50. இப்பொழுது, இங்கே இந்த அருமையான நபர் அவர்கள் என்ன கேட்கின்றனரோ அல்லது அல்லது அவர்கள் அதை கேட்காமலிருப்பதோ, இந்த கேள்வியை உத்தமத்தோடும் ஆழத்தோடும் கேட்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை என்று நான் நம்புகிறேன். ஆகவே நான் என் சகோதரன் அல்லது சகோதரி அல்லது யாராயிருந்தாலும், நீங்கள் எவ்விதம் கேட்டுள்ளீர்களோ அதே விதமாக நானும் மிகவும் உத்தமமாக ஆழமாக அதற்கு பதிலளிப்பேன்.
51. இப்பொழுது நீங்கள் என்னுடன் அப்போஸ்தலரின் புத்தகத்திற்கு திருப்ப நான் விரும்புகிறேன் - 42வது வசனத்திலிருந்து நாம் துவக்குவோம். அப்போஸ்தலர் 2 வது அதிகாரம், நான் கூறின விதமாக 42வது வசனத்திலிருந்து துவக்குவோம்.
52. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், பவுல் இராப் போஜனம் எடுத்ததைக் குறித்தும், பிறகு பேதுரு சென்று அதை கைக்கொண்டதை வேதாகமம் எங்கே கூறுகிறது என்பதை என்னால் சரியாக கூறமுடியும் என்று நான் விசுவாசிக்கவில்லை; ஆனால் அவர்கள் சபையைக் குறித்து பேசும் பொழுது, ஒன்றாக இருந்த எல்லாரைக் குறித்தும் என்றே காணப்படுகிறது. பவுல் ஒன்றைப் பிரசங்கித்து, பிறகு அவன் செய்யாததை, மற்றவர்களிடம் செய்யுமாறு கூறியிருப்பான் என்பதை நான் விசுவாசிக்க வில்லை. ஆகவே அப்போஸ்தலர்களில் இதை நாம் காண்கிறோம்:
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும்.... அந்நியோந்நியத்திலும்... (கவனியுங்கள்! சரீரமாகிய முழு சபை)... அப்போஸ்தலருடைய உபதேசத்திலும் மற்றும் அந்நியோந்நியத்திலும்.... (மற்றும், (and) அங்கே வாக்கியத்திற்கு இடையே வரும், இணைச் சொல் (Conjuction) பாருங்கள்?) (ஆங்கில வேதாகமத்தில் உள்ளபடியே- தமிழாக்கியோன்). அப்பம் பிட்குதலிலும்... (அது தான் இராப்போஜனம்) ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
53. பிரசங்கிகளாயிருந்த அந்த அப்போஸ்தலர்கள். தங்கள் உபதேசத்திலும், அப்பம் பிட்குதலிலும் (இராப்போஜனம்), அந்நியோந்நியத்திலும் மற்றும் ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அப்படியானால், அப்போஸ்தலரிடமிருந்து அது இராப்போஜனத்தை எடுத்துப்போடுமென்றால், அது அப்போஸ்தலரிடமிருந்து ஜெபத்தையும் கூட எடுத்துப்போட்டு விட்டதென்பதாகும். பாருங்கள்? நாம் இன்னுமாக தொடர்ந்து வாசிப்போம். பாருங்கள்.
எல்லாருக்கும் பயமுண்டாயிற்று, அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்.
காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து.... (அது அப்போஸ்தலர்கள் மற்றும் எல்லாரும்). அப்பம்பிட்டு ...(அவர்கள் கூடின ஒவ்வொரு தடவையும் இராப்போஜனம்)...
54. அது தான் ஆதி சபையின் மற்றும் அப்போஸ்தலர்களின் உபதேசமாக இருந்தது, அது, அவர்கள் ஒவ்வொரு தடவையும் ஒன்று கூடினபோது இராப்போஜனத்தை கைக்கொண்டார்கள். ஒவ்வொரு தடவையும்! இப்பொழுது, கிறிஸ்தவ சபைக்கு போகின்ற கிறிஸ்தவ மக்களாகிய உங்களை நான் அறிவேன் (நாம் அறிந்துள்ளபடி அந்த காம்பெல்லைட்சபை... அவைகளில் இரண்டு உள்ளன, ஒன்று கிறிஸ்துவின் சபை ஸ்தாபனம், மற்றொன்று தான் காம்பெல்லைட் சபை), நீங்கள் “நாங்கள் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் அதைக் கைக்கொள்ளுகிறோம். அதன் பேரில் இருக்கிற வேத வசனம் கூட எங்களுக்கு தெரியும்” என்று கூறுகிறீர்கள். நீங்கள் பிரன்ஹாம் கூடாரம் செய்வதை விட அதற்கு மேலான ஒரு வேத வசனத்தை கொண்டிருக்கிறீர்கள். பிரன்ஹாம் கூடாரம் அதை மாதத்திற்கு ஒரு தடவை கைக்கொள்கிறது. ஆனால் வேதாகமம் நீங்கள் கூடிவரும் போதெல்லாம் என்று கூறுகிறது. அது சரி. அது ஒவ்வொரு தடவையும்.
