என்னே, நாம் இங்கே சரியாக அதில் இருக்கிறோம், என்று விசுவாசிக்கிறேன். ஒருக்கால் அது... இதோ எடுத்துவிட்டேன், சரியாக இதற்கு திருப்பினேன். ஒருக்கால் நான் இதை வாசிக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்பியிருக்கலாம். சரி. 1 யோவான்,
தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யானென்று;...
184. நிச்சயமாக இல்லை! நான் அதை முழுவதும் விளக்கிக் கூறினேன். அவனால் பாவம் செய்ய முடியாது; அவன் தேவனால் பிறந்தவனாக இருக்கிறான். "பாவஞ்செய்யான்”, அவனால் பாவம் செய்ய முடியாது, வித்தானது அவனுக்குள்ளாக தரித்திருக்கும். இதற்கு ஒத்ததாக நீங்கள் ஒப்பீட்டுப் பார்க்க வேறொரு வேத வசனம் உள்ளது, ரோமர் 4:8, 4 மற்றும் 5-8, தேவன்.... அநேக வருடங்களுக்கு முன்னர் தாவீது பேசினான், “எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் (பாருங்கள்?), ஏனெனில் அவன் பாவம் செய்யான்" என்றான்.
இப்பொழுது, இன்னும் ஒரு கேள்வி உள்ளது. அவ்வளவு தான். நாம் இதைப் பார்ப்போம்!