435. நல்லது, அன்புக்குரிய நண்பனே, அது ஒரு.. அது அது ஒரு வெளிப்பாடாயுள்ளது. இயேசு, “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்றார், அப்படியானால் எப்படி அவர்கள் இருவராயிருக்க முடியும்? புரிகிறதா? இப்பொழுது, அவர்கள் இருவரல்ல.
436. நான் அதை விளக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு முறை ஒரு ஸ்திரீ என்னிடத்தில், “நீரும் உம்முடைய மனைவியும் இருவராயிருக்கிறீர்கள், அதே சமயத்தில் நீங்கள் ஒன்றாயிருக்கிறீர்கள்” என்று கூறினாள்.
437. அப்பொழுது நான், “ஆனால், தேவன் மற்றும் குமாரன் என்பது அதிலிருந்து வித்தியாமாயுள்ளது, பாருங்கள்” என்றேன். மேலும் நான், “சரி” என்று கூறி, “நீங்கள் என்னைக் காண்கிறீர்களா?” என்று கேட்டேன்.
அதற்கு அவள், “ஆம்” என்றாள்.
அப்பொழுது நான், “நீங்கள் என்னுடைய மனைவியைக்காண்கிறீர்களா?” என்று கேட்டேன்.
அதற்கு அவளோ, “இல்லை” என்றாள்.
438. அப்பொழுது நான், “அப்படியானால் பிதாவும் குமாரனும் என்பது இந்தக் கருத்திற்கு வித்தியாசமானது; இயேசு, 'நீங்கள் என்னைக் காணும்போது, நீங்கள் பிதாவைக் கண்டுவிட்டீர்கள்' என்றாரே” என்று கூறினேன். புரிகிறதா?
439. பிதா, குமாரன். பிதா சர்வ வல்லமையுள்ள யோகோவா (தேவன்) அபிஷேகிக்கப்பட்ட தேவ குமாரனாயிருந்த இயேசு கிறிஸ்து என்றழைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். இயேசு ஒரு மனிதனாயிருந்தார், தேவன் ஒரு ஆவியாயிருக்கிறார். தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். அவர் அவர். அவருடைய தனித்தன்மை, அவருடைய அமைப்பு, அவருடைய தெய்வத்துவம், அவர் என்னவாயிருந்தாலும், அவர் தேவனாயிருந்தாரே! அவர் தேவனேயல்லாமல் வேறொன்றுமாயிருக்கவில்லை. அதே சமயத்தில், அவர் ஒரு மனிதனாயிருந்தார். அவர் ஒரு மனிதனாய், தேவன் உள்ளே வாசம் செய்த ஒரு வீடாயிருந்தார். அது உண்மை, அவர் தேவனுடைய வாசஸ்தலமாயிருந்தார்.
440. இப்பொழுது, உங்களுக்கு அதன் பேரிலான சில வேதவாக்கியங்கள் தேவையானால்... சகோதரன் நெவில், நீர் எனக்காக மாற்கு 16:42-ஐ எடுத்தால் நலமாயிருக்கும். சகோதரி உட், நீங்கள் எனக்காக எபேசியர் 1:20-ஐ எடுங்கள். வேறுயாரேனும் ஒரு வேதாகமத்தை வைத்துள்ளீர்களா? நல்லது, உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சகோதரி ஆர்னால்ட், நீங்கள் அங்கே பின்னால் ஒன்றை வைத்துள்ளீர்களா? சரி, நீங்கள் எனக்குஅப்போஸ்தலர் 7:55ஐ எடுங்கள். சரி. மாற்கு 14:62, சகோதரன் நெவில். சகோதரி உட் அவர்களுடையதோ எபேசியர் 1:20 ஆகும்; அப்போஸ்தலர் 7:55, சகோதரி ஆர்னால்ட்
441. சரி, சகோதரன் நெவில், நீங்கள் அதை எடுத்து வைத்துள்ளீர்களா? சரி, இப்பொழுது வாசியுங்கள்: (சகோதரன் நெவில் வாசிக்கிறார், “அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.” - ஆசி.)
442. சரி, இப்பொழுது அங்கே முதல் சொற்றொடரைக் கவனியுங்கள். இயேசு, “நான் அவர் தான்” என்றார்.
