ஓ, சகோதரன் பாமர், நீங்கள் கடினமாக சில கேள்விகளையே கேட்கிறீர்களே!
711. இப்பொழுது, மீட்பு, இங்கே இந்த நூல்களை, இந்த சிவப்பு நூலை, நாம் அது மீட்பை பொருட்படுத்தினதைப் பார்க்கிறோம்.
712. இப்பொழுது அடுத்த கேள்வியாயிருப்பது: வெளிப்படுத்தின விசேஷம் 11-ல் உள்ள வெகுமதிகள் என்ன?
713. ஒரு நேரம் வந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது அன்றொரு இரவு பதிலளிக்கப்பட்ட ஒரு கேள்விக்கே பதில் கூறப்போகிறோம், அதாவது என்னுடைய நண்பராயிருக்கும் ஒரு பிரசங்கியார் யூதரைக் குறித்து எழுதி, அது எப்படியிருக்கும் என்று கேட்டிருந்த கேள்வியேதான்.
714. இப்பொழுது இந்த யூதர்களுக்கு மூன்றரை வருடம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை பேருக்கு அது தெரியும்? எழுபதாவது வாரம் வாக்களிக்கப்பட்டிருந்தது. அதில், “மேசியா வந்து அந்த வாரத்தின் மத்தியிலே சங்கரிக்கப்படுவார்” என்று கூறப்பட்டிருந்தது. மூன்றரை வருடங்கள் கிறிஸ்து பிரசங்கித்து, சரியாக மூன்றரை வருடத்தில், கொல்லப்பட்டார், மூன்று வருடங்களும் ஆறு மாதமும் அவர் பிரசங்கித்தார்.
715. அதன் பின்னர் பாழாக்குகிற அருவருப்பு உண்டாகிறது, முகமதியரின் பள்ளி வாசலானது பரிசுத்த ஸ்தலத்தில் கட்டப்பட்டது, அது அங்கே நிற்கும் என்று தேவன் கூறினவிதமாகவே இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே அது சம்பவித்தது. தீர்க்கதரிசி அதைப் பார்த்தான், அதைக் கண்டான், “அவர்கள்... புறஜாதி யுகம் முடிவடையும் வரையில் அது புறஜாதிகள் அங்கே உடைமையாயிருப்பர்” என்று கூறினான்.
716. இப்பொழுது இன்னும் மூன்றரை வருடங்கள் வாக்களிக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் கவனிப்பீர்களேயானால், வெளிப்படுத்தின விசேஷம் 11-ன் படியான இந்த சாட்சிகள் ஆயிரத்திருநூற்றறுபது நாட்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; சரியாக மூன்றரை வருடங்கள். இப்பொழுது அவர்கள் இரட்டு வஸ்திர முடுத்தியிருந்தனர். இப்பொழுது அவர்களுடைய ஊழியத்தையும், அவர்கள் என்னவாயிருக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். இப்பொழுது, இந்த இரண்டு சாட்சிகளும் கொல்லப்படுகின்றனர்.
717. இப்பொழுது... புறஜாதி சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலுக்குப் பிறகு அவர்கள் யூதரிடத்திற்குத் திரும்பினர். விவாகம் செய்து கொண்டபோது ரெபேக்காள் ஈசாக்கோடு ஆபிரகாமினுடைய ஸ்தலத்திற்குள்ளாக கொண்டு செல்லப்பட்டதுபோல், புறஜாதி சபையானது கலியாண விருந்திற்காக பரலோக வீட்டிற்குச் செல்கிறது. ரெபேக்காளும் ஈசாக்கும் ஆபிரகாமுக்கிருந்த முழு உடைமையோடும் வெளியே வந்தனர், அவையாவும் ஈசாக்கைச் சென்றடைந்தது. முற்றிலுமாக! ஈசாக்கு முதலில் விவாகம் செய்துகொள்ளும் வரையில் அது ஈசாக்கினண்டை வர முடியவில்லை. ஓ அல்லேலூயா! அங்குதான் உங்கள் காரியமே உள்ளது.
