614 இப்பொழுது, நாம் முதலில் பேதுரு 2:4 எடுத்துக் கொள்வோம். சரி:
பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
615. இப்பொழுது, நாம் இப்பொழுது I பேதுரு அதாவது II பேதுருவில் கண்டறிவோமாக, 1பேதுரு 3:19, இதைக் கவனியுங்கள். இதோ நாம் இங்கே இருக்கிறோம். இவைகள் சற்று முன்னர் வந்தபடியால், நான் அவைகளைக் குறித்து எழுதியிருக்கவில்லை.
அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
616. ஓ, ஆம், இங்குதான் நாம் இருக்கிறோம். நாம் அதற்கு முன்னிருந்தே சற்று துவங்குவோம், 18-வது வசனம்:br>
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள்... கீழ்ப்படியாமற்போனவைகள்...
617. என்னுடைய அருமையான நண்பனே, நீங்கள் அடுத்த வசனத்தை வாசிப்பீர்களேயானால், அங்கே அது அதனை விளக்கிக் கூறியுள்ளது. புரிகிறதா?
அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். (புரிகிறதா?)
618. இப்பொழுது நீங்கள் இங்கு கவனிப்பீர்களேயானால், இந்தப் பிரசங்கியார் மற்றொன்றை... அதே வரியில் பெற்றுள்ள ஒரு காரியத்தின் பேரிலும் சற்றுக் கழித்து பதிலளிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.
619. 1 பேதுரு. 4... இல்லை 2:4, நீங்கள் கவனிப்பீர்களேயானால், “...தூதர்களை தேவன் தப்பவிடாமல்” என்று உள்ளதையும், அந்த தூதர்கள் என்பது ஆங்கிலத்தில் எப்படி எழுதப்பட்டுள்ளது? ஆங்கிலத்தில் தூதன் என்பதன் முதல் எழுத்தோ “சிறிய எழுத்தில்” உள்ளது. பார்த்தீர்களா? இப்பொழுது, இங்கே, “நோவாவின் நாட்களின் நீடிய பொறுமையில் மனந்திரும்பாமற்போய் காவலில் இருந்த ஆவிகள்,” அதே தூதர்கள். அது மனிதனாயிருந்தது: செய்தியாளர்கள், பிரசங்கிமார்கள்; “தூதர்களை தப்பவிடாமல்.” தூதன் என்ற வார்த்தை “ஒரு செய்தியாளன்” என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. அது ஒரு... என்பதை நீங்கள் அறிவீர்களா? தூதன் என்றால் “செய்தியாளன்” என்பதை எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்? முற்றிலுமாக, தூதன் ஒரு செய்தியாளனாயிருக்கிறான், “அவர் தூதர்களையும் தப்பவிடாமல்” புரிகிறதா?
620. எபிரெயரில் இங்கு உள்ளது, நாம் ஒரு சில வாரங்களுக்கு முன்னர், “தூதர்கள்” என்பதினூடாக நாம் பார்த்தது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?
621. அவர். வெளிப்படுத்தின விஷேசத்தில், “சர்தை சபையின் தூதனுக்கு இந்தக் காரியங்களை எழுது, எபேசு சபையின் தூதனுக்கு இந்தக் காரியங்களை எழுது. சபையின் தூதனுக்கு...” அது ஞாபகமிருக்கிறதா? நாம் அகராதியில் தூதன் என்ற வார்த்தைக்குப் பொருளைப் பார்த்தால், அது, “ஒரு செய்தியாளன்” என்று பொருள்படுகிறதை கண்டறியலாம். அது “பூமியின் மேலுள்ள ஒரு செய்தியாளனாய், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட செய்தியாளனாய்” இருக்கக் கூடும், தூதன் என்ற வார்த்தை.
622. ஆகையால் இந்த நிலையில், நாம் கிரேக்க வேதாகம அகராதியை எடுத்து, ஆராய்ந்துப் பார்த்தால், அது, “செய்தியாளர்கள், முதல் செய்தியாளர்கள்” என்று துவங்குகிறதை நீங்கள் கண்டறிவீர்கள். பாருங்கள், “அவர் தப்பவிடாமல்... ஏனென்றால் பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல்,” (புரிகிறதா?) “இயற்கைக்கு மேம்பட்டவர்கள்” (புரிகிறதா?) “பிறகு காத்திருந்து...” ”
... இப்பொழுது கவனியுங்கள், அவர் கூறினார்: பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;
623. ஆகையால் இங்கே, 1 பேதுரு 3:19-ல் உள்ளதை மீண்டும் பாருங்கள், இப்பொழுது இதை வாசிக்கையில் என்று கவனியுங்கள்:
அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, (பாருங்கள், அது அந்த நாளின் செய்தியாளர்களாயிருந்தது, செய்தியாளர்கள்). கீழ்படியாமற்போனவைகள்: அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
624. இப்பொழுது பரலோகத்தில் உள்ள அந்த சிருஷ்டிகளைக் கவனிப்பீர்களேயானால் நலமாயிருக்கும். இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷம் 11... இல்லை 7-ம் அதிகாரம், என்று நான் நினைக்கிறேன்... அல்லது, இல்லை, இல்லை, அது 12ம் அதிகாரத்தில் உள்ளது. அவர் ஸ்திரீ நின்று கொண்டிருந்த ஒரு காட்சியைக் கூறுகிறார்; அவளுடைய தலையிலே சந்திரன், சூரியன். இல்லை, தலையிலே சூரியனை அணிந்திருந்தாள், அவளுடைய பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது. அந்தப் பிள்ளை பிறந்தவுடனே, அந்தப் பிள்ளையைப் பட்சித்துப் போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் நின்றது. அது தன்னுடைய வாலை எடுத்து, வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து, பூமியிலே விழத்தள்ளிற்று. நீங்கள் அதைக் கவனித்தீர்களா? இப்பொழுது, சாத்தான் ஒரு-ஒரு நீண்ட வாலை உடையவனாயிருந்து, அவன் ஜனங்களை சுற்றி வளைத்துக்கொண்டான் என்பதை அது பொருட்படுத்துகிறதில்லை, ஆனால் “அவன் கூறின அந்த கட்டுக்கதையினால்” அந்த நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்தான். அந்த நட்சத்திரங்கள் ஆபிரகாமினுடைய சந்ததியாயிருந்தன.
