103. இப்பொழுது, ஐந்து கன்னிகைகளைக் குறித்த உவமை - அல்லது அது பத்து கன்னிகைகளைக் குறித்தது, தயவு கூர்ந்து பொறுத்துக் கொள்ளவும். பத்து கன்னிகைகள் மத்தேயு 25:1ல் காணப்படுகின்றனர். பத்து கன்னிகைகள் மணவாளனை சந்திக்கப் புறப்படுகின்றனர் (இப்பொழுது கவனியுங்கள்!) அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாயிருந்து தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைக் கொண்டிருந்தனர், ஐந்து பேர் புத்தி இல்லாதவர்களாக தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைக் கொண்டிராமல் இருந்தனர். அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கையில் “இதோ மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர் கொண்டுப்போகப் புறப்படுங்கள் என்ற சத்தம் - சத்தம் வந்தது. “ தங்கள் தீவட்டிகளில் எண்ணெயை உடையவர்களாக இருந்தவர்கள், தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினர், நெருப்பு எரிந்து கொண்டிருந்தது, அவர்கள் மணவாளனைச் சந்திக்கச் சென்றனர். மற்றவர்களோ எண்ணெய் வாங்கிக் கொள்ள இவர்களிடம் வந்தனர், இவர்களோ நீங்கள் விற்கிறவர்களிடத்திற்கு போய் உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினர். அவர்கள் சென்ற போது, மணவாளன் வந்து விட்டார், அப்பொழுது புத்தியுள்ள கன்னிகை உள்ளே பிரவேசித்தாள், தூங்கிக் கொண்டிருந்த கன்னிகை புறம்பே தள்ளப்பட்டாள்.
104. இது உங்களை புண்ப்படுத்தப் போகிறது, உண்மையாகவே புண்படுத்தப்போகிறது, ஆனால் நான் அதை கூறவேண்டியவனாகவே இருக்கிறேன். கேள்வியை நான் கேட்கவில்லை; நான் அதற்கு பதிலளிக்க கடமைப்பட்டவனாக இருக்கிறேன். இப்பொழுது, இது மிக நெருக்கமாக வருகிறது, சகோதரனே, மிக நெருங்கி காணப்படுகிறது, இது உங்களை புண்படுத்துவதை விட உங்களுக்கு உதவும் விதத்தில் இருக்கும் என நான் நம்புகிறேன். வழக்கமாக புண்படுதல்... என் தாயார் என்னை அடிக்கையில் வழக்கமாக இவ்வாறு கூறுவார்கள், "உனக்கு அது நன்மை செய்யும் முன்னர் அது உன்னை புண்படுத்த வேண்டும்” என்பார்கள். நல்லது, அது - அது சரியே. பாருங்கள்? அப்பொழுது என்னால் அதைக் காண முடியவில்லை, ஆனால் நான் - நான் இப்பொழுது அதைக் காண்கிறேன்.
105. கவனியுங்கள், இந்த... அங்கே புறப்பட்டுச் சென்ற பத்து பேரும் கன்னிகைகள். இப்பொழுது, கர்த்தரை சந்திக்கும்படியாக அங்கே பத்து கன்னிகைகள் இருந்தனர். இப்பொழுது, கன்னிகை என்ற வார்த்தைக்கு, "பரிசுத்தமாக்கப்பட்டது (யாருக்காவது இது தெரியுமா?) பரிசுத்தம், சுத்தமான, பரிசுத்தமாக்கப்பட்ட” என்று அர்த்தம். கர்த்தரை சந்திக்கப் புறப்பட்டுச் சென்ற அவர்கள் பத்து பேர்களாயிருந்தனர்.
106. இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் முதல் ஜாமம், இரண்டாவது ஜாமம், மூன்றாம் ஜாமம் துவங்கி ஏழாம் ஜாமம் வரை நித்திரை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் இவர்களோ உண்மையாகவே கர்த்தரைச் சந்திக்கச் சென்றனர். ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் புறப்பட்டுச் சென்ற போது கர்த்தர் வந்தார். அது கர்த்தருடைய வருகையின் நேரமாக இருந்தது. எந்த ஜாமத்தில்...
107. சிலர் முதலாம் மணி நேரத்தில், சிலர் இரண்டாம் மணி நேரத்தில் நித்திரை செய்தனர். சிலர்... என்பதை குறித்து இயேசு பேசினார். ஆனால் கர்த்தருடைய வருகையின் போது அவர்களெல்லாருமே விழித்துக் கொண்டனர். ஆனால் இந்தக் காரியத்தில், இது கடைசி மணி நேரமாக இருந்தது, ஏனெனில் அவர்கள் பத்து பேரும் கர்த்தரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றனர். ஐந்து பேர்களின் தீவட்டிகள் எண்ணெயில்லாமல் புகைபிடித்து போயிருந்தது, மற்ற ஐந்து பேர்களோ எண்ணெயைக் கொண்டிருந்தனர்.
108. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், வேதாகமத்தில் எண்ணெய் எதற்கு அடையாளமாகக் காணப்படுகிறது? யாராவது கூறமுடியுமா? (சபையார் "பரிசுத்த ஆவி” என்று பதிலளிக்கின்றனர் - ஆசி) பரிசுத்த ஆவி! அப்படியானால் நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல், நீங்கள் சுத்தமாயும், தூய்மையாகவும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். சுத்தமாக்கப் படுதல் என்பது நீங்கள்...