718. கிறிஸ்து... தேவன் அந்த பரிபூரணத்தில் வாசம் செய்கிறார், அழிவுள்ள சரீரமானது முற்றிலுமாக என்றென்றைக்கும் நித்தியத்தினூடாக நிலைத்திருக்கும். ஆட்டுக்குட்டியானவரும் மணவாட்டியும் பரலோகத்தில் விவாகம் செய்துகொள்ள, அவளோ முழு சொந்தத்தில் வெளியே நடந்து வருகிறாள். முற்றிலுமாக! ஈசாக்கும் ரெபேக்காவும் முழு உடைமையில் புறப்பட்டு வந்தனர்.
719. இந்த விழா பரலோகத்தில் நடந்து கொண்டிருக்கையில், மணவாட்டி, புறஜாதி மணவாட்டி பிரபுவை (தேவனுடைய குமாரனை) மகிமையில் விவாகம் செய்து கொள்கிறாள்; அவர்கள் விவாகம் செய்து கொண்டு, அங்கே மூன்றரை வருடங்கள் நிகழ்கிற... மோசேயும், எலியாவும்...
720. மோசே ஒரு போதும் மறைந்துவிடாமல்... இல்லை, அவனுடைய சரீரம் தூக்கிச் செல்லப்பட்டது. தூதர்கள் அவனைக் கொண்டு சென்றனர், அவன் சரீரத்தில் அழிந்து போய்விடவில்லை, அவன் கிறிஸ்துவின் ஒரு பரிபூரண மாதிரியாயிருந்தான். அவன் மரித்தபோது, தூதர்கள் அவனைத் தூக்கிச் சென்றனர், அவன் எங்கே அடக்கம் பண்ணப்பட்டான் என்று பிசாசு கூட அறிந்திருக்கவில்லை. அவன் பிராதான தூதனாகிய மிகாவேலிடத்தில் அவனுடைய அடக்கத்தைக் குறித்து தர்க்கித்துப்பேச முயன்றான். அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. தேவன் அவனை எடுத்துக் கொள்ளப்படுதலில் கொண்டு சென்றார்.
721. எலியா, ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி, அங்கே நடந்து சென்று கொண்டிருந்தபோது, யோர்தானண்டை நடந்து சென்று தன்னுடைய சால்வையை எடுத்து, தண்ணீரை அடித்தபோது, அந்தத் தண்ணீர் வலது, இடது பக்கமாகப் பிரிந்தது. அவன் மலையின்மேல் ஏறிச் சென்றான். எலிசா கூறினான்... எலியா, “நீ எதற்காக என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.
722. அதற்கு அவன், “உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்க வேண்டும்” என்றான்.
723. அப்பொழுது எலியா, “நீ ஒரு அரிதான காரியத்தைக் கேட்டிருக்கிறாய், ஆனால் நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் நீ என்னைக் கண்டால் உனக்குக் கிடைக்கும்” என்றான். அவன் எலியாவை கவனித்துக் கொண்டேயிருந்தான்.
724. கொஞ்சங்கழித்து பரலோகத்திலிருந்து ஒரு அக்கினிரதமும், அக்கினிமயமான தூதர்களும், அக்கினிக் குதிரைகளும் இறங்கி வந்தது, எலியா அதில் ஏறி மகிமைக்குள்ளாகச் சென்றான். அவன் மரணத்தை ஒரு போதும் ருசிபார்க்கவில்லை, அவன் எடுத்துக் கொள்ளப்பட்டான், அவன் மரிக்க வேண்டியதாயுள்ளதே!
725. வெளிப்படுத்தின விசேஷம் 11-ன் படியான இந்த இரண்டு தீர்க்கதரிசிகளையும் நீங்கள் கவனிப்பீர்களேயானால், மோசேயும் எலியாவும் செய்த அதேக் காரியத்தை அவர்கள் செய்கிறார்கள். நீங்களோ, “சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, அந்த எலியாவும், மோசேயும் இன்னமும் உயிரோடிருக்கிறார்கள் என்று எனக்கு பொருட்படுத்திக் கூறுகிறீரா?” என்று கேட்கலாம். முற்றிலுமாக!
