140. இப்பொழுது, இது ஒரு சிக்கலான காரியம் தான். இப்பொழுது, இதில் கருத்து வேறுபாடு கொள்ளப் போகின்ற மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், ஆனால் ஒரு கிறிஸ்தவன் என்கின்ற வகையில் நான் அதைக் கூறித்தானாக வேண்டும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்த வேதவசனப்பூர்வமான மேற்கோள் வேதாகமத்தில் இல்லவேயில்லை. பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் எந்த ஒரு நபருக்காகிலும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதாக வேதாகமத்தில் எந்த இடத்திலும் இல்லை. அது ஆறாம் நூற்றாண்டில் போதிக்கப்பட்ட ஒரு கத்தோலிக்க பாரம்பரியமாகும்.
141. தெளிக்கப்படுதல் என்பதும் வேதாகமத்தில் கிடையாது, மக்களின் மீது தெளிக்கப்படுதல் அல்லது ஊற்றப்படுதல் என்பது கிடையாது. ஆனால் தண்ணீரில் மூழ்குதல் என்பது உள்ளது. நீங்கள் அதை அறிந்து கொள்ள விரும்பினால், இதைக் குறித்து என்னிடம் கிரேக்க மற்றும் எபிரேய குறிப்புகள் என்னிடம் உள்ளன.
142. பெந்தெகொஸ்தே நாளிலே, தங்கள் பாவ மன்னிப்புக் கென்று மனிதர் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பேதுரு முக்கிய நிபந்தனை விதித்தான். ஆகவே பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்பது ஒரு நாமமல்ல. பிதா, குமாரன் பரிசுத்த ஆவி... மத்தேயு 28:19 கூறுகிறது, "ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளுக்கும் உபதேசித்து... நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து ' நாமங்களில் அல்ல, நாமத்திலே, ஒருமை... பிதாவின் நாமத்திலே, குமாரனின் நாமத்திலே பரிசுத்த ஆவியின் நாமத்திலே அல்ல, ஆனால் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே தான். பிதா ஒரு நாமம் அல்ல; குமாரன் ஒரு நாமம் அல்ல; பரிசுத்த ஆவி ஒரு நாமம் அல்ல. அவையெல்லாம் ஒரு நாமத்தைச் சார்ந்த பட்டப் பெயர்கள் தாம் ஆகும்.
143. இப்பொழுது, பத்து நாட்கள் கழித்து பேதுரு “மனந்திரும்பி, ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினான். பிதா, குமாரன் பரிசுத்த ஆவி - பாருங்கள் அந்த தீவிரமான திரித்துவ கருத்தானது. பாருங்கள், அதிலிருந்து மூன்று தேவர்களை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். மூன்று தேவர்கள் கிடையாது. இங்கே அதை மூல கிரேக்க வேதாகமத்திலிருந்து உங்களுக்கு வாசித்துக் காண்பிக்க விரும்புகிறேன். அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்த ஒரே வழி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான், ஏனெனில் அதன் மூலமாக அவர் தான் தேவன் என்று அவர்கள் அடையாளங்கண்டு கொள்ளச் செய்ய வேண்டும் என்று மூல கிரேக்க வேதாகமமானது கூறுகின்றது.
144. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது ஒரே தேவனின் அலுவல்களாகும். அவர் பிதாவாயிருந்தார்; அவர் குமாரனாயிருந்தார்; அவரே பரிசுத்த ஆவியானவராக உள்ளார். இது மூன்று அலுவல்கள் அல்லது மூன்று யுகங்கள், பிதாத்துவம், குமாரத்துவம், மற்றும் பரிசுத்த ஆவியின் யுகம். ஆனால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கு ஒரேயொரு நாமமுண்டு, அது தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதே.
145. ஆகவே அந்த நாள் முதற்கொண்டு ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்து நாமத்திலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர், மேலும் சிலர் எந்த நாமமும் இல்லாமல் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர், ஆகவே மூல கிரேக்க மற்றும் எபிரேய வேதாகமமும், இயேசுவின் நாமத்திலே கொடுக்கப்படுகின்ற ஞானஸ்நானமானது பாவங்களின் மன்னிப்புக்காகத்தான் என்கிறது - கிரேக்க மற்றும் எபிரேய வேதாகமம் இரண்டுமே. மன்னிப்பு (Remit) என்றால், “கருணை காட்டுதல்' என்பதே. நான் ஏதாவதை மன்னித்தால், அதை எடுத்துப் போட்டு விடுவதே என்பதாகும். அதை மன்னித்தல் - அதை எடுத்துப் போடுவதே”.
