38. இதில் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால், ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிராத ஒரு சபைக் கூட்டத்தில் அவர்கள் ஊழியம் செய்யும்போது தேவன் அவர்களோடு கிரியை செய்வாரா என்றறிய இந்த நபர் விரும்புகிறார். அப்படி இருக்குமோ என்று சந்தேகங் கொள்கிறேன்.
39. அருமையான நண்பரே, கர்த்தர் உங்கள் மூலமாக பலனுள்ள வகையில் கிரியை செய்வாரா என்று நான் மிகவுமாக சந்தேகங் கொள்கிறேன், ஏனெனில் நீங்கள் அவிசுவாசிகள் மத்தியில் இணைக்கப்பட்டுள்ளீர்கள், வேதாகமமானது, “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் உங்களை பிணைத்துக் கொள்ளாதீர்கள், ஆனால் அவர்கள் மத்தியிலிருந்து வெளியே வந்து, வேறு பிரிக்கப்பட்டவர்களாயிருங்கள், என்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்” என்று கூறுகின்றது. நீங்கள் ஒரு நகரத்தில் வசிப்பீர்களென்றால், அடையாளங்களில் மற்றும் ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிருக்கும் ஒரு சபை அங்கே இருக்குமானால், அவைகள் உங்கள் மீது கிரியை செய்து கொண்டிருக்குமானால், அதை விசுவாசிக்கின்ற அந்த சபைக்கு நானே செல்வேன்.
40. மற்றொரு காரியத்தையும் நான் கூறுவேனாக, நான் வழக்கமாக அளிக்கின்ற- ஒரு வேதவசனத்தை அளிக்க விரும்புகிறேன். அருமை நண்பரே, எப்படியாவது இந்த மக்கள் விசுவாசிக்க வேண்டுமென்று உங்களாலான சிறந்த முயற்சியை நீங்கள் மேற்கொண்டீர்கள், அவர்கள் விசுவாசிக்க வேண்டு மென்று உங்களாலான சிறந்த முயற்சியை நீங்கள் மேற் கொண்டீர்கள், அவர்கள் விசுவாசிக்க வேண்டு மென்று முயற்சி செய்தீர்கள், ஆனால் அவர்களோ அதை அப்படியே செய்வதற்கு விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம். அப்படியானால், கர்த்தராகிய இயேசு நமக்கு அளிக்க விரும்புகின்றார் என்று நான் விசுவாசித்து நான் உங்களுக்கு ஒரு வேதவசனத்தை அளிக்கப் போகிறேன்.
41. நீங்கள் முயற்சி செய்திருந்தால், நீங்கள் அந்த மேய்ப்பரிடம் பேசியிருந்தால், நீங்கள் அவர்களில் அநேகரிடம் பேசி அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டு அவை விசுவாசிக்காமல் இருந்தால், இங்கே மத்தேயு 7:6 ல் அதைக் குறித்து இதைத் தான் இயேசு கூறியுள்ளார்.
பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களை பன்றிகள் முன் போடாதேயுங்கள். போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
42. ஆதலால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முழு சுவிசேஷத்தையும் விசுவாசியாமல், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசியாமல் இருக்கின்ற ஒரு சபைக் கூட்டத்தோடு நான் இணைந்திருப்பேனா என்பது சந்தேகம் தான். நான் ஒரு சபைக்கூட்டத்தில் உட்கார்ந்து அவர் கிரியை நடப்பிப்பதை அவர் கூறின விதமாகவே அவர் செய்கிறதை நான் பார்க்கையில், நான் மக்களிடம் இப்படிப் பட்டவைகளிலிருந்து வெளியே வந்து, எல்லா வேதவசனங்களையும் பிரசங்கம் செய்து அவைகளை விசுவாசிக்கும் ஒரு நல்ல சபையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் கூறுவது சரியெனக் காட்டுகிறது.