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்தில் தொடர்ந்து அநுதினமும் தரித்திருந்து... வீடுகள் தோறும் அப்பம் பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத் தோடும் போஜனம் பண்ணினர்.
55. பாருங்கள், ஒவ்வொரு தடவையும் அப்போஸ்தலர்கள் தேவாலயத்தில் ஜெப குழுக்கள், கூட்டங்களை நடத்தி, ஒவ்வொரு வீடாக, அவர்கள் கூடிவந்த போதெல்லாம் அப்பத்தைப் பிட்டு இராப்போஜனத்தைக் கைக்கொண்டனர்.
56. இப்பொழுது, பவுல், ஒன்று கொரிந்தியரில், இராப்போஜனத்தின் போது இங்கே நாம் வாசிக்கின்ற, அந்த 11வது அதிகாரத்தையும் கூட நாம் வாசிப்போம்... நாம் அதை வாசிப்போம்... நான் அதை வாசிக்கிறேன், அதினால் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும், ஒன்று கொரிந்தியர் 11வது அதிகாரம். இப்பொழுது பவுல் பேசுவதைக் கவனியுங்கள், 23வது வசனம்.
நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன்; என்னவெனில் கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று ராத்திரியிலே அப்பத்தை எடுத்து
ஸ்தோத்திரம் பண்ணின பிறகு அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
போஜனம் பண்ணின பின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தை எடுத்து:... (இப்பொழுது பாத்திரம்)... இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம் பண்ணும் போதெல்லாம் என்னை நினைவு கூரும் படி இதைச் செய்யுங்கள் என்றார்.
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தை தெரிவிக்கிறீர்கள்.
57. பார்த்தீர்களா? இது தான் இராப்போஜனம். ஜீவிக்கிற வார்த்தையாகிய கர்த்தருடைய சரீரமானது, கிறிஸ்து தாமே என்பதை நாம் உணர்ந்து அதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஞானஸ்நானம், கால்கழுவுதல் மற்றும் மற்றைய சபை ஒழுங்குகளைப் போன்றே இவைகளும் அடையாளங்கள் தான். ஆனால் அப்பம், அப்பமும் திராட்சரசமும் ஒரு இராப்போஜனத்திற்கு முற்றிலுமான அத்தியாவசியமான தேவையாகும்.
இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ...
58. இப்பொழுது, இங்கே கேட்கப்பட்ட கேள்வியானது: “நீங்கள் திராட்சரசமும் பிஸ்கட்டுகளும் எடுப்பது, வியாதியும் நித்திரையும் உங்கள் மீது...” பாருங்கள் அது... இந்த கேள்வி என்ன என்று நான் நினைப்பதென்ன வென்றால், இருக்கின்ற ஒரேயொரு தொழுது கொள்ளுதல் என்னவெனில், பரிசுத்த ஆவிக்குள் மாத்திரமே, பரிசுத்த ஆவிக்குள் தொழுது கொள்வது. சரியாக அதுதான் சத்தியமாகும். நீங்கள் தொழுதுகொள்ள வேண்டியது... பரிசுத்த ஆவிக்குள் எல்லா தொழுது கொள்ளுதலும், மேலும் பவுல் இங்கே கூற விழைவது என்னவெனில், இதை புசித்து பானம் பண்ணும் முன்னர் நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் இருக்க வேண்டும், இல்லையெனில் உங்களுக்கு தானே ஆக்கினைத் தீர்ப்பு வரும்படிக்கு ஆகும் என்பதே (சரியா?) - நீங்கள் இதைச் செய்யும் முன்னர், இந்த கட்டளையானது கைக் கொள்ளப்படும் முன்னர்.