109. இப்பொழுது கவனியுங்கள், நான் இந்த சிறிய பாட்டிலை எடுக்கப் போகிறேன். இது அங்கே கோழிகள் அறுத்தெறியப்படும் இடத்தில் காணப்படுகிறது, அந்த இடம் முழுவதுமாக இருக்கின்றது. நான் இதை எடுக்கின்றேன்; அது தான் நீதிமானாக்கப்படுதல்: “நான் இந்த பாவியை உபயோகப்படுத்தப் போகிறேன்.” பிறகு இதை நான் உபயோகப்படுத்தப் போகிறேன் என்றால் நான் செய்ய விருக்கின்ற அடுத்த காரியம் நான் இதை சுத்தமாக்க வேண்டும். பிறகு நான் அதை சுத்தப்படுத்தின பின்பு, இதற்கு அடுத்ததாக நான் என்ன செய்வேன்? இதை பரிசுத்தப் படுத்துவேன். பரிசுத்தப்படுத்துதல் என்கிற வார்த்தைக்கு “சுத்தமாக்கு” இது பரிசுத்தம் என்கிற வார்த்தை இணையானது வார்த்தை. பரிசுத்தம் -பரிசுத்தம் என்பது எபிரேய வார்த்தையாகும். பரிசுத்தமாகுதல் என்பது கிரேக்க வார்த்தையாகும். பரிசுத்தமாகுதல் என்ற வார்த்தை “ஊழியத்திற்கென சுத்தப்படுத்தி தனியாக வைத்தல்” என்று பொருள்படும். ஆகவே பிறகு, நீதியின் மேல் பசிதாகம் உடையவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் நிரப்பப்படுவார்கள், பிறகு அவர்கள் ஊழியத்தில் வைக்கப்படுவார்கள்.
110. இந்த பாத்திரங்கள்... பழைய ஏற்பாட்டின் கூடாரம், பீடம் பாத்திரங்களை பரிசுத்தப்படுத்துகின்றது. அவைகள் ஊழியத்திற்கென்று தனியாக வைக்கப்படுகின்றன. அவைகள் ஊழியத்திற்கென்று இருக்கும்பொழுது அப்பொழுது அவைகள் நிறப்பப் படுகின்றன.
111. இப்பொழுது இங்கே தான், அருமையான, விலையேறப் பெற்ற நசரீன்கள், இன்னும் மற்றவர்கள் வழி விலகிப் போயிருக்கிறார்கள். பாருங்கள்? நாமெல்லாரும்... ஏன் நீங்கள் தவறிப் போகிறீர்கள்? ஏன் பெந்தெகொஸ்தேயினர் உங்களை விட்டு ஓடிப்போனார்கள். ஏனென்றால் நீங்கள் ஒளியில் நடக்க மறுத்ததால், அது முற்றிலும் சரியே. பாருங்கள்? அது சரி தான். நான் முதன் முதலாக முழங்காலிட்ட பலிபீடம் அந்த விலையேறப் பெற்ற அங்கே இருக்கின்ற அந்த பழைய நசரீன் பலிபீடம் தான். அந்த அருமையான, பரிசுத்தமுள்ள, சுத்தமான சபையாகிய அவர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக, ஆனால் நீங்கள் மிகவுமாக வழிமுறைகளின்படி நடக்கப்பார்க்கிறீர்கள், “நீ இதைச் செய்ய வேண்டும், நீ அதைச் செய்துதான் ஆக வேண்டும். நீ இதை செய்துதானாக வேண்டும்” என்று கூறி, அது தேவனுடைய கிருபையென்றும், நீங்கள் தெரிந்து கொள்ளுதலின்படி அழைக்கப் பட்டுள்ளீர்கள் என்றும் உணராதிருக்கிறீர்கள். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல ஓடுகிறவனாலும் அல்ல இரங்குகிற தேவனாலேயாம். பாருங்கள்? தேவன் சபையை உலகத் தோற்றத்திற்கு முன்னரே முன்குறித்தார் (இன்னும் சற்று கழித்து அதைக் குறித்த கேள்வி நம்மிடம் இருக்கிறது. பாருங்கள்?), உலகத்தோற்றத்திற்கு முன்பே சபையை முன்குறித்தார்.
112. கவலைப்படுகிறதினால் உன் சரீர அளவோடு ஒரு முழத்தையும் உன்னால் கூட்ட முடியாது. “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” பாருங்கள்? பாருங்கள், தேவன் தான் அழைப்பை விடுத்தார், தேவன் தான் இழுத்தார், தேவன் தான் சபையை அமைத்தார். இப்பொழுது, இப்பொழுது, நீங்கள், "சகோதரன் பிரன்ஹாம், அது முழுக்க கால்வீன் கொள்கையாயிற்றே” எனலாம். இல்லை, அது அவ்வாறல்ல. இப்பொழுது, பொறுங்கள்! தேவன் ஒரு மனிதனை எடுத்து, “இதோ, நான் உன்னை எடுத்து பிறகு...” என்று கூறிவிடுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
113. இந்த பாப்டிஸ்டுகளும் பிரஸ்பிடேரியன்களும் “நல்லது, நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், என் மனசாட்சி குற்றப்படுத்துவதற்கான அவசியமே இல்லை!” எனலாம். குற்றப்படுத்துவதற்கு உங்களிடம் ஒன்றுமே இல்லாதிருப்பதே ஒரு ஆச்சரியமிக்க காரியம் தான். அவர்கள், “நல்லது, நடன மாடுவது என்னைக் குற்றப்படுத்துவதில்லை. சமுதாய விருந்தில் சிறிது மது அருந்துவது எனக்கு எந்த பாதிப்பையும் உண்டாக்காது” என்கின்றனர். ஏனெனில் உங்களுக்கு பாதிப்பை உண்டு பண்ண உங்களுக்குள் ஒன்றுமே இல்லை. “கீழ்த்தரமான தரங்கெட்ட நகைச்சுவைத் துணுக்குகள் கூறுவது எனக்கு ஒன்றும் தொல்லை தராது” ஏன்? உங்களுக்கு பாதிப்பை உண்டு பண்ண உங்களுக்குள் ஒன்றுமே இல்லை .