625. ஆபிரகாம், “ஓ...” என்றான். ”
626. தேவன் ஆபிரகாமினிடத்தில், “வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ணக் கூடுமா?” என்றார். ”
627. அதற்கு அவனோ, “என்னால் அதை எண்ணமுடியாது” என்றான்.”
628. அப்பொழுது அவர், “உன்னால் உன் சந்ததியையும் ஒருபோதும் எண்ணமுடியாமலிருக்கும்” என்றார். நட்சத்திரங்கள்.
629. பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் யார்? நசரேயனாகிய இயேசு, மாம்ச சரீரத்தில் எப்போதும் வாழ்ந்து வந்தவர்களிலேயே பிரகாசமாயிருந்தவர். அவர் பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாயிருக்கிறார். அவர் ஈசாக்கினூடாக தோன்றின ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறார். நாம் கிறிஸ்துவுக்குள் மரித்து, ஆபிரகாமின் சந்ததியராயும், வாக்குத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறோம்
630. ஆகையால் வானத்து நட்சத்திரங்கள் இங்குள்ள மனித ஆவிகளை பிரதிநிதித்துவப்படுத்தின வலுசர்ப்பம் (ரோமாபுரி, அதனுடைய துன்புறுத்தலின் கீழே) மூன்றில் இரண்டை... இல்லை நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை இழுத்து, அவைகளைக் கீழே தள்ளிற்று, அது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் சிலுவையேற்றமாயிருந்தது, அவர்கள் அவரை புறக்கணித்தபோது, அவர். அவரைத் தள்ளினபோது, அவரோடு ஒன்றும் செய்ய முடியாமலிருந்தது; அது நட்சத்திர தூதர்களில் மூன்றிலொரு பாகம், தூதர்கள்.
631. பாருங்கள், உங்களுடைய சரீரத்தில், உங்களுடைய உட்புறத்தில்… (நாம் அதன்பேரில் மற்றொரு கேள்வியைப் பெற்றுள்ளோம், நேரடியாக அதற்கு நன்றாக பதில் கூறலாம்). ஆகையால் உங்களுடைய உட்புறத்தில் ஒரு ஆவி உள்ளது, அது மற்றொரு மனிதன். உங்களுடைய வெளிப்புறத்தில் ஒரு மனிதன் இருக்கிறான், உங்களுடைய உட்புறத்தில் மற்றொரு மனிதன் இருக்கிறான். ஆகையால் உங்களுடைய உட்புறத்தில் இருப்பது இயற்கைக்கு மேம்பட்டதாயுள்ளது, உங்களுடைய வெளிப்புறத்தில் உள்ளது சரீரம் சார்ந்ததாயுள்ளது. புரிகிறதா? இந்த சரீரத்தில், நீங்கள் தேவனால் ஆவியில் வழி நடத்தப்பட்டால், நீங்கள் ஒரு தேவனுடைய செய்தியாளராய் அல்லது ஒரு தூதனாகிறீர்கள். தேவனுடைய செய்தியாளர், தேவனுடைய தூதன் என்பதும் ஒரே வார்த்தையாயுள்ளது; அதைப் பிரிக்க முடியாது; தேவனுடைய செய்தியாளன் அல்லது தேவனுடைய தூதன்.
632. யார் மிக உயரிய அதிகாரத்தைப் பெற்றுள்ளது? வானத்திலிருந்து வரும் ஒரு தூதனா அல்லது பிரசங்கபீடத்திலுள்ள ஒரு தூதனா? யார் அதைப் பெற்றிருக்கிறது? பிரசங்கபீடத்தில் உள்ள தூதனே! பவுல், “நான் உங்களுக்கு பிரசங்கித்திருக்கிற சுவிசேஷத்தையல்லாமல் வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றார். ஆகையால் தூதன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, வார்த்தையோடு தேவனுக்கு அடுத்தபடியாக நிற்கிறான். அது உண்மை. வானத்தில், அவருடைய அதிகாரம்.
