190. சரி. நாம்... இதற்கு நாம் நேரடியாக பதிலளித்து சீக்கிரமாக முடிப்போம், இது கடைசி கேள்வியாகும். நாம். மாற்கு -க்கு திருப்புவோம், மரணத்துக்கு ஏதுவான பாவம் என்ன வென்று சரியாக இது விளக்கும். மரணத்துக்கு ஏதுவான பாவம் ஒன்றிருக்கிறது, அந்த பாவத்துக்கு நீங்கள் ஜெபிக்கவும் செய்ய மாட்டீர்கள். மாற்கு-க்கு திருப்புங்கள், மாற்கு 3ஆம் அதிகாரம். மாற்கு 3 ஆம் அதிகாரம் நாம் எடுத்து பிறகு, சீக்கிரமாக முடிக்கும் முன்னர் இந்த ஒரு வேதவசனத்தை நாம் பார்ப்போம். நாம் 3, 22க்கு திருப்புவோம்.
எருசலேமிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயல்செபூலைக் கொண்டிருக்கிறான். (அவர் மக்கள் எண்ணங்களை பகுத்தறிந்ததை அவர்கள் கண்டிருந்தனர்)... இவன் பெயல் செபூலைக் கொண்டிருக்கின்றான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள் அவர்களை அவர்
அழைத்து ஒரு உவமையாய் அவர்களுக்குச் சொன்னதாவது, சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?... (இப்பொழுது, பிசாசினால் சுகமளிக்க முடியுமானால், எப்படி அவனால் செய்ய முடியும்?)... சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலை நிற்கமாட்டாதே.
ஒரு வீடு தனக்குத் தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலை நிற்கமாட்டாதே.
சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலை நிற்கமாட்டாமல், அழிந்து போவானே.
பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக் கூடாது. கட்டினானேயாகில், அவன் வீட்டை கொள்ளையிடுவான்.
எப்படி அவராலே அவர்களுடைய இருதயங்களுக்குள் சென்று அதை... கண்டுபிடிக்க முடிந்தது. பாருங்கள்? அவர் தேவன்.
மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்த தூஷணங்களும் அவர்களுக்கு மன்னிக்கப் படும்;
ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ் சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்: அது தான் பிரிக்கப்படுதல்!
...(ஏன் அதை அவர் கூறினார்?). அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.
191. கிறிஸ்துவுக்குள்ளிருந்து இந்த அற்புதங்களைச் செய்து கொண்டிருந்த தேவனுடைய ஆவியை இவ்விதமாக அழைத்தல், இவைகளைச் செய்தது பிசாசினுடைய ஆவி என்று அவர்கள் கூறினார்கள், இது தான் மன்னிக்க முடியாத பாவம் என்று இயேசு கூறினார். ஆகவே நீங்கள் பாருங்கள். ஒரு மனிதன்... அவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசி, பரிசுத்த ஆவியை பரியாசம் செய்வானானால் அவனுக்காக நீங்கள் ஜெபம் செய்யாதீர்கள், அவ்விதமான ஒரு நபருக்கு ஜெபம் செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை. அதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? ஏனெனில் மரணத்துக்கேதுவான பாவமுண்டு. ஒரே ஒரு பாவம் மாத்திரமே உண்டு. எல்லா விதமான பாவமும் மனுஷர் குமாரர்களுக்கு மன்னிக்கப்படும், ஆனால் பரிசுத்த ஆவியை தூஷித்தால் அது மன்னிக்கப்படவே முடியாது என்று இயேசு கூறினார்.
192. இப்பொழுது, மக்கள் “சரி, பரிசுத்த ஆவியை தூஷித்தல்...” எனலாம். தூஷணம் என்றால் என்ன? “ஏளனம் செய்து கேலிக் கூத்தாக்கி பரியாசம் செய்தல், தூஷணம்” என்று அர்த்தமாகும். சரி
193. அவரை என்னவென்று தூஷணம் செய்தார்கள்? அவரை கிரியை நடப்பிக்கச் செய்து, அவர் செய்து கொண்டிருந்த காரியங்களை நடப்பிக்கச் செய்த, அவருக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவரை அவர்கள், 'இவன் பிசாசாகிய பெயல் செபூலினாலே பீடிக்கப்பட்டுள்ளான். இவனுக்குள் இருக்கின்ற குறி சொல்லுகின்ற ஒருவன், அதாவது பிசாசுதான் இவன் இந்த காரியங்களை நடப்பிக்கும்படிக்குப் பண்ணுகிறான். மக்களுடைய இருதயத்திலுள்ள அந்தரங்கங்களை அறிதல், பிலிப்பு கூட்டத்திற்கு வருமுன்னர் அவன் யார் என்று அறிந்ததாக இவன் கூறுதல், பிசாசுகளை துரத்துதல், இங்கே இந்த காரியங்களைச் செய்தல், இவன் பெயல்செபூலினாலே இதைச் செய்கிறான், இவன் ஒரு பிசாசு” என்று கூறினர். ஆகவே இயேசு இந்த பாவத்திற்கு மன்னிப்பில்லை, இது ஜெபிக்கப்பட முடியாத மன்னிக்கப்பட முடியாத ஒரு பாவமாகும். இது மன்னிக்கப்படமுடியாது. இதை செய்கின்ற ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ தங்களை, என்றென்றுமாக நித்தியமாக தேவனுடைய பிரசன்னத்திற்குள் வரமுடியாதபடிக்கு முத்திரையிட்டுக் கொண்டார்கள், இவர்களுக்கு மன்னிப்பே யில்லை.
நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா?
நேசிக்கிறேன், நேசிக்கிறேன்
முந்தி அவர் என்னை நேசித்ததால்
சம்பாதித்தார் என் இரட்சிப்பை
கல்வாரி மரத்தில்
194. கவனியுங்கள், நீங்கள் மிக அருமையாக இருந்தீர்கள், இந்த கேள்விகள் கடினமானவைகள், இவை நிறைய நேரம் எடுத்தன. நீங்கள் இந்த சபைக்குள் 7.30, 8.30, 9.30, இரண்டரை மணி நேரமாக இந்த உஷ்ணமான சபையில் உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள். இந்த நேரம் வரை சபையாரில் தொன்னூற்றெட்டு சதவீதம் அப்படியே தங்கள் இருக்கையில் அப்படியே இருந்தனர். இதை நான் கூற விரும்புகிறேன்: ஜெபர்சன்வில்லே, இவ்வாறு நான் உணர்கிறேன்; நீ இந்த கிருபையின் நாளிலே, பாவத்துக்குள்ளாகி விலகிச்சென்றாய் என்று நான் நம்புகிறேன். முழு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இதுவேதான் என நான் நம்புகிறேன், ஆனால் உலகத்திலேயே எனக்கு மிகவும் உத்தமமான நண்பர்களில் சிலர் சரியாக இங்கே ஜெபர்சன்வில்லில் இருக்கின்றனர். எனக்காக மரிக்கவும் தயாராக உள்ள மக்கள் இங்கே எனக்குண்டு.
195. இப்பொழுது, இவ்வாறுள்ள ஒரு உஷ்ணமான இரவு பொழுதில், நம்முடைய வாசலில் உள்ள அந்நியர்கள், ஒருக்கால் நான் வேதவசனங்களின் பேரில் பேசி அதை விவரித்த விதத்தைக் கூட விசுவாசிக்காத ஒரு நபர் இங்கே எவ்விதம் அமர்ந்து கொண்டிருப்பார் என்பதை எனக்கு கூறுங்கள், ஆனால் அவர்களோ பயபக்தியுடன் தேவபயத்துடனே உட்கார்ந்து அதை கவனித்தனர். நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்களாக. காரியங்கள் தூசிகளாய் மாறும் போது நீங்கள் தாமே கிறிஸ்து இயேசுவின் பேரில் வாழ்வீர்களாக. உங்களுடைய தேவையாயிருக்கின்ற எல்லாவற்றையும் தேவன் அளிப்பாராக. உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையெல்லாவற்றையும் அவர் உங்களுக்கு அளிப்பாராக. நான் அவருடைய ஊழியக்காரன் என நீங்கள் விசுவாசித்து, என்னுடைய ஜெபங்கள் உங்களுக்கு உதவும் என்று விசுவாசித்தால், நம்முடைய பாவங்களுக்கு பரிகாரமாக, நமக்காக மரித்த, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எழுப்பின பரலோகத்தின் தேவனானவர், இங்கே இப்பொழுது இந்த கட்டிடத்தில் எங்கும் வியாபித்து நிறைந்துள்ளவராகிய அவர் தாமே உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே, உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் ஏறெடுக்கும் உத்தமமான ஜெபமாகும். சூரியன் உங்கள் மேல் வந்து உங்களை சுட்டெரித்துப் போடாத, உஷ்ணமான காற்றுகள், உங்கள் மீது வீசாத ஒரு தேசத்திலே, நான் உங்களுடன் வருடக்கணக்காக இலட்சக்கணக்கான வருடங்களாக உங்கள் ஒவ்வொருவரோடுங்கூட தேவனுடைய ராஜ்யத்தில் உட்கார்ந்து இந்த இரவுகளின் நித்தியமான காரியங்கள், மற்றும் எப்படியெல்லாம் நாம் ஒன்றாக உட்கார்ந்திருந்தோம் என்பதைப் பற்றி பேசுவேன் என நான் நம்புகிறேன்.