114. நான் சேவை செய்யாவிடில் அவர் என்னை நரகத்திற்கு அனுப்பிவிடுவாரோ என்றெண்ணி நான் கர்த்தருக்கு சேவை செய்வதில்லை; நான் அவரை நேசிப்பதால் அவருக்கு சேவை செய்கிறேன். எனக்குள் ஏதோ ஒன்று இருப்பதால் தான் நான் அவருக்கு சேவை செய்கிறேன். நீங்கள் வெளியில் சென்று, “எங்கள் சபை இதில் விசுவாசம் இல்லாமலிருப்பதால் நான் இதை விட்டு விடவேண்டியதாயிற்று” என்று கூறினால் நீங்கள் ஒரு மாய்மாலக்காரனைப் போன்று நடந்து கொள்ளுகிறீர்கள். அது சரி. ஆனால் நீங்கள் அதை நேசிப்பதனால் அதை செய்வீர்களானால், அது தேவனுக்கு ஒரு சேவையாக இருக்குமாயின், உங்கள் இருதயத்தில் ஏதோ ஒன்று தேவனுக்கான உங்கள் அன்பை, இந்த காரியங்களைக் காட்டிலும் அதற்கு மேலாக மிகப்பெருகச் செய்யுமென்றால், இப்பொழுது நீங்கள் சரியான வரிசையில் இருக்கிறீர்கள். ஆனாலும் நான் இன்னுமாக மது அருந்தாமலும், புகைபிடிக்காமலும், மெல்லாமலும், சாபமிடாமலும் இருந்தால் கூட இன்னுமாக நான் நரகத்திற்குச் செல்வேன். நிச்சயமாக! நான் எல்லா சபைகளையும் சேர்ந்து, ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லா சபைப் புத்தகங்களிலும் என் பெயர் இருந்தாலும், நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்”. அது சரியே!
115. இப்பொழுது இந்த கன்னிகைகள் பத்து பேர்கள் வந்தனர். நசரீன் மக்களை அப்படியே ஆடிப்போக வைத்தது: ஏனெனில் பரிசுத்த ஆவியின் ஆரம்ப அடையாளமாகிய அந்நிய பாஷையில் பேசுதலை பெந்தெகொஸ்தேயினர் எடுத்தனர். அவர்கள் மக்களை பலிபீடத்தண்டை கொண்டு வந்து அவர்களை ஏதோ ஒன்றைக் கூறச் செய்து அல்லது ஒன்றன் மேல் ஒன்றைக் கூறச் செய்து அல்லது ஒன்றன் மேல் ஒன்றை பேச வைத்து அந்நிய பாஷை பேசும் வரை காக்க வைத்தனர். ஒரு மெய்யான, உண்மையான பெந்தெகொஸ்தே மக்கள் அவ்விதமாகச் செய்ய விழைய மாட்டார்கள். உங்கள் நசரீன் சபையின் பிசாசும் கூட அநேக காரியங்களை கொண்டிருந்தானே. பாருங்கள்? பெந்தெகொஸ்தே சபையில் அநேகமான காரியங்களை அவன் கொண்டிருக்கிறான், ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பொறுத்த வரையில், அது சத்தியமாகும். அது முற்றிலும் சத்தியம் ஆகும்.
116. எனக்குத் தெரிந்த வரையில் அவர்களில் அநேகம் பேர் உள்ளனர். மக்கள் அந்நிய பாஷையில் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். என்னால் நியாயந்தீர்க்க முடியாது; நியாயத்தீர்ப்பு செய்ய நான் அனுப்பப்படவில்லை. அவைகளில் அநேகவற்றை நான் கேட்டிருக்கிறேன்; சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் அது காணப்படும். ஆனால் அந்நிய பாஷையில் பேசுகின்ற உண்மையான பரிசுத்த ஆவி இருப்பதை நான் அறிவேன். அது உண்மை என்பதை நான் அறிவேன். ஆம், ஐயா!
117. ஆனால் மக்கள் உள்ளே வந்து “தேவனுக்கு மகிமை, நான் அதைப் பெற்றுக் கொண்டேன்” என்று கூறுவதை அவர்கள் கண்டனர். நல்லது அப்படியானால், அந்த அதே காரியமானது. இப்பொழுது அவர்கள் மேலும் கீழும் குதித்து அந்நிய பாஷையில் பேசினதால் அதை பெந்தெகொஸ்தே என்று அழைக்காதீர்கள், நீங்கள் அவர்களை யாரோ ஒருவருடைய மனைவியுடனோ அல்லது யாரோ ஒருவருடைய கணவனோடு கண்டிருக்கிறீர்கள்.