633. “ “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் என்னுடைய கரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. போங்கள், நான் உங்களோடு செல்வேன். நீங்கள் பூமியில் கட்டுகிறதெதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டுவேன். நீங்கள் பூமியில் கட்டவிழ்ப்பதெதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன்.”
634. ஓ, மகத்தான பரிசுத்த சபையானது இந்தக் காரியங்களைச் செய்யும்படியான அதனுடைய அதிகாரத்தை மாத்திரம் தெளிவாக உணர்ந்திருந்தால் நலமாயிருக்கும். ஆனால் அங்கே அதிகப்படியான சந்தேகமும், பயமும், நடுக்கமும், அது இருந்தால், “அது சம்பவிக்கக் கூடுமா?” என்ற எதிர்பார்ப்புமே உள்ளது. அது இருக்கும்வரையில் சபையானது ஒருபோதும் நிமிர்ந்து நிற்கவே முடியாது. பயத்தின் ஒவ்வொரு பேச்சும் மறைந்துவிட்டு, பரிசுத்த ஆவியானவர் சபையின் ஆளுகையில் முழுமையாயிருக்கும்போதே, எல்லா பயங்களும் போய்விட சபையானது அதிகாரத்தை உடையதாயிருக்கும். புரிகிறதா? ஏன்? பரலோகம் சொந்தமாக கொண்டுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அவர்கள் தங்களுக்குப் பின்னே கொண்டுள்ளனர். அவர்கள் சிங்காசனத்தின் தூதர்களாயிருக்கிறார்கள். முற்றிலுமாக! கிறிஸ்துவின் தூதர் அதிகாரத்தை உடையவராயிருக்கிறார்கள், கிறிஸ்துவுக்கு சொந்தமான ஒவ்வொரு காரியமும் அந்த தூதருக்கு சொந்தமானதாயிருக்கிறது. அவர், “நீங்கள் உலகமெங்கும் போய், பரிசுத்த ஆவி உங்கள் மீது வந்த பிறகு, நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்” என்றார். சாட்சி என்றால் என்ன? ஒரு தூதனாக வந்து ஒரு காரியத்தை சாட்சி பகருவதாகும். பரலோகத்தின் அதிகாரங்கள் முழுவதும் உங்களுடைய கரங்களில் உள்ளனவே! ஓ, நாம் ஏன் அமர்ந்திருக்கிறோம்? சபையானது மலடாய் உள்ளது, நாம் செயலற்றவர்களாய் அமர்ந்துள்ளோம். காரணமென்னவெனில் நாம் இந்த காரியங்களை அடையாளங்கண்டு கொள்ளுகிறதில்லை.”
635. இப்பொழுது, காவலிலிருந்த ஆத்துமாக்கள் (அந்த மனந்திரும்பாதவைகள்) தூதர்களின் ரூபத்தில் கீழே கொண்டுவரப்பட்டிருந்த தூதர்களாயிருக்கவில்லை, ஆனால் அது உலகத் தோற்றத்திற்கு முன்பே விழுந்த அந்த தூதர்களின் ஆவிகளாயிருந்தனர். முன்னே அங்கே வானத்திலே யுத்தம் உண்டாயிற்று. சாத்தான் - வலுசர்ப்பம் யுத்தம் பண்ணிற்று, அதன்பின்னர்... இல்லை மிகாவேலும் வலுசர்ப்பமும் யுத்தம் பண்ணினர் (அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி) அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி தன்னுடைய எல்லா பிள்ளைகளோடும் (அவன் வஞ்சித்திருந்த எல்லா தூதர்களோடும்) தள்ளப்பட்டான், அந்த தூதர்கள் பூமிக்கு வந்து மானிடர்களைக் அடிமைப்படுத்தினர். அவர்கள் அவ்வாறு செய்தபோது, அப்பொழுது “தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.””
636. அவர்கள் தேவ புத்திரராயிருக்கிறார்கள். இந்த பூமியில் பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஒரு தேவ குமாரனாயிருக்கிறான். அவன் பாவியாயிருந்தாலும் அல்லது அவன் என்னவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவன் ஒரு தேவ குமாரனாய் இருக்கிறான். தேவனுடைய புகழுக்காக தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான், அவன் அந்த விதமாக சிருஷ்டிக்கப்பட்டான். ஆனால் தேவன் யார் அவரை ஏற்றுக்கொள்வார்கள், யார் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை ஆதியில் அறிந்திருந்தார். ஆகையால் அவரால் முன் குறிக்க முடிந்தது. அல்லது முன்குறிக்க அல்ல, ஆனால் முன்னறிவினால் யார் இரட்சிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை அவரால் கூற முடியும், ஏனென்றால் அந்த நபர் எந்த ஆவியை ஏற்றுக்கொள்வார் என்பதை அவர் அறிந்திருந்தார்.
