51. இப்பொழுது, இதை எழுதிய நபர், லூக்காவைக் குறிப்பிடுகிறார்... அவர் - அவர் என்னிடம் கூறினார், நம்முடைய சகோதரன், “புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் மதில்கள் புறஜாதியாரால் மிதிக்கப்படும்” என்று வேதம் கூறுவதை அவர் குறிப்பிடுகின்றார். அது லுக்கா 21:24. இதைக்கூர்ந்து கவனியுங்கள். இது விளங்கச் செய்யும். அருமையான கேள்வி! அற்புதமானது.
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும் போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
52. இப்பொழுது, இதை நாம் கூர்ந்து கவனிப்போமாக. “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும் போது, அதின் அழிவு சமீபமாயிற்று.” இப்பொழுது, இதைக் குறித்து அநேக குழப்பங்கள் உள்ளன. ஜனங்கள்… ஆனால் வேதத்தைக் கொண்டு சரித்திரப்பூர்வமாக அதை நீங்கள் அணுகுங்கள்.
53. இப்பொழுது, ஏழாம் நாள் ஆசரிப்பு சகோதரர் எருசலேம் மறுபடியும் சேனைகளால் சூழப்படும் என்று விசுவாசிக்கிறார்கள். நல்லது. இப்பொழுது, அது உண்மையாக இருக்கலாம், ஏனெனில் வேத வசனமானது அநேக அர்த்தங்கள் கலந்து இணைந்ததாய் இருக்கின்றது.
54. வேதாகமம், ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் அநேக அர்த்தங்களை கொண்டிருக்கிறது என்பதை உங்களில் எத்தனைப்பேர் அறிவீர்கள்? நிச்சயமாக! ஆம் ஐயா, அது அதைக் கூறி இந்த காலத்தைத்தான் அது குறித்துக் காட்டி, திரும்பவுமாக மறுபடியும் இங்கே உள்ள ஏதோ ஒன்றைக் குறித்து கூறும். பாருங்கள்? நான் சீக்கிரமாக சிந்திப்பேனானால் சிலவற்றை நான் குறித்துக் காட்டுவேன். ஓ, ஆம். இங்கே லூக்காவில் ஒன்றுள்ளது... மத்தேயு 2ல், “என்னுடைய... எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன், என்று கூறுகின்றபடி, தீர்க்கதரிசியினால் பேசப்பட்டது நிறைவேறும்படியாக, இயேசு எகிப் திலிருந்து வரவழைக்கப்பட்டார்”, என்று கூறுகின்றது.
55. இப்பொழுது, அந்த தீர்க்கதரிசனம், தீர்ககதரிசியால் குறித்துக்காட்டப்பட்ட அது சரியாக இஸ்ரவேல் (தேவனுடைய குமாரன்) குறித்துக் காண்பிக்கின்றது. அவன் எகிப்திலிந்து வர வழைக்கப்பட்டான். ஆதியாகமத்திலும், யாத்திராகமத்திலும்அது சரி. ஆனால் அது - அங்கே குறிப்பிடப்பட்ட அது, மறுபடியும் இங்கே சொல்லப்படுகிறது. அவர் பார்வோனிடம் “நீ...” என்றார். “நீ - நீ...” என்றார். அவன் அவருடைய குமாரனுக்கு என்ன செய்தான். அவர் அந்த ஜீவனை அழிப்பேன்... அவன் அவருடைய குமாரனை போகவிடவில்லை, ஆகவே பார்வோன்... தேவன் பார்வோனின் குமாரனைச்சங்கரித்தார்... அல்லது அந்த மரணதூதன் அதைச் செய்தான் ஆகவே அது அநேக அர்த்தங்களைக் கொண்டதாயுள்ளது.
56. ஆகவே, இப்பொழுது, எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருந்ததைக் குறித்து, நிஜமாகவும் சரித்திரப்பூர்வமாகவும், அது கி.பி.96 ஆம் வருடத்தில், தீத்து எருசலேமை முற்றுகையிட்டபோது நிகழ்ந்தது. இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால் வித்தியாசத்தைக் காணக்கூடும். கடைசி காலத்தில் எருசலேம் சேனைகளால் சூழப்படும் என்று விசுவாசிக்கிறேன். தீத்து அவர்களை முற்றுகையிட்ட பொழுது, அந்த அழிவு நடந்தபொழுது இங்கே இது அதனுடன் ஒத்திருக்கின்றது என்று தான் நம்புகிறேன்.
57. இப்பொழுது, “அந்த அழிவைக்குறித்து தீர்க்கதரிசி தானியேல் பேசும்பொழுது... அது பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கையில்” என்று கூறுகிறான். கவனியுங்கள், அவன், “நீங்கள் பாழாக்கும் அருவருப்பை, பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும் போது” என்று கூறுகின்றான். பாருங்கள், “அந்த அருவருப்பு” அருவருப்பு என்றால் “அசுத்தம்”, “பாழாக்குதலைச் செய்கின்ற”, பாழாக்குதல் என்றால் “அப்புறப்படுத்து” “அழித்தல்”, “நீங்கள் பாழாக்கும் அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக்காணும் போது,” தீத்து எருசலேமை முற்றுகையிட்டபோது வேதபூர்வமாக நிறைவேறினது அதை எடுத்து…
58. இந்த அதிகாரத்தின் துவக்கத்தில் “கடைசி காலம் எப்பொழுது இருக்கும்? கிறிஸ்துவின்... வருகைக்கான அடையாளங்கள் என்ன?” என்று அவர்கள் அவரிடத்தில் கேட்டனர். தேவாலயத்தைக் குறித்தும், அது எப்படி இருந்தது என்றும், எப்படி மகத்தான கற்களால் அது அலங்கரிக்கப்பட்ட தென்றும் அவர்கள் (சீஷர்கள் தமிழாக்கியோன்) அவரிடத்தில் கூறினர்.