118. “அது பரிசுத்த ஆவியா?” என்று நீங்கள் கேட்கலாம். நசரீன் ஸ்தாபனத்தாராகிய நீங்கள் தரைமுழுவதுமாக புரண்டு கூச்சலிட்டு பிறகு அதே காரியத்தை செய்கிறீர்கள். நீங்கள் கூச்சலிடும் போது அதைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று நீங்கள் கூறினீர்கள். பாருங்கள்? நீங்கள் ஜீவிக்கும் ஜீவியத்தின் மூலமாக தவிர அதை நிரூபிக்கத்தக்கதாக எந்த ஒரு வழியும் கிடையாது. “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” இது ஒன்று தான் வழி. ஆழ்ந்த பக்தியுள்ள ஜீவியம் மற்றும் கிறிஸ்து உன்னுடன் கிரியை செய்து வார்த்தையை உறுதிபடுத்தி, உன் ஆழ்ந்த பக்தியுள்ள ஜீவியத்தினால் அடையாளங்களும் அற்புதங்களும் பின் தொடர்ந்தால், அது தான் உண்மையான காரியமாகும். ஜீவியம் இல்லாமல் அநேக அடையாளங்களை உடையவராயிருக்கலாம். நீங்கள் அடையாளங்கள் இல்லாமல் ஜீவியத்தை போலியாக நடித்துக் காட்டலாம், ஆனால் நீ இரண்டையும் ஒன்றாகக் கண்டாயானால், அப்பொழுது அது தான் சரியானதாகும். அது தான் சரியான ஒன்றாகும்.
இப்பொழுது! அப்படியானால், நினைவு கூருங்கள், மணவாட்டியானவள். இப்பொழுது உங்களுக்கு சில நிமிடங்கள் இருக்குமாயின் நான் இதை முடிக்க ஏதுவாயிருக்கும்.
119. கவனியுங்கள், ஒரு பெண் உடுத்த ஒரு ஆடையை வெட்டி எடுக்கப்போகிறாள். அவள் ஒரு பெரிய துண்டு துணியை வைத்திருக்கிறாள். (அதை என்னவென்று அழைப்போம்? பருத்தித் துணி, கட்டங்களிட்டு நெய்யப் பெற்ற பருத்தித் துணிவகை அல்லது ஏதோ ஒன்று, ஏதோ ஒரு பெயரிட்டு அழைக்கிறீர்கள். அதை பட்டு என்று அழைப்போமாக) அவளிடம் ஒரு அமைப்பு (Pattern) இருக்கின்றது. அவள் இந்த பெரிய துண்டு துணிகளைப் பார்க்கிறாள். இப்பொழுது இந்த துணிகளைப் பார்க்கிறாள். இப்பொழுது இந்த மாதிரித்துணியை எங்கே வைத்துப்பார்க்கப் போகிறாள் என்பது அவளைப் பொறுத்தது தான். அது சரியா? அந்த முழுதுணியும் எந்த ஒரு பாகத்தையும் அவள் தெரிந்தெடுக்கலாம். அந்த முழு துணியுமே பரிசுத்தமாக்கபட்டதுணி, சுத்தமான துணி ஆகும். பாருங்கள், அது தான் தெரிந்து கொள்ளுதல். தேவனின் தெரிந்து கொள்ளுதல். ஆகவே அவர் செய்வது என்ன? தெரிந்து கொள்ளுதலின் படி அவர் அதை எடுத்து, இந்த கிறிஸ்துவாயிருக்கின்ற மாதிரி அமைப்பை எடுத்து துணியின் எந்த பாகத்தில் அவர் வைக்க விரும்புகிறாரோ அங்கே அவர் பொருத்திப் பார்க்கிறார். பிறகு அது வெட்டி எடுக்கப்படுகின்றது. இந்த வெட்டி எடுக்கப்பட்ட பகுதி எப்படி பரிசுத்தமாக இருந்ததோ அதே போன்று துணியின் மற்றைய பாகமும் பரிசுத்தமாயிருந்தது, ஆனால் தேவன் தெரிந்து கொள்ளுதலின்படி, தம்முடைய தெரிந்து கொள்ளுதலை உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே செய்தார். பவுல் கொரிந்தியர் 8ல்- இல்லை, ரோமர் 8ல் "குயவன்- களிமண் குயவனை நோக்கி நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?” என்று கூறவில்லையா. நீதியுள்ள தேவனாகிய அவர் ஏசா அல்லது யாக்கோபிடம், அந்த இருவரும் பிறப்பதற்கு முன்னர் அல்லது சரியானதை அல்லது தவறானதை செய்யுமுன்னர் எப்படி "ஏசாவை வெறுத்து யாக்கோபைச் சிநேகித்தேன்” என்று கூறமுடியும்? ஏனெனில் முன்னறிவின்படி ஏசா எப்படிப்பட்டவனென்றும் யாக்கோபு எப்படிப்பட்டவனென்றும் அவர் அறிந்திருந்தார். மனிதனுக்குள் என்ன இருக்கிறதென்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவர் அறிந்திருந்தார், அவர்…
120. முடிவில்லாதவர் என்கிற வார்த்தையை உங்களால் விவரிக்க முடியுமானால்... முடிவில்லாதவர் என்கின்ற வார்த்தையானது... கோடான கோடி கணக்கான கொசுக்கள் இருக்கின்றன, கோடிக் கணக்கான கொசுக்கள் இவ்வுலகில், அவை ஒவ்வொன்றும் தங்கள் கண்களை நூறாயிரங் கோடி இன்னும் அதிகமான கோடி முறைகள் கண்மூடித் திறந்திருக்கும். அவைகள் ஒன்றாகிலும் தங்கள் கண்ணை மூடித்திறக்கும் முன்னரே தேவன் அதை உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே அறிந்திருந்தார். அது தான் முடிவில்லாமை நிலை. அது தான் முடிவில்லாத நிலையில் இருக்கும் ஒன்றாகும். பாருங்கள்?
