைய தீர்க்கதரிசி ஆவார்” என்று கூறுவான்.
231. அவர்கள் இஸ்மவேலின் பிள்ளைகள். பாருங்கள், ஆகார், அவர்கள் ஆகாரிலிருந்து வெளிவந்த ஆபிரகாமின் பிள்ளைகள். பாருங்கள்? அவர்கள் உண்மையான யெகோவா தேவனில் விசுவாசம் கொண்டுள்ளனர், ஆனால் இயேசுவை அவர்கள்... (அது... அவர் நமது மீட்பர், சுயாதீன ஸ்திரீயிலிருந்து புறஜாதிகளுக்கு அனுப்பப்பட்டவர்; பாருங்கள், ஈசாக்கு சாராள்மூலமாக), ஆகவே இப்பொழுது, அவர்கள் ஆகார், இஸ்மவேல் மூலமாக வந்தவர்கள், முகமதியர்கள்.
232. முகமதுவின் கல்லறையை நீங்கள் சென்று காணவேண்டும். அங்குள்ள மகத்தான சமாதி, அது அழகாக இருக்கின்றது. அங்கே குதிரை சேணங்கட்டப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. முகமது ஒரு நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து அந்த குதிரையின் மேல் குதித்து உட்கார்ந்து உலகத்தை வெல்லப் போவதாக வாக்குரைத்திருக்கிறார். ஆகவே ஒவ்வொரு பொழுதும் அவர்கள் வெவ்வேறு குதிரைகளை மாற்றி கொண்டு அங்கே விசுவாசத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். முகமது மரித்தோரிலிருந்து எழுந்திருக்க காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன.
233. அவர்கள் இயேசுவை விசுவாசிக்கின்றனர், அவர் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் கூறுகின்றனர். பழைய எருசலேமின் மதில்களின் மேல் ஒரு மகத்தான, பெரிய பரிசுத்த ஸ்தலம் முகமது வருவதற்காக கட்டப்பட்டுள்ளது, அதற்குக் கீழே ஒரு சிறிய பரிசுத்த ஸ்தலம் கட்டப் பட்டுள்ளது. அது இயேசுவிற்கு. பாருங்கள், அவர்கள் “இயேசு சிலுவையில் அறையப்படவேயில்லை, அதைக்குறித்து குழப்பி விட்டிருக்கின்றனர், அவர் ஒரு குதிரையின் மேல் ஏறிச் சென்றுவிட்டார்” என்று கூறுகின்றனர். பாருங்கள்? இப்பொழுது, அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர்.
234. நீங்கள் இந்தியாவிற்கு செல்வீர்களானால் அதைக் கவனிப்பீர்கள். அங்கே அவர்கள் தங்கள் கண்களுக்கு இடையே ஒரு சிகப்பு புள்ளியை வைத்திருப்பார்கள். என்னே, அவர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு நின்று கொண்டிருப்பார்கள்.
235. டாக்டர் ரீட் ஹெட், அங்கு நின்று கொண்டிருந்த அந்த மனிதனிடம், “இப்பொழுது, ஏன் நீங்கள் அந்த மரித்துப்போன வயதான தீர்க்கதரிசியை புறம்பாக்கிவிட்டு, மரித்தோரிலிருந்து எழுந்த ஜீவிக்கின்ற கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளக் கூடாது?” என்று கேட்டார்கள். இப்பொழுது, அவர் ஒரு படிப்பாளி, வார்த்தைகளை எங்கெங்கு பொருத்த வேண்டும் என்பதை அவர் அறிவார்.