59. அவர், “ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டு போகும் வேளை வரும், எல்லாம் இடித்துப் போடப்படும்” என்று கூறினார். அவர் அவர்களுக்கு அற்புதங்களையும், அடையாளங்களையும் கொடுக்கத் துவங்கினார். அப்பொழுது, இயேசு அவர்களிடையே பேசுகையில், தானியேலுக்கு திரும்புகிறார், ஏனெனில் எல்லா தீர்க்கதரிசனங்களும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து நிறைவேற வேண்டும். முழு வேத வாக்கியங்களும் எங்கேயும் தவறாததாய் உள்ளது.
60. இயேசு, “வேத வசனங்கள் தவறாததாயிருக்கின்றன”, ஆமென். அங்கே... தான் பரலோகத்திற்குப் போகிறேனா? நிச்சயமாக தான் செல்கிறேன், வேதவசனங்கள் தவறாததாயிருக்கின்றன. அடையாளங்களையும் அற்புதங்களையும் விசுவாசிக்காத உங்களுக்கு, எப்படி நீங்கள் வேத வசனத்திலிருந்து விலகியிருக்க முடியும்? வேதவசனங்கள் எவ்வாறு தவறத்தாயிருக்கின்றனவோ அவ்வாறே கிறிஸ்துவையும் (மேலே இருக்கின்ற) புறம்பாக்கிட முடியாது, எப்படி மேலே இருக்கிற அவருடைய மகத்தான ஒவ்வொரு அசைவும் கீழே பூமியிலே பிரதிபலிக்கிறதோ அதே போன்று, அது அவ்வாறு இருந்தாக வேண்டும். ஆகவே கிறிஸ்து... உங்கள்... தெய்வீக சுகமளித்தல், தேவனுடைய வல்லமையானது இங்கே பூமியிலுள்ள மாம்சப்பிரகாரமான அல்லது ஆவிக்குரிய சபையிலிருந்து எடுக்கப்பட்டால், அது கிறிஸ்துவிலிருந்தும் நீக்கப்பட்டது போன்றதாகும். அவர் இன்னுமாய்...
61. ஆனால், ஓ, அந்த உண்மையான திராட்சைச் செடியைப் பற்றியும் கொடிகளாகிய நம்மைப் பற்றியும் என்ன ஒரு அருமையான காட்சி. பாருங்கள்? திராட்சைச்செடி எங்கே செல்கிறதோ அங்கே கொடிகளும் செல்லுகின்றன. அது சரியா? அவருடைய சரீரமானது அசைவுக்குள்ளும் வல்லமைக்குள்ளும் வருவது போன்று அவருடைய மகத்தான சரீரம், ஓ, அவருடைய மகத்தான இரத்தம் வடிகின்ற கரங்கள், விழுகின்ற கண்ணீர், இரத்தம் வடிகின்ற அவருடைய விலாக்கள், அடிக்கப்பட்ட அவருடைய முதுகு, இதைப் போன்று பூமியின் மேலே தேவனுக்கும் (பிதா) பூமியிலுள்ள அழிவுள்ள மானிடர்களுக்கும் நடுவே தொங்கிக் கொண்டு, பரிந்து பேசிக்கொண்டு அவர்களை நேசிக்கின்றாரே அது சபைக்குள் அளிக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவு அழகான ஒன்றல்லவா!
62. “என்னுடைய கரங்களை இவ்வழியாய் அசைப்பேன்” என்று அவர் கூறுகையில், அவருடைய சரீரமானது அசைகின்றது. “இங்கே சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்”, அந்த சபை சரியாக நேரே செல்வதை நீங்கள் காண்பீர்கள். ஏனென்றால் என் கையினுடைய நிழலானது கையுடனே செல்ல வேண்டும். ஆமென். அது சரியா? ஆமென். ஓ, என்னே, அதைக் குறித்து நான் நினைக்கையில், அங்கே அவர் இருக்கிறார், அவருடைய சரீரமானது அசைகின்றது, “நீங்கள் உலகமெங்கும் போய், வல்லமையை பிரஸ்தாபித்துக் காட்டுங்கள்”, காரியம் என்னவென்றால் நம்முடைய வேத கல்வி, போதகங்களை, இன்னும் காரியங்களை செய்வோமானால் நாம் மோசமாகத் தோல்வியுறுவோம், ஆனால் இப்பொழுது தேவனுடைய கரமானது அசைந்து, அடையாளங்களும் அற்புதங்களும் நம் கண்ணெதிரில் தோன்றிக் கொண்டுள்ளன. ஏன், என்னே?
63. இயேசு அங்கே பிசாசுகளைத் துரத்தின போது கூறினார்... இப்பொழுது ஒரு க்ஷணம் கேள்வியை விட்டு அகன்று செல்கிறோம். ஆனால் இயேசு பிசாசுகளைத் துரத்தும் போது, “உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் எதினால் அவைகளைத் துரத்துகிறார்கள்? நீங்கள் இதைவிட சிறந்ததை உடையவர்களாய் வைத்திருந்தால், எங்களுக்கு - அதை காண்பியுங்கள்,” என்றார். பாருங்கள்? “நான் தேவனுடைய விரலி னாலே...” ஆமென். தேவனுடைய “விரலை” குறித்து சற்று சிந்தியுங்கள். கிறிஸ்துவிற்கு மேலாக தேவன் இருக்கிறார்; சபைக்கு மேலாக கிறிஸ்து. அங்கே, பிதா, சில - சில காரியங்களைக் கூறுகிறார்; பிறகு தேவன், குமாரன் தம்முடைய கரத்தை அசைக்கின்றார், நிழல் அதைத் தொடர்கிறது? “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்?”
64. கவனியுங்கள், நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஓ, பிசாசு உங்கள்மேல் எவ்வளவு பெரிய வியாதியையும் வருத்தத்தையும் கொண்டு வந்தாலும் பரவாயில்லை, அவைகளை அகற்ற அவருடைய விரல் ஒன்றே போதும். ஓ, என்னே! என்னே! அவைகளைப் பாருங்கள், அவைகள் மிகப் பெரிய, வலுவான தோள்களும் கரங்களும், தசைகளும் கொண்டுள்ளன. ஆனால் அவருடைய விரல் ஒவ்வொரு வியாதியையும் பிசாசுகளையும் வெளியேற்றுகிறது. பிசாசு எவ்வளவு சிறியதான ஒன்று!. அவர் தம்முடைய விரலைக் கொண்டு அவனைத் தூரத்தள்ளி விடுகிறார். “நான் தேவனுடைய விரலினாலே...”