726. ஏன்? மறுரூப மலைக்கு முன்பே... மறுரூபமலையிலே இயேசு கல்வாரிக்கு செல்லும் முன்னே, அங்கே மோசேயும், எலியாவும் அங்கே நின்று கொண்டு அவரிடத்தில் பேசிக்கொண்டிருந்தனர். நிச்சயமாகவே அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர், அவர்கள் மரித்துப்போகவில்லை. அவர்கள் ஒருபோதும் மரித்துப் போயிருக்கவில்லை; அவர்கள் சாவுக்கேதுவானவர்கள், அவர்கள் மரிக்க வேண்டும். ஆகையால் அவர்கள் ஒரு மகிமையடைந்த நிலையில் அந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
727. ஆகையால் அவர்கள் திரும்பி வந்து சரியாக மூன்றரை வருடங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழே பிரசங்கிக்கும்போது, புறஜாதிகளிடத்திலிருந்து ஆசீர்வாதங்கள் எடுக்கப்பட்டிருக்கும், (சபையானது எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கும்); குளிர்ந்துபோன சம்பிரதாயமான சபையோ கம்யூனிஸ்டுகளினாலும், ரோம அரசாங்கத்தாலும் நாய்களைப் போல வேட்டையாடப்படும், அவர்கள் வேட்டையாடப்படும் போது கொல்லப்படுவர். அப்பொழுது அவர்கள் கொல்லப்படுகின்றனர்; இந்தத் தீர்க்கதரிசிகள் மூன்றரை வருடங்கள் பிரசங்கித்தப் பின்னர், அவர்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கொல்லப்பட்டனர், அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். அது ஞானர்த்தமாய் சொல்லப்பட்டது, அது முன்னர் எருசலேமாயிருந்தது; பாருங்கள் முன்பு எருசலேம்.
728. அவர்கள் மூன்று இராப் பகல் வீதியிலே கிடந்தனர். அதன்பின்னர் மூன்றரை நாளைக்குப் பின்பு ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் எழும்பி நின்றனர். அவர்கள் மற்ற சாவுக்கேதுவானவர்களைப் போலவே மரிக்க வேண்டியதாயிருந்தது, அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அவர்கள் இந்த இரண்டு பிரசங்கிமார்களைக் கொன்றபோது...
729. அவர்கள் தவறானதற்கு எதிராக பிரசங்கித்தனர், அவர்கள் வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தனர். யார் அதைச் செய்தது? பார்த்தீர்களா? அவர்கள் வானத்திலிருந்து வாதைகளைக் கொண்டுவந்து, தங்களுக்கு வேண்டும்போதான எந்த நேரத்திலும்... அவ்வளவு துரிதமாக செய்து பூமியை வாதித்தனர். அவர்கள் வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தனர். தங்களுக்கு வேண்டும்வரை மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைத்தனர். அது யாராயிருந்தது? சரியாக மோசேயும், எலியாவுமே. அவர்களே இரண்டு சாட்சிகளாயிருக்கிறார்கள்.
730. அவர்கள் சபையை இல்லை உலகத்தை வேதனைப்படுத்தின போது, தங்களுடைய பிரசங்கத்தினால் யூதர்களை திரும்ப ஏற்றுக் கொள்ளச் செய்து, அவர்களை மனந்திரும்புதலுக்குக் கொண்டு வந்து, அவர்களை திரும்ப விசுவாசிக்கும்படிக்கு கொண்டுவந்து... மணவாட்டிக்காக இயேசு வருவதை அவர்கள் காணும்போது, அவர்கள், “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், அது அவரே!” என்று கூறுவர். ஆனால் அவர் அவர்களுக்காக வரவில்லை; அவர் தம்முடைய மணவாட்டிக்காக வருகிறார். அவருடைய மணவாட்டி...
