66. யோவான் அதை ஒரு தரிசனமாகக் கண்டான், ஆனால் அதுவோ உண்மையாகவே நடந்த ஒரு சம்பவமாகும். நீங்கள் ஏசாயா. 14:12க்கு திருப்புவீர்களானால். இப்பொழுது, இவை மெதுவாகச் செல்கின்றன. ஆனால் எனக்கோ இவையெல்லாம்... இவையெல்லாம் பாடங்களாயுள்ளன. இது ஏதோ ஒரு... ஒருக்கால் நீங்கள் "நல்லது, இப்பொழுது அது எனக்கு தேவைப் படவில்லை” என்று நினைக்கலாம். தேவனுடைய வார்த்தையின் பேரில் பரிசுத்த ஆவியானவர் எப்படியெல்லாம் போஷிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. போஷிக்கப்படுதல்- அது வார்த்தையினாலேயே இருக்க வேண்டும், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையின் பேரில் மாத்திரமே போஷிக்கின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? வேதம் அவ்வாறு கூறுகின்றது, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். “ அது சரியே! ஏசாயா 14ஆம் அதிகாரம், இப்பொழுது நாம் 12ஆம் வசனத்திலிருந்து துவக்கப் போகிறோம் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது லூசிபரைக் குறித்து வாசிப்போம்.
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, ஓ லூசிபர் (ஆங்கில வேதத்தில் உள்ளபடி - தமிழாக்கியோன்)... நீ வானத்திலிருந்து விழுந்தாயே!... (வானத்திலிருந்து விழுந்தவன் - பரலோகத்தைச் சார்ந்த ஒரு தூதன்)
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, ஓ, லூசிபர், நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே நடந்து- விழ வெட்டப்பட்டாயே!
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்
நான் மேகங்களுக்கு மேலாக உயரத்தில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
67. ஆகவே நீங்கள் பாருங்கள், அது ஒரு தரிசனம் அல்ல. நிச்சயமாகவே, லூசிபர் வானத்திலிருந்து வெளியே துரத்தப் பட்டான்.
68. இப்பொழுது, ஒரு நிமிடம் புதிய ஏற்பாடு, லூக்கா 10:18ற்கு திருப்பி இயேசு என்ன கூறினார் என்பதைப் பார்ப்போம். லூக்காவின் புத்தகத்தில், இந்த கேள்விகளை புரிந்து கொள்ளயாசிப்பவர்கள், இப்பொழுது உங்கள் வேதாகமங்களை லூக்கா 10:18க்கு திருப்புங்கள்,
அவர்களை அவர் நோக்கி: ...(இயேசு பேசுகின்றார்). சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
69. பாருங்கள், சாத்தான் தேவனுடைய மூல பிரதான தூதனாவனன். ஒரு சமயத்தில் அவன் பரலோகத்தில் வாசம் செய்தான். தேவனுக்கடுத்ததாக வானங்களில் அவன் ஒரு சமயத்தில் மிகப்பெரிய நபராக இருந்தான். தேவனுடன் ஐக்கியமாக அவன் தேவனுடைய வலது கரமாக விளங்கினான், ஆகவே அவன் தன் இருதயத்தில் மேட்டிமை கொண்டவனாக ஆனான்.
70. இன்றைக்கும் மக்கள் அந்த விதமாகத் தானே ஆகின்றார்கள்? தேவன் ஒருவனை ஆசீர்வதித்து அவன் பேரில் சிறிது நம்பிக்கையை வைப்பாரானால், பிறகு அவன் எல்லாம் தெரிந்த ஒருவன் என தன்னை நினைத்துக் கொள்கிறான். பிறகு அவன் ஒரு... அவன் ஒரு ஸ்தாபனத்தையோ அல்லது வித்தியாசமாகத் தென்படுகிற ஏதோ ஒன்றையோ அவன் செய்ய ஆரம்பித்துவிடுவான். "ஓ லூசிபர்! நீ வானத்திலிருந்து விழுந்தாயே!”
71. அது... தம்மால் தொடர்பு கொள்ளக்கூடிய, ஒன்றைச் செய்ய தேவன் அழைக்கும் வரை தாழ்மையுள்ளவனாக, கீழ்ப்படிதலுள்ளவனாக அப்படியே தரித்திருக்கின்ற, தேவனால் ஆசீர்வதிக்கப்பட இயலுகின்ற வகையில் உள்ள ஒரு மனிதன், மேலும் தன்னை ஒரு தூதனாகவோ அல்லது தேவனாகவோ பாவிக்காமல், இன்னுமாக தன்னைத்தான் ஒரு மனிதனாகவே பாவிக்கின்ற ஒரு மனிதனை கண்டெடுக்க தேவன் மிகவுமாக பிரயாசப்படுகின்றார். அந்த மனிதன் ஆசீர்வதிக்கப்பட்ட உடனே, தனக்கு ஒன்று அளிக்கப்பட்டவுடன், அவன் ஒரு தேவனாக ஆக விரும்புகிறான்; ஒரு தூதனாக ஆக விருப்பம் கொள்கிறான். அவன் ஒரு மகத்தான மனிதனாக ஆக விரும்புகிறான். “நான் செய்வது தான், அது... நான் மற்றும் என் மற்றும் என்னுடையது...” அது தவறான ஒரு மனப்பான்மையாகும். தம்மால் ஆசீர்வதிக்கப்படும் வகையில் உள்ள, ஆசீர்வாதங்கள் அவன் மேல் ஊற்றப்பட்டு பிறகு - பிறகு இன்னும் அதிகமாக அவரால் ஆசீர்வதிக்கப்பட்டு, இன்னும் சிறியவனாக ஆகின்ற ஒரு மனிதனை தேவன் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார்.
