241. என்னுடைய தாழ்மையான நம்பிக்கையில், இப்பொழுது, நான் செய்யமாட்டேன்... எனக்குத் தெரியாது, அவர் அங்கே மத்தேயு 24ஐக் குறித்து பேசுகிறார் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, இயேசு நட்சத்திரங்களைக் குறித்தும், விழும் காரியங்களைக் குறித்தும் பேசுகின்றார், பூமியின் மீது உபத்திரவம் விழும் முன்னர் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
242. இப்பொழுது இதை நீங்கள் யாரும் ஆமோதிக்காத, ஏற்றுக் கொள்ளக்கூடாத ஒரு வினோதமான கருத்தை நான் கொண்டிருந்தேன், நாம் அதற்குள் கடந்து வந்தோம் என்னும் போதகத்தை பழைய காலத்தவரில் சிலர் கேட்டார்கள் என்று நான் கற்பனை செய்கிறேன். பாருங்கள், சபையானது உபத்திரவக் காலத்திற்குள் செல்லும் என்று நான் விசுவாசிப்பதில்லை. நான் விசுவாசிக்கிறேன் சபை... பாருங்கள், நான்... புதிய ஏற்பாட்டை நான் கற்பிக்கும் ஒரே வழி அதன் நிழலாகிய பழைய ஏற்பாட்டின் மூலமேயாகும், இங்கே பரிசுத்த ஆவி ஓய்வு நாளுக்காகவும் உள்ளதைப் போன்றாகும். எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு நிழலுண்டு.
243. இப்பொழுது, பழைய ஏற்பாட்டைத் திரும்பிப் பாருங்கள். அங்கு வாதைகள் விழுவதை நீங்கள் காணும் போது, அவர்கள் அங்கு எகிப்தில் இருந்தனர். அப்படித்தானே? தேவன் தம் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு செல்ல அவர்களை வெளியே அழைத்தார். அது சரிதானே? இஸ்ரவேலோ ஒரு வாதையைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை. எப்படி வாதைகள்... அது வரும் முன்னர் அவர்கள் கோசேனிற்குள் சென்று விட்டனர். அது சரியா? அங்கு சூரியன் மங்கவில்லை, கொசுக்கள் வரவில்லை, தவளைகள் அங்கே இல்லை, பேன்கள் அங்கே இல்லை, புயல், மின்னல் அங்கே இருக்கவில்லை, ஆடு மாடுகள் அங்கே கொல்லப் படவில்லை, கோசேனில் அவர்கள் வைத்திருந்த எல்லா காரியங்களும் பாதுகாக்கப்பட்டன. அது சரிதானே? உபத்திரவக் காலத்திற்கு முன் சபை சென்றுவிடுவதற்கு இது நிழலாய் அமைந்துள்ளது. இயேசு, “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும் போது உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்று கூறினார்.
244. நான் நம்புகிறேன், சந்திரன், சூரியன் நட்சத்திரங்கள். அவர்கள் கூறினர். நான் மேற்சென்று அதைப் படிக்கிறேன், “மனிதர்கள் ஓடி தங்களை ஒளித்துக்கொண்டார்கள். பிறகு... விழுந்து... தங்களைத், தானே கொலை செய்துகொள்ள முயற்சித்தார்கள், ஆனாலும் அவர்களால் முடியாதிருந்தது, எல்லாவற்றிலும்” இது உபத்திரவத்திற்கு முன்பாக நிகழும் என்று நான் விசுவாசிக்கிறேன்.
245. இப்பொழுது, கவனியுங்கள், உபத்திரவம் வருகின்றது. உபத்திரவம் வருகின்றது. உபத்திரவம் தாக்கும்போது, சபை மேலே செல்கிறது. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவி இல்லாது ஒரு சாதாரண சபை உபத்திரவத்திற்குள் செல்கிறது. அது தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே செல்வதாகும்.
246. ஓ, இன்னும் ஒரு நிமிடம் இதைக் குறித்து நான் இங்கே சற்று பார்க்கமுடியும். இன்னும் மூன்று நிமிடங்கள் எனக்கு அளிப்பீர்களா? எடுத்துக் கொள்ளப்பட்ட மக்கள் என்னவென்று அழைக்கப்படுவார்கள், மீதமுள்ளவர்? அது சரிதானே? அது சரி... நான் - நான் கூற விழைவது -அது மணவாட்டி. இப்பொழுது, மீதமுள்ளவர்கள் விடப் பட்டனர்.