731. யோசேப்பு எகிப்திற்குச் சென்றபோது, அவன் தன்னுடைய சகோதர்களை தன்னோடு அழைத்துச் செல்லவில்லை, ஆனால் அவன் அங்கே தன்னுடைய மணவாட்டியை பெற்றுக்கொண்டான். முற்றிலுமாக! ஆனால் அவன் தன்னை தன்னுடைய சகோதரர்களுக்கு வெளிப்படுத்தினபோது, அப்போது அங்கே யாருமே இருக்கவில்லை. அது முற்றிலும் உண்மை. அவர் தம்மை இந்த யூதர்களுக்கு வெளிப்படுத்தும்போது, அப்பொழுது அங்கே யூதர்களைத் தவிர வேறுயாரும் இருக்கமாட்டார்கள். அங்கே யோசேப்பைக் கொன்றவர்கள் அங்கே நின்றனர்; அப்பொழுது அவனோ, “நான் தான் யோசேப்பு, உங்களுடைய சகோதரன்” என்றான். அவன் அழுதான்.
732. அப்பொழுது அவர்களோ, “இப்பொழுது அதற்கான தண்டனை எங்களுக்கு உண்டு என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஏனென்றால் நாங்கள் அவனைக் கொன்றுபோட்டோம்” என்றனர்.
733. அதேக் காரியம், அந்த யூதர்கள் இப்பொழுது வருகைக்கு சற்று முன்னர் பெரிய இக்கட்டு காலத்தை உடையவர்களாயிருக்க, துன்புறுத்தலோ அவர்களை திரும்பவும் தாய் நாட்டிற்கு ஓடச் செய்யும். அது ஒரு கூட்ட ஆடுகளைத் திரும்ப அப்பாலுள்ள கர்மேல் பர்வதத்திற்கு அவைகளை விரட்டுகிறது போன்றதாயுள்ளது.
734. கர்த்தராகிய இயேசு தம்முடைய மணவாட்டிக்காக வரும்போது, அவர்கள் அவரைப் பார்ப்பார்கள், அப்பொழுது அவர்கள், “இவருக்காக காத்திருந்தோம், அதோ அவர் இருக்கிறாரே!” என்பார்கள். அவர் தம்முடைய ஆரோக்கியமான செட்டைகளோடு எழும்புவார். அது உண்மை.
735. சபை, மீதமுள்ள யூதர்கள், அவர்கள் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளைக் கொல்லும்போது, அவர்கள் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும் சோதோம், எகிப்து என்ற வீதியில் கிடப்பர், அங்கே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். அப்பொழுது அவர்கள் ஒருவருக்கொருவர் வெகுமதிகளை (உலகம் செய்கிறது போல) அனுப்புவார்கள்.
736. இப்பொழுது, சகோதரன் பாமர், நீர் இங்கே இருக்கிறீர். முழு உலகத்திலும் ஒரே ஒரு தேசமே ஒரு யுத்தத்திற்குப் பிறகு வெகுமதிகளை எப்போதும் அனுப்பினதாயுள்ளது, அதுவே ரோம் சாம்ராஜ்யம் என்பதை நீர் ரோம சரித்திரத்தை திருப்பிப் பார்த்தால் கண்டறிவீர்.
737. அந்தக் காரணத்தினால்தான் அந்திக் கிறிஸ்து ரோமாபுரியிலிருந்து வருகிறான் என்று நான் கூறுகிறேன். மிருகம் ரோமாபுரியிலிருந்து வருகிறது, அது மாஸ்கோவிலிருந்து வரமுடியாது. அது ரோமபுரியிலிருந்தே வருகிறது, அந்த வலுசர்ப்பம் அந்த ஸ்திரீ தன்னுடைய பிள்ளையை பெற்றவுடனே அதைப் பட்சித்துப் போடும்படிக்கு நின்றது. அந்த பிசாசு, அந்தப் பிசாசு எங்கேயிருந்தது? அது யாராயிருந்தது? அகஸ்துராயன் ஆட்களை அனுப்பி, இரண்டு வயத்திற்குட்பட்ட ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்று போட்டான். அந்த வலுசர்ப்பம், சர்ப்பம், மிருகம், “வல்லமையைக்” குறிக்கிறது. அந்த ரோம் அதிகாரம் அந்த பிள்ளை கிறிஸ்துவைக் கண்டறிந்து துன்பப்படுத்த முயன்றது.