72. ஆகவே நீ ஒன்றுமில்லாதவனாக ஆகும் வரை தேவனிடேமிருந்து ஒன்றும் உன்னால் இன்னுமாக பெறமுடியாது. நீ உன்னைத் தானே சிறியவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தன்னை தானே உயர்த்திக்கொள்கிறவனை தேவன் தாழ்த்தி விடுகின்றார். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளுகிறவனை தேவன் உயர்த்துகின்றார். நீ பெரியவனாக ஆகும் முன்னர், நீ சிறுவனாக ஆக வேண்டும். அப்போது உன்னாலேயே பெரியவனாக இருக்க முடியாது; உனக்குள்ளாக தேவன் பெரியவராக இருக்கின்ற வகையில் தான் நீ பெரியவனாக இருக்க முடியும். பாருங்கள்?
73. ஆகவே இன்றைக்கு லூசிபர் பூமியின் மேல் இருந்து, உலகத் தோற்றத்திற்கு முன்னே அவன் ஆரம்பித்த அந்த அதே நோக்கத்தை நிறைவேற்றத்தக்கதாக சபைக்குள் கிரியை செய்து முயற்சித்துக் கொண்டிருக்கிறான். லூசிபர் வானத் திலிருந்து வெளியே உதைத்து தள்ளப்பட்டான். சரி.
74. இதைக் குறித்து வேறொன்றும் உள்ளதென்று நான் நம்புகிறேன், எசேக்கியல் 28 ஆம் அதிகாரம், 12 வது வசனம். எசேக்கியல் 28: 12 என்ன கூறுகிறதென்று நாம் பார்ப்போமாக. ஆகவே இதை நாம் ஆராய்கையில், கர்த்தர் உரைக்கிறதாவது என்ன என்பதை நாம் காண்கையில், அப்பொழுது உண்மையாகவே அவன் வானத்திலிருந்து விழுந்தானா அல்லது அது ஒரு தரிசனம் தானா என்று நாம் அறிந்துகொள்ளலாம் - 28 மற்றும் 12. சரி. 28:12, இதைத்தான் குறித்து வைத்துள்ளேன் என்று நான் விசுவாசிக்கிறேன். சரி. இங்கே நாம் ஆரம்பிப்போம்.
இப்பொழுது, இங்கே இது ஒரு மகத்தான காரியமாகும்; இதன் பேரில் சிறிது பிரசங்கிக்க நமக்கு சமயமிருந்தால் நலமாயிருக்கும் என்று விரும்புகிறேன். (புரிகின்றதா?), ஏனெனில் உண்மையாகவே ஏதோ ஒன்று உள்ளது.
75. இப்பொழுது, வானத்தில் லூசிபர் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள முயற்சித்ததையும், தன்னுடைய எஜமானனுக்கும் மேலாக சிறிது பெரியவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி, இதன் பேரில் அடிப்படையாகக் கொண்டு பேச முற்பட்டேன். ஆகவே அவன் மிகாவேலுக்கு துரோகம் செய்து தனக்காக வடக்கில் ஒரு பெரிய இராஜ்யத்தை உண்டாக்கிக் கொண்டு கீழே வந்தான். இப்பொழுது அவனும் அவனுடைய தூதர்களும் வெளியே தள்ளப்பட்டார்கள்.
அந்த நபர் கேட்டது வெளிப்படுத்தல். அது வெளிப்படுத்தல் 12, பத்மு தீவில் கண்டது. ஆனால் இப்பொழுது இங்கே 12 வது வசனத்தை கவனியுங்கள், அவன் மனிதனுடைய இராஜ்யத்தில் எப்படி அவன் உட்கார்ந்துள்ளான் என்று கவனித்துப் பாருங்கள்.
76. வானத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு தேசத்தையும் பிசாசானவன் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான் என்பதை இங்கே எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அமெரிக்காவை இயக்கிக் கொண்டிருப்பது பிசாசுதான். அமெரிக்க ஐக்கிய நாட்டினுடைய அரசாங்கம் பிசாசுதான். ஜெர்மனியின் அரசாங்கம் பிசாசுதான். வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாட்டையும் இயக்கிக் கொண்டிருப்பது பிசாசுதான். அவன் ஒவ்வொரு நாட்டையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான் என்று வேதாகமம் கூறுகின்றது. மத்தேயு 4ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். சாத்தான் இயேசுவை உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவருக்கு காண்பித்து, அவைகள் தன்னுடையவை என உரிமை கோரி, “நீர் என்னை பணிந்து கொண்டால் இவற்றை உமக்குத் தருவேன்” என்று கூறினான். “சாத்தானே, நீ பொய் சொல்கிறாய்” என்று இயேசு கூறவேயில்லை. அவை யெல்லாம் அவனைச் சார்ந்திருந்தன என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் வெளிப்படுத்தல் புத்தகத்தில் “வானங்களே, பூமியே களிகூருங்கள், உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தரும் அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின. அவர் பூமியின் மேல் ராஜ்யபாரம் பண்ணுவார்” என்று கூறப்பட்டுள்ளது.
