754. இப்பொழுது யாராவது ஒருவர் எனக்காக I கொரிந்தியர், 11-ம் அதிகாரத்தை எடுங்கள், நீங்கள் அதைக் கண்டறியும்படியாய்... நாம் அங்கே பார்ப்போம். I கொரிந்தியர் 11-வது அதிகாரத்தில், பவுல் அதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறதை நாம் கண்டறிகிறோம். நான் இன்னும் ஒரு நிமிடத்தில் அதற்கு வரவுள்ளேன், அப்பொழுது நாம் அதை உடனே வாசித்து, நாம்-நாம் அதற்கு கீழேயே பதிலைப் பெற்றுக்கொள்வோம்.
755. இங்குள்ள இந்த மற்ற வசனத்தின் பேரில் நான் ஒரு காரியத்தைக் கூற வேண்டும், அதாவது நாம் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டிய விதமாகவே கர்த்தர் அதை நமக்குத் தருகிறார் என்று நான் நம்புகிறேன். யாராவது அதை எடுத்திருந்தால், அது 11ம் அதிகாரத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன், ஆம் சரி. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், நீங்கள் அதை புரிந்து கொள்ளும்படியாக உண்மையாகவே இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது நான் இதை வாசித்தப்பிறகு, நீங்கள் பாருங்கள், அதன் பேரில் வியாக்கியனிக்கும் வரை உங்களுடைய சிந்தையை எங்கும் சிதறவிடாதீர்கள். உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள், இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்:
நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். (பவுல், “நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறது போல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்” என்றான்.)
சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன். ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
756. அது எப்படி உள்ளது என்று புரிகிறதா? தேவன், கிறிஸ்து, மனிதன், ஸ்திரீ. இப்பொழுது: ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த புருஷனும் கிறிஸ்துவை கனவீனப்படுத்துகிறான்.
ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்...
757. இப்பொழுது இன்னும் ஒரு நிமிடத்தில் புரிந்துகொண்டு, ஸ்திரீக்கு தலைமுடியே அவளுடைய முக்காடாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உங்களுக்கு காண்பிப்போம்:... அது அவளுக்குத்தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. (அவள் தன்னுடைய முடியை கத்தரிக்கப்போவதாயிருந்தால், அப்பொழுது அதை சிரைத்துப் போடக்கடவள் என்பதையே அது பொருட்படுத்துகிறது.) ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால், தலைமயிரையும் கத்தரித்துப் போடக்கடவள்; (சவரம் செய்தல் என்பது சிரைத்துப் போடுதலையே பொருட்படுத்துகிறது, பாருங்கள்). தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கடவள்.
758. இப்பொழுது நீங்கள் இங்கே கேட்டுக்கொண்டிருக்கிற கேள்விக்கு நேராக வந்து கொண்டிருக்கிறோம். புரிகிறதா? சரி, வேதாகமத்தின்படி ஒரு ஒரு பெண்மணி தன்னுடைய தலைமுடியை கத்தரிப்பது தவறாயுள்ளது. இப்பொழுது நீங்கள் இங்கே கவனியுங்கள், மனைவி தன்னுடைய தலைமுடியைக் கத்தரித்தால், கணவன் அவளை தள்ளிவிடலாம் என்று வேதம் சட்டப்பூர்வமாக கூறவில்லையா என்று பாருங்கள், இது சரியா அல்லது இல்லையா என்று பாருங்கள்.
ஒரு மனிதன்... புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; (அதாவது நீண்ட தலைமுடியை உடையவராயிருத்தல்), ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். (நீங்கள் எப்போதாவது அதைக் குறித்து சிந்தித்ததுண்டா?)
759. இப்பொழுது நான் இங்கே நிறுத்த விரும்புகிறேன், ஏனென்றால் உண்மையாகவே இதை நன்கு ஆழமாய்ப் பதிய வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன், பாருங்கள். இப்பொழுது நினைவிருக்கட்டும், குட்டையான தலைமுடியையுடைய இலட்சக்கணக்கான அழகான கிறிஸ்தவ ஸ்திரீகளை நான் பார்த்திருக்கிறேன். (அவர்களை இப்பொழுதும் அறிவேன், அவர்களில் அநேகர் இந்த சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்). நான் அதை உங்கள் மீது பழியாக சுமத்தலாம், நீங்கள் அந்த விதமாக போதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே நான் கூறுகிறேன். புரிகிறதா? அதுதான் இது. உங்களுடைய பிரசங்கியார் இதை உங்களிடம் ஒருபோதும் கூறவேயில்லை. ஆனால் கூடாரத்தைச் சுற்றி எந்த ஸ்திரீயாவது அந்தவிதமாக இருந்தால், அப்பொழுது அவர்கள் குற்றவாளிகளாயிருக்கிறார்கள். பாருங்கள், ஏனென்றால் நாம் அதைக் குறித்து நிச்சயமாகவே கூறுகிறோம்.
760. இப்பொழுது, இப்பொழுது இதைக் கவனியுங்கள்:...புருஷனானவன்... (7-வது வசனம்)... புருஷனானவன்...
761. இப்பொழுது, இங்கே பேசிக்கொண்டிருக்கிறது யார்? இப்பொழுது, ஒரு சமயம் ஒரு பெண்மணி, “ஓ, பவுல் ஸ்திரீகளைவெறுக்கும் வயோதிகனாயிருந்தான்” என்று கூறினாள்.
762. இப்பொழுது நாம் அந்தக் காரியத்தில் இருக்கையில், நாம் இங்கே கலாத்தியர் 1:8-க்குத் திருப்பி, பவுல் இதைக் குறித்து கலாத்தியர் 1:8-ல் என்னக் கூறுகிறான் என்று பார்ப்போமாக. பவுல் இங்கே கலாத்தியர் 1:8-ல் கூறினதை நீங்கள் கண்டறியலாம். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
763. இப்பொழுது என்னை குற்றஞ்சாட்டாதீர்கள், நீங்கள் அவனைக் குற்றஞ்சாட்டுங்கள், பாருங்கள். புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
764. இப்பொழுது அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்: புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.
765. இப்பொழுது, நான் இதை இப்பொழுது உண்மையாகவே அன்புடனும், இனிமையுடனும் பொருட்படுத்திக் கூறுகிறேன், நான் இதைக் கூறும்விதமாகவே நீங்கள் இதை புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அமெரிக்கா... நான் ஒரு சர்வதேச பிரயாணியாயிருக்கிறபடியால் இதைக் கூறுகிறேன், உலகத்தில் உள்ள எந்த தேசத்தைக் காட்டிலும் அமெரிக்கா தன்னுடைய ஸ்திரீகளுக்கு மிக இழிவான தரமிழந்த சில ஒழுங்கு முறை விதங்களையேக் கொண்டுள்ளது. அமெரிக்கா தங்களுடைய ஸ்திரீகளை செய்ய அனுமதிக்கும் விதத்தோடு ஒப்பிட்டால் பாரீஸும், பிரான்ஸும் மிக உயரிய வானளாவிய சட்டத்திட்டங்களை உடையதாயிருக்கக் கூடும். அது ஒரு அவமானமாயிற்றே!
766. அமெரிக்காவின் தேவன் ஸ்திரீ என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்துள்ளீர்களா? என்னால் அதை உங்களுக்கு இந்த வேதாகமத்தின் மூலம் நிரூபிக்க முடியும்? அது உண்மை. கத்தோலிக்கச் சபையானது தங்களுடைய கன்னி மரியாளின் உபதேசத்தை உள்ளேக் கொண்டு வரும்படியாக அது அந்தவிதமாக வரவேண்டியதாயுள்ளது என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துள்ளீர்களா?
767. இப்பொழுது, ஒரு ஸ்திரீயானவள் ஒரு புருஷனுக்காக சிருஷ்டிக்கப்படவில்லையென்றால், இல்லை... ஒரு புருஷன் ஒரு ஸ்திரீக்காக சிருஷ்டிக்கப்படவில்லையென்றால், ஆனால் ஸ்திரீயானவள் ஒரு புருஷனுக்காகவே சிருஷ்டிக் கப்பட்டாள், அப்படியானால் நீங்கள் எப்படி ஒரு ஸ்திரீயைத் தொழுதுகொள்ள முடியும்? புரிகிறதா? இப்பொழுது அது என்ன செய்ததென்றால், அது பாரீஸில் துவங்கி, நவநாகரீக திரைப்படத் துறையான ஹாலிவுட்டில் களமிறங்கியுள்ளது. இப்பொழுது பாரீஸ் தங்களுடைய மாதிரிகளையும், தங்களுடைய நாகரீகங்களையும் மற்றக் காரியங்களையும் பெற்றுக் கொள்ள ஹாலிவுட்டிற்கு வரவேண்டியதாயுள்ளது. அது நம்முடைய அமெரிக்க ஸ்திரீகளை இழிவுபடுத்துகிறதாயுள்ளது.
768. அது என்னவாயுள்ளது? நம்முடைய தேசமானது ஆண்களை பணியிலிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் இங்கே ஸ்திரீகளை அமர்த்தியுள்ளபடியால், அவ்வளவு இழிவான நிலைக்கு வந்துவிட்டது, ஏறத்தாழ தொண்ணூறு சதவிகிதம் விபசாரிகளாயிருக்கின்றனர். பணியை விட்டுச் சென்றுவிட்ட மனிதரைக் குறித்துப் பேசுகிறோம், நிச்சயமாக, அதற்குக் காரணம் அவர்கள் அங்கே அவர்களுடைய இடங்களில் ஸ்திரீகளை நியமித்துவிட்டனர். அவர்கள் வீதிகளில் சாமாதான அதிகாரிகளாக நியமிக்கும் அளவிற்கு அவர்கள் அவ்வளவு இழிவான நிலையினை அடைந்துவிட்டனர். அது எந்த ஒரு தேசத்திற்கும் அவமானமாயுள்ளதே! ஆம் ஐயா. நீங்கள் அதைக் குறித்து என்ன செய்யப்போகிறீர்கள்?
769. “சகோதரன் பிரன்ஹாம், நீர் அதைக் குறித்து என்ன செய்கிறீர்? நான் அதற்கு மரியாதை அளிக்க வேண்டும், நான் ஒரு அமெரிக்க குடிமகன், பெரிய முதலாளி என்ன செய்யும்படி கூறுகிறாரோ நான் அதை செய்கிறேன். நான்... ஒரு... ஒரு குடும்பம் தன்னுடைய மரியாதையை எப்போதாவது இழக்குமேயானால் (பிள்ளைகள் பெற்றொருக்கு மரியாதை செலுத்துவதை இழந்துவிட்டால்), அந்த குடும்பம் சின்னாபின்னமாகிவிடும். ஒரு-ஒரு சபையானது அதனுடைய மேய்ப்பருக்கு மரியாதை செலுத்துவதை இழந்துவிட்டால், ஏன் அந்த சபையே ஒன்றுமில்லாமல் போய்விடும். ஒரு தேசமானது எப்போதாவது உச்ச நீதிமன்றத்திற்கும், அதனுடைய தீர்மானத்திற்கும் மரியாதை செலுத்துவதை இழந்துவிட்டால், அந்த தேசம் சின்னாபின்னமாகிவிடும். அது முற்றிலும் உண்மை. நாம் அந்தக் காரியங்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் பெரிய முதலாளியாயிருக்கிறார்கள், பாருங்கள். ஆனால் அது துவக்கத்திலேயே சரியாயிருக்கவில்லை. முற்றிலுமாக!