59. இப்பொழுது, அதற்கு இன்னுமாக கூறத்தக்கதாக, இங்கே ஜோசபஸ் என்பவர் எழுதியுள்ள ஒன்றை நான் இங்கே வைத்துள்ளேன். அதில் அவர், ஆதி கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணத்திற்குப் பிறகு, மனித மாம்சம்தின்பவர்கள் என கருதப் பட்டனர், ஏனெனில் அவர்கள் கர்த்தருடைய சரீரத்தை எடுத்து அதைப் புசித்தனர் என்று எழுதியுள்ளார். அவர்கள் (சீஷர்கள்) அவருடைய கல்லறையைத்தோண்டி, அவருடைய சரீரத்தை எடுத்து, அதைத் துண்டுகளாக்கி அதைப் புசித்தனர் என்று அவர்கள் (ஜனங்கள்) நினைத்தனர். இது அவர்கள் இராப்போஜனம் எடுத்ததைக் குறித்ததே ஆகும். பாருங்கள்?
இப்பொழுது, கவனியுங்கள், ஏன் இந்த வேத வசனம் - இங்கே எப்படி பவுல் கூறுகிறான் என்று பாருங்கள்.
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து,...
60. அப்பத்தில் புசித்து. இப்பொழுது, இயேசுதான் ஜீவ அப்பம் என்பதை நான் அறிவேன்; அது உண்மை . ஆனால் இது ஞானஸ்நானத்தைப் போன்றே ஒரு அடையாளம் ஆகும். ஞானஸ்நானம் உங்களை இரட்சிக்காது; நீங்கள் இயேசு கிறிஸ்துவினுடைய மரணம், அடக்கம் உயிர்த்தெழுதலில் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சபையாருக்கு சாட்சியாக அறிவிப்பதின் அடையாளம்தான் ஞானஸ்நானமாகும். அது உங்களை இரட்சிக்காது. தண்ணீர் உங்களை இரட்சிக்காது. உங்களை இரட்சிப்பது உங்கள் விசுவாசம் மாத்திரமே. ஆனால் ஞானஸ்நானம் என்பது ஒரு கட்டளை ஆகும், அது செய்யப்பட வேண்டும், ஏனெனில் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்று கூறிய பிறகு மறுபடியுமாக அப்படி செய்யத் தேவை இல்லை என்று தேவனால் கூற முடியாது. அதே போன்று இராப்போஜனம் எடுங்கள் என்று கூறிய பிறகு மறுபடியுமாக அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவரால் கட்டளையிட முடியாது. நீங்கள் அதைக் கைக்கொள்ளத் தான் வேண்டும். அது தேவனோடு இருக்கின்ற மாறாத ஒரு கட்டளை ஆகும்.
என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.
61. இப்பொழுது, உங்களால் காண முடிகிறதா? கிறிஸ்துவுக்குள்ளாக இல்லாமல், ஆவியில் ஐக்கியங்கொள்ளாதிருக்கின்ற ஒரு கிறிஸ்துவன் இராப்போஜனத்தை எடுக்க முயற்சிப்பதைக் குறித்து தான்; அவன் எடுக்க தகுதியுடையவன் அல்ல. மேலும் அவன் சென்று புகை பிடித்து, பொய் சொல்லி, திருடி, விபச்சாரம் அல்லது அதைப் போன்றதைச் செய்து, அல்லது ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தை செய்யாமல் இந்த இராப்போஜனத்தை எடுப்பானானால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். அவன் ஜீவிக்கின்ற அந்த ஜீவியத்தை மக்கள் காண்கிறார்கள். பிறகு அவன் உள்ளே வந்து, கிறிஸ்துவின் சரீரம் மற்றும் மற்றும் மரணத்திற்குரிய இந்த கட்டளையை, ஒழுங்கை எடுத்து, வார்த்தையாகிய கிறிஸ்துவை தன்னுடைய இருதயத்தில் ஏற்றுக் கொண்டான் என்னும் அடையாளத்தை அவனுக்குள் எடுக்கையில், அங்கே இருக்கின்ற அந்த அடையாளத்தை எடுக்கையில், அவன் கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.