65. இப்பொழுது, நான் உங்களுக்கு தேவனுடைய அன்பை நான் காண்பிக்கட்டும். ஆனால் ஒரு ஆடு தொலைந்த போதோ, அவர் தம்முடைய விரலை உபயோகிக்கவில்லை, அதைத் தம்முடைய தோள்களின் மீது கிடத்தினார். அவர் தம்முடைய முழுவதையும், கைகளையும் பிரயோகித்து ஆட்டை தம்முடைய தோளின் மீது வைத்தார். ஒரு மனிதனுடைய தோள்களும், முதுகும் ஒரு மனிதனின் மிகவும் பலங்கொண்டதும், வல்லமை கொண்டதுமான பாகங்களாகும். நீங்கள் அதை அறிவீர்கள். அவர் தம்முடைய கைத்தசைகள், தசைகளினால் அந்த முழு ஆட்டையும் தூக்கி தம் தோளின் மீது வைக்கிறார். ஆகவே அவர் ஒரு சிறிய, பழைய பிசாசை ஓட்ட தம் விரலைக்கொண்டு வருவதுபோன்று வரவில்லை, ஆனால் இங்கே தம்முடைய எல்லா தசைகளையும், கால் தசைகளையும், கை தசைகளையும் கொண்டு, வனாந்திரத்தில் சென்று, காணாமற்போன அந்த ஆட்டை எடுத்து தம் தோளின் மீது வைத்துக் கொள்கிறார். ஓ, என்னே! “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்” ஓ, அல்லேலுயா! என்னே!
66. சரி, இப்பொழுது பொருளிற்கு வருவோம்:
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது...
அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப் போகவும்... வெளியே புறப்படவும்... நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள்...
எழுதியிருக்கிறபடியாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிகட்டும் நாட்கள் அவைகளே.
அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின் மேல் மிகுந்த இடுக்கணும் இந்த இனத்தின் மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
பட்டயக் கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதி களுக்குள்ளும் சிறைபட்டுப் போவார்கள்;
67. கவனியுங்கள். அதைக் குறிப்பாக எடுத்துக் காட்ட இங்கே வேத வாக்கியங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன. முதலாவதாக, “பட்டயங்களின்கருக்கினாலே” கடைசியாக வருவது அணுகுண்டு ஆகும். பாருங்கள்? ஆனால் இது பட்டயக்கருக்கினால் உண்டாகிறது, யூதர்கள் எல்லா நாடுகளுக்கும் சிறையாக்கிக் கொண்டு செல்லப்பட்டனர். அது அவ்விதம் மறுபடியும் இருக்காது, அவர்கள் கடைசி காலத்திற்காக பாலஸ்தீனாவில் ஒன்று சேர்க்கப்படுவார்கள். பாருங்கள்? இது கடந்து போன நாட்களைக் குறிக்கின்றது. அது சரித்திர பூர்வமாக அப்படியே நடந்தேறியது.
68. அவர்கள் எல்லா நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். வானத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் நீங்கள் யூதர்களைக் காணலாம். ஓ, ஒவ்வொரு தேசத்திலும், நீங்கள் சீனாவிற்குச் சென்றால் அங்கே யூதர்களைக் காணலாம். நீங்கள் ரஷ்யாவிற்குச் சென்றால் அங்கே யூதர்கள் இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு சிறு தீவுகளுக்கும் செல்லுங்கள், அங்கே யூதர்களைக் காணலாம். ஒவ்வொரு தேசத்திலும் சிதறடிக்கப்பட்டிருக்கிறீர்கள், அது என்ன? தேவனுடைய தீர்க்கதரிசனம் ஆகும். தேவன் அதை எத்தனித்தார். சகோதரளே, அந்த யூதர்கள்தான் தூரத்தைக் காட்டும் அடையாளக் கம்பங்கள் ஆவர். நீங்கள் அவர்களைக் காணும்போது...
69. அவர்கள் குருடாயிருந்து, கொண்டு செல்லப்பட்டனர் என்று எனக்குத் தெரியும். அவர்கள் ஏமாற்றப்பட்டார்கள். நீயும் நானும் காணத்தக்கதாக அவர்கள் தேவனால் குருடாக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டனர். அது சரி. ஆனால் தீர்க்கதரிசன ஆவியைக் கொண்டும், வேதத்தைக் கொண்டும் நான் கூறுகிறேன், யூதன் வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது. ஆம் ஐயா, அவர் ஹிட்லரின் இருதயத்தைக் கடினப்படுத்தி ஜெர்மனி தேசத்திலிருந்து அவர்களை விரட்டினார்; முசோலினியின் இருதயத்தைக் கடினப்படுத்தினார், ரஷ்யாவை விட்டு அவர்களை விரட்டினார். அவர் அவர்களை வெளியே கொண்டு வர அந்நாட்களில் செய்தது போல அவர் அவர்களை எவ்விடத்திலிருந்தும் விரட்டிக் கொண்டிருக்கிறார். அவர்கள் வனாந்தரத்தில் சென்று அங்கே கடந்து செல்ல ஆயத்தமாயிருந்த போது, என்ன நிகழ்ந்தது? தேவன் மகத்தான வாதைகளையும் மற்ற காரியங்களையும் கொண்டு அந்த தேசத்தைச் சந்தித்தார். அவர், எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்தல் 11ல் வருகின்ற இரண்டு ஒலிவமரங்களாகிய தமது இரண்டு ஊழியக்காரர் வருகையில் அவர் மறுபடியும் அதைச் செய்வார். அவர் அந்த அற்புதங்களையும் அடையாளங்களையும் மறுபடியும் செய்வார்.