146. வேதாகமத்தில் எந்த ஒரு வேதவசனமும் காணப்பட வில்லை. மற்றும் அபோஸ்தலனாகிய பவுல் மேடான வழியாய் கடந்து போய் சில பாப்டிஸ்ட் சகோதரர்களைக் கண்டான், அப்போஸ்தலர் 19. அவர்கள் ஒரு மகத்தான நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்; அவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்; அவர்கள் மகத்தான களிகூருதலையும் மற்றும் மகத்தான காரியங்களையும் உடையவர்களாயிருந்தனர்; அவர்கள் பிரசங்கித்து கூடாரத்தில் களிகூர்ந்து கொண்டிருந்தனர்.
147. 18ஆம் அதிகாரத்தில் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் இம்மக்களை சந்தித்திருந்தனர், அப்போலோஸ்; அவர்கள் பாப்டிஸ்டுகளாயிருந்தனர். ஆகவே பவுல் அவர்களிடம் சென்று, “நீங்கள் விசுவாசிகளான முதற்கொண்டு பரிசுத்த ஆவி பெற்றீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவி என்பது உண்டு என்று எங்களுக்கு தெரியாதே” என்றனர்.
148. அவன், “எவ்வாறு உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டது?” என்று கேட்டான். ஜேமஸ் அரசன் மொழிப் பெயர்ப்பில் “அப்படியானால் எந்த “ என்றுள்ளதை நானறிவேன்; மூல வேதாகமத்தில், “அப்படியானால் எவ்வாறு “ என்றிருக்கிறது. “எந்த அல்லது எவ்வாறு நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள்?”
149. அவர்கள், "இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த அதே யோவான் தான் எங்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தான்” என்றார்கள். பவுல், "இனிமேல் அது கிரியை செய்யாது. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றான்” என்று கூறினான். அவர்கள் இதைக் கேட்ட மாத்திரத்திலே மறுபடியுமாக தண்ணீருக்குள் வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே மறு ஞானஸ்நானம் பண்ணப் பெற்றார்கள். பவுல் அவர்கள் மீது கைகளை வைத்தான், பரிசுத்த ஆவி அவர்கள் மீது வந்தார். இப்பொழுது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று இங்கே கூறப்பட்டு, இங்கேயும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று கூறப்பட்டிருக்கு மானால், அது இரண்டுமே ஒரே இலக்கை அடிக்காது. அது சரியாக இருக்க வேண்டும்.
150. இப்பொழுது, மத்தேயு 28:19, இது தான் மத்தேயுவின் கடைசி அதிகாரம், மற்றும் கடைசி வசனம். நீங்கள் ஒரு காதல் கதையை, அது "ஜானும் மேரியும் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்” என்றிருந்தால், ஜானும் மேரியும் யார்? நீங்கள் திருப்பி புத்தகத்தின் துவக்கத்திற்கு சென்று அவர்கள் யாரென்பதை கண்டு பிடியுங்கள். பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்த ஜானும் மேரியும் யாரென்பதை தெரிந்து கொள்ளுங்கள். இயேசுவும் "புறப்பட்டுப் போய் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள்” என்றார், பிதா என்பது ஒரு பெயரல்ல, குமாரன் என்பது ஒரு பெயரல்ல, பரிசுத்த ஆவி, என்பதும் ஒரு பெயரல்ல, அப்படியானால் அவர் பேசிக் கொண்டிருந்தது எதைக் குறித்ததாயிருந்தது? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார்? அதைக் குறித்த துவக்கத்திற்கு சென்று வாசித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் வம்ச அட்டவணையை நான் மேற்கோள் காட்டுவேன், 1 ஆம் அதிகாரம் 18வது வசனம்.
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது...
இப்பொழுது மிக கூர்ந்து கவனியுங்கள். அந்த கம்பத்தை நாம் பிதா என்று அழைக்கலாம், இந்த பிரசங்க பீடம், குமாரன் எனலாம், இது பரிசுத்த ஆவி எனலாம். இப்பொழுது இயேசு கிறிஸ்துவினுடைய பிதாயார்? தேவன். நீங்கள் எல்லாருமே அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? தேவன் தான் இயேசு கிறிஸ்துவின் பிதா. அது பிதாவாகிய தேவன் (கம்பம் - தமிழாக்கியோன்) இது தேவனாகிய குமாரன் (பிரசங்க பீடம் - தமிழாக்கியோன்) இது தேவனாகிய பரிசுத்த ஆவி.