637. அந்த ஆவிகள் தேவனுடைய சிங்காசனத்திலிருந்து வந்தன, தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கின்றன, உலகம் உண்டாவதற்கு கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்னரே, தேவனுடைய பிரசன்னத்தில் இருந்தன, ஆராதிப்பதைக் குறித்ததான ஒரு காரியத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லையென்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவைகள் கீழே வந்து, மனிதனுக்குள்ளாகச் சென்றன, அவைகளே தேவனை ஆராதிக்கின்றன! முற்றிலுமாக, அவைகள் தேவனை ஆராதிக்கின்றன; அவைகளுக்கு தேவனைக் குறித்த அறிவு உண்டு, அவைகள் எப்பொழுதும் புத்தி சாதுர்யமாயும், அறிவாற்றல் கொண்டதாகவும், கல்வி பயின்றதாகவும் உள்ளன. ஆனால் தேவன் துவக்கத்திலிருந்தே அவைகளை புறக்கணித்துவிட்டார்!
638. ஆகையால் நண்பனே, ஒரு சபையின் அங்கதினராயிருப்பது, அல்லது அல்லது ஏதோ ஒரு வேத சாஸ்திர அறிவைப் பெற்றிருப்பது அல்லது ஏதோ ஒன்று, அதற்கு இதனோடு எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. அது உங்களை அவரிடத்தில் ஒரே நபராக இணைக்கிற இயேசு கிறிஸ்துவின் இரத்தமாயும், ஒரு புதிய பிறப்பாயுமிருக்க வேண்டும். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது.
639. தேவன் அதை அறிந்திருந்தபோது, ஆதியில் அவர்... மனுஷனையும், ஸ்திரீயையும் ஒன்றாக உண்டாக்கினார், இருவராய் அல்ல, அவர்கள் ஒன்றாய் உண்டாக்கப்பட்டனர். அவர்கள் வேறு பிரிக்கப்பட்டு, ஒரு மாம்சத்தில், ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் வைக்கப்பட்டனர். அவர் அதை அறிந்திருந்தார். ஆகையால் முறைப்படி அதை உங்களுக்கு நிரூபிக்க, தேவன் ஸ்திரீயை உண்டாக்கினபோது, அவர் மனிதனை உண்டாக்கினதுபோல கொஞ்சம் மண்ணை எடுத்து அவளை ஒருபோதும் உண்டாக்கவில்லை; அவர் ஆதாமினுடைய பக்கவாட்டிலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்தார், அவள் ஒரு மனிதனின் உப உற்பத்தியானாள் (ஏனென்றால் அவள் அவனுடைய பாகமாயிருக்கிறாள்) இப்பொழுது இது உங்களுக்குப் புரிகிறதா? புரிகிறதா? அங்குதான் காரியமே உள்ளது.
640. தூதர்கள் இருந்தனர். தேவனும், தேவனோடு இணைந்துள்ள ஆவியும் ஒரே ஆவியாயுள்ளது. அது உண்மை. இப்பொழுது, சபையில் வாசம் செய்கிற தேவனுடைய ஆவி பரலோகத்திலிருந்து வந்த ஆவியாயுள்ளது, அதாவது உலகத்தோற்றத்திற்கு முன்பே அது பிசாசினுடைய பொய்யை புறக்கணித்துவிட்டதை தேவன் அறிந்திருந்தார். அந்த ஆவி தன்னுடைய சோதனைகளை ஏற்றுக்கொள்ள... ஒரு மாம்ச சரீரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அவர் இந்த மற்றவர்கள் செய்ததுபோலவே மாம்சத்தில் வர வேண்டியதாயிருந்தது, அவர்கள் எல்லோர் மேலும் சமமான நுகம் வைக்கப்பட்டது. தேவன் துவக்கத்திலேயே ஏற்க மனதுள்ள ஆவிகளையும், எது ஏற்றுக்கொள்ளாதென்பதையும் அறிந்திருந்தார். அங்குதான் காரியமே உள்ளது. கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் பிசாசு வஞ்சிக்குமளவிற்கு அவன் மிகவும் புத்தியுள்ளவனாயிருக்கிறான்.
641. ஆகையால் இந்த ஆவிகள், பிரசங்கித்த இந்த தூதர்கள் காவலில் இருந்தனர்; தூதர்கள், நீங்கள் அதை இங்கே கவனிப்பீர்களேயானால், அது ஆங்கில எழுத்தில் சிறியதாய் தூதன் என்ற முதல் எழுத்து உள்ளது, அது “மனிதன்” என்பதையே பொருட்படுத்துகிறது. தூதர்கள், இங்கே பூமியின் மேல் உள்ள செய்தியாளர்கள். அவர்கள் பாவம் செய்தனர், அவர்கள் பாவஞ்செய்யக் கூடிய ஒரே வழி அவிசுவாசிப்பதேயாம்! அந்தவிதமாக அவர்கள் தங்களுடைய சொந்த மார்க்கங்களை உடையவர்களாயிருந்தனர், அவர்கள் நோவாவின் செய்தியை விசுவாசிக்கவில்லை. அவர்கள் ஏனோக்கின் செய்தியை விசுவாசிக்கவில்லை. அவர்கள் அவர்களுடைய செய்தியை புறக்கணித்து, “ஆக்கினைக்குட்படுத்தப்பட்டனர்” என்று வேதம் கூறியுள்ளது, அவர்கள் அவ்வாறே இருந்தனர்.
