821. அது மிக இனிமையான கேள்வியென்றே நான் கருதுகிறேன், நான் அதை விரும்புகிறேன். இப்பொழுது நாம் அதற்குள்ளாக நேராக நோக்கிப் பார்ப்போமாக.
822. ஆதியிலே, தேவன்... நாம் அப்படியே ஒரு சில நிமிடங்கள் நம்முடைய எபிரெய போதனைக்கு திரும்பிச் செல்வோம். தேவன் இந்த மகத்தான, ஏழு நிறங்களைக் கொண்ட பெரிய ஊற்றாயிருந்தார். எத்தனைபேர் அதை அறிந்திருக்கிறீர்கள்? புரிகிறதா? தேவன் ஏழு ஆவிகளை உடையவராயிருக்கிறார் என்பதை எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்? முற்றிலுமாக, ஏழு ஆவிகளே. ஆட்டுக்குட்டியானவருக்கு ஏழு கண்களிருந்தன, இப்பொழுது அவையாவும் ஒன்றாக சேருகின்றன. புரிகிறதா? இப்பொழுது அது தேவனாயிருந்தது.
823. இப்பொழுது அவர் (லோகாஸ்) தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, அது இந்த ஒரு பெரிய ஊற்றிலிருந்து வந்த தேவன் ஒரு சரீரத்திற்குள், ஒரு ஒரு மனித ரூபத்திற்குள் வந்தார். அது லோகாஸானது, நாம் அதை ஆவிக்குரிய சரீரம் என்றழைக்கிறோம்.
824. இப்பொழுது, நீங்கள் ஆவிக்குரிய சரீரத்தை எடுத்து, நீங்கள் அதை நோக்கிப் பார்க்கும்போது, அது ஒரு மனிதனாயிருக்கிறது. இப்பொழுது அதாவது நாம்... இப்பொழுது, நாம் அங்குதான் ஆதியில் இருந்தோம். இப்பொழுது, நீங்கள் இப்பொழுது இதை புரிந்து கொள்ளவில்லை, ஆனால் நீங்கள் அந்தவிதமாகத்தான் ஆதியில் அங்கே இருந்தீர்கள். மனிதன் உண்டாக்கப்பட்டபோது, தேவன் மனிதனை தம்முடைய சாயலில் உண்டாக்கினபோது, அவர் அவனை ஒரு ஆவிக்குரிய சரீரமாக உண்டாக்கினார். அவர் அவனை மாம்ச சரீரத்தில்... மாத்திரம் வைத்தார். தேவன் மனிதனை தன்னுடைய சாயலில், அவருக்கு ஒப்பான சாயலில் உண்டாக்கினபோது, அவர்கள்... ஆதியாகமம் 2-ல்,... இல்லை ஆதியாகமம் 1: 28-ல் அது உள்ளது என்று நான் நினைக்கிறேன், “நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.” தேவன் ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். அது உண்மை, “நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.”
825. அதன்பின்னர் தேவன் மனிதனை சற்று கீழான ஒரு மிருக ஜீவியத்தில் அவனை வைத்தார், அதுவே இந்த சரீரமாய் உள்ளது, அவன் நிலத்தைப் பண்படுத்தும்படியாய், அதைத்தொட்டுப் பார்க்கும்படியாய் மிருகங்களைப் போலாக்கினார். ஆவிக்குரிய சரீரமோ தொட்டுப்பார்க்கிறதில்லை, அது பார்க்கிறதில்லை, ருசிக்கிறதில்லை, முகருகிறதில்லை, கேட்கிறதில்லை; ஆனால் நாம் இந்த புலன்களை உடையவர்களாயிருக்கிறோம். ஆகையால் மனிதன் தொட்டுப் பாக்கும்படியாக, உணரும்படியாக அங்கே வைத்தார்.
826. அவன் ஏதேன் தோட்டத்தினூடாக நடந்து சென்றபோது, முதலில் ஒரு ஆவிக்குரிய சரீரத்திலிருந்தபடியால் (இங்கே பரிசுத்த ஆவியைப் போலிருந்து இங்கே நடந்து கொண்டிருந்தான்), அந்த சரீரம் மிருக ஜீவனை வழி நடத்தினது. அது ஒவ்வொரு காரியத்தையும் கட்டுப்படுத்தினது, ஆனால் அதனால் நிலத்தைப் பண்படுத்த முடியவில்லை, பாருங்கள். ஆகையால் அவன் நிலத்தைப் பண்படுத்தும்படியாய் தேவன் அவனை மாம்ச சரீரத்தில் வைத்தார். அவன் நிலத்தைப் பண்படுத்தும்படிக்கும், திராட்சை தோட்டங்களை பண்படுத்தும்படிக்கும் அவனுக்கு அவனுடைய ஐம்புலன்களைக் கொடுத்தார். அதன்பின்பும் மனிதன் தனிமையாக இன்னமும் காணப்பட்டான். ஓ, இது ஒரு அழகான காட்சியாயுள்ளது.
827. பாருங்கள், அவன் முதலில் சிருஷ்டிக்கப்பட்ட போது, அவன் இரண்டு பேராய் சேர்ந்தே சிருஷ்டிக்கப்பட்டான். அவன், மனிதன் ஆணும் பெண்ணுமாகவே உண்டாக்கப்பட்டிருந்தான். அவன் அவ்வாறு இருந்தான் என்று வேதம் உரைத்துள்ளது. தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். “அவர் அவ்வாறே அவனை சிருஷ்டித்தார்.” இப்பொழுது கவனியுங்கள், மனிதன் ஆவிக்குரிய சரீரத்திலிருந்து பிரிக்கப்பட்டபோது, மாம்ச சரீரத்தில் வைக்கப்பட்டான், அப்பொழுது அவன் அவன் அங்கே அவ்வாறு சேர்ந்திருக்கவில்லை; அவனுடைய ஒரு பாகம் இன்னமும் ஒரு ஆவிக்குரிய சரீரமாகவே இருந்தது, ஆகையால் அது சரியாகக் காணப்படவில்லை.
828. காளை, பசு என்று ஆணும் பெண்ணுமாக அங்கே சென்றன. அங்கே குதிரை அவ்வாறு சென்றது, அங்கே காளை சென்றது, ஒவ்வொன்றும் ஜோடு ஜோடாகச் சென்றன. ஆனால் ஆதாம், அவன்... அது...பாருங்கள், அங்கே ஒரு காரியம் குறைவாயிருந்தது. அந்த மிகுந்த ஏக்கமோ அவனுக்காக ஒரு துணை காத்துக் கொண்டிருந்தது என்பதையே காண்பித்தது. உங்களுக்கு அது புரிகிறதா? நாம் பெற்றுள்ள சிந்தனைகள் இங்கே மரிக்க வேண்டியதாயுள்ளன, அதாவது நாம் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு குழப்பமடைந்திருக்கிறோம், நாம் மரணமில்லாத ஒரு ஜீவனுக்காக ஏங்குகிறோம், அது நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது. புரிகிறதா?
829. ஆதாம் தனிமையாயிருந்தான். தேவன், அவர்கள் வேறு பிரிக்கப்பட முடியாது என்பதை காண்பிப்பதற்கு... இப்பொழுது இன்னும் ஒரு விநாடியில் நான் இந்த அதேக் காரியத்திற்கு திரும்பி வரப் போகிறேன்.
830. பாருங்கள், அவர் போய் மண்னை எடுத்து ஒருபோதும் ஏவாளை உண்டு பண்ணவில்லை, ஆனால் அவர் மூல மண்ணிலிருந்து, ஆதாமிலிருந்து எடுத்து உண்டுபண்ணினார். அவர் ஆதாமினுடைய பக்கவாட்டிலிருந்த ஒரு விலா எலும்பை எடுத்து அவனுக்கு ஒரு துணையை உண்டுபண்ணினார், அதுவே ஏவாளாயிருந்தது, அவள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டு, மனிதனின் ஒரு பாகமாயிருந்தாள். அவள் சிருஷ்டிப்பில், ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் ஆதியில் அவனுடைய பாகமாயிருந்தாள். அவள் இந்த சிருஷ்டிப்பில் இங்கே அவனுடைய பாகமாயிருந்தாள். அவளை மற்றொரு சிருஷ்டிப்பில் பிரிக்க முடியாது, அவள் அதே சிருஷ்டிப்பில் சிருஷ்டிக்கப்பட வேண்டியவளாயிருந்தாள்.
831. சரியாக அந்தவிதமாகவே கிறிஸ்துவும் தேவனும் ஒரே நபராக இருக்க வேண்டியதாயிருந்தது, அது வித்தியாசமான எந்தக் காரியமுமாயிருக்க முடியாது. அவர் ஒரு நல்ல மனிதனாக அல்லது ஒரு தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், அவர் ஒரு மீட்பராய் இருந்திருக்க முடியாது; அவர் தாமே சிருஷ்டிகராய் இருக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர் இன்னமும் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் இப்பொழுதும் இருக்கிறார், நீங்கள் பாருங்கள், அந்த விதமாகவே அவர் அப்பொழுதும் இருந்தார்.
