43. இதன் பேரில் ஐந்து மணி நேரம் விவாதிக்கலாம். நீங்கள் கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு தண்ணீர் ஞானஸ்நானத்திற்காக ஆயத்தமாயிருக்கையில்; நீங்கள் இன்னுமாக குணப்படவில்லை; நீங்கள் மனந்திரும்புதலுக்காக விசுவாசிக்கிறீர்கள். மனந்திரும்புதல் என்றால், "மாற்றப்படுவதற்காக” என்பதாகும்.
44. இப்பொழுது, இதை இன்னுமாக வலியுறுத்தத்தக்கதாக, தம்மை 3½ ஆண்டுகளாக பின்பற்றி வந்த பேதுருவிடம் இயேசு. மத்தேயு 10 வது அதிகாரத்தில் இயேசு பேதுருவிற்கு வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்கவும், சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும், அசுத்த ஆவிகளை துரத்த, அவைகளுக்கு எதிராக பிரயோகிக்க வல்லமையை அளித்தார். பரிசுத்த யோவான் 17:17ல் பேதுருவை சத்தியத்தின் மூலமாக பரிசுத்தப்படுத்தி, வசனமே சத்தியம் என்றும், அவர் தான் அந்த வார்தை என்றும் கூறினார். பிறகு - பெந்தெகொஸ்தேவிற்கு முன்னர் அவர், “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்று கூறினார். நீங்கள் விசுவாசித்து மாற்றப்படத்தக்கதாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
45. இப்பொழுது, உங்களில் அநேகர், என்னுடைய பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் நண்பர்களாகிய உங்களை அறிவேன், ஏனெனில் நீங்கள் இந்த வேதவசனத்திற்கு திரும்பிச் செல்கையில்.... இப்பொழுது, இங்கே தான் இதை நான் ஆணித்தரமாக கூற வேண்டியவனாக இருக்கிறேன். பாருங்கள்? நீங்கள் வேத வசனத்திற்கு திரும்பிச் செல்லுங்கள்; ஆபிரகாம் (ரோமர் 4) தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக கொடுக்கப் பட்டது அல்லது எண்ணப்பட்டது. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், ஆகவே தேவன் அவனுடைய விசுவாசித்தின் அடிப்படையில் அவனுக்கு அதை நீதியாக எண்ணப்படச் செய்தார். ஆனால் ஆபிரகாமை நிரூபிக்க, அவர் அவனுக்கு (பண்புக்குரியவனாக குறித்துக்காட்டப்படுதல், அவன் அவனுடைய பாவத்திலிருந்து பண்புக்குரியவனாக குறித்துக்காட்டப்பட்டான், பிறகு அவர் அவனை அவனுடைய பாவத்திலிருந்து கொண்டு வந்தார்), ஏனெனில் அவன் விசுவாசித்திருந்தான், அவர் அவனுக்கு ஒரு அடையாளத்தை அளித்தார். இங்கே தான் என் அருமையான பிரஸ்பிடேரியன் மற்றும் பாப்டிஸ்டு நண்பர்களாகிய நீங்கள் அதைக் காணத்தவறுகிறீர்கள். பாருங்கள்? தம்மில் அவன் கொண்டிருந்த விசுவாசத்தை அவர் பெற்றுக் கொண்டார் என்பதன் ஆதாரமாக, ஒரு சாட்சியாக, விருத்த சேதனத்தின் முத்திரையை அவர் அவனுக்கு அளித்தார். ஆகவே அதன் காரணமாகத் தான் பவுல் அப்போஸ்தலர் 19ல் அப்பொல்லோவை தங்கள் மேய்ப்பனாகக் கொண்டிருந்த, யோவான் பிரசங்கித்த விதமாக அதை விசுவாசித்த அந்த பாப்டிஸ்ட்சகோதரரிடம், “நீங்கள் விசுவாசித்த போது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்றான். நீங்கள் பாருங்கள், அவர்கள் விசுவாசித்திருந்தனர். ஆனால் இன்னுமாக அவர்கள் குணப்படாதிருந்தார்கள்.