443. “நான் அவர்தான்,” நான் அவர்தான் என்பது யாராயிருந்து? உலகத்தில் எந்த மனிதனுமே அதை ஒருபோதும் வியாக்கியானிக்க முடியவேயில்லை. கிரேக்க வேதாகம் அகராதி போன்றவற்றை வாசிக்கிற நீங்களும்... கூட எந்த ஒரு மனிதனாலும் அதை சேர்த்து உச்சரித்துக் கூற முடியவில்லை. அது J-v-h-u என்று உள்ளது. எபிரேய வேதபண்டிதர்களாலும் அதை ஒருபோதும் உச்சரிக்க முடியவில்லை. அங்கே அந்த எரிகிற முட்செடியில், அந்த நாளில் அவர் மோசேயை சந்தித்தபோது, அது J-v-h-u-என்பதாயிருந்தது. ஆகையால் அவர்கள் அதை “J-o-h, யேகோவா” என்று உச்சரித்தனர், ஆனால் அது “யேகோவா” என்பதாய் இருக்கவில்லை. j-v-h-u, பாருங்கள், எவருமே அறியார்.
444. நீங்களோ, “பரவாயில்லை, மோசேயினாலும் அதை உச்சரித்துக் கூற முடியவில்லையா?” என்று கேட்கலாம்.
445. மோசே, “என்னை அனுப்பினது யார் என்று நான் கூற முடியும்?” என்று கேட்டான்.
446. அதற்கு அவர், “இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று கூறு. இருக்கிறவராக இருக்கிறேன்” என்றார்.
447. இப்பொழுது கவனியுங்கள். நான் இருக்கிறேன் என்பது ஒரு நிகழ்காலமாயுள்ளது, “நான் இருந்தேன்” அல்லது “நான் இருப்பேன்” என்பது அல்ல. நான் இருக்கிறேன். இப்பொழுது, அவர், “நான் இருக்கிறேன் என்ற இது எல்லா தலை முறையினூடாகவும் ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கும்” என்றார்.
448. இப்பொழுது இயேசு பண்டிகை நாளிலே அங்கு நின்றதை கவனியுங்கள். அவர்கள், “நீ பைத்தியம் என்பதை இப்பொழுது நாங்கள் அறிவோம்” என்றனர். சரியான வார்த்தைகளில் கூறினால், “நீ பித்து பிடித்தவன்” என்றனர். (பித்து என்றால்“பைத்தியம்” என்பதாகும்).“நீ பைத்தியம் பிடித்தவன் என்பதை நாங்கள் அறிவோம். நீ ஒரு சமாரியன், உனக்கு பிசாசு பிடித்துள்ளது” என்றனர். (பரிசுத்த யோவான் 6-வது அதிகாரம்) அவர்கள், “இப்பொழுது, நீ ஆபிரகாமைக் கண்டேன் என்று கூறுகிறாயே, உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே?” என்று கேட்டனர். (அவர் தன்னுடைய வயதில் சற்று வயோதிகரைப் போன்று காணப்பட்டிருக்கலாம், ஆனால் அவர் முப்பது வயதுடையவராய் மட்டுமே இருந்தார், ஆனால் அவருடைய ஊழியத்தின் நிமித்தம் அவ்வாறு வயோதிகரைப் போன்றிருந்திருக்கலாம்.) அப்பொழுது அவர்கள், “ஐம்பது வயது நிரம்பாத ஒரு மனிதனாயிருக்கிற நீ ஆபிரகாமைக் கண்டதாக கூறுகிறாயே?' என்று கேட்டனர். மேலும் நீ பைத்தியம் பிடித்தவன் என்பதை இப்பொழுது நாங்கள் அறிவோம்” என்றனர். பார்த்தீர்களா?
அதற்கு அவரோ, “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார்.
449. “நான் இருக்கிறேன்,” அவர் நான் இருக்கிறேன் என்ற மகத்தானவராக இருந்தார். இங்கே அவர் இந்த யூதர்களிடத்தில் மீண்டும், பாருங்கள், “நான் இருக்கிறேன்! என்று கூறிக்கொண்டிருக்கிறார். வலது பாரிசத்தில் வீற்றிருக்கிற நான் வருவதை நீங்கள் காணும்போது...” அது சரிதானே?
450. சகோதரனே அதை மீண்டும் வாசியுங்கள். [சகோதரன் நெவில் வாசிக்கிறார், “மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்.” - ஆசி.]
451. [சகோதரி உட், எபேசியர் 1:20 என்ற வசனமா என்று கேட்கிறாள்? - ஆசி.] ஆம், அம்மா. (சகோதரி உட் வாசிக்கிறாள், “தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே.. அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,” - ஆசி.)
