376. இப்பொழுது, அவருடைய ஆவி, நீங்கள் வேதவாக்கியங்களை பின் தொடர்ந்து பார்பீர்களேயானால்... நல்லது, நாம் அநேக இடங்களைக் கொண்டு வந்து விளக்க முடியும். ஆனால், நான் யாராவது ஒரு வேதத்தை வைத்துள்ளார்களா என்று எதிர்பார்க்கிறேன். சகோதரன் ஸ்டிரிக்கர், நீங்கள் ஒரு வேதாகமத்தை வைத்துள்ளீர்களா? சரி. சகோதரன் நெவில், நீங்கள் ஒன்று வைத்துள்ளீர்களா? சங்கீதம் 16:10 ஐ. எனக்காக எடுங்கள். வேறுயாராவது? சகோதரி உட், நீங்கள் அங்கு ஒரு வேதாகமத்தை வைத்துள்ளீர்களா? நல்லது, சகோதரன் ஸ்டிரிக்கர் (சரி, யாராவது ஒருவர்), நீங்கள் எனக்கு அப்போஸ்தலர் 2:27, அப்போஸ்தலர் 2:27-ஐ எடுங்கள்.
377. இப்பொழுது, முதலாவது, இயேசு மரித்த போது... நீங்கள் மரிக்கும்போது, உங்களுடைய சரீரம் மரிக்கிறது. மரணம் என்ற வார்த்தை “வேறுபிரிதல்” என்று பொருள்படுகிறது, உங்களுடைய அன்பார்ந்தவர்களிடமிருந்து வேறு பிரிக்கப்படுதல் என்பதாகும். ஆனால் இங்கு அவர் இதை பரிசுத்த யோவான், 11-வது அதிகாரத்தில், “கேட்டு...” இல்லை... நான் உங்களுடைய மன்னிப்பை வேண்டுகிறேன்; அதை பரிசுத்த யோவான் 5:24-ல், “என் வசனத்தைக் கேட்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்று கூறினார்.
378. இயேசு, அவரை சந்திக்க வந்த மார்த்தாளிடம் கூறினார். அவள், “நீர் இங்கேயிருந்தீரானால், என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்கு தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்” என்றாள்.
379. அவர், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்றார். பார்த்தீர்களா? “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் என்றார்.”
380. இப்பொழுது இப்பொழுது, நம்முடைய மரிக்காத பாகம் ஒன்று உண்டு. நான் அந்த வேதவாக்கியங்களின் வரிசையினுடாக வந்துள்ளபடியால், ஒரு துவக்கத்தையுடைய ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு முடிவு உண்டு. ஒரு துவக்கமேயில்லாத காரியங்களுக்கு முடிவேயில்லை. ஆகையால் நாம் கிறிஸ்துவை, தேவனை ஏற்றுக் கொள்ளும்போது, நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம், தேவனுடைய ஜீவன் முடிவற்றதாயிருப்பதுபோல், நம்முடைய ஜீவனும் முடிவற்றதாயிருக்கிறது; நாம் நித்தியத்தைப் பெற்றுள்ளோம்.
381. இப்பொழுது, சதாகாலம் என்ற வார்த்தையை, நாம் அதனூடாகச் சென்றுப் பார்த்துள்ளோம். சதாக்காலம் என்ற வார்த்தை “ஒரு குறிப்பிட்ட கால நேரம்” என்பதாய், அதாவது என்றென்றும் (இணையிடைச்சொல்) என்றென்றும் என்பதாய் உள்ளது. அதற்கு அதற்கு ஒரு முடிவு உண்டு என்பதை நாம் இங்கே கண்டறிகிறோம், எல்லா பாடுகளையும், எல்லா சுகவீனங்களையும், எல்லா துயரமும், எல்லா தண்டனைகளையும் போலவே நரகத்திற்குத் தானே ஒரு முடிவு உண்டு.
382. ஆனால் நித்திய ஜீவனுக்கு முடிவேயில்லை. ஏனென்றால் அதற்கு துவக்கமேயில்லாதிருந்தது. அது ஒரு போதும் மரிக்கமுடியாது, ஏனென்றால் அது ஒரு போதும் பிறக்கவேயில்லை. அது துவக்க நாட்களை உடையதாயிருக்கவில்லை, எனவே அதற்கு முடிவின் நேரமும் இல்லை. இப்பொழுது, நாம் நித்தியமாய் ஜீவிக்கக் கூடியதற்கான ஒரே வழி நித்தியமாயிருக்கிற ஏதோ ஒரு காரியத்தை ஏற்றுக் கொள்வதன் மூலமேயாகும். எந்த ஒரு காரியமும் இல்லாதிருப்பதற்கு முன்னமே தேவன் இருந்தார், அவர் தேவனாயிருந்தார். தேவன் ஒரு போதும் ஒரு துவக்கத்தையோ அல்லது முடிவையோ உடையவராயிருந்ததில்லை.
383. தேவன் இந்த மகத்தான ஆவியாயிருந்தார். வானவில்லின் ஏழு நிறங்களைப் போல, நாம் அவரை வருணித்தோம். அந்த வானவில் பூமியைத் தொடவில்லையென்றாலும், அது புவி முழுவதையுமே உண்மையாகவே மூடும். அது பூமியின் வளைவின் வட்டத்தில் உள்ள தண்ணீராய் உள்ளது, அதுவே அதை உண்டு பண்ணுகிறது. ஆனால், இப்பொழுது, தேவன் நித்தியமானவராயிருக்கிறபடியால், அவர் பரிபூரணமாயிருந்தார்; பரிபூரண அன்பு, பரிபூரண சமாதானம், பரிபூரண சந்தோஷம், பரிபூரண திருப்தி அந்த ஏழு ஆவிகளையும், (நாம் வெளிப்படுத்தின விசேஷத்தில் பார்க்கிறோம்), அவைகள் பரிபூரணமாயிருந்த தேவனிடத்திலிருந்து உண்டாயிருந்தன. அதற்கு புறம்பேயிருந்த ஒவ்வொரு காரியமும் அதிலிருந்து தாறுமாறாக்கப்பட்ட ஒரு காரியமாகவே இருந்து வருகிறது.
