669. நீங்கள் உங்களுடைய வேதாகமங்களை திறந்து பார்க்கும்படியான நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பினால் நலமாயிருக்கும், நமக்கோ இப்பொழுது அதிகப்படியான நேரம் இல்லை, ஆனால் நான் அவைகளுக்கு துரிதமாக பதிலளிக்க முயற்சிப்பேன். வெளிப்படுத்தின விசேஷம் இருபத்தி... அது 21:19 மற்றும் 20-ல் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆம்.
670. சரி, அங்கே கட்டிடத்தில் இருந்த அந்த கற்களைக் குறித்து அவர் என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பதை நீங்கள் கண்டறியலாம். அந்தக் கற்கள் அஸ்திபாரங்களாயிருந்தன. நீங்கள் கவனிப்பீர்களேயானால். சகோதரன் நெவில், நீங்கள் அதை அங்கு எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு கல்லும் ஒரு அஸ்திபாரமாயிருந்தது. ஒரு கல்லே ஒரு அஸ்திபாரமாயல்ல, மற்றவைகள்… ஆனால் ஒவ்வொரு கல்லும் ஒரு அஸ்திபாரமாயிருந்தது. அங்கு பன்னிரண்டு கற்கள் இருந்தன. அந்த பன்னிரண்டு கற்களையும் நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஒவ்வொரு... அளிக்கிறது. முதலாவது வச்சிரக்கல்லில் துவங்கி, பதுமராகம். அது போன்று ஒவ்வொரு கல்லும் ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன.
671. வேதத்தில் அங்கே அழைக்கப்பட்ட குறிப்பிட்ட கற்களை நீங்கள் கண்டடைவீர்கள். அவைகளில் சில சற்று வித்தியாசமானது, நீங்கள் அதைக் குறித்து ஒருபோதும் கேட்டிருக்கமாட்டீர்கள். நீங்கள் அகராதியில் தேடிப் பார்த்தால், அது அதே கல்லாயிருப்பதையும், அப்படியே சற்று ஒரு வித்தியாசமான பெயராய் மாற்றப்பட்டிருப்பதையும் நீங்கள் கண்டறிவீர்கள்.
672. ஆனால் அது வச்சிரக்கல்லோடு துவங்குகிறது. வஞ்சிரக்கல் பென்யமீனுடைய கல்லாயிருந்தது. இல்லை அந்தக் கல்... ஓ, முதல் குமாரன் ரூபனுடையதாயிருந்தது. முதல் கல் ரூபனுடையதாயிருந்தது, அது வச்சிரக் கல்லாயிருந்தது. கடைசி கல் பென்யமீனுடையதாயிருந்தது, மேலே உள்ள கடைசி கல்.
673. இப்பொழுது இந்தப் பன்னிரண்டு கற்களில் அஸ்திபாரங்கள் போடப்பட்டிருந்தன, அவைகள் அவைகள் ஆரோனுடைய மார்பகத்தின் மேல் தொங்கின கற்களாயிருந்தன. அவைகள் - அவைகள் அவன் இந்த... இந்த கோத்திரங்களுக்கு பிரதான ஆசாரியனாய் இருந்தான் என்பதை பிரதிநிதித்துவப்படுத்தின. இந்த இந்த மார்ப்பதகத்தில் இங்கு உள்ள ஒவ்வொன்றும் அவர்களுடைய பிறப்புக் கற்களாயிருந்தன. ஜனங்கள் இந்த மார்ப்பதகத்தைக் கண்டபோது, இந்த மார்ப்பதக்கத்தில் அவர்கள் பிறப்புக்கல்லைக் கண்டபோது, அந்த முழு கோத்திரத்திற்கும் ஆரோன் பிரதான ஆசாரியனாய் இருந்தான் என்பதை அடையாளங்கண்டு கொண்டனர்.
674. இப்பொழுது, நாம் இந்தக் காலை சகோதரன் நெவிலினுடைய செய்தியில் கேட்டோம். அவர்கள் அநேக சமயங்களில் ஊரீம் தும்மிம்மைக் கொண்டு வந்தனர். அவர்கள் தங்களுடைய செய்தி உண்மையாயிருந்ததா அல்லது இல்லையா என்பதை அந்தவிதமாகவே அறிந்துகொண்டார்கள் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்கிறீர்கள். அந்தக் கற்கள், அந்த மனிதன் என்னக் கூறினான் என்பதை அவர்கள் கூறப்போகும்போது, தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அந்தக் கற்கள் யாவும் ஒன்று சேர்ந்து பிரதிபலித்தன. அது இந்திர நீலம், வச்சிரக்கல், மாணிக்கம் என்ற அந்த கற்களின் ஒன்று சேர்ந்த ஒளியை உண்டாக்குகினது, அந்த மற்ற எல்லா கற்களும் தங்களுடைய ஒளியைப் பிரதிபலிக்க, அது பெரிய மகத்தான முழுக்காரியமும் ஒன்று சேர்ந்து கலந்த ஒரு அழகான வானவில் நிறத்தை உண்டாக்கிற்று.
675. இப்பொழுது, இப்பொழுது, இன்றைக்கு அந்த ஊரீம் தும்மீம் அந்த ஆசாரியத்துவத்தோடு எடுக்கப்பட்டுவிட்டபோது, இப்பொழுது இந்த வேதமே இன்றைக்கு தேவனுடைய ஊரீம் தும்மீமாய் உள்ளது. ஒரு பிரசங்கியார் பிரசங்கிக்கும்போது, அது மற்ற இடங்களில் முரண்பட்டதாயிருக்க, அவன் அந்த சிறு இடத்தில் மாத்திரம் நம்பிக்கைகளை வைக்கக் கூடாது. அந்த மனிதன் பிரசங்கித்துக் கொண்டிருக்க செய்தியானது முழு வேதாகமத்தையும் பிரதிபலிக்க வேண்டும். அது தான் காரியமாகும். வெறுமென ஒரு இடத்தில் கூட, “பரவாயில்லை, வேதம் இதைக் கூறுகிறது” என்று கூறக்கூடாது. ஓ, நிச்சயமாக, அது ஏராளமாக காரியங்களைக் கூறுகிறது. ஆனால் நீங்கள் அவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இணைக்க வேண்டும். தேவனுடைய ஆவியானது வந்து வார்த்தைக்குள்ளாக செல்லும்போது, அது அவை எல்லாவற்றை ஒன்று சேர்த்து பொருத்த, அப்பொழுது அது ஒரு மகத்தான பெரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது, அந்த வெளிச்சம் இயேசு கிறிஸ்துவாயுள்ளது. ஆமென்.
676. இப்பொழுது, இந்த பன்னிரண்டு கற்கள் ரூபனிலிருந்து துவங்கி, காத் தொடர்ந்து பென்யமீன் வரையிலான பன்னிரண்டு அஸ்திபாரங்களாயிருந்தன; பன்னிரண்டு கோத்திரங்கள், பன்னிரண்டு கற்கள். அந்தக் கற்கள் புதிய பரலோக எருசலேமில் உள்ள ஆலயத்தில் உள்ளன, ஒவ்வொரு அஸ்திபாரமும் ஒவ்வொரு கோத்திரப் பிதாவின் பேரில் வைக்கப்படும்.
677. இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் அந்தக் கற்களை கவனிப்பீர்களானால், இப்பொழுது அந்த கோத்திரப் பிதாக்கள் வேறு ஒரு காரியத்திற்குள், அப்படியே மற்றொரு கேள்வியில் சரியாக பிரதிபலிக்கப்பட்டதை நீங்கள் கவனிக்கப் போகிறீர்கள்.