121. அவர் முடிவில்லாதவர். ஆகவே நீ என்ன செய்வாய் என்பதை உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர். கிறிஸ்துவை அனுப்பினார், அந்த... யாராவது ஒருவர், “நல்லது நான் என்னுடைய இழிவான மனப்பான்மையை விட்டு விட்டு அவரைப் பின்பற்றுவேனானால்” அல்லது அதைப் போன்ற ஒன்றை நினைப்பாரெனில், அவ்வாறல்ல. யார் யார் இரட்சிக்கப்படுவார்களென்பதை அவர் அறிந்திருந்தார், ஆகவே யார் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர் முன்னதாகவே கண்டவர்களை இரட்சிக்க அவர் கிறிஸ்துவை அனுப்பினார்.
122. இப்பொழுது, சபைக்கும் கூட நித்திய பாதுகாப்பானது இருக்கின்றது. நீங்கள் சபைக்குள் இருப்பீர்களானால், நீங்கள் சபையுடன் பாதுகாப்பாய் உள்ளீர்கள். ஆனால் நீங்கள் சபைக்கு வெளியே சென்றால், நீங்கள் பாதுகாப்பில் இல்லை. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் சபையிலேயே தரித்திருக்கிறீர்கள்.
123. சபைக்குள்ளாக எப்படி நீங்கள் வருகிறீர்கள்? கைகள் கோர்ப்பதினாலா, உங்கள் பெயரை புத்தகத்தில் எழுதுவதாலா? எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். அதுதான் சபை. எப்படி? பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மூலமாக நாம் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக முத்திரையிடப்பட்டுள்ளோம். எவ்வளவு காலத்திற்கு? எபேசியர் 4:30. "அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்.” மீட்கப்படும் நாள் வரைக்கும் நீங்கள் முத்திரையிடப்பட்டுள்ளீர்கள். இப்பொழுது, நிச்சயமாக, நிச்சயமாக, அது தான் பரிசுத்த ஆவியாகும்.
124. ஆகவே இப்பொழுது அந்த சபையானது எடுக்கப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டிருக்கிற மீதியாயிருக்கிற ஸ்திரீயின் வித்தானது (பாருங்கள்?), மணவாட்டியல்ல, மீதமாயிருக்கின்ற அந்த ஸ்திரீயின் வித்து. அப்பொழுது அந்த வலுசர்ப்பமானது தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றி அந்த வித்தின் சந்ததியுடன் யுத்தம் பண்ணப்போயிற்று. அது தான் இப்பொழுது உருவாக்கப் பட்டுள்ள, மிருகத்திற்கு சொரூபமான, சபைகளின் சங்கத்தின் கீழிருக்கின்ற பிராடெஸ்டெண்ட் சபையாகும். இதைப் போன்று எல்லா சபைகளும் புறக்கணிக்கப்படும்.
125. இப்பொழுது வரி வசூலிப்பது நாம், அது சர்ச்சையில் உள்ளது, நாம் ஒரு சபையல்ல என்று கூற முயற்சிகள் செய்யப் படுகின்றன, ஆனால் நாம் சபைதான் என்று நம்மை அழைத்துக் கொள்ளத்தக்கதாக நமக்கு அரசியல் சாசன உரிமைகள் இருக்கின்றன. நம்முடைய முற்பிதாக்கள் அதற்காகத்தான் உறுதியாக நின்றார்கள். ஆனால் நாம் செய்திருப்பது என்ன, ஒவ்வொரு அரசியல் சாசன சட்டத்தையும் நாம் உடைத்து, எல்லா சபைகளும் ஸ்தாபனங்களையும் உள்ளடக்கிய சபைகளின் சங்கத்தை உள்ளே வரவேற்றுள்ளோம், ஆகவே பிசாசு இதற்குள்ளாக உள்ளே வந்து உலகப்பிரகாரமான காரியங்களும் மற்றும் எல்லாவற்றையும் உள்ளூர் சபை அங்கத்தினர்களுக்குள் கொண்டு வந்து, இன்னும் மகத்தான சபைக்குழுக்கள் மற்றும் உயர்தரவகுப்பார், மற்றும் சமுதாயத்தினர் இன்னும் பிறவற்றைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த பழைய சபையோ மற்ற பிறப்பைப் போன்று குழப்பத்திலிருந்து மறுபடியும் பிறந்து, இன்னுமாக அதற்கான கிரயத்தை செலுத்திக் கொண்டு, இன்னுமாக அமர்ந்து, பெந்தெகொஸ்தே நாளிலே அவர்கள் எப்படியாக பிறந்தனரோ இன்னும் அதே விதமாகவே செயல்பட்டுக் கொண்டு, அங்கே இருக்கின்ற அதே சபையானது. அவைகள் சபைகளின் சங்கத்தின் கீழாக மூடப்பட்டு அடைக்கப்படும். அது ஒரு சங்கம் அல்லது அதைப் போன்று ஒன்றினால் புறக்கணிக்கப்படும். ஒன்று நீங்கள் உள்ளே வரவேண்டும் அல்லது வெளியே செல்ல வேண்டும்.