384. இப்பொழுது நாம் பரிபூரணத்தண்டைக்கு திரும்பி வரக்கூடிய ஒரே வழி அதனண்டைக்கு திரும்பி வருவதேயாகும். (பரிபூரணம், அது தேவனாயிருக்கிறது). ஆகையால் நாம் பரிபூரணத்தண்டைக்கு திரும்பி வர வேண்டுமானால், அப்பொழுது நாம் நித்திய ஜீவனை பெற்றிருக்க வேண்டும்; முடிவில்லாதது, அல்லது எந்தக் காரியமும் இல்லாமல் இல்லாமல், அது என்றென்றும் நித்திய ஜீவனாயுள்ளது.
385. இப்பொழுது அவர் ஆத்துமாவைக் குறித்து ஆவியைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் நாம் நம்முடைய பரிசுத்தவான்களின் கல்லறைகளுக்கு மேலேயே, இந்த சரீரத்தை, நம்முடைய சரீரங்களை அடக்கம்பண்ண கொண்டு செல்கிறோம். சரீரம்... முதலாவது, தேவன், தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸ்...
386. முன்னமே நான் அதனூடாக பிரசங்கித்துள்ளேன். கத்தோலிக்கரோ, “அதை தேவனுடைய நித்திய குமாரத்துவம்” என்று அழைக்கின்றனர். நான் முன்னமே அதைக் கூறியிருக்கிறதுபோல, அந்த வார்த்தை சரியாக பொருள்படவில்லை. பாருங்கள், நித்திய குமாரனாய் இருக்க முடியாது, ஏனென்றால் ஒரு குமாரனுக்கு ஒரு துவக்கம் இருக்க வேண்டியதாயிருந்தது. ஆகையால் இயேசுவுக்கு ஒரு துவக்கம் இருந்தது, தேவனுக்கோ ஒரு துவக்கமே இல்லாதிருந்தது. புரிகிறதா? ஆனால் குமாரன்... நித்திய குமாரத்துவத்தையுடையவராயிருக்கவில்லை, ஆனால் பிதாவோடிருந்த குமாரன் ஆதியில் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸாயிருந்தார்.
387. அது தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஆவிக்குரிய சரீரமாயிருந்தது. அது நீங்கள் காண்கிற கண்களைப் போன்றில்லாமல், ஒரு மேலான கண்ணையுடைய மானிட ரூபம். அது நீங்கள் கேட்பது போன்ற செவிகளைப் பெற்றிராமல், ஒரு தொலை தூரத்தில் உள்ளதையும் கேட்கிற செவியாகும். பாருங்கள், அது ஒரு ஆவிக்குரிய சரீரமாயிருந்தது, அது, இந்த வானவில்லில்லிருந்த யாவும் ஒரு-ஒரு ஆவிக்குரிய சரீரத்திற்குள்ளாக இறங்கின. அது கன்மலையினூடாக கடந்து சென்ற போது, மோசே அதைக் கண்டான். அவன் பின்பாகத்தைக் கண்டு, “அது ஒரு மனிதனைப் போன்று காணப்பட்டது” என்றான்.
388. அவர் மாம்ச சரீரத்திற்குள்ளாக இறங்கி வந்து, கன்றின் மாம்சத்தைப் புசித்து, பாலைக் குடித்து, வெண்ணெய்யைப் புசித்தபோது, ஆபிரகாம் அவரைக் கண்டார். அவர் மாம்ச சரீரத்தில் வந்து, பின்னர் அதிலிருந்து மறைந்து போனதை, ஆபிரகாம் கண்டார். நம்முடைய சரீரங்கள் பூமியின் பதினாறு மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளன என்று நாம் கண்டறிந்தோம், அவைகள் ஒன்று சேர்ந்து உருவாகின. தேவன் அவைகளை ஒன்று சேர்த்து, இந்த சரீரங்களிலேயே இரண்டு தூதர்களையும் உருவாக்கிக் கொண்டு வந்தார். அந்தத் தூதர்கள் நின்று பேசினர். தூதர்கள். அந்த சமயத்தில் மனிதர்களாயிருந்தனர்.
389. இப்பொழுது கவனியுங்கள், மெல்கிசேதேக்கு யாராயிருந்தாரென்றால் தேவன் தாமே என்பதை நாம் கண்டறிகிறோம். அது வேறு யாராகவும் இருந்திருக்க முடியாது, அவர் எருசலேமாயிருக்கிற சாலேமின் ராஜாவாயிருந்தார். அவருக்கு தகப்பனும், தாயும் இல்லாதிருந்தது; ஆகையால் அது இயேசுவாயிருந்திருக்க முடியாது, ஏனென்றால் அவர் தகப்பனும் தாயுமுடையவராயிருந்தார். அவருக்கு நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமில்லாததாயிருந்தது; அதை ஒருவர் மாத்திரமே உடையவராயிருக்கிறார், அது தேவனாகும். அது ஒரு ஆவிக்குரிய சரீரத்திலே இங்கே தேவன் வாசம் செய்து கொண்டிருந்ததாயிருந்தது. புரிகிறதா? கவனியுங்கள், சாலேமின் ராஜா.
390. இப்பொழுது தேவன் காலத்தினூடாக, தம்முடைய ஜனங்களின் மூலமாக, வாழ்ந்து வந்துள்ளார். அது மலையின் மேல் அமர்ந்து, ஒரு புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக அழுத தாவீதுக்குள் இருந்த தேவனாயிருந்தது. அதே ஆவியானது தாவீதின் குமாரனாகிய இயேசுவுக்குள் வெளிப்படுத்தப்பட்டது, அவர் எருசலேமில் புறக்கணிக்கப்பட்டு அழுதார்.
391. யோசேப்பு, தன்னுடைய தகப்பனால் நேசிக்கப்பட்டு, தன்னுடைய சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டு, பார்வோனின் வலது பாரிசத்தில் உட்காரவைக்கப்பட்டான், யோசேப்பினாலன்றி வேறு எந்த மனிதனாலும் பார்வோனண்டை வர முடியாது, எக்காளம் ஊதப்பட்ட போது, யோசேப்புக்கு தெண்டனிட்டுப் பணிந்தனர்; கிறிஸ்துவிற்கு பரிபூரண மாதிரி. அதுவே அந்த மனிதர் மூலமாக ஜீவித்த கிறிஸ்துவின் ஆவியாயிருந்தது. புரிகிறதா?
