482. நான் - நான்- நான் உண்மையாகவே சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலை விசுவாசிக்கிறேன். இது என்னுடைய சொந்த கருத்தாயுள்ளது, பாருங்கள். நமக்கு நேரமிருந்தால், நாம் அதனூடாக செல்லலாம், ஆனால் இப்பொழுது ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. பாருங்கள், யூதர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே அவரை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது நினைவிருக்கட்டும், எனவே அந்த நபர் இதை அறிந்து கொள்வார், நம்முடைய கண்கள் குருடாக்கப்பட்டன. இல்லை நாம் நம்முடைய பார்வையைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டன. வேதவாக்கியங்கள் அதைக் குறித்து உரைக்கின்றன என்பதை எவரும் அறிவர். அது சரியா? அதாவது நம்முடைய... நாம் குருடாக்கப்பட்டோம். நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி யூதர்கள் குருடாக்கப்பட்டனர் என்று பவுல் நமக்குச் சொல்லுகிறான். புரிகிறதா? நாம் புத்திர சுவிகாரத்தினாலே அந்த மரத்திற்குள்ளாக ஒட்டவைக்கப்படிருக்கிற காட்டொலிவ மரமாயிருக்கிறோம்.
483. இப்பொழுது இதோ என்னுடைய கருத்து, நான் அதை அப்படியே உங்களுக்குக் கூற போகிறேன். அவர்கள், “நீர். அவ்வாறு நினைக்கிறீரா?” என்று என்னைக் கேட்கிறார்கள். இப்பொழுது இந்த விதமாகவே இது சம்பவிக்கும் என்று நான் நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. அது எப்போது என்னவாயிருந்தாலும், தேவனுடைய கிருபையினாலும், அவருடைய இரக்கத்தினாலும் நாம் அங்கே இருப்போம் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்: பாருங்கள், அவருடைய கிருபையின் மூலமேயாகும், அது என்னவாயிருந்தாலும் சரி. என்னால் அதைக் கணித்துக் கூற முடியாமலிருக்கலாம், ஆனால் இந்த விதமாகத்தான் என்று நான் நினைக்கிறேன். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். புறஜாதியாருடைய காலம் இப்பொழுது முடிவுற்றுக் கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் முடிவில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன்.
484. இப்பொழுது யூதர்கள்: இங்கே யூதர்களுக்கு இரண்டு காரியங்கள் எப்பொழுதுமே அநியாயமாக்கப்பட்டு வந்துள்ளன; அவர்கள் குருடாய் இருந்து வருகின்றனர். அவர்களால் அதைப் பார்க்க முடியவில்லை; ஏனென்றால் புறஜாதியார், ஏனென்றால் ஒரு காரியம், அநேக முறை...
485. சகோதரி ஸ்மித் அவர்களே, நான் பென்டன் துறை முகத்தில் ஒரு யூதனிடத்தில் பேசினபோது, அவன் என்னிடத்தில் என்னக் கூறினான் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? (அங்கே இருந்த அந்த இஸ்ரவேலரின் இடங்களில். அங்கே அந்த இஸ்ரவேலரின் இடங்களில் ஒன்று) அந்த கேள்வி ஒரு குருட்டு மனிதனின் சுகமளித்தலைப் பற்றியதாயிருந்தது. அப்பொழுது அவர், “நீர்... யூதனுக்கு துண்டித்து... நீர் தேவனை மூன்று துண்டுகளாக துண்டித்து ஒரு யூதனுக்கு அளிக்க முடியாது; அவனிடத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக அளிக்க முடியாது” என்றார். மேலும், “நீர் அதை ஒரு யூதனிடத்தில் அளிக்க முடியாது, நாங்கள் விக்கிரகாராதனைக்காரர்கள் அல்ல” என்றார். அதனைத் தொடர்ந்து, “நாங்கள் ஒரே தேவனில் விசுவாசங்கொண்டிருக்கிறோம்” என்றார். புரிகிறதா?
486. நீங்கள் பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியாகிய தேவன் என்று தேவனை மூன்றாக்குகிறீர்கள்; நீங்கள் நிச்சயமாகவே அங்கே ஒரு யூதனை குருடாக்குகிறீர்கள், ஏனென்றால் அவன் அதை நன்கு அறிந்துள்ளான். அவன் அதைவிட நன்கு அறிந்துள்ளான். விக்கிரகாராதனை உள்ளது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அது உங்களை ஒரு விக்கிரகாரதைக்காரனாக்கிவிடும், நீங்கள் மூன்று தேவர்களை உடையவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அவைகளை ஒரே தேவனாக்க வேண்டும், அது மூன்று தேவர்கள் அல்ல, அது அதே தேவனின் மூன்று உத்தியோகங்களாகும். பாருங்கள், தேவன் பிதாத்துவத்தில் ஊழியம் செய்தார். அவர் குமாரத்துவத்தில் ஊழியம் செய்தார், அவர் இப்பொழுது பரிசுத்த ஆவியின் யுகத்தில் ஊழியம் செய்கிறார். அது அதே மாறாத தேவனாகும்.
487. அந்தக் காரணத்தினால்தான் நாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட கட்டளையிடப்பட்டோம்; ஏனென்றால் ஒரு நாமத்தில் அல்ல... நாமத்தில், நாமங்களில் அல்ல; நாமங்களில் அல்ல, அல்லது பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அல்ல; ஆனால், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அல்ல.” பாருங்கள், அதே தேவன் கிறிஸ்துவாயிருப்பதை அடையாளங்கண்டு கொள்ளுதல், பாருங்கள், அது யாராயிருக்கிறது, அது வேறெந்தவிதமாயுமிருக்க முடியாது. புரிகிறதா? வேதம்...
488. அப்படியானால் நம்முடைய வெளிப்பாடானது தவறாயிருந்தால், அப்பொழுது பேதுருவும், மற்ற அப்போஸ்தலர்களும் தவறான காரியத்தையே கற்பித்தனர் என்பதாகும், ஏனென்றால் வேதத்தில் ஒவ்வொரு நபரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். எந்த ஒரு நபரும் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” எப்போதுமே ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை, அது ஒரு கத்தோலிக்க உபதேசம். என்னால் அதை உங்களுக்கு அவர்களுடைய சொந்த வார்த்தைகளைக் கொண்டு, அவர்களுடைய சொந்த கிரேக்க வேதாகமம் அகாராதியையும், மற்ற ஒவ்வொரு காரியத்தைக் கொண்டும்நிரூபிக்க முடியும். அது ஒரு கத்தோலிக்கக் கோட்பாடு, ஒரு வேதாகம உபதேசமல்ல, அல்ல. எந்த மனிதனுமே...
