689. இப்பொழுது அது எளிமையானது, நாம் அதைப் புரிந்து கொள்ள முடியும். இருபத்தி நான்கு மூப்பர்களும் சிங்காசனத்திற்கு முன்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அது... அது 4-ம் வசனத்தில் கண்டறியப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். “புறப்பட்டுச் சென்ற மற்றொரு...” நான்... நாம் பார்ப்போம், நான். வெளி: 4:10...
690. சரி, வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரம் 10-ம் வசனம். அது சரி. நாம் அதை எடுப்போம். இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண்டு, தங்கள் கீரிடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் - சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.
691. இப்பொழுது இருபத்து நான்கு மூப்பர்கள். ஒரு முப்பன் என்பவன் கண்காணியாயிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களும், பன்னிரண்டு அப்போஸ்தலர்களுமாயிருந்தனர். அவர்கள் ஒரு புறத்தில் பன்னிரண்டு பேர்களும், மறுபுறத்தில் பன்னிரண்டு பேர்களுமாய் உட்கார்ந்துகொண்டிருந்தனர். இருபத்து நான்கு மூப்பர்களாயிருந்தவர்கள், பழைய ஏற்பாட்டு கோத்திரப்பிதாக்கள் ஒருபக்கம் இருந்தனர்; புதிய ஏற்பாட்டு பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மற்றொரு பக்கத்தில் இருந்தனர். இயேசு, “நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள்” என்று கூறவில்லையா?
692. இப்பொழுது அஸ்திபாரங்கள், பாருங்கள், அங்கே ஒரு மரமும் கூட உள்ளது. அந்த மரம் பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும். அது மாதந்தோறும் அதனுடைய கனியைத் தரும், அது வருடத்தில் பன்னிரண்டு மாதங்களாய் உள்ளன. அது ஒவ்வொரு வருடமும் பன்னிரண்டு விதமான கனிகளைக் கொடுக்கும். பன்னிரண்டு, “ஆராதனை” என்பதைக் குறிக்கும் எண்ணாயுள்ளதை நீங்கள் பாருங்கள். அங்கே இருந்தது இருபத்து நான்கு, இருபத்தி நான்கு, பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களுமாகும். அவர்கள் சிங்காசனத்தண்டை வீற்றிருக்கிறார்கள்.
693. சரி, இப்பொழுது 4-வது வசனம். இல்லை நான்காவது கேள்வி: