362. இப்பொழுது இது வேறொன்றிற்கும் இடமில்லாத ஒரு கேள்வியாய் உள்ளது, எனவே நாம் அந்த ஒன்றின் பேரில் நம்முடைய நேரத்தை இன்றிரவும், நாளை இரவும் கூட செலவழிக்கக் கூடும். இது நேரத்தை எடுத்துவிடும். இது இதை எடுத்து முழு வேதாகமத்துடனும் ஒன்றாக இணைப்போம். ஒவ்வொரு வேதவாக்கியமும் வேதத்தில் உள்ள மற்ற ஒவ்வொரு வேதவாக்கியத்தோடும் சரியாக ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்.
363. ஆனால் அதை சுருக்கமாக கூற முயற்சிக்கிறேன், அதை எப்படி கூற வேண்டும் என்று நான் அறிந்த முறையில் தெளிவாகக் கூறுகிறேன்; நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, அப்பொழுது நீங்கள் புதிய பிறப்பை உடையவராயிருக்கிறீர்கள். நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கும்போது, நீங்கள் ஒரு புதிய சிந்தையை, ஒரு புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறீர்கள், ஆனால் அது பரிசுத்த ஆவியின் அபிஷேகமல்ல. புரிகிறதா? நீங்கள் விசுவாசிக்கும்போது, நீங்கள் புதிய பிறப்பை பெற்றுக் கொள்கிறீர்கள், நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறீர்கள். அது தேவன் உங்களுக்கு அளிக்கின்ற வரத்தை ஏற்றுக் கொள்வதனால் இராஜாதிபத்திய கிருபையினூடாக உங்களுக்கு அளிக்கப்படுகிற ஒரு தேவனுடைய வரமாய் உள்ளது. பாருங்கள். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” நித்திய ஜீவனை உடையவராயிருத்தல்; அது புதிய பிறப்பாய் உள்ளது, நீங்கள் மனமாற்றமடைந்துள்ளீர்கள், அதன் பொருள் என்னவெனில் நீங்கள் “மேலான நிலையில் மாற்றப்பட்டிருக்கிறீர்கள்” என்பதாகும். ”
364. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்களை கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாகவைத்து, ஊழியத்திற்கான வரங்களுக்கு கீழ்படுத்துகிறது. அது உங்களை ஒருபோதும் ஒரு கிறிஸ்தவனாக்கவில்லையென்றாலும், அது சரீர வரங்களில் உங்களை பொருத்துகிறது. புரிகிறதா? “இப்பொழுது ஒரே ஆவியினால்” (1 கொரிந்தியர் 12) “நாம் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். இப்பொழுது,” பவுல், வித்தியாசமான வரங்கள் உண்டு, இந்த சரீரத்தில் ஒன்பது வரங்கள் உள்ளன” என்று கூறுகிறான். இந்த சரீரத்தில்... நீங்கள் இந்த வரங்களில் ஒன்றை சுதந்தரித்துக்கொள்ள இந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்க வேண்டும். அவைகள் சரீரத்தினால் உண்டாகின்றன.
365. ஆனால் இப்பொழுது நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வதைப் பொறுத்தமட்டில், ஒரு கிறிஸ்தவராயிருக்க வேண்டும், நீங்கள் விசுவாசிக்கிற அந்த நொடிப் பொழுதிலிருந்தே நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள். இப்பொழுது, அது பாவனை விசுவாசமல்ல, அது உண்மையாகவே கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம்வைத்து, அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதாகும்; நீங்கள் சரியாக அங்கே மீண்டும் பிறக்கும் போது, நித்திய ஜீவனைபெற்றுக் கொள்கிறீர்கள். அப்பொழுது தேவன் உங்களுக்குள்ளாக வருகிறார்.
366. இப்பொழுது கவனியுங்கள், நித்திய ஜீவன்; இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்றார். அப்பொழுதே நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள். அதன்பின்னர் அப்போஸ்தலர் 19ம் அதிகாரத்தில், அந்த ஜனங்களில் சிலரை பவுல் சந்தித்திருந்தான். அவர்கள் அப்பொல்லோ என்னும் பேர் கொண்ட ஒரு மனமாற்றமடைந்திருந்த நியாய சாஸ்திரியை தங்களுக்கு ஒரு பிரசங்கியாக உடையவர்களாயிருந்தனர். அப்பொல்லோ வேதாகமங்களில் வல்லவனுமாயிருந்து, அவன் இயேசுவே கிறிஸ்து என்று வேத வாக்கியங்களைக் கொண்டு நிரூபித்துக் கொண்டிருந்தான். புரிகிறதா?
367. இப்பொழுது கவனியுங்கள். அப்பொல்லோ வார்த்தையினூடாக, வார்த்தையினாலே நிரூபித்துக் கொண்டிருந்தான். “விசுவாசம் கேட்பதனால், வார்த்தையைக் கேட்பதனால் வரும். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” உங்களுக்கு இது புரிகிறதா? அப்பொல்லோ வார்த்தையினால் இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டிருந்தான். அவர்கள் மிகுந்த சந்தோஷத்தை உடையவர்களாய், வார்த்தையை ஏற்றுக் கொண்டிருந்தனர், அதே சமயத்தில் யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை மாத்திரமே அறிந்திருந்தனர்.
368. பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்த போது, அவன் இந்த சீஷர்களைக் கண்டான், அப்பொழுது அவன், “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். புரிகிறதா?