236. அந்த முகமதியன் அவரை நோக்கிப் பார்த்தான், (திறமைசாலி, படித்த மனிதன், இங்கே அமெரிக்காவில் படித்தவர்), அவன் அன்புள்ள ஐயா, என்னுடைய மரித்த தீர்க்கதரிசி எனக்கு செய்ததைக் காட்டிலும் உம்முடைய உயிர்த்தெழுந்த இயேசு எனக்கு என்ன செய்யமுடியும்? என்னுடைய இறந்துபோன தீர்க்கதரிசி எனக்கு மரணத்திற்குப் பிறகு ஜீவன் அளிப்பதாக வாக்குரைத்திருக்கிறார். அதைத்தான் உம்முடைய இயேசுவும் கூறியிருக்கிறார்” என்றான். “நல்லது, அவன் ஏதோ ஒன்றைப் பெற்றிருந்தான். அவன், “இப்பொழுது இருவரும் ஒரு புத்தகத்தை எழுதினார்கள். இயேசு எழுதினதை நீர் விசுவாசிக்கிறீர், நான் முகமது எழுதினதை விசுவாசிக்கிறேன். இருவரும் ஜீவனை வாக்குத்தத்தம் செய்திருக்கின்றனர். என்னுடைய முகமது எனக்கு செய்ததைக் காட்டிலும் உம்முடைய இயேசு எனக்கு என்ன செய்ய இயலும்?” என்றான். நல்லது, அந்த மனிதன், சாதாரண கூற்றுகள், அது உண்மை. அவன், “அன்புள்ள ஐயா, சற்றுப் பொறுங்கள், உங்கள் இயேசு வாக்குத்தத்தம் செய்தது போல என் முகமது எனக்கு செய்யவில்லை. உங்கள் இயேசு வாக்குரைத்திருக்கிறார். அவர்கள் 'அவர் உயிர்த்தெழுந்தார்' என்று கூறுகின்றனர், உலக முடிவு பரியந்தம் உங்களோடு இருக்கப்போகிறார்; அவர் செய்த அதே அற்புதங்கள், அடையாளங்கள் நீங்களும் உலக முடிவு பரியந்தம் செய்யப்போகிறீர்கள். நீங்கள் பிணியாளிகளை சுகமாக்குவீர்கள், மரித்தோரை எழுப்புவீர்கள், குஷ்டரோகிகளைச் சுத்தமாக்குவீர்கள், பிசாசுகளை துரத்துவீர்கள். நான் கிறிஸ்தவ மார்க்கத்தை முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தேன், சரி இப்பொழுது, உங்கள் போதகர்கள் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கட்டும், அப்பொழுது அவர் மரித்தோலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நான் விசுவாசிப்பேன். ஆனால் இதற்கு மாறாக... முகமது இக்காரியங்களை எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்யவில்லை, மரணத்திற்கு பிறகு ஜீவன் என்று மாத்திரமே எங்களுக்கு வாக்குரைத்தார். அந்த ஒரு காரியத்தை நீங்கள் போதித்து மற்றவைகளைக் கடந்து செல்கிறீர்கள். “அந்த முகமதிய மனிதன் முற்றிலும் சரியாகக் கூறினான்.
237. டாக்டர் ரீட் ஹெட் எழுந்து நின்று அழுதார். அவர், “சகோ. பிரன்ஹாம் நான் உங்களைப் பற்றி நினைத்தேன்' என்று கூறினார். அவர் வேகமாக ஓடி இங்கு வந்தார், நான் அவர் மீது என் கரங்களை வைத்தேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவர்மேல் வந்தது. இப்பொழுது அவர் தரிசனங்களையும், மற்றவைகளையும் கூட காண்கிறார். இப்பொழுது அந்த முகமதியன் இவரை சந்திக்கட்டும்! இப்பொழுது இவர் வித்தியாசப்பட்ட நபர்!
238. நான் நம்முடைய இயேசு மரித்தோரிலிருந்து எழுந்து விட்டார், அவர் இன்றைக்கு ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறேன். அவர் அன்றைக்குச் செய்த அதே அற்புதங்களையும் அடையாளங்களையும் இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறார். ஆகவே அடிப்படை வாதிகளாகிய மக்கள் உட்கார்ந்து கொண்டு அந்த விதத்தில் விளக்க முயன்று கொண்டு, வேதத்தின் அடிப்படை, அஸ்திபார பாகங்களை விட்டு விடுகிறீர்கள். அது முற்றிலும் சரி. உயிர்தெழுந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் உன் மூலமாக வேறு பாஷைகளில் பேச முடியும், அவர் உன்மூலமாக தீர்க்கதரிசனம் உரைக்க முடியும், அவர் உன் மூலமாக தரிசனங்களைக் காண்பிக்க முடியும், அவர் உன் மூலமாக அந்நிய பாஷைகளை வியாக்கியானம் செய்ய முடியும். எல்லாம் அவருடைய பாகமாயிருக்கின்றன.
239. ஆகவே இந்த பாகத்தை அவரிலிருந்து எடுத்துக் கொண்டு அந்த பாகத்தை விட்டுவிடுவது, என்னை இரண்டாக வெட்டி என்னுடைய இடுப்பு மற்றும் கால்களை எடுத்துக்கொண்டு, இந்த பாகத்தைப் பெறாமல், என்னைப் பெற்றுக்கொண்டேன் என்று நீ கூறுவது போன்று இருக்கும்.
240. ஒன்று என்னை முழுமையாக பெற்றாக வேண்டும். அந்த காரணத்தால் தான், தேவன் கூறின எல்லாகாரியங்கள் உண்மை என்று விசுவாசிக்கும் முழு சுவிசேஷப் பிரசங்கியாக நான் இருக்கிறேன். ஆமென்! மகிமை! நான் ஒரு பரிசுத்த உருளையனாக இருப்பதாக இப் பொழுது உணருகிறேன். ஆம், ஐயா. நான் அதை விசுவாசிக்கிறேன்!