489. இங்கிலாந்து அரசனும் கூட இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டான். ஏறக்குறைய கடைசி அப்போஸ்தலன் மரித்த ஆறுநூறு ஆண்டுகள் கழித்தே இந்த ஞானஸ்நானம் மாற்றப்பட்டது. இங்கிலாந்து அரசன் ஞானஸ்நானம் பெற்ற அந்த சமயத்தில் அது இங்கிலாந்து என்று கூட அழைக்கப்படாமல், அது “தூதர் நிலம்” என்றே அழைக்கப்பட்டது. அதிலிருந்துதான் இங்கிலாந்து என்ற பெயர் உண்டானது. அந்த அரசன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டான்.
490. அவனை மனமாற்றமடையச் செய்தது எதுவென்றால், ஒரு சிறு அடைக்கலான் குருவியாகும். எப்பொழுது... என்னால் எண்ணிப் பார்க்க முடிந்தால்... பரிசுத்த ஏஞ்சலோ அல்ல. இப்பொழுது, அவனுடைய பெயர் என்னவாயிருந்தது? அகடாபஸ் (விளங்காத எழுத்துகள் -ஆசி.), பரிசுத்த அகடாபஸ் என்றே நான் நினைக்கிறேன். இப்பொழுது, எனக்கு அந்தப் பெயர்தானா என்று நிச்சயம் தெரியாது. ஆனால், எப்படியோ, அவன் அங்கு சென்றான், அவர்கள் இவர்களில் சிலரைப் பிடித்துக் கொண்டனர்.
491. அவர்கள் இவர்களை தூதர்கள் என்று அழைத்தனர், ஏனென்றால் அந்த ஜனங்கள் அசீரியர்கள் போன்றவர்கள், கருமை நிறமுடையவர்களாயிருந்தனர், இந்த ஆங்கிலேயரோ நீண்ட, வெண்மையான, சுருளான தலைமுடியையுடைய இளம் பொன் நிறமான தலையை உடையவர்களாயிருந்தனர், ஆங்கிலேயர் - சாக்சன் என்பவர்கள் நீலநிற கண்களை உடையவர்களாயிருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அவர்கள், “இவர்கள் தூதர்களைப் போன்று காணப்பட்டனர்” என்று கூறினர். ஆகவே அவர்கள் அந்த தேசத்தையும், “தூதர் நிலம்” என்றே அழைத்தனர்.
492. அப்பொழுது அங்கு கர்த்தருடைய ஊழியக்காரன் ஒருவன் சென்று அவர்களுடைய ராஜாவுக்கு பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு பெரிய, திறந்த கணப்படுப்பினை அமைத்திருந்தனர். நான் அண்மையில் அதைக் குறித்த சரித்திரத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சிறிய பறவை அந்த வெளிச்சத்தண்டைப் பறந்து வந்து, பின்னர் திரும்பிப் போய்விட்டது, அப்பொழுது ராஜா, “அது எங்கிருந்து வந்தது? பின்னர் அது எங்கே சென்றது?” என்ற கேள்வியைக் கேட்டான். புரிகிறதா? அப்பொழுது அவன், “அந்தப் பறவை வெளிச்சத்திற்குள் வந்தது, நாம் அதைப் பார்த்தோம், பின்னர் அது மீண்டும் இருளுக்காக பறந்து சென்று விட்டது. அந்தவிதமாகவே ஒரு மனிதன் போகிறான் அல்லவா?” என்றான்.
493. அப்பொழுது பிரசங்கியார், “ஆனால் அவன் இங்கு வருவதற்கு முன்பு அவன் என்னவாயிருந்தான்?” என்று கேட்டார், பாருங்கள்.அது அந்த ராஜாவைப் பற்றிக் கொண்டது; அடுத்த நாள் காலையில் அவனும், அவனுடைய வீட்டாரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். அது உண்மை.
494. அதன் பின்னர் என்ன? தெளிப்பு ஞானஸ்நானம் முதலில் ஒரு மனிதனுக்கு அல்லது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தது கத்தோலிக்க சபையாயிருந்தது. கத்தோலிக்க சபையே முதலில் தெளிப்பு ஞானஸ்நானத்தைக் கொடுத்தது. முதலில் தண்ணீரை ஊற்றி ஞானஸ்நானம் கொடுத்தது கத்தோலிக்க சபையாகும். பிராட்டஸ்டென் சபை எப்பொழுதுமே ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது. வேதத்தில் அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீரில் மூழ்க்கு ஞானஸ்நானங் கொடுத்தனர். எல்லா இடத்திலுமே. அவர்கள் வேறு ஏதாவது வித்தியாசமாக எங்காவது செய்தார்களாக என்பதை ஒரு இடத்தில் கண்டறியுங்கள் பார்க்கலாம்.
495. இப்பொழுது, இதில், இந்த மகத்தான நேரத்தில், யூதர்கள்... விசுவாசிக்க முடியவில்லை, நான் அந்த ரபீயினிடத்தில் கேட்டேன், நான், “ரபீ, தீர்க்கதரிசிகளை விசுவாசிப்பது உமக்கு கடினமானதாக இருக்குமா?” என்று கேட்டேன்.
496. அவர், “நான் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறேன்” என்றார்.
497. அப்பொழுது நான், “ஏசாயா 9:6-ல், 'நமக்கு ஒரு குமாரன் பிறப்பார்?' என்று அவர் எதைப் பொருட்படுத்திக் கூறினார்? அவர் யாரைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்?” என்று கேட்டேன்.
498. அதற்கு அவர், “அவர் மேசியாவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்றார்.
499. அப்பொழுது நான், “அப்படியானால் மேசியா பிறப்பாரா?” என்று கேட்டேன்.
500. அதற்கு, “ஆம், அவர் பிறப்பார்” என்றார்.