738. அந்த அதேக் காரியம் தான்! ஒவ்வொரு முறையும் அந்த ரோமர்கள், அந்த பண்டைய அஞ்ஞான ரோமர்கள் ஒரு பெரிய வெற்றியைக் கொண்டாட வழக்கமாக அவர்கள் வெள்ளைக் கற்களையும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் ஒருவருக்கொருவர் அந்தவிதமான வெகுமதிகளை ஒரு நினைவாக அனுப்புவார். ஆகையால் அந்த கற்கள். அது என்னவாயிருந்ததென்றால், ரோம சபையானது அந்த சிறு வெகுமதிகளை அவர்களுக்கிடையே அனுப்பிக் கொண்டதாயிருந்தது. முற்றிலுமாக! சரியாக. அது அவ்வாறு சம்பவிக்க வேண்டியதாயுள்ளது.
739. நான் அங்கே வாடிகன் நகரத்தில் நின்று அதை வேதாகமத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தேன். போப்பாண்டவர் மூன்று கிரீடங்களை அணிந்து கொண்டிருக்கிறார், விக்காரிவ்ஸ் பிலிஐ டெய் (Vicarivs Filii Dei) என்று நான் கேள்விப்பட்டிருக்கிற அந்த எல்லாக் காரியங்களும் முற்றிலும் உண்மையாயிருக்கிறது; ஒரு மதசம்பந்தமான கூட்டமே வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு தேசத்தையும் ஆளுகை செய்கிறது, அதுதான் செய்கிறது. அங்கு உள்ள அது அவ்வண்ணமாகவே உள்ளது.
740. கத்தோலிக்க ஜனங்களுக்கு எதிராக ஒன்றுமேயில்லை, (இல்லை ஐயா), அவர்கள் எவரையும் போல நல்லவர்களாகவே உள்ளனர், ஆனால் அவர்களுடைய மார்க்கமோ இந்த வேதத்தின் படியில்லாமல் தவறானதாயுள்ளது. இந்த வேதம் சரியானதாயிருந்தால், அவர்கள் தவறாயிருக்கிறார்கள். அவர்கள் கூறுவது... “வேதம் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, அதாவது சபை என்னக் கூறுகிறது என்பதே முக்கியம்” என்கின்றனர். வேதம் தலைமையான உச்ச அதிகாரத்துடன் பேசுகிறது என்பதை நாம் விசுவாசிக்கிறோமே! முற்றிலுமாக, அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது.
741. ஆகையால் நீங்கள் அங்கு பாருங்கள், அப்பொழுது அனுப்பப்பட்டிருந்த அந்த கற்கள், இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தக் கற்களே வெகுமதிகளாக ஒருவருக்கொருவர் அனுப்பினர். அது எதை மாத்திரம் காண்பிக்கப்போவதென்றால்... வேதம் இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில், “ஞானமுள்ளவன் இந்த மிருகத்தின் இலக்கத்தைக் கணக்குப்பார்க்கடவன். ஞானமுள்ளவன் இன்ன இன்னதைச் செய்யக்கடவன். குறிப்பிட்ட வரங்களின் ஆவியையுடையவன் இன்ன இன்னதைச் செய்யக்கடவன்” என்று உரைத்துள்ளது. சபையானது எவ்வளவு குறைவுள்ளதாயிருக்கிறது என்று நீங்கள் பார்த்தீர்களா?