126. மிருகத்தின் முத்திரையானது இப்பொழுது இன்றைக்கு செயலில் உள்ளது. மேலும் - பரிசுத்த ஆவி தான் தேவனுடைய முத்திரையாகும். அதைப் புறக்கணிப்பதென்பது மிருகத்தின் முத்திரையாகும். நீ கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டிய பரிசுத்த ஆவியை நீ கண்டு, அதை ஏற்றுக் கொள்ளாமல் போனால், தானாகவே நீ அந்த மிருகத்தின் முத்திரையை எடுத்துக் கொள்கிறாய், ஏனெனில் இரண்டு சாரார் மாத்திரமே இருக்க முடியும்: தேவனுடைய முத்திரையை கொண்டிராத எல்லாரும் மிருகத்தின் முத்திரையை பெற்றிருந்தனர். ஆகவே தேவனுடைய முத்திரையைப் பெற பரிசுத்த ஆவியைப் பெறத்தான் வேண்டும். அதை பெற வேண்டும். இதோ இதுதான் முழு காரியமும். அது முற்றிலுமாகச் சரியே.
127. இப்பொழுது மணவாட்டி மேலே செல்கிறாள், மீதமுள்ளவர்கள் இங்கே விடப்படுகின்றனர். இவளே இரண்டாம் உயிர்த்தெழுதலில் வருகிறவள். “முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான். இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை'. அது சரி. இரண்டாம் உயிர்த்தெழுதலானது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பாக இருக்கும், பிறகு சபையானது. பவுல் “நீங்கள் அவிசுவாசிகளிடத்திற்கும் வழக்கறிஞர்களிடமும் ஏன் செல்கிறீர்கள், பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?” என்றான். இவ்வித காரியங்கள் சபைக்கு முன்பாக நியாயந்தீர்க்கப்பட வேண்டும், அநீதியான நீதிபதி, மாஜிஸ்ட்ரேட் மற்றும் இன்னாருக்கு முன்பாக செல்லக்கூடாது, ஆனால் நம்முடைய காரியங்கள் சபைக்கு முன்தான் கொண்டு வரப்பட வேண்டும். நீங்கள் அங்கே ஒருவருக்கொருர் சட்டத்திற்கு கொண்டு செல்கிறீர்கள். ஒரு கிறிஸ்தவனை சட்டத்திற்கு முன் நிற்கவைக்கின்ற மனிதன் மீது தேவன் இரக்கம் பாராட்டுவாராக. அது சரி. அவ்விதமாகச் செய்ய பவுல் அவர்களுக்கு சவாலிட்டான்.
128. இப்பொழுது, அது தான் மணவாட்டி ஆகும், உறங்கிக் கொண்டிருந்த கன்னிகைகள் பூமியின் மீது விடப்படுகின்றனர். புத்தியுள்ள கன்னிகை தன்னுடைய தீவட்டியில் எண்ணையை உடையவளாக பரலோகத்திற்குள் செல்கின்றாள்.
இதன் பேரில் அதிக நேரத்தை நாம் செலவிடலாம் என்பதை நானறிவேன், ஆனால் நான் துரிதமாக செல்லப் போகிறேன்.
129. "கிறிஸ்தவர்கள் பாவம் செய்வார்களா?” நிச்சயமாக கிடையாது! ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்வான் என்று கூறும் எந்த வேதவாக்கியமும் கிடையாது. இதற்கு ஆக்ஷேபனை உண்டு என்பதை நான் அறிவேன். நல்லது, 1யோவான் 3ற்கு திருப்பி வேத வசனம் என்ன கூறுகிறதென்று நாம் பார்ப்போம். ஒரு கிறிஸ்தவன் பாவமே செய்ய மாட்டான்.
130. நீங்கள் எப்பொழுதாகிலும் ஒரு கறுப்பு, வெள்ளை நிறப் பறவை அல்லது வெள்ளை, கறுப்பு பறவையை கண்டதுண்டா? இல்லை! நீங்கள் ஒரு பாவி பரிசுத்தவானை பார்த்ததும் கிடையாது. அப்படிப்பட்ட ஒன்றுமே கிடையாது.
131. இப்பொழுது, இது சிறிது புண்படுத்துமானால் இதற்குள் நிறைய தைலத்தை வைத்து விடுங்கள், அது உங்களுக்குத் தெரியும், ஆகவே அது - அது சிறிது நேரத்தில் சுகத்தை அளிக்கும்.
132. இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருப்பவைகளின் முற்றிலுமான, ஒருபோதும் தவறாத ஆதாரங்கள் வேத வசனங்கள் தான். 1 யோவான், 3வது அதிகாரம் 9வது வசனம். சரி, இதற்கு செவிகொடுங்கள்!
பாவங்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ் செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும் படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்படுத்தப்பட்டார்.
கவனியுங்கள், நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? உங்கள் கவச உடைகளைத் தரியுங்கள், சர்வாயுதவர்க்கத்தை இறுக்கிக் கட்டிவிட்டீர்களா? கூர்ந்து கவனியுங்கள். இது அதிர்ச்சியூட்டும் ஒன்றாகும்.
தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்வதில்லை; ... (புரிகிறதா?). ஏனெனில் அவருடைய வித்து... (அவருடைய வித்து, தேவனுடையது)... அவனுக்குள் தரித்திருக்கிறது.... (அந்த மனிதன்!)... அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ் செய்யமாட்டான்.