832. இப்பொழுது ஒரு மனிதன் இங்கே கிழே இறங்கி வந்தார், அவர் அவர் அற்புதமானவராயிருந்தார்; தேவன் அதை நேசித்தார், அவர், “அது அழகாயுள்ளது, அவர்கள் பூமியின்மேல் இருக்கட்டும், அங்கே என்றென்றுமாய் ஜீவிக்கட்டும். அவ்வளவுதான்; ஏனென்றால்-ஏனென்றால் நித்தியத்தில் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கட்டும். அது அப்படியே வளரட்டும், ஒவ்வொரு தாவரமும் அதைப் போன்றே ஒவ்வொன்றையும் பிறப்பிக்கட்டும். மனிதன் வாழட்டும், மிருகங்களும் மற்றுமுள்ள ஒவ்வொன்றும் என்றென்றுமாய் வாழட்டும். அவ்வளவுதான்” என்றார். புரிகிறதா?
833. அதன்பின்னர் பாவம் பிரவேசித்தது. நான் இந்த விவரத்தைக் கூற விரும்புகிறேன். இந்த... அநேக ஜனங்கள் இந்த ஒரு வேதவாக்கியத்தின் பேரில் அப்பேர்பட்ட ஒரு பயங்கரமான தவறைச் செய்கிறார்கள். அது 23-ம் சங்கீதத்தில் உள்ளது. அவர்கள் அதை இந்தவிதமாக, “நான் மரண நிழலின் இருளான பள்ளத்தாக்கிலே நடந்தாலும்” என்று வாசிக்கிறார்கள். இப்பொழுது, அப்படிப்பட்ட ஒரு காரியமும் இல்லை. வேதம் அதை, “இருளின் நிழலான பள்ளத்தாக்கு... மரண நிழல்களின் இருளான பள்ளத்தாக்கு” என்று கூறவில்லை.
834. அது, “நான் மரண நிழலின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்” என்றேக் கூறுகிறது. இப்பொழுது ஒரு நிழல் இருப்பதற்கு முன்பு, அந்த நிழலை உண்டுபண்ண வெளிச்சம் இருக்கவேண்டும். பாருங்கள், தாவீது ஒரு தீர்க்கதசிரியாய், அபிஷேகத்தின் கீழிருந்த படியால், அவன் ஒரு தவறும் செய்யவில்லை, அவன் அப்படியே சத்தியத்தையேக் கூறினான்: “நான்...” இருளின் பள்ளத்தாக்கினூடாக நடந்தாலும் என்றல்ல, ஆனால், “மரண நிழலின் பள்ளத்தாக்கினூடாக” என்றான்.
835. அப்படியானால் நீங்கள் ஒரு நிழலை உண்டு பண்ண ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வெளிச்சத்தை உடையவராயிருக்க வேண்டும். அந்த விதமாகத்தான் அது இங்கே உள்ளது. நாம் இயற்கையாகவும் இயற்கைக்கு மேம்பட்டவர்களுமாயிருக்கிறோம். இந்த சரீரம் ஒரு ஸ்திரீயினால் பிறப்பிக்கப்பட்டு, வேறெதனூடாகவுமல்ல, மரணத்திற்கு கீழ்பட்டிருக்கிறது; தேவனாலல்ல, நீங்கள் ஆதாம், ஏவாளிலிருந்து வந்த ஒரு இனப்பெருக்கமாயிருக்கிறீர்கள். கறுப்பாயிருந்தாலும், வெள்ளையாயிருந்தாலும் அல்லது நீங்கள் என்னவாயிருந்தாலும், நீங்கள் ஆதாம் ஏவாளின் கர்ப்பப்பிறப்பிலிருந்து வந்த ஒரு உற்பத்தியாயிருக்கிறீர்கள். அதுவே, “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களால் உலகத்திற்கு வந்த” உங்களுடைய சரீரங்களை உண்டாக்குகிறது. நீங்கள் உங்களுடைய ஜீவியத்தின் துவக்கத்திலேயே எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமலிருந்தும் கூட ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டு, குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறீர்கள்.
836. இப்பொழுது, காரணம் சுபாவத்தினால் உங்களிடத்தில் வந்துள்ள ஆவியினால், பாலியல் உடல் உறவிலிருந்து தோன்றின. சுபாவத்தினால், புருஷனாலும், ஸ்திரீயானாலும் உண்டான வாஞ்சையினால் ஒரு பூமிக்குரிய குழந்தை உருவாகிறது. அந்தக் குழந்தையை தனியே விட்டுவிட்டு, சரியானதை அவனுக்கு போதிக்கவில்லையென்றால், அப்பொழுது அவன் தவறாக சென்று விடுவான். அவனுக்கு சரியானதையும், தவறானதையும் போதிக்கவில்லையென்றாலும், அவன் தவறானதையே தெரிந்து கொள்வான். காரணம் அது அப்படிப்பட்டதைச் செய்யும்படியான அவனுடைய சுபாவமாய் உள்ளது.
837. அந்த அளவு கூட உயரமாயிராத ஒரு சிறு குழந்தையானது மிகுந்த எரிச்சல் கொள்வதைக் கவனித்துப் பாருங்கள்; அது அப்படியே. அது அவன் தன்னுடைய கரங்களை முறுக்கிக் கொண்டு, முகம் சிவந்து போய், தன்னுடைய மூச்சை இழுத்துப் பிடித்துக் கத்துகிறது. நிச்சயமாகவே. அது என்ன? அது அவனுடைய சுபாவமாயுள்ளது. அவன் அதை தன்னுடைய அப்பா அல்லது தன்னுடைய அம்மா, யாரோ ஒருவரிடத்திலிருந்தேப் பெற்றுள்ளான். அவள் ஒரு இரம்ப ஒலியைப் போல சண்டையிடும்படி அதிக கோபமுடையவளாயிருந்திருப்பாள் அல்லது அவனுடைய தந்தை அவ்வாறு இருந்திருப்பான். அவர்கள் அவ்வாறு இருக்கவில்லையென்றால், அவனுடைய தாத்தாவோ அல்லது பாட்டியோ அவ்வாறு இருந்திருப்பார். பாருங்கள், அது கர்ப்பப்பிறப்பாயுள்ளது.
838. ஆகையால் அதுவே. இதை உண்டாக்குகிறது. நீங்கள் உலகத்தில் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் சுபாவத்தினால் உண்டானீர்கள். உங்களுடைய முழு உடலமைப்புமே கருமையாய், மாசுபடிந்ததாய், ஆக்கினைக்குட்படுத்தப்பட்டு, சபிக்கப்பட்டு நரகத்திற்கு போகிறதாயிருக்கிறது. அது உண்மையே!
839. ஆனால் நீங்கள் மீண்டும் பிறக்கும்போது, அப்பொழுது தேவனுடைய வெளிச்சம் அந்த ஆத்துமாவிற்குள் பிரகாசிக்கிறது (அல்லேலூயா) அதன்பின் அது ஒரு இருளான பள்ளத்தாக்காய் ஒரு போதும் இருப்பதில்லை, ஆனால் அது அதற்குள் ஒரு நிழலைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்காயுள்ளது. நீங்கள் இங்கே மாம்சத்தினால் திரையிடப்பட்டிருக்கலாம், நம்முடைய முகத்தின் மேல் சில காரியங்களால் திரையிடப்பட்டிருக்கலாம், ஆனால் அங்கே போதுமான வெளிச்சம் உள்ளது. என்றோ ஒரு நாள் அந்த வெளிச்சமும், இருளும் பிரிய வேண்டுமே! வெளிச்சம் பிரகாசிக்கையில், இருள் விலகியோடுகிறது. நாம் கிறிஸ்துவோடு அந்த சரீரத்தில் இருக்கும்படி செல்லும் போது, அந்தகாரமும், மரணமும் மறைந்து விட நாமோ அந்த பரிபூரண வெளிச்சத்திற்குள்ளாக பிரகாசிக்கிறோம். தேவனுக்கே மகிமை! நாம் அங்கு இருக்கும்போது, ஒருபோதும் சுகவீனமாயிருக்காது, அதனோடு எந்த இருளும் ஒருபோதும் கலக்கப்படாது.
840. இப்பொழுதோ நாம் சுகவீனத்தையும், சந்தோஷத்தையும் உடையவர்களாயிருக்கிறோம், ஆரோக்கியத்தையும், பெலனையும் உடையவர்களாயிருக்கிறோம். நாம் அடுத்தடுத்து வரும் இன்ப துன்பங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும், சந்தோஷத்தையும், துக்கம் போன்றவற்றையும் உடையவர்களாயிருக்கிறோம். இது வெறுமென ஒரு நிழலாய் உள்ளது. அங்கே வெளிச்சம் உண்டு என்பதை அறிந்து கொள்ளும்படியான போதுமான வெளிச்சத்தை நாம் பெற்றுள்ளோம். நாம் இன்னமும் மாம்ச சரீரத்தில் இருக்கிறோம். ஆனால் என்றோ ஒரு நாள் விடியப்போகிறது. அப்பொழுது மரண தூதன் படுக்கையின் கால்மாட்டில் அமர்ந்திருக்க, அப்பொழுது மருத்துவரோ எல்லாம் முடிந்து விட்டது என்று கூறும்போது, இயற்கைக்கு மேம்பட்டது வரும்போது இந்த இயற்கையானது விலகிச் செல்ல, ஒளியானது ஒளியண்டை பிரகாசிக்க, இருளோ இருளுக்கே திரும்பிச் செல்லுகிறது. அப்பொழுது இந்த அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக் கொள்கிறது. அப்பொழுது இந்த அழிவு அழியாமையைத் தரித்துக் கொள்கிறது. அதாவது இந்த அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக்கொள்ளும்போது, நாம் ஒரு காலத்தின் சிருஷ்டியிலிருந்து ஒரு நித்திய சிருஷ்டியாக மாறுகிறோம். நீங்கள் முற்றிலும் அந்தகாரத்தைக் கொண்டு அங்கே வெளியே செல்ல முடியாது, நீங்கள் அந்தகாரத்தில் ஒளியைப் பெற்றிருக்க வேண்டும். அங்குதான் காரியமே உள்ளது. அந்தவிதமான சரீரத்தையே நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள்.
