26. இப்பொழுது, கேட்பதற்கு இது ஒரு அருமையான கேள்வியாகும். நல்லது, இப்பொழுது, நண்பனே நான் எப்பொழுதும் அந்த நபரிடமே அதை விட்டுவிடுவேன்.
27. நினைவில் கொள்ளுங்கள், எனக்குத் தெரியாது... யார் இதை எழுதினது என்ற ஒன்றை மாத்திரம் நான் அறிவேன், இங்கே இருப்பவர், அந்த மனிதன் தாமே என்னிடம் வந்து கொடுத்தார். யாரோ ஒருவர் என்னிடம் சற்று முன்பு வந்து இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார். நான் “எனக்கு இங்கே போதுமான நேரம் கிடைத்தால் நான் பதிலுரைப்பேன்” என்று கூறினேன். அவர்கள் காகிதத்தில் அதை இங்கே எழுதி வைக்கவில்லை.
28. இப்பொழுது, இங்கே, “நான்... ”
பதின்மூன்று வயதில் நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன், மறுபடியும் நான் எடுக்க வேண்டுமா?
29. நீங்கள் பதின்மூன்று வயதிலிருந்து கிறிஸ்தவனாயிருந்து, கிறிஸ்துவிற்குள் ஒரு விசுவாசியாயிருப்பீர்களானால் நான் - நான் நீங்கள் இருப்பது போலவே நானும் இருந்து விடுவேன். நான் இப்பொழுது செய்ய மாட்டேன் - அது முதல் தேவன் உங்களை ஆசீர்வதித்து பரிசுத்த ஆவியை உங்களுக்கு அருளியிருப்பாரானால் நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள்.
30. ஞானஸ்தானம் என்பது ஒரு – ஒரு - ஒரு முறைமை ஆகும், (form) ஞானஸ்நானமானது உலகத்திற்கு காண்பிக்கத்தக்கதாக (அல்லது சபையாருக்கு - நீங்கள் அந்நேரத்தில் இருந்தீர்கள் என்று) நீங்கள், சாட்சிகளுக்கு முன்பாக, தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார் என்றும், அவர் மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார் என்றும், ஆகையால் நீங்கள் அவருடன் அடக்கம் பண்ணப்பட்டு புதிய ஜீவியம் செய்து நடக்க வேண்டும் என்று விசுவாசிக்கிறீர்கள் என்று நிரூபிப்பதற்காகவே. நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படும்போது உங்களைப் பார்த்த மக்கள், நியாயத் தீர்ப்பில் உங்களைச் சந்திப்பார்கள், பாருங்கள்.
31. ஆகவே பிறகு, யாராவது ஒருவர் (அந்நியர்) “நீயா?” என்று கூறினால்.
32. “ஆம், என் தேவனுடைய மரணத்தினூடே, அடக்கத்தினூடே நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளேன்.”
33. பாருங்கள், நான் நினைக்கிறேன் ஞானஸ்நானம்... ஓ, அது தேவை என்று நான் கூறுகிறேன். அது தேவை அல்ல என்று நான் கூறமாட்டேன். ஆனால் அது தேவையான ஒன்று, ஏனென்றால் அது... தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும் முக்கியமானதாகும். அப்படித்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா?நாம் ஞானஸ்நானம் பண்ணப்படுவது மிகவும் அவசியமாகும். இயேசு மத்தேயு அல்லது மாற்கு 16ல் இதைக் கூறுகின்றார். அவர் “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷதத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” என்றார். அவர் நிக்கொதேமுவிடம் பேசிக் கொண்டிருக்கையில், “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” என்று கூறினார். ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முழுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, புதிய ஜீவியத்தில் எழுப்பப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் நான் விசுவாசமுள்ளவனாயிருக்கிறேன்.
34. ஆனால், நீங்கள், “சகோதரன் பில், சிறிய வயதில் அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கையில், நீங்கள் மறுபடியுமாக அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துள்ளீர்களா?” என்று கூறலாம். அநேக முறை நான் அதைக் செய்துள்ளேன்.
35. ஆகவே, அங்கே - அங்கே, வேதத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 2ஆம் அதிகாரத்தில் “மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” என்று அவர் சபையிடம் பேசுகின்றார். அநேகர் இந்த வசனத்தை எப்படி வியாக்கியானம் செய்கிறார்கள் என்றால், நீ சரியாகப் பின்னால் சென்று அதே காரியத்தைச் செய் என்று அது குறிக்கிறது என்று கூறுகிறார்கள். நல்லது, அருமை கிறிஸ்தவ நண்பனே, இதை நீ கவனிப்பாயானால்...
