576. இப்பொழுது, அது ஒரு-ஒரு அற்புதமான கேள்வியாயுள்ளது. இப்பொழுது, நாம் வேததில் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்... அநேக சமயங்களில் இந்த. சில சமயங்களில் நாம் கவனக் குறைவுள்ளவர்களாயிருக்கிறோம்... நான் வழக்கமாக ஒரு சிறு துண்டு காகிதத்தில், “எந்த வேதாகம கேள்விக்கும் பதில் அளிக்கப்படும்” என்று எழுதிக் கொடுப்பேன்.
577. யாரோ ஒருவர், “காயீனுடைய மனைவி யாராயிருந்தாள்?” என்று கேட்டார்.
578. ஓ, அதனோடு நான் ஒரு சிறு கேலியான காரியத்தைக் கூறுவேன், நான், “ஓ, அது அவனுடைய மாமியாருடைய மகளாயிருந்தது” என்றோ அல்லது அந்தவிதமான ஏதோ ஒன்றை, உங்களுக்குத் தெரியும், அல்லது அல்லது “அவள் திருமதி. காயீனாயிருந்தாள்” என்றும் கூறுவேன். ஆனால் அது கேள்விக்கு பதிலளிப்பதல்ல. அங்கே...
579. காயீன் ஒரு மனைவியை உடையவனாயிருந்தான், ஏனென்றால் அவன் மனைவியை உடையவனாயிருந்தான் என்று வேதம் கூறியுள்ளது. காயீன் ஒரு மனைவியை உடையவனாயிருந்திருந்தால், அப்பொழுது அவன் அவளை எங்கிருந்தாவது கொண்டிருக்க வேண்டும். இது இங்கே இதற்குள்ளாக சரியாக வந்துவிடும்:
ஆதாம் ஏவாள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேன் தோட்டத்தில் உடையவர்களாயிருந்தபோது, மற்ற ஜனங்கள் அங்கே பூமியின் மேல் இருந்தார்களா?
580. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஒரு ஸ்திரீயினுடைய பிறப்பைக் குறித்து வேதத்தில் எப்போதுமே மிகவும் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆண்பிள்ளையையே எப்பொழுதும் வேதத்தில் பதிவு செய்திருந்தனர், ஸ்திரீகளை அல்ல. வேதாகமத்தில் ஒரு பெண் குழந்தையின் பிறப்பைக் குறித்து குறிப்பிடப்பட்டிருப்பது எப்போதுமே அபூர்வமானதாயுள்ளது. ஓ, வெளிப்படையாக கூறினால், இப்பொழுது என்னால் முடிந்தளவு ஒன்றை, ஒரு குழந்தையின் பிறப்பு எப்போதாவது எங்கேயாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால் “அவர்கள் குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
581. இப்பொழுது, ஆதாம் ஏவாளுக்கு மூன்று பிள்ளைகள் மாத்திரமே பிறந்திருந்தனர் என்பதைக் குறித்த பதிவை மாத்திரமே வேதம் அளிக்கிறது, அது காயீன், ஆபேல் மற்றும் சேத்தாயிருந்தது. இப்பொழுது அவைகள் மூன்றும் ஆண்பிள்ளைகளாயிருந்ததால், அப்பொழுது எந்த பெண்பிள்ளைகளுமே பிறக்காமலிருந்திருந்தால், அப்பொழுது (ஏவாள்) என்ற பெண் மாத்திரமேயிருந்து மரித்திருந்தால், மானிட வர்க்கமே அப்பொழுது அழிந்து போயிருந்திருக்கும், ஏனென்றால் அவர்கள் உண்டாக வேறெந்த... வேறெந்த வழியுமே இல்லாதிருந்திருக்கும், மானிட வர்க்கம் பெருக வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அவ்வாறு பெருக வேண்டியதில்லையென்றால் எந்த பெண்களுமே இருந்திருக்கமாட்டார்கள். ஏவாள் ஒருவள் மாத்திரமே இருந்திருப்பாள். ஆனால் நீங்கள் பாருங்கள், ஆனால் பெண் குழந்தைகளின் பிறப்புகளை அவர்கள் வேதத்தில் பதிவு செய்கிறதில்லை, ஆகையால் அவர்கள் பையன்களின் பிறப்பைப் போன்று பெண்களின் பிறப்பையும் பதிவு செய்திருந்திருக்க வேண்டும்.