841. நாம் என்ன செய்கிறோம்? என்னுடைய அருமையான பரிசுத்த சகோதரனே, என்னுடைய அருமையான பரிசுத்த சகோதரியே, உலகத்தோற்றத்திற்கு முன்பே, தேவன் உங்களை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தபோது, இல்லை மனிதனை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தபோது, மனுஷனுடைய மகிமைக்காக மனுஷ சாயலில் ஸ்திரீயை சிருஷ்டித்தார், அவர் உங்களை ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் உண்டுபண்ணினார். அப்படியே தம்மைப் போலவே, அவர், “உண்டாக்குவோமா” என்று அவர் உண்டுபண்ணியிருந்த சிருஷ்டிகளிடத்தில், அதாவது, “நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, ஒரு ஆவிக்குரிய சரீரமாக உண்டாக்குவோமாக” என்றார். அதே சமயத்தில் தேவன் ஒருபோதும் அப்பொழுது மாம்சமாகமலிருந்தார், அவர் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார்.
842. மோசே அவரைக் கண்டான். மோசே, “கர்த்தாவே, நான் உம்மைக் காணட்டும்” என்று கதறினான்.
843. அப்பொழுது அவர், “போய் அந்தக் கன்மலையின் வெடிப்பில் மறைந்துகொள்” என்றார். மோசே போய் அந்த வெடிப்பில் நின்றான்; அப்பொழுது தேவன் கடந்து சென்றபோது, மின்னலும், இடிமுழக்கமும்... தேவன் கடந்து சென்றபோது, அவர் இதைப் போன்று தன்னுடைய முதுகைத் திருப்பியிருந்தார்.
அப்பொழுது மோசே, “அது ஒரு மனிதனின் பின்பக்கமாயிருந்தது” என்றான். அல்லேலூயா!
844. அது யாராயிருந்தது? அது இறங்கி வந்த மெல்கிசேதேக்காய், சாலேமின் ராஜாவாய், தகப்பனும், தாயுமில்லாதவராய், நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமில்லாதவராயிருந்தார். அது அவரே! அவரே இறங்கி வந்தார். அந்த ஒருவரே ஆபிரகாமினிடத்தில் பேசினார்; அதாவது தம்மை அந்தவிதமான ஒரு மாம்ச சரீரத்தில் அடக்கிக்கொண்டு, “வ்வூயு” என்று ஊதி, அதற்குள் அடியெடுத்து வைத்து இறங்கி வந்து, கன்றினைப் புசித்து, பசுவின் பாலைப் பருகி, வெண்ணையையும், சில அப்பங்களையும் புசித்தார். இரண்டு தூதர்களோடும் வந்தார்.
845. அவர்கள் அங்கிருந்து நடந்து சென்றபோது, அந்த எல்லா காரியமும் “வ்வூயூ” என்று மறைந்து போய்விட்டன.
846. நான் அதைக் குறித்து ஒருபோதும் நினைத்ததேயில்லை. இங்கே அண்மையில் ஒரு துப்பாக்கியில் தோட்டாக்களை நிறைத்துக் கொண்டிருந்தேன், நான்.22 என்ற ஒரு துப்பாக்கியை வைத்துள்ளேன். அது ஒரு.220 என்ற ஸ்விப்ட் துப்பாக்கியாகும். துப்பாக்கியை உபயோகப்படுத்தும் இங்குள்ள சகோதரர்கள் அதை அறிவர். அந்த சிறிய தோட்டாவானது, அது ஒரு நாற்பத்தியெட்டு கிரெயின் அளவு கொண்ட இந்த அளவு நீளமுள்ள தோட்டா, அதாவது வழக்கமான.22 தோட்டாவாகும். அது 30-க்கு 06 என்ற அளவில் வல்லமையாய் வெடிக்கக் கூடியதாய் கிட்டத்தட்ட நிரப்பிவைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நான்... அந்த நிறுவனம் ஏறக்குறைய ஒரு விநாடிக்கு ஏறக்குறைய நாலாயிரத்து நானூறு அடி தூரம் பாய்ந்து சுடக்கூடிய அளவுள்ள தோட்டாவை மாத்திரமே நிரப்புகிறது. சரி, நீங்கள் போதிய. அதாவது ஒரு விநாடிக்கு ஐயாயிரம் அடி சுடக்கூடிய அளவிற்கு நீங்களாகவே தோட்டாவை நிரப்பலாம். மற்றபடி நீங்கள் சுட்டால். அன்றொரு நாள் நாங்கள் இருநூறு கெஜ தூரத்தில் சுட்டுக் கொண்டிருந்தபோது, அந்த தோட்டா புழுதியில் பட்டு, அந்த துப்பாக்கி வெடித்த எதிரொலி எழும்பும் முன்னே அது புழுதியாய் பறந்து கொண்டிருந்தது. அந்தவிதமாக அவ்வளவு வேகமானதாயுள்ளது.
847. ஆகையால் நீங்கள் ஒரு பல் குத்தியை எடுத்து, (உங்களுக்குத் தெரியும், தட்டையான பாகமான ஒரு பல்குத்தி) அதில் உங்களுடைய வெடி மருந்தினை அந்த அளவு முனையில் வைத்து, கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து சிறு தோட்டாக்களை அங்கே உங்களுடைய துப்பாக்கியில் நிறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இங்கு நின்று உங்கள் கையில் உள்ள தோட்டாவை ஒரு விநாடியில் வெடிக்கச் செய்யலாம். உங்களிடத்திலிருந்து இருநூறு அடி தூரத்தில் தரையில் அமர்ந்திருக்கும் பன்றியை அங்கிருந்து சுட்டால், அந்தப் பன்றியோ ஒரு போதும் அசையாமல் இருக்கும். காரணம் அந்தத் தோட்டா, பன்றியை சென்றடைவதற்கு முன்னரே வெடித்து அதனுடைய மூல நிலைக்கு திரும்பி, மீண்டும் வாயுவாகிவிடுகிறது. இங்கே ஒரு தோட்டாவில் செப்பும் ஈயமும் ஒன்று சேர்ந்து கலந்துள்ளது, அது ஒரு விநாடியில் நீங்கள் அதை ஒருபோதும் கண்டறியாத பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது. அது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு திரும்பி, மீண்டும் வாயுக்களாக மாறிவிடுகின்றன. அந்த வாயுக்கள் மீண்டும் திரும்ப செப்புவாக உருவாகி, ஈயமாக அந்தவிதமாக உருவாகி வரக் கூடும். அந்த வாயுக்கள் அவ்வாறு உருவாக வேண்டியதாயுள்ளன.
848. இப்பொழுது அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அந்தவிதமாகவே நாம் இங்கே இருக்கிறோம், நாம் ஒரு உயரிய வர்க்கத்திலிருந்து வந்துள்ளோம். ஆதியிலே நாம் தேவனுடைய சாயலில் இருந்தோம். திரையும், அந்தகாரமும் அதை இப்பொழுது நாம் அறியாதபடி தடுக்கின்றன. ஆனால் இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் அவர், “உலகத்தோற்றத்துக்கு முன்னே அவர்களோடு இருந்தார்” என்று கூறினார். புரிகிறதா? நாம் அவரோடிருந்தோமே! உங்களால் இப்பொழுது அதைப் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் நீங்கள் ஆதியில் இருந்தீர்கள். “இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்துபோனாலும், நமக்கு ஏற்கெனவே ஒன்று காத்துக்கொண்டிருக்கிறதே!” அல்லேலூயா! அப்பொழுது நாம் ஒருகாலத்தில் ஜீவித்து வந்த இந்த ஆவிக்குரிய சரீரத்திற்குள்ளாக பிரவேசிக்கிறோம், எனவே நாம் புசிக்கவும், கரங்களைக் குலுக்கவும் முடியும். பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களோ, “எதுவரைக்கும், ஆண்டவரே?” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டனர்.
849. தேவனண்டை செல்லுகிற ஏழு படிகள் உள்ளன, அவை ஏழு ஆவிகளாக இறங்கி வருகின்றன. சரி, நீங்கள் தேவனுடைய பலிபீடத்தின் கீழே செல்லும்போது, அவைகள், “எதுவரைக்கும் ஆண்டவரே? நாங்கள் இங்கிருந்து திரும்பி போக முடியுமா?” என்று சத்தமிட்டு கொண்டிருந்தன.
850. அதற்கு தேவன், “அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங் கொஞ்சகாலம் இளைப்பாற வேண்டும்” என்றார். பார்த்தீர்களா?