77. ஆயிரவருட அரசாட்சியில் எல்லா அரசாங்கங்களும் ராஜ்யங்களும் உடைந்து போகும் என்றும், அவைகளெல்லாவற்றின் மேலும் அவர் தேவனும், அதிபதியுமாயிருப்பார் என்றும் இயேசு அறிந்திருந்தார். அவையெல்லாவற்றிற்கும் சுதந்திரவாளி அவர் தான் என்று அறிந்திருந்தார், ஆதலால், அவர் சாத்தானிடம் “அப்பாலே போ சாத்தானே!” என்றார், ஏனெனில் தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அவர் அறிந்திருந்தார்.
இப்பொழுது இதைக் கவனியுங்கள், இந்த தீர்க்கதரிசி எசேக்கியேல்மேலிருந்த கர்த்தருடைய ஆவியானவர், இந்த ராஜாவிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை, ஆனால், அந்த ராஜாவிற்குள்ளிருந்த ஆவியிடம் பேசிக் கொண்டிருந்தான். இதை கவனியுங்கள்.
78. எப்படி சபையானது மனிதனுடைய ஸ்தாபனங்களை எடுத்துக் கொண்டதினால் தவறான பாதையில் சென்றுவிட்டது என்று நான் இன்று காலை வேத வசனங்களில் காண்பித்தது உங்களுக்கு நினைவிலிருக்கும். அதே காரியம் தான், இஸ்ரவேலானது தேவனை தன்னுடைய ராஜாவாக இராதபடி புறம்பாக்கி, சவுலை ராஜாவாக கொண்டிருக்க விரும்பி பாதையை விட்டகன்றது. பிறகு அவர்களுடைய உண்மையான ராஜாவாகிய இயேசு வந்த போது, அவரை அவர்கள் அறியாதிருந்தனர், ஏனெனில் அவருடைய - அவருடைய பிரசங்கமும் அவருடைய உபதேசமும், பூமிக்குரிய ராஜாக்களை விட மிகவும் வித்தியாசமாக காணப்பட்டு, அவரை அவர்கள் அறியாமல் போனார்கள். இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவராகிய சபையின் ராஜா, அவர் இங்கிருக்கையில், மக்களை புதுப்பிக்கத்தக்கதாக, அவர்களுக்கு புதிய பிறப்பை அளிப்பதற்காக அவர் சபைக்குள் வருகையில், அது இந்த ஸ்தாபனங்கள் மற்றும் அமைப்புகளைக் காட்டிலும் மிகவும் வித்தயாசமாகக் காணப்படுவதால் இந்த மக்கள் “ஆ, அவர்கள் எனக்கு பரிசுத்த உருளையரைப் போன்று காணப்படுகின்றர்" என்கின்றனர். பாருங்கள்?
79. அது உனக்கு எந்த விதமாகத் தென்படுகிறது என்றல்ல, அதைக் குறித்து தேவனுடைய வார்த்தை என்ன கூறுகின்றது என்பது தான். பெந்தெகொஸ்தே நாளின் போது என்ன ஆயிற்று, அது எந்த விதமாக தென்படுகிறது? மற்ற சமயங்களில் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற போது; அது எந்த விதமாகத் தென்படுகிறது? ஸ்திரீகளும், புருஷர்களும் கன்னி மரியாள் மற்றும் அவர்களெல்லாரும் குடித்து வெறித்த மனிதனைப் போன்று தள்ளாடி, பரியாச உதடுகளாலும், மற்றும் அந்நிய பாஷைகளாலும் கூச்சலிட்டு, புரண்டு, ஒரு பைத்தியக்கார கூட்டத்தை போன்று சத்தமிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு தாங்களே மரித்துக் கொண்டிருந்தனர், அப்போது பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர்கள் உலகத்தை தீப்பற்றிக் கொள்ளச் செய்தனர். இன்றைக்குள்ள தேவையென்னவெனில் தங்களுக்குத் தாங்களே மரித்து, தங்களுக்கு தாங்களே அழுகிப்போய், ஒவ்வொரு காரியத்தையும் பின்பாகச் சுட்டெரித்து எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு சரணடையச் செய்யும் மனிதர்தான்.
80. இப்பொழுது, அந்த ராஜாவுக்குள்ளிருந்த பிசாசிடம் பரிசுத்த ஆவியானவர் பேசுவதை கவனியுங்கள். இந்த ராஜாவை கட்டுக்குள் வைத்திருந்த இவன் யார் என்பதை கவனியுங்கள். அங்கே கீழ்த்தரமான நிலையில் காணப்பட்ட ஆடைகளை அணிந்திருந்த அந்த பெண்கள் கூட்டத்தை, அந்த பெண்ணைப் பற்றி என் மனைவி கூறினதை நான் இக்காலை கூறினது உங்களுக்கு நினைவிலிருக்கிறதா? சரியா? “அவர்கள் சரியான மனநிலையில் இல்லாமல் இருந்திருக்கக்கூடும். ஒரு மனநிலை சரியாயில்லாத ஒரு பெண்தான் அந்த விதமாக தன் நிர்வாணத்தை வெளிக் காட்டுவாள்” என்று கூறினாள்.