642. ஏனோக்கு அவர்களிடத்தில் தீர்க்கதரிசனமுரைத் திருந்தான், அதாவது, “ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவாங்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார்” என்று கூறியிருந்தான். ”
643. அவர்கள் தீர்க்கதரிசனமுரைத்தனர். நோவா ஒரு பேழையைக் கட்டினான், அவர்கள், “அவன் ஒரு பரிசுத்த உருளை! அவன் ஒரு மதவெறியன்! மழை வரப்போகிறது என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது” என்று கூறினர். நூற்றியிருபது ஆண்டுகள் கடந்து சென்றன, அவன் ஒரு மார்க்கத்தை உடையவனாயிருந்து, அதில் இரட்சிப்பை உடையவனாயிருந்தான், தப்பித்துக்கொள்ளும்படியான ஒரு வழி உண்டாக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்களோ தங்களுடைய நிலையில் திருப்தியடைந்திருந்தனர்.
644. அந்தவிதமாகவே அது இன்றைக்கும் உள்ளது, அதாவது மனிதர் தங்களுடைய நிலையில் திருப்திடைந்திருக்கின்றனர். ஆனால் தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழி உண்டு, அந்த வழி இயேசு கிறிஸ்து மூலமாக உள்ளது. ஆமென். அங்குதான் காரியமே உள்ளது: அதே மரபினர், அதே ஆவிகள்.
645. அவர்கள் முற்றிலும் பக்தியுள்ள, மிகுந்த பக்தியுள்ள மனிதராயிருந்தனர், ஆனால் அவர்கள் இப்பொழுது உடன்படிக்கை வாக்குறுதியை தவறவிட்டுவிட்டனர்.
646. அது இன்றைக்கும் அவ்வண்ணமாகவே உள்ளது. மனிதன் சபைக்குச் செல்கிறான், பெரிய சபையில் சேர்ந்து, பட்டிணத்திலேயே மிகவும் புகழ்வாய்ந்த நபராயிருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறான். அவர்கள் ஒரு சபையை சேர்ந்துகொள்ள வேண்டுமானால், அவர்கள் நகரத்தில் உள்ள மிகப்பெரிய, மிகச் சிறந்த, பட்டிணத்தில் நன்றாக கருதப்படுகிற சபையில் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் முற்றிலுமாகவே அந்த அழைப்பை தவறவிடுகிறார்களே! அவர்கள் முற்றிலுமாகவே அதை தவறவிடுகிறார்களே!
647. நீங்கள் இயேசுகிறிஸ்துவை எப்போதுமே அறிந்துகொள்ளும்படியான ஒரே வழி ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலமேயாகும், வேதசாஸ்திரத்தின் மூலமாயல்ல, நீங்கள் வேதத்தை எந்த அளவு கற்கிறீர்கள் என்பதன் மூலமாயுமல்ல. நீங்கள் கிறிஸ்தவ விஞ்ஞானத்தையுடையவராகவோ, மெத்தோடிஸ்டாகவோ, யேகோவா சாட்சிக்காரராகவோ அல்லது நீங்கள் என்னவாக இருந்தாலும் சரி; நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, நீங்கள் அவரை வார்த்தையைக் கொண்டு ஒருபோதும் அறிந்து கொள்வதில்லை, அது தேவனுடைய ஆவி உங்களுக்கு அவரை வெளிப்படுத்துகிறதாயுள்ளது. அது ஒரு ஆவிக்குரிய வெளிப்பாடாயுள்ளதே!
648. ஆதாமும் (ஏதேன் தோட்டத்தில்) ஏவாளும். அந்த பிள்ளைகள் துரத்தப்பட்டபோது, காயீன் இங்கு நல்ல வேத சாஸ்திரத்தோடு வந்தான். அவன், “நாம் இதை நம்முடைய இருதயத்திலிருந்து மிகச் சிறந்த முறையில் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தேவன் அறிந்திருக்க வேண்டும். நான் ஒரு அழகான பலிபீடத்தை கட்டுவேன், நான் அதன்மேல் மலர்களை வைப்பேன், நான் அதன் மேல் பழங்களை வைப்பேன், நான் அதை அழகாக்குவேன். நிச்சயமாகவே என்னால் இதனைக் கொண்டு தேவனை சாந்தப்படுத்த முடியும், நான் என்னுடைய இருதயத்தில் உத்தமமாயிருக்கிறேன் என்பதை அவரை அறிந்து கொள்ளச் செய்வேன்” என்றான். அவன் வார்த்தைக்கு சென்றதைப் பொருத்தமட்டில் சரியாக இருந்தான்; தேவன் ஆராதிக்க விரும்பினார், அவன் ஆராதிக்கச் சென்றான். அவன் ஆராதிக்க ஒரு அழகான இடத்தை, பெரிய, அருமையான தேவாலயத்தை (அவர்கள் இன்றைக்கு அதை அழைக்கிறதுபோல) உண்டுபண்ணினான். அவன் அதை சரியாகச் செய்தான், அவன் அதை சரியாகக் கட்டினான், அதில் பலிபீடத்தையும் வைத்தான்; அவன் ஒரு நாத்திகனாயிருக்கவில்லை.