452. சரி, சகோதரியே உங்களுடையதை வாசியுங்கள். பாருங்கள், அது அதேவிதமாக உள்ளது: (சகோதரி ஆர்னால்ட் வாசிக்கிறார், “அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:” - ஆசி.)
453. இப்பொழுது, நீங்கள் பாருங்கள், தேவன் ஒரு பெரிய வலது கரத்தை உடையவராயிருந்திருக்க முடியாது, பாருங்கள், இயேசுவானவர் அவருடைய வலது பாரிசத்தில் நிற்கிறார். வலது பாரிசம் என்பது “அதிகாரத்தை” பொருட்படுத்துகிறது. புரிகிறதா? உதாரணமாக, நான் சபை அதிகாரம் முழுவதையும் உடையவனாயிருந்தாலும் அல்லது நான் ஒரு விதமான ஒரு பேராயராயிருந்தாலும், சகோதரன் நெவில் என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, அவர் என்னுடைய வலக்கையாயிருப்பார்.பாருங்கள், அதன் பொருள் அவர். அவர் என்னுடைய வலக்கரமாய் இருப்பார் என்பதேயாகும்.
454. இப்பொழுது, இயேசு வலது பாரிச வல்லமையில் இருக்கிறார். இப்பொழுது, அவர் அவ்வண்ணமாய்க் கூறுகிறார், இங்கே எபேசியரில், அவர் அதை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தபோது, அவர் வலது பாரிசத்தின் வல்லமையில் இருக்கிறார். “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” (அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் கூறினார்) “எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் உடையவனாயிருக்கிறேன். ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார்.”
455. “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்.” அது எங்கே... அவரைத் தவிர மற்றொரு தேவன் அங்கேயிருந்தால், அவர் வல்லமையற்றவராய் இருப்பாரே. பாருங்கள், அங்கே மற்றொரு தேவனே இருக்க முடியாது. “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” அவருடைய கரத்தில் இருக்கிறது. ஆகையால், நீங்கள் பாருங்கள், “அவர் வலதுபாரிசத்தில் நின்று கொண்டிருக்கிறார்,” (அந்த நபர் கேள்வி கேட்டுள்ளது போல), அதனை அது பொருட்படுத்துகிறதில்லை...
456. இப்பொழுது பாருங்கள்! சரீரம்... தேவன் ஆவியாயிருக்கிறார். ஆம், எத்தனைபேர் அதை புரிந்து கொள்கிறீர்கள்? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். தேவன் ஆவியாயிருக்கிறார், இயேசு மனிதனாயிருக்கிறார், இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாயிருந்தார். இயேசு... நாம் ஒரு போதும் தேவனைப் பார்க்க முடியாது, பாருங்கள், அவர் ஆவியாயிருக்கிறார். உங்களால் ஆவியைப் பார்க்க முடியாது. “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை.” எந்த மனிதனாலும் தேவனைக் காண முடியாது.
457. நான் இதைக் கூறுவேனாக, அதாவது, “நீங்கள் என்னை ஒருபோதும் கண்டதில்லை. நீங்கள் உங்கள் ஜீவியம் முழுவதிலுமே என்னை ஒருபோதும் கண்டிருக்கவில்லை. நீங்கள் என்னை ஒருபோதும் காணவேமாட்டீர்கள். அது உண்மை. இந்த நபரை அறிவிக்கிற இந்த சரீரத்தையே நீங்கள் காண்கிறீர்கள், அது இங்கே உள்ளே இருக்கிறது. இப்பொழுது, இந்த சரீரம் நித்திய ஜீவனை உடையதாயிருக்கவில்லை, ஆனால் ஆவி நித்திய ஜீவனை உடையதாயிருக்கிறது. இந்த சரீரம் திரும்பிப் போய்விடும், ஆனால் அது இதில் உள்ளதைப் போன்ற ஒத்த தன்மையாய் மீண்டும் வரும், அதாவது ஒரு கோதுமை மணியானது நிலத்திற்குள்செல்வது போன்றேயாகும். கிறிஸ்தவ மார்க்கம் உயிர்த்தெழுதலின் பேரில் சார்ந்தாயுள்ளதேயன்றி அதற்குப் பதிலாக வேறொன்றை மாற்றுவது அல்ல. உயிர்த்தெழுதல்; இயேசு மரித்து கீழே சென்ற விதமாகவே, அதேவிதமாகவே இயேசு திரும்பி வந்தார். நீங்கள் சிகப்பு தலையினையுடையவராய் மரித்து கீழே சென்றால், நீங்கள் திரும்பவும் சிகப்பு தலையினையுடையவராகவே வருவீர்கள்; நீங்கள் கறுப்புத்தலையினையுடையவராய் மரித்து கீழே சென்றால், நீங்கள் கறுப்புத் தலையோடு திரும்ப எழுப்பி வருவீர்கள். பாருங்கள், அது ஒரு உயிர்த்தெழுதலாய் உள்ளது.