770. ஒரு மனிதன்... வேதத்தில், ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தில், தேவன் மனிதனையும் ஸ்திரீயையும் சிருஷ்டித்தபோது, மனுஷனையும், ஸ்திரீயையும் உண்டாக்கினபோது, தேவன் ஏவாளிடத்தில், “உன்னுடைய புருஷன் உன்னை ஆண்டுகொள்வான், உன்னை ஆளுகை செய்பவனாயிருப்பான்” என்று கூறினதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? அதை அமெரிக்காவில் பேசிப் பாருங்கள், அப்பொழுது நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று பாருங்களேன்! பையனே, அதுவல்ல இது, ஸ்திரீ புருஷனை ஆளுகிறாள்; அவர்கள் அதைச் செய்ய வேண்டும், பொது இடங்களில் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
771. என்னுடைய அறையில் டஜன் கணக்கில் சந்திக்க அங்கே வருகிற ஒழுக்கமான ஸ்திரீகளைக் குறித்து என்னால் கூற முடியும். எல்லா ஸ்திரீகளுமே எந்த ஒரு நேரத்திலும் வேலை செய்யக் கூடாது என்று நான் கூறவில்லை; அவர்களுடைய கணவன் சுகவீனமாயிருக்கலாம் அல்லது ஏதோ ஒரு காரியமாயிருக்கலாம், அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் பணிபுரியத்தான் வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறில்லையென்றால், அவர்கள் அதைச் செய்யக்கூடாது. அப்பொழுது அவர்களுடைய இடம் வீட்டில் தங்களுடைய சிறிய கோட்டையில் தரித்திருப்பதேயாகும், அங்கேதான் அவர்கள் சரியாக இருக்க வேண்டும்.
772. நம்முடைய அமெரிக்க ஸ்திரீகள் போய் விரும்பினவற்றை செய்யும்படியான சிலாக்கியம் பெற்றுள்ளனர். எல்லா மிருகங்களிலும் கூட, அந்தக் காரியம் மேற்கொள்ளும்போது, அது சம்பவிக்கிறது, அது அதனுடைய முழு வார்த்தையுமே இழிவான நிலைக்கு கொண்டு வருகிறது.
773. ஆப்பிரிக்காவில் ஒரு சிறு பறவை உள்ளது. அது ஒரு குறிப்பிட்ட வகையான பறவையாகும்.
774. இப்பொழுது, வழக்கமாக, ஆண், பெண் இரண்டிலும் பெண்தான் அசிங்கமானதாயிருந்து வருகிறது. ஆண் தான் எப்பொழுதுமே மிகவும் அழகானதாயிருந்து வருகிறது, ஆண் மான், ஆண் காட்டுமான், நெடுவால் பகட்டு வண்ண சேவல், சேவல்கள் எப்பொழுதுமே மிகவும் அழகாயுள்ளன. ஏனென்றால் பெண் பறவையோ வீட்டில் உள்ள பறவையாகும். அது கூட்டில் அமர்ந்து தன்னுடைய குஞ்சுகளை வளர்க்கிறது. அது பருந்து, பாம்பு, ஓநாய் இன்னும் என்னவெல்லாமோ, பாருங்கள், தன்னுடைய குஞ்சுகளை மறைத்துக் கொண்டு பராமரித்து வளர்க்கிறது.
775. ஆனால் அங்கே அந்த வர்க்கத்தில்... இல்லை பாலியலில் உள்ள அந்த அந்த ஸ்திரீ இல்லை பெண் அழகில் பிரபலமாகும்போது, அது எப்பொழுதுமே ஒரு இழிவான மாதிரியாகவே உள்ளது. ஆப்பிரிக்காவில், நீங்கள் ஒரு பறவையை எடுத்துக் கொண்டால்... அங்கே ஒரு சிறிய பறவை உண்டு, எனக்குத் தெரிந்த ஒரே ஒரு கண்டத்தில் உள்ள அந்த பெண் பறவை ஆண் பறவையைக் காட்டிலும் அழகாயுள்ளது. அது... அதுவே அந்த பறவை எப்போதுமே ஒரு விபச்சாரியாக இருந்து வருகிறது. அது சுற்றித் திரிந்து ஒரு ஆண் துணையைக் கண்டறிந்து, பின்னர் ஓடிப் போய் முட்டைகளையிட்டுவிட்டு, பின்னர் அது மற்றொரு துணையோடு சேருகிறது, அது தன் துணையை முட்டைகள் மீது அடைகாக்க வைத்துவிட்டு, அது போய் மற்றொரு துணையைத் தேடுகிறது. அது முற்றிலும் உண்மை. புரிகிறதா? நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா?
776. இப்பொழுது இன்றைக்கு அமெரிக்காவில் உள்ள நம்முடைய ஸ்திரீகளை நோக்கிப் பாருங்கள். ஒரு சில நாட்களுக்கு முன்னர் கென்டக்கியிலிருந்து வந்த ஒரு வாலிபன் இங்கே கென்டக்கியில் உள்ள ஒரு குறிப்பிட்ட தொழிற்கூடத்தில் எண்ணூறு ஸ்திரீகள் பணிபுரிந்து கொண்டிருந்ததாகக் கூறினான். மேலும் அவன், “அவர்களில் நானூறு பேர் முற்றிலும் தெரு விபச்சாரிகளாய், திருமணமான ஸ்திரீகளாய் பிள்ளைகளோடு இருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்” என்றான். ஒரு நபர் தன்னுடைய மனைவியை அங்கிருந்து அழைத்துச் சென்று, ஒரு குழுவினரோடு அவள் வேலை செய்தபோதே அவளை கொன்று போடவிருந்தான். மற்றொருவன் ஒரு மனிதனைச் சுடச் சென்றான். மற்றொருவவனோ வெட்டிக் கொண்டும் சண்டையிட்டுக்கொண்டுமிருந்தான். அவ்வாறு செய்யக்கூடாது. அது சரியல்ல.