70. வெளிப்படுத்தல் 11ல் வரும் அந்த இரண்டு சாட்சிகளைப் பாருங்கள், “என்னுடைய இரண்டு சாட்சிகளுக்கும் அதிகாரம் கொடுப்பேன், அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாட்களிலே வானத்தை அடைப்பார்கள். வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிப்பார்கள்.” அவர்கள் கடைசி நாட்களில் வருகின்ற இரண்டு சாட்சிகள் ஆவர்.
71. “அது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு” என்கின்ற நவீன போதகம் எனக்குத் தெரியும். அது தவறு! அது தவறு!
72. இங்கே அந்த இரண்டு சாட்சிகள், சரியாக மோசேயும் எலியாவும் திரும்ப வருதல் ஆகும். நீங்கள் கவனியுங்கள், அவர்கள் ஒவ்வொருவரும்... மோசே, அவன் மரித்தான், ஆனால் அவன் எங்கு சென்றான்? அவன் மறுபடியும் எழுந்திருக்க வேண்டும். எலியா மரணத்தைக் காணாமல் மறுரூபமாக்கப்பட்டான். அவன் மரிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மானிடனும் மரிக்க வேண்டும். ஆகவே அவன் மறுபடியும் திரும்ப வர வேண்டும். ஆகவே அவர்கள்தான் அந்த இரண்டு சாட்சிகள் ஆவர்.
73. இப்பொழுது கவனியுங்கள்:
அவர்கள்... பட்டயக் கருக்கினாலே விழுவார்கள்... (24வது வசனம்)... புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டு போவார்கள். புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும்... (ஆமென்!)... எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
74. நமக்கு சிறிது காலம் மாத்திரமே உள்ளது என்பதை அறியும் போது, அது அதிர்ச்சியூட்டுகின்றதாய் இருக்கிறதல்லவா? தேவன் அவ்வாறே கூறியுள்ளார்! நேபுகாத்நேச்சார் ராஜாவோடு புறஜாதியாரின் காலம் துவங்கியது. ஓ, என்ன குறிப்பிடத்தக்க ஒன்று! இந்தப்பொருளின்மேல் எவ்வளவு நேரமாகிலும் என்னால் செலவழிக்க முடியும், ஆனால் இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே உள்ளன! ஆனால் கவளியுங்கள், எல்லாரும் தங்கள் கேள்விக்கு பதில் பெற விரும்புகின்றனர். ஆனால் நாம் இதன் மேல் பேசுகையில், நாம் இதைக் குறித்து சிந்திப்போம், சரியாக இப்பொழுது அது நமக்கு மிகவும் தேவையான ஒன்றாய் உள்ளது.
75. கவனியுங்கள்! தேவன் யூத மக்களை நடத்தினார். அவர்கள் ஒரு தேசமாக இருக்கவில்லை, அவர்கள் ஒரு ஜனங்களாய் இருந்தனர். அவர்கள் வெளியே அழைக்கப்பட்ட ஒரு சபையாய் மாத்திரம் இருந்தனர். யூதர்களுக்குள் எப்போதுமே ஒரு ஸ்தாபனம் இருந்ததில்லை, அவர்கள் எப்போதுமே தேவனால் வழிநடத்தப் பட்டனர்.
76. ஆகவே அவர்கள் பிறகு அரசியல் ரீதியாகவும், தேச ரீதியாகவும் வரவிரும்பிய அவர்களுக்கு... ஒரு ராஜா தேவைப்பட்டது. ஆகவே தேவன் அவர்களுக்கு ஒரு ராஜாவைக் கொடுத்தார். ஆனால் அது கிரியை செய்யவில்லை. தேவன்தான் அவர்களுடைய ராஜா. தேவன்தான் நம்முடைய ராஜா, அது சரி, தேவன்தான் சபையினுடைய ராஜா.
77. இப்பொழுது, கவனியுங்கள். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனிற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் பூமியிலுள்ள நாடுகளைப் போல போலியாக இருக்க விரும்பினர். இன்றைய சபை உலகத்திற்கு அது என்ன ஒரு அருமையான காட்சி. இன்றைக்கு சபை உலகத்தைப் போலியாக்கிக் காண்பிக்க முயன்று, தங்களுடைய வாழ்க்கையின் போக்கிலே அப்படியே அடித்துச் செல்லப்படுகின்றனர். உலகம் ஜீவிக்கிறது போல சபையும் ஜீவிக்கிறது, அப்படியே செய்து கொண்டு, அப்படியே நடந்து கொண்டு எல்லாவற்றையும் செய்து கொண்டு, தான் சபையென்று கூறிக் கொண்டிருக்கிறது. நீ அதைச் செய்யக் கூடாது. இல்லை ஐயா. நீ யார் என்பதை உன் ஜீவியம் நிரூபிக்கிறது.
78. நீ யார்... நான் துவக்கத்தில் கூறினது போன்று. நீ வேறெங்கேயோ என்னவாய் இருக்கிறாயோ அதைத்தான் நீ இங்கே பிரதிபலிக்கிறாய், உன்னுடைய, மேலே எங்கேயோ உள்ள வானத்துக்குரிய சரீரம் (celestial body) எப்படியுள்ளதோ அல்லது பூமிக்குரிய சரீரம் (terrestrial body) எங்கோ எப்படி உள்ளதோ அதைத்தான் இங்கேயும் பிரதிபலிக்கிறாய். ஆவிக்குரிய தேசத்தில் என்னவாய் இருக்கிறாயோ அதே போன்றுதான் இங்கேயும் இருக்கிறாய். நீ ஆவிக்குரிய பிரதேசத்தில் கெட்ட சிந்தையுடையவனாய் இருந்தால் இங்கேயும் கெட்ட சிந்தையுடையவனாய் இருக்கிறாய். பகைமை எண்ணம், பொறாமை, சச்சரவு உள்ளம் போன்றவைகளை ஆவிக்குரிய இடத்தில் கொண்டிருப்பாயானால் அது இங்கே திரும்பி பிரதிபலிக்கும். ஆனால் உன்னுடைய முழு உள்ளான காரியங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தமாக்கப் பட்டிருந்தால், அங்கே உனக்காக சுத்தமாக்கப்பட்ட ஒரு சரீரம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அது காண்பிக்கின்றது, அது இங்கே மாம்சத்திலே பிரதிபலிக்கின்றது. இதை நீ காண்கிறாயா? பாருங்கள், இங்கே இருக்கிறது. “இந்த பூமிக்குரிய கூடாரமாகியநம்முடைய வீடு அழிந்துபோனாலும்நமக்காக ஒன்று ஏற்கெனவே காத்துக்கொண்டிருக்கின்றது.” பாருங்கள்?