369. இப்பொழுது, நீங்கள் விசுவாசிக்கும்போது, இயேசு, “நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறீர்கள்” என்றார். அதுதான் புதிய பிறப்பு. அதுவே உங்களுடைய மனமாற்றமாய், மாற்றமாய் உள்ளது. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, உங்கள் மூலமாக கிரியை செய்கிற இந்த ஒன்பது ஆவிக்குரிய பிரகாரமான வரங்களுக்கும் கீழ்படியச் செய்கிற தேவனுடைய வல்லமையாய் இருக்கிறது; நீங்கள் இந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படும்போது, பிரசங்கித்தல், சுவிசேஷகர்கள், அப்போஸ்தலர்கள், போதகர்கள், தீர்க்கதரிசிகள் போன்றவை. சரீரத்தின் எல்லா வரங்களும் இதற்குள் உண்டாகின்றன. அது உங்களை ஒருபோதும் அதற்கு மேலாக ஒரு கிறிஸ்தவராக ஆக்குகிறதில்லை, அது ஜீவனுள்ள தேவனுடைய சபையில் ஒரு பணிவிடை ஆவியாயிருக்கும்படியான ஒரு ஸ்தானத்தில் உங்களை பொருத்துகிறது. இப்பொழுது உங்களுக்கு இது புரிகிறதா? புரிகிறதா?
370. இப்பொழுது கேள்வியானது. நாம் ஒவ்வொன்றாக பதிலுரைப்போம், மூன்று கேள்விகள் உள்ளன.
““நாம் எல்லாரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.””
அது சரியே, 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரம் அதற்கு பதிலை அளிக்கும். சரி.
இது சம்பவிக்கும் அந்த நேரத்திலா நாம் புதிய பிறப்பை பெற்றுக்கொள்கிறோம்? அது எப்பொழுது
371. அதைத்தான் அவர்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள், ஆம். “ஒரே ஆவியினால்...” இல்லை. இல்லை.“நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்” பாருங்கள், அது புதிய பிறப்பு துவங்கும்போதல்ல, நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்போது புதிய பிறப்பு துவங்குகிறது.
372. இப்பொழுது பாருங்கள், அங்கு ஒரு... ஒரு காரியமும் இல்லை. இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் விசுவாசிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? நீங்கள் அதைப் பார்க்கிலும் வேறென்ன செய்ய முடியும்? நீங்கள் அதை விசுவாசிப்பதைக் காட்டிலும் அதைக் குறித்து வேறென்ன செய்ய முடியும்? அதைத் தவிர நீங்கள் செய்யக் கூடிய ஒரு காரியத்தைக் கூறுங்கள். அதை விசுவாசிப்பதற்கு புறம்பாக நீங்கள் செய்யக் கூடியது ஒரு காரியமும் இல்லை. இப்பொழுது, உங்களுடைய விசுவாசத்திற்கு புறம்பாகஎந்த காரியமாவது உண்டானால், அது உங்களுடைய சொந்த செய்கையாயில்லையென்றால், அது ஒரு தேவனுடைய செயலாய் உள்ளது. ஆகையால்
373. இப்பொழுது நீங்கள். அதை நாம் கூறினால். ஏராளமான நேரங்களில், பரிசுத்த ஆவி என்பது, “அந்நிய பாஷையில் பேசுவதே அதற்கான ஆரம்ப ஆதாரம்” என்று அநேக சமயங்களில் ஜனங்கள் ஏற்றுக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் ஜனங்களை குலுக்கி, அல்லது அவர்களை அடித்து, அவர்களைத் தட்டி, “அதைக் கூறு. அதைக் கூறு. அதைக் கூறு” என்கிறார்கள். உங்களுக்குத் தெரியும், ஒரே வார்த்தையை திருப்பித் திருப்பிக் கூறி, “அதைக் கூறு. அதைக் கூறு. அதைக் கூறு” என்கின்றனர். பாருங்கள், அது நீங்களாகவே செய்து கொண்டிருக்கிற ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. அதுவல்ல. அதுவல்ல. அது-அது ஒன்றுமல்ல. நீங்கள் அந்நிய பாஷையின் குழப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஏராளமான காரியங்களை, உணர்ச்சிவசப்படுதல்களைப் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் உங்களுடைய சொந்த தனிப்பட்ட விசுவாசத்திற்கு புறம்பேயிருந்து எந்த காரியமாவது உண்டானால், அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு தேவனுடைய தெய்வீக வரமாயிருக்க வேண்டும். புரிகிறதா?
374. ““நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.” அது சரியே, பாருங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது புதியப் பிறப்பிலிருந்து ஒரு வித்தியாசமான செய்கையாயிருக்கிறது. ஒன்று ஒரு பிறப்பாயுள்ளது, ஒன்று ஒரு அபிஷேகமாயுள்ளது. ஒன்று உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொண்டு வருகிறது, மற்றொன்று உங்களுக்கு வல்லமையை அளிக்கிறது. அது செயல்படும்படியாக நித்திய ஜீவனுக்குள்ளாக வல்லமையை அளிக்கிறது. பாருங்கள், இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? சரி, சரி.
375. இப்பொழுது இங்கே மற்றொன்று உள்ளது, இரண்டாவதிற்கு வருவோம், இந்த இரவு நான் அறிந்த மிகச் சிறந்த பதில்களைக் கூறியிருந்தேன்.