81. நான், "தேனே, அவள் ஒரு அமெரிக்க பெண்; அவ்வளவே தான். இங்கே அது வாடிக்கையாய் நடக்கிற ஒன்றுதான்” என்றேன். பாருங்கள், அவர்கள் தங்கள் கல்வியறிவின்படி செயல்படுகின்றனர். நீங்கள் அறிவின்படி, உங்கள் சிந்தையின்படி செயல்படுவீர்களானால், நீங்கள் பிசாசினால் இயக்கப்படுகிறீர்கள். பிசாசானவன் மனிதனின் மூளையை எடுத்துக் கொண்டான், ஆனால் தேவனோ மனிதனின் இருதயத்தை எடுத்துக்கொள்கிறார். நீங்கள் ஏதோ ஒன்றைக் காணும்படியாக பிசாசானவன் செய்வான். நீங்கள் “நல்லது, அது சரிதான், அது சரிதான், யோசியுங்கள், சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறுகிறீர்கள். ஆனால் வேதாகமம் நம்முடைய யோசனைகளை புறம்பாக்கி நம்மால் காணமுடியாதவைகளை விசுவாசத்தினாலே நாம் விசுவாசிக்கிறோம். தேவன் மனித இருதயத்தின் மீது வருகையில் அதைத் தான் செய்கின்றார்.
82. ஏதேன் தோட்டத்திலே பிசாசானவன் மனிதனுடைய மூளையை எடுத்தான்: தேவனோ அவனுடைய இருதயத்தை எடுத்தார். அந்த மனித இருதயம் தான் தேவன் வாசம் பண்ணுகிற தேவனுடைய சிங்காசனமாக இருக்கின்றது. ஆகவே இப்பொழுது அது அறிவுபூர்வமாக... நிச்சயமாக, தேவனால் பிறந்த எந்த ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ , தாங்கள் எந்த இராஜ்யத்திலிருந்து வந்துள்ளனரோ அந்த விதமாகவே நடந்து கொள்வார்கள். அல்லேலூயா! அது என்னை சத்தமிடச் செய்கிறது. ஏன்? ஏனெனில் நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் வந்திருப்பதனால், நீங்கள் பாவத்தை வெறுத்து, மேலும் நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள்; ஆதலால் நீங்கள் மரித்தாலும் அல்லது மரிக்காமலிருந்தாலும் அதை எதிர்த்து நிற்பீர்கள். அது தவறாயிருப்பதால், அதை தவறு என்று கூறி அதை எதிர்த்து நின்று தேவனுக்கு முன்பாக நீங்கள் உத்தமராய் நடப்பீர்கள். அது உங்களுடைய ஆவி, உங்களுக்குள் இருக்கின்ற அந்த ஜீவனானது வேறொரு இடத்திலிருந்து வந்திருக்கிறது என்று காண்பிக்கின்றது, அங்கே அது பரிசுத்தமாகவும், சுத்தமாகவும், கற்புடையதாகவும், கறைபடாததாகவும் இருக்கிறது.
83. “தெய்வீக சுகமளித்தல்?” என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக! தெய்வீக சுகமளிப்பவர் எங்கே இருக்கின்றாரோ அங்கிருந்து தான் என்னுடைய ஆவியும் வந்திருக்கிறது. தெய்வீக சுகமளித்தலின் தேசத்திலிருந்து தான் நாம் வந்துள்ளோம். ஆமென்!
84. நீங்கள், “தேவன் இருந்த இடத்திலிருந்தா” எனலாம். நிச்சயமாக, தேவன் இருந்த இடத்திலிருந்து தான் வந்துள்ளோம். நாம் ஆபிரகாம் ஈசாக்கைப் போல பரதேசிகளும் அந்நியர்களுமாயிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் நிழலாட்டம் அவர்கள் மேல் வந்த போது அவர்கள் அந்த தேசத்தினூடாகச் சென்று தாங்கள் பரதேசிகளும் அந்நியர்களுமென்று அறிக்கை செய்தனர். தேவன் தாமே கட்டி உண்டாக்கின அந்த நகரத்தை அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர். இப்பொழுதோ, அது நமக்குள் ஜீவிக்கின்றது என்பதற்கான ஆதாரத்தை நிச்சயத்தை நாம் பெற்ற பிறகு, எவ்வளவாக நாம் பரதேசிகளும் அந்நியர்களுமாயிருந்து, உலகத்தினூடாக நடந்து, தீய காரியங்களிலிருந்து நம்முடைய தலைகளை திருப்ப வேண்டியவர்களாயிருக்க வேண்டும், ஏனெனில் நாம் வேறொரு தேசத்தைச் சார்ந்தவர்கள், அப்பாற்ப்பட்ட மக்கள். நிச்சயமாக!