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது... (மத்தேயு 1:18) அவருடைய திருமணமான- தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவருமுன்னே அவள்.... (சபையார் “பரிசுத்த ஆவியினால்!” என்று கூறுகின்றனர்- ஆசி)... கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (தேவன்தான் அவருடைய பிதா என்று நான் நினைத்திருந்தேன். நம்முடைய பிதாவானவர் தேவன் தான் என்று அவர் கூறினதாக நான் நினைத்திருந்தேன். அப்படியானால் தேவனும் மற்றும் பரிசுத்த ஆவியானவராகிய இருவரும், வெவ்வேறு மக்களாக இருப்பார்களானால், இரண்டு பேரும் வித்தியாசமான நபர்களாக தனிப்பட்ட நபர்களாக இருப்பார்களானால் தனிப்பட்ட குணம் வாய்ந்தவராயிருப்பார்களானால் அல்லது எந்த விதத்திலும் நீ அவர்களை கூறி பொருத்தினாலும், எவ்விதத்தில் இருவரும் அவருடைய பிதாவாக இருக்க முடியும்? அப்படியானால் அவர்கள் அதே தன்மை கொண்ட ஒரே நபராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு இரண்டு ஆவிக்குரிய தகப்பன் இருந்தார்கள் என்று தான் எடுக்க வேண்டும்)
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவராமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக் கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவினாலே... (பிதாவாகிய தேவனால் அல்ல) தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு பிள்ளையை சுமப்பாள்... (பாருங்கள்?) அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்கான வியாக்கியானம் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
151. அவருடைய நாமம் என்னவென்று அழைக்கப்பட்டது? இயேசு. சரி. பிதா குமாரன் பரிசுத்த ஆவி. இப்பொழுது பிதா மற்றும் பரிசுத்த ஆவி இரண்டுமே ஒரே தன்மையுடைய ஆவியானவர்தான். ஆவி என்றால் என்ன? அது தேவனுடைய ஆவியாகும். அது அவ்வாறிருக்கையில், இயேசுவின் ஞானஸ் நானத்தின் மீது வந்து அவருக்குள் வாசம் பண்ணினார், “இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்.” அவர் கீழே வந்து இயேசுவுக்குள் வாசம் செய்து அவரை பூமியின் மீது இம்மானுவேல் ஆக்கினார். ஆகவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்னவாயிருந்தது? (சபையார், “இயேசு கிறிஸ்து” என்று பதிலளிக்கின்றனர்- ஆசி) நிச்சயமாக அது தான்.
152. அதே வெளிப்பாட்டைத்தான் பேதுருவும் கொண்டிருந்தான். இப்பொழுது நம்முடைய பார்வையை சரியாக திசை நோக்கச் செய்வோம். நாம் சரியாக குறியை நோக்கி சுடுகிறோம். சீஷர்களும் அதே விதமாகத்தான் சரியாக சுட்டார்களா என்று நாம் பார்ப்போம். ஒவ்வொரு தடவையும் அவர்கள் கூடிவந்த போது, ஒவ்வொரு தடவையும் ஒரு ஞானஸ்நானமானது கூறப்பட்டபோது இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டியதாயிருந்தது, ஏனெனில் “நாம் இரட்சிக்கப் படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப் படவும் இல்லை” என்று அவர் கூறினார். ஆகவே அது பிசாசின் பொய்யான ஒரு கருத்தாகும், இதை ஆதரிக்க எந்த ஒரு வேத வசனமும் கிடையாது. அது சரியே.
153. ஆகவே இப்பொழுது இது புண்படுத்தவில்லையென்று நான் நம்புகிறேன், ஆனால் இது சத்தியமாகும். பாருங்கள்? இது சத்தியமே, சகோதரனே. உன்னால் அதை... பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் யாருக்குமே கொடுக்கப்படாதிருக்கையில் உன்னால் பிதா குமாரன் பரிசுத்த ஆவியை ஒரு புறத்திலும் இயேசுவை மறுபுறத்திலும் பொருத்த முடியாது. வேதாகமத்தில் ஒவ்வொரு நபருக்கும் இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது, அவ்விதமாக ஞானஸ்நானம் பெறாதவர்கள், பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுமுன்னர் மறுபடியுமாக வந்து ஞானஸ்நானம் பெறவேண்டியிருந்தது. அவர்கள் அதிக வல்லமையுடையவர்களாக ஒருக்கால் காணப்படலாம். ஆனால் தேவனுடைய மாபெரிய திட்டத்தை நீ பின்பற்றித் தான் ஆக வேண்டும். அது முற்றிலுமாக சரி. சரி.
154. பிதா, குமாரன் பரிசுத்த ஆவி தவறான ஒன்றாகும். இப்பொழுது, பெண் பிரசங்கிகளைப் பொறுத்த வரையில், அது தவறான ஒன்று என்று எந்த ஒருவரும் அறிவர். அதைக் கூட நீங்கள் அறியாமலிருந்தால் அதைக் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்று கிரேக்க வேதாகமத்திலிருந்து உங்களுக்கு வாசித்துக் காண்பிக்க எனக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். “ஸ்திரீகள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக் கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது வெட்கக்கேடானதாயும் (shameful), அவமானம் விளைவிக்கிறதாயும் (disgraceful) இருக்கிறதே” கிரேக்க மொழியில் அல்ல, எபிரேய மொழியில் - "அவர்கள் மேய்ப்பர்களுக்கு (Pastors) எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து பேசாமலிருக்கக்கடவர்கள் என்று நியாயப்பிரமாணமும் (law) சொல்லுகிறது, (பாருங்கள்?) ஏனெனில் ஸ்திரீகள் சபையில் பேசுவது வெட்கக்கேடானதாயும் (shameful) அவமானம் விளைவிக்கிறதாயும் (disgraceful) இருக்கிறதே”. என்னே! அதை ஒவ்வொரு வரும் அறிந்திருக்கவேண்டும். இப்பொழுது... அவைகள் வேத முழுவதிலும் - மற்றும் தீமோத்தேயு இன்னும் மற்ற வேத வசனங்களையும் நான் இங்கே எழுதி வைத்துள்ளேன். அது சத்தியாமயிருக்கிறது. சரி.
155. இப்பொழுது, அப்படியானால் அவர்களிடம் எப்படி வல்லமை இருக்கிறது? நீங்கள், "எப்படி அது செயல்படுகிறது” எனக்கேட்கலாம். கவனியுங்கள், சகோதரனே உங்களை நான் கேட்கட்டும், அல்லது சகோதரனே, இந்த கேள்வியை கேட்டிருப்பவர் யாராயிருந்தாலும் சரி, சற்று கவனியுங்கள். முகமதியர்கள் மத்தியில் நடந்த சில மிக வல்லமை மிகுந்த கூட்டங்களை நான் கண்டிருக்கிறேன், அவர்கள் கூச்சலிட்டு, குதித்து, ஒரு கத்தியை எடுத்து இந்த விதமாக சரியாக நேராய் இருதயத்திற்குள் குத்தி மறுபக்கத்தில் அந்த ஓட்டைக்குள்ளாக தண்ணீரை ஊற்றுவார்கள், வெறுங்காலால் நெருப்பிற்குள் நடந்து செல்வார்கள், அதைப் போன்ற மற்ற எல்லாவற்றையும் செய்வார்கள், ஆணிகளாலான படுக்கைகளின் மேல் படுத்துக் கொள்வார்கள், மேலும் மேலும், ஒரு பட்டயத்தை எடுத்து தங்கள் வாயில் நிற்க வைத்து அதை அப்படியே உள்ளே புகுத்துவார்கள்- நீங்களே போய் அதை வெளியே இழுத்து எடுக்கலாம், அதன் மீது இரத்தம் மற்ற எல்லாமும் இருக்கும். அந்த காரியங்களைக் குறித்து நீங்கள் பேசவேண்டாம். பாருங்கள்? அது சத்தியம் அல்ல; அது எதையுமே உறுதிபடுத்துவதில்லை. பாருங்கள்? இயேசு கூறினார். இங்கே உங்களுக்காக நான் எழுதி வைத்துள்ள வேத வசனங்களை நான் வாசிக்கட்டும், மத்தேயு 7: 21-23;
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப் பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா! உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்கு சொல்லுவேன்.
156. ஆகவே நீங்கள்... பாருங்கள், சத்தியம் ஒரேயொரு வழியில் மாத்திரம் தான் வரும் சகோதரனே. இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் மக்கள் எல்லாரும் நரகத்திற்கு போவார்கள் என்று நான் கூறவில்லை. அவ்விதம் நான் கூற மாட்டேன். தேவன் தான் நியாயாதிபதியாவார்; அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை அவர் செய்யட்டும், ஆனால் ஒருவனுக்கு பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று வேதாகமத்தில் சட்டப்படியான வேத வசனங்கள் எதுவுமே கிடையாது.
157. இயேசுவின் நாமத்தின்படியல்லாமல் வேறு விதத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்த ஒவ்வொருவரையும் வந்து மறுபடியுமாக இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டான், “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு போதகத்தை பிரசங்கித்தால் (கலா. 1:8), அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்" எனக் கூறினான். ஆகவே தான் பவுல், “முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன். வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொன்றை உங்களுக்கு பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்ட வனாயிருக்கக்கடவன்.” என்று கூறினான்.
158. இப்பொழுது அது... இங்கேயும் அங்கேயுமாக ஒரு இலக்கை நீங்கள் அடிக்கமுடியாது. பிதா குமாரன் பரிசுத்த ஆவி, “அவர்கள் கொடுக்கட்டும், அவர்கள் எல்லாம் சரிதான்” என்றும்! பிறகு இயேசுவின் நாமம், அதையும் கொடுக்கச் செய்து, "அது சரிதான்” என்று கூறுவது சரியல்ல. சரியான ஏதோ ஒன்று இலக்கை அடிக்கத்தான் வேண்டும். தேவன் குழப்பதிற்கு ஆக்கியோன் அல்ல.
159. நீங்கள் வேதாகமம் முழுவதுமாக எங்கு வேண்டுமானாலும் புரட்டிப் பாருங்கள், அது ஒரு பொய்யான ஞானஸ்நானம் என்பதை நீங்கள் கண்டு அறிந்துகொள்வீர்கள். பிறகு வரலாற்றுக்கு சென்று பாருங்கள். அது ஆறாம் நூற்றாண்டில் மகத்தான அக்டோபஸ் என்பவன், அப்படித்தான் என நான் நம்புகிறேன்; ஞானஸ்நானம் கொடுத்தவன் அல்லது ஒன்றான... அது அக்டோபஸ் தான் என்று நான் கூறமாட்டேன், ஞானஸ்நானம் பண்ணப்பட்டவனின் பெயரை நான் மறந்து விட்டேன். நீங்கள் அதைக் காணவேண்டுமென்றால் அதை - நிசாயா பிதாக்களுக்கு முன் புத்தகத்தில் காணலாம், 325 கி.பி. நடந்த நிசாயா ஆலோசனை சங்க கூட்டத்திற்கு முன்னர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தனர். பிறகு கத்தோலிக்க சபையானது அதிகாரத்திற்கு வந்த போது அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தை எடுத்துக் கொண்டனர். அந்த சமயத்திற்கு முன்னர் எந்த ஒரு நபருக்கும் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்படவேயில்லை. அது ஒரு கத்தோலிக்க பாரம்பரியமாகும்.
160. அதில் அநேகத்தை லூத்தர் தன்னுடன் வெளியே கொண்டுவந்தார். மற்றதை வெஸ்லி கொண்டு வந்தார், இன்னுமாக நாம் அதனிடம் செல்கிறோம். ஆகவே அந்த கத்தோலிக்க போதகமானது, அதற்கு நம் பிதாக்களின் விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது, அது 144 வது பக்கத்தில் காணப்படுகிறது என்று நான் நம்புகிறேன், அதில் அவர்கள்- அது, “பிராடெஸ்டெண்டுகள் யாராவது இரட்சிக்கப்படுவார்களா?” என்பதற்கு, அது” ஒருக்கால் அவர்களில் சிலர் இரட்சிக்கப்படலாம். அவர்கள் வேதாகமத்தின் படியே தான் ஜீவிப்போம் என உறுதி கூறி, அதே நேரத்தில் கத்தோலிக்க போதகத்தின் சிலவற்றை அவர்கள் கை கொள்கின்றனர்” என்று கூறுகின்றது. பின்னும் அது, "வேதாகமம், மற்ற கத்தோலிக்கர், பிதா - கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தனர், ஆனால் நாம் அதிலிருந்து பக்தி பூர்வமானதை எடுத்து, அதை பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் மேல் வைக்கின்றோம், பிராடெஸ்டெண்டுகள் அதை அடையாளங்கண்டுகொள்கின்றனர். ஒருக்கால் அவர்களில் சிலர் இரட்சிக்கப்படலாம்” என்று கூறுகிறது என்று எண்ணுகிறேன். அதினால் அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது! அது சரி.