392. இப்பொழுது, இப்பொழுது இங்கே இயேசுவானவர் மரித்தபோது, அது மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனாயிருந்தது. தேவன் மனிதனானார். மீட்பின் பிரமாணங்களில், இஸ்ரவேலில் இழந்த சொத்தை மீட்கக் கூடிய ஒரு மனிதனுக்கு ஒரே வழி மாத்திரமே இருந்தது, அதாவது அவன் ஒரு இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. அவன் ஒரு நெருங்கின இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. ரூத்தின் புத்தகம் அதை அழகாக விவரிக்கிறது; அவன் ஒரு இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. ஆகையால் தேவனுக்கு மனிதன் நெருங்கிய இனத்தானாகும்படி தேவன் மனிதனுக்கு நெருங்கிய இனத்தாராக வேண்டியதாயிருந்தது. புரிகிறதா?
393. அவர் அவனுக்குள் ஒரு ஆவியை உடையவராயிருக்கிறார், ஒரு மனிதன் பிறக்கும்போது அவன் செய்கிற காரியம், ஏனென்றால் அது ஒரு ஜென்மசுபாவமான ஆவியாயிருக்கிறது. அது ஒரு உலகத்தின் ஆவியாயிருக்கிறது, அது இப்பிரபஞ்சத்தின் தேவனுடைய ஆவியாயிருக்கிறது. அவன் வெறுமனே ஆதாமின் ஒரு கர்ப்பப்பிறப்பாயிருக்கிறான்.
394. ஒரு மரம் தானே பிரதியுற்பத்தி செய்து கொள்கிறது. தாவரம் தானே பிரதியுற்பத்தி செய்துகொள்கிறது. மிருகங்களும் தங்களை பிரதியுற்பத்தி செய்துகொள்கின்றன. மானிடர்கள் தங்களை பிரதியுற்பத்தி செய்து கொள்கின்றனர். அவர்கள் மூல சிருஷ்டிப்பின் உப உற்பத்தியாயிருக்கிறார்கள். இது புரிகிறதா?
395. இப்பொழுது, இப்பொழுது ஒரு மனிதன் பிறக்கும்போது, அவன் இந்த உலகத்தின் ஆவியை தனக்குள் கொண்ட ஒரு ஆவியோடு பிறக்கிறான். அந்தக் காரணத்தினால்தான் அவன் மீண்டும் பிறக்க வேண்டியவனாயிருக்கிறான். ஏனென்றால் இந்த ஆவி தந்தை, தாயின் மூலம் கருத்தரித்தலிருந்து வருகிறது, அது பாலியல் கருத்தரித்தலாயிருந்தது, எனவே அது முற்றிலும் என்றென்றுமாய் ஜீவிக்க முடியவில்லை. ஆகையால் அவன் மீண்டும் பிறக்க வேண்டும். அவன் அதைச் செய்ய முடிந்ததற்கு முன்னே, தேவன் இறங்கி வந்து மீண்டும் பிறப்பதற்கு அவனுக்காக ஒரு வழியை உண்டுபண்ண வேண்டியதாயிருந்தது; ஏனென்றால் அவன் தன்னை மீட்டுக்கொள்ள அவனுக்கு வழியேயில்லாதிருந்தது, அவன் நம்பிக்கையில்லாதவனாய் இருந்தான். அவன் நம்பிக்கையில்லாமல், தேவனில்லாமல், கிறிஸ்துவில்லாமல், இந்த உலகத்தில் இழக்கப்பட்டுப் போய்விட்டான். அவனால் அவன். அவன் தன்னை இரட்சித்துக் கொள்ள ஒன்றுமேயில்லாததாயிருந்தது. அவன்... ஒவ்வொரு... அவன் ஒரு பிரதான ஆசாரியனாயிருந்தாலும், அவன் ஒரு கண்காணியாயிருந்தாலும், அவன் ஒரு போப்பாண்டவராயிருந்தாலும், அவன் என்னவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவன் அடுத்த மனிதனைப் போலவே குற்றவாளியாயிருக்கிறான்.
396. ஆகையால், அதைச் செய்ய குற்றமில்லாத ஒருவர் தேவையாயிருந்தது. எனவே தேவன் ஒருவர் மாத்திரமே குற்றமில்லாதவராயிருந்தார். தேவன் நம்மை மீட்கும்படியாக மரணத்தின் கொடுக்கை எடுத்துப் போட, மரணத்தின் கொடுக்கை நங்கூரமிட, தேவன் இறங்கி வந்து மனிதனாக வேண்டியதாயிருந்தது (அவர் கிறிஸ்துவின் ரூபத்தில் வந்தார்), அதாவது நாம். நம்முடைய கிரியைகளினால் அல்ல அல்லது நம்முடைய நற்குணத்தினாலும் அல்ல, (நம்மிடத்தில் ஒன்றுமே இல்லை), ஆனால் அவருடைய கிருபையினால் இரட்சிக்கப்பட வேண்டியதாயிருந்தது. ஆகையால் நாம் இந்த அழிவுள்ள சரீரத்தில் அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறோம், இப்பொழுது நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருந்து, நமக்குள்ளே நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம். நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம். ஆகையால், இயேசு, உயிரோடிருக்கிறவராய்...
397. எந்த மனிதனுமே எவ்வளவு பொல்லாங்கனாயிருந்தாலும் அல்லது எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவன் இந்த பூமியைவிட்டுச் செல்லும்போது, அவன் மரிப்பதில்லை, அவன் வேறெங்கோ இருக்கிறான். ஆனால் அவன் அழிந்துபோகும் ஒரு ஜீவனை உடையவனாயிருக்கிறான், அவன் நரகத்தில் அவனுடைய செய்கைகளுக்காக தண்டிக்கப்பட்ட பிறகு, அவன். ஆனால் அதே சமயத்தில் அந்த ஜீவன் அழிந்து போய்விடும். ஒரே ஒரு மாதிரியான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு.
398. இப்பொழுது, நாம் அதனூடாகச் சென்று பார்த்துள்ளோம். ஒரு மனிதன் ஒரு பாவியாயிருந்து, என்றென்றுமாய் தண்டிக்கப்படுவானானால் அவன் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தாலொழிய, அவன் என்றென்றுமாய் தண்டிக்கப்பட முடியாது. அவன் நித்திய ஜீவனை பெற்றிருந்தால், அவன் இரட்சிக்கப்பட்டிருப்பான். புரிகிறதா? ஆகையால் ஒரே ஒரு மாதிரியான நித்திய ஜீவன் தான் உண்டு, அது ஸோயீ என்ற “தேவனுடைய ஜீவனாய்” உள்ளது. எனவே அவன் அழிந்து போகமுடியாது.
399. ஆனால் துன்மார்க்கர் கடைசி நாளில் அவர்களுடைய நியாயத்தீர்ப்பிற்காக (சரீரத்தில் செய்திருந்த கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்பட) ஒரு வேதனைக்குரிய இடத்தில் காத்திருக்கிறார்கள். இப்பொழுது, ஆனால் நாம். சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருக்கும், சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின் தொடரும்.
400. இப்பொழுது நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்தால், அவர் நமக்கு அதை அப்படியே மன்னிக்கிறார், ஆகையால் நாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் ஒருபோதும் நிற்பதில்லை. உங்களுக்கு இது புரிகிறதா? பாருங்கள். ரோமர் 8:1, “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாய் இருக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” என்று கூறுகிறது. அதாவது கிறிஸ்துவுக்குள் இருக்கிறவர்கள். அதாவது மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம்; பாருங்கள், நாம் கிறிஸ்துவுக்குள்ளிக்கிறபடியால் ஆக்கினைத் தீர்ப்பேயில்லை. “மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு.” புரிகிறதா? “என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.”
401. நான் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்து, கிறிஸ்து என்னுடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டிருக்க, நான் என்னுடைய பாவங்களுக்காக அவருடைய கிருபாதாரபலியை ஏற்றுக் கொண்டிருந்தால், தேவன் என்னை எப்படி நியாயந்தீர்க்க முடியும்? அவர் கிறிஸ்துவை நியாயந்தீர்த்தபோது, அவர் என்னை நியாயந்தீர்த்துவிட்டார். அதன்பின்னர் நான் நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலையாயிருக்கிறேன். “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்.” புரிகிறதா?
402. ஆனால், இப்பொழுது,துன்மார்க்கர் அவ்வண்ணமாயிருப்பதில்லை. அவன் வேதனையான ஒரு இடத்திற்குள்ளாகச் செல்கிறான். அது உண்மை என்பதை நாம் அறிவோம். துன்மார்கன் உயிரோடிருக்கிறான். அவன் ஒரு வேதனையான இடத்தில் இருக்கிறான். அவன் ஒரு இடத்தில் இருக்கிறான், அங்கே அங்கே.. அறிவதில்லை. அப்படித்தான் இந்த இறந்தோரின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் ஆவியுலக இடையீட்டாளர்கள் இறந்து போயிருக்கிற ஜனங்களின் ஆவிகளை அழைக்கிறார்கள், நீங்கள் அதைக் குறித்த எதையாவது எப்போதாவது பார்த்திருப்பீர்களேயானால், அது ஒரு விதமான கும்மாளமும், அசுத்தமான கேலிப் பேச்சுகளுமாய், அவர்கள் செய்கிற கிறுக்குத்தனமான காரியங்களாய் இருக்கின்றன. சரி. ஏன்? அவர்கள்
403. டானி மார்டினின் அற்புதம் என்ற என்னுடைய கட்டுரை வெளிவருவதற்கு முன் வெளிவந்த இந்த செல்வி பைப்பர் என்ற கட்டுரையைப் பாருங்கள். எத்தனைபேர் அந்தக் கட்டுரையை வாசித்திருக்கிறீர்கள்? ஆம், நிச்சயமாகவே உங்களில் அநேகர் வாசித்திருக்கிறீர்கள். அது ரீடர்ஸ் டைஜிஸ்ட் என்ற பத்திரிக்கையில்உள்ளது. இந்த அற்புதத்திற்கு முன்னர் செல்வி பைப்பர் என்பவளைக் குறித்து வெளியானதை நீங்கள் கவனித்தீர்களா? அவள் உலகத்திலேயே மிகப்பெரிய ஆவியுலக இடையீட்டாளாராக அறியப்பட்டிருக்கிறாள். அவளுடைய கதை பன்னிரண்டு பக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஐம்பது வருடங்களாக அவள் உலகம் முழுவதும் சென்று செய்ததை, அதாவது, “அவள் மரித்தோரோடு முற்றிலும் பேசுவதையும், மரித்த ஜனங்கள் எழும்பி வருவதையுங்குறித்த” விஞ்ஞான நிரூபணம் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அப்பத்திரிக்கையாளார்கள் வைத்துள்ளனர். என்ன? தேவனுடைய பெயர் ஒருமுறையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை, எந்த மனந்திரும்புதலைக் குறித்தும், தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும், அதைக் குறித்த எதையுமே ஆவியுலகத் தொடர்பு இடையீட்டில் குறிப்பிடப்படவில்லை, பாருங்கள்.
404. அதில் இருந்த ஒரேக் காரியம், “ஜான், உனக்கு என்னைத் தெரியவில்லையா? ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த அந்த ஜார்ஜ் நான் தான், நான் இன்ன இன்ன, இன்ன இன்ன காரியத்தைச் செய்தேன். நாம் சென்று இதைச் செய்த அந்த இடம் உனக்கு நினைவிருக்கிறதா?” என்று அந்த ஜனங்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தனர். பாருங்கள், அவர்கள் அறிந்திருப்பது எல்லாம் அவ்வளவுதான். அவர்கள் மரித்துப் போய்விட்டனர். கடந்து போய்விட்டனர். அவர்களுக்கு அவர்களுக்கு நியாயத்தீர்ப்பேயன்றி வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை.