777. ஸ்திரீயை, அவளுக்குச் சொந்தமான சமையலறையில் வையுங்கள், அப்பொழுது எல்லாம் சரியாகிவிடும். ஆனால் நீங்கள் அவளை அங்கே பொது இடத்தில் பணிபுரிய வைக்கும்போது, அவள் ஒழிந்து போய்விடுகிறாள். முற்றிலும்... நான் அதை கூறவில்லை.
778. அமெரிக்க ஸ்திரீகள் தங்களுடைய மூக்குகளை மேலே உயத்தினவாறு அடக்கமின்றி சிரித்து, “அதனால் ஒன்றுமில்லையே” என்று கூறுகிறார்கள். மேலும், “நீர் எனக்குக் காண்பியும்” என்கின்றனர். நிச்சயமாகவே, நீங்கள் அதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று வேதம் முன்னுரைத்துள்ளது. எனவே நீங்கள் அதைச் செய்யத்தான் வேண்டும்.
779. இங்கே... முன்பெல்லாம், நீண்ட காலத்திற்கு முன், ஒரு மெத்தோடிஸ்டு சபையில் ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமுடியை வெட்டிக் கொண்டால், அவளை சபையைவிட்டு புறம்பாக்கிவிட்டிருந்தனர். நிச்சயமாகவே, அவர்கள் அதைச் செய்தனர். ஆம், உண்மையாகவே, நசரேயன்கள், யாத்ரீக பரிசுத்தர், பெந்தேகோஸ்துக்கள், அவர்கள் எல்லோருமே வழக்கமாக அதைச் செய்வர். என்ன சம்பவித்தது?
780. ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பிரசங்க பீடத்திற்குப் பின்னே சில பெண்மைத் தன்மைக் கொண்டவர்களைப் பெற்றுள்ளீர்கள். அது முற்றிலும் உண்மையே. சிலர் தங்களுடைய ஆகாரச் சீட்டைக் குறித்துப் பயப்படுகின்றனர். நீங்கள் அவர்களை வெளியேற்றிவிடுவீர்களோ என்றும், சபையிலிருந்து அவர்களை ஓடச் செய்வீர்களோ என்றும் பயப்படுகின்றனர். அவர்கள் உறுதியாய் நிற்பதற்கு மிகுந்த தைரியத்தை பெற்றிருக்கவில்லை, அது புண்படுத்தினாலும் அல்லது அது புண்படுத்தவில்லையென்றாலும், தேவனுடைய வார்த்தையின் பேரில் உறுதியாக நிற்க வேண்டும். அது முற்றிலும் சரியே.
781. புருஷனே ஆளுகை செய்பவனாயிருக்கிறான் என்பதை இங்கே கவனியுங்கள். நீங்கள் இல்லத்தை ஆளுகை செய்யலாம் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். நீங்கள் இல்லத்தை ஆளுகை செய்பவரல்ல. நீங்கள்... முற்றிலுமாக. இப்பொழுது நீங்கள் ஒரு அடிமை அல்ல; ஆனால் நீங்கள் ஒரு துணையாயிருக்கிறீர்கள். ஆதாம்... புருஷன் தன் மனைவியின் மேல் ஆளுகை செய்பவனாயிருக்கிறான், அவன் தன்னுடைய மனைவிக்காக மட்டுமே பொறுப்புள்ளவனாயிருக்கிறான். தேவன் புருஷனை அவனுடைய மனைவிக்காக பதில் கூறச் செய்கிறார். இப்பொழுது, தேவன் இப்பொழுது அதைக் கூறுகிறாரா என்று வாசித்துப் பாருங்கள்.
புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை...
782. தேவன் ஒரு ஸ்திரீயல்ல, தேவன் ஒரு மனிதனாயிருக்கிறார். உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் கன்னி மரியாள் மற்றும் அவை யாவையும், பரிந்து பேச... இல்லை பரிந்துரைத்தல், அதுபோன்ற ஒவ்வொரு காரியத்தையும் உண்டாக்கினபோது, கன்னி மரியாளிடத்தில் ஜெபிப்பதை உருவாக்கினபோது, அது எனக்கு எதை நினைவூட்டுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது தியானாள் என்ற பெரிய தேவதையை நினைவூட்டுகிறது, பவுல் அதைக் கடிந்து ஒழித்துக் கட்டினான். அது உண்மை. அவன், “காரணம், தேவன் பெண்ணல்லவே!” என்றான்.
783. ஒரு கற்பாறை நிலத்தில் விழுந்தபோது, தேவதையே தன்னுடைய சாயலை கீழே வீசியெறிந்தாள் என்று அவர்கள் கூறினர், அந்தக் காரணத்தினால் கொரிந்துவிலே இருந்த ஸ்திரீகள் அங்கே... அந்த தியானாளை ஆராதித்தனர், அவர்கள் பிரசங்கிமார்களாக விரும்பினர்.
784. அவர்கள், “ஏன்? நாங்களும் பிரசங்கிக்கலாம் என்று ஆவியானவர் கூறினார்” என்றனர்.
785. அப்பொழுது அவன், “என்ன? தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரியென்றாவது, ஆவியைப் பெற்றவென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன்: சபையிலே ஒரு ஸ்திரீ பேசாமல் அமைதியாய் அடக்கமாயிருக்கக்கடவள், உபதேசம் பண்ணவோ அல்லது அதிகாரஞ் செலுத்தவோ நான் உத்தரவு கொடுக்கிறதில்லை” என்றான். அது சரியே! அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. புரிகிறதா? தேவன் அதற்காக நியாயத்தீர்ப்பின் நாளிலே ஒரு கூட்ட பிரசங்கிமார்களை பதில் கூறச் செய்யப் போகிறார்.
786. கவனியுங்கள்! நீங்கள், “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் அதற்கு கற்பிக்கப்பட்டேன்” என்று கூறலாம். இப்பொழுது நீங்கள் நன்கு அறிந்துள்ளீர்களே! அது உண்மை. நீங்களோ அல்லது வேறுயாராவது ஒரு விழுங்கு மருந்தினை எடுத்துக்கொள்ளத் துவங்கினால், அப்பொழுது யாரோ ஒருவர் அது ரசாயணமான விஷம் என்று உங்களிடத்தில் கூறியும், நீங்கள் நீங்கள் போய் எப்படியோ அதை உட்கொண்டால், அப்பொழுது அதற்குபிறகு அது உங்களுடைய சொந்த தவறாயுள்ளது. புரிகிறதா?
787. இப்பொழுது இதற்கு செவி கொடுங்கள்:
புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.
ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டுக் கொள்ளவேண்டும்.
788. உங்களில் எவரேனும் அதை வாசிக்கிறீர்களா? கொரிந்தியர் முதலாம் நிரூபம் 11-ம் அதிகாரம், 10-வது வசனம். நீங்கள் கவனிப்பீர்களேயானால், “அதிகாரம்” (ஏன்?) “தூதர்களினிமித்தமாக” கொரிந்தியர், காரணம் தூதன் மனிதனாயிருக்கிறான், செய்தியாளனயிருக்கிறான். பாருங்கள், அது ஆங்கிலத்தில் தூதர்கள் என்ற வார்த்தையின் முதல் எழுத்து சிறிய எழுத்தில் உள்ளது. பரலோக தூதர்களைக் குறித்து எங்கே குறிப்பிடப்பட்டுள்ளதோ, அங்கு அது ஆங்கிலத்தில் அந்த தூதர்கள் என்ற வார்த்தையின் முதல் எழுத்து பெரிய எழுத்தில் உள்ளது. அது எங்கே ஆங்கிலத்தில் தூதர்கள் என்ற வார்த்தையின் முதல் எழுத்து சிறியதாய் குறிப்பிடப்பட்டுள்ளதோ அது தூதர்களாக மனிதர்களைக் குறிப்பதாகும்.
ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை.
ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறது போல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.
ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது (குட்டைத் தலைமுடியோடு இருப்பது) இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக் கொள்ளுங்கள்.
(அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்)
789. இப்பொழுது கவனியுங்கள்:
புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது... சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா?
790. “அது எதைச் சார்ந்ததாயிருந்தது?” என்று கூறுவீர்களா? தலைமுடியை. பவுல் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? முடியை, தலைமுடியையே!... ஸ்திரீ நீளமான தலைமுடியை வளர்த்திருக்க வேண்டும். இப்பொழுது 14-வது வசனம்:
புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்குக் கனவீனமாயிருக்கிறதென்று... சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா?
791. உங்களுக்கு இது புரிகிறதா? ஒரு புருஷன் தலைமுடியை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறது, ஆனால் ஒரு ஸ்திரீ... அது ஒரு ஸ்திரீயின் ஸ்தானமாயுள்ளது. தேவன் ஒரு மனிதனை ஒரு ஸ்திரீயிலிருந்து வித்தியாசமாக உண்டாக்கினார், பால் வேறுபாடு மற்றும் தோற்றம் இன்னும் ஒவ்வொரு காரியத்திலுமே வித்தியாசமாய் உண்டாக்கினார். அவள்... ஒரு... ஆடையை அணியக் கூடாது. வேதமோ, “ஒரு ஸ்திரீ தளர்காற் சட்டைகளை அல்லது ஒரு புருஷனின் உடையையோ தரித்தால், அது தேவனுக்கு முன்பாக அருவருப்பானதாயும், அசுத்தமானதாயும், இழிவான காட்சியாயுமிருக்கும்” என்று உரைத்துள்ளது. தேவன் அதற்கான தண்டனையை அவள் பெறும்படிச் செய்வார். நீங்கள் யாருக்கு செவிகொடுக்கப் போகிறீர்கள்? ஆனால் இது வேதமாயுள்ளதே!
792. நீங்களோ சுற்றும் முற்றும் ஓடி, “ஏன்? அது அருமையானது... என்று நான் கருதுகிறேன், பாருங்கள், ஸ்திரீகள் தளர்காற்சட்டைகளை அணிவது” என்று கூறலாம். ஆனால் தேவன் அவர்களை வித்தியாசமாக உண்டாக்கினார், எனவே அவர்கள் வித்தியாசமாக உடை உடுத்த வேண்டும் என்று விரும்புகிறார்.
793. வேதம், “ஒரு ஸ்திரீ ஒரு புருஷனின் உடையைத் தரிப்பது ஒரு அருவருப்பாயுள்ளது” என்று உரைத்துள்ளது. அருவருப்பு என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அது, “தேவனுடைய பார்வையில் இழிவான ஒரு காரியமாய் உள்ளது” என்பதாகும். மகத்தான யேகோவா உங்கள் மீது அசுத்தமாயிருக்கிற காரியத்தை நோக்கிப் பார்க்கிறார். வேதம் கூறியுள்ளது...
794. நீங்கள் கூறுகிறதோ... இப்பொழுது பெண்மணிகளாகிய உங்களில் சிலர் உங்களுடைய வாலிபப் பருவ பெண்பிளைகளாக பதினெட்டு, பன்னிரெண்டு, இருபது வயதுடையவர்களை அந்தவிதமாக அவள் உடை உடுத்திக் கொண்டு சுற்றித் திரிய அவர்களை அனுமதிக்கிறீர்கள்.