582. இப்பொழுது, பண்டைய எழுத்தாளர், நாம் பெற்றுள்ள மிகப் பழமையான எழுத்தாளர்களில் ஒருவரான ஜோஸிபஸ் அவர்கள் ஆதாம் ஏவாளுக்கு எழுபது பிள்ளைகள் இருந்ததாக உரிமை கோருகிறார்; பழமையான எழுத்தாளர்களில் ஒருவர், “எழுபது பிள்ளைகள், அவர்கள் குமாரரும் குமாரத்திகளுமாய் இருந்தனர்” என்று கூறுகிறார்.
583. இப்பொழுது...அப்பொழுது காயீன் நோத் என்னும் தேசத்திற்குச் சென்றிருந்தால். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களேயானால், இந்த எழுத்தாளர் இங்கே மிக மிக புத்திசாலித்தனமாக இங்கு எழுதியுள்ளார். அவர் அதை எப்படி மேற்கோள் காட்டினார் என்பதை நீங்கள் கவனித்தீர்களா?
ஏதேனில், அவர்கள் ஏதேனில் தங்கள் பிள்ளைகளை உடையவர்களாயிருந்தபோது... இப்பொழுது, ஏதேன் தோட்டத்தில் அல்ல, எழுத்தாளர் அதை அறிந்திருந்தார். இங்கே குறிப்பு எழுதியிருந்தவர்; ஆதாம் ஏவாள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாயிருந்தபோது... என்று எழுதியுள்ளார்.
584. ஏதேன் தோட்டத்தில் அல்ல, ஏனென்றால் அவர்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் இன்னமும் ஏதேனில் தான் இருந்தனர், அதாவது ஏதேன் தோட்டம் ஏதேனில் கிழக்கில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏதேன் ஒரு தேசமாக இல்லை. இல்லை என்ன.. அல்லது ஒரு மாநிலமாக, அதன்பின்னர் நோத் என்பது மற்றொரு தேசமாயிருந்தது இல்லை அதற்கு அடுத்த தேசமாய் இருந்தது.
585. இப்பொழுது, காயீன் தன்னுடைய சொந்த சகோதரியை மாத்திரமே திருமணம் செய்து கொண்டிருந்திருக்க முடியும். அவன் திருமணம் செய்து கொண்டிருந்திருக்க முடியும். அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாயிருந்தது. காரணம் ஒரே ஒரு ஆண் பெண்ணிடத்திலிருந்தே அவர்கள் வரவேண்டியதாயிருந்தது, பாருங்கள், எனவே அவன் தன்னுடைய சொந்த சகோதரியையே மணப்புரிய வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, அது அந்த நாட்களில் சட்டப் பூர்வமானதாயிருந்தது.
586. ஈசாக்கு தேவனால் நியமிக்கப்பட்டிருந்த ரெபேக்காளை, தன்னுடைய முதல் இரத்த உறவு முறையாளை விவாகம் செய்தான். சாராள் ஆபிரகாமினுடைய சகோதரியாய், அவனுடைய இரத்த சம்பந்தமான சகோதரியாய் இருந்தாள்; அவனுடைய தாயின் மூலமாயல்ல, தன்னுடைய தகப்பன் மூலமாய். பாருங்கள், ஒரு இரத்த சம்மந்தமான சகோதரியையே ஆபிரகாம் விவாகம் செய்தான்; வேறு தாய், ஆனால் ஒரே தகப்பன்.
