185. மத்தேயு 19:9ல், இயேசு, “ஆதலால், எவனாகிலும் தன் மனைவி, வேசித்தனம் செய்த காரணத்தினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளி விட்டு, வேறொருத்தியை விவாகம் பண்ணினால், விபாரஞ்செய்கிறவனாயிருப்பான்” என்று கூறினார். வேசித்தனம் மற்றும் விபச்சாரம் என்பதற்கிடையேயுள்ள வித்தியாசத்தைப் பொறுத்தமட்டில், இந்த வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் பொருத்தலாம். ஆனால் அவர் அங்கே எதைக் குறித்து பேசுகிறார் என்பதைத் தெளிவாக பார்ப்போமானால், திருமணமாகாத ஒரு பெண்ணால் விபச்சாரம் செய்ய முடியாது, ஏனென்றால், அவளுக்கு புருஷன் இல்லாமல் இருப்பதால் அவனுக்கு மாறாக அவளால் விபச்சாரம் செய்வதற்கில்லை. ஆனால் அது அவளுக்கோ ஒரு அசுத்தமான ஒன்றாகும். அவள் அவ்விதமாகச் செய்திருந்தால், அதை அவள் புருஷனுக்கு, அவர்கள் இருவரும் விவாகமாவதற்கு முன்னதாகவே அவள் அறிக்கை செய்ய வேண்டும். அப்படி செய்யாதிருக்கும் பட்சத்தில், அவளுடைய புருஷனுக்கு பின்னர் அது தெரியவருமானால், அவளை தள்ளிவிட அவனுக்கு உரிமை உள்ளது, ஏனெனில் அவள் ஒரு பொய்யான வாக்கை செய்தவளாகக் காணப்படுகிறாள். ஏனெனில் வேதாகமம் கூறுகிறது, “இது... இல்லை வழக்கம் கூறுகிறது, “இது உங்களுக்கு நன்றாக அறியப்படுவதாக (எனக்கும் அவ்வாறு தான் செய்யப்பட்டது) தேவனுடைய வார்த்தையின் பிரமாணம் அனுமதிக்கும் விதத்தைத் தவிர அதற்கு மாறாக தம்பதிகள் இணைக்கப்படுவார்களாயின், அவர்களுடைய விவாகம் சட்டப் பூர்வமான ஒன்றல்ல. இருதயத்தின் அந்தரங்கங்கள் எல்லாம் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படப்போகின்ற அந்த நியாத்தீர்ப்பின் நாளிலே பதிலளிக்கப்போகிற உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்ய வேண்டியதென்ன என்று நான் கட்டளையிடுகிறதாவது, சட்டப்படியாக நீங்கள் இணைக்கப்படக்கூடாது என்று உங்கள் இருவருக்கும் ஏதாவது தடை இருக்குமானால் இப்பொழுதே அதை நீங்கள் அறிக்கையிடுங்கள்” உங்களுக்கு புரிகின்றதா. பாருங்கள்?
186. ஆதலால் வேசித்தனம் என்பது ஒரு இளம்பெண் அசுத்தமான ஜீவியம் செய்வாளெனில், அது தான் வேசித்தனமாகும், ஏனெனில் அவளுக்கு புருஷன் இல்லை. ஆனால் அவளுக்கு விவாகமாகி, பிறகும் அதே விதமாகவே அவள் ஜீவிப்பாளெனில், அவள் தன் புருஷனுக்கெதிராக விபச்சாரம் செய்கிறாள்.
187. சில காலத்திற்கு முன்னர் ஒரு பெண் என்னிடம் வந்து, "ஓ, நான் எல்லாவற்றையும் அறிக்கை செய்து விட்டேன்” என்றாள். அவள் மிகவும் பதற்றம் கொண்டவளாக நரம்புத்தளர்ச்சி கொண்டிருந்தாள், “அதைக் குறித்த எல்லாவற்றையும் தேவனிடம் அறிக்கை செய்து விட்டேன்” என்றாள்.
188. நான், "நீ அதை உன் புருஷனிடம் அறிக்கையிட வேண்டும். நீ தேவனுக்குகெதிராக விபச்சாரம் செய்யவில்லை; உன் புருஷனுக் கெதிராகத்தான் விபச்சாரம் செய்தாய்” என்றேன். அது சரி.
189. ஆகவே ஒரு மனிதன் ஒரு பெண்ணை விவாகம் செய்யுமுன், அந்தப் பெண்ணோ அவனை விவாகம் செய்யும் முன்னர் அசுத்தமான ஜீவியம் செய்து, பிறகு அவள் அவனிடம் வந்து திருமணம் செய்து நீண்ட காலம் சென்று பிறகு அவள் அவனிடம் "உங்களிடம் ஒன்றை நான் கூற விரும்புகிறேன். நான் வேறொரு மனிதனுடன் வாழ்ந்து திரிந்து கொண்டிருந்தேன், உங்களிடம் நான் கூறவில்லை” என்று கூறுவாளானால், அவன் அவளைத் தள்ளி விட்டு வேறொருத்தியை விவாகம் செய்ய இவனுக்கு உரிமையுண்டு என்று இயேசு கூறினார், ஏனெனில் துவக்கத்திலேயே இவர்களுக்கு விவாகமாகவில்லை, ஏனெனில் அவனுக்கு எதிராக ஒரு - ஒரு பொய்யை வஞ்சகமாக கூறியிருந்தாள்.
இப்பொழுது, வேறொரு கேள்வி இங்கேயிருக்கிறது... உங்களுக்கு நன்றி.