742. இந்தக் காலையில் ஒரு வாலிபன் என்னிடத்தில் ஆவிக்குரிய வரங்களைக் குறித்தும், அந்நிய பாஷைகளில் பேசுவதைக் குறித்தும் கேட்டான். ஒரு வாலிப நபர், மிகவும் உண்மையாய் இருந்தான், இந்நாட்களில் ஒன்றில் அவன் ஒரு ஊழியக்காரனாயிருப்பான் என்று நான் நினைக்கிறேன். அப்பொழுது சபையைக் குறித்து நான், “அங்கே அதிக மாம்சப்பிரகாரமானவை உள்ளன. எங்களுக்கு அது வேண்டாம், ஆனால் எங்களுக்கு உண்மையான காரியமே வேண்டும். நாங்கள் அதையே பெற்றுக் கொள்ள வாஞ்சிக்கிறோம்” என்று கூறினேன்.
743. நீங்கள் போய் அதை சபையில் போதிக்க முடியாது; நீங்கள் அறிந்த முதல் காரியம், நீங்கள் பெற்றிருப்பதோ, ஒருவன் அந்நிய பாஷையில் பேசுவதைப் பெற்றுள்ளான், ஒருவன் ஒரு சங்கீதம் பாடுகிறான், அப்பொழுது அந்த காரியத்தில் உங்களுக்கு சண்டை உண்டாகிறது. ஆனால் தேவன் ஒரு வரத்தை முதன்மையான நிலையில் அறிந்திருக்கும்போது, அது தன்னை வெளிப்படுத்தும். அது உண்மை பாருங்கள், அதுதான் தேவனுடைய வரங்கள், அந்தவிதமாகத்தான் ஜெயங்கொள்வதற்காக அவர் சபைக்கு அனுப்புகிறார்.
744. இப்பொழுது, அந்திகிறிஸ்து ஆதரவாகவும் எதிராகவும் இருப்பது போன்று ஒரு காரியத்தை உடையவனாயிருக்கிறான். அது அந்த காரியத்தை தாறுமாறாக்கப்பட்ட வழியில் செய்வதையே உடையதாயிருக்கிறது. அந்த ரோம் சாம்ராஜ்யத்தில் ஒருவருக்கொருவர் வெகுமதிகளை, மாம்சபிரகாரமான வெகுமதிகளை அனுப்பிக் கொள்கின்றன. தேவன் ஜெயங்கொள்பவர்களுக்கு ஆவிக்குரிய வரங்களை அனுப்புகிறார்; ரோமாபுரியில் மாம்சபிரகாரமான வெகுமதிகளையே ஒருவருக்கொருவர் அனுப்பிக்கொள்கின்றனர்.
745. பரிசுத்த ஆவி ஒரு ஆவியாயுள்ளது என்று நாம் விசுவாசிக்கிறோம், உன்னதத்திலிருந்து வருகிற ஒரு அபிஷேகத்தினால் நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம்.
746. கத்தோலிக்க சபையோ, “பூசை நேரத்தில் வழங்கப்படும் ஒரு பரிசுத்த அப்பமே கிறிஸ்துவின் சரீரமாயுள்ளது; அதாவது நீங்கள் இந்த கோஷர் அப்பத்தை உட்கொள்ளும்போது, அதுவே பரிசுத்த ஆவியாயுள்ளது, பரிசுத்த ஆவியாய், பரிசுத்த திருப்பலியாயுள்ளது” என்று போதிக்கிறது. புரிகிறதா?
747. அது ஒரு அப்பத்துண்டு என்றே நாம் நம்புகிறோம், அது கிறிஸ்துவின் சரீரம் என்று நாம் விசுவாசிப்பதில்லை, (நாம் அதை இன்னும் ஒரு சில நிமிடங்களில் எடுக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்) அது கிறிஸ்துவின் சரீரத்தைச் சுட்டிக் காட்டுகிறது என்று நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் அதுவல்ல...