79. இப்பொழுது, இந்தக் காலத்தில் இந்த கடைசி காலத்தில், எப்படி இந்த மாம்சீக ஒப்பனை செய்தல், கிறிஸ்தவ மதத்தை போலியாக்குதல் எல்லாம் கலந்து அப்போது நடந்தது போல ஒரு பெரிய பாபிலோனாகி உள்ளது. அவர்கள் பாபிலோனுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். அது சரியா? “கர்த்தருடைய தூதன் வந்து என் ஜனங்களே, 'பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்! என்று அழைத்தான்.” என்று வேதம் கூறுகின்றது.
80. குழப்பம்! “நான் ஒரு பாப்டிஸ்ட், நான் ஒரு மெத்தோடிஸ்டு, நான் ஒரு பிரஸ்பிடேரியன்” இது எல்லாம் குழப்பமே. அதில் இரட்சிப்பு என்பதே கிடையாது.
81. இப்பொழுது, பாப்டிஸ்டு மக்கள் இரட்சிப்பைப் பெறவில்லை, மெத்தோடிஸ்ட் மக்கள் இரட்சிப்பைப்பெறவில்லை என்று நான் கூறவில்லை. நான் அதைக் குறித்து பேசவில்லை. நான் சபையைக் குறித்தும் அதினுடைய அரசியல் வல்லமையைக் குறித்தும் நான் பேசுகிறேன். அது அரசியல். அரசியல் பூர்வமாகப் பேசினாலும், ஏனெனில் நீ மெதோடிஸ்டாக அல்லது பாப்டிஸ்டு அல்லது பிரஸ்பிடேரியன் அல்லது கத்தோலிக்கனாக இருப்பதால் அதனுடன் செய்வதற்கு ஒன்றுமில்லை. தேவன் அதை அங்கிகரிப்பதில்லை. ஆகவே அது இன்றைக்கு பாபிலோனாக இருக்கிறது, தேவன் தமது சபையை, இருதயத்தில் சுத்தமுள்ளவர்களை, அவைகள் எல்லாவற்றையும் விட்டு வெளியேவர அழைக்கிறார், அதை தம்முடைய சபையாக்குகிறார். எவ்வளவு அழகான ஒன்று!
82. இப்பொழுது கவனியுங்கள், உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் காரியத்தை என்னால் கூற முடியும். ஆனால் அது... கவனியுங்கள், இப்பொழுது கவனியுங்கள். பாபிலோன் எப்படி... என்ன நடந்தது. பாபிலோனில், உண்மையாக தொழுது கொண்டவர்கள் மீது நிர்ப்பந்தம் கொண்டு வரப்பட்ட போது என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். அன்று சிறைபிடிக்கப்பட்டவர்களில், தேவனை உண்மையாக தொழுது கொண்டவர்களாகிய வெகு சிலரான ஷாத்ராக், மேஷாக் ஆபெத்நேகோ, தானியேல், தாங்கள் யார் என்றும், அவர்களுடைய உண்மையான சுவாபம் என்ன வென்றும் காண்பிக்க தேவன் அவர்களை அழைத்ததை நினைவில் கொள்ளுங்கள். ஒரு விக்கிரகத்தை வழிபட அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். அது சரியல்லவா? விக்கிரக ஆராதனை! அவர்கள் விக்கிரகத்தை வணங்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டனர், ஒரு சொரூபத்திற்கு முன்பு தலை வணங்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால், அவர்கள் துன்புறுத்தப் பட்டனர்.
83. ஓ, தானியேலையும், வெளிப்படுத்தின விசேஷத்தையும் எடுத்து ஒன்றாக இணைத்து வேத வசனத்தின் மூலம் சபையும் வெளியே அழைக்கப்படுவதற்கு முன் அத்தகைய துன்புறுத்தல் அடைவாள் என்பதை காண்பித்தல் எவ்வளவு அழகான காட்சியாக இருக்கிறது. அந்த விதமாகத்தான் புறஜாதி சபையானது உள்ளே கொண்டு வரப்பட்டது. அந்த விதமாகவே புறஜாதி சபையும் வெளியே எடுக்கப்படும். எப்படி வருகின்றாளோ அவள் அவ்விதமாகவே செல்வாள்.
84. அவன் எப்படி அந்த சொரூபத்தைக் கண்டான் என்பதைச் கவனியுங்கள். ஆகவே, இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். அந்த சொரூபம்... இப்பொழுது இது சொந்த இடம். கவனியுங்கள். நேபுகாத்நேச்சார் ராஜா செய்த சொரூபம், பரிசுத்த மனிதனாகிய தானியேலுடையது என நான் நம்புகிறேன். நீங்கள் கவனிப்பீர்களானால், நேபுகாத்நேச்சார் அரசன் தானியேலை “பெல்தேஷாத்சார்” (அது அவனுடைய சொரூபமாயிருந்தது) என்று ஏற்கனவே அழைத்திருந்தான். அவன் ஒரு சொரூபத்தை உண்டாக்கினான். இந்த சிங்கக் கெபியில் தானியேலுக்கு பிறகு யாருமே போடப்படவில்லை. அவன் “தானியேலின் தேவனைத்தவிர, வேறே தேவர்களை யாரும் சேவிக்கக் கூடாது” என்றான், ஆகவே இந்த பரிசுத்த மனிதனின் சொரூபமாக அது இருந்திருக்கக் கூடும். அந்த மகத்தான சிலையை, எல்லாரும் வணங்க வேண்டியதாயிருந்தது.
85, ஆனால் சபையாகிய, ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ... தானியேல் தலைவனாய் இருந்தான், கிறிஸ்து சபைக்கு தலைவராய் இருக்கிறது போல.