587. ஆகையால், நீங்கள் பாருங்கள், அப்பொழுது உறவில் விவாகம் செய்வது, மானிட வர்க்கத்தில் இரத்த ஓட்டம் பலவீனமடைவதற்கு முன்பு, அது முறைமை உடைமையாயிருந்தது, சரியானதாயிருந்தது. இப்பொழுது அது அவ்வாறில்லை. நீங்கள் இன்றைக்கு உங்களுடைய சகோதரியை மணந்து, பிள்ளைகளைப் பெற்றால், அவைகள் அநேகமாக... அவைகள் உருகுலைந்து போய்விடும். முதலாவது மற்றும் இரண்டாம் உறவு முறைவரையில் ஒருபோதும் விவாகம் செய்யவே கூடாது, பாருங்கள், ஏனென்றால் ரத்தம் ஓட்டம் தாழ்ந்ததாகி, தாழ்ந்த நிலையிலேயே ஓடும்.
588. ஆனால் அப்பொழுது காயீன் செய்திருக்க முடிந்த ஒரேக் காரியம், தன்னுடைய சொந்த சகோதரியை மணந்திருக்க வேண்டும். அங்கிருந்தே பிள்ளைகள். வந்தனர். அவன் தன் மனைவியை தெரிந்துகொண்டு, நோத் என்னும் தேசத்திற்குச் சென்று அவளை அறிந்துதான், அங்கிருந்தே பிள்ளைகள் பிறந்தனர். பாருங்கள்,
589. நீங்கள் கவனிப்பீர்களேயானால், காயீனின் வம்சத்திலிருந்து புத்திசாலியான மனிதர் தோன்றினர். சேத்தின் வம்சத்திலிருந்து பக்தியுள்ள மனிதர் தோன்றினர், நீதியின் திராட்சைக் கொடியையே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். சரியாக அங்கே, இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த இரண்டு வம்சங்களும் பிறப்பிக்கப்பட்டன.
590. இப்பொழுது இன்றைக்கு நீங்கள் கவனிப்பீர்களேயானால், (அப்படியே இந்தக் கேள்வியை முடிக்கையில்); அந்த காயீனின் வம்சம் இன்னமும் வாழ்கிறது, சேத்தின் வம்சமும் இன்னமும் வாழ்கிறது. அவர்கள் இருவருமே அதேவிதமாக வந்துள்ளனர். இன்றிரவு காயீனின் பிள்ளைகள் இங்கே ஜெபர்ஸன்வில்லில் இருக்கிறார்கள், சேத்தினுடைய பிள்ளைகளும் இன்றிரவு இங்கே ஜெபர்ஸன்வில்லில் இருக்கிறார்கள். இரத்தம் ஓட்டம் பெலவீனமடைந்து போனாலும் அந்த வம்சம் இன்னமும் தொடர்ந்து இருக்கிறது.
591. இப்பொழுது, கவனியுங்கள். காயீனின் பிள்ளைகள் எப்பொழுதுமே. ஜலப்பிரளய அழிவிற்கு முன்னர், அவர்கள் புத்தி சாதுர்யமான ஜனங்களாய் இருந்தனர்; விஞ்ஞானிகளாய், கல்வியாளர்களாய்; மிகவும் பக்தியானவர்களாய் இருந்தனர், ஆனால் ஆக்கினைக்குட்படுத்தப்பட்ட கூட்டமாயிருந்தனர். புரிகிறதா? இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் அப்படியே தங்களுடைய தகப்பன் காயீனைப் போலவே இருந்தனர். காயீன், அவன் ஒரு பக்தியான மனிதனாயிருந்தான், அவன் ஒரு அழகான பீடத்தைக் கட்டினான், ஒரு அழகான சபையை உண்டுபண்ணினான், சேத்து அங்கே செய்திருந்த அந்த சிறு பணியைவிட மிக அழகாக அதை உண்டுபண்ண முயன்றான். நீங்கள் அதை அறிவீர்களா? அவன் நிச்சயமாக... அவன் அந்தப் பீடத்தை மலர்களால் அலங்கரித்தான், அதை அழகாக ஆயத்தப்படுத்தி, அதை அழுகுபடுத்திவிட்டான், ஒரு மகத்தான, பெரிய சபையாக்கிவிட்டான், ஏனென்றால் அவன் அவ்வாறு செய்வதன் மூலம் தேவனிடத்தில் தயையைக் கண்டடைய முடியும் என்று எண்ணிக் கொண்டான்.