501. அப்பொழுது நான், “அப்படி அவர் பிறக்க வேண்டுமானால், அவருக்கு ஒரு... அவர் ஒரு தாயை உடையவராயிருப்பாரே” என்றேன்.
502. அதற்கு அவர், “ஆம், அவர் ஒரு தாயை உடையவராயிருக்க வேண்டும். அவர் ஒரு தந்தையையும் கூட உடையவராயிருக்க வேண்டும்” என்றார்.
503. அப்பொழுது நான், “முற்றிலுமாக. சிவந்த சமுத்திரத்தை பிளந்த மகத்தான யோகோவா தேவனால் மாசற்ற பிறப்பினால் இந்த குழந்தைக்கு ஒரு பிறப்பை அளிக்க முடியும் என்று விசுவாசிப்பது உமக்கு கடினமாயிருக்குமா?” என்று கேட்டேன். புரிகிறதா? அங்குதான் அவர் மாட்டிக் கொண்டார்.
504. அவர், “ஆனால் நீங்கள் அவரை மூன்று தேவர்களாக்க முடியாது” என்றார்.
505. நான், “அவர் மூன்று தேவர்களாயிருக்கவில்லை” என்றேன். மேலும் நான், “மேசியா தேவனுக்கு என்ன உறவு முறையாய் இருப்பார்?” என்று கேட்டேன்.
506. அவர், “அவர் தேவனாயிருப்பார்” என்றார்.
507. அப்பொழுது நான், “இப்பொழுது நீர் அதைப் புரிந்து கொண்டீர். இப்பொழுது நீர் அதைப் புரிந்து கொண்டீர், அவர் தேவனாயிருக்கிறார்” என்றேன். அது சரியாயுள்ளது.
508. அதன்பின்னர் அவர் என்னிடத்தில் கூற முயன்றதோ, “இந்த மனிதன், இந்த நசரேயனாகிய இயேசு, ஒரு திருடனாயிருந்தார். அவர் ஒரு திருடனாயிருந்தார்” என்று கூறினார்.
509. அப்பொழுது நான், “ரபீ, எப்படி அவர் ஒரு திருடனாயிருந்தார்?” என்று கேட்டேன்.
510. அதற்கு அவர் “உங்களுடைய சொந்த வேத வசனங்களே, அவர் ஓய்வு நாளிலே பயிர் வழியேப் போய்க் கதிர்களை எடுத்துக் கொண்டார்' என்று கூறியுள்ளதே” என்றார்.
511. அப்பொழுது நான், “இப்பொழுது ரபீ, நீர் நன்கு. அதைப் பார்க்கிலும் வேதத்தைக் குறித்து அதிகமாக அறிந்திருக்கிறீர். உங்களுடைய சொந்த வேதவாக்கியமே அது நியாயப் பிரமாணஞ் சார்ந்தது என்று கூறுகிறதே, அதாவது 'ஒரு மனிதனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், அவன் வேண்டுமான கதிர்களைக் கொய்யலாம், ஆனால் அவன் அந்த விளைச்சலை தன்னுடைய சாக்கு மூட்டையில் எடுத்துக் கொண்டு வரக் கூடாது என்பது நியாயமாயுள்ளதே.' ரபீ, அது உங்களுடைய சொந்த நியாயப் பிரமாணமாயிற்றே” என்றேன்.
512. அவர் அங்கேயே சற்று நேரம் திகைத்துப் போய் நின்று விட்டார், அவர் அவர் அவர் அதை விசுவாசித்தார், ஏனென்றால் அவர் அவர் சாட்சி பகர்ந்தார். அவர் கொஞ்சம் கழித்து இவ்வாறு கூறினார், அவர், “ஜானுடைய கண்கள்... எந்த எந்த காரணத்தால் திறக்கப்பட்டது?” என்றும், “நீர் அதை எப்படி செய்தீர்?” என்றும் கேட்டார்.
513. அப்பொழுது நான், “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்” என்றேன்.
514. “ஊ”. அவர் அவர் அதை அறிந்திருக்கவில்லை, தொடர்ந்து அவர், “உங்களால் தேவனை மூன்று துண்டுகளாக வெட்ட முடியாது” என்றார்.
515. நான், “ரபி, அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட யோகோவாவாயிருந்தார். அவர். அந்தவிதமாகத்தான் அவர் இருந்தார், அவர் மாம்சத்தில் யேகோவாவாயிருந்தார். அவருடைய சொந்த மானிட நாமம், அதுவே மீட்பின் நாமமாயிருந்தது, ஏனென்றல் ஒரு மனிதன் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழே வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை, அந்த மானிட மீட்பின்நாமமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே. இரட்சிக்கப்பட முடியும். அது உண்மை. அவர் தேவனாய் இருந்தார், அவர் தேவனாயிருக்கிறார், அவர் என்றென்றைக்கும் தேவனாயிருப்பார், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பது முற்றிலும் உண்மையே” என்றேன்.
516. இப்பொழுது, புறஜாதி சபையானது சீக்கிரத்தில்... புறஜாதி சபையின் சரீரத்தின் முடிவு உண்டாகும் என்று நான் விசுவாசிக்கிறேன். வாசல்கள் இடையே. இயேசு மத்தேயு 24-ல் கூறினார், (நான் அந்த ஒரு வேதவாக்கியத்தை ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ள உள்ளேன்), அவர், “புறஜாதி யுகம் நிறைவேறும் வரைக்கும் அவர்கள் எருசலேமின் மதில்களை மிதிப்பார்கள்” என்றார்.
517. இப்பொழுது கவனியுங்கள். யூதர்கள் காட்சியிலிருந்து எடுக்கப்படுவர் என்று மத்தேயு 24-ல் நம்முடைய கர்த்தராகிய இயேசுவினால் அது கூறப்பட்டது. முன்பு இருந்த பண்டைய தீர்க்கதரிசிகளில், தானியேல் கூறினான், அவன், “எழுபதாவது வாரம் இன்னும் யூதர்களுக்கு குறிக்கப்பட்டிருக்கும். (பிரபு) வாகிய மேசியா வந்து, எழுபதாவது வாரத்தின் மத்தியில் தீர்க்கதரிசனம் உரைப்பார், அது ஏழு வருடங்களாயிருந்தது, அந்த வாரத்தின் பாதியில் அவர் சங்கரிக்கப்படுவார். அது எவ்வளவு பரிபூரணமாயிருந்தது என்று பாருங்கள், இயேசுவானவர் சரியாக மூன்றரை வருடங்கள் பிரசங்கித்தப் பிறகு சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் மூன்று. அது இங்கே இந்த மற்ற கேள்வியில் வருகிறது. யூதர்களுக்கு, இன்னும் அவர்களுக்கு மூன்றரை வருடங்கள் உள்ளன. அது இருக்கத்தான் வேண்டும்.