85. இப்பொழுது நாம் எசேக்கியேல் 28:12 வாசிக்கையில் பிசாசானவன் இந்த உலகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை கவனியுங்கள்.
மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக் குறித்துப் புலம்பி, அவனை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது.... (இப்பொழுது கவனியுங்கள்: அந்த ராஜாவிற்குள்ளே இருந்த அந்த ஆவியிடம் அவர் பேசுகிறார். புரிகின்றதா?) ...கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்ன வென்றால் நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன்... பூரண அழகுள்ளவன். (சாத்தான், பிரதான தூதர்களிலேயே மிகவும் அழகாக சாத்தான் காணப்படுவதை பார்த்தீர்களா?) நீ ...ஏதேனில்...
86. தீருவின் ராஜா அந்த நேரத்தில் ஏதேனில் இருந்திருக்க மாட்டான், ஏனெனில் அது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒன்றாகும். பாருங்கள்? “நீ ஏதேனில் இருந்தவன்”, அவர் பேசிக்கொண்டிருப்பது யாரிடம்? அந்த ராஜாவிற்குள்ளிருந்த சாத்தானிடம் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். அல்லேலூயா! சகோதரனே, நான் பக்திவசப்படுகிறேன். அப்போது...
87. அப்படியானால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் கிரியை நடப்பிக்கப்படுகிற மக்களை தூஷித்து ஏளனம் செய்கிற மக்களைக் குறித்தென்ன? இப்படிப்பட்ட மக்களை அவர்கள் பரிகசிக்கும் போது அவர்கள் பரிசுத்த ஆவியை தூஷிக்கிறார்கள், அது முற்றிலும் மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகும். நீ அந்த மனிதனைக் குறித்துப் பேசவில்லை, அந்த மனிதனுக்குள் அசைவாடிக் கொண்டிருக்கும் ஆவியானவரிடம் தான் நீ பேசிக் கொண்டிருக்கிறாய். நாம் ஒருவருக்கொருவர் கனம் பண்ணி, ஒருவரையொருவர் நேசித்து, ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி, ஒவ்வொருவரைக் குறித்து நன்மையானதையே பேசுங்கள். இதைத் தான் நாம் செய்ய வேண்டும்.
இப்பொழுது, இதைக் கவனியுங்கள். சரி.
...நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன். பூரண அழகுள்ளவன் நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகல வித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேள வாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
88. இதோ லூசிபர். ஒரு காலத்தில் அவன் ஏதேனில் வாசம் செய்தான். இப்பொழுது, இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் அந்த கேள்வியைப் பார்க்கப்போகிறோம், ஏதேனில் லூசிபர், ஏனெனில், மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய சர்ப்பத்தின் வித்தைக் குறித்ததானது இங்கே எங்கேயோ உள்ளது. நான் அதைக் கடைசியில் பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன்.
89. ஆனால் அவன், பிசாசானவன் வானத்திலிருந்து உதைத்து வெளியே தள்ளப்பட்டான். அவன் எந்த நோக்கத்திற்காக பரலோகத்தில் பிரயாசப்பட்டானோ, அதை, அந்த நோக்கத்தை, அவன் பூமியின் மீது வந்த பிறகு, அதை நிறைவேற்றிக் கொள்ள அவன் தன்னால் இயன்ற அளவிற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவன் ராஜாக்களிடமும் அதிபதிகளிடமும் செல்கிறான். அவன் அவர்களை அடைந்தவுடன், பிறகு நேராக சபைக்கு வந்து மக்களை அல்லது பிரசங்கியை அடைகின்றான். அப்பொழுது பிரசங்கியிடமிருந்து நேராக சபையார் மத்தியில் சென்று அந்த சபையாரை அந்த அதே பாதிப்பிற்குள், செல்வாக்கிற்குள் கொண்டு வருகிறான், அந்த அதே பிசாசானவன் அதே காரியங்களைச் செய்கிறான். “உனக்குத் தெரியுமா, நீ ஒரு பிரஸ்பிடேரியன், நீ ஒரு பரிசுத்த உருளையனாக இருக்க முடியாது. நீ இது, அது அல்லது மற்றவனாக இருக்கையில் அவர்கள் மத்தியில் இருந்துகொண்டு, உன்னை நீயே ஏன் அவமானம் படுத்திக் கொள்ள வேண்டும். ஏன், அந்த தெருவில் இருக்கின்ற அந்த பழைய கூடாரங்களில் அல்லது சபைகளில் உட்காருவதைவிட சிறந்தது உனக்குத் தெரியுமே என்ன, அந்த மக்களுக்கு மனநிலை பாதித்து பித்து பிடித்திருக்கிறது. “ இல்லை, இவர்கள் அவ்விதம் இல்லை. இல்லை, அவர்கள் அவ்விதமாக இல்லை; அவர்கள் தங்கள் இருதயத்தின் படியே உள்ளனர்; அவ்வளவுதான். அவர்கள் மனநிலை பாதிக்கப்படவில்லை, அவர்கள் தங்கள் இருதயத்தின் படியே ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். தேவன் அவர்களுடைய இருதயத்தில் வாசம் செய்கிறார், ஆதலால் அவர்கள் அவருக்கு சொந்தமான ஜனம், ராஜரீகமான ஆசாரியக்கூட்டம், ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிறவர்கள். அதை உணர்ந்தாலும் அல்லது இல்லையென்றாலும் அவர்கள் தங்கள் உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளைக் செலுத்துகின்றனர். அந்தப் பாடலை எழுதினவன் “சில சமயங்களில் அவரை நான் காண்பதில்லை, நான் அவரை நம்புகிறேன், அவரைத் துதிக்கிறேன்”, என்றான்.
90. “நல்லது, நான் சபைக்குச் செல்வேன், அதை நான் உணர்ந்தால் நான் கர்த்தரைத் துதிப்பேன்” என்று நீங்கள் கூறலாம். நல்லது இப்பொழுது ஒரு ஆசாரியன் பலியைச் செலுத்தவிருக்கிறான். சபையார் தான் ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிற தேவனுடைய பிரதான ஆசாரியர்கள் ஆவர்; அது தான் உங்கள் உதடுகளின் கனிகளாகிய தேவனுக்கான ஸ்தோத்திரங்கள்.
91. நீங்கள் சென்று, "நல்லது, நான் அதை உணர்ந்தேன், நான் சென்று யாருக்காவது சாட்சி சொல்லுவேன்” என்று கூறலாம் நல்லது, எப்படியாயினும் அதைச் செய்யுங்கள்! ஒரு பலியைச் செலுத்த சகோதரனே, நீ ஒரு பிரதான ஆசாரியனாயிருந்தால், நீ அதைச் செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று உணர்ந்தாலும் சரி, அது உன்னுடைய இருதயத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. நீ சென்று எப்படியாயினும் அதைச் செய், ஏனெனில் நீ ஒரு பலியைச் செலுத்த வேண்டியவனாக இருக்கிறாய், செய்வதற்கு கடினமான ஒன்றுதான். எப்படியாயினும் அதைச் செய், ஏனெனில் தேவன் இந்த இருதயத்தில் வாசம் செய்வதால் நீங்கள் ஒரு ஆவிக்குரிய ஆசாரியத்துவம் உடையவர்கள்; தேவனுக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கும் ராஜரீக மக்கள்.
92. இப்பொழுது, நீங்கள் சாத்தானைச் சார்ந்தவர்களாயிருந்தால் அந்த மக்களை விட சிறிது - சிறந்தவர்கள் நீங்கள் தான் என எண்ணுவீர்கள். இப்பொழுது, எது சரியென நீங்கள் எப்படி அறிந்துகொள்ளப்போகிறீர்கள்? வேதவாக்கியங்களின்படி அதை எடுங்கள். ஒரு மனிதன் தேவனால் பிறந்தவனாக இருப்பானானால், எழுதப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும் அவன் விசுவாசிப்பான், இன்றைக்கு அவர் மகத்தானவராக இருப்பது போல என்றென்றும் அவர் இருப்பார் என்றும், அவர் மாறாதவர் என்றும், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும் அவன் கூறுவான். அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தால், பெந்தெகொஸ்தே நாளில் அவர் அளித்த அதே பரிசுத்த ஆவியை அவன் பெற்றிருக்கிறான், அதே விதமாக அது அவனை கிரியை நடப்பிக்கச் செய்து அதே காரியங்களை அவன் செய்யும்படிக்குச் செய்யும். அவன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்பானானால், மாற்கு 16ல் இயேசு, "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்று கூறினார். உண்மை! ஆகவே அவன் “நான் ஒரு விசுவாசி” என்று கூறி, அந்த அடையாளங்கள் அவனைப் பின் தொடரவில்லையெனில், அவன் ஒரு பாவனை விசுவாசியாக இருக்கிறான், ஒரு விசுவாசி அல்ல.
93. மூன்று வகையான மக்கள் உள்ளனர், ஒன்று விசுவாசி, ஒன்று பாவனை விசுவாசி, மற்றும் ஒரு அவிசுவாசி. இந்த மூன்று வகையினர் மட்டுமே உள்ளனர். அநேக பாவனை விசுவாசிகள் உள்ளனர், அநேக உண்மையான விசுவாசிகள் இருக்கின்றனர்; அநேக அவிசுவாசிகளும் இருக்கின்றனர். ஆனால் நீ ஒரு உண்மையான விசுவாசியாய் இருப்பாயானால், இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்கள் மேல் அவர்கள் காலை எடுத்து அடியெடுத்து வைக்க நேரிட்டாலும் (சகோதரன் இவான்ஸ்) அது அவர்களுக்கு தீங்கு செய்யாது. அவர்கள் வியாதியஸ்தர் மேல் தங்கள் கைகளை வைப்பார்களானால் அவர்கள் சொஸ்தமாவார்கள்!” என்று கூறினார். ஓ, தேவனுடைய வார்த்தை அவ்வளவு உண்மையானது. அதிலிருந்து எதையும் எடுத்துப் போட நமக்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த வார்த்தையோடே எதையாகிலும் எடுத்துப் போட்டால் அல்லது கூட்டினால், அவனுடையது ஜீவ புத்தகத்திலிருந்து எடுத்து போடப்படும். தேவன் மிகவும் பரிபூரணமுள்ளவர், ஆதலால் ஒவ்வொரு வார்த்தையும் பரிபூரணமாயிருந்து, ஒவ்வொரு வார்த்தையும், தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல் வரை அதே விதமாக இருக்க வேண்டும். ஆனால் நீங்களோ அதைக் குறித்து இங்கே ஏதாவதொன்றைக் கூறுவீர்கள் அல்லது சிறிது மாற்றிவிடுகிறீர்கள்.
94. ஒரு நாள் நான் சகோதரன் சார்லி மற்றும் சகோதரன் உட் அவர்களுடன் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தேன்; நாங்கள் கெண்டக்கியில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு துப்பாக்கியுடன் வேட்டையாடினோம். நான் ... சகோதரன் சார்லி சகோதரன் உட் அக்காலை தங்கள் வேட்டையை சுட்டிருந்தனர். சுமார் 50 கெஜம் தூரத்தில் அந்த பெரிய இடம், அணிலைப் போன்று பெரிய இடத்தில் ஒரு இலக்கை சுட்டுக் கொண்டிருந்தனர். "அது சரி” என்று அவர்கள் கூறினர்.
95. நான் அங்கு சென்றேன்... நான் 50 கெஜத்தில் ஆணி அடித்துக் கொண்டிருந்தேன். நான் அணிலின்கண்ணை சரியாக சுடாமல் அதன் கன்னத்தில் சுட்டு விட்டேன். நான் "அது சரியல்ல; என் துப்பாக்கி பழுதடைந்தது” என்றேன். நான் நாள் முழுவதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த மாலையில் நான் சீக்கிரமாகச் சென்றேன். அநேக குண்டுகளைச் சுட்டுப் பார்த்தேன். நான்... நான் வலது பக்கம் அதை அங்குலத்திற்கு சிறிது நான் சுட்டேன். ஏன், அது அந்த அணிலின் தலையில் எப்படியாவது சுட்டுவிடும்.
96. ஆகவே சார்லி மற்றும் அவர்களும் அடுத்த நாள் காலை அங்கு இருந்தனர், துப்பாக்கிகள் சுட்டுக் கொண்டிருந்தன, அணில்களை சுட்டுக் கொண்டிருந்தன, நானோ ஒரு மரத்தின் பின்பாக உட்கார்ந்து கைகளைப் பிசைந்து “ஓ, என் துப்பாக்கிக்கு என்ன ஆயிற்று?” என்று கூறிக் கொண்டிருந்தேன். நான் மிகவும் வெட்கப்பட்டு, முழங்காலிட்டு, "ஆண்டவராகிய தேவனே, எனக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. நீர் ஏன் இவ்வாறாக கவலைப் படும்படிக்கு விட்டுவிட்டீர்? நான் ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்? அங்கே அவர்கள் அணில்களை சுட்டு கொண்டிருக்கின்றனரே, தங்களால் முடிந்தவரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனரே. அவர்கள் ஏற்கெனவே அநேக அணில்களை வேட்டை யாடிவிட்டனர். ஆனால் நானோ இங்கே மரத்தின் பின்னால் உட்கார்ந்து கொண்டு என் கையை பிசைந்துக் கொண்டு “என்னுடைய- என்னுடைய துப்பாக்கி ஐம்பது கெஜத்திற்கு கூட சுடவில்லையே“ என்று வியந்துகொண்டிருந்தேன். அங்கே ஒரு வெட்டப்பட்ட மரத்துண்டருகே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன்.
அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வந்தார், ஒரு சத்தத்தில் அல்ல, ஆனால் வெளிப்பாட்டில் வந்து, “ஒரு நோக்கத்திற்காகவே நான் உனக்கு அந்த விதமாக நேரிடச்செய்தேன்” என்றார்
97. என்ன? வேதாகமம் இங்கே ஒன்றைக் கூறும் போது, சபையானது "பரிசுத்த ஆவி அங்கே இருக்கின்ற அந்த குழுவிற்கு மாத்திரம் தான்” என்று கூறினால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது; சபை அவ்விதமாக கூறுகிறது; வேதாகமமோ “விரும்புகிறவன் எவனெவனோ” என்று கூறுகிறது. அது இலக்கை எட்ட வைக்க என்னால் முடியாது.
98. கர்த்தர் பேரில் மாத்திரம் விசுவாசம் வையுங்கள், அப்போது உங்களுக்கு நித்திய பாதுகாப்பு கிடைத்துவிடும் என்கின்ற கால்வினிச போதகத்தையும், “நான் அதைத் தொடாமலும், கையாளாமலும், சுவைக்காமலும் இருப்பேனானால், அதைச் செய்ய எனக்கு- எனக்கு விருப்பம், ஆனால் அதை என்னால் செய்ய முடியாது!” என்கின்ற ஆர்மீனியர்களின் உபதேசமானது... ஆர்மீனிய கொள்கை கால்வினியக் கொள்கையை விட மிகவும் அகன்றுள்ளது, ஆனால் இரண்டுமே தவறான போதகங்களாகும். நான் அதை... அவர்கள் இருவருமே வேத வசனங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அது இலக்கை எட்டும் வகையில் சரியாக அமைந்திருக்க வேண்டும். இந்த வேதாகமத்தில் தேவன் ஒரு காரியத்தைக் கூறியிருப்பாரெனில், அது சரியாக இலக்கை அடிக்கத்தான் வேண்டும். அது வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வளையமும் சரியாக அந்த இலக்கு மையத்தை வந்தடைய வேண்டும். அது அப்படித்தான் இலக்கை அடைய வேண்டும், ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாகும்; அவர் முடிவற்றவர். ஆதலால் அவரால் மாறமுடியாது. ஆமென்! எனக்கு அது பிடிக்கும், ஏனெனில் அது தேவனுடைய நித்திய வார்த்தை என்று பரிபூரணமாக திருப்தியடைந்து உன்னால் இளைப்பாற முடியும். ஆதலால் தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறதென்று பார்க்கத்தக்கதாக நான் அதை பல்வேறு வேத வாக்கியங்களைக். கொண்டு ஆராய முயற்சிப்பேன். சரி.
99. தேவனாலும் பிரதான தூதனாகிய மிகாவேலாலும் சாத்தான் வானத்திலிருந்து வெளியே பிடித்துத்தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான், அவன் பூமிக்கு வந்து சர்ப்பத்திற்குள்ளாக புகுந்து கொண்டு ஏவாளை வஞ்சித்து, பிறகு மனிதன் மற்றும் பெண்களுக்குள்ளாக புகுந்து, துவக்கத்தில் அவன் ஆரம்பித்த அதே காரியத்தை காலங்களினூடாக செய்து வந்தான் ஒரு மகத்தான பெரிய இராஜ்யம், மற்றவனைக் காட்டிலும் அழகான ஒன்று, எல்லாவற்றின் மேலும் ஆளுனராக, எல்லாம் அறிந்தவனாக இருத்தல். "எங்கள் ஸ்தாபனம் தான் மிகப் பெரியது, அது - அது - அது மற்றெல்லாரையும் விட உயர்ந்த செல்வாக்கு மிக்கதாகும்”.
100. "என்ன, எங்கள் ஸ்தாபனத்தில் அநேக நூற்றுக்கணக்கான பிரசங்கிகள் இருக்கின்றனர். அங்கே நகரத்திலே மிகப்பெரிய சபைகள் எங்களுக்கு உண்டு” என்று அவர்கள் கூறுவதைக் கேட்டுள்ளீர்கள். அது எனக்கு சா-த்-தா-ன் என்று தான் எழுத்து கூட்டிச் சொல்கிறது. அது சரி. என்னைப் பொறுத்த வரை அது எனக்கு பிசாசு தான். ஒரு மனிதன் பிரிந்து, ஸ்தாபித்துக் கொண்டு, சகோதரத்துவத்தை உடைத்து இந்த சிறிய சபையுடன் ஈடுபடுவதற்கு ஒன்றுங்கிடையாது என்று கூறுகையில்...
101. கீழ்த்தரமான ஒரு நபரையும் நான் கண்டதில்லை, அல்லது பாவத்தில் மிகவுமாக உள்ள எந்த ஒரு நபரையும் நான் கண்டதில்லை; மிகவும் தாழ்ந்து கொடுக்கின்ற ஒரு பெண்ணையோ அல்லது மிகவும் தாழ்ந்து கொடுக்கின்ற மனிதனோ நான் கண்டதில்லை, நான் அவனிடம் சென்று என்ன செய்வேனென்றால், என் கரங்களை அவன் தோள் மீது போட்டு என்னால் கூடியமட்டும் அதினின்று அவனை வெளியே கொண்டு வருவேன். குதித்து கொண்டு, சத்தமிட்டுக் கொண்டு, கூச்சலிட்டுக் கொண்டு இருக்கின்ற ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்களை அல்லது நீங்கள் அவர்களை எப்படியெல்லாம் அழைக்கிறீர்களோ அங்கே சென்று அவன் கறுப்பு, மஞ்சள், பழுப்பு அல்லது வெள்ளை நிறத்தவனாயிருந்தாலும் அல்லது அவன் என்னவாயிருந்தாலும் சரி நான் அவர்களுடன் சேர்ந்து குதித்து, கூச்சலிட்டு, தேவனை மகிமைப் படுத்துவேன். ஆம், ஐயா!
102. பரிசுத்த ஆவியானவர் ஒரே சீரான நிலையில் வருகின்றார்; அங்கே தான் நீ தேவனுடைய தேவையை பூர்த்தி செய்கின்றாய். நீ அதைப் பெறுவாயானால், நீ தேவனுடைய சீரான சமநிலையில் வருகின்றாய்- பரிசுத்த ஆவியைக் குறித்த உன்னுடைய சொந்த எண்ணங்களின் படியல்ல. சாத்தான் அதை முதல் தரமான இலக்கிய நயம் வாய்ந்த, ஏதோ மகத்தான ஒன்றாக, ஏதோ பெரிய ஒன்றாக, அறிவு பூர்வமானதாக ஆக்க முயல்கிறான். அந்த விதமான சிந்தனையை நீங்கள் வெளியே எறிந்து, அதைக் குறித்து வார்த்தை என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் விசுவாசியுங்கள். ஆமேன்!