678. சகோதரன் நெவில், நீர் அதை சரியாக எடுத்து வைத்திருந்தால் அல்லது உங்களில் சிலர் வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தை எடுத்திருந்தால், நாம் இதை ஒரு நிமிடம் அப்படியே வாசிப்போம். அது-அது இங்கு ஒரு அழகான காட்சியாயுள்ளது... இதோ நானே அதை எடுத்துவிட்டேன், வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரம்:
அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். புஸ்தக...
679. இப்பொழுது அந்த இடம் அல்ல. நான் இன்னும் சற்று முன்னோக்கி செல்லவேண்டும், நான்கு ஜீவன்கள். நாம் 14-வது வசனத்தைப் பார்ப்போம். சரி, ஐயா. இப்பொழுது நாம் இங்கே பார்ப்போம், அது சரி. இப்பொழுது நாம் இங்கே 12-வது வசனத்தில் துவங்குவோம், இல்லை, நான் நினைக்கிறேன்... “அதற்கு நான்கு ஜீவன்களும் 'ஆமென்' என்று சொல்லின.” இல்லை, அதற்கு சற்று பின்னால் உள்ள இடத்தில் உள்ளது, சகோதரன் நெவில் “பின்னும் நான்... சத்தத்தைக் கேட்டேன்...”
680. நாம் அப்படியே ஒரு நிமிடத்தில் அதைப் பார்ப்போம், நான் சற்று முன்னர் அதை வாசித்துக் கொண்டிருந்தேன். ஓ, இதோ நமக்கு கிடைத்துவிட்டது, நாம் 6-வது வசனத்தில் துவங்குவோம். 5-வது வசனம்:
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச்சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவங்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
681. நீங்கள் அந்தக் கேள்வியை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் அதற்கு இங்கு ஒரு நிமிடத்தில் பதிலளிக்கவில்லையென்றால், நீங்கள் அதை மீண்டும் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அப்பொழுது நான், “ஆட்டுக்குட்டியாவனருக்கு இருந்த ஏழு கண்களின் ஏழு ஆவிகளின்” பேரில் தொடர்ந்து பேச விரும்புகிறேன். ஓ, அது உண்மையாகவே அழகான காரியமாயுள்ளது. (பரவாயில்லை, நாம் இப்பொழுது இந்த சகோதரனுடைய கேள்வியைப் பார்க்க வேண்டும்.) சரி, அதை இப்பொழுது மறந்துவிடாதீர்கள்.
அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும்...
682. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், இங்குள்ள அந்த நான்கு நான்கு ஜீவன்கள், இப்பொழுது நாம் தொடர்ந்து சற்று மேற்கொண்டு வாசிப்போம்:
சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும், தேவரீர்... பாத்திரராயிருக்கிறீர்... புதிய பாட்டைப் பாடினர்கள். (தொடர்ந்து அவர்களுடைய... அவர்களுடைய ஆராதனை கர்த்தருக்கே...)
683. இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள இந்த நான்கு ஜீவன்களும், நீங்கள் அவைகளை கவனிப்பீர்களேயானால், ஒவ்வொரு இடத்திலும்... (வேத வாசகர்களாகிய நீங்கள், அந்த மனிதன் இந்த ஒலிப்பதிவினைக் கேட்கப் போகின்றார்). அந்த நான்கு ஜீவன்களும், அவைகள் நான்கு முகங்களை உடையவைகளாயிருந்தன: ஒன்று ஒரு மனித முகத்தைப் போன்றதாயிருந்தது, மற்றொன்று ஒரு காளை முகத்தைப் போன்றதாயிருந்தது, மற்றொரு முகம் ஒரு கழுகைப் போன்றிருந்தது, மற்ற முகமோ ஒரு சிங்கத்தைப் போன்றிருந்தது. அவைகள் ஒருபோதும் பின்னோக்கிச் செல்லவில்லை. அவைகளால் பின்னோக்கிச் செல்ல முடியவில்லை.
684. பண்டைய வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை, அவர்கள் அநேக ஆண்டுகளுக்கு முன்னர் அதை கற்றபோது, நான் இங்கே இந்த வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தின் பேரில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் பிரசங்கித்தது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? அதிகம் பண்டைய காலத்தவர்களே நினைவில் வைத்திருக்கிறீர்கள்.