247. இப்பொழுது, ஒரு ஸ்திரீ மேலாடைக்கான அமைப்பை வெட்டச் செல்கையில், நீங்கள் அதைக் குறித்து பேசுகிறீர்கள். அவள் பொருட்களை பிரித்து விரித்து வைக்கிறாள் (அது சரிதானே?), பொருட்கள். வெட்டப்பட வேண்டிய அமைப்பை அதன் மீது வைக்கிறாள். பிறகு வெட்டவேண்டிய அமைப்பை குறிக்கின்றாள். அது சரி?
248. ஓ. சகோதரனே, இது உங்களுக்கு நலமானதைச் செய்கிறதல்லவா! தெரிந்து கொள்ளுதலை செய்வது யார்? தேவனே தெரிந்த கொள்ளு தலைச் செய்கிறார். அது சரியா? இதை நான் கூறுவதற்கல்ல, அவர்தான் அதைக் கூறவேண்டும். யார் மீது அமைப்பு வைக்கப்படவேண்டும் என்று நிர்ணயிக்கின்றாரோ அவன் மீது அதை வைக்கிறார். அது சரி தானே?
249. இப்பொழுது, மணவாளனை சந்திக்க பத்து கன்னிகைகள் புறப்பட்டு சென்றார்கள். அது சரிதானே?
250. ”கன்னி” என்பது என்ன? கன்னி என்றால் “தூய்மை, பரிசுத்தம் “ அது சரியா? கன்னிகை என்பது என்ன? கறைபடாத, தொடப்படாத ஒரு பெண், அவள் ஒரு கன்னிகை. தூய்மையான ஒலிவ எண்ணெயைப் போன்று வேறு தூய்மையானது உண்டா? அப்படியென்றால் அது முழுவதுமாக சுத்தமாகும் வரை கடைந்தெடுக்கப்பட்ட ஒன்று. தூய்மையான பொன் என்றால் என்ன? உலோகக் கழிவு முழுவதும்... அது நெருப்பிலும், அனலிலும் மற்றெல்லாவற்றிலும் புடமிடபட்டு, உலோகக்கழிவு முழுவதும் உருக்கி எடுக்கப்பட்டது. அது சரியா? எல்லா இரும்பும், செம்பும் உருக்கி எடுக்கப்பட்ட பிறகு அது தூய்மையாக ஆகின்றது.
251. இப்பொழுது, அங்கே பத்துப்பேர் மணவாளனைச் சந்திக்கச் செல்கின்றனர். இயேசு அவ்வாறு கூறினார். அது சரியா? எத்தனைப் பேர் அதை ஆமோதிக்கிறீர்கள் என்று கூறுங்கள் (சபையார் “ஆமென்” என்கின்றனர்- ஆசி) பத்துப்பேர் அவரைச் சந்திக்கச் சென்றார்கள். இப்பொழுது, கவனியுங்கள், எல்லாரும் பரிசுத்தமாய் இருந்தார்கள். நல்லது பரிசுத்தமாக இருக்கவேண்டுமென்றால், அவர்கள் “பரிசுத்த மாக்கப்பட்டிருக்கவேண்டும்” ஏனென்றால் சுத்தமாக்கப்பட தேவன் வைத்திருக்கும் ஒரே வழி, பரிசுத்தமாக்கப்படுதல். அது சரிதானே?
252. இப்பொழுது, கவனியுங்கள். பத்துப் பேர்களும் பரிசுத்தமாக்கப்பட்டு இருந்தனர், ஐந்து பேர் தங்கள் விளக்குளில் எண்ணெயை வைத்திருக்கவில்லை. ஐந்து பேர் தங்கள் விளக்குளில் எண்ணெய் வைத்திருந்தனர். அது சரிதானே? எண்ணெய் எதைக் குறிக்கின்றது? இப்பொழுது, சுத்தத்தை, அல்லது கன்னித்தன்மையை அது குறிக்கவில்லை. எண்ணெய் “பரிசுத்த ஆவியை” குறிக்கின்றது.