405. மரமானது சாய்கிறவிதமாகவே, அந்த விதமாகவே அது விழுகிறது. நீங்கள் மரிக்கும் நிலையில்... அந்தக் காரணத்தினால்தான் நான் மரித்தோருக்காக ஜெபிப்பதில் கருத்து வேற்றுமைக் கொள்கிறேன், பாருங்கள், பரிந்துரை பிராத்தனைகள் அல்லது அல்லது மரித்த பரிசுத்தவான்களோடு கலந்துரையாடுதல் போன்றவற்றோடு கருத்து வேறுபாடு கொள்கிறேன். அது தேவனுடைய வார்த்தையின்படியிருக்க முடியாது. மரித்தப் பிறகு எந்த ஒரு நபருக்காகவும் ஜெபிப்பது எந்த ஒரு நன்மையும் செய்கிறதில்லை. அவர்கள் முடிவுற்றுவிட்டனர். அவர்கள் அவர்கள். அவர்கள் இரக்கத்திற்கும் நியாயத்தீர்ப்பிற்குமிடையேயுள்ள கோட்டை கடந்துவிட்டனர். அவர்கள் இரக்கத்தண்டை சென்றிருக்க வேண்டும் அல்லது இரக்கத்திலிருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும். இயேசு பரிசுத்த மத்தேயு 16-ம் அதிகாரத்தில் அவ்வண்ணமாய்க் கூறினார், அவர் அவர் அவர் அதைப் போதித்தார்; மாற்கு 16-வது அதிகாரத்தில் அது உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஐஸ்வரியவானும் லாசருவும். எந்த மனிதனும் இந்தப் பிளவைக் கடந்து வர முடியாது, ஒரு போதும் இதைக் கடப்பதில்லை. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. புரிகிறதா? ஆகையால் அதுவே இதனைத் தீர்க்கிறது.
406. இப்பொழுது, ஆனால் கிறிஸ்து மரித்தபோது, அவர் கிறிஸ்துவாயிருந்தார் என்று ஒவ்வொரு காரியமும் சாட்சி பகர வேண்டியதாயிருந்தது. இப்பொழுது நாம் உங்களுடைய கேள்விக்குச் செல்வோம். முதாலவது காரியம், நட்சத்திரங்கள் ஒளிகொடுக்க மறுத்துவிட்டன, சூரியன் அஸ்தமித்துவிட்டது, சந்திரனும் தன்னுடைய ஒளியைக் கொடுக்கவில்லை, பூமியானது அவருடைய மரணத்திலே அதனுடைய கற்பாறைகளை வெண்மையாக்கிற்று. அவர் காவலிலிருந்த ஆத்துமாக்களுக்கு சென்று பிரசங்கித்தார், அவை நோவாவின் நாட்களில் தேவன் நீடிய பொறுமையோடு காத்திருந்தபோது, மனந்திரும்பாமற்போனவைகள். அவைகள் அவரை அடையாளங்கண்டுகொள்ள வேண்டியதாயிருந்தது. அதை கவனியுங்கள்! நீ இன்றிரவு இங்கே தற்செயலாக ஒரு பாவியாயிருந்தால், ஒரு நிமிடம் அதைக் குறித்து சிந்தித்துப் பார். இன்றிரவு இப்பொழுது பிரசங்கிக்கப்படுகிற இந்த சுவிசேஷத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிற நீ என்றோ ஒரு நாள் இதற்கு சாட்சியாய் இருக்க வேண்டியதாயிருக்கும். நீ யாராயிருக்கிறாய் என்பதை பொருட்படுத்தாமல், நீ எங்கேயிருந்தாவது உன்னுடைய முழுங்காலை முடங்க செய்வாய். அது இன்றிலிருந்து ஒருகால் பத்தாயிரம் வருடங்கள் கழித்து நடக்கலாம், அது இந்த காலையில் இல்லாமலிருக்கலாம். அது எப்பொழுதாயிருந்தாலும், நீ எங்காவது முழங்காலை முடக்கப் போகிறாய், இதே மாறாத சுவிசேஷம் திரும்பவும் உனக்கு பிரசங்கிக்கப்படுவதை நீ கேட்கப் போகிறாய்.
407. காவலில் இருந்த அந்த ஆத்துமாக்கள் ஏனோக்கும், அவர்கள் எல்லோரும், நோவாவும் பிரசங்கித்தபோதும் மனந்திரும்பாமல் இருந்தன, இப்பொழுது உள்ளதைப் போன்று தேவன் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து, அந்த நேரம் வருவதற்கு காத்துக் கொண்டிருந்தார். நோவாவும், ஏனோக்கும், அவர்கள் எல்லோருமே பிரசங்கித்தபோதும் அந்த ஜனங்கள் நகைத்து, அவர்களைக் குறித்து பரியாசம் செய்தனர். அவர்கள் காவல் வீட்டில் இருந்தனர், இயேசு காவலிருந்த ஆத்துமாக்களண்டைச் சென்று பிரசங்கித்தார். அவர் சாட்சி பகிர்ந்தாரே! வானங்களும், “அவர் இங்கு இருந்தார்” என்று சாட்சிப் பகர்ந்தன. பூமியும், “அவர் அங்கு இருந்தார்” என்று சாட்சி பகர்ந்தன. பாதளமும், “அவர் அங்கு இருந்தார்” என்று சாட்சிப் பகர்ந்தனர்.
408. வேதம் அதைக் கூறினது. அநேக ஆண்டுகளுக்கு முன்னர், தாவீது, சங்கீதங்களில்.. சரி, சகோதரனே, நீங்கள் அதைப் படிக்க விரும்பினால், நீங்கள் சங்கீதங்களை வாசித்துப் பாருங்கள். சங்கீதம் 16:10 [சகோதரன் நெவில் வாசிக்கிறார், “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் வீடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” - ஆசி.]
409. சகோதரனே, பேதுரு பிரசங்கித்ததில் உள்ள அதே காரியத்தை அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம் 27-ம் வசனத்திலிருந்து வாசியுங்கள்: (சகோதரன் ஸ்டிரிக்கர், “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று வாசிக்கிறார். ஆசி.)
410. சகோதரனே நீங்கள் அதனுடைய கட்டத்தை கட்டத்தை புரிந்து கொள்ளும்படி, அதற்கு மேலே உள்ள இரண்டு வசனங்களை வாசியுங்கள்: (சகோதரன் ஸ்டிரிக்கர் வாசிக்கிறார், “அவரைக் குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்.” - ஆசி.)
411. இப்பொழுது அடுத்த வசனத்தையும் வாசியுங்கள்: [சகோதரன் ஸ்டிரிக்கர் வாசிக்கிறார், “ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.” ஆசி.]
412. ஆம், கவனியுங்கள். இப்பொழுது, என்னுடைய யேகோவா சாட்சிகள் உபதேசத்தை சார்ந்த நண்பனே, நான் அதைக் குறித்து உங்களைக் கேள்விகேட்க விரும்புகிறேன். புரிகிறதா? நரகம், பாதாளம், மாண்டாரின் கீழ் உலகு என்ற ஒரு இடம் இருக்குமாயின், நீங்கள் அதை என்னவென்று அழைக்க விரும்பினாலும் சரி; அது கல்லறையிலேயே நிறுத்திவிடுமானால், அப்பொழுது அவர், “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” என்று ஏன் கூறினார்? அதைக் குறித்து என்ன? புரிகிறதா?