458. நீங்கள் புசிக்கும்போது... நான் அதைக் குறித்து மருத்துவரிடத்தில் கேட்டேன், அண்மையில் நான், “ஏன்... நான் பதினாறு வயதாயிருந்தபோது... ஒவ்வொரு முறையும் நான் புசிக்கும்போது, நான் என்னுடைய ஜீவனை புதுப்பித்துக் கொள்கிறேனா?” என்று கேட்டேன்.
459. அதற்கு அவர், “அது உண்மையே” என்றார்.
460. நீங்கள் ஒவ்வொரு முறையும் புசிக்கும்போது, புதிய புதிய உயிரணுக்களை உள்ளே எடுத்துக் கொள்கிறீர்கள்... மாம்சம் அதை உண்டு பண்ணுகிறது... இல்லை ஆகாரம் இரத்த அணுக்களை உண்டுபண்ணுகிறது, அந்த இரத்த அணுக்கள் உங்களை பலமுள்ளவர்களாக்குகிறது. அந்த விதமாகத்தான் நீங்கள் ஜீவிக்கிறீர்கள். அதன்பின்னர், நீங்கள் உயிர் வாழ்வதற்காக ஏதோ ஒன்று ஒவ்வொரு முறையும் மரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று மரிக்கிறது: நீங்கள் இறைச்சியை புசிக்கும்போது பசு மாடு மரித்துவிடுகிறது; அல்லது நீங்கள் எதைப் புசித்தாலும்; மீன் மரிக்கிறது; அல்லது ரொட்டியை உண்டுபண்ண உருளைக்கிழங்கு மரித்துவிடுகிறது; ஜீவனின் ஒவ்வொரு ரூபமும்; நீங்கள் மரித்த பொருளினூடாக மாத்திரமே உயிர் வாழ முடியும்.
461. ஏதோ ஒன்று மரித்த காரணத்தினால் மாத்திரமே உங்களால் நித்தியமாக வாழ முடியும், அது இயேசுவாகும். நீங்கள் சபையை சேர்ந்து கொண்ட காரணத்தினால் அல்ல, நீங்கள் ஞானஸ்நானம்பண்ணப்பட்ட காரணத்தினால் அல்ல, நீங்கள் கிறிஸ்தவமார்க்கத்தை ஒப்புக்கொண்ட காரணத்தினால் அல்ல; உங்களுக்காக சிந்தப்பட்ட இரத்தமான… இயேசு கிறிஸ்துவின் ஜீவனை நீங்கள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயாம், நீங்கள் அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டீர்கள்.
462. இப்பொழுது, கவனியுங்கள், நான் இதைக் கேட்கிறேன். நான் இதை உங்களிடத்தில் கேட்க விரும்புகிறேன். இதை நோக்கிப் பாருங்கள், இது அழகாயுள்ளது. ஒரு கால் நான் அதன்பேரில் இங்கே இதற்கு முன் பிரசங்கித்திருக்கலாம் (எனக்குத் தெரியவில்லை); எங்கும் பிரசங்கிக்கும்போது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடங்களில் என்ன கூறினீர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடுவீர்கள். ஆனால் அது ஏனென்றால், அப்பொழுது...
463. இப்பொழுது, நான் நினைக்கிறேன், சகோதரி ஸ்மித்... எனக்குத் தெரிந்த சகோதரன் பிளீமேன் அங்கு பின்னால் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. திரிபேனாள், அவள் ஒரு சிறு பெண்ணாய் இருந்தபோது, அவளை எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கும் என்னை நினைவிருக்கும், நான் முன்பெல்லாம். சற்று குட்டையாக, பருமனாக, கறுமையான வளை வளைவான முடியினையுடையவனாயிருந்தேன். நான் முன்பு குத்துச் சண்டையிடுவது வழக்கம். ஓ, அப்பொழுது உலகத்திலேயே நான் ஒரு பகட்டான ஆடம்பரமான மனிதன் என்றே என்னைக் குறித்து எண்ணிக்கொண்டேன். “ஓ”, நான், “யாருமே என்னை அடித்துவிட முடியாது. இல்லை, ஐயா” என்று எண்ணியிருந்தேன். ஆனால் நான்… நான் அதன் பேரில் ஏமாற்றம் கொண்டேன். நீங்கள் பாருங்கள். ஆனால் நான். இப்பொழுது, நான் அப்படியே, “ஓ, என்னே” என்று எண்ணிப்பார்த்தேன். மேலும் நான், “நீங்கள் இந்தப் பொருளை என்னுடைய முதுகின்மேல் வைத்தால், நான் அதனோடு வீதியில் நடந்து சென்றுவிடுவேன்” என்று எண்ணியிருந்தேன். நிச்சயமாகவே, எந்தக் காரியமும் என்னைத் தொல்லைபடுத்தவில்லை. ஒவ்வொரு முறையும் நான் சாப்பிடும்போது, நான் எல்லா நேரத்திலுமே பெரியவனாகவும், பலமுள்ளவனாகவும் ஆனேன். ஒவ்வொரு முறையும் நான் உள்ளே... புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்வேன். நான் இன்றைக்கு செய்வதுபோன்றே நான் முட்டை கோஸ், உருளைக்கிழங்கு, அவரை, இறைச்சி முதலியனவற்றைச் சாப்பிட்டேன். நான் எல்லா நேரத்திலும் பலமுள்ளவனாகவும், பெரியவனாகவும் ஆனேன். நான் ஏறக்குறைய இருபத்தைந்து வயதுடையவனாய் இருந்த போது...
464. நான் அப்பொழுது புசித்ததைவிட இப்பொழுது நன்றாக புசிக்கிறேன், உங்கள் எல்லாருக்கும் என்னைத் தெரியும், அவ்வாறு புசிப்பதும் தெரியும், என்னால் இப்பொழுது நன்கு புசிக்க முடிகிறது, நாம் எல்லோருமே நன்றாக புசிக்கிறோம். ஆனால் சகோதரன் ஈகன் இது ஏன் இவ்வாறு உள்ளது? ஆகையால் நான் இன்னமும் நல்ல உணவினை அப்பொழுது புசித்ததைவிட, மேலான ஊட்டச்சத்துக்களையும் மற்றுமுள்ள ஒவ்வொன்றையும் புசித்துக்கொண்டிருக்கிறேன். நான் அதிகமாக புசித்தாலும், நான் படிப்படியாக தளர்வுற்றுப்போகிறேனே. இப்பொழுது நான் குனிந்த தோள்பட்டைகளை உடைய வயோதிகனாய், வழுக்கைத் தலையனாய், நரைமுடியாக மாறி, கைகள் சுருக்கங்கொள்ள, முகத்தில் குழிவிழுந்து, தோள்பட்டைகள் தொங்கிக் கொண்டிருக்க, ஒவ்வொரு நாள் காலையும் எழுந்திருக்க கடினமானவனாகவும் ஆகிக்கொண்டு வருகிறேன், ஓ, என்னே. அது ஏன் இப்படியாகிறது? நான் ஒவ்வொரு முறை புசிக்கும்போதும் நான் என்னுடைய ஜீவனை புதுப்பித்தாலும், ஏன் இப்படியாகிறது?
465. நான் ஒரு கூஜாவிலிருந்து ஒரு கண்ணாடி குடுவைக்குள்ளாக தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்தால், அப்பொழுது அதே தண்ணீர் பாதியளவுதான் நிரம்புகிறது, அப்பொழுது தண்ணீரின் அளவு உயருவதற்கு பதிலாக அதேத் தண்ணீர் மாறி மாறி ஊற்றும்போது எல்லா நேரத்திலுமே குறையத்துவங்குகிறது; நான் உள்ளே அதிகமாக ஊற்றினால், அது வேகமாகக் குறையத் துவங்குகிறது. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. உங்களால் அதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாது, இந்த புத்தகம் மாத்திரமே தேவன் அதை நியமித்திருக்கிறார் என்று நிரூபிக்கும்படியானதாயுள்ளது; அது ஒரு நியமனமாய் உள்ளது, தேவன் நம்முடைய வளர்ச்சியைக் கண்டார்.
466. வயோதிக மனிதராகிய உங்களைத்தான், வயோதிக ஸ்திரீகளாகிய உங்களைத்தான், உங்களில் சிலருடைய... உங்களுடைய கணவன்மார்கள், உங்களுடைய மனைவிகள் மரித்துப் போயிருக்கலாம். அது-அது எந்தக் காரியத்தையும் தொல்லைப்படுத்துகிறதில்லை. அல்லேலூயா. அவர்கள் முற்றிலுமாக காலத்தின் திரைக்கு அப்பால் கடந்துபோய் காத்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் உங்களோடிருக்க வாஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை, நிச்சயமாகவே அவர்கள் அவ்வாறிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும் என்று வாஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களோ, “ஆண்டவரே, எது வரைக்கும்?” என்று சத்தமிட்டு கூப்பிட்டார்கள் என்று வேதம் உரைத்துள்ளது. புரிகிறதா? அவர்கள் தங்களாகவே அறிந்து கொள்ளும் நிலையில் இல்லை.
467. தேவன் நம்மை ஒருபோதும் தூதர்களாக உண்டாக்கவில்லை, அவர் நம்மை மனிதனாகவும் மனுஷியாகவுமே உண்டாக்கினார். நாம் எப்பொழுதுமே புருஷராகவும், ஸ்திரீயாகவுமேயிருப்போம், ஏனென்றால் நாம் தேவனுடைய சொந்த ஞானத்தின் ஒரு ஒரு உற்பத்தியாயிருக்கிறோம். நாம் எப்பொழுதுமே புருஷரும், ஸ்திரீகளுமாகவே இருக்க முடியும்.
468. ஆனால் இது என்ன செய்கிறது? பாருங்கள், நீங்கள் கணவனோடு பீடத்தண்டை நடந்து சென்று, நாம் ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டு, சட்டப்படியான மணம்புரிந்த மனைவியாயிருக்கும்படி தேவனுடைய கிருபையினால் இந்த பரிசுத்த விவாகத்தில் ஒன்று சேர்ந்து வாழ நீங்கள் அளித்த உங்களுடைய சாட்சியையும் நீங்கள் கூறின உங்களுடைய வாக்குறுதியையும் ஒருகால் நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். நீங்கள் அறிந்துள்ள, நீங்கள் இருவருமே கவனிக்கத் துவங்கின முதல் காரியம். அவர் நேராக, பளபளப்பான தலை முடியோடு இருந்ததும், அம்மா, அவள் அழகாகவும், சிறு பழுப்பு நிறக் கண்களோடு அல்லது நீல நிறக் கண்களோடு அல்லது அது என்னவாயிருந்ததோஅதைப் பார்க்கிறீர்கள். ஓ, நீங்கள் எப்படியாய் அவளை நோக்கிப் பார்த்தீர்கள். நீங்கள் வெளியே நடந்து போய், நீங்கள் தந்தையை பார்த்து, “இப்பொழுது அவர்களுடைய தோள்பட்டைகள் நேராக இருப்பதைப் பார்த்தீர்கள்.” கொஞ்சங்கழித்து அவைகள் தொங்கத் துவங்குகின்றன. அம்மாவோ நரைத்த தலையையுடையவளாகி, முடக்குவாதம் போன்றவை உண்டாக, கொஞ்சங்கழித்து அவள் மரித்துப் போனாள், அல்லது அவர் மரித்துப் போனார்.
469. அது என்னவாயிருந்தது? நீங்கள் அங்கே நின்று கொண்டிருந்ததை தேவன் கண்டு, அவர், “அதுதான் இது, அந்தவிதமாகத்தான் நீ எனக்கு வேண்டும்” என்றார். சரி, மரணமே, நீ வா, ஆனால் நான் உன்னை அனுமதிக்கும் வரை உன்னால் அவர்களை எடுத்துக்கொள்ள முடியாது.
470. ஓ, ஓ நான் யோபுவைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன். ஆம், தேவன் கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார், தேவன் யோபுவை நேசித்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். (சாத்தானால் உன்னை எடுத்துக் கொள்ள முடியாது என்பதை கவனி.) அவர், “நீ அவனை உன்னுடைய கரங்களில் எடுத்துக் கொள், ஆனால் நீ அவனுடைய ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொள்ளாதே” என்றார்.
471. அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் காரியம் என்னவென்றால் தோள்பட்டைகள் குனியத் துவங்கி, கொஞ்சங்கழித்து நீங்கள் மரித்துப் போய்விடுவீர்கள். என்ன சம்பவித்ததாயிருந்தது?
472. இப்பொழுது உயிர்த்தெழுதலில் அங்கே மரணத்தின் அறிகுறிகள் என்ற ஒரு காரியமும் இருக்காது. அங்கே இந்த பூமிக்குரிய அறிகுறிகளின் ஒரு காரியமும் இருக்க முடியாது, அதைக்குறித்து என்னவென்றால்... பாருங்கள், நீங்கள் தேவனுடைய சித்தத்தினால் வளர்ந்து கொண்டிருந்தீர்கள், நீங்கள் ஜீவனை உடையவராயிருந்தீர்கள். அப்பொழுது மரணம் உள்ளே வந்து உங்களை கீழே கொண்டு செல்கிறது. அதே ஆகாரத்தையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் புசித்து, அதே விதமான தண்ணீரையே பருகி, ஒவ்வொன்றையும் செய்கிறீர்கள், ஆனாலும் மரணம் உள்ளே வருகிறது. ஆனால் காட்சியோ ஏற்கெனவே அமைக்கப்பட்டாயிற்று. அல்லேலுயா. உயிர்த்தெழுதலில் நீங்கள் மீண்டும் ஜீவனோடிருப்பீர்கள். அங்கே மரணமே இருக்காது, அல்லது மரணத்திற்கொத்த தன்மையே இருக்காது அல்லது வயோதிகமோ அல்லது முடமோ அல்லது வேறெந்தக்காரியமோ இருக்காது. நாம் அவருடைய சாயலில் அழிவில்லாமல், என்றென்றுமாய் பரிபூரணப்பட்டவர்களாய் நிற்போம். அல்லேலூயா. ஓ, நான்... அது எந்த நபரையும் சத்தமிடச் செய்யும், விசேஷமாக நீங்கள் என்னுடைய வயதை அடையும் போது சத்தமிடச் செய்யும்.
473. என்னுடைய வயதில் நீங்கள் அதைக் குறித்து எப்போதும் இருந்ததைக் காட்டிலும் அதிகமாக சிந்திப்பீர்கள் என்றே நான் யூகிக்கிறேன். நீங்கள் அந்த மாதிரியான மாறும் நிலையில் இருக்கிறீர்கள், நீங்கள் பாருங்கள். நீங்கள், “இதைக் குறித்தெல்லாம் என்ன? நான் என்ன செய்திருக்கிறேன்?” என்று வியப்புறத்துவங்குகிறீர்கள். நான் இங்கே திரும்பி கீழ் நோக்கிப் பார்த்து, “என்னே நன்மை: கர்த்தாவே, அவர் எங்கே போயிருக்கிறார்? இதோ நான் நாற்பத்தியெட்டு வயதுடையவனாய் இருக்கிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் நான் அரை நூறு வயதினை அடைவேன், வ்வூயு, நான் மாத்திரம்...” என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.
474. நான் ஆதாயம் செய்துள்ள ஒரு சில ஆத்துமாக்களை அப்படியே நோக்கிப் பார்க்கிறேன். நான் இன்னும் கோடா கோடி ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய வேண்டும். தேவனே எனக்கு உதவி செய்யும். நான் ஒரு விடுமுறைக் காலத்தில் கூட வீட்டிற்கு வருவதன் பேரில் நானே என்னைக் குறித்து வெட்கமடைகிறேன். அதாவது, “ஓ, அறுப்புக்கு வயல்நிலங்கள் விளைந்திருக்கின்றன, வேளையாட்களோ கொஞ்சம் கோடிக்கணக்கானோர் பாவத்திலும் அவமானத்திலும் ஒவ்வொரு நாளும் மரித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய கூக்குரலுக்கு செவிக்கொடுக்கவேண்டும்” என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் அங்கே இரவிலே படுக்கைக்குச் செல்லும்போது, அப்பால் உள்ள தேசத்தில் உள்ள அந்த ஏழ்மையான அஞ்ஞானிகளின் கூக்குரலைக் கேட்டேன். நான் ஆகாய விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது எப்படியாய் ஆயிரக்கணக்கில் அவர்கள் வந்து, இயேசு கிறிஸ்துவின் கதையைக் கேட்பதற்கு என்னை பின் தொடர்ந்து வந்து இழுத்தபோது, அங்கே அவர்களை பின்னால் தடுத்த நிறுத்த அவர்கள் இராணுவத்தை வைக்க வேண்டியதாயிருந்தது.