592. ஆபேல் சென்று ஒரு சிறு ஆட்டுக்குட்டியை தெரிந்து கொண்டு, அதைப் பீடத்தண்டை இழுத்துக்கொண்டு வரத்துவங்கி, அதை ஒரு கற்பாறையின் மேல் கிடத்தி, அதைக் கொன்றான்.
593. இப்பொழுது, தேவன் நீதியுள்ளவராயிருந்து, அவருக்குத் தேவையானதெல்லாம் ஆராதிப்பதாயிருந்தால், காயீன் ஆபேல் செய்தது போலவே அதிக உத்தமத்தோடு தேவனை ஆராதித்தான். அவர்கள் இருவரும் உத்தமமாயிருந்தனர். அவர்கள் இருவருமே தேவனிடத்தில் கிருபையை கண்டடைய முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரில் எந்த ஒருவரும் நாத்திகராயிருக்கவில்லை . அவர்கள் இருவருமே, முற்றிலுமாக, யேகோவாவில் விசுவாசிகளாயிருந்தனர். இப்பொழுது, அங்கே, அது நமக்கு சிந்திக்கும்படியான ஏதோ ஒன்றை அளிக்கிறது.
594. நான் ஒருபோதும் கண்டிராத ஜனங்கள் சிலர் இன்றிரவு இங்கிருக்கிறார்கள்; நான் இதற்கு முன்பு உங்களைக் கண்டதேயில்லை. ஆனால் நீங்கள் இதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும், இதை உங்களுடைய சிந்தையில் வைத்துக்கொள்ளுங்கள். புரிகிறதா? நீங்கள் எவ்வளவு பக்தியுள்ளவர்களாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அதற்கு இதனோடு எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. நீங்கள் சபையிலே ஜீவிக்கலாம், நீங்கள் எப்போதுமே மிகவும் உத்தமமாயிருக்கலாம், அப்படியிருந்தும் நீங்கள் இன்னும் இழக்கப்பட்டவராயிருப்பீர்கள். புரிகிறதா?
595. நீங்களோ, “நல்லது” என்று கூறலாம், நீங்கள், “எங்களுடைய மேய்ப்பர்கள் புத்திசாலியானவர்களாயுள்ளனர், அவர்கள் மிகச் சிறந்த கல்வியறிவினைப் பெற்ற வேதபாட கருத்தரங்குகளின் மூலமாக வந்துள்ளனர். அவர்கள் வேத பண்டிதர்கள், அவர்கள் எல்லா-எல்லா வேத சாஸ்திரம் போன்றவற்றையும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் புத்திசாதுர்யமுள்ளவர்கள், பயிற்றுவிக்கப்பட்டவர்கள், நாங்கள் அறிந்தவரை மிகச் சிறப்பாக... தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று கூறலாம். அவர்கள் அப்படியிருந்து இழக்கப்படக் கூடும்! புரிகிறதா?
596. இப்பொழுது காயீன், அவனுடைய வம்சம்; அவர்கள், ஒவ்வொருவரும் மிகவும் பக்தியுள்ளவர்களாயிருந்தனர்; மிகவும் புகழ்வாய்ந்த ஜனங்களாயிருந்தனர்; அவர்கள் விஞ்ஞானிகளாய், மருத்துவர்களாய், கட்டிட அமைப்பாளர்களாய், சிறந்த தொழிலாளர்களாய், புத்திசாலியான மனிதராயிருந்தனர். ஆனால் அந்த வம்சம் முழுவதுமே காயீனிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவிட்டது.
597. ஆபேலின் பக்கத்திலோ, அவர்கள் கட்டிட அமைப்பாளர்களாய், கல்வியாளர்களாய் அல்லது புத்திசாலியான மனிதராயிருக்கவில்லை; அவர்கள் ஏறக்குறைய தாழ்மையானவர்களாய், ஆடு வளர்த்து மேய்ப்பவர்களாய், விவசாயிகளாயிருந்து ஆவியின்படியே நடந்தவர்களாயிருந்தனர்.