86. ஆகவே அவர்கள் இந்த சொரூபத்திற்கு வணங்கி, அதை சேவிக்க வேண்டியதாய் இருந்தது. கவனியுங்கள்! நீங்கள் கவனிப்பீர்களானால், அந்த நேரங்களில் தானியேல் அமைதியாயிருந்தான், ஆமென்! ஓ, இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். தானியேல் அமைதியாயிருந்தான், அவர்களை... அவர்கள் தங்கள் சொந்த தெரிந்தெடுத்தலை செய்ய வேண்டியவர்களாய் இருந்தனர்.
87. அந்த நாளில்... புறஜாதிகளின் சமயம் முடிவடையும் நேரத்தில், அங்கே ஒரு சொரூபம் இருக்கும், எல்லாரும் இந்த சொரூபத்தை வணங்கி, அதை தொழுது கொள்ள வேண்டும். அது எவ்வளவு பரிசுத்தமாய் இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு சொரூபத்தை தொழுது கொள்ளக்கூடாது (சொரூப -வழிபாடு).
88. இப்பொழுது கவனியுங்கள். ஓ, என்னே! கடைசி நேரத்தில், தானியேல் மறுபடியும் உள்ளே வருகிறான். எவ்வளவு மகத்துவமானது! வைப்பாட்டிகளுடனும், மற்றவர்களுடனும் அந்த மகத்தான விருந்து நடக்க இருந்த அந்த இரவில் சுவற்றில் ஒரு கையுறுப்பு வந்து “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்” என்று எழுதினது. அது அந்நிய பாஷையில் எழுதப்பட்டிருந்ததால், யாராலும் அதற்கு வியாக்கியானம் அளிக்க முடியவில்லை. யாருமே அதற்கு அர்த்தம் உரைக்க முடியவில்லை.
89. அவர்கள் சென்று சிறந்த ஞானிகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் “எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறினர்.
90. அவர்கள் சென்று அவர்களுடைய எல்லா குறி சொல்பவர்களையும், ஜோதிடக்காரர்களையும் அழைத்து வந்தனர், அவர்கள், “எங்களுக்குத் தெரியவில்லை. அதைக் குறித்து எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இதைப் போன்ற ஒரு பாஷையை, மொழியை நாங்கள் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை” என்றனர்.
91. ஆனால் அங்கே ஒரு மனிதன் இருந்தான்! தேவன் தம்முடைய மனிதனை வைத்திருந்தார். தானியேல் அங்கே இருந்தான். அவன் - “நீங்கள் சென்று அவனைக் கொண்டு வாருங்கள், ஏனெனில் தேவனுடைய ஆவி அவனுக்குள் வாசம் செய்கிறது” என்று கூறினான்.
92. ஆகவே தானியேல் அங்கே வந்து அந்த சுவற்றில் எழுதப்பட்ட அந்த பாஷையைப்படித்து அதை வியாக்கியானம் செய்கிறான். அவன்... அதின் வியாக்கியானம் செய்கிறான். அவன்... அதின் வியாக்கியானம் என்ன? “ஓ, நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக, ஓ ராஜாவே நீர் என்றும் வாழ்க” என்றல்ல, ஆனால் நேரடியாக முரடான குரலில், அவன் நேரடியாக நிராகரிக்கப்பட்டான் என்னும் விதத்தில், “நீ தராசிலே நிறுத்தப்பட்டு, குறையக் காணப்பட்டாய்” என்றான்.
93. கவனியுங்கள், அது அதே விதமாகத்தான் இருக்கின்றது. இயற்கைக்கு மேம்பட்ட காரியம் எப்படி புறஜாதியாரின் ராஜ்ஜியத்தை உள்ளே கொண்டு வந்ததோ, அதே போன்று இயற்கைக்கு மேம்பட்ட காரியம் இதை புறஜாதியாரிடமிருந்து வெளியே எடுக்கிறது. இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் ராஜ்ஜியம் ஆரம்பித்து, இயற்கைக்கு மேம்பட்ட விதத்தில் அது வெளியே செல்கிறது. எருசலேமின் மதில்கள் மேல் அவர்கள்... அது... “புறஜாதியாரின் காலம் நிறைவாகும் வரை புறஜாதியார் அதை கொண்டிருப்பார்கள்”. பிறகு தேவன் யூதர்களிடம் திரும்புகிறார். ஆமென்! ஓ என்னே!
94. ஓ, நண்பர்களே, இதன்மேல் இன்னுமாய் சென்று கொண்டிருக்க நான் விரும்புகிறேன். நீங்களும்தானே? நாம் இந்த பொருளின் மேல் சுமார் ஒரு வாரம் நீடித்திருக்கலாம், பாருங்கள், வேத வசனங்களை நாம் முழுவதுமாக ஆராய நமக்கு ஏதுவாயிருக்கும்.
95. அதை, கவனியுங்கள், இப்பொழுது அவர் என்ன கூறினார் என்று கூர்ந்து கவனியுங்கள், அவர் என்ன கூறினார், “புறஜாதிகளின் காலம் நிறைவேறும் வரை எருசலேம் புறஜாதிகளால் மிதிக்கப்படும்,” தீத்து எருசலேமை முற்றுகையிட்ட பின்னர் அதைப் பிடித்தான். அவர், “பாழாக்கும் அருவருப்பை நீங்கள் காணும்போது?” என்றார்.
“ஆம்” “நல்லது, புறஜாதிகள் உள்ளே வந்த பிறகுதான்” “ஆம், எங்களுக்கு புரிகின்றது” என்று சீஷர்கள் கூறினார்கள்.
“இப்பொழுது, புறஜாதியார் இப்பொழுது தங்கள் அரசாங்கத்தை கொண்டிருக்கின்றனர்”
“நிச்சயமாக”
96. “எருசலேம் அப்பொழுது புறஜாதியாரின் அரசாங்கத்தின் கீழ் இருந்ததா?” ஆம், ஐயா! ரோமர்கள். அவர்கள் இன்னும் எருசலேமில் அரசாங்கத்தைக் கொண்டிருந்தனர். தானியேல் பேசின அந்த பாழாக்கும் அருவருப்பு அப்போதே ஆரம்பித்து விட்டது.