518. இப்பொழுது நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 7வது அதிகாரத்தை எடுத்துக் கொள்வீர்களேயானால், அதில் யோவான் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்கள் யாவரும் முத்திரையிடப்பட்டதையும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறித்தும் கண்டான். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? இன்னும் சம்பவிப்பதற்கு முன்னர், வருகை முதலியவற்றைக் குறித்துக் கண்டான்.
519. இப்பொழுது நாம் முடிப்பதற்கு முன்பு இப்பொழுது இது எவ்வளவு அழகாக உள்ளது என்பதைப் பாருங்கள். அது எப்படி சுற்றி அசைகிறது-எப்படி என்று கவனியுங்கள். இப்பொழுது, அந்த யூதர்கள் அந்தகாரமாக்கப்பட்டிருக்கின்றனர்.
520. இப்பொழுது, இங்கே இந்த யூதர்கள், இங்கே அவர்களில் அநேகர், அப்படியே அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள், அவர்கள் உலகத்தின் செல்வத்தையே பிடித்து வைத்துள்ளனர். அவர்கள் வெறுமென பண சிந்தை கொண்ட ஜனங்கள், அவ்வளவுதான் உங்களால் அவர்களிடத்தில் பார்க்க முடியும், பாருங்கள்; மிகவும் கர்வமுள்ளவர்கள், அலட்சியப்போக்குடையவர்கள், செவிகொடுக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் கவனிப்பீர்களேயானால், அவர் பேசிக் கொண்டிருந்தது இந்த யூதர்களைக் குறித்து அல்ல.
521. இப்பொழுது, புறஜாதிகள். இப்பொழுது கவனியுங்கள், இந்த யூதர்களுக்காக இன்னும் மூன்றரை வருடங்கள் விடப்பட்டிருக்கின்றன். இப்பொழுது, புறஜாதியாரின் யுகம் முடிவுறும் வரை எருசலேம் நகரம் புறாஜாதிகளால் மிதிக்கப்படும் என்று இயேசு கூறினார். (இப்பொழுது ஜனங்களாகிய நீங்கள் யுகங்களில் நம்பிக்கைக் கொள்வதில்லை, அதைக் குறித்து என்ன?) புறஜாதி யுகம் முடிவுறும் வரை... புறஜாதி யுகம் முடிவுறும் போது (புறஜாதியாரின் காலம் முடிவுறும்போது), அப்பொழுது அந்த நகரம் யூதர்களிடத்திற்கு திரும்ப அளிக்கப்படும். இயேசு அந்த சந்ததியைக் குறித்து அதைக் கூற முன்னதாகவே சென்றார். அவர், “நீங்கள் வெளியே போய், அத்திமரம் துளிர்விடுதையும், மற்ற எல்லா மரங்களும் துளிர் விடுவதையுங் காணும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்” என்றார். மேலும், “அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்றார்.
522. இப்பொழுது, அவர்கள், “அந்தவிதமாக அவர் பேசிக்கொண்டிருந்தபடியால்” அந்த சந்ததியில் அதற்காக அவர்கள் கவனித்து வந்தனர். அப்படி இல்லையே!
523. கவனியுங்கள்! அவர், “அத்திமரம் துளிர்விடுவதைக் கண்ட சந்ததி” என்றார். இப்பொழுது கவனியுங்கள், அவர், “அத்திமரமும், மற்ற எல்லா மரங்களும்” என்றார். இப்பொழுது வேறு வார்த்தைகளில் கூறினால், “அந்த நேரத்தில் ஒரு உலகளாவிய எழுப்புதல் உண்டாயிருக்கும்.” இப்பொழுது இந்த தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள், அது எப்படி கிரியை செய்கிறது என்றும், எப்படி பரிபூரணமாய் ஒன்று சேருகிறது என்பதையும் கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். “மற்ற எல்லா மரங்களும் துளிர்விடுதல், புதுப்பித்தல்.” ஒரு மரம், அது துளிர்விடும் போது, புதுபித்துக் கொண்டிருக்கிறது. அது சரிதானே? இப்பொழுது, எவருமே, அத்தி மரமானது எப்பொழுதுமே யூதர்களைக் குறிக்கிறதாய் இருந்து வருகிறது என்பதை ஒரு தீர்க்கதரிசன ஆசிரியரும் அறிவார். நாம் அதை அறிவோம். அது யூதர்களாகும். இப்பொழுது...
524. யோவேலைக் கவனியுங்கள், அவன் அதை எடுத்துக் கூறினபோது, அவன், “பச்சைப் புழு விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது; முசுக்கட்டைப் பூச்சி விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி புசித்து...” என்றான். நீங்கள் கவனிப்பீர்களேயானால், அந்த ஒரே பூச்சி வித்தியாசமான பருவங்களில் உள்ளது. பச்சைப்புழு, முசுக்கட்டைப் பூச்சி, வெட்டுக்கிளி. அது எல்லாமே ஒரே பூச்சியாயிருக்கிறது, அது அதனுடைய ஜீவியத்தின் வித்தியாசமான நிலைகளில் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், அந்த அதே பூச்சி அங்கே முன்பிருந்த யூதமதத்தை தின்னத் தொடங்கினது, அது வெட்டப்பட்டு, அது அதனுடைய அடிக்கட்டை வரை தின்று கொண்டே சென்று விட்டது; ஆனால் அதன்பின்னர் அவன், “நான் திரும்ப அளிப்பேன்' என்று கர்த்தர் சொல்லுகிறார், முசுக்கட்டைப் பூச்சிகள் இத்தனை வருடங்களாக பட்சித்ததைத் திரும்ப அளிப்பேன். நான் என் ஜனத்தை மகிழ்ச்சியாக்குவேன்! என்றார்” என்று கூறினான். புரிகிறதா? இப்பொழுது, அந்த மரம் தின்னப்பட்டு வந்தது. புறஜாதிகள் அதற்குள் ஒட்ட வைக்கப்பட்டனர். அது உண்மை. சரி, நாம் கனி கொடுக்க வேண்டும்.