36. இப்பொழுது, இதனுடன் நான் இணங்காதிருக்க விழையவில்லை, பாருங்கள், ஏனெனில் நம்மிடம் உள்ள ஞானஸ்நானத் தொட்டி நிரப்பப்பட்டுள்ளது. ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று விரும்புவோர் எவரையும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாங்கள் ஞானஸ்நானம் கொடுக்க ஆயத்தமாயுள்ளோம். நாங்கள் இணங்காமல் இருக்க மாட்டோம். ஆகவே, நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பினால், நீங்கள் செல்லும் பாதையில் ஏதாவது இருக்குமானால், நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும் என்று உணர்வீர்களானால், நீங்கள் சென்று அதைச் செய்யுங்கள். அது சரி. நீங்கள் சென்று அதைச் செய்யுங்கள், உங்கள் பாதையில் எதையும் இருக்கவிடாதீர்கள், நீங்கள் உங்களைத்தாமே பூரணமாக தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
37. அநேக வருடங்களுக்கு முன் நீங்கள் ஏதோவொன்றை எடுத்திருந்து, நீங்கள் அதைச் சரி செய்ய வேண்டும் என்று உணர்வீர்களானால், நீங்கள் சென்று அதைச் சரி செய்யுங்கள். அது என்னவாய் இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் எல்லாவற்றையும் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் அந்த இடத்திற்கு வந்துவிடுவீர்கள், ஏனெனில் உங்கள் பாதையில் இருக்கும் அதை நீங்கள் விலக்கும் வரையில் உங்களால் தொடர்ந்து செல்ல இயலாது. பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கியிருக்கிற எல்லாக் காரியங்களையும் நாம் தள்ளியாக வேண்டும்.
38. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று விரும்பினால், அப்படியே செய்யுங்கள். செய்ய வேண்டியது அதுதான். நான் சிலருக்கு மறுபடியும் ஞானஸ்நானம் கொடுத்துள்ளேன்.
39. இப்பொழுது, நீங்கள் குறிப்பிடுகின்ற அந்த வேதவாக்கியம் ஒரு தனிப்பட்ட நபரிடம் பேசவில்லை, அது சபைக்கு பேசப்பட்டதாகும். பாருங்கள், அந்த சபைக்கு, அவர்கள் என்ன செய்தனர், ஆதியிலே அவர்கள் கொண்டிருந்த மகத்தான ஒன்றை, அவர்கள் ஆதி அன்பை விட்டனர். பாருங்கள். அவர்கள் “ஆகையால் நீ மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக,” என்றனர். சரியாக அதைச் செய்து, அதை கைக்கொள், “மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லா விட்டால்” என்று அவர் சபையிடம் பேசுகின்றார். நல்லது, இல்லையெனில், “நான் விளக்குத் தண்டை எடுத்துவிடுவேன்”, என்று கூறுகிறார்.
40. ஆகவே நீங்கள் பதின்மூன்று வயதிலோ, அல்லது எந்த வயதிலோ ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால், நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பினால், என்ன, அது உங்களுக்குச் சரியாயிருப்பின், நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுங்கள்.
41. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று இப்பொழுது வேதபூர்வமாக நான் உங்களுக்கு கூற முடியுமானால், நீங்கள் பாருங்கள், மக்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்று நான் கூற ஒரு வேதபூர்வமான வழிதான் உள்ளது, முழு வேதத்திலேயே ஒரே ஒரு வசனத்தில்தான் மக்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்றிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் வருவதற்கு முன்னர் யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட மக்கள்தான் அவர்கள். அப்போஸ்தலர் 19:5ல் பவுல் அவர்களிடம், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும் என்றால் அவர்கள் மறுபடியுமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று கூறினான், பாருங்கள்?