649. ஆனால் ஆபேல், தேவனுடைய வார்த்தையின் பேரில். அப்பொழுது வேதமானது எழுதப்படாததாயிருந்தது, ஆனால் நம்மை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேக் கொண்டு வந்தது கனியல்ல என்றும், அது ஆதாம் ஏவாள் புசித்த ஆப்பிள்கள் அல்லவென்றும், அவர்களை வேறுபடுத்தி, அவர்களை பிரித்திருந்தது முற்றிலும் பாலியல் காரியங்களாயிருந்தது என்பதை தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினார். அவர்கள் அழிவுள்ளவர்களானார்கள் என்றும், ஆதாமினுடைய இரத்தத்தினூடாகவும், சர்ப்பத்தினுடைய இரத்தினூடாகவுமே இது துவங்கியிருந்தது என்று அறிந்து, ஆபேல் தெய்வீக வெளிப்பாட்டினால் போய் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து அதை பலியிட்டான். அப்பொழுது தேவன், “அதுதான் சரியானது” என்றார். நிச்சயமாக.
650. அவர்கள் மறுரூப மலையிலிருந்து இறங்கி வந்தபோது, இயேசு, “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார். ”
651. “அப்பொழுது, “சிலர் உம்மை 'மோசே' என்றும், சிலர் உம்மை 'எலியா' என்றும், சிலர் உம்மை 'எரேமியா' என்றும், சிலர் உம்மை 'அந்த தீர்க்கதரிசி' என்று கூறுகிறார்கள்” என்றனர்.’”
652. அதற்கு அவர், “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். ”
653. அப்பொழுது பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். ”
654. அவர், “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை,” என்றார். (கவனியுங்கள்!) “கடிதத்தின் மூலமாயல்ல, வேதபள்ளியின் மூலமாயல்ல; நீ இதை ஒரு வேதபாட கருத்தரங்கில் ஒருபோதும் கற்கவில்லை, வேறு யாரோ உனக்கு சொல்லவுமில்லை. மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார், அங்குதான் காரியமே உள்ளது. அங்குதான் ஜீவனுள்ள தேவனுடைய சபை உள்ளது. அதுவே இதுவாகும். அந்த சபையின் மேல் அந்த வெளிப்பாட்டின் மேல், இந்த சபை கட்டப்பட்டுள்ளது. அது இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாயிருக்கிறார் என்று தேவன் வெளிப்படுத்தியிருக்கிற ஒரு தெய்வீக வெளிப்பாடாய் உள்ளது, நீங்கள் அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள், எனவே நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள்.
655. இந்த சரீரத்தின் அங்கத்தினர்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானது அசைவாடி கிரியை செய்துகொண்டிருக்கிறது. அதுவே சபையாயுள்ளது! ஏழ்மையாயிருந்தாலும், ஊழியத்தில், நீ எங்கோ ஒரு தேவதாரு மரத்தின் கீழிருந்தாலும், அல்லது அது என்னவாயிருந்தாலும், அது யாரோ ஒருவருடைய வீட்டில் நடைபெறும் ஒரு தனிப்பட்ட கூட்டமானாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அது எங்கே இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அழகும் மற்ற காரியங்களும் தேவனை வசியப்படுத்துகிறதில்லை. அது இயேசு கிறிஸ்து தேவ குமாரனாக, நம்முடைய சொந்த இரட்சகராக தந்தருளப்பட்டிருக்கிறார் என்ற ஒரு வெளிப்பட்டினால் உண்டான இருதயத்தின் உத்தமமாயுள்ளது. ஆமென்!
656. என்னே, நாம். அந்தவிதமாக பார்ப்பதன் மூலம் நீங்கள் இவைகளை ஒருபோதும் புரிந்துகொள்ளுகிறதில்லை, நாம் புரிந்து கொள்வோமா?
657. அவர் பிரசங்கிக்கச் சென்றபோது... அங்கிருந்தவர்கள் அவர்கள்தான்: தூதர்கள், செய்தியாளர்கள், அவர்கள் பிரசங்கிமார்கள், அவர்கள் அறிவாற்றலுள்ளவர்கள், நோவா அவர்களிடத்திற்குச் சென்று, “இந்தப் பேழைக்குள் வாருங்கள்” என்று அவர்களிடம் கூறினபோது அதை விசுவாசிக்காத அந்த செய்தியாளர்கள். ”
658. அவர்கள், “இந்த பரிசுத்த உருளையை கவனியுங்கள், அந்த மதவெறியனை கவனியுங்கள். ஏன்? மழை என்பதே இல்லை. அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எப்போழுதாவது கேள்விப்பட்டது யார்? ஏன்? என்னே, நாம் சபைகளை உடையவர்களாயிருக்கிறோமல்லவா? நாம் பக்தியுள்ளவர்களாயிருக்கிறோமல்லவா?” என்றனர். ஏன்? அவர்கள் பக்தியுள்ளவர்களாயிருந்தனர்!