598. இப்பொழுது, வேதம், “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” என்று உரைத்துள்ளது. ஆவிக்குரிய மனிதன் கொண்டுள்ள ஒரு ஆவிக்குரிய ஆத்துமா ஒருபோதும் மரிக்க முடியாது. மாம்சபிரகாரமான மனிதனோ அவனைச் சுற்றி ஒரு பக்தியான சூழ்நிலையைக் கொண்டிருந்தாலும் (ஆராதிக்க விரும்புகிறது போன்றவை) அவன் மாம்சபிரகாரமானவனாயிருக்கிறான்; ஒரு அவிசுவாசியாயல்ல, ஆனால் ஒரு மாம்சபிரகாரமான விசுவாசியாயிருக்கிறான், அந்த விதமானதுதான் புறக்கணிக்கப்பட்டது.
599. இப்பொழுது, அங்கிருந்து காயீன் புறப்பட்டுச் சென்று நோத் தேசத்தில் தன்னுடைய மனைவியை விவாகம் செய்தான். இப்பொழுது, அதில் சேத் யாரை விவாகம் செய்தான் அல்லது மற்றவர்கள் யாரை விவாகம் செய்தனர் என்று கூறவில்லை. அதைக் குறித்து மிக அழகான காரியம் காயீன் விவாகம் செய்தான் என்பதை அறிவதேயாகும், நமக்கு அதற்கு பதில் கிடைத்துவிட்டது. காரணம் அவன் தன்னுடைய சகோதரியை மணக்க வேண்டியதாயிருந்தது அல்லது அவன். அல்லது அங்கு இருந்த ஒரு...
600. அப்பொழுது அங்கே பூமியின் மேல் எந்த ஸ்திரீயும் இல்லாதிருந்தனர், ஆனால் அப்படியே ஏவாளிடத்திலிருந்து வரவேண்டியதாயிருந்தது. அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயாயிருந்தாள். அதாவது ஜீவித்துக்கொண்டிருந்த எல்லா ஜனங்களுக்குமே, அவள் அதற்கு தாயாயிருந்தாள். அந்தக் காரணத்தினால் அவள்... ஏவாள் என்ற வார்த்தையோ, “ஜீவனுள்ளோருக்கு தாய்” என்றே பொருள்படுகிறது. ஆகையால் அவள் வந்து பிள்ளையை பெற்றெடுத்தாள். என்னால் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்த ஒரே வழியோ காயீன் தன்னுடைய சொந்த சகோதரியை மணந்து கொண்டான் என்பதாகுமே. ஆகையால் அந்த நாளில் உண்மையாகவே ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். புரிகிறதா? நல்லது...
ஆதாம் ஏவாள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாயிருந்தபோது... இப்பொழுது கவனியுங்கள், அதுவே கேள்வியாயுள்ளது: அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஏதேனில் உடையவர்களாயிருந்தபோது, அந்த நேரத்தில் பூமியின் மேல் மற்ற ஜனங்கள் இருந்தார்களா? இல்லையே! அப்படியானால் ஆதியாகமம் 5:16-ல் காயீன் நோத் என்னும் தேசத்தில் குடியிருந்து தன்னுடைய மனைவியை அறிந்தான் என்று உள்ளதை நீங்கள் பாருங்கள். நிச்சயமாகவே. பார்த்தீர்களா?