413. இங்கே அவருடைய சரீரம் கல்லறையில் இருந்தது; அவருடைய ஆத்துமா பாதாளத்தில் இருந்தது, உயிரோடு பிரசங்கித்துக் கொண்டிருந்தார்! அதைக் குறித்து என்ன? அவர் மீண்டும் தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார். அவருடைய ஆத்துமா ஆவிக்குரிய சரீரத்திலிருந்த ஜனங்களோடு கூட அங்கே இருந்தது. அவர் அவர்களுக்கு சாட்சி பகர்ந்து கொண்டிருந்தார், அவர்கள்“நீடிய பொறுமையோடே தேவன் காத்திருந்தபோது, மனந்திரும்பாமற்போனவர்கள்.”
414. அவர்... வேறு வார்த்தைகளில் கூறினால், அவர் வாசலைத் தட்டினர். அப்பொழுது கதவானது சுழன்று திறந்தது, அங்கே மனந்திரும்பியிருந்த எல்லா ஆத்துமாக்களும் இருந்தன. அவர், “நான் தான் அந்த ஸ்திரீயின் வித்து, இங்கே ஏனோக்கு கூறியிருந்த ஒருவர் நான் தான்...” என்றார். அங்கே பரதீசில், அது மற்றொரு இடம். இப்பொழுது அந்த மூன்று ஸ்தலங்களையும் ஒரு போதும்மறந்துவிடாதீர்கள்; துன்மார்க்கரின் ஸ்தலம், நீதிமான்களின் ஸ்தலம் மற்றும் நரகமுமே. புரிகிறதா?
415. பரலோகத்தைக் குறித்த திரித்துவத்தைப் போன்றே: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் போன்றே; மிருகத்தைக் குறித்த திரித்துவத்தைப்போல; கள்ளத் தீர்க்கதரிசி, மிருகம், மிருகத்தின் முத்திரை. அவை யாவும், நினைவிருக்கட்டும், அவை யாவும் திரித்துவத்தில் உள்ளன. திரித்துவம் ஒன்றாகி, பரிபூரணப்பட்டது. ஒன்றாய் பரிபூரணப்படுத்தப்பட்டது. நீங்கள் மூன்றில் ஒன்றாய் பரிபூரணப்படுத்தப்படுகிறீர்கள்: ஆத்துமா, சரீரம், ஆவி; தண்ணீர், இரத்தம், மற்றும் நரம்புகள். பாருங்கள், நீங்கள் என்னவாயிருந்திருந்தாலும், பரிபூரணமாக்கப்பட்ட ஒன்றாக ஆவதற்கு உங்களுக்கு மூன்று தேவைப்படுகிறது. ஒரு மும்முனை கொண்ட கண்ணாடி துண்டை எடுத்து, அதன் மேல் சூரிய வெளிச்சம் படும்படிச் செய்தால், அப்பொழுது நீங்கள் ஒரு பரிபூரணமான வானவில்லைப் பெற்றுக் கொள்வீர்கள். பாருங்கள், ஒவ்வொரு காரியமும், நீங்கள் ஒன்றை பரிபூரணப்படுத்த மூன்றினை உடையவர்களாயிருக்க வேண்டும்.
416. இப்பொழுது, அது நினைவிருக்கட்டும், அவர் மரித்த போது, அவர் முதலில் காவலில் இல்லாத காவலிருந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கிக்கச் சென்று, அவர், “ஸ்திரீயினுடைய வித்தாயிருந்தார்” என்று சாட்சி பகர்ந்தார். அவர், “ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவாங்களோடுங்கூட வருபவராக ஏனோக்கு கண்டவராக” இருந்தார். நோவாவினால், ஏனோக்கினால், நீதிமான்களினால் பிரசங்கிக்கப்பட்டிருந்த வேதவாக்கியங்களுக்கு அவர் சாட்சி பகர்ந்து, “அவர்தான் அந்த ஒருவராயிருந்தார்” என்று கூற வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு காரியமும் அதை அடையாளங்கண்டு கொள்ள வேண்டியதாயிருந்தது.
417. அதன்பின்னர் அவர் பாதாளத்திற்குள் இறங்கி, மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை பிசாசினிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார்.
418. பரதீசிக்குள்ளாக திரும்பி வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இன்னும் மற்றும் நீதிமான்களை வெளியே கொண்டு வந்தார்; அவர்கள் உயிர்த்தெழுந்தனர் (மத்தேயு 27), அவர்கள் கல்லறைகளை விட்டு வெளியே வந்து, நகரத்திற்குள் பிரவேசித்து, வீதிகளினூடாக ஜனங்களுக்குக் காணப்பட்டனர். அல்லேலூயா! அங்குதான் காரியமே உள்ளது!
419. இப்பொழுது, ஆனால் அவருடைய சரீரம். அவருடைய ஆத்துமா இங்கே இழக்கப்பட்டவர்களுக்கு சாட்சி பகர்ந்து கொண்டிருக்கையில், அப்பொழுது அவர் இங்கே கீழே பிசாசினிடத்திலிருந்து திறவு கோல்களை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து, ஆபிரகாம் ஈசாக்கை வெளியேக் கொண்டுவந்தார்; அவருடைய ஆத்துமா. அவருடைய ஆத்துமா அங்கே அதைச் செய்து கொண்டிருந்தது, அவருடைய சரீரம் கல்லறையில் கிடத்தப்பட்டிருந்தது. அந்தக் காரணத்தினால் இயேசு கூறினார். ஜனங்கள், “இயேசு, 'மூன்று நாளைக்குள்ளே நான் இதை எழுப்புவேன். மூன்று நாளைக்குள்ளே நான் எழுந்திருப்பேன்' என்று ஏன் கூறினார்? அவர் அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் மரித்து, ஞாயிறு காலை உயிர்த்தெழுந்தாரே” என்று கூறுகிறார்கள்.
420. ஆனால் அது “மூன்று நாளைக்குள்ளே” என்று இருந்ததைக் கவனியுங்கள், நீங்கள் கிரேக்க வேதாகம் அகராதியில் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். தாவீது அபிஷேகத்தின் கீழிருந்து (பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழிருந்து), “உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று கூறினான் என்பதை அவர் அறிந்திருந்தார். அது அவருக்கு உரித்ததாயிருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அது அவரைப் பொருட்படுத்தினது என்பதை அவர் அறிந்திருந்தார். அவரே தேவனுடைய பரிசுத்தராயிருந்தார், அழிவு எழுபத்தி இரண்டு மணி நேரத்திற்குள் துவங்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். மூன்று நாட்களுக்குள் எங்கோ ஓரிடத்திலிருந்து அழுகத் துவங்குமுன், அவர் அங்கிருந்து மீண்டும் வந்து விட்டார், ஏனென்றால் வேதவாக்கியங்கள் தவறிப்போக முடியாது.
421. அங்குள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் எனக்கு உரியதாயிருக்கிறது, உங்களுக்கு உரியதாயிருக்கிறது, அது நம்முடையதாயிருக்கிறதே!.
422. அவர், “நீங்கள் இந்த சரீரத்தை அழித்துப் போடுங்கள், நான் அதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவேன்” என்றார். ஏனென்றால் அவர், “என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று கூறியிருந்தார்.
423. மூன்று நாளைக்குள்ளே அந்த சரீரம் அங்கிருந்து வெளியே வந்துவிடும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் மூன்று நாட்கள் முழுமையாக தங்கியிருக்கவில்லை. இல்லை ஐயா, அவர் நிச்சயமாக தங்கியிருக்கவில்லை. அவர் வெள்ளிக்கிழமை பிற்பகலிருந்து ஞாயிறு காலை வரையில் தரித்திருந்தார், அந்த சரீரத்தின் ஒரு உயிரணுகூட அழிந்து போக முடியவில்லை.
424. அவர் மரித்து, தைலமிடப்பட்டு இல்லை துணியில் சுற்றப்பட்டு ஒரு கல்லறையில் கிடத்தப்பட்டார். அந்த உஷ்ணமான, ஈரப்பசை கொண்ட தேசத்தில் ஒரு சில மணி நேரத்திலே அவர் அழுகிப் போயிருக்கலாம். நீங்கள் அழுக. அழுகிப் போகும்போது, உங்களுக்குத் தெரியும், அந்த உஷ்ணமும், ஈரப்பசையுமான தேசத்தில் அவருடைய சரீரம், அவருடைய மூக்கு உள்ளேயே அழுகி விழுந்து போக இன்னும் மற்றவைகளும் அழுகிவிடும். அது அழிந்து போயிருந்திருக்கும், ஏனென்றால் அது ஒரு சரீரமாய் இருந்தது. ஆனால் அந்த உயிரணு அழுகுவதற்கு முன்பே, தேவன்தீர்க்கதரிசியாகிய தாவீது மூலம், “உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று கூறியிருந்ததை அவர் அறிந்திருந்தார்.
425. அவர் எப்படியாய் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதைக் கொண்டு ஜீவித்தார். இப்பொழுது, அங்கிருந்த ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் அவருக்கு உரித்தானதாயிருந்தது, அவைகள் ஒவ்வொன்றையும் தேவன் நிறைவேற்றினார். ஒவ்வொரு வாக்குத்தத்தமும் விசுவாசிக்கு உரித்தானதாயிருக்கிறது, தேவன் அதனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்ததையும் நிறைவேற்றுவார். ஆமென். அது சத்தியமாயிருக்கிறது என்று அப்படியே உறுதியாக இளைப்பாறுங்கள். ஆமென் ஆகையால், அவருடைய ஆத்துமா...
நீங்கள் இதை நினைக்கிறீர்களா இல்லை. என்னை மன்னிக்கவும். இயேசுவினுடைய சரீரம் கல்லறையிலிருந்த மூன்று நாட்களில் அவருடைய ஆவி எங்கேயிருந்தது?
426. அவருடைய ஆவி பாதாளத்தில், தாழ்விடங்களில் இருந்தது. அவர் உயிர்த்தெழுந்தார். உங்களுக்கு அதிக உதவியாய் இருக்கும்படிக்கு நான் இங்கு ஒரு சிறு சிறு செய்தியை சேர்த்து கூறுவேனாக. அவர் உயிர்த்தெழுந்தபோது, அவருடைய. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தபோது, அவர் இன்னமும் மீட்பின் பணியை முற்றிலும் முடித்துவிடாமலிருந்தார். அது உண்மை. அவர் முழு காரியத்தையும் சுத்திகரிக்க வேண்டியதாயிருந்தது, கிரயமோ செலுத்தப்பட்டிருந்தது, ஆனால் பாதாளத்தின் பேரச்சமும், அந்த கல்லறையின் பேரச்சமும். இங்கே, அவர் அவர் மரித்தபோது, அவர் தொடர்ந்து ஊழியம் செய்தார். அவர் மரித்தபோது, அவர் ஒருபோதும் ஊழியத்தை நிறுத்திவிடவில்லை, அவர் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருந்தார்...?... என்னுடைய விநோதமான நடிப்பிற்காக என்னை மன்னிக்கவும், நான் யூகிக்கிறேன், ஆனால் அவர் ஒருபோதும் ஊழியத்தை நிறுத்த வில்லையே!
427. நீங்கள் ஒருபோதும் மரிப்பதில்லையே! உங்களுடைய சரீரம் கொஞ்சகாலம் இளைப்பாறாலாம், ஆனால் தேவன் அதை எழுப்புவார், அவர் எழுப்புவதாக வாக்குப் பண்ணினார். தேவனால் அழிந்து போக முடியாதது போல் நீங்களும் ஒரு போதும் அழிந்து போக முடியாது. அது உண்மை. பாருங்கள், அவருடைய அவர் மரித்தப் பிறகு, என்ன.. சிஷர்களுக்கோ மரித்துவிட்டார். அவர் என்னவாயிருந்தாரென்றால், அவர் நித்திரையாயிருந்தார். அவர், “நான் போய் லாசருவை எழுப்புவேன்” என்று அவனைக் குறித்து கூறினது போல், அவர்கள் அவரை நித்திரைக்குட்படுத்தினர். தேவன் அவரை எழுப்ப வேண்டியதாயிருந்தது.