851. அதன்பின்னரே ஆத்துமாக்கள் திரும்பி வருகின்றன, எல்லா அந்தகரமும், மரணமும், சுகவீனமும், கருமையான துயரங்கள் மங்கிப்போகும்போது, அவர்கள் மீண்டும் புருஷரும், ஸ்திரீகளுமாகி என்றென்றுமாய் ஜீவிப்பார்; அப்பொழுது அங்கு நிழலே இராது, அது முற்றிலும் சூரிய வெளிச்சமாயிருக்குமே!
852. கவனியுங்கள். அதுதான் இங்குள்ளது. அது எவ்வளவு அந்தகாரமாக வேண்டுமானாலும் ஆகட்டும்; சூரிய வெளிச்சம் அந்தகாரத்தின் மீது படும்போது அது மிகுந்த அந்தகாரமாயிருக்க முடியாது. இருளும் ஒளியும் ஒன்று சேர்ந்து வாசஞ் செய்ய முடியாது. ஏனென்றால்... எது அதிக சக்தி வாய்ந்தது? ஒளியே. ஒளியானது பிரகாசிக்கும்போது, இருளானது விலகியோடுகிறது. ஆமென். நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? நீங்கள் அதை அறிந்திருப்பதால் சந்தோஷமாயிருக்கவில்லையா? எங்குமே ஒரு நிழலே இருக்காது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் இப்பொழுது நம்முடைய இருதயங்களில் உள்ள இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஒளியானது ஏதோக் காரியத்தை திரும்பவும் சாட்சி பகருகிறது: தேவ குமாரனை, தேவனுடைய வல்லமையைக் குறித்து சாட்சி பகருகிறது.
853. நாம் இங்கே நடக்கிறோம், பரிசுத்த ஆவியின் வல்லமை இறங்கி வந்து ஒரு கூட்டத்திற்குள்ளாகச் சென்று, “நீ திருமதி இன்னார் இன்னார், அதாவது நீ ஒரு குறிப்பிட்டக்காரியத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்தாய். நீ இதனோடு நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருக்கிறாய், ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது “உன்னுடைய காலூன்றி எழும்பி நில், நீ குணமடைந்துவிட்டாய்” என்று கூறுவதைக் கவனியுங்கள். ஒரு முடமானவரும், குருடனும் தங்களுடைய காலூன்றி எழும்புகிறார்கள். ஒரு மனிதனின் மேல் கருத்த நிழல் காணப்பட, புற்று நோயினால் தின்றுவிடப்பட்ட அவன் ஜீவனை அடைந்து, மீண்டும் புதிய ஆரோக்கியத்தை பெறுகிறான்.
854. சந்தேகமேயில்லை, இயேசு, “நான் செய்கிற இந்தக் கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்” என்றார். அவர், “பிதாவானவர் எனக்குக் காண்பிக்கும் வரை நான் ஒன்றையும் செய்கிறதில்லை” என்றார்.
855. அது என்னவாயுள்ளது? அதுவே நம்மை மீட்கும்படியாக இந்த இருளுக்குள்ளாக வந்து கலந்து கொண்டிருக்கிற ஒளியாய் உள்ளது. நீங்கள் பாருங்கள், நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா?
856. இப்பொழுது, என்றோ ஒரு நாள் அங்கே திரும்பிச் செல்லப் போகிறோம், அப்பொழுது அந்த ஆவிக்குரிய சரீரமானது ஆதியில் இருந்தது போன்றே மீண்டும் அழிவில்லாத மாம்சமாயிருக்கிறது, அதன்பின்னர் இயேசு வருகிறார், தேவனும். கிறிஸ்துவும் ஒருவராயிருப்பர். கிறிஸ்து சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார், எல்லா ஜனங்களும் மானிடராயிருப்பர். கிறிஸ்து, கர்த்தராகிய இயேசு தாவீதின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார், எந்த ஒரு மனிதனும் ஒரு போதும் மரிப்பதில்லை. நாம் ஒருபோதும் மரிப்பதில்லை, நாம் ஒருபோதும் சுகவீனமடையமாட்டோம், அங்கே ஒருபோதும் துயரமே இருப்பதில்லை, நாம் ஆயிரவருடங்கள் ஜீவிப்போம்.
857. இந்த பூமியின் மேல் ஆயிர வருட அரசாட்சி முடிவுறும்போது, அப்பொழுதே பிசாசு வருகிறான், அதன்பின்னரே இரண்டாம் உயிர்த்தெழுதல், அநீதிமான்களின் உயிர்த்தெழுதல் உண்டாகிறது. அவர்கள் கடற்கரை மணலைப் போல ஒரு பெரிய சேனையாய் கூடுவர். அவர்கள் பரிசுத்தவான்களின் பாளையத்தை வளைந்து கொள்ள வருவார்கள், அவர்கள் அவ்வாறு வளைந்து கொள்ளும்போது, தேவன் வானத்திலிருந்து அக்கினியையும், கந்தகத்தையும் பொழியப்பண்ணி அவர்களை அழித்துப்போடுகிறார்.
858. யோவான், “பின்பு, நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நரகத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக் கண்டேன்: அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” என்றான். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது.
859. அவன், “மனைவி... ஆட்டுக்குட்டியும் மணவாட்டியும் அங்கே என்றென்றுமாயிருப்பர்” என்றான். புதிய பூமியோ கோடிக்கணக்கான மைல்கள் சதுரமாயிருக்கும். ஓ, என்னே, நகரம், வேதாகம அளவுகளின்படி நகரம் பதினைந்தாயிரம் மைல்கள் சதுரமாயிருக்கும். அது பதினைந்தாயிரம் மைல்கள் நீளமும், பதினைந்தாயிரம் மைல்கள் அகலமும், பதினைந்தாயிரம் மைல்கள் உயரமுமாயிருக்கும். அதுவே அந்த நகரத்தைக் குறித்து வேதம் அளிக்கிற சரியான விவரமாயிருக்கிறது. அங்கே சமுத்திரம் இல்லாதிருப்பதில் வியப்பொன்றுமில்லையே, அதற்கு அங்கே இடமே இல்லாதிருந்தது.
860. ஓ, அது அப்பேர்ப்பட்ட அழகாயிருக்கும்! அங்கே, அங்கே தேவனுடைய சிங்காசனத்தண்டையிலே ஒரு ஊற்று உண்டு, அது சிங்காசனத்திற்கு முன்பாக பாய்ந்தோடுகிறது. ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதியின்... இருகரைகளிலும் ஜீவ விருட்சங்களிருந்தன. பன்னிரண்டுவிதமான கனிகளைத் தரும் இந்த விருட்சமானது ஒவ்வொரு மாதமும் அதனுடைய கனிகளைக் கொடுக்கும்.
861. அங்கே இருப்பத்து நான்கு மூப்பர்கள் இருக்கின்றனர். அங்கே மணவாட்டியும் இருக்கிறாள். அங்கே நாற்பத்தி நாலாயிரம் ஆலய அண்ணகர்களும் இருக்கின்றனர். ஓ, சகோதரனே, நாம் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். காரியங்களோ நமக்காக முன்னதாகவே வைக்கப்பட்டுள்ளன. நான்கு. இருபத்தி நான்கு மூப்பர்கள் உள்ளனர். இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் அண்ணகர்கள் உள்ளனர். மணவாட்டியோ கிறிஸ்துவோடு அமர்ந்திருக்கிறாள். என்னே, நீங்கள் பேசி... என்னுடைய பரமவீடு, இனிமையான பரமவீடு! ஆமென்.
862. அங்கே போகும் சிலாக்கியம் எனக்கு உண்டு என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன், அங்கே போகும் சிலாக்கியம் உங்களுக்கும் உண்டு. அப்படியிருக்க நீங்கள் ஏன் இந்த அந்தகாரத்தில் நடக்கவும், எந்த வெளிச்சத்தையும் காணாமல் மரித்து, குழப்பத்திற்குள்ளாக சென்று ஒன்றுமில்லாமல் போக மனதாயிருக்கிறீர்கள்? ஏனென்றால் வெளிச்சம் தன்னுடைய உயரிய அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும்போது, அங்கே அந்தகாரத்திற்கு இடமே இல்லை. வெளிச்சமானது வரும்போது, அந்தகாரம் எங்கே என்று போய் கண்டறியுங்கள். எல்லாக் காரியங்களும் தேவனிடத்தில் திருப்பப்படுகின்றபோதும் அப்படித்தான் உள்ளது. இருளுக்கு ஒரு துவக்கம் உண்டாயிருந்தது, இருளுக்கு ஒரு முடிவும் உண்டு. வெளிச்சத்திற்கோ ஒருபோதும் ஒரு துவக்கமே இல்லாதிருந்தது, அதற்கு ஒருபோதும் ஒரு முடிவும் கிடையாது. தேவனுக்கு ஒருபோதும் ஒரு துவக்கமும் இல்லாதிருந்தது, ஒருபோதும் ஒரு முடிவும் கிடையாது. ஆகையால் என்றோ ஒரு நாள் முழு ஒழுக்கக் கேடான உலகமானது அதனுடைய எல்லா பாவத்தோடும், அதனுடைய அழகோடும், அதனுடைய எல்லா அற்புதமான காரியங்கள் மற்றும் உணர்ச்சிகளோடும், அதனுடைய எல்லா கவர்ச்சி என்று அழைக்கப்படுகிற ஒவ்வொரு காரியத்தோடும் ஒன்றுமில்லாமல் மங்கிப் போய்விடும், அது இனி ஒரு போதும் இல்லாமலே போய்விடும். அது இனி ஒருபோதும் இராது, அதைக் குறித்த சிந்தனையும் ஒருபோதும் இல்லாமற்போய்விடுமே! “அது இனி ஒருபோதும் நினைவு கூறப்படுவதற்குள்ளாகவும் கூட தோன்றாது” என்றே கூறப்பட்டுள்ளது.
863. ஆனால் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் அவரோடிருப்பர். நாம் அவருடைய சொந்த மகிமையான சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தை உடையவர்களாயிருப்போம்; அவரோடு ஜீவிப்போம், அவரோடு புசிப்போம், அவரோடு அமருவோம், அவரோடு என்றென்றுமாய், யுகயுகமாக வாசம் பண்ணுவோம்; நித்திய காலங்களோ உலகத்தோடு முடிவேயில்லாமல் உருண்டோடும்.
864. இன்றிரவு உங்களுக்கு ஒரு தருணம் உண்டு. அந்த இடத்தைச் சந்திக்க நீங்கள் ஆயத்தப்படவில்லையென்றால், நீங்கள் எவ்வளவுதான் சபைக்குச் சென்றாலும், நீங்கள் எவ்வளவுதான் ஒரு நல்ல அங்கத்தினராயிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் நடக்கிற அந்த அந்தகாரத்தில் கிறிஸ்து உங்களுக்கு புதிய ஜீவனை அளிக்கும்வரை நீங்கள் இழக்கப்பட்டவராகவே இருக்கிறீர்கள். நீங்கள் பக்தியுள்ளவர்களாயிருக்கலாம். பக்தி, கவனியுங்கள், நண்பர்களே, சமயம் அறிவுப் பூர்வமானதாயுள்ளது. புரிகிறதா? காயீனின் பிள்ளைகள் எல்லோருமே எப்பொழுதுமே ஒரு மார்க்கத்தை உடையவர்களாயிருந்து வந்தனர். இயேசு வந்தபோது அந்த யூதர்கள் ஒரு மார்க்கத்தை உடையவர்களாயிருந்தனர், ஆனால் அவர்கள் இரட்சிப்பைப் புறக்கணித்தனர்.
865. நீங்கள் இன்றிரவு மிகுந்த பக்தியுள்ளவர்களாயிருக்கலாம். நீங்கள் பிரஸ்பிடேரியனாய், மெத்தோடிஸ்டாய், பெந்தேகோஸ்தேக்காரராய், நசரேயனாய், யாத்திரீகப் பரிசுத்தராயிருக்கலாம். நீங்கள் நேர்மையான மார்க்கத்தை உடையவராயிருப்பதால், உங்களுடைய சபைக்குச் சென்று, சாட்சி பகரலாம். நீங்கள் பாடலாம், ஆரவாரமிடலாம், கர்த்தரை ஸ்தோத்தரிக்கலாம், நீங்கள் சபைக்கு உங்களுடைய தசமபாகங்களைக் கொண்டு வரலாம், நீங்கள் உங்களுடைய அண்டைவீட்டாரை சரியாக நடத்தலாம். அதற்கு உங்களுடைய நித்திய பயண இலக்கோடு எந்த ஒரு சம்மந்தமுமில்லை. காயீன் அந்த ஒவ்வொரு சிறு காரியத்தையும் செய்தான். முற்றிலுமாக.
866. வேதம், “கோதுமையும் களைகளும் ஒன்று சேர்ந்து வளர்ந்தன” என்று கூறியுள்ளது. அந்த கோதுமை மழைக்காக கடும் வேட்கையுற்றுக் கொண்டிருந்தபோது, களைகளும் கூட வேட்கையுற்றுக் கொண்டிருந்தன. மழை வந்தபோது கோதுமையைப் போலவே களைகளும் மழையைப் பெற்றுக்கொள்ள மகிழ்ச்சியடைந்தன. “ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.”
இப்பொழுது நீங்கள் உங்களுடைய கனிகளை சோசித்துப் பார்க்கையில், நாம் ஜெபம் செய்வோமாக.
867. இப்பொழுது, பிதாவாகிய தேவனே, இன்றிரவு இங்கே சில கடினமான கேள்விகள் இருந்து வந்தன. நான் சரியாக பதிலளிக்காமலிருந்திருக்கலாம், ஆனால் என்னுடைய அறிவுக்கெட்டினவரையில் மிகச் சிறந்த முறையில் பதில் அளித்துள்ளேன். நீர் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர். தேவனே, நீர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது ஒருகால் இன்னும் இந்த கேள்விகளில் சிலவற்றிற்கு நான் சரியாக பதில் அளித்திருக்கவில்லையென்றால், அப்பொழுது நீர் ஜனங்களுடைய இருதயத்தில் பேசும், அவைகள் எங்கே இருக்க வேண்டும் என்பதை நீர் அவர்களுக்கு தெரியப்படுத்தும். நீரே என்னிடம் கூறினீர் என்பதை நான் உணருகிறேன். ஆனால் நான் தவறாயிருந்தால், அப்பொழுது நீர் என்னை மன்னிப்பீராக.
868. தேவனே, இந்த ஒவ்வொன்றையும் அவர்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, அவர்கள் அவைகளை ஆழ்ந்து சிந்தித்து, “ஆம், அங்கே உள்ள சபையில் இந்தக் காரியங்கள் உள்ளன. அதைத்தான் வேதம் கூறியுள்ளது” என்று இந்தவிதமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன்.
869. கர்த்தாவே, பெண்மணிகளுக்கு நான் எந்தக் காரியத்தையும் தனிப்பட்ட விதத்தில் குற்றமாகக் கருதிக் கூறவில்லை என்பதை நீர் அறிந்திருக்கிறீர். ஆனால் தேவனே, நான்... நான் என்னுடைய சகோதரிகளை நேசிக்கிறேன், பிதாவே, நீர் அதை அறிவீர். நான் அவர்களைக் குறித்து எப்படி நினைக்கிறேன் என்பதை நீர் அறிவீர். ஆனால் நான் நின்று தவறான ஒரு காரியத்தை அவர்களிடம் கூறினால், நான் அவர்களுக்கு ஒரு-ஒரு வஞ்சகனாக இருப்பேன். நான் என்னுடைய சகோதரிகளுக்கு ஒரு வஞ்சகனாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை; நான் அவர்களுக்கு சத்தியத்தை கூறவே விரும்புகிறேன். பிதாவே, நான் அதை சரியாக உம்முடைய வார்த்தையிலிருந்து எடுக்கிறேன்.
870. இப்பொழுது நான் என்னுடைய சகோதரர்களை கண்டனம் செய்கிறதில்லை, ஆனால் கர்த்தாவே, அவர்கள் இந்தக் காரியங்களை அனுமதிக்கும்போது, அவர்கள் தவறாயிருந்து வருகிறார்கள் என்றே நான் கூறுகிறேன். பெண்மணியோ அந்த வித்தியாசத்தை அறிந்திருந்தும், போய் அதைச் செய்திருந்தால், அப்பொழுது அது அவளைப் பொறுத்ததாயுள்ளது, அப்பொழுது போதகர் குற்றவாளியல்ல.
871. அப்பா, பிதாவே அந்தக் காரியங்கள் உம்முடைய வார்த்தையாயிருக்கின்றன, அவர்களும் உம்மிடத்தில் இருக்கிறார்கள். இப்பொழுது நீர் ஜனங்களுடைய இருதயத்தில் பேசும், நான் அவர்கள் எல்லோரையும் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். நீர் என்ன செய்துள்ளீர் என்பதை நான் காண்பேன், பிதாவே; உமக்குத் தெரியும், ஒவ்வொரு இருதயத்திலும் பேசும். நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம்.
நம்முடைய தலைகள் வணங்கிருப்பதோடு;
872. யாராவது தங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரன்ஹாம், நான் ஒரு முற்றிலும் ஜெயங்கொள்பவனாகவும், கடைசி நாளில் கலியாண வஸ்திரம் தரித்து, கிறிஸ்துவோடிருக்கும்படியாகவும் என்னை நினைவு கூரும்” என்று கூறுவீர்களா என்று நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “எனக்காக ஜெபிப்பீரா?” என்று கூறுவீர்களா?
873. ஒவ்வொருவரும் உங்களுடைய தலையை இப்பொழுது தொடர்ந்து வணங்கியவாறே அப்படியே இருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அது அருமையாயுள்ளது. அங்குள்ள உங்களை, என்னுடைய சகோதரிகளை; என்னுடைய சகோதரர்களையும் கூட, உங்களுடைய கரங்களை உயர்த்தியுள்ள உங்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. அது அற்புதமாயுள்ளது.
