694. சிவப்பு நூல், நீங்கள் கவனிப்பீர்களேயானால், அது யூதாவாயிருந்தது. அவனுக்கு குமாரர்கள் இருந்தனர், அவனுடைய குமாரர்களில் ஒருவன் ஒரு கானானிய ஸ்திரீயை விவாகம் செய்தான். இந்த கானானிய ஸ்திரீ எந்த பிள்ளையையும் பெற்றெடுக்கவில்லை, அவனுடைய குமாரனோ மரித்துப் போனான். அதன்பின்னர், அப்பொழுதிருந்த பிரமாணப்படி... அடுத்த குமாரன் சகோதரனுடைய மனைவியை ஏற்றுக்கொண்டு மரித்தவனுக்காக சந்தானம் உண்டாக்க வேண்டியதாயிருந்தது. மற்ற மனிதன் செய்ய வேண்டியதை செய்ய ஒத்துழைக்காததால் கர்த்தர் அவனைக் கொன்று போட்டார். அதன்பின்னர் அவனுக்கு இன்னும் ஒரு இளைய குமாரன் இருந்தான்; ஆகையால் யூதா, “இந்த குமாரன் பெரியவனாகி அவன் விவாகம்பண்ணும் ஸ்தானத்தை அடையும் வரை நீ காத்திரு” என்றான்.
695. அவன் பெரியவனாகி, தன்னுடைய இரண்டு சகோதரரின் முந்தின மனைவியை விவாகம் பண்ணி, அவனுக்கு முன் மரித்துப் போயிருந்த தன்னுடைய சகோதரர்களுக்கு சந்தானம் உண்டாக்க வேண்டிய ஒரு ஸ்தானத்தை அடைந்தபோது, யூதா அந்த ஸ்திரீயை (கானானிய ஸ்திரீயை) அந்த குமாரனுக்கு, அந்த பையனுக்குத் தராமல் அப்படியே அவனை விட்டுவிட்டான். ஆகையால் அவன் தவறு செய்து கொண்டிருந்தான் என்பதை அவள் கண்டு, அவள் வெளியே போய் தன்னுடைய முகத்தின்மேல் ஒரு முக்காடு போட்டுக் கொண்டு, ஒரு வேசி அமர்ந்திருப்பது போல ஒரு பொதுவான இடத்தில் அமர்ந்திருந்தாள்.
696. யூதா அந்த வழியே வந்தபோது அந்த ஸ்திரீயை ஒரு வேசியென்று எண்ணி, தன்னுடைய மனைவியைப் போல அந்த ஸ்திரீயை அழைத்துச் சென்று, அவளோடு சேர்ந்தான். அப்பொழுது அவள், “நீர் என்னோடு சேருவதற்கு என்ன பேரம் தருவீர்?” என்று கேட்டாள். அவன்... அவள் கேட்டாள்...
697. அவன், “நான் ஒரு-ஒரு வெள்ளாட்டுக் குட்டியைத் தருகிறேன்” என்றான். அப்பொழுது அவள், “நீர் அதை செய்வீர் என்பதற்கு இப்பொழுது எனக்கு அடையாளத்தைத் தாரும்” என்றாள். எனவே அவள் அவனுடைய கைக்கோலையும், முத்திரை மோதிரத்தையும் வாங்கி வைத்துக்கொண்டாள்.
698. அதன்பின்னர் அவர்கள் ஆட்டுக்குட்டியை கொண்டுவந்தபோது, அவர்களால் அந்த வேசியை கண்டறிய முடியாமற்போயிற்று, ஏனென்றால் அவள் ஒரு வேசியாயிருக்கவில்லை.
699. கொஞ்சங்கழித்து அவள் ஒரு தாயாயிருக்க வேண்டியிருந்தாள் என்பதை அவள் காண்பித்திருந்தாள். அவள் ஒரு தாயாயிருக்க வேண்டியிருந்ததை அவள் காண்பித்தபோது, அவர்கள் யூதாவினிடத்தில் வந்து, “உன்னுடைய மருமகள் வேசித்தனம்பண்ணியிருக்கிறாள்” என்றும், “காரணம் அவள் தாயாக வேண்டியவளாயிருக்கிறாள், உம்முடைய இரு பையன்களும் மரித்துவிட்டார்களே” என்றனர்.
700. அப்பொழுது அவன், “அவளை வெளியே கூப்பிட்டு, அவளை சுட்டெரித்துப் போடுங்கள்” என்றான்.
701. அப்பொழுது அவள் யூதாவினிடத்தில், “இந்த கைக்கோலும், இந்த முத்திரை மோதிரமும் யாருடையதோ, அந்த மனிதனே இதைச் செய்தான்” என்று சொல்லியனுப்பினாள். சரி, அது அவளுடைய மாமனராயிருந்தது.
702. அப்பொழுது அவன், “என்னிலும் அவள் நீதியுள்ளவள்” என்றான்.
703. இப்பொழுது, அவள் தன்னுடைய பிள்ளைகளை பிரசவிக்க வேண்டியதை அறிந்தபோது, அவைகள் இரட்டைப் பிள்ளைகளாயிருந்தன. அந்த இரட்டைப் பிள்ளைகள். பண்டைய யூத வழக்கப்படி, பிறக்க வேண்டிய முதல் குழந்தைக்கு, அந்த முதல் குழந்தையே, முதல் குழந்தை வெளிப்படும்போது, அதுவே சேஷ்ட புத்திரபாகத்தை உடையதாயிருந்தது. அது அவளுடைய முதல் குழந்தையாயிருந்தது என்பது நினைவிருக்கட்டும். மற்ற பையன்கள் அவளுக்கு இதற்கு முன்னர் இல்லாதிருந்தது. அவள் இதற்கு முன் ஒருபோதும் ஒரு குழந்தையைப் பெற்றிருந்ததில்லை.