475. நாமோ இங்கே கெஞ்சி, செய்தித்தாளில் விளம்பரம் செய்து, மற்றுமுள்ள ஒவ்வொன்றையும் செய்து, அவர்கள் அமருவதற்கு மிக அருமையான இடங்களை ஏற்பாடு செய்து, மிகச் சிறந்த பொழுதுபோக்கிற்காக அருமையான பாடலை பாடச் செய்தாலும், அவர்கள் வந்து, “ஓஓஓஓ, பரவாயில்லை, அது என்னுடைய விசுவாசத்தை சேர்ந்திராவிடினும், அது சரியாயிருந்தது என்று நான் யூகிக்கிறேன்” என்பார்கள்.
476. ஓ, என்னே, அது எவ்வளவு எவ்வளவு எவ்வளவு காலம் நீடித்திருக்க முடியும்? அதுவல்ல. இது சரியல்ல. நாமோ இங்கே கோடான கோடி டன் எடையுள்ள ஆகாரத்தை குப்பைத் தொட்டியில் கொட்டுகிறோம், அந்த ஜனங்களோ அதை ஏற்றுக் கொள்ள மகிழ்ச்சியடைவர்கள். நம்மைப் போன்றே அவர்களும் இப்புவியின்சிருஷ்டிகளாயிருக்கிறார்கள். என்னே, நாம்... நல்லது, அது நீண்ட காலத்திற்கு அந்த விதமாக செயல்பட முடியாது.
477. சரி, இப்பொழுது, பிதா யாராயிருக்கிறார்? பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறார்கள். 1 யோவான் 5:7- ல் கவனியுங்கள், அது, “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, (அது குமாரனாயுள்ளது). பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்று உரைத்துள்ளது.
478. “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம்” அந்த மூன்று மூலக்கூறுகளும் கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து வந்தன. அவர்கள் அவருடைய விலாவில் உருவக் குத்தினபோது: தண்ணீர் வெளியே வந்தது, இரத்தம் வெளியே வந்தது, “உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புக்கிறேன்” என்றார். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, அதுவே அந்த மூன்று மூலக்கூறுகள். இந்த மூன்றும் ஒன்றாயிருக்கவில்லை, ஆனால் அவைகள் ஒருமைபட்டிருக்கின்றன.
479. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; 1 யோவான் 5:7, “இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்று கூறுகிறது.
480. “ஜலம், இரத்தம், ஆவி ஒருமைபட்டிருக்கின்றன.” ஒன்றாயல்ல, ஆனால் ஒருமைபட்டிருக்கின்றன. ஆகையால் பிதா. சரீரமானது செய்ய முடிந்த ஒரேக் காரியம், தேவன் தம்மையே காண முடிந்தபோது, அதாவது இந்த சரீரம், கடந்து சென்ற தண்டனையினூடாக பார்க்கும் போது, அங்கே இடைவெளி இருந்தது. அங்கே இடைவேளை இருக்கிறது, நீங்கள் பாருங்கள். அப்பொழுது அங்கே அந்த இரத்தமானது அவருக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே நிற்கிறதை அவர் காண்கிறார். இதோ அவருடைய வார்த்தை, “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று உரைத்தது. இங்கே இயேசு, “நான்... ஆனால் நான் அவர்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டேன். பாருங்கள், நான் அவர்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டேன்” என்றார்.
481. அன்றொரு இரவு அங்கே அந்த அறையில் உண்மையாக மோசமாக இருந்த அந்த ஸ்திரீயைக் குறித்த தரிசனத்தை நான் கண்டபோது கூறின என்னுடைய கதை நினைவிருக்கிறதா? நான் அவளை கடிந்து கொண்டிருந்தேன், “தேவனே, நீர் ஏன் அந்த இடத்தையே அழித்துப் போடக்கூடாது?” என்றேன். பாருங்கள், அப்பொழுது அவர் எனக்குக் காண்பித்தார். அப்பொழுது நான் அவளிடம் நடந்து சென்று, என்ன சம்பவித்திருந்தது என்று அவளிடம் கூறினேன்.
இப்பொழுது, இது என்னுடைய கடைசி கேள்வியாயுள்ளது.