659. அப்பொழுது ஒழிந்துபோன சந்ததியைப் போன்றே இந்த சந்ததி இருக்கும் என்று இயேசு கூறினார், அதாவது அவருடைய வருகைக்கு முன்பாக உள்ள அந்த சந்ததி மீண்டும் அதைச் செய்யும், அதாவது, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில் அவர்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்துமிருந்தனர்” என்றார். அப்பொழுது அவர்கள் எங்கோ இப்பொழுது உள்ளது போன்று நெவாடா மாநிலத்தில் உள்ள ரேனோவுக்குப் போய் அங்கு ஒரு பெண்ணை மணப்பதும், அவளை பதினைந்து நிமிடத்திற்குள் விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் வேறொரு பெண்ணை மணப்பது போன்றதும் இருந்து வந்தது. இவர்கள் இன்றைக்கு பெற்றுள்ள எல்லா விதமான அர்த்தமற்ற காரியங்களையும் அவர்கள் உடையவர்களாயிருந்தனர்; அணிதிரளுதல், கும்மாளம் போடுதல், பரியாசம் செய்தல், பரியாசக்காரர்கள் போன்றவராயிருந்தனர்; தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, உண்மையான சத்தியத்தை உடன்படிக்கையை, கிருபையின் செய்தியை மறுத்தலித்தல்: தேவன் தம்முடைய வழியை உண்டுபண்ணி, ஜனங்கள் எப்படி தப்பித்துக்கொள்ள முடியும் என்ற தம்முடைய தம்முடைய உடன்படிக்கையைத் தருகிறார்; அது அதில் இரட்சிப்பை உடையதாயிருந்தது, இரட்சிப்பே தப்பித்துக்கொள்ளும்படியான ஒரு ஸ்தலமாயிருந்தது.
660. ““நாம் இரட்சிப்போடு என்ன செய்ய வேண்டும்?” இன்றைக்கு ஜனங்களோ, “நாம் ஒரு நல்ல ஜனநாயக அமைப்பிலான அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கிறோமல்லவா?” என்று கூறுகிறார்கள். நமக்கு என்ன தேவை? ”
661. நாம் எவ்வளவுதான் ஜனநாயக உருவிலான அரசாங்கத்தில் வாழ்ந்தாலும் எனக்குக் கவலையில்லை, நமக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தமே தேவை. சரியே! நமக்கு கிறிஸ்து தேவை. நான் ஒரு ஜனநாயக முறையிலான அரசாங்கத்தைப் பாராட்டுகிறேன்; அதற்கு ஆத்தும இரட்சிப்போடு எந்த சம்மந்தமும் கிடையாது. முற்றிலுமாக! அந்த அரசாங்கங்கள் ஒழிந்து போம், ஒவ்வொரு தேசமும் ஒழிந்துபோம். பார்வோன்கள் நின்ற இடங்களுக்கு அருகில்... நான் நின்றிருக்கிறேன், அவர்கள் அமைத்திருந்த அவர்களுடைய சிங்காசனங்களைக் கண்டறிய நீங்கள் இருபது அடி கீழே நிலத்தில் தோண்ட வேண்டும். எல்லா பார்வோன்களும், இந்த பூமிக்குரிய எல்லா அவர்களுடைய ராஜ்யங்களும், அதனுடைய எல்லா புகழ்ச்சியான காரியங்களும் ஒழிந்து மறைந்து போகும், ஆனால் யேகோவா என்றென்றுமாய் ஆளுகை செய்வார், ஏனென்றால் அவர் அழிவில்லாத தேவனாயிருக்கிறார். நாம் கிறிஸ்து இயேசு என்னும் உறுதியான கன்மலையின்மேல் நிற்கிறோம், ஏனென்றால் மற்ற எல்லா நிலங்களும் அழிந்து கொண்டிருக்கிற மணல்களாய் உள்ளன. Those governments will pass, and every nation will pass. And I’ve stood by the... where the pharaohs stood, and you have to dig twenty feet under the ground to find their thrones where they set. All the pharaohs and his kingdoms of this earth, and all of its faltery things will fail and go away, but Jehovah will reign forever, for He’s the immortal God. Solidly upon the Rock Christ Jesus we stand, for all other grounds is sinking sands.
662. அதை கவனித்தாலும்... ராஜ்யங்கள் எழும்பும், ஒழிந்து போம், ஆனால் ஓ, ஒன்றுமேயில்லை... அது... எந்தக் காரியமானாலும்... நான் கவலைப்படுகிறதில்லை; நிகழ்காரியமானாலும், வருங்காரியமானாலும், (பட்டினியோ அல்லது நாசமோசங்களோ அல்லது எந்தக் காரியமாயினும்) கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது. ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கும்போது, அவன் இனி ஒருபோதும் ஒரு காலத்தின் சிருஷ்டியாயிராமல், அவன் ஒரு நித்திய சிருஷ்டியாயிருக்கிறான். ஆமென். அவன் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். அவன்... நீங்கி... அவன் காலம் என்ற மூலத்துவக்கத்திலிருந்து நீங்கி நித்தியத்திற்குட்பட் டிருக்கிறான். அவன் ஒரு போதும் அழிந்து போக முடியாதே! தேவன் அவனை கடைசி நாளில் எழுப்புவதாக ஆணையிட்டுவிட்டாரே!