97. இப்பொழுது அவர், “காலமானது சமீபமாய் இருக்கிறது, ஏனெனில் அவர்கள் முகமதியர், புறஜாதியர், இந்த ஆலயத்தை அழித்துப்போட்டு, ஒமர் மசூதியை இந்த இடத்தில் கட்டுவார்கள், இதே இடத்தில் அது நிற்கப்போகிறது, அது இங்கே நிற்கப் போகிறது.” என்றார்.
98. புறஜாதி என்றால் “அவிசுவாசி” என்று பொருளாகும். அது சபை அல்ல, இப்பொழுது, அது புறஜாதி, பாருங்கள், அவிசுவாசி. இப்பொழுது, -புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரை அது அங்கே நிற்கும். புறஜாதிகளின் யுகம் முடிவடையும்போது அந்த மகத்தான பிரபு கடைசிக் காலத்தில் மக்களுக்காக நிற்பார் (அவர் கிறிஸ்து).
99. தானியேலில், “அவனிடத்தில் அவர் வந்தார்” “அவருடைய சிரசின் மயிர் வெண்மையாய் இருந்தது” வெளிப்படுத்தின விசேஷம் 1ஆம் அதிகாரத்தில் நீங்கள் காண்பது போன்று. நியாயசங்கம் உட்கார்ந்தது, புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. எழுதப்பட்டவைகளின்படியே ஒவ்வொருவரும் நியாயத்தீர்ப்படைத்தனர். கவனியுங்கள், புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. “அவன் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் வந்தார், ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்” அவருடன் பரிசுத்தவான்கள் வந்தனர். அது சரியா, அது தானியேலில் உள்ளது. 'புஸ்தகங்கள் திறக்கப்பட்டன', அதுதான் தானியேலில் உள்ளது. “புஸ்தகங்கள் திறக்கப்பட்டன”, அதுதான் உன் ஜீவியத்தின் புஸ்தகமாகும். “ஒவ்வொரு மனிதனும் - இவ்விதம் நியாயந்தீர்க்கப்பட்டான். “வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது”, அதுதான் ஜீவ புஸ்தமாகும். “ஒவ்வொரு மனிதனும் நியாயந் தீர்க்கப்பட்டான்”.
100. இப்பொழுது கவனியுங்கள், அது மூன்றாக இருக்கின்றது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இதை நினைவில் கொள்ளவில்லையெனில் நிச்சயமாக நீங்கள் குழம்பிப் போவீர்கள். பூமியின் மேல் பிறந்த மக்களில் மூன்று வகையைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்; ஆதியில் மூன்று வகையினர் இருந்தனர்; கடைசியிலும் மூன்று வகையினர் இருப்பர். என்ன...
101. அவரைத் தொழுது கொண்டிருக்கிற ஆயிரமாயிரம் பேர்களோடும் இயேசு திரும்பி வந்தார். அவர் கூறினதை நினைவில் வைத்திருக்கிறீர்களா, “உங்களில் ஒருவனுக்கு வழக்குண்டானால், வழக்காடும்படி அவள்... அந்தக்காரரிடத்தில் போகத்துணிகிற தென்ன? பரிசுத்தவான்கள் உலகத்தை நீயாயந்தீர்ப்பார்கள் என்பதை அறியீர்களா?” பரிசுத்தவான்கள் பூமியை நியாயத்தீர்ப்பார்கள்! அல்லேலூயா! தான் அதை நினைக்கையில், என்னே! அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுடன் அவர் வருவதையும், ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு, மீட்பையும், காலங்கள்தோறும் மீட்கப்பட்டயாவரும் அவருடைய பிரசன்னத்தில் நிற்பதையும் காண்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன், என்னே! இரத்தத்தால் கழுவப்பட்ட மணவாட்டி!
102. நன்மக்களாய் இருப்பவர்கள் அல்ல, அவர்கள் நிச்சயமாக முதலாம் உயிர்த்தெழுதலில் இருக்க மாட்டார்கள், வேதம், “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை,” என்று கூறுகிறது. அது சரியல்லவா? அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள், ஆனால் பரிசுத்த ஆவியை பெறமறுத்தவர்கள்.
103. அந்நேரத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவர் மாத்திரமே உள்ளே செல்வர். ஆயிரவருட அரசாட்சியில் தெரிந்து கொள்ளப்பட்டவர் மாத்திரமே செல்வர். ஓ, அப்படியானால், சகோதரனே, என்ன விதமான மக்களாய் நாம் இருத்தல் வேண்டும்? நான் ஆயிர வருட அரசாட்சியில் முழுவதுமாக இருக்க விரும்புகிறேன்! நாம் நம்முடைய பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் புறம்பே தள்ளுவோமாக. ஒரு சகோதரன் ஏதோ ஒன்றைக் தவறாக கூறி, அல்லது இந்த விதமாக தவறாகச் செய்தால், நாம் அவருக்காக ஜெபித்து, தொடர்ந்து சென்று கொண்டே இருப்போம். உன்னுடைய ஒரே நோக்கமானது தேவனை நோக்கியவாறே இருக்கட்டும். வேறுயாரும் சென்றடைய வில்லையானாலும், நீ சென்றடை. ஏனென்றால் தெரிந்து கொள்ளப்பட்டவர் மாத்திரம் ஆயிர வருட அரசாட்சியில் முழுதூடாக ஜீவித்து, கிறிஸ்துவுடன் ஆயிரம் வருடம் ஜீவிக்க உள்ளே சென்று, மகிமையில் அவருடன் சென்று, திரும்பவும் வருவார்கள், பொல்லாங்கரின் உயிர்த்தெழுதல் நடை பெற்றவுடன், ஆயிர வருட அரசாட்சி ஆயிர வருட அரசாட்சி முடிவடைந்த பின்னர்... அப்பொழுது கிறிஸ்து சபையுடன் மேலே செல்வார், ஆயிர வருட கடைசியில் அவர் சபையுடன் திரும்ப வருவார்.
