161. ஆம், அநேக உலகங்கள் இருக்கின்றன, எபிரேயர் 1 வது அதிகாரம் 2 வது வசனம், எபிரேயர் 11வது அதிகாரம் 3 வது வசனம். அநேக உலகங்கள் உள்ளன. தேவன் உலகங்களை உண்டாக்கினார், உ-ல-க-ங்-க-ள், உலகங்களை (W-O-R-L-D-S) உண்டாக்கினார்.
Q.83. ஒன்றுக்கும் மேற்பட்ட வானம் இருக்கின்றதா?
162. ஆம், 1 - 2 கொரிந்தியர் 12:3ல் மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்ட ஒரு மனிதனை தான் அறிந்துள்ளதாக பவுல் கூறுகிறான். மேலும் வெளிப்படுத்தின விசேஷத்தில் இன்னும் பிறவற்றில் அதிக வானம் காணப்படுகிறது. நான் வேகமாக கடந்து செல்லப் போகிறேன், ஏனெனில் முடிக்க வேண்டிய நேரத்தைக் கடந்துவிட்டேன். இவைகளில் மற்றவற்றை வாசித்து கருத்தைக் கூறினால் பரவாயில்லையா?