663. ஆகையால் அவர்கள் உங்களுக்கு எல்லா பெரிய சபைகளையும் விரும்புகிற எல்லாவற்றையும், அளித்து, உங்களுக்கு அசுத்தமான நகைச் சுவைகளையும், உங்களுக்கு சூதாட்டங்களையும், இரவு விருந்துகளையும், நீங்கள் விரும்புகிற ஒவ்வொன்றையும் அளித்து, அங்கு ஒரு கல்வி பயின்ற பிரசங்கியாரை நிற்கச் செய்யக்கூடும். தங்களுடைய மொழியின் முதலெழுத்துகளைக் கூட அறிந்திராத இந்த சில பையன்களைவிட மேலான ஒரு ஊழியத்தை அந்தப் பிரசங்கியார் செய்யாலாம். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், உங்களுடைய எல்லா கல்வியறிவின் கருத்துகளோடும் இருக்ககூடிய எல்லா பெரிய வேதப்பண்டிதர்களும் எனக்கு பிரசங்கிப்பதைக் காட்டிலும் தன்னுடைய மொழியின் முதல் எழுத்துகளை அறிந்திராத ஒரு பையன் (அறிந்துள்ள கிறிஸ்துவை) எனக்கு பிரசங்கிப்பதையே நான் தெரிந்துகொள்ள விரும்புவேன். முற்றிலுமாக!
664. அண்மையில் இங்கு கென்டக்கியில் தன்னுடைய சொந்த பெயரைக் கூடப் படிக்க முடியாத ஒரு பையனை கர்த்தர் அழைத்து அவனைப் பிரசங்கிக்கும்படிக் கூறினாராம், எனவே அவனுக்கு ஒரு பள்ளிக்கூடம் தேவைப்பட்டதாம், ஆனால் அதிகாரிகளோ அவன் பள்ளியில் கூட்டம் நடத்த அனுமதிக்கவில்லையாம். அதன்பின்னர் ஒரு மகத்தான பெரிய பிரசங்கியார் அங்கு அந்தவிதமான தன்னுடைய பெயரோடு கூட, தன்னுடைய பெரிய தெய்வீக பாண்டித்தியப்பட்டத்தைக் கூற அவர்களோ அவருக்கு பள்ளியை கூட்டத்தை நடத்த கொடுத்தார்களாம். நிச்சயமாகவே. அவர் இரண்டு வார எழுப்புதல் கூட்டம் நடத்தினதில் ஒரு ஆத்துமா கூட இரட்சிக்கப்படவில்லையாம். அதன்பிறகு இந்த பையனுடைய தகப்பனார் திரும்பவும் போய், “நீங்கள் இப்பொழுது அவனுக்கு கூட்டம் நடத்த இடமளியுங்கள். நான் வரிசெலுத்தும் ஒருவனாயிருக்கிறேனே, எனவே என்னுடைய பையனுக்காக அந்த இடத்தைப் பெற்றுத்தர எனக்கு உரிமை உண்டு. என்னுடைய பையனும் கூட அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டும்” என்றார். ”
665. ஆகையால் அதைக் கண்டறியும்படியாய் அவன் திரும்பிப் போய் அவர்களிடத்தில் கேட்டான், அப்பொழுது அவர்கள், “பரவாயில்லை, அவன் குறைந்தபட்சம் இரண்டு இரவுகளாவது அந்த இடத்தில் கூட்டம் நடத்த நாங்கள் அனுமதிப்போம்” என்றார்கள். ஆகவே அவர்கள் தொடர்ந்து இரண்டு இரவுகள் அவனை அந்த இடத்தில் கூட்டம் நடத்த அனுமதித்தனர்.
666. அந்த இரவு அந்தப் பையன் அங்கு எழும்பி நின்றபோது, அவனால் வேதத்தைக் கூட வாசிக்க முடியவில்லை, வேறுயாரோ ஒருவரே அவனுடைய பாடப்பொருளுக்கான வேதப்பகுதியை வாசிக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவன் மேடையண்டை நடந்து சென்றபோது, அவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருந்தான். அவன் பிரசங்கித்தபோது, ஏறக்குறைய இருபது பேர் பீடத்தண்டை வந்தனர்; தனக்குத்தானே ஒரு பாணியில் பிரசங்கிக்கும் அந்தப் பிரசங்கியார் கல்வாரியின் பாடுகளை நினைத்து அழுது பீடத்தண்டை வந்தாராம்.
667. நிச்சயமாகவே, சகோதரனே, அது- நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள் என்பது அல்ல, அது நீங்கள் யாரை அறிந்துள்ளீர்கள் என்பதாயுள்ளது. அதுவே திட்டமாயுள்ளது, அதுதான் இதற்கு தேவையாயுள்ளது, அதுவே கிறிஸ்துவை அறிந்துகொள்ளச் செய்கிறது. அவரை அறிந்து கொள்வதே ஜீவனாயுள்ளது; அவரைப் புறக்கணிப்பதோ மரணமாயுள்ளது.
668. துரிதமாக நம்முடைய மற்றக் கேள்விக்குச் செல்வோம், இப்பொழுது இந்த கேள்விகளுக்கான பதில்கள் பதிவிசெய்யப்பட்டு ஜார்ஜியாவிற்கு செல்கின்றன.