428. பாருங்கள், அவர் தொடர்ந்து சென்றார், அவர் தொடர்ந்து பிரசங்கித்தார். அவர் இங்கே காவலிருந்த ஆத்துமாக்களுக்குப் பிரசங்கித்தார். நேராக பாதாளத்திற்குச் சென்று பிசாசினிடத்திலிருந்து திறவு கோல்களைப் பறித்துக் கொண்டார். மீண்டும் திரும்பிவந்து, பரதீசில் மீண்டும் பிரசங்கித்துவிட்டு, மீண்டும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார். தம்முடைய சீஷர்களோடு நாற்பது நாட்கள் விஜயம் செய்தார். நாற்பதாம் நாளின் முடிவிலே அவர் மேலேறிச் சென்றார்; ஏனென்றால் நம்மை அளித்துபோடுகிற ஒவ்வொரு காரியத்தையும், மூட நம்பிக்கைகளையும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும்... அவர் ஒவ்வொரு மூட நம்பிக்கையையும், ஒவ்வொரு சந்தேகத்தையும் துண்டித்து, அவருடைய பரமேறுதலில் பூமியிலிருந்து மகிமைக்கு ஒரு ஜெபக் கயிற்றை உண்டாக்கினார். உன்னத்திற்கு ஏறி தம்முடைய மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார். ஜெயங்கொண்டாரே! மகத்தான ஜெயவீரர், முற்றிலுமாக. மரணத்தால் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லையே! பாதாளத்தால் அவரைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லையே! புவியால் அவரைப் பிடித்து வைக்க முடியவில்லையே!
429. அவர் பூமியின்மேலிருந்தபோது, அவர். அவர் மிக இழிவான பட்டிணத்திற்கும், இழிவான ஜனங்களிடத்திற்கும் சென்றார், மிகவும் இழிவான பெயரிடப்பட்டார். அதைத்தான் மனிதன் அவருக்கு செய்திருந்தான். அவர் மிக இழிவான எரிகோ பட்டிணத்திற்கு சென்றார். மிக குள்ளமான மனிதன் ஒரு மரத்தில் ஏறி அவரை கீழ் நோக்கிப் பார்க்க வேண்டியதாயிருந்தது. அந்நிலையில்தான் மனிதன் அவரை வைத்தான். அவர் மிக இழிவான பணியாயிருந்த பாதம் கழுவும் பணியாளாயிருந்தார். அவர் தாழ்ந்தவரானார். அவருக்கு, பெயல்செபூல், “பிசாசுகளின் தலைவன்” என்ற இழிவான பெயரை சூட்டி, இழிவான இடத்தை அளித்து, பாதாளத்தின் தாழ்ந்த இடத்திற்கு தாழ அவரை அனுப்பினான்.
430. தேவனோ அவரை எழுப்பி, வானங்களுக்கு மேலாக உன்னதத்திற்கு அனுப்பி எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அளித்தார். அல்லேலூயா! அதுமட்டுமின்றி, அவர் பரலோகத்தைக்காண கீழ் நோக்கிப் பார்த்திருந்திருப்பார். உம்முடைய சிங்காசனம் வானாதி வானங்களுக்கு மேலாக உயர்ந்திருக்கிறது. பரலோகத்திலும் பூலோகத்திலும் யாவுமே அவருக்கு கட்டுப்பட்டிருக்கின்றன. எப்போதும் இருந்திராத மகத்தான நாமம் அவருக்கு அளிக்கப்பட்டது. அதைத்தான் தேவன் அவருக்குச் செய்தார். மனிதன் அவரை இழிவான நிலையில் வைத்தான், தேவனோ அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார். அவர் தாழ்விலிருந்து உன்னதத்திற்கு உயர்த்தப்பட்டார்.
431. அவர் நம்மை உயர்த்தும்படிக்கு அவர் தாழ்மையுள்ளவரானார். நாம் அவருடைய கிருபையினூடாக அவரைப் போலாகும்படிக்கு, தேவனுடைய குமாரராகும்படிக்கு அவர் நம்மைப் போலானார். அந்நிலைக்கே அவர் சென்றார். ஆமென்! அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. நாம் வரும்படியான ஒரு வழியைஉண்டு பண்ணி, என்றோ ஒரு நாளில், “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” என்றார்.
432. ஓ, வியப்பொன்றுமில்லையே... மனிதன் அந்த தரிசனத்தைப் புரிந்து பற்றிக் கொள்ளும்போது, அதை விளக்கிக்கூறக் கூடிய மனிதன் ஒருபோதும் இருந்ததேயில்லை. அவர்கள் அதை விளக்கிக் கூற முயற்சித்து தங்களுடைய சிந்தையை இழந்துவிட்டனர்; இந்த மகத்தான பாடல்: “ஓ தேவனுடைய அன்பு, எவ்வளவு ஐஸ்வரியமும் சுத்தமுமானது; எவ்வளவு ஆழங்காணவியலாததும், வல்லமையுமானது.” அந்தச் செய்யுளின் கடைசி வரிகள்... இல்லை, செய்யுளின் முதல் வரிகள் என்று நான் நினைக்கிறேன், அது இவ்வாறு உள்ளது: “நாம் சமுத்திரத்தை மையினால் நிறைத்து, ஆகாயத்தை தோல் காகிதமாக்கினாலும்:.. “அந்த செய்யுள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? பைத்தியக்கார... ஒரு பைத்தியக்கார சீர்திருத்த நிலையத்தின் சுவற்றில் எழுதப்பட்டிருந்தது. எந்த மனிதனுமே தேவனுடைய அன்பை ஒரு போதும் விளக்கிக் கூற முடியாது. ஓ, அவர் நமக்காக என்ன செய்தார் என்று ஒரு போதும் கூறப்படமுடியாது. என்னே, நீங்கள் எப்படி அங்கே ஒரு தகுதியைப் பொறுத்த முடியும்? அது துவக்கத்திலிருந்து முடிவு வரை அவருடைய கிருபையாயுள்ளது. நான் காணாமற்போனேன், அதமானேன், உதவியற்றவனாய், எந்த நன்மையுமின்றி, அதைக் குறித்து ஒன்றுமில்லாதிருந்தேன், அவர் தம்முடைய கிருபையினால் வந்து என்னை இரட்சித்தார். ஓ, என்னே. அது அவருடைய.. அது என்னுடைய கர்த்தர். அது அவருடைய அன்பு, அது அவருடைய நன்மையாயுள்ளது.
433. இப்பொழுது நமக்கு கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் உள்ளன, ஆனால் கிட்டத்தட்ட பதினைந்து கேள்விகள் உள்ளன.