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படுத்தப்படுகின்றது. நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்பு கூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
ஆகையால் நீங்கள் ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி, வேறு பாடுகளை வரையுறுத்தி, இன்னும் அதைப் போன்றவைகளைத் தெரிந்து கொண்டு பிறகு எப்படி நீங்கள் தேவனால் பிறந்தவர்கள் என்று உங்களாலே கூற முடிகின்றது? அப்படிப்பட்ட ஒன்று கிடையவே கிடையாது. அது சாத்தானுடைய ஏமாற்று வேலையாகும். அது சரி. ஆனால் தேவனால் பிறந்த ஒரு மனிதனால் பாவமே செய்ய முடியாது; பாவம் செய்வதென்பது அவனால் கூடாத ஒரு காரியமாகும்.
133. கவனியுங்கள்! இதை என்னால் எடுக்க முடியுமானால் கிறிஸ்து அறையப்பட்டுள்ள சிலுவையை இங்கே ஒரு நிமிடத்திற்கு நான் எடுக்கட்டும். பாவ நிவாரணப்பலியாக இருந்தவர் யார்? இயேசு கிறிஸ்து. நாம் எப்படி கிறிஸ்துவுக்குள் செல்லுகிறோம்? நமக்காக மரித்தவர் யார்? கிறிஸ்து. அவர் எதற்காக மரித்தார்? நம்முடைய பாவங்களுக்காக. என்னுடைய ஆக்கினையை அவர் எடுத்து கொண்டார். அது சரி தானே? ஆகவே அப்படியானால் நான் எவ்வாறு அவருக்குள் செல்கிறேன்? ஒரே ஆவியால் நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். ஆகவே இந்த சரீரத்தில் நாம் இரத்தத்தினாலே மூடப்பட்டு நியாயந்தீர்ப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலைப் பெற்றிருக்கிறோம். அவனால் பாவமே செய்ய முடியாது, ஏனெனில் அவனுக்காக இரவும் பகலுமாக ஒரு இரத்த பலியானது இருந்து கொண்டிருக்கிறது. அல்லேலூயா! அவனால் பாவம் செய்ய முடியாது. பாவம் செய்ய அவனுக்கு விருப்பமே இராது. அவ்வாறு செய்வானானால்- ஏதாவது தவறை அவன் புரிவானானால், அதை வேண்டுமென்றே அவன் செய்திருக்க மாட்டான். வேதாகமம் எபிரேயர் 10 ஆம் அதிகாரத்தில் -
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
தேவனுடைய குமாரனைத் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
134. ஏனெனில் நாமெல்லாரும் ஒரே ஆவியாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். ஆகையால் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றவராயிருப்பதால், நம்மால் பாவம் செய்ய முடியாது, பாவமே செய்ய முடியாது. நமக்காக ஒரு பாவபிரயாசித்த பலி காத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே உங்கள் இருதயத்தில் இன்னுமாக பாவம் செய்ய வேண்டும் என்கின்ற வாஞ்சை இருக்குமானால் நீங்கள் இன்னுமாக அந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை என்று அர்த்தமாகிறது, ஏனெனில் நீங்கள் மரித்து உங்கள் ஜீவனானது கிறிஸ்துவுக்குள்ளாக தேவனின் மூலமாக மறைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பாவமே செய்வதில்லை. அவர்கள் தவறுகள் செய்வார்கள், ஆனால் அவர்கள் பாவம் செய்வதில்லை. ஆமென்! அதன் காரணமாகத்தான் அவர்களால் முடியாது, ஏனெனில் அவனால் பாவம் செய்ய முடியாது.
135. என்னால் எப்படி... நான் இங்கே நகரத்தினூடாக செல்கையில் நகரத்தின் மேயர் என்னிடம் வந்து “'திரு. பிரன்ஹாம், நீங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க செல்லும் ஒருவர் என்று எனக்குத் தெரியும். வேகக்கட்டுப் பாடுகள் இங்கே உண்டு. நகரத்தில் அதிகபட்சமாக மணிக்கு முப்பது மைல் வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஆனால் உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் தொண்ணூறு மைல் வேகத்தில் செல்ல நான் உங்களுக்கு அனுமதி தருகிறேன், ஏனெனில் உங்களுக்கு மிக அவசரமான அழைப்போ அல்லது யாரோ ஒருவர் விபத்தில் மரித்துக் கொண்டிருக்கும் தருவாயில் இருந்தாலொழிய தவிர மற்ற நேரத்தில் நீங்கள் வேகக் கட்டுபாடு விதிகளை மீறமாட்டீர்கள் என்ற நம்பிகை உங்கள் மேல் எனக்கு உண்டு. நீங்கள் ஒரு சிகப்பு விளக்கை அல்லது அதைப் போன்ற ஒன்றை பொருத்தி நீங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லலாம் என்று, இந்த நகரத்தின் மேயர் என்கின்ற அடிப் படையில் நான் உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன்” என்று கூறும் பட்சத்தில், நான் முப்பது மைல் வேகத்தில் செல்ல வேண்டிய பகுதியில் நாற்பது மைல் வேகத்தில் சென்றால் ஒரு சாதாரண அதிகாரியினால் எப்படி என்னை கைது செய்ய முடியும்? அவனால் முடியாது. இந்த நகரத்தில் இருக்கின்ற வேகக்கட்டுப்பாட்டு விதிகளை என்னால் உடைக்க முடியாது. ஏன்? ஏனெனில் அந்த வேகக்கட்டுபாடு விதிகளுக்கு மேலாக நான் உள்ளேன். ஆமென்! நான் சொல்ல விழைவதைக் காண்பீர்கள் என நான் நம்புகிறேன்.
136. ஆகவே நாம் மரிக்கையில் நம்முடைய மனந்திரும்புதலை தேவன் அங்கிகரிக்கின்றார், நம்முடைய ஞானஸ்நானத்தை அங்கிகரிக்கின்றார், விசுவாசத்தின் மூலம் வைக்கப்பட்ட அவர் தம்முடைய சொந்த குமாரனின் இரத்தத்தை அங்கிகரிக்கின்றார். அவருடைய முன்குறித்தலை அவர் அங்கிகரித்து நான் அதைச் செய்வேன் என்று அறிந்திருந்து, கிறிஸ்துவுக்குள்ளாக என்னை அவர் அடையாளங்கண்டு கொண்டு, மரித்த... உலகத் தோற்றத்திற்கு முன்பாக அவர் அடிக்கப்பட்ட போது என் ஸ்தானத்தில் கிறிஸ்து மரித்தார். ஒரு கிறிஸ்தவனாக என்னுடைய பெயர் அவருடைய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அல்லேலூயா! என் மரணத்தை கிறிஸ்து மரித்தார். கிறிஸ்துதான் என்னுடைய பலி. தேவன் இனிமேல் என் பாவத்தை எண்ணாதிருப்பார்.
நான் மரணத்தினின்று ஜீவனுக்குள் கடந்து சென்றேன் என்பதற்கான சாட்சியாக பரிசுத்த ஆவியின் முத்திரையை அவர் எனக்களித்தார். வியூ! அது தான் செய்கிறது.
137. அப்படியானால் தேவனால் பிறந்த எவரும் பாவம் செய்வதில்லை. ஏனெனில் அவனால் பாவமே செய்ய முடியாது. பழைய ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பாவத்தைக் குறித்து நினைவுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் கிறிஸ்து, ஒரே பலியினாலே அந்த வழிபடுபவனை அவர் என்றென்றுமாக பரிபூரணப்படுத்தினார். “ஆராதனை செய்கிறவர்கள் ஒரு முறை சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவங்கள் உண்டென்று உணர்த்தும் மனசாட்சி அவர்களுக்கு இல்லாதிருக்கிறார்கள்.” ஆகவே சபையில் ஓடி, மேலும் கீழுமாக குதித்து, சத்தமிட்டு, அந்நிய பாஷையில் பேசி, ஒரு கிறிஸ்துவனைப் போலவே சரியாக செய்யும் இந்த மக்களை நீங்கள் எடுத்துக் கொள்வீர்களானால், அவர்கள் பிறகு வெளியே ஓடி, அடுத்த வருடம், அடுத்த வாரம் அவர்கள் மறுபடியுமாக வரவேண்டியதாக இருக்கும். அவர்கள் துவக்கத்திலேயே சரியான ஒன்றிற்கு அருகாமையில் கூட வரவில்லை. அவர்கள் போலித்தனமாக செய்து கொண்டிருக்கிறார்கள், ஏனெனில் நம்முடைய மீட்கப்படும் நாளுக்கென்று பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்துவுக்குள்ளாக முத்திரையிட்டிருக்கின்றார் என்று வேதாகமம் கூறியுள்ளதே. அல்லேலூயா! தேவன் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளபடியால், அதுவே என்னை மிகவும் நிச்சயத்திற்குள்ளாக்குகின்றது.
138. பாவம் இனிமேல் கிடையாது. பாவத்திற்கான பிரயாசித்தம் செலுத்தப் பட்டாயிற்று. அதன் காரணமாகத்தான் ஒரு கிறிஸ்தவனுக்கு பாவம் மிகவும் அசுத்தமாகக் காணப்படுகிறது. அதன் காரணமாகத்தான் இங்கே குட்டைக் கால் சட்டை, ஷார்ட்ஸ், (Shorts) அணிந்து காணப்படுகின்ற பெண்கள் ஒரு கிறிஸ்தவனுக்கு மிக அசுத்தமாகக் காணப்படுகிறார்கள். அதன் காரணமாகத்தான் பாலுணர்வு காட்சிகள், மற்றும் அநேக அசுத்தமாக காரியங்கள் உள்ளன, அதனால்தான் புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல், தொலைகாட்சியில் (TV) வருகின்ற தணிக்கை செய்யப் படாத காட்சிகள், எல்லாம் அசுத்தமாயிருக்கின்ற காட்சிகள். ஏன்? - ஏனெனில் நீங்கள் வேறொரு இராஜ்யத்தை சேர்ந்தவர்களாயிருப்பதனால். நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிறந்து மீட்கப்படும் நாள் வரை பரிசுத்த ஆவியால் முத்திரையிடப் பட்டுள்ளீர்கள்.
139. தேவனாலே பிறந்தவன் பாவம் செய்யமாட்டான், ஏனெனில் அவனால் பாவமே செய்ய முடியாது. தேவனுடைய வித்து அவனுக்குள் இருப்பதால் அவனால் பாவமே செய்ய முடியாது. பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்கும் வரை அது பாவத்தைக் குறித்த ஒவ்வொரு வாஞ்சையும் உங்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போடும். ஆமென்! உங்களால் பாவமே செய்ய முடியாது; உங்களுக்குள் வாஞ்சையே இராது. அதன் பேரில் நாம் அதிக நேரம் செலவிடலாம், ஆனால் துரிதமாகப் பார்ப்போம். அப்படியில்லை யெனில் எல்லாவற்றையுமே கடந்து செல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன்.