46. இப்பொழுது, நாம் மாற்றம் என்ற வார்த்தையை இன்றைக்கு தவறாக அர்த்தங்கொள்கிறோம். ஒரு மனிதன் மது அருந்துவதை நிறுத்தி மற்ற எல்லாவற்றையும் நிறுத்தி சபைக்கு சென்றால் அல்லது சபையை சேர்ந்து கொள்வானானால் அவன் மாற்றப் பட்டவன் என்று நாம் கூறுகிறோம். ஒருக்கால் அவன் சபையை சேர்ந்து கொள்ளலாம், ஆனால் அவன் மாற்றப்பட்டான் என்பதற்கான அடையாளம் அதுவல்ல. அவனுடைய பழைய ஜீவியமானது மரித்து பிறகு கிறிஸ்துவுக்குள்ளாக அடக்கம் பண்ணப்பட்டு புதியதான ஜீவியத்தின் உயிர்த்தெழுதலில் அவருடன் எழுந்து, பரிசுத்த ஆவியின் மூலமாகவே வருகின்றதான நித்திய ஜீவனின் ஜீவிக்கின்ற நம்பிக்கையை பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள்ளாக உருவாக்கும் வரை அவன் மாற்றப்படவில்லை. பாருங்கள்?
47. இப்பொழுது, இப்பொழுது, அந்த மகத்தான வேத வசனத்தை நான் அறிவேன், நானே அதை பிரயோகிக்கிறேன் - இங்கே அதை எழுதி வைத்துள்ளேன்- பரி. யோவான் 5வது அதிகாரம், 24 ஆம் வசனம். இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஏனெனில் இயேசு இதைக் கூறினார்: “மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், “என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” இதை நான் வாசிக்கட்டும். ஏனென்றால் அதை நான் சரியாக வாசிக்கையில் - பரி. யோவான் 5 இந்த வேத வசனத்தை நாம் பார்க்கையில் நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், 5:24வது வசனம்.
என் வசனங்களைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
48. “என்னை விசுவாசிக்கிறவனுக்கு.' இப்பொழுது, பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவை கிறிஸ்து என்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும் வேத வசனம் கூறுகின்றது. ஆகவே நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறும் வரைக்கும் இயேசுதான் கிறிஸ்து என்று உங்களால் விசுவாசிக்க முடியாது. மேய்ப்பர் என்ன கூறுகிறாரோ அதையோ, உங்கள் தாய் என்ன கூறுகிறாரோ அதையோ அல்லது யாரோ ஒரு அருமையான பிரசங்கி கூறுவதை மாத்திரமே அவர்கள் கூறுகின்ற வேதவாக்கியங்களையே நீங்கள் கூறவோ அல்லது சாட்சி கொடுக்கவோ செய்கிறீர்கள். அவர் தம்முடைய உயிர்த்தெழுதலை உங்களுக்கு சாட்சியாய் அறிவிக்கும் வரை உங்களால் அதை அறிந்து கொள்ள முடியாது. பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவை கிறிஸ்து என்று ஒருவனாலும் சொல்ல முடியாது.
49. ஆதலால், கேள்வி என்னவென்றால், ஒரு மனிதன் இரட்சிக்கப்படவேண்டுமென்றால், அவன் கல்வாரியை நோக்கி பார்த்துக் கொண்டே, அந்த நிலையிலேயே அவன் மரிப்பானென்றால், அவன் இரட்சிக்கப்படுவான். நிச்சயமாக, அவன் இரட்சிக்கப்படுவான் என்று நான் விசுவாசிக்கிறேன். முன்பு அவன் ஒரு தருணம் பெற்றிராவிடில், அவன் கடந்து செல்வான் என்று விசுவாசிக்கிறேன். ஆனால் அது சிலுவையில் மரித்துக் கொண்டிருந்த அந்த கள்ளனைப் பாருங்கள். நினைவில் கொள்ளுங்கள், அதுதான் அவனுக்கு முதலும் முடிவான தருணமாயிருந்தது. நீங்களோ இந்த இரவைப் பெற்றிருக்கின்றீர்கள். உங்களுக்கு ஒரு இரவு இருக்குமானால் அந்த நேரம் வரைக்கும் நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டாம், ஏனெனில் உங்களுக்கும் அந்த விதமாகவே இருக்காது. உங்களுக்கு மரணப்படுக்கையில் அறிக்கை செய்யும் தருணம் இல்லாமல் போகலாம். நான் உங்களுக்கு கூறுகிறேன், அவையெல்லாம் சரிதான், ஆனால் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது என்பது சரியானதல்ல. உங்களுடைய மரணப்படுக்கைக்காக காத்திருக்கவேண்டாம்; சரியாக இப்பொழுதே இதை ஒரு மரணப்படுக்கையாக கருதுங்கள், ஏனெனில் இப்பொழுது நீங்கள் மரித்து பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாயிருங்கள்.
இப்பொழுது, அடுத்த கேள்வி... இப்பொழுது அதன் பேரில் ஒரு கேள்வி இருக்குமானால் உங்கள் கரத்தை மாத்திரம் உயர்த்துங்கள். என்னால் முடிந்ததைச் செய்ய எனக்கு மகிழ்ச்சி.