253. இப்பொழுது, இதை நான்... கூறுவது உங்களை சிறிது புண்படுத்தக் கூடும், நான் அவ்வாறு செய்ய விழையவில்லை, அவ்வாறு செய்வதில்லை. இப்பொழுது என்னை சற்று பொறுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் சபையை விட்டு நின்று விடாதீர்கள். உங்களுக்கு உதவத்தான் நான் இந்த பிரசங்க பீடத்தில் இருக்கின்றேன். பாருங்கள்? இப்பொழுது, கவனியுங்கள், இதை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும்.
254. நசரீன்கள், பரிசுத்த யாத்ரீகர்கள் போன்றவர்களை விட பரிசுத்தமாக ஜீவிக்கின்ற சபை இவ்வுலகத்தில் கிடையாது. அது சரிதானே? அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலில் முழுவதுமாக விசுவாசிக் கின்றார்கள்... அவர்களுடைய ஸ்திரீகள் மோதிரங்கள், மற்ற எதையுமே அணிவதில்லை. தூய்மை, பரிசுத்தமாக் கப்படுதல், எல்லா வழிகளிலும் அதை விசுவாசிக் கின்றார்கள். யாத்ரீக ஸ்தாபனங்கள், எல்லா சட்டபூர்வக் காரர்கள், அதுதான் அவர்கள் போதகங்கள், அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். பரிசுத்தம்! ஸ்திரீகள் நீண்ட மயிரையும் நீண்ட ஆடைகளையும் அணிகின்றனர். மனிதன் தன்னுடைய சட்டைக் கைகளைக் கூட மடிக்க கூடாது, அவர்களில் அநேகர். அவர்கள், குடிக்கவோ, புகை பிடிக்கவோ, மற்ற எதையும் செய்யக்கூடாது, பாருங்கள். பரிசுத்தம்! இதை விட பரிசுத்தமாய் உன்னால் ஜீவிக்க இயலாது.
255. ஆனால் அதே நசரின் சபையில், ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேசுவானானால், அவன் வெளியே தள்ளப்பட்டு, கதவு மூடப்படும். அவ்வொருவன் பக்கத்திலும் கூட உட்காரமாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். இப்பொழுது, அது உண்மை. நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை என்றால், முயற்சி செய்து பார்த்து, கண்டுகொள்ளுங்கள். உடனே கண்டுக் கொள்ளுங்கள். அதைக் குறித்த சிந்தனைகளையே அவர்கள் வெறுக் கின்றனர். “அது பிசாசு” என்று அவர்கள் கூறு கின்றனர்.
256. அவர்களில் ஐந்து பேர்... பத்துப்பேர்களும் கன்னிகைகள். ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாய் தங்கள் விளக்குகளில் எண்ணெயை வைத்திருந்தனர், மற்ற ஐந்து பேரும் தூய்மையாயும், பரிசுத்தமாயும் இருந்தனர். ஆனால் அவர்களிடத்தில் எண்ணெய் இல்லை (அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவி இல்லாமல் இருந்தனர்).
257. ”பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே”. பரி.யோவான் 5:7,8 1 யோவான் 5:7 “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இம்மூன்றும் ஒன்றே. ஆனால் அங்கே பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, இரத்தம், ஜலம் என்பவைகளே. அவைகள் ஒன்றல்ல. ஆனால் இவை மூன்றும் ஒருமைப்பட் டிருக்கிறது.”
258. இப்பொழுது, குமாரன் இல்லமால் பிதாவை நீங்கள் கொண்டிருக்க முடியாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இல்லாமல் நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக் கமுடியாது. அவர்களெல்லாரும் ஒருவரே. நீங்கள்... அவர்களைப் பிரிக்க இயலாது.
259. ஆனால் நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல் நீதிமான்களாக்கப்பட முடியும். நீங்கள் பரிசுத்த ஆவி இல்லாமல் பரிசுத்தமாக்கப்படமுடியும்; சுத்தமானவர் களாயும், தூய்மையான வாழ்வை வாழ்ந்து, தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலித்து, சுகமாக்கும் வல்லமையையும், பாஷைகளில் பேசுதலையும், தேவனுடைய மகத்தான வரங்களையும் (ஒவ்வொன்றும் அதில் உள்ளது) நிராகரிக்கின்றீர்கள்.
260. உங்களுடைய ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் அங்கே தங்கள் விளக்குகளில் எண்ணெய் உடையவர்களாய் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசம், அற்புதங்கள், அடையாளங்கள், தீர்க்கதரிசனங்கள், மற்ற எல்லாவற்றையும் விசுவாசிப்பார்கள். மீதமுள்ளவர்களிலிருந்து இந்த ஐந்து பேர்கள் வெட்டி எடுத்து கொள்ளப்பட்டனர்.
261. மற்ற ஐந்து பேரும் இன்னும் கன்னிகைகளாய் இருக்கின்றார், அவர்கள் இழந்து போகப்படமாட்டார்கள், ஆனால் உபத்திரவ காலத்திற்குள் செல்வர். இயேசு கூறினார், “அங்கே...”
262. அவர்கள், “உங்களுடைய எண்ணெயில் சிறிது எங்களுக்குத் தாருங்கள், எங்களுக்கு இப்பொழுது பரிசுத்த ஆவி தேவை” என்றனர்.
263. இப்பொழுது, அந்த பரிசுத்த ஆவி என்பதாவது... ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறீர்கள். சகரியா 4, மற்றும் ஓ, யாக்கோபு 5:14, அது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். இப்பொழுது அவர்கள் கூறினர். அதன் காரணத்தால்தான் நாம் எண்ணெயால் அபிஷேகம் செய்கிறோம், அது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது; இப்பொழுது, “ஆவியாகிய எண்ணெய்” என்று வேதம் கூறுகின்றது.
264. இப்பொழுது, இவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனர்; இவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்று தேவனுடைய வல்லமையின் எல்லா அம்சங்களிலும், காரியங்களிலும் விசுவாசம் கொண்டிருந்தனர். இங்கே, இதைக்குறித்து தேவன் உரைத்த எல்லாவற்றையும் பெற்று, விசுவாசித்தித்தனர். அவர்கள் எடுக்கப்பட்டனர்.
265. ஆகையால், இவர்கள் “எங்களுக்கு இப்பொழுது கொடுங்கள்” என்று கூறினர்.
266. இவர்களோ, “உள்ளே செல்வதற்கு போதுமான அளவுதான் எங்களிடம் உள்ளது” என்றனர். ஆகவே அவர்கள் எடுத்துக்கொள்ளப் படுதலில் சென்று விட்டனர்.
267. அது, “நீங்கள் சென்று விற்பவர்களிடமிருந்து சிறிது வாங்கிக் கொள்ளுங்கள்,” என்றது. இயேசு, அவர்தான் கூறினார். ஆகவே அவர்கள் ஜெபம் செய்து பரிசுத்த ஆவியைப் பெற்று கடந்து செல்ல விழைந்தனர். ஆனால் உபத்திரவம் காலம் முடிவுற்று, உபத்திரவ காலம் எழும்பிற்று. ஆகவே அவர், “அவர்கள் இருளில் தள்ளப்பட்டார்கள். அங்கே அழுகையும், மாரடித்தலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்று கூறினார். ஆனால் இரண்டாம் உயிர்த்தெழுதலிலே அவர்கள் வெள்ளாடுகளி லிருந்து பிரிக்கப்பட்ட செம்மறியாடுகள் ஆவர், ஆனால் அவர்கள் மணவாட்டி அல்ல, தெரிந்து கொள்ளப்பட் டவர்கள் அல்ல. அவர்கள் மீதியாயிருந்த ஸ்திரீயுடைய வித்து ஆவர்.
268. மீதம் என்றால் என்ன? வெட்டினதில் மீதம் உள்ள பொருள். அதே விதமானப் பொருள்தான். அது சரிதானே? உனக்கு தேவையான ஆடையை வெட்ட, நீ பெரிய காலிகோ (Calico) துணியை விரித்து அதிலிருந்து வெட்டி எடுப்பாய். எந்த விதமாக அமைக்கப்படவேண்டுமென்று நிர்ணயிப்பது உன்னுடைய வேலையாகும். அதே விதமாக அதுவும் தேவனுடைய வேலை ஆகும், எவ்விதமாக அமைக்கவேண்டும் என்பதை நிர்ணயித்து, சரியாக வெட்டி வெளியே எடுக்கின்றார். அது சரியல்லவா? ஆகையால், இப்பொழுது, இங்கே துணி மீதமாக இருக்கிறது. ஆனால் ஆடையின் வடிவில் உள்ள துணியைப் போன்றே இந்த மீதமானதும் சிறந்த ஒன்றாக இருக்கிறது. அது சரியல்லவா? ஆனால் அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் ஆகும். தேவன் தமது சபையை தெரிந்து கொள்ளுகிறார், தேவன் தமது சபையை முன்குறித்திருக்கிறார், தேவன் அந்த சபையை முன்குறிக்கின்றார், அந்த சபையை அவர் வெளியே எடுக்கின்றார். ஆகவே மீதமுள்ளவர்கள் உபத்திரவக் காலத்திற்குள் செல்ல விடப்படுகின்றனர்.
269. இங்குதான் அநேக வேதாகம அறிஞர்கள் குழப்பம் தந்து, மணவாட்டி உபத்திரவத்தில் செல்கின்றாள் என்று நினைக்கிறனர். ஒரு மனிதன் என்னிடம், 'சகோ. பிரன்ஹாம், இதை என்னால் சொல்லக்கூடாதிருக்கிறது, நான் மணவாட்டியை வானத்தில் கண்டேன், வலுசர்ப் பமானது தன் வாயிலிருந்து ஜலத்தைக் கக்கினவாறு மணவாட்டியுடன் யுத்தம் செய்ய வந்தது. மணவாட்டியான இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் சீனாய் மலையின் நின்று கொண்டிருந்தனர்” என்று கூறினார்.
270. நான், “ஓ, இல்லை, இல்லை. இல்லை. நீர் குழப்பமடைந்திருக்கிறீர். மணவாட்டி பரலோகத்தில் இருந்தாள்” என்றேன். மீதமுள்ள ஸ்திரீயின் வித்துக்கள், அவள்... அமைப்பானது (Pattern) அல்ல, மீதமுள்ளவர்கள் அங்கே இருந்தனர், உபத்திரவம், அடக்குமுறை (ரோம சாம்ராஜ்ஜியம்) கத்தோலிக்கசபை வலுவடைந்து நிலைகொள்ளும்போது அவர்கள் பெரிய தங்கள் எல்லா அதிகாரத்தையும் அந்த சபையுடன் சேர்த்து விடுவார்கள்.
271. ஏன், அவர்கள் அதைச் செயல்படுத்துகிறார்கள். அன்றிரவு தொலைகாட்சியில் அது வந்தது. மெத்தோடிஸ்ட் சபைகளும், பாப்டிஸ்ட் சபைகளும், முழு கிறிஸ்தவ சபைகள் என்ற அமைப்பும், மற்ற எல்லாமும் கத்தோலிக்க சபையுடன் இணைந்து, ஒரே பீடத்தின் முன்பு நிற்க முயற்சிக்கின்றன. கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பிஷப் அன்றிரவு என்ன கூறினார்? நான் தொலைக் காட்சியில் அதைக் கண்டேன். அவர்களின் எல்லாக் கூட்டத்தாரும்! நேரம் வரும்போது அடக்குமுறை கையாளப்படும், பரிசுத்த ஆவி மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட் மீது விழும். அவர்கள் எல்லாரும் பாஷைகள் பேசி, தேவனைத் துதித்து, வியாதியஸ்தரை சுகமாக்கி, தீர்க்கதரிசனம் உரைப்பார்கள், எல்லா அற்புதங்களும் அடையாளங்களும் சம்பவிக்கும். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மேலே செல்வர், மீதமுள்ளவர்கள் உபத்திரவ காலத்திற்குள் செல்லத்தக்கதாக இங்கேயே விடப்படுவார்கள். காலமானது முடியும் போது, என்ன சம்பவித்தது என்பதை அவர்கள் கண்டு, இரத்த சாட்சிகளாய் மரிக்கவேண்டும்.
272. பிறகு கவனியுங்கள். “நல்லது, இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, இம்மக்கள் அங்கே வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் இருப்பார்கள், என்று எங்களுக்கு கூற முற்படுகிறீரா?” அவர்கள் இருப்பார்கள்... மணவாட்டி ஒருபோதும் நியாயந்தீர்க்கப்படமாட்டாள். இல்லை, ஐயா. அவள் கிறிஸ்துவிற்குள் இருக்கின்றாள். அவர்கள் எப்படி கிறிஸ்துவிற்குள் செல்கின்றனர்? “நாமெல்லாரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம்” அது சரிதானே?
273. இப்பொழுது, இங்கே கவனியுங்கள். வேதாகமம் “நியாயத்தீர்ப்பு ஆரம்பித்தது, அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன” என்று கூறுகின்றது. அது சரியா? பாவிகளுடைய புத்தகங்கள். “வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது,” “அது ஜீவ புஸ்தகமாய் இருந்தது, ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு நியாயத்தீர்க்கப்படுவான்.” அது சரியல்லவா? நியாயத்தீர்ப்பை செய்வது யார்? இயேசுவும் பரிசுத்தவான்களும். அவர் வந்தார் “அவர் சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல் துப்புரவாகவும் இருந்தது, நீண்ட ஆயுசுள்ளவருக்கு சேவை செய்தார். அவருடன் ஆயிரம் பதினாயிரம் பேர் வந்து, நியாயத்தீர்ப்பில் அவருக்கு ஊழியஞ்செய்தனர். “இங்கே இயேசு இராஜாவும், ராணியுமாக திரும்ப வருகிறார், கலியாணம் முடிந்தது, அவர் கலியாணமானவர். இங்கே ராஜாவும் ராணியும் நிற்கின்றனர். பரிசுத்தமாக்கப்பட்ட கூட்டம் அங்கே நிற்கிறது, தேவன். “இங்கே என்னுடைய வலது பக்கத்தில் நில்லுங்கள்” அந்த புஸ்தகம் திறக்கப்பட்டது, அவர் பாவிகளைப் பார்த்து, “என்னுடைய இடது பக்கத்திற்கு வாருங்கள்” என்று கூறுகிறார். ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்ட நபர்கள் இங்கே இருக்கின்றனர்.
274. நீங்கள், “சகோ. பிரன்ஹாம், என்னுடைய பெயர் அங்கே எழுதப்பட்டுள்ளது, நான் செல்வேன்!” என்று கூறலாம். ஒரு நிமிடம் பொறுங்கள்! யூதாஸ் காரியத்தும் பரிசுத்தமாக்கப்பட்டான். வியூ! சகோதரனே, தயவு செய்து இப்பொழுது விழித்துக்கொள், அப்பொழுது இதைப் பெற்றுக்கொள்வாய், நீங்கள் பாருங்கள்.
275. யூதாஸ்காரியோத்து, அவனுடைய ஆவிதான் இன்றைக்கு அந்தி கிறிஸ்துவாக இருக்கிறது. நீங்கள் அதை அறிவீர்கள். இயேசுதாம் தேவனுடைய குமாரன், தேவனிடத்திலிருந்து வந்து தேவனிடத்திற்கு சென்றார்; யூதாஸ் கேட்டின் குமாரன் ஆவான், பாதாளத்திலிருந்து வந்து பாதாளத்திற்கே திரும்பிச் சென்றான். இயேசு மனந்திரும்பின பாவியை தம்முடன் கூட்டிச் சென்றார்; யூதாஸ் மனந்திரும்பாத பாவியை தன்னுடன் கூட்டிச் சென்றான், “நீ இப்படிப்பட்டவன் தான் என்றால்! நீ ஒரு தெய்வீக சுகமளிப்பவன் ஆனால், இதைச் செய். நீ இப்படிப்பட்டவன் என்றால், இதை செய்” (தேவனுடைய வார்த்தைக்கு குறுக்கே உள்ள கேள்விக் குறியை கவனியுங்கள்) “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அப்படியென்றால் இதை எனக்குக் காண்பி. அப்படியென்றால்! அப்படியென்றால்!” பாருங்கள்?
“அதெல்லாம் உண்மை “, என்று தேவன் கூறினார்.
276. இப்பொழுது கவனியுங்கள். யூதாஸ் காரியோத்து விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டான், இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டான். வேதம் கூறுகின்றது, “இயேசு - இயேசு சீஷர்களுக்கு, தம்முடைய சீஷர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.” அது சரி.
277. பரி. யோவான் 17:17, அவர்களை அவர் அனுப்புவதற்கு முன், அவர், “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் என்றார்.” பரிகாரமானது செய்யப்படுவதற்கு முன்பிலிருந்தே அவர் வார்த்தையாயிருந்தார். வேறுவிதமாகக் கூறினால், அதற்கு முன் காட்சியாக (preview), பிதாவே, என் சிந்தப்பட்ட இரத்தத்தினாலே நான் இவர்களைப் பரிசுத்தமாக்குறேன்,” என்றார்.