525. இப்பொழுது முடிவின் நேரம் வரும்போது, நாம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும்போது, (அது சரியா என்று நான் பார்க்கிறேன்) சுவிசேஷத்தில், ஒரு மகத்தான எழுப்புதல் சம்பவிக்க வேண்டியதாயுள்ளது.
526. இப்பொழுது யூதக் கொடியானது உலகத்திலேயே மிகப் பழமையான கொடி என்பதை நீங்கள் அறிவீர்களா? அது இரண்டாயிரம் ஆண்டுகளாக, அதற்கும் மேலாக, கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக பறக்காமல் கிடந்து வருகிறது. பாபிலோனுக்கு சிறைப்பட்டு போனது முதற்கொண்டு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக தாவீதின் அறுமுனை நட்சத்திரக் கொடியான யூதக் கொடி ஒருபோதும் பறக்கவேயில்லை. இப்பொழுது, ரோம சாம்ராஜ்யம் அவைகளைக் கைப்பற்றியிருந்த காரணத்தால் (மேசியா வந்த போது, அவர்கள் அவரை புறக்கணித்தனர்), அவர்கள் பூமியின் நான்கு திசைகளிலும் சிதறடிக்கப்பட்டிருந்தனர். ஆனால் மே மாதம் ஆறாம் தேதி 1946ம் வருடம், மீண்டும் அந்தக் கொடியானது மீண்டும் எருசலேமின் மேல் பறந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா? 1946-ம் வருடம் மே மாதம், ஏழாம் தேதி நாள் கர்த்தருடைய தூதன் எனக்கு இங்கே பிரசன்னமாகி, (அதற்கு அடுத்த நாள்) உலகம் முழுவதிலும் எழுப்புதலைக் கொண்டுவர, என்னை அனுப்பினதை நீங்கள் அறிவீர்களா? அதற்கு அடுத்த காலையே! அந்தப் பிற்பகல் சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கையில் அந்தக் கொடியானது எருசலேமில் ஏற்றப்பட்டபோது, அதே நேரத்தில் இங்கே அமெரிக்க ஐக்கிய நாட்டில் கர்த்தருடைய தூதன் பிரசன்னமானார். “நீங்கள் அத்திமரமும், மற்ற மரங்களும் துளிர்விடுவதைக் காணும்போது!”
527. அநேக ஆண்டுகளுக்கு முன்னர் ஒஹையோ நதியில் அங்கே வந்து தொங்கின அந்த நட்சத்திரம் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? அப்பொழுது அவர் கூறினது... அவர் இறங்கி வந்தபோது, இதோ இன்னமும் அதைக் குறித்த ஒரு புகைப்படம் இங்கே உள்ளது. அவர், “முதல் வருகைக்கு ஒரு முன்னோடியாகயோவான் சென்றது போல உன்னுடைய செய்தியானது இரண்டாம் வருகைக்கு ஒரு முன்னோடியாக புறப்பட்டுச் செல்லும்” என்றார். பாருங்கள், உலகம் முழுவதிலும் ஒரு எழுப்புதல் வீசியது. கோடிக்கணக்கான மடங்கினைக் கொண்ட ஒரு மகத்தான எழுப்புதல்.
528. பிரமாணங்கள் கடைபிடித்தவர்களும், தேசத்தை சுற்றிலுமிருந்த பல்வேறுபட்டவர்கள் மற்றும் பெரிய சபைகள், “பில்லி சண்டேயின் நாட்கள் முடிவுற்றுவிட்டன” என்றனர். ஆனால் சபையானது புதுப்பிக்கத் துவங்கினதை அவர்கள் (சாதாரண ஜனங்கள்) கண்டபோது, அவர்கள் தங்களுடைய தப்பிதங்களை உணர வேண்டியவர்களாயிருந்தனர். சார்லஸ் புல்லர் அந்த ஸ்தானத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் அவர் மிகவும் வயோதிகராயிருந்தார்; எனவே அவர்கள் பில்லி கிரஹாமோடு சென்றனர். தேவன் பில்லி கிரஹாமை தெரிந்து கொண்டு.. இல்லை பாப்டிஸ்டு சபையில் செய்தார், அவர்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கொண்டனர். ஒரு பிரசங்கியாயிருப்பதைப் பொருத்தமட்டில் பில்லி கிரஹாமை சகோதரன் நெவிலோடு ஒப்பிட்டால், பாதிகூட இவர் பிரசங்கிப்பதைப் போன்று பிரசங்கிக்கிறதில்லை. இல்லை... எந்த வழியிலுமே ஒப்பிடவே முடியாது. ஆனால் அது என்னவாயுள்ளது? அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது, அது கூட்டமைப்பாயுள்ளது, எல்லோரும் அதைச் சுற்றிக் கொண்டனர், அதைச் சுற்றி ஒன்று சேர்ந்து கொண்டனர். பில்லியும் அதேக் காரியத்தைக் கூறுகிறார். பாருங்கள், அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. தேவனுடைய வார்த்தையை நிறைவேற்ற அது செய்யப்பட வேண்டியதாயிருந்தது. அவர்கள் ஒன்று திரளும்படியான ஆவியைப் பெற்றிருக்கவில்லை, ஆகையால் அவர்கள் ஒன்று திரளும்படியாக வார்த்தையை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது; எனவே அவர்கள் அவ்வாறு செய்தனர். பில்லி வார்த்தையை பிரசங்கிக்கும் ஒரு பிரசங்கியாய், ஒரு சிறந்த பிரசங்கியாயிருந்தபடியால் அவர்கள் சுற்றி ஒன்று திரண்டனர்; ஆகையால் அது அவர்களுடைய திரளான கூட்டத்தில் எல்லா குளிர்ந்த சம்பிரதாய முறையையும் கொண்டு சேர்த்தது. இயற்கைக்கு மேம்பட்டவர், தெய்வீக சுகமளித்தலோடு, வல்லமைகளோடு, கிரியைகளோடு தேவனுடைய அற்புதங்களினால் இந்த சபையில்... தன்னுடைய தீவட்டியில் எண்ணெய்யைப் பெற்றுக்கொண்ட எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய மணவாட்டியை, அவளுக்கு ஒரு எழுப்புதலை ஏற்படுத்தினார். புரிகிறதா? குளிர்ந்த சம்பிரதாயமான சபையோ அதனுடைய எழுப்புதலை உடையதாயிருந்தது. இங்கே இஸ்ரவேலர் தங்களுடைய எழுப்புதலோடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