601. அதாவது ஆதியாகமம் 1-ல் அவர் அங்கு மனிதனை தம்முடைய சொந்த சாயலில் சிருஷ்டித்தார், அது ஆவிக்குரிய சரீரமாயிருந்தது. ஆதியாகமம் 2-ல் அவர் மனுஷனைப் பூமியின் மண்ணிலே உருவாக்கினார், அதுவே இப்பொழுது நாம் இருக்கிற மானிட மனிதனாயிருந்தது. அதன்பின்னர் 3-ம் அதிகாரத்தில் விழுந்துபோய், ஏதேன் தோட்டத்திலிருந்து உதைத்துத் தள்ளப்பட்டான். அதன்பின்னர் பிள்ளைகள் பிள்ளைகளைப் பிறப்பித்தனர். காயீன் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டுபோய், வெளியே, நோத் என்னும் தேசத்தில் அவளோடு வாழ்ந்தான், ஏனென்றால் தேவன் தன்னுடைய சொந்த சகோதரனின் ஐக்கியத்திலிருந்து அவனை பிரித்திருந்தார் (ஆபேலின் மரணத்தின் காரணமாக) அவன் தனக்கிருந்த தன்னுடைய சொந்த சகோதரியை மணந்து கொண்டான்; அவன் எப்படி விவாகம் செய்தான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, எனக்குத் தெரிந்த ஒரே வழி அதுவேயாகும்.
602. இப்பொழுது, அது கூறப்பட்டது. இங்குள்ள என்னுடைய கருப்பு நிற சகோதரர்கள் இந்த குறிப்புரைக்காக மன்னிப்பார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது முற்றிலும் சரியானதல்ல. நான் மனமாற்றமடைந்த பிறகு, நான் வாழ்க்கையில் நான் முதன்முறையாக எந்த ஒருவரை சந்தித்தேனென்றால்... நான்... அங்குள்ள சகோதரன் ஜார்ஜ் டீ. ஆர்க் அவர்களையும், அங்கிருந்த மற்றவர்களையுமே சந்தித்திருந்தேன். நான் நடந்து சென்றபோது, கர்த்தர் என்னை ஒரு சிறு இடத்திற்கு வழி நடத்திச் சென்றார். அங்கு அவர்கள் கறுப்பு நிற மனிதர்கள் எப்படித் தோன்றினர் என்பதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள். அந்தக் காயீன் மனிதக் குரங்கு போன்ற ஒரு மிருகத்தை விவாகம் செய்தான் என்றும், அதனூடாகவே கறுப்பர் இனம் தோன்றினது என்றும் கூறினர். இப்பொழுது அது தவறாகும்! அது முற்றிலும் தவறாயுள்ளது. அதற்காக ஒருபோதும் துணை நிற்க வேண்டாம். காரணம் கறுப்பு நிறமோ அல்லது வெள்ளையோ அல்லது மற்ற வேறெந்த வித்தியாசமோ அப்போதிருக்கவில்லை. அது ஜலப்பிரளயம் வரை ஒரே இன மக்கள்தான் இருந்தனர். ஜலப்பிரளயத்திற்கு பின்னரே பாபேல் கோபுரத்தின் போது அவர்கள் சிதறத் துவங்கி, அப்பொழுது அவர்கள் தங்களுடைய நிறங்கள் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் ஒரே மரத்திலிருந்து தோன்றினவர்களாயிருந்தனர். அது முற்றிலும் சரியே. பூமிக்குரிய, பூமியின் மீது வாழ்ந்து வந்த ஒவ்வொரு மானிட சிருஷ்டிக்கும், ஆதாம், ஏவாளே தகப்பனும் தாயுமாயிருந்தனர். அது உண்மை . கறுப்பு, வெள்ளை , மங்கின நிறம், பழுப்பு நிறம், மஞ்சள் நிறம், நீங்கள் என்ன நிறமாயிருந்தாலும், அது முற்றிலும் நீங்கள் வாழ்கிற இடத்தைப் பொருத்ததாயுள்ளது, அந்தவிதமாக-அந்த...
