172. அழுகிப் போக வேண்டியதாயிருக்கின்ற, நீ காண்கின்ற மாம்சம் தான் சரீரமாகும். இந்த சரீரமானது தகப்பன் மற்றும் தாயினுடைய பாலுணர்வின் வேட்கையினால் பிறந்த ஒன்றாகும். இது அழுகிப் போக வேண்டும், இதினால் ஒரு நன்மையும் கிடையாது. ஆதலால் புதிய பிறப்பில், உயிர்த்தெழுதலில், நீ ஒரு புதிய சரீரத்தில் கொண்டு வரப்படும் போது, அது தேவன் ஆதாமுக்குச் செய்தது போன்று அவருடைய சிருஷ்ட்டிக்கும் வல்லமையாக அது இருக்கும், அப்பொழுது நீ வருவாய்.