529. நான் இப்பொழுது என்னுடைய வீட்டில் நள்ளிரவிற்கு மூன்று நிமிடங்கள் என்ற ஒரு திரைப்படத்தை அங்கே வைத்துள்ளேன்.அந்த யூதர்கள் தங்கள் தேசத்திற்குள் வருவதைக் குறித்த ஒரு புகைப்படத்தையும் நாங்கள் வைத்துள்ளோம். அவர்கள் தங்கள் தேசத்திற்குள் வருவதைக் குறித்து நீங்கள் லுக் என்ற பத்திரிக்கையில் பார்த்து படித்திருக்கிறீர்கள். கப்பல்களில் ஏற்றப்பட்டு அங்கே ஈரானிலிருந்து வந்து கொண்டிருந்தனர்; அந்த யூதர்கள் இயேசுவானவர் பூமியின் மேல் இருந்ததையும், அவர்கள் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டு போகப்பட்டதையும் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அங்கிருந்ததைப் பற்றி மட்டுமே அறிந்திருந்தனர். அவர்கள் ஏர் உழுதனர். அவர்கள் அங்கே பண்டைய மர கலப்பைகளைக் கொண்டு ஏர் உழுததை நீங்கள் லுக் அல்லது லைப் என்ற பத்திரிக்கையில் அவைகளைப் பார்த்திருக்கிறீர்கள். அவர்கள் அந்த ஆகாய விமானங்கள் அவர்களிலிருந்த இடத்திற்கு பறந்து வருவதைக் கண்டபோது, “அவர்கள் அங்கிருந்து கழுகின் செட்டைகளின் மேல் மீண்டும் சுமந்து கொண்டு செல்லப்படுவார்கள்” என்று தேவன் அவர்களிடத்தில் கூறியிருந்தபடியால், “அதுதான் இது” என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். அது உண்மை. அவர்கள் அந்நிலையில்தான் இருந்தனர். எனவே அந்த யூதர்கள், “அதுதான் இது” என்றனர். அவர்கள் அதில் ஏறிச் சென்றனர், உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த அவர்களிடத்தில் அவர்களுடைய சொந்த குரலில் அவர்களிடம் பேட்டிக் கண்ட அவர்களுடைய திரைப்படங்களை நாங்கள் வைத்துள்ளோம். அவர்களில் சிலர் தங்களுடைய முதியவர்களை, தங்களுடைய முதுகில் சுமந்து வந்தனர், அவர்கள் குருடாயும், முடமாயுமிருந்தனர். அவர்கள் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு உள்ளே வந்தனர்.
530. அவர்கள் உடனே நிலத்திலிருந்த கற்களை கோணிப்பைகளில் பொறுக்கத் துவங்கினர்; அவர்கள் இன்றைக்கு தண்ணீர் ஊற்றுக்களை கண்டுபிடித்துள்ளனர், அது உலகத்திலேயே மிக மகத்தான வேளாண்மை தேசமாக உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா ஐஸ்வரியங்களையும் ஒன்று சேர்த்தாலும், அதைப் பார்க்கிலும் அதிகமான ஐஸ்வரியங்களை சவக்கடல் வைத்துள்ளது. யூதர்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள், இது புறஜாதிகளிடத்திலிருந்து மறைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் ஒரு ரோஜாவைப் போல் மலர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
531. அவர்கள் அவர்கள் அவர்கள் யூதர்களிடத்தில் கேட்டனர், அவர்கள், “நீங்கள் மரிப்பதற்காகவா தாய் நாட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
532. அப்பொழுது அவர்களோ, “நாங்கள் மேசியாவைக் காண திரும்ப வந்து கொண்டிருக்கிறோம். அவர் எங்கே இருக்கிறார்? அவர் இங்கே இருக்க வேண்டுமே” என்றனர்.
533. சகோதரனே, அத்திமரம் துளிர்விடுவதை நீங்கள் காணும்போது, அவர், “இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாது” என்றார். சம்பிரதாயங்களோடுள்ள எழுப்புதலைப் பாருங்கள். சபையோடு உள்ள எழுப்புதலையும் பாருங்கள். யூதர்களோடு உண்டாகிற எழுப்புதலையும் பாருங்கள், அவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். சபை, ஆவியினால் நிரப்பட்ட சபை, மணவாட்டி. தங்களுடைய தீவட்டிகளில் எண்ணையோடு உள்ள கன்னிகைகள் கலியாண விருந்திற்குச் செல்வார்கள்.
534. யூதர்களோ, “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காக காத்திருந்தோம்” என்பார்கள். அங்குதான் உங்களுடைய ஒரு இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் உள்ளனர். அதை ரசல் என்பவரின் கருத்துரைகளைப் பின்பற்றுபவர்கள் குழப்பியுள்ளனர். அங்கே நின்று கொண்டிருக்கும் அந்த யூதர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள், “இவரே நம்முடைய தேவன்; இவருக்காகவே காத்திருந்தோம்” என்றனர். அவர்கள் அவரைப் பார்த்து, “அவைகளை உமக்கு எங்கே உண்டாயின? உம்முடைய கையில் உள்ள வடுக்கள் உமக்கு எங்கே உண்டாயின?” என்று கேட்பார்கள்.
535. அவர், “நான் அவைகளை என் சிநேகிதரின் வீட்டில் பெற்றுக் கொண்டேன்” என்றார். அது உண்மை, “அது என் சிநேகிதரின் வீட்டில்.”
536. அவர் என்ன செய்வார்? புறஜாதி சபையானது மகிமைக்குள்ளாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மணவாட்டியோ கிறிஸ்துவை மணந்து கொள்வாள்.
537. யோசேப்பு தன்னுடைய ஜனங்களுக்கு எப்படி தன்னை வெளிப்படுத்தினான்? அவன் தன்னுடைய சமூகத்திலிருந்து எல்லா புறஜாதிகளையும் வெளியேற்றிவிட்டான். அவன் நிச்சயமாகவே செய்தான் ஸ்திரீயினுடைய சந்ததியான மற்றவர்களுக்கு என்ன சம்பவிக்கும்? வலுசர்ப்பம் தன்னுடைய வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றி யுத்தம் பண்ணப் போயிற்று; இயேசு, “அவர்கள் புறம்பான இருளுக்குள் தள்ளப்படுவார்கள், அங்கே அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்,” என்றார். அந்த பெரிதான துன்ப வேளைகளில் புறஜாதி சபைக்கு சோதனைகள் உண்டாகும்.
538. அப்பொழுது என்ன சம்பவிக்கும்? இரத்த சாட்சிகள் வரும்போது, தேவன் அப்பாலுள்ள யூதர்களிடத்திலிருந்து ஒவ்வொன்றையும் பிரித்துள்ளபோது, யோசேப்பு செய்ததுபோல் இயேசு திரும்புவார். அவர்கள் யோசேப்பைக் குறித்து கேள்விப்பட்டபோது, அவன் தன்னுடைய எல்லா காவலர்களையும் மற்றுமுள்ள எல்லோரையும் வெளியேற்றிவிட்ட போது, அவன் சிறிய பென்யமீனையும், அவர்கள் அங்கு நிற்பதையும், யோசேப்பைகொன்றதற்காக அவர்கள் வருத்தப்படுவதையும் கண்டான். அவர்கள் யோசேப்பை கொன்று விட்டோம் என்றே எண்ணியிருந்தனர், இங்கோ அவன் அவர்களுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன், “நான் யோசேப்பு. நான் உங்களுடைய சகோதரன்” என்றான்.
539. அப்பொழுது அவர்கள், உண்மையாகவே நடுங்கி, “அவர் யோசேப்பு. இப்பொழுது நாம் அவரை அறிவோம்,” என்றனர்.
540. அவர், “நான் இயேசு, நான் மேசியா” என்று கூறும்போது,
541. அவர்களோ, “ஓ, என்னே, இப்பொழுது நாம் என்ன தண்டனையை பெற்றுக் கொள்வோம்!” என்பார்கள்.
542. இவையாவும் தேவனுடைய மகிமைக்காக நடந்தன. அது அவர்... மாட்டாது. நல்லது, பார்வோனின் அரண்மனையில் அவன் அழுவதை அவர்களால் கேட்க முடிந்தது, யோசேப்பு அவர்களுக்காக அழுதான்.
543. புறஜாதியாராகிய நாம் ஒரு வாய்ப்பினைப் பெற்று, உள்ளே வரும்படிக்கு, இயேசு குருடாக்க வேண்டியதாயிருந்த அந்த யூதர்களை அவர் காணும் வரைக் காத்திருங்கள், அந்த வேளை உண்டாகும் என்றே நான் உங்களிடத்தில் கூறிக் கொண்டிருக்கிறேன். அவர் அந்த யூதர்களை ஏற்றுக் கொள்வார், நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம், அந்த யூதர்கள் இரட்சிக்கப்படுவர். ஆம், ஐயா, அங்கே சம்பவிக்கத் தான் வேண்டும். அதுவே அதைக் குறித்த என்னுடைய கருத்தாயுள்ளது, வேதத்தில் அதை இதற்கு மேல் வேறெங்கும் என்னால் காண முடியவில்லை. நீங்கள் அவர்கள் மூவரையும் மீண்டும் ஒன்று சேர்த்து கவனிக்க வேண்டும்.
544. நீங்கள் உறங்கும் கன்னிகையை, வெறுமென சாதாரண சபையை, ஒப்புதல் கொண்டுள்ளதைக் கவனிக்க வேண்டும், பாருங்கள். நீங்கள் சபைக்குச் சென்று. அதாவது முதலில் யூதர், முதலில் யூதர், குருடாக்கப்பட்ட நபராய் ஓரத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் அடுத்த கட்டத்தை கவனிக்க வேண்டுமானால் அது உறங்கும் கன்னிகையாய் உள்ளது, தாமதப்படுத்திக் கொண்டிருந்தவர்கள், வெறுமென சபைக்குச் சென்று, சபையில் சேர்ந்து, அழகான நல்ல நபராய் இருந்தனர். அதன்பின்னர் நீங்கள் சபையை, ஆவிக்குரிய பிரகாரமானதை, எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான மணவாட்டியைக் கவனிக்க வேண்டும், அவள் அங்கு நிற்கிறாள். அந்த மூன்று ஜனங்கள், உங்கள். முடியாது. அவர்கள் சற்றேனும் கலக்கப்படவில்லை. அவர்கள் எல்லோரும் ஒரேவிதமாக இல்லை. யேகோவா சாட்சிக்காரர், “அங்குள்ள ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் மணவாட்டி” என்று கூறுவது போல் அல்ல; அது தவறாகும். அது யூதர்கள், பாருங்கள். ஒரு மணவாட்டி, யூதர்கள், உறங்கும் கன்னிகைகள் உள்ளனர். நீங்கள் அவர்கள் எல்லோரையும் புரிந்து கொண்டு, “நல்லது, அவர்கள் மூவரும் வித்தியாசமானஇடங்களில் இருக்கிறார்கள்” என்று கூறுவீர்கள். அவர்கள் எல்லோருமே, மூன்று வகையான வித்தியாசமான ஜனங்களாய் உள்ளனர். நிச்சயமாகவே அவர்கள் ஒரே வகையானவர்களாயிருக்க முடியாது.