278. அசுத்த ஆவிகளுக்கு எதிராக அவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார், ஆகவே அவர்கள் சென்று பிசாசுகளைத் துரத்தினார்கள். அது சரியா? அவர்கள் வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்தினார்கள். அது சரியா? ஆகவே அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய், துதித்துக் கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும், குதித்துக் கொண்டும் தேவனை ஸ்தோத்தரித்துக்கொண்டும், திரும்பி வந்தனர். அது சரியல்லவா? “பிசாசுகளும் எங்களுக்கு கீழ்ப்படிகிறது” என்று அவர்கள் கூறினார்கள்.
279. இயேசு, “பிசாசுகள் உங்களுக்குக் கீழ்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள். பரலோகப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள்” என்றார். அது சரிதானே? யூதாஸ் காரியோத்தும் அவர்களோடு இருந்தான், அவர்களில் ஒருவனாய் இருந்தான், வெளியே அழைக்கப்பட்டவனாய், பரிசுத்தமாக்கப்பட்டவனாக இருந்தான், அவனுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. மத்தேயு 10-நீங்கள் படித்து அது சரியாக இருக்கின்றதா என்று பாருங்கள். அவர் ஒவ்வொருவரையும் அழைத்தார், யூதாஸ் காரியோத்தைக் கூட, அங்கே அவர் அழைத்தார். அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து அனுப்பினார்.
280. இப்பொழுது கவனியுங்கள்! அதிர்வைத் தாங்கும் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். யூதாஸ் ஒரு பொக்கிஷதாரியாக இருந்து அந்த சபையோடு வந்து கொண்டிருந்தான், போதகர்... இயேசுவுடன் பணிசெய்துக் கொண்டு இருந்தான், ஆனால் அந்த வேளை வந்தபோது, பெந்தெகொஸ்தே நாளில், தன் சுயரூபத்தைக் காண்பித்தான். அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் காண்பித்தான். ஆகவே அவன் தன்னை அழித்துக் கொண்டு, தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாய் ஒரு காட்டத்திமரத்தில் தன்னைத் தானே தூக்கிலிட்டுக் கொண்டான். ஆகவே அந்த யூதாஸின் ஆவி சரியாக வந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும். இயேசு கூறினது போல, “பிசாசுகளும் நடுங்கி, விசுவாசிக்கும்”. அவன் சரியாக வந்து பரிசுத்தமாக்கப்படுதலை குறித்து போதித்து, ஒரு பரிசுத்த, தூய வாழ்க்கை எப்படி இருக்குமோ அதைப் போலவே இருப்பான்; ஆனால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் என்ற ஒரு நிலைக்கு வரும்போது அவன் அதை நிராகரிப்பான்! அவன் ஒவ்வொரு நேரத்திலும் தன்னுடைய சுயரூபத்தை காண்பிப்பான். அங்கேதான் அந்த ஆவி உள்ளது.
281. கவனியுங்கள்! இயேசு “எச்சரிக்கையாயிருங்கள்! என்றார். “மத்தேயு 24ல் “அந்த இரண்டு ஆவிகளும் மிக நெருக்கமாக, ஒன்று போலக் காணப்பட்டு, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்...” அது சரியல்லவா? அங்கேதான் அந்த அமைப்பானது, அமைக்கப்படுகையில்... சகோதரனே, பழமை நாகரீகம் கொண்ட, பரிசுத்த ஆவியையுடைய, இங்கிருக்கும் பிரசங்கிகளில் விசுவாசம் கொண்டு தேவனுடன் உன்னை சரிபடுத்திக் கொள்வது நல்லது அது சரி. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்காதீர்கள். ஆமென்! எல்லாரும் நலமாக இருப்பதாக உணருகிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) நாமெல்லாரும் பரலோகத்தை அடையும் போது, அது என்ன குதூகலம் கொண்ட நாளாக இருக்கும்! நாமெல்லாரும் இயேசுவைக் காண்போம், ஜெயம் என்று நாம் பாடி சப்தமிடுவோம். நாமெல்லாரும் பரலோகத்தை அடையும் போது, அது என்ன குதூகலம் கொண்ட நாளாக அது இருக்கும்! நாமெல்லாரும் இயேசுவைக் காண்போம், ஜெயம் என்று நாம் பாடி சப்தமிடுவோம்.