748. அதுவே கத்தோலிக்கத்துக்கும், பிராட்டெஸ்டன்டு உபதேசத்துக்கும் இடையே உள்ள வித்தியாசமாயுள்ளது. புரிகிறதா? கத்தோலிக்க சபையோ, “சரீரமாய். அப்பமே உண்மையான சரீரமாயுள்ளது. சபையானது இதை மறுரூபப்படுத்தும்படியான வல்லமையைப் பெற்றுள்ளது” என்று கூறுகிறது. ஒரு கத்தோலிக்கன் ஒரு கத்தோலிக்க ஆலயத்தைக் கடந்து செல்லும்போது, தன்னுடைய தலையைத் தாழ்த்தி சிலுவை போட்டுக்கொள்வதை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா? ஏனென்றால் அந்த ஆலயத்தின் உள்ளே அங்கே அந்த சிறு வாசஸ்தலத்தின் கீழே அந்த சிறு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அங்கே உள்ளே ஒரு சிறு விளக்கு எரிந்துகொண்டிருக்க, அங்கே உள்ளே கோஷர் அப்பம் கீழே வைக்கப்பட்டிருக்கும். “அதுவே கிறிஸ்துவின் சரீரம் என்கின்றனர். நீங்கள் அதை உட்கொள்ளும்போது, நீங்கள் உங்களுடைய முதல் இராபோஜனம் மற்றும் உங்களுடைய அறிக்கைகள் போன்றவற்றின் பேரில் உண்மையாகவே கிறிஸ்துவின் சரீரத்தையே முற்றிலுமாய் புசிக்கிறீர்கள். நீங்கள் உண்மையாகவே கிறிஸ்துவின் சரீரத்தையே புசித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்கின்றனர்.
749. அது கிறிஸ்துவின் சரீரத்தையே சுட்டிக் காண்பிக்கிறது என்று நாம் கூறுகிறோம், பாருங்கள், அதாவது அது ஒரு துண்டு அப்பமேயல்லாமல் இந்த உலகில் வேறொன்றுமில்லை. அது அப்பமாயில்லாமலிருந்தாலும் கூட கவலைப்பட வேண்டியதில்லை, அது மற்ற வேறெந்த காரியமாயிருந்தாலும், அது அதையே சுட்டிக்காட்டினதாயிருந்தது, சரியாக. அவர்கள்...
750. இந்த ஜனங்கள் கூறுவதைப் போல, “நான் ஒரு குளத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட விரும்பவில்லை. நான் நதியில் ஞானஸ்நானம்பண்ணப்பட விரும்புகிறேன்” என்கின்றனர்.
751. நீங்கள் ஞானஸ்நானம்பண்ணப்படுதலைப் பொருத்த வரையில் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? அது ஒரு குளத்தில் இருந்தால், ஏன்? பிலிப்பு... காந்தாகே என்பவளின் மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது, ஒரு குளத்தில்தான் ஞானஸ்நானம் கொடுத்தான். பிலிப்பு மந்திரிக்கு குளத்திலே ஞானஸ்நானங்கொடுத்தபோது, பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவை இருநூறு மைல் தூரம் காணப்படாதபடிக்கு அவனை அவ்வளவு தூரத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அவன் ஆவியில் எடுத்துக்கொள்ளப்பட்டான், இரு நூறு மைல் தூரம் செல்லுமளவிற்கு பரலோகத்திலிருந்து ஒரு ஒரு இரதத்தை அவனுக்கு அளித்தார். ஆமென். அற்புதம்!
இப்பொழுது: ஆயிரவருட அரசாட்சிக்குப் பிறகு பரிசுத்தவான்கள் எங்கே இருப்பர்? அவர்கள் எந்த விதமான ஒரு சரீரத்தைப் பெற்றுக்கொள்வார்கள்? நான் இன்னும் ஒரு நொடியில் அதற்கு திரும்ப வருவேன். (சகோதரன் பிரன்ஹாம் இதற்கு 74-ம் கேள்வியின் துவக்கத்தில் 820 பாராவில் பதிலளிக்கிறார் - ஆசி.] அவர்கள் இயேசுவோடு இருப்பார்கள்.