795. தாய்மார்களாகிய நீங்களும் கூட! புரிகிறதா? நீங்கள் அந்த தளர் காற் சட்டைகள் மற்றவைகளை அணிந்து வெளியே வீதிக்கு செல்லும்போது, அவர்கள் இப்பொழுதெல்லாம் தயாரித்துக் கொண்டிருக்கிற அந்த ஆடைகளை அணியும்போது, அது நீங்கள் இல்லாத ஏதோ ஒன்றாக் நீங்கள் காணப்படும்படிச் செய்கிறது. புரிகிறதா? நீங்கள் அங்கே வெளியே வீதியில் எல்லோரும் பாலியல் கவர்ச்சியாய் உங்களைக் காணும்படி செல்லுகிறீர்கள், நீங்கள் உங்களுடைய கணவனுக்கு முன்பாக ஒவ்வொரு காரியத்திலும் அவ்வளவு குற்றமற்றவரய், சுத்தமாயிருக்கலாம், ஆனால் நீங்கள் வெளியே வீதிக்குப் போய், அந்தவிதமான நீங்கள் உங்களை கவர்ச்சியாக காண்பிக்கும் காரணத்தால் ஒரு மனிதன் உங்களை நோக்கிப் பார்த்தால், அப்பொழுது நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள், அந்த விதமாக உங்களை நோக்கிப் பார்த்த ஒவ்வொரு மனிதனோடும் விபச்சாரஞ் செய்ததற்காக நியாயத்தீர்ப்பின் நாளிலே பதில் கூறப் போகிறீர்கள். அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது.
796. வேதம், “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று” என்று உரைத்துள்ளது. எனவே நீங்கள் குற்றவாளியாயிருக்கிறீர்கள்...
797. நீங்கள் நியாயத்தீர்ப்பில் வந்து, “கர்த்தாவே, நீர் என் இருதயத்தை அறிந்திருக்கிறீர்; நான் ஒரு போதும் விபச்சாரஞ் செய்யவேயில்லை, நான் என்னுடைய கணவனுக்கு உண்மையாக வாழ்ந்து வந்தேன்” என்று கூறலாம்.
798. ஆனால் இங்கு ஒரு மனிதன் இருப்பார், இங்கே மற்றொருவர் இருப்பார், இங்கே மற்றொருவர் இருப்பார், மற்றொருவர், மற்றொருவர் பதினைந்து, இருபது, முப்பது, அங்கே நாற்பது பேர் நின்று “விபச்சாரக்குற்றத்தைக்” கூறுவர். ஏன்? யாரோ ஒரு மனிதன் உங்களை நோக்கிப் பார்த்தார்.
799. “ஆயினும், எனக்கு அதனோடு எந்த சம்மந்தமும் இல்லை” என்று கூறலாம். நீங்கள் ஏன் உங்களை அந்தவிதமாக காண்பிக்கிறீர்கள்? தேவன் அந்தவிதமான ஆடைகளை நீங்கள் உடுத்தக் கூடாது என்று உங்களிடம் கூறினபோதும், அதைச் செய்வது அருவருப்பாயிருந்தது, யார் சூசியை நேசிப்பது என்ற நிகழ்ச்சியைக் காணப் போகிறீர்கள் அல்லது அது என்ன...
800. யார் சூசியை நேசிப்பது என்ற நிகழ்ச்சியில் நடிக்கும் பெண்ணுடைய கணவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் கண்டறிந்தீர்களா? நீங்கள் எல்லோரும் அதை இங்கே செய்த்தித்தாளில் பார்த்திருப்பீர்கள்? நாங்கள் வாமிங்கில் உள்ள காஸ்பர் என்ற இடத்தில் இருந்தபோது, அது வெளியானது. அவனுடைய பெயர் என்ன? அந்த நபர்... அந்த நாம் சூசியை நேசிக்கிறோம், இல்லை என்ன அது என்னவாயிருந்தது?...ஓ, நீங்கள் எல்லோரும் புதன்கிழமை இரவு வீட்டிலேயே தரித்திருந்து அதைப் பார்த்துவிட்டு, ஜெபக் கூட்டத்திற்கு வர தவறிவிடுகிறீர்கள். அது இப்பொழுது என்னவாயுள்ளது? நாம்... நேசிக்கிறோம் என்ற நிகழ்ச்சி, அதனுடைய பெயர் என்ன? [ஒரு சகோதரி, “நான் லூசியை நேசிக்கிறேன்” என்று கூறுகிறார் - ஆசி.] நான் லூசியை நேசிக்கிறேன், அவளுடைய கணவன்... நவேடா என்ற இடத்தில் உள்ள ரெநோவில் நான்கு வருடங்களாக ஒரு கறுப்பு நிற பெண்ணோடு வாழ்ந்ததாக தெரியவந்துவிட்டது. சுவிசேஷத்தை போய் கேட்பதற்குப் பதிலாக அந்த விதமாக வீட்டிலே தரித்திருந்து தொலைக்காட்சியைப் பார்க்கிறீர்கள். அந்த ஸ்திரீ அதை அறிக்கை செய்தாள். ஓ, இரக்கம்! கிறிஸ்துவுக்கு புறம்பே யாதொரு சுத்தமும் கிடையாதே!
801. சகோதரரே, உங்களுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக! நான் நான் உங்களுக்குச் சொல்லுவேன் நீங்கள், சிலர்... நீங்களோ, “ஓ, என்னே! சில வர்கங்களைப் பாருங்கள்” என்று கூறலாம். நாம் சில மிக மோசமான அழுகிய பொருட்களை உண்டு வாழும் அழகான பருந்துகளையும் பெற்றுள்ளோம். நீங்கள் ஒரு பறவையை அதனுடைய சிறகுகளைக் கொண்டு நிதானிக்க முடியாது, பாருங்கள். ஆகையால் அதை அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஓ, என்னே!
802. இப்பொழுது கவனியுங்கள்:
புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது (அதுதான் அந்த 14-வது வசனம்) அவனுக்குக் கனவீனமாயிருக்கிறதென்றும்... சுபவாமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? (அது ஒரு ஸ்திரீயைச் சார்ந்ததாயிருக்கிறது.) ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும்...
803. இப்பொழுது அவர் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறான்? கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள் சபையில் அணிந்து கொள்கிற ஒரு தொப்பியையா? உண்மையில் அது இல்லையே! ஒரு கைக் குட்டையினால் உங்களுடைய தலையின் உச்சியை சற்று மூடிக்கொள்ளுதலையா? அவன் உங்களுடைய தலைமுடியைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறானே!
804. இப்பொழுது! ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டால், அவள் தன்னுடைய மகிமையைத் துண்டித்துக் கொள்ளுகிறாளே, அவள் ஜெபிக்க பீடத்தண்டைச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாருங்கள், இங்கே என்ன கூறப்பட்டிருக்கிறதென்றால், “ஒரு ஸ்திரீ ஜெபம்பண்ணப்போகும்போது தலையை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு வழக்கமான காரியமாயிருக்கிறதல்லவா?” இங்கே, “அவள் தன்னுடைய தலைமுடியை கத்தரித்துக்கொண்டால்,” அப்பொழுது “அவள் சிரைத்துப் போடக்கடவள்” என்று கூறுகிறது. “அவள் சிரைத்துப் போடப்படுவதாயிருந்தால்,” அப்பொழுது, “அது ஒரு அவமானமாயுள்ளது, அதைச் செய்வது ஒரு ஸ்திரீக்கு ஒரு வெட்கக் கேடாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது, நான்… நான் பவுலினுடைய நிரூபத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லோருமே, அதாவது அது உங்களைப் பொறுத்தது, பாருங்கள்.
ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
805. அவளுக்கு ஒரு தொப்பி கொடுக்கப்படும் என்று அது கூறியுள்ளதா? கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள் அல்லது பிராட்டஸ்டெண்டுகளாகிய நீங்கள் சபைக்குச் சென்று ஒரு தொப்பியை அணிந்து கொள்ள விரும்புகிறீர்கள், மேலும், “நான் சபைக்குச் செல்லுகிறபடியால், ஒரு தொப்பியை அணிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுகிறீர்கள். இல்லை, நீங்கள் உங்களுடைய தலைமுடியை வளரவிட வேண்டும். அதுதான் வித்தியாசமே. புரிகிறதா?
தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. (முடியினால் மூடப்படாமல் அவள் சபைக்கு வந்து, பீடத்தண்டை ஜெபிக்கச் செல்வது ஒரு அவமானமாகும்.)
ஆகிலும் ஒருவன். (அந்த வார்த்தையை வாக்குவாதம்... என்று உச்சரிக்கக்கூடாது என்று நான் நினைக்கவில்லை) வாக்குவாதஞ்செய்ய… வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால் (வாக்குவாதம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்), எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்,
806. இப்பொழுது நீங்கள் அதைக் குறித்து வாதிட விரும்பினால், நீங்கள் அதனோடு வாதிடுங்கள். சரி. நீங்கள் அதைக் குறித்து வாக்குவாதஞ் செய்ய வேண்டுமென்றால், “ஓ, அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை. அவர்கள் வாக்குவாதம் செய்யட்டும். ஏன்? அதனால் ஒன்றுமில்லை என்று நான் கருதுகிறேன். நான்... அது தலைமுடி என்ன என்பதாயிருக்கவில்லை, எப்படியோ அது இருதயம் என்னவாயுள்ளது என்பதாயுள்ளது. அது உண்மையே; இருதயம் சரியாயிருக்குமானால், தலைமுடி சரியாயிருக்கும் (உ-ஊ).
807. நீங்கள் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், செய்யுங்கள், பவுல், “எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்” என்றான். மேலும், 'நீங்கள் காயீனின் பக்கம் சார்ந்தவராயிருக்க விரும்பினால், போய் சேர்ந்து கொள்ளுங்கள்” என்றான். ஆனால் இதைத்தான் பவுல் கூறிக் கொண்டிருந்தான்
808. ஓ, நான் சிரிக்க வேண்டுமென்பதற்காகக் கூறவில்லை, ஏனென்றால் இது ஒரு சிரிப்பதற்கான காரியம் அல்ல. ஆனால் நண்பர்களே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்தக் காரியங்களை செய்யும்படிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிற வழியைக் காண்பதே ஒரு அவமானமாயுள்ளது. நான்...
809. கவனியுங்கள்! என்னுடைய அருமை சகோதரிகளே, உங்களைத்தான், நான் உங்களுடைய மிகச் சிறந்த முறையில், உங்களுடைய சிறந்த முறையில் உங்களைக் காண விரும்புகிறேன், அந்தவிதமாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும். உங்களுடைய கணவன் வரும்போது, அவர் உங்களுடைய இனிய இருதயமாயிருந்து வருகிறது போலவே நீங்களும் உங்களால் முடிந்தளவு ஒவ்வொரு காரியத்திலும் இனிமையாயும், புது மலர்ச்சியாயும் இருக்க வேண்டும். நீங்கள் அவரை அந்த நாளில் பீடத்தண்டையிலே உங்களுடைய கணவராயிருக்கும்படி முத்தமிட்டதுபோன்றே ஒரு இனிமையான முத்தத்தோடு நீங்கள் அவரை இப்பொழுது வாசலண்டை சந்திக்க வேண்டும். அது உண்மை. மிகச் சிறந்த முறையில் காணப்படுவதற்காக, மிகச் சிறந்த முறையில் இருப்பதற்காக நான் உங்களை குற்றப்படுத்துகிறதில்லை. நீங்கள் அந்தவிதமாயிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் விரும்புவதை தேவன் அறிவார்.
810. இங்கே அண்மையில், நான் ஜேக் சூளரிடத்தில் பேசிக்கொண்டிந்தேன். ஜேக் சூளரைப் பற்றி யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மெத்தோடிஸ்டுகள் பெற்றுள்ள மிகவும் புகழ்வாய்ந்த பிரசங்கியார். அவர், “ஒரு ஸ்திரீ அவரிடத்தில் வந்து கூறினதை கூறினார். அதாவது தலைமுடி முழுவதும் அழுக்காயும், மெல்லும் சவ்வு மிட்டாயை மென்றுகொண்டே, பாதியளவே ஆடையணிந்தவளாய் வந்து, உங்களுக்குத் தெரியுமா, என்னுடைய கணவர் என்னோடு இனி ஒருபோதும் சகிப்புத் தன்மையோடு இருக்க விரும்பவில்லை” என்று கூறினானாம்.
811. அதற்கு அவரோ, “நான் அவரைக் குற்றப்படுத்தமாட்டேன்” என்றாராம்.
812. அது உண்மை. இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், நீங்கள் சரியான விதமாயிருக்க வேண்டும். உங்களுடைய புத்துணர்ச்சியையும், அழகையும் நவநாகரீக திரைப்படத் துறையான ஹாலிவுட்டிலிருந்து எடுத்துக் கொள்ளாமல், தேவனுக்கு முன்பாக வேதத்திலிருந்து அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பெண்மணியாயிருங்கள், ஒரு பெண்மணியைப் போல நடந்துகொள்ளுங்கள், ஒரு பெண்மணியைப் போல உடை உடுத்திக் கொள்ளுங்கள், சுத்தமாயிருங்கள். ஒரு பெண்மணியைப்போல நடந்துகொள்ளுங்கள், அந்த...அணிந்து கொள்ளாதீர்கள்...
813. தன்னுடைய மனைவி அந்தவிதமான அற்பமான காரியங்களை அணிந்து மனிதருக்கு முன்பாக வெளியே செல்ல அனுமதிக்கும் எந்த மனிதனும், அந்த பழைய காரியங்களை... அதுபோன்ற காரியங்களை அணிந்து கொண்டு வெளியே வந்து புல்வெட்ட முற்றத்திற்கு சென்றாலும்... திருவாளரே, சகோதரனே, நான் உனக்குச் சொல்லுகிறேன், நான் நான் இழிவாகக் கூற வேண்டும் என்று கருதிக் கூறவில்லை, நான்... அது என்னுடைய இருதயத்தில் உள்ளது என்பதை தேவன் அறிந்திருக்கிறார். ஆனால்... என்னுடைய மனைவி அதைச் செய்ய நான் அனுமதிக்கும் முன்பே நான் பெரும் மாற்றத்தை உடையவனாயிருக்க வேண்டும். நீங்கள் பாருங்கள், என்னால் முடிந்தளவு நான் அந்தக் குன்றின் மேல் முதலாளியாயிருக்கிறேன். என்னால் இருக்க முடியாமற் போகும்போது, நான் அங்கிருந்து வெளியேறிவிடப் போகிறேன். அது உண்மை.
814. ஓ, சகோதரனே, ஸ்திரீ அதைச் செய்வது ஒரு வெட்கக்கேடாயும், ஒரு அவமானமாயும் உள்ளது. சகோதரியே நான்-நான் இழிவுபடுத்திக் கூறவில்லை... நான் நான் உங்களுக்கு அவமதிப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கவில்லை, இங்கே வருகிற ஜனங்களில், எங்களுடைய சபையில் இங்கே அப்படிப்பட்ட அங்கத்தினர்கள் இல்லை என்றே... நான் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது ஒரு தேவனுடைய வீடாய் உள்ளது, எனவே அந்தக் காரியங்களை ஜனங்கள் அணிந்து கொள்ளக் கூடாது என்றே முற்றிலுமாய் நாம் கூறுகிறோம். அதாவது அது... நீங்கள் நியாயத்தீர்ப்பின் நாளிலே அதற்காக பதில் கூறப்போகிறீர்கள். இப்பொழுது இங்கே கவனியுங்கள். உங்களுடைய தலைமுடியை வளரவிடுங்கள், பாருங்கள், ஒரு பெண்மணியாயிருங்கள்.
815. இப்பொழுது: உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே.
முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்;... (அது இப்பொழுது இராபோஜன பந்தியண்டைக்குச் செல்கிறது)
816. இப்பொழுது அதற்கு செவி கொடுங்கள். அந்தக் காரணத்தினால்தான் தூதர்கள்...
817. இப்பொழுது, சகோதரன் பாமர், நான் இங்கே பிரசங்கித்துக் கொண்டிருக்கிற அதேக் காரியத்தையே நீர் அங்கே பிரசங்கிக்கிறீர் என்று இந்த ஒலி நாடாவில் நான் உங்களுக்கு கூறவில்லையா. ஆனால் நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள், நீங்கள் ஒரு பிரசங்கியாயிருக்கிறபடியால், சகோதரே, அது சத்தியம் என்பதை நீர் அறிந்திருக்கிறீர். சரி.
818. ஆகையால் இங்கே தூதர்கள் என்று உள்ளது “மனிதனைக்” குறிக்கிறது. நீங்கள் அதை கவனிப்பீர்களேயானால், சகோதரன் பாமர் அவர்களே, அது ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகளில், “தூதர்கள்” என்று உள்ளது. வேதம் தொடர்ந்து கூறும்போது. அவன் புருஷனையும், ஸ்திரீயையும் குறித்தே பேசிக்கொண்டிருக்கிறான், பாருங்கள், அதுதான் பொருளாய் உள்ளது.
819. அந்த விதமாகவே ஜனங்கள் வேதாகமத்தில் மிகவும் குழப்பமடைந்து, அவர்கள், “நல்லது, தேவன் இங்கே ஒரு காரியத்தைக் கூறுகிறார், ஒன்று...” என்கிறார்கள். இல்லை, நீங்கள்… நீங்கள் பாடப்பொருளைவிட்டு அகன்று செல்லுகிறீர்கள். அதேப் பாடப் பொருளின் பேரில் தரித்திருங்கள், அவ்வளவுதான். அவன் புருஷனையும், ஸ்திரீயையுங் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறான்.
820. நாம் முடிப்பதற்கு முன்பு, இப்பொழுது நான் இன்னுமொரு காரியத்தைத் தொட விரும்புகிறேன், அதற்கு எனக்கு ஏறக்குறைய இரண்டு நிமிடங்கள்தான் தேவைப்படும்.