173. நானாக அதைக் கூறினதே கிடையாது; ஏவாள் காயினை சர்ப்பத்தினால் கர்ப்பந்தரித்தாள் என்று கூறினேன். ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று “தேவனால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என்று கூறினாள். ஆதியாகமம் 4ம் அதிகாரம் 1ம் வசனம் தெளிவாகக் கூறுகின்றது. நிச்சயமாக! எல்லா ஜீவனும் தேவனிடத்திலிருந்துதான் வரவேண்டும். ஜான் டில்லிங்கர் தேவனிடத்திலிருந்து தான் வந்தான். அடால்ப் ஹிட்லர் தேவனிடமிருந்துதான் வந்தான். ஒவ்வொரு... ஜார்ஜ் - ஜார்ஜ் விட் ஃபீல்டு தேவனிடமிருந்து வந்தார். அதே போன்று பாப் இங்கர்சால் கூட, ஒவ்வொரு நபரும் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள் தான்.
174. நான் கூறினதெல்லாம் இது தான்: இதை யாராவது இடித்து வீழ்த்தும்படியாகவே நான் விரும்புகிறேன். பாருங்கள்? வேதாகமம் கூறுகிறது - அவர் (ஆதியாகமம் 3:8ல்) - நான்... அந்த... இந்த கேள்வியானது ஏவாளுக்கு ஏதோ ஒன்று நேர்ந்த போது கேட்கப்பட்டது, அவள் சர்ப்பத்தை சந்தித்தாள். இப்பொழுது சர்ப்பமானது ஒரு பாம்பாக இருக்கவில்லை; அவன் ஒரு மிருகமாக இருந்தான், சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளவனாயிருந்தான். அங்கே ஒன்றுமே...
175. மனிதனையும் குரங்கையும் ஒன்றாக இணைத்துக் காட்டக்கூடிய ஏதோ ஒரு மிருகத்தின் எலும்பை இன்றைக்கு விஞ்ஞானமானது நோக்கி கொண்டிருக்கிறது. அதற்கு நெருங்கின இனமாக மனிதன் போன்று வாலில்லா ஆப்பிரிக்க குரங்கு வகையான சிம்பான்சியை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். அவர்களால் ஒரு எலும்பையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்களால் முடியாது, ஏனெனில் அது சர்ப்பமாயிருந்தது. இது தேவனுடைய வெளிப்பாடாகும்.
176. கவனியுங்கள்! சர்ப்பமானது ஒரு வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்த மனிதனைப் போன்று, தேவனுக்கு அல்லது மனிதனுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒன்று. ஆகவே அது தான் ஒரேயொரு காரியமாகும். சாத்தான் வேறொரு விலங்கை உபயோகிக்க நேர்ந்திருந்ததேயானால், அந்த வித்தானது ஸ்திரீயினுடைய வித்துடன் கலந்திருக்காது. எந்த ஒரு விலங்கின் வித்துடன் ஒரு மனிதனின் வித்தை உங்களால் கலக்க முடியாது. அது கிரியை செய்யாது. இந்த விலங்கிற்கு முற்றுபுள்ளி வைத்தாயிற்று- அது அழிந்து விட்டது. தேவன் அவனை ஒரு பாம்பாக மாற்றி விட்டார். ஆனால் நினைவு கூறுங்கள்...
“ஏன் நீ ஒளிந்து கொண்டாய்? ஏன் நீ உன்னையே அத்தி இலைகளினால் மூடிக் கொண்டாய்?" என்றார்.
அப்பொழுது அவர்கள் ஒருவரை நோக்கி ஒருவர் பழி சுமத்த ஆரம்பித்தனர் - ஒரு சேனையிலுள்ளவர்கள் செய்வது போல. ஆதாம், “நீர் எனக்கு தந்த ஸ்திரீயானவள், அதின் கனியை எடுக்கும்படிக்கு என்னை கவர்ச்சியூட்டி இழுத்தாள்” என்றான்.
177. அதற்கு அந்த ஸ்திரீயானவள், “சர்ப்பமானது என்னை வஞ்சித்தது” என்றாள். இப்பொழுது, வஞ்சித்தல் என்றால் என்ன அர்த்தம்? “அவள்- அவன் என்னை வஞ்சித்தான்”
178. தேவன் “உன் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் நான் பகை உண்டாக்குவேன்” என்று கூறினார், வித்து! சர்ப்பத்திற்கு வித்தென்பது உண்மையாகவே இருந்தது, அது காயீனின் மூலமாக வந்தது. பெருவெள்ளம் ஏற்பட்ட காலம் வரை மெருகேற்றப்பட்ட அறிவாளிகள், கல்வி அறிவு பெற்ற மக்கள் எல்லாருமே காயீனின் மூலமாகத் தான் வந்தனர். அதற்குப்பிறகு கொல்லப்பட்ட ஆபேல் வந்தான். இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலை பிரதிநிதித்துவப்படுத்தத்தக்கதாக அவனுடைய இடத்தில் சேத் எழுப்பப்பட்டான். அவனிலிருந்து ஆடு மேய்ப்பவர்கள், தாழ்மையான மக்கள் வேதபயமுள்ள மக்கள் இன்னும் பிற மக்கள் வந்தனர். இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் இராஜ்யத்தின் பிள்ளைகளைக் காட்டிலும் அறிவாளிகளாகவும், சாதுரியமானவர்களாயிருக்கிறார்கள் என்று இயேசு கூறினார். அது சரியே!
179. அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க நம்மால் முடியாது. அவர்களைப் போல உங்களை ஆக்கி கொள்ள முயற்சிக்காதீர்கள், தேவனுக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள். அறிவாளியாகவும் சாதுரியவானாகவும் இருக்க விருப்பம் கொள்ளாதீர்கள். இயேசுவை மாத்திரமே அறிந்து கொள்ள வாஞ்சை கொள்ளுங்கள், அதை அப்படியே விடுங்கள், ஏனெனில் அங்கே தான் இன்றைக்கு சர்ப்பத்தின் வித்தானது இருக்கின்றது. ஆனால், விஞ்ஞானிகளும், நாகரீகப் பாங்கான மனிதர்களும், கல்வி அறிவு பெற்றவர்களும், மகத்தான அறிஞர்களும் தங்கள் சபைகளில் இருக்கிறார்கள் என்று மக்கள் பெருமைக்குரிய சிறப்பாக கூறிக்கொள்கின்றனர். நான் அதைக் காட்டிலும் ஆரம்ப எழுத்துகளைக் கூட (a,b,c) அறியாதிருக்கிற ஆனால் அவன் கிறிஸ்துவின் வித்தாக இருக்கின்ற வரைக்கும் தேவனை நன்றாக அறிந்திருக்கிற, ஒரு மனிதனை என் சபையில் கொண்டிருப்பதையே நான் விரும்புவேன் (சரியா!).
180. ஸ்திரீயின் வித்தானது, கிறிஸ்துதான் அந்த ஸ்திரீயின் வித்தாகும். கிறிஸ்துவை மரியாள் பிறப்பித்தாள். காயீன் யூதாஸ் காரியேத்துக்குள் வந்தது தான் சர்ப்பத்தின் வித்தாகும். அங்கே சரியாக இயேசு மற்றும் யூதாஸ் அவதாரம் எடுத்திருந்தனர், தேவன் மற்றும் பிசாசு. கல்வாரி சிலுவையில் அங்கே நான்கு பேர் மரித்துக் கொண்டிருந்தனர். இயேசுவின் இரு பக்கத்திலும் கள்ளர் இருந்தனர், யூதாசும் ஒரு காட்டத்திமரத்தில் தூக்கிட்டுக் கொண்டான். “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப் பட்டவன்” அதுவும் ஒரு சிலுவைதான்:
அங்கே இருந்த ஒரு கள்ளன், 'நீர் தேவனுடைய குமாரனானால் எங்களை கீழே இறங்கச் செய்யும்” என்றான்.
181. மற்றவனோ, "கர்த்தாவே, நாங்கள் நியாயப்படி தண்டிக்கப் படுகிறோம்; நீரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே. நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று கூறினான்.
இயேசு, “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசியில்லிருப்பாய்” என்று கூறினார்.
182. சுவிசேஷப் பிரசங்கியாகிய இயேசு, சிலுவையின் மீது அங்கே பிரசங்கித்துக் கொண்டிருந்தார். சாத்தான் அவிசுவாசியாகிய அந்த சர்ப்பத்தின் வித்தை தன்னுடன் எடுத்துக் கொண்டு திரும்பவுமாக பாதாளத்திற்கு சென்று கொண்டிருந்தான். ஸ்திரீயின் வித்தாகிய அவருடனே ஒரு மனந்திரும்பின பாவியுடன் தேவன் பரலோகத்திற்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். நிச்சயமாக!
183. அது பிசாசினுடைய வித்தல்ல; அது சர்ப்பத்தின் வித்தாக இருந்தது. சர்ப்பம் வித்தைக் கொண்டிருந்த ஒன்றாக காணப் பட்டது; அதற்கு வித்து இருந்ததென்று வேதாகமம் கூறுகின்றது. அந்த சர்ப்பத்தின் வித்தானது இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதிகளவில்...
இப்பொழுது நீங்கள் இதைக் குறித்து மற்றொரு கேள்வியை என்னிடம் கேட்கலாம். நமக்கு மாத்திரம் நேரம் இருந்தால், உங்களுக்கு தேவையான எல்லா காரியங்களும் என்னிடம் இருக்கின்றது...