704. அவளுடைய முதல் குழந்தை வெளிப்பட்டபோது, அது முதலில் ஒரு கரத்தையே நீட்டியிருந்தது. எனவே மருத்துவச்சியோ அந்த கையில் ஒரு சிவப்பு நூலை சுற்றிக் கட்டினாள், ஏனென்றால் ஒரு சிவப்பு நூல் கன்னி மரியாளின் முதல் குமாரனின் மீட்பைக் குறித்து பேசினது. சிவப்பு நூல் மீட்பைக் குறித்தாயிருக்கிறது.
705. அவன் தன்னுடைய கையைத் திரும்ப உள்ளே வாங்கிக் கொண்டபோது, மற்றொருவன் முதலில் வெளிப்பட்டான். அவன் அதைச் செய்தபோது, “நீ ஏன் இதைச் செய்தாய்? முந்தின மற்றவனே சேஷ்ட புத்திரபாகத்தை உடையவனாயிருக்கிறான்” என்று கூறினாள்.
706. ஆகையால் அதைத்தான் ஆதியாகமம்-38 பொருட்படுத்துகிறது, நீங்கள் பாருங்கள். அந்த முதல் குழந்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை வரையில் அப்படியே தரித்திருந்தது. அந்த முதலாவது மீட்பின் பிரமாணத்தின் கீழே இருந்தது.
707. கோவேறு கழுதை குட்டியைக் குறித்து நான் கூறினதை நீங்கள் அறிவீர்கள், நான் அதை குறித்து கூறியிருப்பதை நீங்கள் அறிவீர்கள், அதாவது அதனுடைய கண்கள்... எப்படியெல்லாமோ இருக்க, அதனுடைய காதுகள் நிலைகுலைந்து போய், ஆனால் அதே சமயத்தில் அது ஒரு சேஷ்ட புத்திரபாகத்தோடு பிறந்திருந்தாலும், ஒரு குற்றமற்ற பரிபூரண ஆட்டுக்குட்டியே அதனுடைய ஸ்தானத்தில் மரித்தது. அங்குதான் காரியமே உள்ளது.
708. ஆகையால் அது சேஷ்டபுத்திர பாகத்திற்கானதாயிருந்தது. அந்த முதல் குழந்தை தாயினிடத்திலிருந்து வெளிப்பட்டபோது, அவர்கள் அந்தக் கரத்தைக் கண்டனர். (அது மீண்டும் திரும்ப உள்ளேயும் இழுத்துக்கொள்ளலாம் என்பதையும் அறிந்திருந்தனர்) அவன் அதை உடையவனாயிருந்தான் என்பதை அவன் காண்பிக்கும்படி தன்னுடைய கரத்தை வெளியே நீட்டினபோது, அவனே முதலாவதாயிருந்தான், அப்பொழுது மருத்துவச்சி அவனுடைய கையில் சிவப்பு நூலை சுற்றிக் கட்டினாள், அப்பொழுது அவன் தன்னுடைய கரத்தை திரும்பவும் உள்ளே இழுத்துக் கொண்டான். புரிகிறதா? ஆனால், அவனே முற்றிலும் முதலாவதாயிருந்தான். அது சிவப்பு நூலாயிருந்தது, சிவப்பு நூல்... வேதாகமம் முழுவதுமே மீட்பையே பொருட்படுத்துகிறது; அது முதல் பிள்ளையின் வருகையை முன்னோக்கியவாறு சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தது.
709. குதிரையின் முதல் குட்டி பிறந்தால், பசுவின் முதல் கன்று பிறந்தால், அது என்னவாயிருந்தாலும், முதலில் பிறந்திருந்த யாவும் (அது பிறந்தவுடன்) மீட்பின் கீழாக, மீட்கப்பட வேண்டியதாயிருந்தது; ஒவ்வொன்றும் மீட்கப்பட வேண்டியதாயிருந்ததே! அல்லேலூயா! ஓ, அது என்னை அப்படியே சிலிர்படையச் செய்கிறது. உங்களுக்கு இது புரிகிறதா? முதலாவது மீட்கப்பட வேண்டியதாயிருந்தது. அது ஒரு பிரமாணமாயிருந்தது. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக!
710. இயேசு கிறிஸ்து பிறந்தபோது, அவர் முழு உலகையும் மீட்டார். நிச்சயமாகவே அவர் மீட்டார். பூமியின் மீது சிருஷ்டிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு சிருஷ்டிக்கும் அவர் மீட்பராய் இருந்தார். அவரே மீட்பராயிருந்தார். அதாவது... எல்லா மீட்பும் அவருக்குள் இருந்தது, வேறு எந்த வழியிலும் உங்களால் ஒருபோதும் வரவே முடியாது, நற்கிரியைகள் மூலமாகவோ, சபையில் சேர்ந்து கொள்ளுதலின் மூலமாகவோ அல்லது அது என்னவாயினும் வேறெந்த வழியில் வரவே முடியாது: நீங்கள் அந்த சிவப்பு நூலின் மூலமாகவே, அந்த மீட்பரின் மூலமாகவே, அந்த இனத்தான் மீட்பரின் மூலமாகவே வர வேண்டும்.