196. அவருடைய கிருபை தாமே உங்களுடன் இருப்பதாக. உங்களுடைய வியாதிகளிலிருந்து அவர் தாமே உங்களை சுகப்படுத்துவாராக. அவர் தாமே உங்களுக்கு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பாராக. இதை நான் இப்பொழுது எவ்வித அவமதிப்பும் இல்லாமல் கூறுகிறேன். சர்ப்பதின் வித்தைக் குறித்தும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானத்தைக் குறித்தும், மற்றவைகளைக் குறித்தும் நான் கூறினது ஏதாவது மனஸ்தாபத்தை விளைவித்திருக்குமானால்...
197. இப்பொழுது, ஒருவர், “சகோதரன் பிரன்ஹாம் ஒருத்துவக்காரர்” என்று கூறுவாரானால், இல்லை ஐயா, நான் ஒருத்துவக்காரன் அல்ல. இயேசுவே தம்முடைய சொந்த பிதாவாக இருப்பார் என்று நாம் நம்புவதில்லை. இயேசு ஒரு பிதாவைக் கொண்டிருந்தார் என்றும் அவர் தான் தேவன் என்றும் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் தேவன் இயேசு என்று அழைக்கப்பட்ட இந்த சரீரத்திற்குள்ளாக கூடாரமிட்டு வாசம் செய்தார், நம்மோடிருக்கிற தேவனாகிய இம்மானுவேல் அவர் தான். இந்த தேவனைத் தவிர வேறே தேவன் கிடையாது. அவர் தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. ஆகவே பிதா, குமாரன் பரிசுத்த ஆவி நாமம். கர்த்தராகிய பிதா, குமாரனாகிய இயேசு, தேவனுடைய ஆவியாகிய, லோகாஸாகிய பரிசுத்த ஆவி. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து; அது அவராகும். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது.
198. நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றோ, தெளிக்கப்பட்டோ, ஊற்றப்பட்டோ அல்லது எந்த விதத்திலோ இருந்தாலும், உங்களை நான் நேசித்து, நீங்களும் நானும் தேவனுடைய ராஜ்யத்தில் சந்திப்போம் என்று என் முழு ஆத்துமாவோடும் சரீரத்தோடும் நான் ஜெபிக்கிறேன், சந்தேகத்திற்கிடமின்றி நான் விசுவாசிக்கிறேன், நான் தவறாயிருந்தால், தேவன், என்னை மன்னித்து விட்டுவிடுவார். உங்களுடைய தவற்றையும் மன்னித்து விட்டு விடுவார். ஆனால் வேதாகமத்தை பொறுத்தவரை என்னுடைய உறுதியான நம்பிக்கையானது, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை சரியாக இலக்கை அடிக்க வேண்டும் என்பதேயாகும்.
நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்கவில்லையெனில் மறுபடியுமாக நீங்கள் அவ்விதமாக எடுக்க வேண்டும் என நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன்.
199, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறவில்லையெனில், உங்கள் ஜீவியம் இனிமையை உணராதிருந்தால் நீங்கள் அந்நிய பாஷையில் பேசியிருந்தாலும், நீங்கள் சத்தம் போட்டிருந்தாலும், நீங்கள் மேலும் கீழும் குதித்திருந்தாலும், நீங்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்து அவர்கள் சுகமாக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் எல்லா விதமான அற்புதங்களும் அடையாளங்களும் செய்திருந்தாலும் அவை ஒரு பொருட்டல்ல. ஆனால் ஆவியின் கனிகளாகிய, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை, விசுவாசம் ஆகிய இந்த எல்லா காரியங்களும் உங்களிடம் காணப்பட வில்லையெனில், அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்கு கட்டளையிட்டு உங்களை கட்டாயம் பண்ணுவதென்ன வெனில், பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீதுவரும் வரைக்கும் நில்லாமல் ஜெபித்துக் கொண்டேயிருங்கள்! நீங்கள் எவ்வளவாக அந்நிய பாஷையில் பேசியிருந்தாலும், எவ்வளவாய் நீங்கள் கூச்சலிட்டிருந்தாலும், எவ்வளவு காலமாக ஒரு சபையின் அங்கத்தினராக நீங்கள் இருந்திருந்தாலும், நீங்கள் இங்கே இருந்திருந்தாலும், அது ஒரு பொருட்டேயல்ல. நீங்கள் என்னவெல்லாம் செய்திருந்தாலும் பரிசுத்த ஆவியானவராகிய கிறிஸ்து உங்களுடைய இருதயத்தில் தம்முடைய இடத்தை எடுக்கும்வரை, நீங்கள் உலகத்தின் காரியங்களுக்கெல்லாம் மரித்து, கிறிஸ்துவிற்காக புதிய சிருஷ்டியாக ஜீவிக்கும் வரை, அவையெல்லாம் ஒன்றுமே கிடையாது.