685. பாருங்கள், அவைகளால் பின்னோக்கி செல்ல முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் சென்ற ஒவ்வொரு வழியிலும் அவைகள் முன்னோக்கியே சென்று கொண்டிருந்தன. அவைகள் இந்தவிதமாய்ச் சென்றதானால், அவைகள் ஒரு மனிதனைப் போல சென்று கொண்டிருந்தன; அவைகள் இந்தவிதமாய்ச் சென்றதானால், அவைகள் ஒரு சிங்கத்தைப் போல சென்று கொண்டிருந்தன; இந்தவிதமாய்ச் சென்றால், அவைகள் கழுகைப் போல் சென்று கொண்டிருந்தன; அவைகள் இந்தவிதமாய்ச் சென்றதானால், அவைகள் காளையைப் போல சென்று கொண்டிருந்தன. பாருங்கள், அவைகளால் பின்னோக்கி செல்ல முடியவில்லை, அவைகள் எல்லா நேரத்திலும் முன்னோக்கியே சென்று கொண்டிருந்தன.
686. இப்பொழுது அந்த நான்கு ஜீவன்கள். இப்பொழுது இதைத் துரிதமாகப் பார்ப்போம், ஏனென்றால் நான் இதன் பேரில் நீண்ட நேரம் தரித்திருக்க விரும்பவில்லை. ஆனால் நான்கு ஜீவன்கள்... வேதாகமத்தில் மிருகம் “வல்லமையைக்” குறிக்கிறது. இந்த ஜீவன்கள் அங்குள்ள ஏரியில் இல்லை எங்கோ சமுத்திரத்திலிருந்து எழும்பி வந்ததல்ல, ஆனால் இந்த ஜீவன்கள் தேவனுடைய சிங்காசனத்தில் இருந்தன, அவைகள் தேவனை ஆராதித்துக்கொண்டிருந்தன. அந்த நான்கு ஜீவன்களும் பூமியிலிருந்து எழும்பி வருகிற நான்கு வல்லமைகளை பொருட்படுத்துகின்றன, அந்த நான்கு வல்லமைகளும் நான்கு சுவிசேஷங்களாயிருந்தன; மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்; ஒன்று மற்றொன்றோடு முரண்படுகிறதில்லை.
687. அவைகளில் ஒன்று, சுவிசேஷம் ஒரு சிங்கத்தைப் போல புறப்பட்டுச் செல்கிறபடியால், அது கண்டிப்பானதாய் உள்ளது, அது தைரியமானதாயுள்ளது; சுவிசேஷம் ஒரு சிங்கத்தைப் போல தைரியமுள்ளதாயுள்ளது. அது ஒரு சிங்கத்தைப் போல ஒரு ராஜாவாய் உள்ளது. அது மனித முகத்தைப் போல செல்லுமானால், அது ஒரு மனிதனைப் போன்று தந்திரமும், புத்திசாலித்தனமுமாயுள்ளது. அது கழுகைப் போல் செல்லுமானால், அது துரிதமான செட்டைகளோடு மிக உயரத்துக்கு செல்வதாயுள்ளது. அது... நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? அது காளையைப் போல செல்லுமானால், அது பணிபுரியும் குதிரையாய் இழுக்க முடிந்ததாயுள்ளது, பணிபுரியும் காளையாய் சுவிசேஷ பாரத்தை இழுக்கிறது. நான்கு ஜீவன்களும் நான்கு வல்லமைகளாய் இருந்தன, அவைகள்; மத்தேயு, மாற்கு லூக்கா மற்றும் யோவான் என்பவைகளாயிருந்தன; இந்த நான்கு சுவிசேஷங்களும் தேவனுடைய பிரசன்னத்தில் வெளியே வட்டமிட்டுள்ளன. அது...
688. நீங்கள் கவனித்திருப்பீர்களேயானால், அவைகள் முன்னாலும், பின்னாலும் கண்களை உடையவைகளாயிருந்தன. அவைகள் - அவைகள். அது எங்கெங்கெல்லாம் சென்றதோ, அதனை பிரதிபலித்தது. அவைகள் எங்கெங்கெல்லாம் சென்று கொண்டிருந்தன என்பதை அவைகள் கண்டன. அது வெளியே செல்லுகிற விதமாக அந்த சுவிசேஷங்களின் வல்லமையும் உள்ளது, அது... அது ஒரு மனிதனின் புத்திசாலித்தனத்தைப் பெற்றுள்ளது; அது கழுகின் வேகத்தைப் பெற்றுள்ளது; அது காளையைப் போன்று வல்லமையை, இழுக்கும் வல்லமையை, பாரம் சுமப்பதாயுள்ளது; அது ஒரு சிங்கத்தின் கண்டிப்பையும், தைரியத்தையும் பெற்றுள்ளது. பாருங்கள், அவை நான்கு சுவிசேஷங்களாய் உள்ளன, அவைகளே வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் உள்ள நான்கு வல்லமைகளாய் உள்ளன. சரி, இப்பொழுது அடுத்தது: