165. ஆம், ஐயா! வெளிப்படுத்தின விசேஷம் 13:8 “நீங்கள் இரட்சிக்கப்பட்டு உங்கள் பெயரானது உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பாகவே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டது” என்று கூறுகின்றது. எபேசியர் 1:4 மற்றும் 5... நான் அதை வாசிப்பேன்; ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகாது, நீங்கள் பாருங்கள், அதை நான் மேற்கோள் காட்டவில்லை, நான் - நான்... சரி, இதோ எடுத்துவிட்டேன்; இதை நாம் வாசிப்போம்.
நம்முடைய... பிதாவாகிய தேவனுக்கு... (எபேசியர் 1ஆம் அதிகாரம் 3 வது வசனம்) நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாதிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்து இயேசுவுக்குள் (ஆங்கில வேதத்தில் உள்ளபடி - தமிழாக்கியோன்) உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்: (கவனியுங்கள்!)... தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு... (கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே). அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரப்புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.
166. இப்பொழுது வெளிப்படுத்தல் புத்தகத்தில்... இதோ நான் எடுத்து விட்டேன்; இதை நான் சீக்கிரமாக வாசிக்கட்டும், ஆதலால் நீங்கள்- நீங்கள் பாருங்கள். நான் அதை மேற்கோள் காட்டவில்லை. அதை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். வெளிப்படுத்தல் 13:8, இதைச் சீக்கிரமாக கவனியுங்கள்.
உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். (அப்பொழுது தான் அது - சரி)