603. நான் இதன் பேரில் இருக்கையிலேயே நான் இதை வெளிப்படுத்திக் கூறலாம் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது ஜனங்கள் இங்கு இந்த பாகுபாடுகளில் இருந்து கொண்டு சட்டங்களையும் மற்றக் காரியங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது கேலிக்குரியது என்றே நான் நினைக்கிறேன். நான் உண்மையாகவே அவ்வாறு நினைக்கிறேன், கவனியுங்கள், அந்த ஜனங்களை அப்படியே விட்டுவிடுங்கள், அவர்களுக்கு என்னத் தேவை என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். தேவன் ஒரு மனிதனை ஒரு கறுப்புநிற மனிதனாக உண்டாக்கினால், அவன் அதைக் குறித்து மகிழ்ச்சியடைவான், முற்றிலுமாக. தேவன் என்னை ஒரு கறுப்பு நிற மனிதனாக உண்டாக்கினால், நான் அதைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்; அவர் என்னை ஒரு பழுப்பு நிறமான மனிதனாக உண்டாக்கினால், நான் மகிழ்ச்சியாயிருப்பேன்; அவர் என்னை ஒரு வெள்ளைக்கார மனிதனாக உண்டாக்கினால், நான் மகிழ்ச்சியாயிருப்பேன்; அவர் என்னை ஒரு மஞ்சள் நிற மனிதனாக உண்டாக்கினால், நான் மகிழ்ச்சியாயிருப்பேன். தேவனே நம்முடைய நிறங்களை உண்டுபண்ணினார். நாம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பும் விதத்தில் அவர் நம்மை உண்டாக்கினார், நாம் எல்லோரும் அவருடைய பிள்ளைகளாயிருக்கிறோம். முற்றிலுமாக! எனவே அவர்கள் சண்டையிட்டு, அந்த விதமாக தொடர்ந்து செல்லக் கூடாது. அதைச் செய்வது தவறாயுள்ளது. அவர்கள் அதைச் செய்யக்கூடாது. தேவன் நம்மை உண்டாக்கின... விதமாகவே நாம் அதை விரும்பவேண்டும்.
604. கறுப்பு நிற மனிதன், அவன் அங்கிருந்து புறப்பட்டுப்போய், தன்னுடைய தன்னுடைய சந்ததியை பிரித்துவிட அல்லது தன்னுடைய நிறத்தை வெள்ளையரோடு மற்றும் அதைபோன்ற எந்த ஒன்றோடும் கலக்க விரும்புகிறதில்லை. நான் அவன் மீது பழி சுமத்தவில்லை. நான் அவ்வாறு செய்கிறதில்லை. வெள்ளையனால் சுதந்தரிக்கக் கூடாத காரியங்களை கறுப்பு நிற மனிதன் உடையவனாயிருக்கிறான். முற்றிலுமாக! அது முற்றிலும் சரியே. அவர்கள் அந்த விதமாக இருக்க வேண்டும் என்று தேவன் ஒருபோதும் நோக்கங்கொண்டிருக்கவில்லை.
605. பாருங்கள். கறுப்பு நிற மனிதன். அவன் அவன் ஒரு.. அவன் பெற்றுள்ள ஒரு-அவன் வெள்ளையன் ஒருபோதும் பெற்றிராத ஒரு மனநிலையை தன்னைக் குறித்துப் பெற்றிருக்கிறான். அவன் ஒரு மகிழ்ச்சியாக செல்லுகிற ஒரு அதிர்ஷடத்தைப் பெற்று, “தேவனை நம்பி, மற்ற யாவும் அப்படியே செல்லட்டும்” என்ற மனநிலையைப் பெற்றுள்ளான். அவன் எதையாவது பெற்றுக்கொண்டாலும் அல்லது அவன் பெற்றிருக்கவில்லையென்றாலும், அவன் எப்படியும் மகிழ்ச்சியாயிருக்கிறான். இன்றிரவு நான் அதனுடைய முழுப்பங்கையும் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன், நான் நிச்சயமாகவே விரும்புகிறேன். நல்லது, அவன் அதைப் பெற்றிருக்கிறான், அது அவனுடைய உடைமையாயிருக்கிறது; அவர்கள் அதனோடு மற்ற எந்த இனத்தையும் கலக்கவோ அல்லது பிரிக்கவோ விரும்புகிறதில்லை. அது முற்றிலும் உண்மை.