545. அதன்பின்னர் இயேசு பூமிக்கு திரும்பும்போது... யூதர்கள், அவர்கள் என்னவாயிருக்கிறார்கள்? ஆலயத்தைக் காவல்புரியும் அண்ணகர்கள். இயேசு திரும்பி வரும்போது, அவர் மணவாட்டியோடு வருகிறார். இயேசு மூன்று முறை வருகிறார்: அவர் முதல் முறை தம்முடைய சபையை மீட்க வந்தார், அவர் இரண்டாம் முறை தம்முடைய சபையை ஏற்றுக்கொள்ள வருகிறார், அவர் மூன்றாம் முறை தம்முடைய சபையோடு வருகிறார். புரிகிறதா? சரியாக. ஆகையால் அவை யாவும் ஒரு மகத்தான பரிபூரண வருகையாயுள்ளது, அவை யாவும் ஒரே மகத்தான பரிபூரண தேவனாய் உள்ளது; அவை யாவும் ஒரே மகத்தான பரிபூரண தேவனாய் உள்ளது; அவையாவும் ஒரே மகத்தான பரிபூரண கிறிஸ்துவாயுள்ளது: ஒரே மகத்தான பரிபூரண சபை, ஒரே மகத்தான பரிபூரண மீட்பு... ஒவ்வொரு காரியமும்; அது ஒரு திரித்துவமாய் உண்டாகிறது, ஆனால் அவை யாவும் ஒன்றில் உள்ளது. புரிகிறதா? அது மூன்று ஜனங்கள் அல்ல, இது மூன்று அல்ல; அது ஒரே நபராய், ஒரே சபையாய், ஒரே சரீரமாய், ஒரே கிறிஸ்துவாய், ஒரே கர்த்தராய், “உங்கள் எல்லோருக்குள்ளும், உங்கள் எல்லோர் மூலமாயுமுள்ளது,” அதைப் போன்றதாகவே உள்ளது. எல்லாம் ஒன்றே!
546. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை சற்று நீண்ட நேரம் பிடித்து வைத்துக் கொண்டேன்.
547. இப்பொழுது கர்த்தருக்குச் சித்தமானால், நான் ஒரு சில இரவுகள், மீண்டும் வருவேனானால் அல்லது ஒரு ஞாயிறு இரவு அல்லது அதைப்போன்று ஒரு சமயம் வந்தால், அப்பொழுது இங்கு மேய்ப்பன் தன்னுடைய இருதயத்தில் கூறுவதற்கு எந்த ஒரு காரியத்தையும் உடையவராயில்லாமலிருந்தால், நான் இவைகளுக்கு இங்கு பதிலளிக்க முயற்சிப்பேன். ஓ, இங்கே சில சிறந்த கேள்விகள் இன்னும் உள்ளன. எத்தனைபேர் அவைகளைக் குறித்து கேட்டறிந்து கொள்ள விரும்புவீர்கள்? ஓ, நான் அவைகளை விரும்புகிறேன். நாம் ஆராதனையை மேய்ப்பரிடம் ஒப்படைக்கும் முன் நான் மீண்டும் அவைகளினூடாக, உடனே துரிதமாகச் செல்லட்டும்.
548. இதற்கு செவி கொடுங்கள். [சகோதரன் பிரான்ஹாம் பின்வரும் எட்டு கேள்விகளுக்கும் பாகம் 3-ல் பாரா 668-லிருந்து துவங்கி, கேள்வி எண்கள் 67-லிருந்து 74- வரையிலுமாக பதிலளிக்கிறார் -ஆசி.] அந்த கற்கள் எங்கே பிரிதி... வெளிப்படுத்தின விசேஷம் 21ல் உள்ள இந்த கற்கள் எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன? அது ஒரு நல்ல கேள்வியாயுள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் 5 அதிகாரத்தில் உள்ள நான்கு ஜீவன்களைக் குறித்து விளக்கிக் கூறவும். அங்கே மற்றொரு நல்ல கேள்வியும் உள்ளது. இருபத்தி நான்கு மூப்பர்கள் யார்? அங்கே இன்னொரு நல்ல கேள்வியும் உள்ளது, பாருங்கள். ஆதியாகமம் 38-ம் அதிகாரத்தில் உள்ள சிவப்பு நூல் எதைப் பொருட்படுத்தினது? உங்களுக்கு நினைவிருக்கும், அவன் போய், தன்னுடைய சொந்த மருமகளையே ஒரு வேசி என்று எண்ணி அவளோடே சேர்ந்துவிட்டான்; அதற்கு கிரயத்தையும் பேசி கொடுத்து அனுப்பினான்; அதன்பின்னர் அந்தப் பிள்ளை பிறக்கும்போது, அவர்கள் அதனுடைய கையில் சிவப்பு நூலைக் கட்டினர். (அந்தப் பிள்ளை முதலில் கையை வெளியே நீட்டி, பின்னர் அதை உள்ளே இழுத்துக் கொண்டது), எனவே இவனுக்கு முன்னால் அடுத்தவன் பிறந்துவிட்டான். ஓ, அது நல்ல ஒன்றுதான்; அது நிச்சயமாகவே நல்ல கேள்வியாய் உள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தில் உள்ள சாட்சிகளின் மரணத்தைக் குறித்து அனுப்பப்படவுள்ள வெகுமதிகள் என்னவாயிருக்கின்றன? அப்பொழுதுதான் மோசேயும், எலியாவும் இந்த ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களின் எழுப்புதலுக்காக திரும்பி வருகிறார்கள். அந்த வெகுமதிகள் என்னாவாயுள்ளன? அவைகள் என்னவாயிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள், அதுவும் சிறந்ததாய் உள்ளது. ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு... பரிசுத்தவான்கள் எங்கேயிருப்பர்? (பையனே, அதுவும் நல்ல ஒரு கேள்வி.) ஆளுவார்களா? அவர்கள் எந்தவிதமான ஒரு சரீரத்தில் இருப்பார்கள்? நாம் எப்படி தூதர்களை நியாயந்தீர்ப்போம்? கொரிந்தியர் முதலாம் நிரூபத்தில் ஏன் தூதர்களினிமித்தம் ஏன் தலையின் மேல் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும்? கொரிந்தியரின் புத்தகம் முதலாம் நிரூபத்தில் சில நல்ல
கேள்விகள், உண்மையாகவே நல்ல கேள்விகளாய் உள்ளன.
549. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் இந்தக் காரியங்களை ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்தறிய கர்த்தர் அனுமதிப்பார் என்று நான் நம்புகிறேன், அவை யாவும் அவருடைய மகிமைக்கானதாயுள்ளது. அவைகளைக் குறித்த கருத்துகளின் பேரில் நாம் வேறுபாடு கொள்ளலாம். ஆனால் நான் ஒருகாரியத்தைக் கூறுவேன், நான் அவைகளைக் குறித்து பேசும்போது, நீங்கள் எல்லோருமே அவைகளைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்வீர்களேயானால் நலமாயிருக்கும், நாம் ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறோம். ஆமென். ஆமென்.