104. கிறிஸ்து மூன்று முறை வருகின்றார். முதலாவதாக, தமது சபையை மீட்க வந்தார். அது சரிதானே? இரண்டாவது முறையாக, தமது சபையை பெற்றுக் கொள்ள வருகிறார். மூன்றாவது முறையாக அவர் சபையுடன் வருகிறார். பாருங்கள்? அவளை மீட்க வருகிறார்; அவளை எடுத்துக் கொள்ள வருகிறார், வாதைகள் இன்னும் மற்ற காரியங்களின் நேரத்தில் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ள வருகிறார்; ஆயிர வருட அரசாட்சிக்காக திரும்பவும் வருகிறார், ஆயிரம் வருடங்கள் முழுவதும் இருக்கின்றார்.
105. அதன்பின் அந்த மகத்தான ராஜாவும் ராணியும் நியாயத் தீர்க்க கீழே வருகின்றனர். வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டு புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. அதோ அங்கே மீட்கப்பட்டவர்கள் அங்கு நின்று கொண்டிருக்கின்றனர். பரிசுத்த ஆவியினாலே பிறந்து ஜீவிக்கிற தேவனுடைய சபை அங்கே அந்த அழகுடன் நியாயத்தீர்க்க நின்று கொண்டிருக்கிறது, “புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டது, ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு நியாயத்தீர்ப்படைந்தான்” அதுதான் பாவிகள், “வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது”. பரிசுத்தாவியால் நிரப்பப்பட்டுள்ள மணவாட்டிக்கு அல்ல, அவள் எடுக்கப்படுதலில் இருப்பதினால் அவள் அதில் இல்லை.
106. இந்த காலையில் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருந்தால், தேவனுடைய வல்லமை உங்கள் சரீரத்தின் ஒவ்வொரு தசையிலும் அசைந்து கொண்டிருக்குமானால், நியாயத்தீர்ப்பின் நாளிலே எப்படிப்பட்ட நன்மையை அது உங்களுக்கு அளிக்கும்? நீங்கள் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப் பட்ட, நிறைக்கப்பட்டு, ஏற்கெனவே ஏற்கெனவே கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களுக்குள் அமர மாற்றப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதல்ல, நீங்கள் இப்பொழுதே மாற்றப்பட்டிருக்கிறீர்கள், சரியாக இப்பொழுதே மாற்றப்பட்டு இருக்கிறீர்கள்!.
107. “அவர் எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப் படுத்தியுமிருக்கிறார்.” ஆகவே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ் இருந்து பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட, இவ்வுலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மீட்கப்பட்ட நபருக்கும் நித்திய ஜீவன் இருக்கின்றது. அவன் அழிந்து போக முடியாது, அவன் ஏற்கனவே கிறிஸ்து இயேசுவிற்குள் உன்னதங்களில் அமர்ந்திருக்கிறான், அவன் ஆக்கினைக்குள்ளாக வர முடியாது. அவன் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளாள். அது அற்புதமானதல்லவா? பாருங்கள்? ஏற்கெனவே மீட்கப்பட்டு, கிறிஸ்துவுடனே உன்னதங்களில் அவர்கள் அமர்ந்திருக்கின்றனர். ஏற்கெனவே மகிமைப்படுத்தி விட்டார், ஏற்கெனவே மகிமைப்படுத்தி விட்டார்.
108. “சகோ, பில், வேத வாக்கியம் அப்படி கூறுகின்றதா?” என்று நீங்கள் கேட்கலாம்.
109. இயேசு அதைக் கூறினார், அல்லது வேத வாக்கியம் அதைக் கூறுகிறது. அல்லது இதை எழுதின பவுல், எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை ஏற்கனவே மகிமைப்படுத்தியுமிருக்கிறார். அது என்ன? ஓ, என்னே! (என்னை மன்னியுங்கள்) ஏற்கெனவே மகிமைப் படுத்திவிட்டார்! அப்படியானால் நாம் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, தம்முடைய தசைகளும், அவையவங்களும் தேவனுக்குள் காக்கப்பட்டு இருக்குமானால், இது நமக்கு முடிந்துபோய், நீ செல்லத்தக்கதாக ஒரு மகிமையின் சரீரம் ஏற்கனவே உனக்கு காத்துக் கொண்டிருக்கிறது. எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
110. நான் சிறிது நேரத்திற்கு முன் கூறினது போன்று, அதை உங்களுக்குத் தெளிவாகப் புரியும்படி செய்ய எனக்கு போதுமான கல்வியறிவு இருந்தால் நலமாயிருக்கும், போதுமான வகையில் கூற என்னால் முடியவில்லை. நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன், ஆனால் நான் கூற நினைக்கும் விதத்தில் அதைக் கூறிட என்னால் முடியவில்லை.
111. (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). சிவந்த சமுத்திரம்... யூதர்கள், செல்வம் மிகுந்தவர்கள் மற்றும் எல்லாக் காரியங்களையும் அங்கே வயல்களில் வெளியே போடுகின்றனர். ஆனால் அதே காரியம் அவர்களுடைய கூடாரத்தை மறுபடியும் மாசுபடுத்தும். ஆம்! உலகத்தின் பட்டணங்களினின்று அவர்கள் சரியாக வருவார்கள். ரஷ்யாவும் வந்து, “அந்த காரியத்தை நாம் பெற்றாக வேண்டும். அங்கே யுரேனியம், மற்ற காரியங்களும் இருக்கின்றன. நாம் அதைப் பெற்றாக வேண்டும்” என்று கூறுகிறது. அவர்கள் செல்கையில், அர்மகெதோன் யுத்தம் நிகழும். அப்பொழுது தேவன் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலுக்காக நின்று யுத்தம் செய்தாரே அதைப் போன்றே செய்வார். ஆனால் அது புறஜாதியாரின் காலம் முடிந்தவுடன் நிகழும், காலமானது முடிவுற்றவுடன் அவள் அறுப்புண்டு போடப்படுவாள்.
112. (ஒலிநாடாவில் காலி இடம்) இப்பொழுது இந்த கேள்வியைக் கேட்ட அருமையான நபருக்கு, இதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.