606. அங்கே ஷ்ரெவ்போர்ட்டில் இருந்த அந்த பெண்மணியோ நான் என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் கேட்டிருந்ததிலேயே மிகச் சிறந்த மிகச் சிறந்த கருத்துரைகளைக் கூறினாள் என்று நான் கருதுகிறேன். அவள் ஒரு கருத்துரையைக் கூறினாள், அவர்கள் அதை செய்தித்தாளில் பிரசுரித்தனர். அவள் மேலே நடந்து வந்து, அவள், “இந்தவிதமாக இந்தக் காரியங்கள் இந்த பாகுபாட்டில் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. நான் என்னுடைய பிள்ளைகள் அந்த வெள்ளையரின் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை” என்றும், “அவர்கள் ஒரு கறுப்புநிற ஆசிரியர் கவனம் செலுத்துவது போல கவனம் செலுத்தமாட்டார்கள்” என்றும் கூறினாள். அந்த ஸ்திரீ ஒரு சாமர்த்தியமான ஸ்திரீ. அவள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருக்கிறாள், அவர்கள் ஒரு சிறந்த கல்வியைப் பெறுகின்றனர். அது முற்றிலும் உண்மை. ஆகையால் அதைச் செய்வதன் மூலமே ஜனங்கள் தவறு செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
607. ஆகையால் அவர்கள், “காயீன் மற்றும் ஆபேல்...” என்று அதைப் போன்று கூறுகிறார்கள். இல்லை ஐயா! நிறத்திற்கு அதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. அங்கே உள்ளிருக்கிற ஆவிக்கே அதனோடு சம்மந்தமுண்டு. அது முற்றிலும் சரியே.
608. ஆகையால் காயீன் தன்னுடைய மனைவியை அறிந்தான், அது அவனுடைய சகோதரியாயிருந்தது. அவர்கள். அவன் நோத் என்னும் தேசத்திற்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கிருந்தே பூமியின் பெரிய கோத்திரங்கள் உண்டாயின; பக்திமார்க்கத்தாரும், ஆராதிப்போரும் தோன்றினர்.
609. நண்பனே, அப்படியே சற்று சிந்தித்துப் பார், அப்படியே ஒரு நொடி சற்று நின்று சிந்தித்துப் பார். முற்றிலுமாக சபைக்குச் செல்லுகிற கோடான கோடி ஜனங்கள், அவர்களால் முடிந்தளவு உத்தமமாயிருந்து, அந்த சபைக்கென்றே தங்களை அர்பணித்திருந்தாலும், காயீனைப் போன்று அந்த விதமாகவே இழக்கப்படுவர். புரிகிறதா? அது தேவன் தெரிந்து கொள்ளுகிறதாயுள்ளதே! அது தேவன் தேர்ந்தெடுத்தலாயுள்ளதே! புரிகிறதா? தேவன் இரக்கமளிக்கிறாரே! களிமண் குயவனிடத்தில் கூற முடியாது. அது குயவன் களிமண்ணை எடுத்து பயன்படுத்துகிறதாயுள்ளது. அது உண்மை.
610. இப்பொழுது இங்கே அழகான ஒன்று உள்ளது, இங்கே அடுத்த ஒன்று: பேதுரு இரண்டாம் நிரூபம் 2:4- 2:4...
611. நான் இந்த வேதவாக்கியங்களை வாசித்துக்கொண்டிருக்கையில், நீங்கள் விரும்பினால், ஒரு வேதாகமத்தை வைத்துள்ள யாராவது இந்த வேதவாக்கியங்களை உடனே துரிதமாக திருப்பிப் பார்க்க விரும்பினால் பாருங்கள்.
612 இப்பொழுது, இந்த காயீன் என்பதன் பேரில் போன்றவை, அது இப்பொழுது திருப்தியளிக்கவில்லையென்றால், நீங்கள் அதை எங்களிடத்தில் கூற விடுங்கள்; அப்பொழுது நாம் மகிழ்ச்சியடைவோம்...
613. இப்பொழுது, 2 பேதுரு 2:4. சரி, ஐயா, நாம் இங்கு இருக்கிறோம்: