30. இப்பொழுது, இந்த தனிப்பட்ட பேட்டி எவ்வாறு நாங்கள் நடத்துகிறோம் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். இது அங்கொன்று இங்கொன்றுமாக, மற்றும் முதலாவதாக யார் பெருகிறார்களோ என்பதின் அடிப்படையில் இருந்தது, ஆனால் நாங்கள் அதற்கு ஒரு முறைமையை கொண்டிருக்கிறோம். ஆகவே, ஜெப வரிசைகளில் வருகின்ற அநேக மக்கள் இருக்கின்றனர், அவர்களில் துரிதமாக செல்லுகின்ற வரிசைகளில் செல்பவர், அல்லது சிலர் அதைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பவர் உள்ளனர், ஆகவே அவர்கள் கர்த்தரிடம் கேட்க விரும்புகின்றனர். இப்பொழுது, அதைக் கேட்க அவர்களுக்கு பரிபூரண உரிமை இருக்கிறது; அதற்காகத் தான் இந்த தீர்க்தரிசன வரமானது அளிக்கப்பட்டது, அந்த நோக்கத்திற்காக மாத்திரமே அது அளிக்கப்பட்டுள்ளது.
31. வேதாகமத்திலே ஏதாவதொன்றை தெரிந்து கொள்ள அவர்கள் விரும்பினால், தீர்க்கதரிசிகளிடம் சென்றனர், இவர்கள் தேவன் பதிலளிக்கும் வரை ஜெபித்து பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். என்ன, ஒரு குழுவை போஷித்து மற்றொரு குழுவை பட்டினி போடும் தேவன் அவரல்ல. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆதலால், தீர்க்கதரிசன வரம் அதற்காகத் தான் இருக்கிறது.
32. இந்த தனிப்பட்ட பேட்டிகளில், நாங்கள் ஒரு நபரின், காரியத்தை எடுப்போமானால், அதைக் குறித்து ஒரு வழியில் அல்லது மற்றொரு வழியில் தேவனிடமிருந்து அறியும் வரைக்கும் நான் அதை விடமாட்டேன். அவை சற்று தாமதமாகவே வரும். அது ஆறுமாதம் அல்லது ஒரு வருடம் கூட ஆனாலும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நாங்கள் பெறுகின்ற வரையிலும் அதிலே நாங்கள் அப்படியே தரித்திருப்போம். பாருங்கள்? ஆதலால், அவைகள் சற்று தாமதமாகவே வருகின்றன, ஆனால் ஆயிரக்கணக்கானோர் அழைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் நாங்களோ...
33. அன்றொரு நாள் பாப்டிஸ்டாகிய ஒரு மனிதன் என்னிடம் வந்திருந்தார் - இந்த மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக அநேக அநேக மாதங்களாக காத்திருந்தார் என்று நான் நம்புகிறேன். ஆனால் நாங்கள் அவரை அப்படியே விட்டு விடவில்லை, அவரை வர அனுமதித்தோம், முடிவாக தேவனுடைய கிருபையால் ஒரு தனிப்பட்ட பேட்டியில்... உள்ளே வந்தார். என்ன காரணம் என்பதை அறிய ஒரு தரிசனத்தை காண அவர் எப்பொழுதும் விரும்பினார். அப்பொழுது அந்த தரிசனம் வந்தது, அவர் தன்னுடைய நாற்காலியில் உட்கார்ந்தவாறே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்.
34. பிறகு ஒரு - ஒரு கத்தோலிக்கர், சமீபத்தில் மனமாறிய அவர், ஒரு நாளிலே சிக்காகோ நகரத்திலிருந்து தனிப்பட்ட பேட்டிகளுக்காக வந்திருந்தார். அவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக பேட்டிகளில் கலந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார்; அறையில் பதினைந்து நிமிடங்களில் நடந்த அவருடைய முதல் பேட்டியில் கர்த்தர் ஒரு தரிசனத்தை அளித்து, மற்றும் எல்லாவற்றையும், அவர் பரிசுத்த ஆவியை பெறும் முன்னர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும், முழு காரியத்தையும் வெளிப்படுத்தினார். பாருங்கள், அதற்காகத்தான் அது இருக்கின்றது.
35. இப்பொழுது, யாராவதொருவர் எந்த சமயத்திலும்… அழைப்புகள் வரும் போது, அவர்கள் வந்து பார்க்கவோ, அல்லது இந்த தனிப்பட்ட பேட்டிகளில் சந்திக்க விரும்புகிறவர்கள், பட்லர் (Butler) 2-1519 என்ற எண்ணிற்கு தொலைபேசி செய்தால், எந்த இடத்தில் தனிப்பட்ட பேட்டி நடைபெறும் என்ற சரியான தகவலை அலுவலகம் உங்களுக்கு அஞ்சல் செய்யும். மேலும், உங்களுடைய தனிப்பட்ட பேட்டி எதற்காக என்பதைக் குறிப்பிடுங்கள், அதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அப்பொழுது அது நீதியாக இருக்கும், மற்றும் ஒவ்வொரு நபரும்... அந்த ஒதுக்கப்பட்ட நேரமானது போதுமானதாக இல்லாதிருக்கும் பட்சத்தில், அப்பொழுது அந்த குறிப்பிட்ட காரியத்திற்கு நாங்கள் மறுபடியுமாக வருவோம். அது சரியாக பதிவேட்டில் எழுத்து மூலமாக பதிவு செய்யப்படும், எங்களுக்கு தேவனிடத்திலிருந்து ஒரு தரிசனத்திலோ அல்லது தேவன் பேசுகின்ற ஏதாவதொரு விதத்தினாலோ அது அறியப்படும்வரை அந்த பதி வேட்டை நாங்கள் வைத்திருப்போம். ஆகவே இந்த விதமாகத்தான் எங்களுடைய தனிப்பட்ட பேட்டிகள் நடத்தப்படுகின்றன.
36. ஆதலால், பாருங்கள், நான் வெளியே சென்றிருக்கையில், சில சமயங்களில் மக்கள் “சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் போதுமான அளவிற்கு மக்களை சந்திப்பதில்லை” என்று எண்ணுகின்றனர். மக்களை சந்தித்துக் கொண்டும் அதே சமயத்தில் தேவனோடும் இருக்கமுடியாது. புரிகின்றதா? யாரோ ஒருவரை கூர்ந்து கவனிக்கிறேன், மேலும் நான் - நான் குகையிலோ அல்லது எங்கோ ஓரிடத்திலோ ஜெபித்துக் கொண்டிருக்கிறேன், அப்பொழுது - அப்பொழுது...
37. இதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என நான் பார்க்க விரும்புகிறேன். (சகோதரன் பிரன்ஹாம் குறிப்பை மெதுவாக வாசித்துக்கொள்கிறார்- ஆசி) ஓ, ஆமாம். ஆம், ஆம் இந்த மனிதன் தான் (ஜீன் இதை இங்கே இப்பொழுது வைத்தார்) அந்த... அன்றொரு நாள் சிக்காகோவிலிருந்து ஒரு மனிதன் வந்தார், மருத்துவர் அவருடைய இருதயத்தை அறுத்தெடுத்து, இருதயத்தை திறந்து அதற்குள்ளாக இருக்கும் கோளாறு என்ன என்பதை பார்க்க வேண்டு மென்றிருந்தார். அது என்னவென்று சரியாக பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தினார், அதனால் அவருடைய இருதயத்தை அறுத்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று; அவர் சுகமாக்கப்பட்டார். ஆகவே நீங்கள் பாருங்கள், அநேக காரியங்கள் பேட்டிகளில் உள்ளது. மேலும் அது எவ்வளவு மெதுவாக வருகின்றது என்பதை உங்களுக்கு கூறுவேனானால், தேவனிடமிருந்து ஒரு பதிலுக்காக, ஒரு தரிசனத்திற்காக நானே பதினைந்து ஆண்டுகளாகக் காத்திருந்தேன். தேவன்... இன்னொருவர் வருவார், அவர் மூன்று நிமிடங்களுக்கு கூட காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாருங்கள்? அது.... தேவன் தம்முடைய சொந்த நேரத்தில் தான் பதிலளிக்கின்றார். அதை நாம் கட்டுப் படுத்துவதில்லை, அது தான் நம்மை கட்டுப்படுத்துகின்றது.