42. இப்பொழுது - இப்பொழுது நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டால் தான் பரிசுத்த ஆவியை பெற முடியும் என்று இல்லை, ஏனென்றால் உங்கள் இருதயம் சரியாக இருந்தாலே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறலாம். பாருங்கள்? ஏனென்றால் அப்போஸ்தலர் 2ல், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்னும் விதியை பேதுரு அளிக்கின்றான். ஆனால், அப்போஸ்தலர் 10:49, தேவன் திரும்பி, புறஜாதியார், ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கு முன்பே தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அளித்தார். நீங்கள் பாருங்கள்? ஆகவே, நீங்கள் பாருங்கள், அது உங்கள் இருதயத்தின் நிலையைப் பொறுத்ததாகும்.
43. அப்பொழுது பேதுரு. “நம்மைப் போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா?” என்றான். நீங்கள் பாருங்கள்? ஆகவே, பிறகு, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று அவன் கட்டளையிட்டான்.
44. பிறகு, பவுல், அப்போஸ்தலர் 19 கூறுகிறது... பவுல், மேடான தேசங்களின் வழியாய் எபேசுவிற்கு வந்தான். அங்கே சில சீஷர்களைக் கண்டான், அவர்களிடம் “நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியை பெற்றீர்களா?” என்று கேட்டான்.
45. அவர்கள் “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை.” என்றனர்.
“அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான்.
அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். “யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்” என்று அவர்கள் கூறினர்.
46. அவன், “யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்பதற்காக மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் கொடுத்தான் என்று கூறினான்”, அவர்கள் அதைக் கேட்டபோது அவர்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள், பாருங்கள்? ஆகவே அது...
47. இப்பொழுது, இதன் பேரில்... ஆனால் நீங்கள் பதின்மூன்று வயதில் கிறிஸ்தவ ஞானஸ்நானம் பெற்று இவ்வளவு காலமாக கிறிஸ்தவ ஜீவியம் செய்ததாக இது கூறுகிறதா அல்லது சில நேரங்களில் பின் மாற்றம் நீங்கள் அடைந்து.
48. எனக்குத் தெரியாது, அவர்கள் அதை... பின்மாற்றத்தைப் பற்றி, எனக்குத் தெரியாது. அதைக் குறித்து யாராவது என்னிடம் கேட்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் பின்மாற்றத்தைக் குறித்து, நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொரு நாளும் பின்மாற்றம் அடைகிறீர்கள். அதை தவிர்க்க உங்களுக்கு ஒரு வழியும் இல்லை. அது சரி. நீ “பின்மாற்றம்” அடைவாயானால், சபையில் உள்ள மக்களுக்கு, அது ஆனால் தேவனுக்கு முன்பாக அல்ல, பாருங்கள்? நீ கிறிஸ்துவின் பேரில் பின்மாற்றம் அடைகிறாய், ஆனால் தேவன் பேரில் உன்னால் முடியாது, ஏனென்றால் நீ உண்மையாகவே பாவம் செய்திருந்தால், நீ இழந்து போனவனாயிருக்கின்றாய். ஆனால் நீ ஒவ்வொரு நாளும் விழுந்து கொண்டிருக்கிறாய், பவுல் ஒவ்வொரு நாளும் சாக வேண்டியதாய் இருந்தது. அது சரியல்லவா? அவள் ஒவ்வொரு நாளும் செத்து, ஒவ்வொரு நாளும் மனந்திரும்ப வேண்டியதாயிருந்தது. கால முழுவதும் அவன் மனந்திரும்பிக் கொண்டே இருந்தான். பாருங்கள்? ஆகவே பவுலே அவ்வாறு செய்ய வேண்டியதாய் இருந்ததால், நான் கூட அவ்வாறே செய்தாக வேண்டும். நீயும் கூட, அது சரி. ஆகவே நாம்...
49. ஆனால் இப்பொழுது, நீ மீட்டுக் கொள்ளப்பட்டவன் என்றும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உன்னை பாவத்திலிருந்து சுத்திகரித்தது என்றும், நீ ஒரு கிறிஸ்தவ ஜீவியம் செய்து கொண்டிருக்கிறாய் என்றும் நீர் உணர்வாயானால், அது (மறுபடியும் ஞானஸ்நானம் பண்ணப்படுவது -தமிழக்கியோன்) தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவ்வாறு செய்யப்பட நீ விரும்பினால், சரி அது நல்லதாயிருக்கும். அதைச் செய்ய நாங்கள் மகிழ்ச்சியாயிருப்போம்.
50. யாரோ ஒருவர் என்னிடம் அங்கே கொடுத்த ஒரு சிறு குறிப்பு இப்பொழுது இங்கே, இருக்கிறது.