167. இல்லை, அப்பொழுது நாம் இருந்திருக்கவேயில்லை, ஆனால் தேவனுடைய சிந்தையில் நாம் இருந்தோம். அவர் அதைப் பேசினார். அப்பொழுது அது உண்டானது. இயேசு... உலகத் தோற்றத்துக்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து தான் என்று வேதாகமம் போதிப்பதை எத்தனைப் பேர் அறிவீர்கள். எப்படி? தேவன் அதை பேசினார், ஆகவே அதை அவர் பேசின போது அது செய்து முடிக்கப் பட்ட ஒன்றாக ஆனது. அவர் என்னைக் கண்ட போது, உலகத் தோற்றத்துக்கு முன்னே உன்னை அவர் பார்த்துவிட்டார், அவருடைய சிந்தையில் நாம் உருவகமாக மாத்திரமே இருந்தோம். பிறகு நாம் பூமிக்கு வந்த போது, நாம் மனிதன் மற்றும் மனுஷியாக, ஆணும் பெண்ணுமாக இருந்தோம். அவர் ஆணிலிருந்து பெண்ணின் ஆவியை வேறு பிரித்து அதிலிருந்து ஒரு பெண்ணை உண்டாக்கி ஆணின் ஆவியை மனிதனுக்குள் விட்டுவிட்டார்.
168. ஒரு பெண் ஆணைப் போல் நடந்து கொள்வதை நீங்கள் காண்பீர்களானால், ஏதோ தவறு அங்கே உள்ளது. ஒரு ஆண் ஆண்மையில்லாத ஆவியைப் போன்று பெண்ணாக நடந்து கொள்வதை நீங்கள் காண்பீர்களானால், அங்கேயும் ஏதோ ஒன்று தவறாயுள்ளது.
169. ஆகவே அவர் அப்பொழுது மனுஷனின் பக்கவாட்டில் ஒரு விலா எலும்பை எடுத்து அவனிலிருந்து ஒரு துணைவியை அவர் உண்டாக்கினார், ஆகவே அவர்கள் இருவரும் ஒன்று தான்.
170. உலகத்தோற்றத்திற்கு முன்னே நம்முடைய பெயர்களை... ஆட்டுக் குட்டியானவர் அடிக்கப்பட்ட போது, புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டது, தேவனுடைய சிந்தையில் இருந்தபோது அவர் நம்மை உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே முன் குறித்தார். முன்னறிந்து, ஓ, சகோதரனே, இது சபையை எழச் செய்து இருக்கைகளினூடாக ஓடச் செய்யாதா? இதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். மறுபடியும் பிறந்தவர்களாகிய நீங்கள், உலகத்தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் உங்கள் பெயர்களை தேவன் எழுதிவிட்டார். கிறிஸ்து மரித்து உங்களை நித்திய ஜீவனுக்கென்று அழைக்கத்தக்கதாக பரிசுத்த ஆவியை இங்கே அனுப்பியுள்ளார். நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள்; உங்களுடைய மீட்கப்படும் நாள் வரை நீங்கள் அங்கேயே இருக்கத்தக்கதாக அவர் உங்களை முத்திரித்திருக்கிறார். அல்லேலூயா!
171. அப்படியே தரித்திருத்தல். அப்படியே நானே தரித்திருக்க வில்லை; அவர்தான் தரித்திருக்கச் செய்கிறார். நான் என்ன செய்தேன் என்பதல்ல; அவர் என்ன செய்தார் என்பதே. “நான் புகை பிடிப்பதை விட்டுவிட்டேன்; பொய் சொல்வதை நான் விட்டு விட்டேன்; திருடுவதை நான் விட்டு விட்டேன்” என்பதல்ல. அது, அவர் எனக்காக மரித்த காரியம் ஆகும். அவர் என்னிலிருந்து என் ஆவியை வெளியே எடுத்து ஒரு புது சிருஷ்டியாக என்னை மாற்றிவிட்டார் இப்பொழுது அடுத்த கேள்வி... சீக்கிரமாக இதை நாம் பார்ப்போம்.