874. இப்பொழுது, பிதாவே, நீர் அவர்களுடைய கரங்களைக் காண்கிறீர். (நீங்கள் சில நேரத்தில், “பரவாயில்லை, வெறுமென அதைப் போல ஒரு சிறு ஜெபந்தானே?” என்று நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.) தேவனே, நேற்று அந்தத் தாய், “மூளையில் வேகமாகப் பரவக்கூடிய அந்த நோயினால் பாதிக்கப்பட்டு, மூன்று வாரம் மட்டுமே உயிர்வாழ்வதாயிருந்து, அந்தப் பையன் மரித்துக் கொண்டிருந்தபோது அவளுடைய வீட்டில் ஏறெடுக்கப்பட்ட ஒரு சிறு ஜெபம் இப்பொழுது காரியங்களையே மாற்றிவிட்டது” என்று கூறினதைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
875. நான் எசேக்கியாவைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன், அவன் தன் முகத்தை சுவர்புறமாகத் திருப்பிக்கொண்டு, “கர்த்தாவே, நீர் என்னிடத்தில் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் உம்மிடம் விண்ணப்பண்ணுகிறேன், என்னை எண்ணிப் பாரும், ஏனென்றால் நாம் உமக்கு முன்பாக ஒரு உத்தம இருதயத்தோடு நடந்துள்ளேனே” என்று கதறினான். அது மரணத்திலிருந்து ஜீவனைக்கு மாற்றினது.
876. தேவ குமாரனிடத்திலிருந்து, “லாசருவே வெளியே வா” என்ற ஒரு கூக்குரலினால் ஒரு மரித்த மனிதன் வெளிவந்தான்.
877. ஓ தேவனே, நீர், “சொல்லுங்கள், கேளுங்கள், அப்பொழுது கொடுக்கப்படும். நீங்கள் எந்தக் காரியத்தையாவது கூறும்போது, நீங்கள் கூறினது நிறைவேறும் என்றும், நீங்கள் கூறினதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள்” என்றும் கூறினீர்.
878. இப்பொழுது பிதாவே, தங்களுடைய கரத்தை உயர்த்தின ஒவ்வொருவரும், அவர்கள் தங்களுடைய கரங்களை எதற்காக உயர்த்தினார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. தேவனே, நீர் எங்களுடைய சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அதாவது அவர்கள். அவர்கள் தங்களை சரியாக நடத்திக் கொள்வார்களாக, அதாவது சாத்தான் தொலைக்காட்சி மற்றும் உண்மையான கதை என்ற பத்திரிக்கைகளினூடாக உறுதியற்ற நிலையில் இருக்கும்படி அவர்களை கையாண்டு வந்திருக்கிறான். தணிக்கை செய்யப்படாத நிகழ்ச்சிகள் மூலமாக எப்படியாய் அசிங்கமாகவும், தொலைக்காட்சி போன்றவற்றின் பேரில் கொச்சையான காரியங்களைக் கொண்டு கையாண்டு வந்துள்ளான், அது. அவர்கள் உமக்கு கோடிக்கணக்கான ஆத்துமாக்களை ஆயத்தம் செய்யும் ஒரு கருவியாயிருப்பார்களாக, ஆனால் எப்படியாய் அவைகள் தணிக்கை செய்யப்படாமல், இந்த எல்லா அசிங்கமான காரியங்களை வெளியிடுகிறார்கள். ஓ எவ்வளவு ஏளனத்துக்குரியதாயுள்ளது! பிசாசின் ஆவியானது உள்ளே வந்து எங்களுடைய சகோதரிகளை சுற்றிக்கொள்ள, அவர்களை தங்களை நாகரீகப்படுத்திக்கொள்ள முயன்று அந்தவிதமான ஆடைகளை உடுத்திகொள்கிறார்கள் என்பதை அறிந்துள்ளோம்.
879. கர்த்தாவே, எங்களுடைய சகோதரர்களும் கூட, அதாவது அவர்கள் புகைப்பிடித்து, மது அருந்தி, அதைப்போன்றதை தொடர்ந்து செய்து இன்னமும் கிறிஸ்தவர்கள் என்று தங்களை எப்படியாய் கருதிக்கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் “விசுவாசிப்பதாக” கூறிக்கொள்கிறதையும்... நாங்கள் கண்டறிகிறோம். அவர்கள், “பிசாசும் கூட விசுவாசிக்கிறான்” என்பதை அறிந்து கொள்வார்களாக. அவன் இரட்சிக்கப்படவில்லை,” அவன் விசுவாசித்து, நடுங்குகிறான்.
880. இப்பொழுது பிதாவே, நீர் எங்கள் எல்லோரிடத்திலும் இரக்கமாயிருக்க வேண்டும் என்றும், எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். சிலர் தங்களுடைய கரங்களை உயர்த்தாமலிருந்திருக்கலாம், ஓ தேவனே, இரக்கமாயிரும். ஒருகால் அவர்களுக்கு இருக்கிற அடுத்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தலாம்.
881. கர்த்தாவே, நாங்கள் இராபோஜனம் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய தப்பிதங்களையும், எங்களுடைய ஜீவியத்தின் பழங்குறைபாடுகளையும் எங்களுக்கு மன்னியும். நாங்கள் உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோமாக, ஏனென்றால் நாங்கள் இதை கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
882. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை இந்த விதமாகக் காக்கவைத்ததற்காக நான் வருந்துகிறேன். இராபோஜனத்திற்கு முன்பாக எவரேனும் ஜெபிக்கப்படுவதற்காக வருவீர்களா என்றும், ஜெபிக்கப்பட விரும்புகிறீர்களா என்றும் நான் எதிர்பார்க்கிறேன், எவரேனும் ஜெபிக்கப்படுவதற்காயிருந்தால், நாங்கள் அதை இந்த நேரத்தில் செய்ய மகிழ்ச்சியடைகிறோம்.
883. சரி, சகோதரனே, நீங்கள் அவளை இங்கே மேலே கொண்டு வாருங்கள், அது அருமையாயிருக்கும். அப்படியே ஒரு விநாடி காத்திருங்கள், அதன்பின்னர் நாம் கலைந்து செல்லப் போகிறோம். ஆகையால் நாம் கலைந்து செல்லும்போது, அப்பொழுது இராபோஜனத்திற்காக தரித்திருக்க விரும்புகிறவர்கள் தரித்திருக்கலாம். ஆனால் இப்பொழுது நாம் வியாதியஸ்தருக்காக ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம். வேதம் என்ன கூறியுள்ளது?
884. அந்த சகோதரனால் எழுந்திருக்க முடியவிலையென்றால்... பரவாயில்லை, அவர் அங்கேயே அமர்ந்திருக்கட்டும். நாங்கள் அவரிடத்திற்கு வருவோம். பரவாயில்லை, அவர் அங்கேயே அப்படியே அமர்ந்திருக்கட்டும். நாங்கள் வந்து அவருக்காக ஜெபிப்போம். அதனால் பரவாயில்லை. சரி, ஐயா, அவர் அப்படியே அங்கேயே அமர்ந்திருக்கட்டும். அவர் இங்கு வந்து நிற்பது கடினமாயுள்ளபடியால், நாங்கள் அவரண்டை வர மகிழ்ச்சியடைவோம்.
885. இப்பொழுது என்னுடைய அருமையான நண்பனே, நான் இந்த ஒரு சிறு குறிப்பினைக் கூற விரும்புகிறேன். பாருங்கள், கர்த்தர் இதை அநேக முறை திரும்பத் திரும்ப நிரூபித்திருக்கிறார் என்பதை நான் நான் அறிவேன். புரிகிறதா? நான் ஒரு பெரிய பிரசங்கியல்ல, எனக்கு கல்வியறிவு முதலியன இல்லை. நான் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். ஆனால் நான் ஒரு காரியத்தைச் செய்ய அழைக்கப்பட்டேன், அது வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதாகும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் இந்த வரத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்னர் கூட, நான் அங்கே வழக்கமாக மருத்துவமனைக்குச் சென்று ஜெபிப்பேன்; அப்பொழுது மருத்துவச்சிகளோ அவர்களிடத்தில், “இப்பொழுது நீங்கள் குணமடையப் போகிறீர்கள்” என்று கூறுவது எனக்கு நினைவிருக்கிறது. புரிகிறதா? அதாவது ஏதோ ஒரு காரியம், அதாவது தேவன் ஜனங்களுக்கான என்னுடைய ஜெபங்களைக் கனப்படுத்தும்படி மிகவும் கிருபையுள்ளவராயிருந்து வருகிறார்.
886. இன்றிரவு அது உலகளாவிய அளவில் எங்கும் பரவி அழைக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்று நான் யூகிக்கிறேன். சகோதரன் பிரன்ஹாம் அவர்களால் ஜெபிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொருவரும் இங்கே வாருங்கள், நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கத்திற்கு பதில் கூறும்படியான ஒரு கடிதத்தை கொடுக்க நான் விரும்புகிறேன் என்று கூறினால் அப்பொழுது அது ஒரு உலகளாவிய ஒளிபரப்பாயிருக்கும். அப்பொழுது அது அவ்வாறு தெரிவிக்கப்பட்டால், ஒரு கால் நாற்பது அல்லது ஐம்பது இலட்சம் ஜனங்கள் அந்த அழைப்பிற்கு பதிலளிப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். புரிகிறதா?
887. அந்த ஜனங்கள், அல்லது அவர்களில் சிலர் ஏற்கெனவே மரித்துப் போயிருக்கலாம், மருத்துவரால் கைவிடப்பட்டு, சவ அடக்கம் செய்பவரால் அடக்கம்பண்ணப்பட்டிருக்கலாம். அவர்களில் சிலர் விபத்துகளில் கொல்லப்பட்டிருக்கலாம்: அவர்களில் சிலர் ஒரு இயற்கையான மரணம் அடைந்திருக்கலாம். அவர்களில் சிலர் குருடாய், நொண்டி நடப்பவராய், முடமானவராய், கைக்கால் திருகு நிலையில் உள்ளவராய், மன நோயினால் பாதிக்கப்பட்டு... மருத்துவமனையில் இருந்து கொண்டு, நாம் அவர்களுக்காக ஜெபிக்க மருத்துவமனையில் இருந்தோம் என்பதைக் கூட அறியாதிருக்கலாம். அவர்களை உள்ளேக் கொண்டு வந்து, அவர்களை சுகத்தோடு கொண்டு செல்லட்டும். அவர்கள் தங்களுடைய வழியில் போராடி, தங்களை சின்னாபின்னமாக்கிக்கொண்டு, தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதைக் கூட அறியாதிருக்கிறார்கள். ஐந்தே நிமிடங்களில் அவர்கள் இயல்பு நிலைக்குள்ளாகி, இனிமையாய், அன்பான ஜனங்களாய், தங்களுடைய எஞ்சியுள்ள நாட்களில் தெளிந்த புத்தியோடிருப்பார்கள். புரிகிறதா?
888. அது. அது என்னவாயுள்ளது? அது சகோதரன் பிரன்ஹாம் அல்ல. அது இயேசு கிறிஸ்துவாய் உள்ளது, அவர் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி என்னை அனுப்பினார். இப்பொழுது அதுதான் இங்கு உள்ளது. அது ஜெபர்ஸன்வில் அதிக வெற்றிகரமாயிருந்து வரவில்லை, ஏனென்றால், அதற்குக் காரணம் இங்கு உள்ளது. இப்பொழுது எனக்கு இந்தப் பட்டிணத்தில் இங்கே என்னுடைய மிக நெருங்கிய, மிகச் சிறந்த நண்பர்கள் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தப் பட்டிணம் தாமே, இந்தப் பட்டிணத்தின் மாநிலத்தையே, நான் இதை விரும்புகிறதில்லை. நான் இந்த நிலைமையை விரும்புகிறதில்லை, ஒரு போதும் விரும்பினதில்லை; நான் ஒரு சிறு பையனாயிருந்தபோது, என்னுடைய சரித்திர புத்தகங்களை அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது நான், “என்றோ ஒரு நாள் நான் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிடுவேன்” என்று கூறிக்கொண்டேன். புரிகிறதா?
889. நான் ஜெபர்ஸன்வில்லை விரும்புகிறதில்லை, இது ஒரு சதுப்பு நிலமாயுள்ளது, இது இங்கே கீழே உள்ளது. இது உண்மையாகவே சதுப்பு நிலமாகவே உள்ளது, இது மிக மோசமாகவும் உள்ளது. நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், இங்கிருந்து மேலே ஸ்பிக்கர்ட் நப்ஸ் அல்லது எங்காவது உச்சியில் ஏறிச் சென்று, அங்கிருந்து நியூ ஆல்பனியையும், ஜெபர்ஸன்வில்லையும் கீழ் நோக்கிப் பாருங்கள். இங்கே பாருங்கள், மருத்துவர்களும் கூட, “இந்தப் பள்ளத்தாக்கின் நிலைமையின் காரணமாக இங்குள்ள ஜனங்கள் இரத்த சோகையுள்ளவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
890. இங்கே உள்ள ஒரு பெண்மணி திருமதி.மார்கன் புற்று நோயிலிருந்து குணமாக்கப்பட்டாள், அவள் தன்னுடைய நாயை இங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றாள், ஏனென்றால் அதற்கு சொறிபிடித்துவிட்டது என்று எண்ணிக் கொண்டாள். அது என்னவாயிருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அது கோல்கேட் என்ற இடத்தில் களைச் செடிகள் வளர்ந்து காணப்படும் இடத்தினூடாக அந்த நாய் சென்றிருந்தது. இது மிகவும் ஆரோக்கியமற்ற ஸ்தலமாகவே உள்ளது.
891. இராணுவத்தில் இருந்த ஒரு நபர் இங்கு சென்றார். அவருக்கு காச நோயிருந்தது. அவர் இங்கே பிளாரிடாவிற்கு வந்தபோது, அவருடைய கண்கள் உண்மையாகவே கருமையாகிவிட்டன, அவர் மருத்துவரிடம் சென்றார், அப்பொழுது அவர், “மருத்துவரே...” என்றார்.
892. அப்பொழுது மருத்துவரோ, “இப்பொழுது நீங்கள் ஒரு சண்டையிட்டு வந்திருக்கிறீர்கள்.
நீங்கள் சண்டையிட்டிருக்கவில்லையா?” என்று கேட்டார்.
893. அதற்கு அவர், “இல்லை ஐயா, நான் சண்டையிட்டிருக்கவில்லை” என்றார்.
894. அது யார் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அவருடைய பெயர் ஹெர்பை என்பதாகும். இப்பொழுது என்னால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும்... அது அது நியூ ஆல்பனியில் உள்ள ஐக்கிய தேசிய வங்கியில் அவர் பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவராயிருக்கிறார். அங்குபோய், “ஹெர்பை” என்று கூறுகிற ஒருவரைப் பார்த்து, அவரிடத்தில் கேட்டுப்பாருங்கள்.
895. அவர் கூறினார். அவர் சென்றார், அவர், “மருத்துவரே” என்று அழைத்து, அவர், “எனக்கு எலும்பு உட்புழை பாதிப்பு உள்ளது” என்றார்.
896. அப்பொழுது மருத்துவர் அவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு “அது உண்மை” என்றார். அவர், “நீங்கள் ஒரு சண்டையிலிருந்து வருகிறீர்கள் என்றே நான் எண்ணிக்கொண்டேன்” என்றேன். மேலும் அவர், “நீர் எங்கே வசிக்கிறீர்?” என்று கேட்டார்.
897. அதற்கு இவரோ, “நீர் அந்த இடத்தை அறியாதிருக்கலாம்” என்று கூறி, “நான் கென்டக்கியில் உள்ள ஓய்வில்லின் இந்தியானாவில் உள்ள நியூ ஆல்பனி என்று அழைக்கப்படும் ஒரு சிறு பட்டிணத்தில் வசிக்கிறேன்” என்றார்.
898. அப்பொழுது அவர், “நீர் இந்த எலும்பு உட்புழை பாதிப்பை இங்கே மியாமியிலிருந்து வருகிற உப்புத்தண்ணீரிலிருந்து பெற்றுக் கொள்கிறேன் என்று என்னிடம் பொருட்படுத்திக் கூறுகிறீரா?” என்று கேட்டார். மேலும் மருத்துவர், “நீங்கள் இந்தியானாவில் உள்ள ஜெபர்ஸன்வில்லில் வாழ்ந்துவிட்டால் அல்லது இந்தியானாவில் உள்ள நியூ ஆல்பனியில் வாழ்ந்துவிட்டால், அப்பொழுது நீங்கள் இந்த உலகில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவம் உங்களை அனுப்பும் எந்த இடத்திலும் வாழலாம்” என்றார். அப்படித்தான். புரிகிறதா?
899. அது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் சதுப்பு நில நச்சுக்காற்று வீசும் இடத்திற்கு அடுத்தபடியாக அது உலகத்திலேயே மிகவும் ஆரோக்கியமற்ற ஸ்தலமாக இது உள்ளது என்பதை நான் அறிவேன். புரிகிறதா? எனக்கு எனக்கு எனக்கு எனக்கு இங்கே நண்பர்கள் உண்டு.
900. இங்கே பாருங்கள், என்னால் இந்த விதமாக போய் அவர்களை அழைக்க முடியும். என்னுடைய நண்பர் மருத்துவர் சாம் அடேயர் அவர்களைப் பாருங்கள். சரி, அங்கே, மைக் ஈகன். அமர்ந்து கொண்டிருக்கிறார். ஓ, என்னே! எத்தனை பேரை என்னால் பெயர் சொல்லி கூற முடியும். உண்மையாகவே ஆயிரக்கணக்கான நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள், நான் சிநேகம் வைத்துள்ள என்னுடைய பழைய சிநேகிதர்கள்... எத்தனை புதிய நண்பர்களை நான் கண்டறிந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, ஆனால் அது ஒரு பழைய நண்பரின் ஸ்தானத்தை ஒருபோதும் எடுத்துக் கொள்ளாது. நீங்கள் அதை அறிவீர்கள்.
901. என்னுடைய வயோதிகத் தாயார் அங்கே பின்னால் அமர்ந்திருக்கிறார், அவர்கள் இந்த பூமியில் அநேக நாட்கள் இருக்கப் போவதில்லை, அவர்கள் இப்பொழுது தன்னுடைய அறுபது வயதினை கடந்தவராயிருக்கிறார்கள். என்னுடைய மனைவினுடைய தாயார், எழுபது வயது, எழுபத்தி ஒன்று ஆகப் போகிறது; அவரும் அங்கு எங்கோ இன்றிரவு பின்னால் அமர்ந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர்களும் பூமியிலிருந்து போகத்தான் வேண்டும். என்னுடைய தந்தையை இங்கே அடக்கம் செய்துள்ளேன்; மனைவியை இங்கே வால்நட் ரிட்ஜ் என்ற இடத்தில் அடக்கம் செய்தேன்; என்னுடைய குழந்தை அங்கே வைக்கப்பட்டுள்ளது. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா?
902. நானும் நானும் நானும் விரும்பவில்லை... நானும்நானும் நானும் நானும் இங்கே தரித்திருக்க விரும்பவில்லை, அதாவது சீக்கிரத்தில் நான் போய்விட வேண்டியதாயிருக்கப்போகிறது என்று நான் நினைக்கிறேன். பாருங்கள். காரணம் அது என்னிடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது, நான் இதை என் பிரசங்கபீடத்தின் மேலுள்ள வேதாகமத்தின் முன்னே தொடர்ந்து கூறிவருகிறேன்.
903. நான் என்னுடைய மனைவியினிடத்தில் கூறினபோது, அதாவது அவர்கள் இந்த சபைக்கு நான் திரும்பி வந்தபோது போதகர் இல்லத்தைக் கட்ட எங்களுக்கு பணத்தைக் கொடுத்த போது... இந்த சபைக்கே அந்த போதகர் இல்லத்தை சொந்தமாக கொடுத்துவிட்டேன்; அது அவ்வாறில்லையா என்று இங்கே போய் கண்டறியுங்கள். பாருங்கள், நான் அதை எனக்கென்று எடுத்துக் கொள்ளமாட்டேன்.
904. இப்பொழுது, நான் அங்கே கட்டப் போவதாயிருந்தபோது, மேடா, “நான் என்னுடைய தாயினிமித்தமாக இங்கே தங்கியிருக்க வேண்டும்” என்றாள்.
905. அப்பொழுது நான், “தேனே, நாம் நிச்சயம் அதைச் செய்யும்போது, நாம் அதைக் குறித்து வருத்தமடைவோம். புரிகிறதா? அது கிரியை செய்யாது. தேவனோ, 'வேறு பிரித்துக் கொள்' என்று கூறிவிட்டார், எனவே நான் அதைச் செய்ய வேண்டும்” என்றேன்.
906. அதற்கு அவளோ, “என்னுடைய தாயாயாயிற்றே!” என்று கூறினாள்.
907. அப்பொழுது நான், “என்னுடைய தாயையும் கூட. ஆனால் தன்னுடைய சொந்தத்தை மறந்து என்னைப் பின்பற்றாதவன் என்னுடையவன் என்று அழைக்கப்பட பாத்திரன் அல்ல” என்றாரே. அது உண்மையாயிற்றே” என்றேன்.
908. என்றோ ஒரு நாள் சீக்கிரத்தில் நான் இங்கிருந்து போகவேண்டியிருப்பதை நான் உணருகிறேன், அதாவது இதைவிட்டுப் போகப் போகிறேன். ஆனால் இங்கே இந்தவிதமாக இருந்தால் கூட்டங்கள் இங்கே சரிவர நடைபெறாது. அது வேறெங்கும் நடப்பது போன்று இங்கு நடைபெறாது, கூட்டங்களில் கலந்து கொண்டுவந்துள்ள எந்த நபருமே அது உண்மை என்பதை அறிவர், ஏனென்றால் இது இங்கே நான் பிறந்த என்னுடைய சொந்த பட்டிணமாய் உள்ளது. அதுதான் இது.
909. இயேசுவானவர் வந்த போதும், இதேக் காரியத்தைக் கூறினார்.
910. அவர்கள், “யார் இந்த நபர்? அதாவது அவர் இங்குள்ள தச்சனுடைய பையன் அல்லவா? அவர் எந்த பள்ளிக்குச் சென்றார்? அவர் இதை எங்கே கற்றுக் கொண்டார்? இப்பொழுது நீங்கள் செய்கிறதை நான் பார்க்கட்டும் நீ அற்புதங்களை இங்கே செய்தாய் என்று நீ கூறினாயே, நீ அதேக் காரியத்தை இங்கே செய்ய நான் காணட்டும். நீ கப்பர்நாகூமில் என்ன செய்தாயோ, அதை நீ இங்கு செய்ய நான் காணட்டும்” என்றனர்.
911. இயேசு கூறினார். அவர் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார். அவர் திரும்பி, “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் உள்ள தன் ஜனங்கள் மத்தியிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்று மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். அது சரிதானே?
912. நாம் அறிவோம்... பாருங்கள். பின்னி அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள், சாங்கி, மூடியை எடுத்துக் கொள்ளுங்கள்; ஜான் வெஸ்லியை எடுத்துக் கொள்ளுங்கள், பாருங்கள், அவர் தன்னுடைய தேசத்தை விட்டு செல்லும்வரை அவரால் ஒன்றுமே அதைக் குறித்து செய்ய முடியாதிருந்தது. மூடி அவர்களை நோக்கிப் பாருங்கள். மூடி பாஸ்டனில் ஒரு செருப்புத் தைப்பவராய் இருந்தபோது, அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, அவர் புகழ் வாய்ந்தவராவதற்கு முன்னரே அவர் சிக்காகோவிற்கு வந்து விட்டார். புரிகிறதா? அவர் தன்னுடைய சொந்த பட்டிணத்திலிருந்து வெளியேற வேண்டியதாயிருந்தது. நீங்கள் எப்பொழுதுமே அதைச் செய்ய வேண்டும்.
913. ஆனால் இப்பொழுது, இங்கே, நீங்கள் வில்லியம் பிரன்ஹாம் என்பதை மறந்துவிட்டால், வில்லியம் பிரன்ஹாம் இதனோடு எந்தக் காரியத்தையாவது செய்யமுடியும் என்பதை நீங்கள் மறந்துவிட்டால் தேவன் ஜெபத்திற்கு பதிலளிப்பார், (புரிகிறதா) ஒருவர் மாத்திரமே உங்களுக்காக நின்று ஜெபிக்க முடியும். அது நீங்கள் செய்யும்படி கேட்டுக் கொண்டதை ஏற்கனவே செய்துவிட்ட இயேசு கிறிஸ்துவாகும். நீங்கள் அதை அப்படியே விசுவாசித்தால் நலமாயிருக்கும். புரிகிறதா? நான் செய்வதற்கு எந்தக் காரியமும் இல்லை. அதற்கு என்னோடு எந்த சம்மந்தமும் கிடையாது, சாட்சி மாத்திரமே பகருகிறேன். ஆனால் இங்கே உங்களோடு வளர்ந்து வந்தது போலவே, எனக்கு உள்ள ஒவ்வொரு களைப்பையும், நான் செய்கிற ஒவ்வொரு தவறையும். நீங்கள் அறிந்துள்ளீர்கள். தேவன் இந்தப் பட்டிணத்தில் என்ன செய்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள்,
914. இந்தப் பட்டிணம் நியாயத்தீர்ப்பின் நாளிலே ஒரு பெரிய கிரயத்தை ஒரு நாளில் செலுத்தும், ஏனென்றால் இங்கே (அது உண்மை), சரியாக இங்கே கோடிக்கணக்கான விசேஷித்த அற்புதங்கள் நடந்து வந்துள்ளன. அடையாளங்களும், அற்புதங்களும், இங்கே கீழே தூதனின் பிரசன்னமாகுதல், மற்றும் செய்தித்தாளில் வெளியான ஒவ்வொரு காரியமும், இன்னமும் ஜனங்கள் அறியாதிருக்கின்றனர், அது ஏன்?
915. இப்பொழுது என்றோ ஒரு நாள் நான் இங்கிருந்து போகப் போகிறேன். நானோ, “என்னுடைய முடிவு என்னவாயிருக்கும்? இது முற்று பெற்றுவிட்டதா? இதைக் குறித்து என்ன? எனக்கு நாற்பத்தியெட்டு வயதாகிறது. இது ஏறக்குறைய முடிவுற்றுவிட்டதா?” என்று வியப்புற்றுக் கொண்டிருக்கிறேன். நான் இதைக் குறித்து வியப்புறுகிறேன். அது...
916. பாருங்கள், அங்குள்ள அந்த புகைப்படத்தை ஏன் உலகம் தெளிவாக உணரவில்லை? ஏன் அதைத் துரிதமாக புரிந்து கொள்ள வில்லை ? அவர்கள் ஏன் இந்த மற்றக் காரியங்களைப் புரிந்து கொள்கிறதில்லை? ஏன் அவர்கள் இந்த தீர்க்கதரிசனங்களையும் மற்றக் காரியங்களையும் புரிந்து கொள்கிறதில்லை? உங்களுக்குத் தெரியும், அவர்களால் அதை இப்பொழுது புரிந்து கொள்ள முடியாது, ஆனால் ஒரு நாள் நான் இந்த உலகைவிட்டுச் செல்லப் போகிறேன், நான் செல்லும்போது, அப்பொழுது அவர்கள் அதை அடையாளங் கண்டு கொள்வார்கள். நான் போய்விட்டப் பிறகு உங்களில் சில வாலிப ஜனங்கள் அதை தெளிவாக உணருவார்கள். புரிகிறதா? ஆனால் அது இப்பொழுது புரிந்து கொள்ளப்பட தேவன் அனுமதிக்கமாட்டார். என்னவென்பதைப் பாருங்கள்... நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். [ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.]