62. இன்னும், சில நிமிடங்களில் அந்த அதே கேள்வியை நான் எடுக்கபோகிறேன், நாம் அதை எடுப்போமானால், அது பரிசுத்த ஆவியின் தூஷணத்தின் அதே வரிசையில் வருகிறது. பாருங்கள்? ஏனெனில் ஏதோ ஒன்றை வெளிப்படையாக பிரசங்கித்து பிறகு நீ செய்யக்கூடாததை செய்வாயானால் நீ ஒரு மாய்மாலக்காரனாகக் காணப்படுகின்றாய். சரி! இதை நான் முடிக்கட்டும், பிறகு நாம் நிறுத்துவோம்.
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
நாம் நியாயந்தீர்க்கப்படும் போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
ஆகையால் என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள் (இப்பொழுது கவனியுங்கள்)... ஒருவனுக்கு பசியிருந்தால்,
63. உள்ளே வரவேண்டாம். ஏனெனில், இங்கே மற்றுமொரு வேதவசனத்தில், அவர்கள் இறைச்சியை, இவ்வளவு பானத்தை இன்னும் அதைப் போன்றவற்றை, உள்ளே கொண்டு வந்து, கர்த்தருடைய வீட்டை புசிக்கின்ற இடமாக ஆக்கி, கர்த்தருடைய போஜன பந்தியில் குடித்து வெறித்த நிலையில் இருந்தனர். இங்கே கொரிந்தியர் புத்தகத்தில் அது இருப்பதை நீங்கள் நினைவில் கொண்டுள்ளீர்கள். கர்த்தருடைய போஜனபந்தியில் குடித்து வெறித்திருந்தனர். ஆனால் பவுல் இங்கே கூறுகிறான்:
நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடி வராதபடிக்கு, ஒருவனுக்கு பசியாயிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டம் பண்ணுவேன். (பாருங்கள்)
64. இப்பொழுது, நான் நினைப்பதென்னவெனில் பிஸ்கட் தின்பது... இப்பொழுது, ஒரு பிஸ்கட்டிற்கு பதிலாக வட்ட ரொட்டியை வைக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது ஒரு பரிசுத்தமான புளிப்பில்லாத அப்பமாயிருக்க வேண்டும் என்றே நான் விசுவாசிக்கிறேன், எகிப்தில் செய்யப் பட்ட அந்த புளிப்பில்லாத அப்பத்தைப்போன்று அது புளிப்பில்லாத பரிசுத்த அப்பமாயிருக்க வேண்டும். அதே போன்று இரத்தமும் குடிப்பதற்கு திராட்சைப் பழச் சாற்றை உபயோகிக்க கூடாது, அது திராட்சை ரசமாக இருத்தல் அவசியம். திராட்சை பழச்சாறானது (Grape Juice) பழையதாகும் போது புளிப்பாகும், பிறகு கெட்டுப்போகும். ஆனால் திராட்சை ரசமோ (Wine) பழையதாகுகையில் இன்னுமாக சிறப்பையும் வீரியத்தையும் பெறும்; அது தன்னுடைய சக்தியை இழக்காது. கிறிஸ்துவின் இரத்தமும் புளித்து கெட்டுப்போகாது; அது பழையதாகையில், இன்னுமாக அது வீரியமடைந்து, ஒரு விசுவாசிக்கு நாட்கள் கடந்து செல்லச் செல்ல சிறப்பானதாக இருக்கும். ஆகவே இது திராட்சரசமும் அப்பமும்தான். இராப்போஜன அப்பமானது தங்களைத் தாங்களே அர்ப்பணம் செய்து, தேவனுக்காகத் தங்களையே அர்ப்பணித்துள்ள மக்களால் தான் செய்யப்பட வேண்டும்.
65. பாவிகள் சாபமிட்டு கூச்சல் போட்டு அசுத்தமானதை செய்து கொண்டிருந்த ஒரு சபைக்கு ஒருமுறை நான் சென்றேன், அவர்கள் இவ்வாறு செய்து கொண்டே ஒரு பழைய ரொட்டி துண்டை எடுத்து ஒரு பழச்சாறில் (Grape Wine) தொட்டு சாப்பிட்டனர். என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்தனமான ஒன்றாகும். நான் விசுவாசிப்பதென்னவென்றால் அது சரியாக வேதாகமம் கூறியுள்ளவாறே அதே விதமாகவே இருக்கவேண்டும், மேலும் வேதாகமத்திலிருந்து ஒரு இம்மியளவுகூட அது பிசகாமல், சரியாக அதே விதமாகவே தரித்திருக்க வேண்டும்.